background img

புதிய வரவு

Showing posts with label army. Show all posts

சென்னை: தேர்தல் பணியில் ஈடுபட்ட முன்னாள் ராணுவத்தினருக்கான பணி ஊதியம் குறைக்கப்படவில்லை என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

தேர்தல் பாதுகாப்புப் பணியில் துணை ராணுவப் படையினர், முன்னாள் ராணுவத்தினர் உள்பட 24,000 பேர் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்களில் முன்னாள் ராணுவத்தினருக்கு ஒரு நாள் படியாக ரூ.300ம், உணவுப் படியாக ரூ.60ம் வழங்கப்பட்டது. ஆனால், இந்தத் தொகை குறைக்கப்பட்டு விட்டதாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா புகார் கூறியிருந்தார்.

இதற்கு மறுப்பு தெரிவித்து முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ஆங்கில நாளேடு ஒன்றில் முன்னாள் ராணுவத்தினருக்கான தேர்தல் பணி ஊதியம் சென்ற தேர்தலில் இருந்ததை விட தற்போது குறைக்கப்பட்டுவிட்டதாக ஒரு செய்தி வெளிவந்தது. இதைத்தொடர்ந்து, அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா, முன்னாள் ராணுவத்தினரையும், பொதுமக்களையும் திசைதிருப்பி தேர்தல் நாளன்று குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு அதை பெரிதுபடுத்தி வருவதை அறிந்து அதுகுறித்து உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டறிந்தேன்.

முன்னாள் ராணுவத்தினருக்கு கடந்த தேர்தலின்போது ஒருநாள் ஊதியமாக ரூ.300ம், உணவுப்படியாக ரூ.60ம் வழங்கப்பட்டது. தேர்தல் ஆணையமே இதை உணவுப்படியையும் சேர்த்து ஊதியமாக ரூ.275 ஆக குறைத்து அறிவித்தது. உடனே அரசு அதிகாரிகள் தேர்தல் ஆணையத்திடம் இவ்வாறு முன்னாள் ராணுவத்தினரின் ஊதியத்தை குறைத்தால் அதனால் அவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்று எடுத்துக்கூறியதன் பேரில் அவர்கள் ஏற்கனவே பெற்றுவந்த ஊதியமான ரூ.300யைத் தொடரவும் உணவுப்படியாக ரூ.60ம் வழங்கப்படுகிறது.

எனவே, முன்னாள் ராணுவத்தினர் எந்த வகையிலும் பாதிக்கப்படவில்லை. வேண்டுமென்றே உண்மையை மறைத்து தேர்தல் நாளன்று மக்களை திசை திருப்பும் வகையில் அந்த ஆங்கில நாளிதழும், ஒரு தனியார் தொலைக்காட்சியும் ஈடுபட்டுள்ளது கடும் கண்டனத்துக்குரியது. சட்டப்படியான நடவடிக்கைக்கு உரியது என்று கூறியுள்ளார்.

தேர்தல் பணியில் ஈடுபடும் ராணுவத்தினர், முன்னாள் ராணுவத்தினருக்கு தேர்தல் ஆணையம் மூலமாக மத்திய அரசின் நிதி கொடுக்கப்படுகிறது. பணியில் ஈடுபடுவோருக்கு முதலில் மாநில அரசு பணத்தைக் கொடுத்து விடும். இந்தப் பணம் பின்னர் மத்திய அரசு மூலமாக மாநில அரசுகளுக்கு வழங்கப்படும்.

எனவே, ஜெயலலிதா சொல்வது போல அந்தத் தொகையை குறைப்பதற்கு மாநில அரசு தனிப்பட்ட முறையில் முடிவெடுத்து செயல்படுத்திட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. அதைச் செய்ய அதிகாரம் உள்ளது தேர்தல் ஆணையம் மட்டும்.

பாதுகாப்புப் பணியில் இருந்த முன்னாள் ராணுவத்தினரை தேர்தல் பணியில் ஈடுபட்ட திமுகவினருக்கு எதிராக திசை திருப்ப ஜெயலலிதா இவ்வாறு புகார் கூறியதாகத் தெரிகிறது.

'முன்னாள் ராணுவத்தினரை திசை திருப்ப முயன்ற ஜெ'-கருணாநிதி

காஷ்மீரின் வட பகுதியில் உள்ள குப்வாரா மாவட்டம் சோகல் என்ற இடத்தில், நேற்று இரவு வீட்டை விட்டு வெளியேறி நடந்த வந்த 22 வயது இளைஞரை இராணுவத்தினர் சுட்டுக்கொன்றதால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது.

தனது இல்லத்தில் இருந்து வெளியே நடந்த வந்த மன்சூர் அஹமது மாக்ரே, இராணுவம் விடுத்த எச்சரிக்கைக்கு செவி மடுக்காமல் தொடர்ந்து நடந்து சென்றதையடுத்து அவர் சுட்டுக்கொல்லப்பட்டதாக இந்திய இராணுவத்தின் 4வது பாரா படைப்பிரிவு கூறியுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மாக்ரே சுட்டுக்கொல்லப்பட்டதை அறிந்த அப்பகுதி மக்கள் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் குப்வார மாவட்டத்தின் ஹண்டுவாரா நகரத்தில் பதற்றம் நிலவுகிறது.

இதேபோல் கடந்த ஜனவரி மாதம் 4ஆம் தேதி, இளைஞர் ஒருவர் இராணுவத்தால் சுடப்பட்டு இறந்தார். அதுவும் குப்வாரா மாவட்டத்தில்தான் நடந்தது.

இது தொடர்பாக 4வது பாரா பிரிவு மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இராணுவம் துப்பாக்கியால் சுட்டு மேலும் ஒரு இளைஞர் பலியாகியிருப்பதை கண்டித்துள்ள காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா, இந்திய இராணுவத்தின் ஒருங்கிணைந்த கட்டளைத் தலைமையிடம் தான் கூறிய ஆலோசனை ஏற்கப்பட்டிருந்தால் இப்படிப்பட்ட சம்பவங்களை தவிர்த்திருக்கலாம் என்று கூறியுள்ளார்.

ஆனால் அவர் என்ன ஆலோசனை வழங்கினார் என்பதை தெரிவிக்கவில்லை.

காஷ்மீரில் இராணுவம் சுட்டு இளைஞர் பலி! மக்கள் எதிர்ப்பு

இலங்கை காவல் துறையில் தமிழ் மக்களை இணைத்து கொள்ளும் நடவடிக்கையின் ஒருபகுதியாக, மேலும் 1,000 பேரை இணைத்துக்கொள்வதற்கான நேர்முக தேர்வுகள் நடைபெற்றுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக இலங்கை காவல் துறையினர் நேர்முக தேர்வுகளை தொடங்கியுள்ளதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

உதவிப் பரிசோதகர், காவலர்கள், காவல்துறை வாகன ஓட்டிகள் ஆகிய பதவி காலியிடங்களுக்கு தமிழ் இளைஞர்களும், இளம் பெண்களும் சேர்த்துக் கொள்ளப்படுவதாகவும், வடபகுதியில் இருந்து இணைத்துக்கொள்ளப்படும் இவர்கள் வடபகுதியில் சேவையில் அமர்த்தப்படுவார்கள் என்றும் அவ்வட்டரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

அண்மையில் 336 தமிழ் இளைஞர்களையும், 16 தமிழ் பெண்களையும் இலங்கை காவல்துறையில் அரசு இணைத்திருந்தது.

இதனிடையே, இலங்கை அரசின் இந்த நடவடிக்கைக்கு பின்னர் அரசியல் நாச சதிகள் உள்ளதாகவும், துணை இராணுவக் குழுக்களை காவல் துறையினுள் நுழைக்க அது முற்படுவதாகவும் அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை காவல்துறையில் மேலும் ஆயிரம் தமிழர்கள் சேர்ப்பு

முக நூல்

Popular Posts