background img

புதிய வரவு

Showing posts with label srilangha. Show all posts

இலங்கையில் தமிழர்கள் எதிராக சிறிலங்க அரசு நடத்திய உள்நாட்டுப் போரில் நிகழ்ந்த போர்க் குற்றங்கள் தொடர்பான ஆரம்பக் கட்ட விசாரணை இன்னமும் முடியவில்லை என்று ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன் கூறியுள்ளார்.

இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்ட் பல்கலையில் உரையாற்றச் சென்ற பான் கி மூனிடம் எழுப்பப்பட்ட வினாக்களுக்கு பதில் தருகையில் பான் கி மூன் இவ்வாறு கூறியுள்ளார்.

“உங்களுடைய கவலைகளை நானும் பகிர்ந்து கொள்கிறேன். அங்கு நடந்த போர் எனக்கு கவலையை அளித்தது. தற்போது சண்டை முடிவிற்கு வந்துள்ளது. நான் இரண்டு முறை இலங்கைக்குச் சென்றேன். அந்நாட்டு அதிபருடனும், மற்ற தலைவர்களுடனும் மிகத் தீவிரமாக பேசினேன். அவர்களோடு மிக நீண்ட, கடினமான, வாக்குவாதம் நிறைந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு, ஒரு நிபுணர் குழு அமைக்கப்பட வேண்டியதன் அவசியத்தை அவர்களுக்கு புரிய வைத்தேன். அது எனக்கு நியாயமானதாகத் தெரிந்தது. அந்த நிபுணர் குழு இன்னமும் ஆரம்ப கட்ட விசாரணையை முடிக்கவில்லை, அது தொடர்பாக சிறிலங்க அரசுடன் பேசி வருகின்றனர்” என்று கூறியுள்ளார்.

எங்கு எது நடந்தாலும் அதற்கான பொறுப்பு யாருடையது என்பதை உறுதி செய்ய வேண்டும். குற்றம் செய்தவர் யாராயிருப்பினும் அவர்கள் பொறுப்பாக்கப்பட வேண்டும். அதுவே நீதியின் கொள்கை என்று பான் கி மூன் கூறியுள்ளார்.

“எவ்வாறு அரசியல் நிலைத் தன்மையையும், அரசியல் அதிகாரத்தையும், நீதியையும் ஒரே நேரத்தில் நிலை நிறுத்த முடியும் என்று சிலர் கருதக்கூடும். அரசியல் நிலைத்தன்மை அவசியம்தான், ஆனால் அதோடு நியாயமும் நிலைநிறுத்தப்படவிலையென்றால் அந்த நிலைத்தன்மை நீடிக்காது. அதே நேரத்தில் அரசியல் நிலைத்தன்மை இல்லையென்றாலும் நீதியை நிலை நிறுத்த முடியாது. எனவே அரசியல் நிலைத்தன்மையும், நீதியும் ஒன்றிணைந்து செல்ல வேண்டும். அதைத்தான் நான் இலங்கையில் நிலைநிறுத்த முயன்றுக் கொண்டிருக்கின்றேன்” என்றும் பான் கி மூன் பேசியுள்ளார்.

சிறிலங்க போர்க் குற்றம் தொடர்பான ஆரம்ப விசாரணை முடியவில்லை: பான் கி மூன்

இலங்கையில் தமிழர்களின் பாரம்பரிய பகுதிகளான வடக்கு, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களில் உள்ள ஏற்பட்டுள்ள வெள்ளத்தினால் 10 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பேரழிவு ஆளுமை மையம் தெரிவித்துள்ளது.

இந்த வெள்ளத்தால் 11 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், வெள்ளத்தில் சிக்கிய 37 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 40 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டு 430 தற்காலிக முகாம்களில் தங்கள வைக்கப்பட்டுள்ளதாகவும், வெள்ளத்தில் சிக்கி 7 பேர் உயிரிந்துள்ளதாகவும், 2 பேர் காணவில்லை என்றும் பேரழிவு ஆளுமை மையம் தெரிவித்துள்ளது.

இந்த வெள்ளத்தால் பல ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும், வெள்ளத்தின் பாதிப்பு முழுமையாக மதிப்பிடப்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

யாழ் மாணவர்கள் உதவி

சமீபத்தில் பெய்த பெரும் மழையால் கடும் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ள திருகோணமலை மாவட்ட மக்களுக்கு, யாழ்ப்பாணத்தில் சேர்த்த அத்யாவசியப் பொருட்களை யாழ் பல்கலை மாணவர்கள் கொண்டு சென்று வழங்கியுள்ளனர்.

வெருகல் என்ற கிராம்ப் பகுதியில்தான் பாதிப்பு கடுமையாக இருந்துள்ளது. அந்தப் பகுதியில் ஏற்கனவே மழை பெய்தபோதும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அப்போதும் யாழ் மாணவர்கள் அவர்களுக்கு உதவியுள்ளனர். இப்போது மாணவர்கள் அளித்துள்ள உணவுப்பொருட்கள் அடுத்த 3 நாட்களுக்கு மட்டுமே போதுமானது என்றும், அதன் பிறகு என்ன செய்வதென்று தெரியவில்லை என்றும் அம்மக்கள் கூறியுள்ளனர்.

இப்பகுதி மக்களின் தேவைகளை அரசும், தொண்டு நிறுவனங்களும் உடனடியாக நிவர்த்தி செய்ய வேண்டும் என்று யாழ் மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இலங்கையின் வட கிழக்குப் பகுதிகளில் மீண்டும் வெள்ளம்: 10 இலட்சம் பேர் பாதிப்பு

பேசும் சக்தியை முற்றிலும் இழந்துவிட்ட பார்வதி அம்மாள், யாரையும் அடையாளம் காண்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் சுயநினைவை அவர் இழந்துள்ளதாகவும் சாவகச்சேரி மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

பார்வதி அம்மாளின் கணவர் இறந்ததில் இருந்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் இலங்கை பாராளு மன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் அவரை பராமரித்து வருகிறார்.

பிரபாகரனின் தாயார் கவலைக்கிடம்

இன நல்லிணக்கத்துக்காக பேச்சுவார்த்தையை தொடர்வது என்று தமிழ் தேசிய கூட்டமைப்பும், இலங்கை அரசு தீர்மானித்துள்ளன.

அரசியல் மாற்றத்திற்கான இன நல்லிணக்கம் மற்றும் நிரந்தர சமாதானத்திற்காக தொடர்ச்சியாக பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது என இலங்கை அரசுக்கும்,தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கும் இடையே நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தீர்மானிக்கப்பட்டது.

எவ்வாறாயினும் பேச்சுவார்த்தைக்கு பின்னர் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை.

இது தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கூறியதாவது:

இவ்வாறான பேச்சுக்களில் தொடர்ந்து ஈடுபடுவது என தீர்மானிக்கப்பட்டதோடு, வடக்கு மற்றும் சம்பூர் பிரதேச அதியுயர் பாதுகாப்பு வலயங்களில் மக்களை மீளக்குடியமர்த்துவதுடன், புனர்வாழ்வு நிலையங்களிலுள்ள முன்னாள் போராளிகள் மற்றும் அரசியல் கைதிகள் குறித்து கலந்துரையாடப்பட்டதாகவும்,பேச்சுவார்த்தை விவரங்களை தெரிவிக்க மறுத்து விட்டார்.

இதனிடையே, தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு தொடர்பாக, இலங்கை அரசும் தமிழ் தேசிய கூட்டமைப்பும் பேச்சு நடத்த வேண்டும் என இந்திய அரசு கோரிக்கை விடுத்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

பேச்சுவார்த்தையை தொடர த.தே.கூ - இலங்கை அரசு முடிவு

கொழும்புவில் இலங்கை மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்திய தீவுகளை இலங்கை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

இதன் மூலம் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் இலங்கை 1-0 என்று முன்னிலை வகிக்கிறது. முதல் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது.

வெற்றி பெற 204 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி தில்ஷான் விக்கெட்டை அவரது சொந்த எண்ணிக்கையான 11 ரன்களில் ராம்பாலிடம் இழந்தது.

அதன் பிறகு ரோச், ராம்பால், சம்மி, கெய்ல் ஆகியோர் நெருக்க ரன் விகிதம் மெதுவாகவே ஏறியது. தரங்காவும் ஜெயவர்தனேயும் 14.3 ஓவர்களில் ஸ்கோரை 46 ரன்களுக்குக் கொண்டு சென்றபோது மழை வரத்தொடங்கியது. பிறகு ஆட்டம் 3.15 மணிக்குத் துவங்கியபோது இலக்கு 47 ஓவர்களில் 197 ரன்களாகக் குறக்கப்பட்டது.

இதில் உபுல் தரங்கா அபாரமாக விளையாடி 101 ரன்களையும், ஜெயவர்தனே 46 பந்துகளில் 48 ரன்களையும் எடுத்து இன்னும் 27 பந்துகள் மீதமிருக்க 199/2 என்று வெற்றி பெறச் செய்தனர்.

இடையில் சங்கக்கார 20 ரன்களில் பிராவோவிடம் ஆட்டமிழந்தார். ஜெயவர்தனேயும், தரங்காவும் 97 ரன்களை ஆட்டமிழக்காமல் சேர்த்தனர்.

ஆட்டநாயகனாக உப்புத் தரங்கா தேர்வு செய்யப்பட்டார்.

இரண்டாவது ஒருநாள்: இலங்கை வெற்றி

சென்னை வில்லிவாக்கத்திலுள்ள இருப்புப் பெட்டி தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட தொடர் வண்டி பயணிகள் பெட்டிகள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.
இலங்கையில் புதிதாக அமைக்கப்பட்டுவரும் தொடர் வண்டிப் பாதைகளில் இயக்கப்படவுள்ள இன்சினையும், தொடர் வண்டிகளுக்கான 45 பயணிகள் பெட்டிகளைத் தயாரித்துத் தர இந்தியாவிற்கு சிறலங்க அரசிற்கும் இடையே கடந்த ஆண்டு ஏப்ரலில் ஒப்பந்தம் கையெழுத்தானது.
அதன்படி, சென்னை இருப்புப் பெட்டித் தொழிற்சாலையில் (ஐசிஎஃப்) தயாரிக்கப்பட்ட 12 பயணிகள் பெட்டிகள் முதற்கட்டமாக இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. வண்ணமயமான கண்கவர் பூச்சுகளுடன் தயாரிக்கப்பட்டுள்ள ஒவ்வொரு பயணிகள் பெட்டியும் 30 முதல் 35 டன் எடை கொண்டவை. எஞ்சின் 75 டன் எடை கொண்டது.
நேற்று முன் தினம் 3 பயணிகள் பெட்டிகள் 100 அடி நீளம் கொண்ட மிகப் பெரிய டிரெய்லர்களில் ஏற்றப்பட்டு சென்னை துறைமுகத்திற்குக் கொண்டுவரப்பட்டன. இந்த டிரெய்லர்களின் நீளம் மிக அதிகமானது என்பதலால், சாலைகளில் நெருக்கடி ஏற்படுவதைத் தடுக்க இரவு நேரத்தில் கொண்டு செல்லப்படுகிறது.
சாதாரண பெட்டிகள், குளிர் வசதி செய்யப்பட்ட பெட்டிகள் என அனைத்தும் இந்த 45 பெட்டிகளில் அடக்கமாகும். பெட்டிகள் அனைத்தும் துறைமுகத்திற்கு வந்து சேர்ந்த பின் அவைகள் கப்பல் மூலம் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படும்.
இலங்கையின் தென் பகுதியில் உள்ள மாத்தளையில் இருந்து கொழும்புவி்ற்கு இரயில் பாதை அமைக்க 800 மில்லியன் டாலர்களை - மென் கடனாக கொடுத்து உதவியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கைக்கு ஐசிஎஃப் இரயில் பெட்டிகள்!

தமிழக மீனவர்கள் மீது மத்திய, மாநில அரசுகளுக்கு அக்கறை இல்லை. கண் துடைப்பிற்காகவே நிரூபமா ராவ் இலங்கைக்குச் செல்கிறார். இதனால் எந்தப் யனும் ஏற்படாது என்று பா.ஜ.க. தலைவர் நிதின் கட்கரி கூறினார்.

சென்னை வந்துள்ள நிதின் கட்கரி இன்று செய்தியாளர்களிடம் பேசினார்.

தமிழக மீனவர்கள் சிறிலங்க கடற்படையால் சுட்டுக் கொல்லப்படுவதை பாரதிய ஜனதா வன்மையாகக் கண்டிக்கிறது. மீனவர்களை பாதுகாக்க‌த் தவ‌றிய மத்திய, மாநில அரசுகள் மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர். மீனவர் பிரச்சனையை நாடாளுமன்றத்தில் பா.ஜ.க. ‌நி‌ச்சய‌ம் எழு‌ப்பு‌ம்.

இந்தியாவிடம் இருந்து உதவிகளைப் பெற்றுக்கொள்ளும் நிலையில், இந்திய மீனவர்களை இலங்கை சுட்டுக் கொல்கிறது. சிறிலங்க கடற்படையின் செயலை யாரும் நியாயப்படுத்த முடியாது. இலங்கையில் தமிழர்கள் பல பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். தமிழர்கள் மீதான தாக்குதல்கள் குறித்தும் சர்வதேச மனித உரிமை கழகத்தில் புகார் செய்வோம்.

தேர்தலை மனதில் வைத்துக்கொண்டே மத்திய, மாநில அரசுகள் நாடகம் ஆடுகின்றன. உண்மையில் தமிழக மீனவர்கள் மீது இவர்களுக்கு அக்கறை இல்லை. நிரூபமா ராவின் இலங்கைப் பயணம் வெறும் கண்துடைப்பு. இதனால் எந்தப் பயனும் ஏற்படாது என்று நிதின் கட்கரி கூ‌றியு‌ள்ளா‌ர்.

நிரூபமா ராவ் இலங்கை பயணம் கண்துடைப்பு - நிதின் கட்கரி

முக நூல்

Popular Posts