background img

புதிய வரவு

Showing posts with label Srilanka. Show all posts

 Attacks On Tamil Nadu Fishermen Sri Lanka தமிழ்நாட்டு மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தொடர் தாக்குதலைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று பிரதமர் மன்மோகன்சிங்குக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் அனுப்பியுள்ளார்.
கச்சத்தீவு கடற்பரப்பில் நேற்று முன் தினம் மீன்பிடித்துக் கொண்டிருந்த இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை மீன்பிடிக்க விடாமல் தடுத்து நிறுத்தி தாக்கியுள்ளது என்று அந்த கடிதத்தில் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கச்சத்தீவில் ஆண்டாண்டுகாலமாக தமிழக மீனவர்கள் மீன்பிடித்து வரும் நிலையில் இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தி வருவதை தடுக்க வேண்டும். இலங்கைக் கடற்படையின் தாக்குதலால் தமிழக மீனவர்கள் அச்சமடைந்திருப்பதாகவும் ஜெயலலிதா தமது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம் எழுதியிருக்கும் நிலையில்தான் நள்ளிரவில் மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தொடரும் இலங்கை கடற்படை தாக்குதல்- பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்

திசாநாயக்க முன்னிலையில் பெற்றோரிடம் ஒப்படைக்கப்படும் முன்னாள் புலி உறுப்பினர்இலங்கை இராணுவத்தினரிடம் சரணடைந்து புனர்வாழ்வுப் பயிற்சிகளை முடித்துக்கொண்ட முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களில் 78 பேர் சனிக்கிழமையன்று வவுனியாவில் இடம்பெற்ற வைபவம் ஒன்றில் அவர்களுடைய குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் மூன்று பேர் பெண்கள்.

நான்கு வருடங்களின் பின்னர் தற்போதுதான் வெளியுலகத்தைப் பார்க்கும் சந்தர்ப்பம் தனக்குக் கிடைத்தது என விடுதலையான ஓர் இளைஞன் குறிப்பிட்டார்.

தங்களைப் போன்று தடுப்பு முகாம்களிலும் சிறைச்சாலைகளிலும் விசாரணைகளின்றியும், விடுதலையின்றியும் தடுத்து வைக்கப்பட்டுள்ள இளைஞர்கள் விரைவில் விடுதலை செய்யப்பட வேண்டும் என விடுதலையான மற்றுமோர் இளைஞன் கேட்டுக்கொண்டார்.
இறுதிச் சண்டைகளின் முடிவில் இராணுவத்தினரிடம் சரணடைந்த 12 ஆயிரம் பேரில் 11 ஆயிரம் பேர் புனர்வாழ்வுப் பயிற்சியின் பின்னர் சமூகத்தில் இணைக்கபட்டுள்ளதாக புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளர் ஏ.திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இன்னும் 1200 பேரளவில் தமது காவலில் இருப்பதாகவும், இவர்களில் புனர்வாழ்வுப் பயிற்சி பெறுபவர்கள் அல்லது சுமார் 700 பேருக்கு எதிராக வழக்குத் தொடரப்போவதாகவும் திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
எஞ்சியுள்ள புனர்வாழ்வு பெறொவோர் அனைவரையும் இந்த வருட இறுதிக்குள் விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் விடுதலைப் புலிகள் ஒரு தொகுதியினர் விடுதலை

தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்காக கூட்டப்படுகிற நாடாளுமன்ற தேர்வுக் குழுக் கூட்டத்தை புறக்கணிப்போம் என்று இலங்கையின் முக்கிய சிங்களக் கட்சியான ஜே.வி.பி. அறிவித்துள்ளது.

இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்காக நாடாளுமன்ற தேர்வுக் குழு ஒன்றை மகிந்த ராஜபக்சே அரசு அமைத்துள்ளது. ஆனால் தமிழர்களுக்கு சிறிதளவு அதிகாரம் வழங்கக் கூட சிங்களவர் கட்சிகள் ஒத்துக் கொள்ளாது என்பதால் தமிழ்க் கட்சிகளின் கூட்டமைப்பாகிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இக்குழுவில் இடம்பெறாமல் இருக்கிறது. இக்குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இடம்பெற வேண்டும் என்பது மேற்குலக நாடுகளின் நிலைப்பாடு.

இந்நிலையில் இது போன்ற குழுக்களின் கூட்டத்தில் பங்கேற்று நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை என்று ஜே.வி.பி. அறிவித்துளது. நாடாளுமன்ற தேர்வுக் குழு என்பது பயனற்றது என்கிறது ஜே.வி.பி.

நாடாளுமன்ற தேர்வுக் குழு என்பதே நாடகம்தான் என்றும் இதனால் எந்த ஒரு பயனும் விளையப்போவதில்லை என்பதும் தமிழர்களின் கருத்து. இந்த நிலையில் ஜேவிபியும் புறக்கணித்திருப்பது தமிழர் பிரச்சனைக்கான அமைதித் தீர்வை அந்நாட்டு அரசு உடனடியாக ஏற்படுத்திவிடாது என்பதையே காட்டுகிறது .

தமிழர் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்கான நாடாளுமன்ற தேர்வு குழுக் கூட்டத்தால் பயனில்லை: ஜே.வி.பி.

இலங்கை நாடாளுமன்றம்இலங்கை நாடாமன்றத்துக்கான தேர்தல்களில் மதகுருமார் போட்டியிடுவதை அரசியல் அமைப்பு ரீதியாக தடை செய்வதற்கான நகர்வு ஒன்றினை ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவருமான விஜயதாஸ ராஜபக்ஷ முன்னெடுத்துள்ளார்.
இது தொடர்பாக ஊடகங்களுக்கு பேசியுள்ள அவர் இது குறித்த தனது முயற்சிகள் வெற்றிபெறுமாயின் அது 19 வது அரசியலமைப்பு திருத்தமாக அமையும் என்றும் கூறியுள்ளார்.
இதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் தனக்கு ஆதரவு தரும் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
நாட்டின் அரசியல் கலாச்சாரத்தில் மாற்றங்களை ஏற்படுத்தவும், தொய்வடைந்துபோகும் நாடாளுமன்ற தரத்தை தடுத்து நிறுத்தவும் மதகுருமாரால் சாதகமான பங்களிப்பை செய்ய முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமைகளைக் கொண்டு பார்க்கையில் மதகுருமார் அரசியலில் இருந்து தவிர்க்கப்படுவது சரியானதே என்று அரசியல் ஆய்வாளரான கீதபொன்கலன் தமிழோசையிடம் தெரிவித்துள்ளார்.
இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம் போன்ற விடயங்களிலும் நாடாளுமன்ற மதகுருமாரின் செயற்பாடுகள் பாதகங்களை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நன்றி: BBC தமிழ் 

நாடாளுமன்றம் வர மதகுருமாருக்கு தடை விதிப்பதற்கான நகர்வு

பிரித்தானியாவில் அரசியல் தஞ்சம் நிராகரிக்கப்பட்ட நிலையில் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படவிருந்த கணிசமானவர்கள் இறுதி நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட சட்ட ரீதியிலான முயற்சிகள் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறார்கள்.
சுமார் 70 பேர் வரை இலங்கைக்கு நாடுகடத்தப்படவிருந்ததாகவும், அவர்களில் 36 பேர் மாத்திரமே இலங்கைக்கு அனுப்பப்பட மீதி அனைவரும் தடுத்து நிறுத்தப்பட்டதாக, இத்தகைய தஞ்சம் நிராகரிக்கப்பட்டவர்களுக்காக வாதாடிய சட்ட நிறுவனங்களில் ஒன்றான வில்சன் சொலிசிட்டர்ஸ் நிறுவனத்தின் சட்ட நிறைவேற்று அதிகாரியான முஹமட் பஃமி கூறினார்.

பொதுவாக ஒவ்வொரு நபரின் வழக்கும் தனித்தனியாக விசாரிக்கப்பட்டு அவரை இலங்கைக்கு திருப்பி அனுப்புவதா இல்லையா என்ற முடிவு எடுக்கப்பட்டதாக கூறிய அவர், தமது நிறுவனத்தின் சார்பிலான வழக்கு ஒன்றில் நீதிமன்றம் முதல் தடவையாக மனித உரிமைகள் காப்பகத்தின் அறிக்கையில் இலங்கை பாதுகாப்பான இடமாக இல்லை என்ற வகையில் கூறப்பட்ட கருத்தை ஏற்று அதனடிப்படையில் திருப்ப அனுப்பப்பாவிருந்தவரை நிறுத்தியதாக தெரிவித்தார்.
இவ்வாறு மனித உரிமைகள் காப்பகட்தின் அறிக்கையை நீதிமன்றம் ஏற்றிருப்பது தஞ்சம் நிராகரிக்கப்பட்ட இலங்கையர்களின் விவகாரத்தில் மிகவும் முக்கியமான அம்சம் என்றும் அவர் கூறினார்.

இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படவிருந்த கணிசமானோர் நிறுத்தப்பட்டனர்

பிரிட்டனில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட ஒருவர் இலங்கையில் சித்ரவதைக்கு உள்ளான ஆதாரம் தம்மிடம் இருப்பதாகக் கூறும் ''சித்ரவதைகளில் இருந்து விடுதலை'' (Freedom from Torture) என்னும் அமைப்பு, ஆகவே பிரிட்டிஷ் அரசாங்கம் இலங்கைக்கு தமிழர்களை திருப்பி அனுப்பக் கூடாது என்று கேட்டுள்ளது.
பிரிட்டனில் தஞ்சம் நிராகரிக்கப்பட்ட மற்றுமொரு தொகுதியினர் வியாழனன்று இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படவுள்ளதாக செய்திகள் வெளியான நிலையிலேயே இந்த அமைப்பு இவ்வாறு கூறியுள்ளது.
பிரிட்டனைத் தளமாகக் கொண்ட இந்த அமைப்பின் தலைமை நிர்வாக இயக்குனர் கீத் பெஸ்ட் அவர்கள் இது குறித்து பிபிசியிடம் பேசும் போது, பிரிட்டனில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டு, இலங்கையில் சித்ரவதைக்கு உள்ளாகி, மீண்டும் பிரிட்டனில் தஞ்சம் கோரியுள்ள ஒருவர் பற்றிய ஆதாரம் தம்மிடம் இருப்பதாகக் கூறியுள்ளார்.
இது குறித்த தகவல்களை தாம் பிரிட்டிஷ் அதிகாரிகளுடன் பகிர்ந்துகொண்டுள்ள போதிலும், பிரிட்டன் தொடர்ந்தும் இலங்கைக்கு தஞ்சம் நிராகரிக்கப்பட்டவர்களை திருப்பி அனுப்புவது துரதிர்ஸ்டவசமானது என்றும் அவர் தெரிவித்துள்ளார். அது மாத்திரமன்றி பிரிட்டிஷ் அரசாங்கம் அவர்களை ஒரு வகையில் ரகசியமான முறையில் திருப்பி அனுப்பும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.
இலங்கை மக்கள் தொடர்பில் இவ்வாறான பல சம்பவங்கள் குறித்த தகவல்கள் தம்மிடம் இருப்பதாகக் கூறும் கீத் பெஸ்ட் அவர்கள், இப்படியான சம்பவங்கள் குறித்து இலங்கையில் ஒரு முழுமையான பொறுப்புக் கூறல் நடக்கும் வரை தஞ்சம் கோரியவர்களை அங்கு பிரிட்டிஷ் அரசாங்கம் திரும்ப அனுப்பக் கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த விடயத்தில் பிரிட்டிஷ் அரசாங்கம் ஒரு முழுமையான தெளிவு பெறும் வரை தமது நடவடிக்கைகள் தொடரும் என்றும் அவர் கூறியுள்ளார்.

பிரிட்டனில் தஞ்சம் நிராகரிக்கப்பட்டவர்களை இலங்கைக்கு அனுப்பக் கூடாது

தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இரு கட்சிகளும் இலங்கை விவகாரத்தை வைத்து அரசியல் செய்து வரும் நிலையில், தேமுதிக தனது சட்டமன்ற உறுப்பினரும், நடிகருமான அருண்பாண்டியனை இலங்கைக்கு சத்தம் போடாமல் அனுப்பி வைத்துள்ளதாக கூறப்படுகின்றது.

இலங்கைக்கு பயணம் செய்யும் தமிழக அரசியல் தலைவர்கள் மற்றும் இந்திய பாராளுமன்ற உறுப்பினர்கள், மத்திய அமைச்சர்கள் போன்றவர்கள், மத்திய அரசு அனுமதி பெற்று தூதுக்குழுக்களில் இணைந்து செல்வதையே வழக்கமாக கொண்டுள்ளனர்.

இந்த நிலையில், தேமுதிகவைச் சேர்ந்த பேராவூரணி சட்ட மன்ற உறுப்பினரும், நடிகருமான அருண் பாண்டியன், கடந்த சில தினங்களுக்கு முன்பு மிக ரகசியமாக இலங்கை சென்று அங்கு யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்தாக கூறப்படுகின்றது.

இது குறித்து கொழும்பில் உள்ள பத்திரிக்கையாளர்களிடம் பேசிய போது,

தேமுதிக வைச் சேர்ந்த பேராவூரணி சட்ட மன்ற உறுப்பினரும், நடிகருமான அருண் பாண்டியன், யாழ்ப்பாணம் வந்துள்ளது உண்மை.

ஆனால், அருண் பாண்டியன் தனிப்பட்ட முறையில் ஒரு மாத விசிட் விசாவில், வந்துள்ளதாக தெரிய வருகிறது. குறிப்பாக, திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் ஐங்கரன் இன்டர்நேஷனல் தலைவர் கருணாமூர்த்தியுடன் யாழ்ப்பாணம் வந்துள்ளார். கருணாமூர்த்தி ஈழத் தமிழர் ஆவார் என்பது நினைவிருக்கலாம். பல சூப்பர் ஹிட் தமிழ்ப் படங்களைத் தயாரித்துள்ளவர் கருணாமூர்த்தி.

யாழ்ப்பாணம் வந்த, அருண் பாண்டியன், இணுவில் என்ற கிராமத்தில் தங்கியிருந்தார். அப்போது, பொது மக்கள் பலரையும் அவர் சந்தித்துப் பேசினார்.

யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும் மிக முக்கியமான புகைப்படங்களை அவர் எடுத்துள்ளார். தமிழ் அரசியல் கட்சியின் பிரதிநிதிகள் இருவர், அவரைச் சந்தித்துப் பேசியதாகவும் கூறப்படுகின்றது என்கின்றனர்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் இலங்கை விவகாரத்தில் மிக ஆர்வமாக உள்ளதாகவும், அதனால் தான் தனது நம்பிக்கைகுரிய நட்சத்திரம் அருண்பாண்டியன் மூலம் சில தகவல்களை பெற்று வர பணித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

அருண் பாண்டியன் தமிழகம் வந்த பின்பு, இலங்கையில் ஈழ தமிழர்களின் நிலையை புதுக்கோட்டை இடைத் தேர்தல் பிரச்சாரத்தில் புட்டுவைக்கப் போவதாகவும் ஒரு தகவல் உலா வருகின்றது.

இதை லேட்டாக மோப்பம் பிடித்த தமிழக உளவுத்துறை , கடும் அதிர்ச்சி அடைந்து அது குறித்த தகவல்களை விரைவாக சேகரித்து வருகின்றது.

இலங்கைக்கு விசிட் அடித்த தேமுதிக எம்.எல்ஏ. அருண்பாண்டியன் - அதிர்ச்சியில் உளவுத்துறை!

இலங்கையில் யுத்தம் முடிவடைந்து இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள போதிலும், போரினால் இடம்பெயர்ந்திருந்த மக்களின் புனர்வாழ்வு நடவடிக்கைகள் திருப்தியளிக்கும் வகையில் இடம்பெறவில்லை என்றே பலரும் கூறுகின்றனர்.

போரினால் இடம்பெயர்ந்த சுமார் 3 லட்சம் பேர் மனிக்பாம் இடைத்தங்கல் முகாமில் தஞ்சமடைந்திருந்தனர். இவர்களில் சுமார் 17 ஆயிரம் பேரைத் தவிர ஏனையோர் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளதாக அரசாங்கம் கூறுகின்றது.

மீள்குடியேற்ற நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டு ஒரு ஆண்டுக்கும் மேலாகின்ற போதிலும் இன்னும் பலர் தரப்பாள் கொட்டில்களிலேயே வசிக்க நேர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மீள்குடியேற்றப்படும்போது உடனடியாகத் தங்குவதற்கு வழங்கப்பட்ட கூடாரங்களைக் கொண்டு இந்தத் தரப்பாள் கொட்டில்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கு அடுத்தபடியாக தற்காலிக வீடும், அதற்கு அடுத்ததாக நிரந்தர வீடமைப்பிற்கான உதவிகளும் வழங்கப்பட்டுள்ளன. ஆயினும் இந்த உதவிகள் மீள்குடியேறியுள்ள அனைவருக்கும் கிடைக்கவில்லை என மீள்குடியேற்றப் பகுதியில் உள்ள மக்கள் கூறுகின்றார்கள்.

மீள்குடியேற்றப் பிரதேசங்களில் வாழ்வாதார உதவிகளும் சீராக வழங்கப்படவில்லை, உட்கட்டமைப்பு வசதிகளில் குறிப்பாக போக்குவரத்திற்குரிய வீதிகள் முறையாகத் திருத்தப்படவில்லை, பொதுமக்களுக்கு, போரினால் ஏற்பட்ட இழப்புகளுக்கான இழப்பீடுகள் வழங்கப்படவில்லை, அரச ஊழியர்கள் மற்றும் இராணுவத்தினரிடம் சரணடைந்து தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு பின்னர் நீதிமன்றததின் ஊடாக விடுதலை செய்யப்பட்ட முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் ஆகியோருக்கான மறுவாழ்வு நடவடிக்கைகளிலும் போதிய கவனம் செலுத்தப்படவில்லை என்றும் பலரும் தெரிவிக்கின்றனர்.

மீள்குடியேற்றப் பகுதிகளில் சர்வதேச நிதி நிறுவனங்களின் நிதியுதவி மற்றும் அரச நிதியொதுக்கீட்டின் கீழ் வீதி புனரமைப்பு உட்பட உட்கட்டமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டிருப்பதாகக் கூறும் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன், புனர்வாழ்வு மற்றும் வாழ்வாதார உதவிகள் மிகவும் பாதிக்கப்பட்டவர்களுக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் வழங்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

புனர்வாழ்வு மற்றும் வாழ்வாதார உதவித் திட்டங்களில் எவரையும் அரசாங்கம் புறக்கணிக்கவில்லை. கிடைக்கின்ற உதவித்திட்டங்களுக்கமைய அனைவருக்கும் படிப்படியாக உதவிகள் வழங்கப்படும் என்றும் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் கூறுகின்றார்.

போருக்கு பிறகு மக்களின் வாழ்க்கை

மும்பை: உலக கோப்பை பைனலில் பங்கேற்கும் இலங்கை அணி, மும்பை வந்தது.
கொழும்புவில் நடந்த உலக கோப்பை அரையிறுதியில் இலங்கை அணி, நியூசிலாந்தை ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதையடுத்து வரும் ஏப். 2ம் தேதி மும்பை, வான்கடே மைதானத்தில் நடக்கும் பத்தாவது உலக கோப்பை தொடரின் பைனலில் பங்கேற்கிறது. இதற்கான சங்ககரா தலைமையிலான வீரர்கள் நேற்று, பலத்த பாதுகாப்புக்கு இடையில் மும்பை வந்தனர். நேராக தாஜ் ஓட்டலுக்கு சென்ற அவர்கள், இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இடையிலான அரையிறுதி போட்டியை "டிவி' யில் பார்த்து ரசித்தனர்.

மும்பையில் இலங்கை அணி

கொழும்பு: உலக கோப்பை பைனலுக்கு இலங்கை அணி மிகச் சுலபமாக முன்னேறியது. நேற்று நடந்த அரையிறுதி போட்டியில் நியூசிலாந்தை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. சொதப்பலாக ஆடிய நியூசிலாந்து அணி, தொடரில் இருந்து வெளியேறியது.
இந்திய துணைக் கண்டத்தில் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. நேற்று கொழும்பு, பிரேமதாசா அரங்கில் நடந்த முதலாவது அரையிறுதியில் இலங்கை, நியூசிலாந்து அணிகள் மோதின. நியூசிலாந்து அணியில் லூக் உட்காக் நீக்கப்பட்டு, மெக்கே வாய்ப்பு பெற்றார். இலங்கை அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. "டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் வெட்டோரி "பேட்டிங் தேர்வு செய்தார்.
திணறல் துவக்கம்:
நியூசிலாந்து அணி துவக்கத்தில் திணறியது. ஹெராத் பந்தில் ஒரு சிக்சர் அடித்த பிரண்டன் மெக்கலம்(13) அதிக நேரம் தாக்குப்பிடிக்கவில்லை. பின் கப்டில், ஜெசி ரைடர் இணைந்து நிதானமாக ஆடினர். முரளிதரன் சுழலில் ரைடர்(19) வெளியேறினார். மலிங்கா வேகத்தில் கப்டில்(39) காலியானார். இதையடுத்து 3 விக்கெட்டுக்கு 84 ரன்கள் எடுத்து தத்தளித்தது.
ஸ்டைரிஸ் ஆறுதல்:
இதற்கு பின் ராஸ் டெய்லர், ஸ்டைரிஸ் சேர்ந்து போராடினர். மலிங்கா ஓவரில் இரண்டு பவுண்டரி அடித்து அசத்தினார் ஸ்டைரிஸ். இந்த நேரத்தில் மெண்டிஸ் வலையில் டெய்லர்(36) சிக்கினார். மலிங்கா பந்தில் வில்லியம்சன்(22) வீழ்ந்தார். முரளிதரன் பந்தில் ஒரு சிக்சர் அடிக்க நாதன் மெக்கலமும்(9) விரைவில் நடையை கட்டினார். அரைசதம் கடந்த நிலையில் ஸ்டைரிஸ்(57), முரளிதரன் பந்தில் அவுட்டாக, ஸ்கோர் உயர வாய்ப்பு இல்லாமல் போனது. ஓரம்(7) ஏமாற்றினார். "டெயிலெண்டர்கள் மெண்டிஸ் சுழலில் வெளியேற, நியூசிலாந்து அணி 48.5 ஓவரில் 217 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இலங்கை தரப்பில் மலிங்கா 3, மெண்டிஸ் 3, முரளிதரன் 2 விக்கெட் வீழ்த்தினர்.
தில்ஷன் அபாரம்:
சுலப இலக்கை விரட்டிய இலங்கை அணிக்கு தரங்கா, தில்ஷன் மீண்டும் முறை அதிரடி துவக்கம் தந்தனர். நாதன் மெக்கலம் வீசிய முதல் ஓவரில் தரங்கா ஒரு சூப்பர் சிக்சர் அடித்தார். தரங்கா 30 ரன்களுக்கு வெளியேறினார். அடுத்து வந்த கேப்டன் சங்ககரா "கம்பெனி கொடுக்க, தனது அசத்தல் ஆட்டத்தை தொடர்ந்தார் தில்ஷன். அரைசதம் கடந்த இவர் 73 ரன்களுக்கு(10 பவுண்டரி, 1 சிக்சர்), சவுத்தி வேகத்தில் அவுட்டானார். இதற்கு பின் திடீரென சரிவு ஏற்பட்டது. அனுபவ வீரரான ஜெயவர்தனா(1), வெட்டோரி சுழலில் சிக்கினார். மெக்கே பந்தில் சங்ககரா(54) அவுட்டாக, இலங்கை அணி 4 விக்கெட்டுக்கு 169 ரன்கள் எடுத்து தவித்தது.
பின் சமரவீரா, சமரசில்வா சேர்ந்து பொறுப்பாக ஆடினர். ரைடர் ஓவரில் அடுத்தடுத்து இரண்டு பவுண்டரி அடித்த சமரசில்வா பதட்டத்தை போக்கினார். சிறிது நேரத்தில் சில்வா(13), சவுத்தி பந்தில் போல்டாக மீண்டும் "டென்ஷன் ஏற்பட்டது. இருப்பினும் சவுத்தி ஓவரில் ஒரு சிக்சர், பவுண்டரி அடித்த மாத்யூஸ் நம்பிக்கை அளித்தார். மறுபக்கம் மெக்கே பந்தை பவுண்டரிக்கு விரட்டிய சமரவீரா வெற்றியை உறுதி செய்தார். இலங்கை அணி 47.5 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 220 ரன்கள் எடுத்து சுலபமாக வெற்றி பெற்றது. இதன் மூலம் தொடர்ந்து இரண்டாவது முறையாக பைனலுக்கு முன்னேறியது. நியூசிலாந்து அணி மீண்டும் ஒரு முறை அரையிறுதியுடன் வெளியேறி, ஏமாற்றம் அளித்தது.
ஆட்ட நாயகன் விருதை சங்ககரா வென்றார்.
இன்றைய இந்தியா-பாகிஸ்தான் இடையிலான அரையிறுதியில் வெற்றி பெறும் அணியுடன், வரும் ஏப்.,2ம் தேதி நடக்கும் பைனலில் இலங்கை அணி விளையாடும்.
கடைசி போட்டி
இலங்கை சுழற்பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரன், உலக கோப்பை தொடருக்கு பின் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற உள்ளார். நேற்று கொழும்புவில், நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதியில் விளையாடிய இவர், சொந்த மண்ணில் தனது கடைசி போட்டியில் பங்கேற்றார். இப்போட்டியில் தனது 10வது ஓவரின் கடைசி பந்தில் நியூசிலாந்தின் ஸ்காட் ஸ்டைரிசை அவுட்டாக்கினார். இதேபோல காலேயில், கடந்த ஆண்டு இந்தியாவுக்கு எதிராக தனது கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடிய இவர், கடைசி பந்தில் பிரக்யன் ஓஜாவை வெளியேற்றினார். வரும் ஏப்.2ல் மும்பையில் நடக்கவுள்ள பைனல், இவரது கடைசி ஒருநாள் போட்டி.
மூன்றாவது முறை
நேற்று நியூசிலாந்தை வீழ்த்தியதன் மூலம், இலங்கை அணி உலக கோப்பை அரங்கில் மூன்றாவது முறையாக (1996, 2007, 2011) பைனலுக்கு முன்னேறி உள்ளது. இதில் கடந்த 1996ல் கோப்பை வென்ற இலங்கை அணி, 2007ல் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்து 2வது இடம் பிடித்தது.
---
தொடரும் சோகம்
நியூசிலாந்து அணியின் "அரையிறுதி சோகம் தொடர்கிறது. நேற்று இலங்கைக்கு எதிராக தோல்வி அடைந்ததன்மூலம், உலக கோப்பை அரங்கில் ஆறாவது முறையாக (1975, 79, 92, 99, 2007, 2011) அரையிறுதியில் தோல்வி அடைந்து வெளியேறியது.
---
ஸ்கோர் போர்டு
நியூசிலாந்து
கப்டில்(ப)மலிங்கா 39(65)
பிரண்டன்(ப)ஹெராத் 13(21)
ரைடர்(கே)சங்ககரா(ப)முரளிதரன் 19(34)
டெய்லர்(கே)தரங்கா(ப)மெண்டிஸ் 36(55)
ஸ்டைரிஸ்-எல்.பி.டபிள்யு.,(ப)முரளிதரன் 57(77)
வில்லியம்சன்-எல்.பி.டபிள்யு.,(ப)மலிங்கா 22(16)
நாதன்(கே)சங்ககரா(ப)மலிங்கா 9(9)
ஓரம்(கே)ஜெயவர்தனா(ப)தில்ஷன் 7(9)
வெட்டோரி-அவுட்இல்லை- 3(3)
சவுத்தி(கே)சங்ககரா(ப)மெண்டிஸ் 0(3)
மெக்கே(ப)மெண்டிஸ் 0(2)
உதிரிகள் 12
மொத்தம் (48.5 ஓவரில், "ஆல்-அவுட்) 217
விக்கெட் வீழ்ச்சி: 1-32(பிரண்டன்), 2-69(ரைடர்), 3-84(கப்டில்), 4-161(டெய்லர்), 5--192(வில்லியம்சன்), 6-204(நாதன்), 7-213(ஸ்டைரிஸ்), 8-215(ஓரம்), 9-217(சவுத்தி), 10-217(மெக்கே).
பந்துவீச்சு: மலிங்கா 9-0-55-3, ஹெராத் 9-1-31-1, மாத்யூஸ் 6-0-27-0, மெண்டிஸ் 9.5-0-35-3, முரளிதரன் 10-1-42-2, தில்ஷன் 5-0-22-1.
இலங்கை
தரங்கா(கே)ரைடர்(ப)சவுத்தி 30(31)
தில்ஷன்(கே)ரைடர்(ப)சவுத்தி 73(93)
சங்ககரா(கே)ஸ்டைரிஸ்(ப)மெக்கே 54(79)
ஜெயவர்தனா-எல்.பி.டபிள்யு.,(ப)வெட்டோரி 1(3)
சமரவீரா-அவுட்இல்லை- 23(38)
சில்வா(ப)சவுத்தி 13(25)
மாத்யூஸ்-அவுட்இல்லை- 14(18)
உதிரிகள் 12
மொத்தம் (47.5 ஓவரில், 5 விக்.,) 220
விக்கெட் வீழ்ச்சி: 1-40(தரங்கா), 2-160(தில்ஷன்), 3-161(ஜெயவர்தனா), 4-169(சங்ககரா), 5-185(சில்வா).
பந்துவீச்சு: நாதன் 6-0-33-0, சவுத்தி 10---2-57-3, வெட்டோரி 10-0-36-1, ஓரம் 8-1-29-0 மெக்கே 9.5-1-37-1, ஸ்டைரிஸ் 2-0-12-0, ரைடர் 2-0-14-0.

பைனலில் நுழைந்தது இலங்கை! * நியூசிலாந்து "அவுட்

கொழும்புவில் நடைபெற்ற இலங்கை, மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி கன மழை காரணமாக கைவிடப்பட்டது.

மேற்கிந்திய அணி முதலில் பேட் செய்து 50 ஓவர்களில் 245 ரன்கள் எடுத்தது. அப்போது உணவு இடைவேளை துவங்கியது.

உணவு இடைவேளைக்குப் பிறகு ஆட்டம் துவங்கும் நேரத்தில் மழை பிடிக்கத் தொடங்கியது. அது 3.20 வரையிலும் பெய்து கொண்டிருந்ததால் ஆட்டம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இரு அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் வரும் 3ஆம் தேதி நடைபெறுகிறது.

இலங்கை-மே.இ.தீவுகள் முதல் ஒருநாள் கிரிக்கெட் மழையால் ஆட்டம் ரத்து

கொழும்புவில் நடைபெற்ற இலங்கை, மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி கன மழை காரணமாக கைவிடப்பட்டது.

மேற்கிந்திய அணி முதலில் பேட் செய்து 50 ஓவர்களில் 245 ரன்கள் எடுத்தது. அப்போது உணவு இடைவேளை துவங்கியது.

உணவு இடைவேளைக்குப் பிறகு ஆட்டம் துவங்கும் நேரத்தில் மழை பிடிக்கத் தொடங்கியது. அது 3.20 வரையிலும் பெய்து கொண்டிருந்ததால் ஆட்டம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இரு அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் வரும் 3ஆம் தேதி நடைபெறுகிறது.

அமெரிக்கா சென்றிருந்த இலங்கை அதிபர் ராஜபக்ச இன்று நாடு திரும்பினார்.

கடந்த 18 ஆம் தேதி தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டு அமெரிக்க சென்றிருந்த அதிபர் ராஜபக்ச, பத்து நாட்கள் வரை அங்கு தங்கியிருந்துள்ளார்.

அக்காலப் பகுதியில் அவர் அங்குள்ள மருத்துவமனையொன்றில் சிகிச்சை பெற்று வந்ததாகவும் ஊடகங்களில் செய்திகளில் வெளியானது.ஆனால் அதனை உறுதிப்படுத்தப்படவில்லை.

இந்ந் இலையில்,இன்று அதிகாலை கொழும்பு விமான நிலையம் வந்திறங்கியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவிலிருந்து நாடு திரும்பினார் ராஜபக்ச

அமெரிக்கா சென்றிருந்த இலங்கை அதிபர் ராஜபக்ச இன்று நாடு திரும்பினார்.

கடந்த 18 ஆம் தேதி தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டு அமெரிக்க சென்றிருந்த அதிபர் ராஜபக்ச, பத்து நாட்கள் வரை அங்கு தங்கியிருந்துள்ளார்.

அக்காலப் பகுதியில் அவர் அங்குள்ள மருத்துவமனையொன்றில் சிகிச்சை பெற்று வந்ததாகவும் ஊடகங்களில் செய்திகளில் வெளியானது.ஆனால் அதனை உறுதிப்படுத்தப்படவில்லை.

இந்ந் இலையில்,இன்று அதிகாலை கொழும்பு விமான நிலையம் வந்திறங்கியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் அனுராதபுரம் சிறையில் கைதிகள் மீது சிறைக் காவலர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பல கைதிகள் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அனுராதபுரம் சிறையில் தமிழ் அரசியல் கைதிகளும் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இங்குள்ள 50 சிறைக் கைதிகள் தங்கள் போதுமான வசதிகளை செய்து தரக் கோரி ஞாயிற்றுக் கிழமை பட்டினிப் போராட்டம் நடத்தியதாகவும், அதைத் தொடர்ந்து சிறைக் கைதிகள் மீது காவலர்கள் தாக்குதல் நடத்த முற்பட்டபோது கலவரம் வெடித்ததாகவும், அதன் பிறகு அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

துப்பாக்கிச் சூட்டில் ஒரு பெண் கைதி கொல்லப்பட்டதாக சிறை அதிகாரி உறுதி செய்திருக்கிறார் என்றாலும், பல கைதிகள் கொல்லப்பட்டதாக தகவல்கள் வந்துள்ளதாக தமிழ்நெட் செய்தி கூறுகிறது. திங்கட்கிழமை இரவு வரை சிறைக்குள் எவரும் அனுமதிக்கப்படாததால், எந்த தகவலையும் உறுதி செய்ய முடியாத நிலை உள்ளது. ஆனால் பல கைதிகள் காயமடைந்துள்ளனர். அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக உறுதியான தகவல்கள் கூறுகின்றன.

அனுராதபுரம் சிறையில் துப்பாக்கிச் சூடு! பல கைதிகள் கொல்லப்பட்டதாகத் தகவல்

இலங்கை காவல் துறையில் தமிழ் மக்களை இணைத்து கொள்ளும் நடவடிக்கையின் ஒருபகுதியாக, மேலும் 1,000 பேரை இணைத்துக்கொள்வதற்கான நேர்முக தேர்வுகள் நடைபெற்றுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக இலங்கை காவல் துறையினர் நேர்முக தேர்வுகளை தொடங்கியுள்ளதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

உதவிப் பரிசோதகர், காவலர்கள், காவல்துறை வாகன ஓட்டிகள் ஆகிய பதவி காலியிடங்களுக்கு தமிழ் இளைஞர்களும், இளம் பெண்களும் சேர்த்துக் கொள்ளப்படுவதாகவும், வடபகுதியில் இருந்து இணைத்துக்கொள்ளப்படும் இவர்கள் வடபகுதியில் சேவையில் அமர்த்தப்படுவார்கள் என்றும் அவ்வட்டரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

அண்மையில் 336 தமிழ் இளைஞர்களையும், 16 தமிழ் பெண்களையும் இலங்கை காவல்துறையில் அரசு இணைத்திருந்தது.

இதனிடையே, இலங்கை அரசின் இந்த நடவடிக்கைக்கு பின்னர் அரசியல் நாச சதிகள் உள்ளதாகவும், துணை இராணுவக் குழுக்களை காவல் துறையினுள் நுழைக்க அது முற்படுவதாகவும் அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை காவல்துறையில் மேலும் ஆயிரம் தமிழர்கள் சேர்ப்பு

முக நூல்

Popular Posts