background img

புதிய வரவு

Showing posts with label nithin gadgari. Show all posts

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ஆ.ராசாவை இயக்கியவர்களையும் கைது செய்ய வேண்டுமென்று பா.ஜனதா தலைவர் நிதின் கட்கரி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ரூ.1.76 லட்சம் கோடி முறைகேடு நிகழ்ந்துள்ளது. இதில் ராசாவுக்கு மட்டுமல்லாமல் ஆட்சி, அதிகாரத்தில் மேல்மட்டத்தில் உள்ள வேறு பலருக்கும் தொடர்பு உள்ளது. அவர்கள் ராசாவை பின்னால் இருந்து இயக்கியுள்ளனர். அவர்கள் எல்லாம் யார் என்பதைக் கண்டறிந்து அனைவரையும் கைது செய்து மக்கள் முன் நிறுத்த வேண்டும்.

தங்களிடம் உள்ள சொத்துக்கணக்கை வெளியிட வேண்டுமென்று எங்கள் கூட்டணித் தலைவர்கள், முதல்வர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுபோன்று காங்கிரஸ் கூட்டணியில் உள்ளவர்கள் சொத்துக் கணக்கை வெளியிடுமாறு உத்தரவிடமுடியமா?முதலில் சோனியா காந்திதான் தனது உண்மையான சொத்துக் கணக்கை வெளியிடத் தயாரா?

இவ்வாறு அவர் கூறினார்.

ராசாவை இயக்கியவர்களையும் கைது செய்ய வேண்டும்: பா.ஜனதா

தமிழக மீனவர்கள் மீது மத்திய, மாநில அரசுகளுக்கு அக்கறை இல்லை. கண் துடைப்பிற்காகவே நிரூபமா ராவ் இலங்கைக்குச் செல்கிறார். இதனால் எந்தப் யனும் ஏற்படாது என்று பா.ஜ.க. தலைவர் நிதின் கட்கரி கூறினார்.

சென்னை வந்துள்ள நிதின் கட்கரி இன்று செய்தியாளர்களிடம் பேசினார்.

தமிழக மீனவர்கள் சிறிலங்க கடற்படையால் சுட்டுக் கொல்லப்படுவதை பாரதிய ஜனதா வன்மையாகக் கண்டிக்கிறது. மீனவர்களை பாதுகாக்க‌த் தவ‌றிய மத்திய, மாநில அரசுகள் மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர். மீனவர் பிரச்சனையை நாடாளுமன்றத்தில் பா.ஜ.க. ‌நி‌ச்சய‌ம் எழு‌ப்பு‌ம்.

இந்தியாவிடம் இருந்து உதவிகளைப் பெற்றுக்கொள்ளும் நிலையில், இந்திய மீனவர்களை இலங்கை சுட்டுக் கொல்கிறது. சிறிலங்க கடற்படையின் செயலை யாரும் நியாயப்படுத்த முடியாது. இலங்கையில் தமிழர்கள் பல பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். தமிழர்கள் மீதான தாக்குதல்கள் குறித்தும் சர்வதேச மனித உரிமை கழகத்தில் புகார் செய்வோம்.

தேர்தலை மனதில் வைத்துக்கொண்டே மத்திய, மாநில அரசுகள் நாடகம் ஆடுகின்றன. உண்மையில் தமிழக மீனவர்கள் மீது இவர்களுக்கு அக்கறை இல்லை. நிரூபமா ராவின் இலங்கைப் பயணம் வெறும் கண்துடைப்பு. இதனால் எந்தப் பயனும் ஏற்படாது என்று நிதின் கட்கரி கூ‌றியு‌ள்ளா‌ர்.

நிரூபமா ராவ் இலங்கை பயணம் கண்துடைப்பு - நிதின் கட்கரி

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் திமுகவை பயன்படுத்தி, மக்கள் பணத்தை காங்கிரஸ் கட்சி கொள்ளையடித்ததாக பா.ஜனதா தலைவர் நிதின் கட்கரி குற்றம் சாற்றியுள்ளார்.

சென்னையில் இன்று நடைபெற்ற தமது கட்சி பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு அவர் பேசியதாவது:

ஸ்பெக்ட்ரம் ஊழலில் முன்னாள் அமைச்சர் ஆ.ராசா முக்கிய பங்கு வகித்தார் என்றால், முதலமைச்சர் கருணாநிதி அதற்கு மூளையாக செயல்பட்டார்.2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் மக்கள் பணத்தை கொள்ளையடிக்க திமுகவுக்கு காங்கிரஸ் கட்சி அதனை'அவுட் சோர்சிங்'காக (அயலாக்கம்) வழங்கியது.

2010 ஆம் ஆண்டு 2ஜி,காமன்வெல்த் போட்டிகள், ஆதர்ஷ் வீட்டு ஊழல் மற்றும் போபர்ஸ் வழக்கு என ஊழல் ஆண்டாக ஆகிவிட்டது.

இந்த ஊழல்களின் மொத்த தொகை சுமார் 2லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும். இது நமது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 விழுக்காடு ஆகும்.

திமுகவை ஒரு வர்த்தக கடையாக (2ஜி ஊழல்) பயன்படுத்திக்கொண்டு மக்கள் பணத்தை காங்கிரஸ் கட்சி கொள்ளையடித்துள்ளது.

ஸ்பெக்ட்ரம் ஊழல் பிரச்சனையில் பா.ஜனதாவே எந்த குற்றச்சாற்றையும் கூறவில்லை.மாறாக சிஏஜி அறிக்கையில் கூறப்பட்டுள்ளதை பற்றி மட்டுமே குறிப்பிடுகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

2ஜி ஊழலில் திமுகவை பயன்படுத்தி காங்.கொள்ளையடித்தது: கட்கரி

முக நூல்

Popular Posts