background img

புதிய வரவு

Showing posts with label bjp. Show all posts

டெல்லி மாநகராட்சி புதிய மேயரை தேர்வு செய்ய நேற்று தேர்தல் நடந்தது. மேயர் பதவிக்கு பா.ஜ.க. சார்பில் ரஜினி அபி, காங்கிரஸ் சார்பில் சவீதா சர்மா போட்டியிட்டனர். டெல்லி மாநகராட்சி கவுன்சிலர்கள் 272 பேர் மேயரை தேர்வு செய்ய வாக்களித்தனர்.

நேற்று மாலை ஓட்டு எண்ணிக்கை நடந்தது. பா.ஜ.க. பெண் வேட்பாளர் ரஜினி அபி 170 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். காங்கிரஸ் வேட்பாளர் சவீதாவுக்கு அதிக வாக்குகள் கிடைக்க வில்லை. அவர் 88 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார். 8 வாக்குகள் செல்லாததாக அறிவிக்கப்பட்டது.

டெல்லி புதிய மேயராக தேர்வாகியுள்ள ரஜினி அபி டெல்லி பல்கலைக்கழகத்தில் 19 ஆண்டுகள் பேராசிரியராக பணிபுரிந்தவர். முகர்ஜி நகர் தொகுதியில் இருந்து தேர்வான அவர் கடும் போட்டிக்கு பிறகு மேயர் ஆகி உள்ளார். டெல்லி நகரை சுத்தமான, பசுமையான நகரமாக மாற்ற பாடுபட போவதாக ரஜினி அபி அறிவித்துள்ளார். துணை மேயராக பா.ஜ.க. வேட்பாளர் 39 வயதான அணில் சர்மா தேர்வானார்.

பாரதீய ஜனதா வெற்றி: டெல்லியில் பெண் மேயர் தேர்வு; 88 ஓட்டில் காங்கிரஸ் தோல்வி

பெங்களூரு:கர்நாடகாவில் நடந்த ராஜ்யசபா தேர்தலில் பழம்பெரும் நடிகை ஹேமமாலினி தேர்ந்தெடுக்கப்பட்டார்.கர்நாடகாவிலிருந்து ராஜ்யசபாவின் ஒரு இடத்துக்கு நடந்த தேர்தலில், பா.ஜ., சார்பில் போட்டியிட்ட நடிகை ஹேமமாலினி வெற்றி பெற்றார். இவருக்கு, 106 ஓட்டுகள் கிடைத்தன. இவருக்கு எதிராக போட்டியிட்ட காங்கிரஸ் - ம.ஜ.த., ஆதரவு வேட்பாளர் மருள சித்தப்பா, 94 ஓட்டுகள் பெற்றார். மொத்தம் 205 ஓட்டுகள் பதிவானது. ஐந்து ஓட்டுகள் செல்லாதவை.ஹேமமாலினி வெற்றி பெற்றதையடுத்து, பா.ஜ.,வினர் அவருக்கு இனிப்பு கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.இவருக்கு 110 கோடி ரூபாய் மதிப்புக்கு சொத்து உள்ளதாக, தான் சமர்ப்பித்த கணக்கில் கூறியுள்ளார்.

ராஜ்யசபா உறுப்பினராகஹேமமாலினி தேர்ந்தெடுப்பு

ஓசூர் : ""தமிழகத்தில், தி.மு.க., - காங்., ஊழல் கூட்டணியை தோற்கடிக்க, எந்த கட்சிகளுடனும் கூட்டணி அமைக்க பாரதிய ஜனதா தயாராக உள்ளது,'' என, மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை மற்றும் ஓசூரில் பாரதிய ஜனதா கட்சி சட்டசபை தொகுதி தேர்தல் ஆலோசனை கூட்டம், மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையில் நடந்தது.கூட்டத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆறு சட்டசபை தொகுதிகளிலும் போட்டியிடுவது எனவும், தொகுதி வாரியாக மூன்று ஊராட்சிகளை ஒருங்கிணைத்து, தேர்தல் கமிட்டி அமைத்து, தேர்தல் பணி மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டது.

அதன்பின் மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசியதாவது:மத்தியிலும், மாநிலத்திலும் உள்ள தி.மு.க., - காங்., ஊழல் கூட்டணியை தோற்கடிக்க எந்த கட்சிகளுடன் கூட்டணி அமைக்க தயாராக உள்ளோம். "2ஜி' முடிந்து தற்போது "4ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில், 2 லட்சம் கோடி ரூபாய் ஊழல் செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. பணபலம் மற்றும் அதிகாரம் பலமிக்க ஊழல் கூட்டணியை, நாட்டை விட்டு விரட்டுவதற்கு மக்கள் முடிவு செய்து விட்டனர். மக்களை ஒருங்கிணைக்க எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும்.இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் பேசினார்.

தி.மு.க.,வை தோற்கடிக்க எந்த கூட்டணியிலும் சேர தயார் : பா.ஜ., மாநில தலைவர் பேச்சு

2ஜி ஒதுக்கீடு குறித்து விசாரித்த விசாரணை ஆணையத்தின் அறிக்கை, முன்னாள் தொலை தொடர்பு துறை அமைச்சர் ஆ.ராசாவை காப்பற்றும் ஒரு முயற்சியே என்று பா.ஜனதா குற்றம் சாற்றியுள்ளது.

2ஜி ஒதுக்கீடு குறித்து விசாரிக்க மத்திய அரசால் நியமிக்கப்பட்ட முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி சிவராஜ் பாட்டீலைக் கொண்ட ஒரு நபர் விசாரணை ஆணையம்,தனது அறிக்கையை அண்மையில் மத்திய தொலைதொடர்பு துறை அமைச்சர் கபில்சிபலிடம் அளித்தது.

இந்நிலையில் இந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்களை இன்று டெல்லியில் செய்தியாளர்களிடம் வெளியிட்ட கபில் சிபல், 2003 முதல் 08 ஆம் ஆண்டு வரையில் எடுக்கப்பட்ட அனைத்து ஸ்பெக்ட்ரம் முடிவுகளுமே தவறானவை என்று அதில் கூறப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதனைக் குறிப்பிட்டே,ராசா செய்த சட்டவிரோத காரியங்களிலிருந்து அவரை காப்பாற்றும் நோக்கத்தில் சிவராஜ் பாட்டீல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக டெல்லியில் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது பா.ஜனதா பேச்சாளர் ரவி சங்கர் பிரசாத், குற்றம்சாற்றினார்.

எனவே நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை மட்டுமே உண்மையை வெளிக்கொண்டு வரும் என்பதால்தான்,அதனை தமது கட்சி வலியுறுத்துவதாக அவர் கூறினார்.

தே.ஜ. கூட்டணியிடம் மறைப்பதற்கு எதுவுமில்லை. 1998 லிருந்தே ஒவ்வொரு ஒதுக்கீடு குறித்தும் நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரிக்கட்டும் என்றுதான் நாங்கள் கூறுகிறோம் என்று ரவி சங்கர் மேலும் கூறினார்.

ஆ.ராசாவை காப்பாற்ற முயற்சி: பா.ஜனதா குற்றச்சாற்று

முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா கைது ஆனதைத் தொடர்ந்து அதனை வரவேற்றுள்ள தமிழக பாரதீய ஜனதா தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், நாடாளுமன்றக் கூட்டுக்குழு விசாரணையே தீர்வாக அமையும் என்று கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், "காலம் கடந்த நடவடிக்கை என்றாலும் இப்போதாவது கைது செய்து இருப்பது வர வேற்கத்தக்கது. தேர்தல் நெருங்கும் நேரத்தில் மக்களின் கோபத்தை தணிக்க கைது நடவடிக்கை போலித்தனமாக இல்லாமல் உறுதியான நடவடிக்கையாக இருக்கவேண்டும்.

இந்த பிரச்சினையில் தனி ஒரு மனிதர் மட்டும் ஈடுபட்டு இருக்க மாட்டார். எனவே இதில் தொடர்புடைய மற்ற அரசியல்வாதிகள், அதிகாரிகளையும் கைது செய்ய வேண்டும். அவர்களின் சொத்துக்களையும் பறிமுதல் செய்யவேண்டும்.

பாராளுமன்ற கூட்டுக்குழு, சுப்ரீம் கோர்ட்டு விசாரணைகள் மூலம் மட்டுமே இதன் முழு விபரங்களையும் வெளிக்கொண்டு வர முடியும்." என்றார்.

நாடாளுமன்றக் கூட்டுக்குழு விசாரணையே தீர்வு - பொன். ராதாகிருஷ்ணன்

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ஆ.ராசாவை இயக்கியவர்களையும் கைது செய்ய வேண்டுமென்று பா.ஜனதா தலைவர் நிதின் கட்கரி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ரூ.1.76 லட்சம் கோடி முறைகேடு நிகழ்ந்துள்ளது. இதில் ராசாவுக்கு மட்டுமல்லாமல் ஆட்சி, அதிகாரத்தில் மேல்மட்டத்தில் உள்ள வேறு பலருக்கும் தொடர்பு உள்ளது. அவர்கள் ராசாவை பின்னால் இருந்து இயக்கியுள்ளனர். அவர்கள் எல்லாம் யார் என்பதைக் கண்டறிந்து அனைவரையும் கைது செய்து மக்கள் முன் நிறுத்த வேண்டும்.

தங்களிடம் உள்ள சொத்துக்கணக்கை வெளியிட வேண்டுமென்று எங்கள் கூட்டணித் தலைவர்கள், முதல்வர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுபோன்று காங்கிரஸ் கூட்டணியில் உள்ளவர்கள் சொத்துக் கணக்கை வெளியிடுமாறு உத்தரவிடமுடியமா?முதலில் சோனியா காந்திதான் தனது உண்மையான சொத்துக் கணக்கை வெளியிடத் தயாரா?

இவ்வாறு அவர் கூறினார்.

ராசாவை இயக்கியவர்களையும் கைது செய்ய வேண்டும்: பா.ஜனதா

2ஜி ஊழல் வழக்கில் முன்னாள் மத்திய தொலை தொடர்பு துறை அமைச்சர் ஆ.ராசா கைது செய்யப்பட்டுள்ளது மிகவும் தாமதமான நடவடிக்கை என்று பா.ஜனதா கூறியுள்ளது.

டெல்லியில் இன்று இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் பேச்சாளர் ராஜீவ் பிரதாப் ரூடி, ராசா கைது செய்யபட்டதை தமது கட்சி வரவேற்றபோதிலும், இது மிகச் சிறிய மற்றும் தாமதமான நடவடிக்கை என்றும்,இந்த ஊழலில் தொடர்புடைய மற்றவர்களும் கைது செய்யப்பட வேண்டும் என்றும் கூறினார்.

ராசா மட்டுமே 1.76 லட்சம் கோடி ரூபாயை முழுங்கிவிட்டார் என்று கூறுவது அநியாயமானது. அதில் தொடர்புடைய மற்றவர்கள் யார்? அதனை தெரிந்துகொள்ள பா.ஜனதா விரும்புகிறது.

ராசா கைது ஒரு தொடக்கம் மட்டுமே.ராசா கைது செய்யப்பட்டதற்காக மத்திய அரசுக்கு நற்சான்றிதழ் கொடுத்து விடாதீர்கள்.இன்னும் பல கேள்விகளுக்கு அரசு பதிலளிக்க வேண்டியதுள்ளது என்று அவர் மேலும் கூறினார்.

ராசா கைது மிகவும் தாமதமானது: பா.ஜனதா

மைசூர் : "முதல்வர் பதவியில் இருந்து என்னை வெளியேற்றும் நோக்கில், பில்லி சூனியம் வைக்கும் முயற்சி இன்னும் தொடர்கிறது' என, கர்நாடக முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

தென்னிந்திய பகுதியில் முதல் முறையாக, பா.ஜ., ஆட்சியைக் கொண்டு வந்த எடியூரப்பா, 2008ல் முதல்வர் பதவியேற்றார். அவரது கட்சி உறுப்பினர்கள் சிலர் செய்த "உள்ளடி' வேலைகள் காரணமாக இரண்டு முறை நம்பிக்கை ஓட்டெடுப்பு கொண்டு வரப்பட்டு, அதில் வெற்றியும் பெற்றார். இருந்தாலும், ஆட்சி கையை விட்டுப் போய்விடுமோ என்ற அச்சம் அவரை விட்டபாடில்லை.கடந்தாண்டு அக்டோபரில், கர்நாடக தலைமை செயலகம் முன், அறுபட்ட நிலையில் உள்ள கோழித் தலைகள் மற்றும் தாறுமாறாக சிதறிக் கிடந்த பூஜை பொருட்களாலும் அதிர்ச்சி அடைந்த எடியூரப்பா, "தன்னைக் கொல்ல சதி நடக்கிறது என்றும், எதிர்க்கட்சிகள் மேற்கொள்ளும் எந்த சதிக்கும் நான் பயப்பட மாட்டேன்' என்றும் கூறினார்.அடிக்கடி கோவில்களுக்கு ஆன்மிக சுற்றுப்பயணம் மேற்கொண்டு, தாராள நிதி உதவியும் செய்து வந்தார். சமீபத்தில் கூட, அவர் காளஹஸ்தி கோவிலுக்குச் சென்று சிறப்பு பிரார்த்தனைகள் செய்தார். தொடர்ந்து, நிலபேரம் தொடர்பான ஊழல் புகாரில் சிக்கியவர், பில்லி சூனியம் தான் தன் பிரச்னைகளுக்கு காரணம் என சொல்லி வருகிறார்.

இந்நிலையில், மைசூரில் உள்ள தும்கூர் பகுதியில், நேற்று நடந்த திருமண விழாவில் பங்கேற்ற எடியூரப்பா, நிருபர்களிடம் கூறியதாவது:முதல்வர் பதவியில் இருந்து வெளியேற்றும் விதமாக, எனக்கு எதிராக தொடர் சதி நடக்கிறது. ஏற்கனவே, ஒருமுறை பில்லி சூனியம் வைத்து, தோற்றுப் போனாலும் மீண்டும், மீண்டும் அதற்கான முயற்சியில் எதிர்க் கட்சியினர் ஈடுபட்டுள்ளனர். இதனால், விதான் சவுதா (தலைமைச் செயலகம்) சென்றுவிட்டு, உயிரோடு வீடு திரும்ப முடியும் எனும் உறுதி எனக்கு இல்லை. மாநிலத்தில் உள்ள ஆறு கோடி மக்களின் பிரதிநிதியாக உள்ள என்னையும், எனது பதவியையும் அவமதிக்கும் விதமாக, கவர்னர் பரத்வாஜ் மேற்கொண்டு வரும் பொய்த் தகவல்கள் பற்றி பிரதமருக்கு விரைவில் கடிதம் ஒன்றும் எழுதுவேன்.என்னைப் பற்றி யார் என்ன சொன்னாலும் எனக்கு கவலை இல்லை. பா.ஜ., தலைமை எனக்கு முழு ஆதரவு தருகிறது. அதனால், கட்சியில் உள்ளவர்களுக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் நான் சொல்வது, எஞ்சிய இரண்டு ஆண்டுகளுக்கும் பா.ஜ., அரசே தொடரும். இதில் எந்த சந்தேகமும் இல்லை. யாரும் எங்களை ஆட்சியை விட்டு துரத்த முடியாது.இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

எனக்கு எதிராக பில்லி சூனியம் : இப்படியும் எடியூரப்பா அச்சம்

டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்த பா.ஜனதா மூத்த தலைவர் ஒருவர், தங்கள் கட்சியின் மூத்த தலைவர்கள் சட்டவிரோதமாக ஜம்மு விமான நிலையத்தில் அடைத்துவைக்கப்பட்டதாகவும், பின்னர் அவர்கள் பலவந்தமாக ஜம்மு காஷ்மீருக்கு வெளியே கொண்டு செல்லப்பட்டதாகவும் குற்றம்சாற்றினார்.

இதன் காரணமாக அம்மாநில அரசுக்கு எதிராக வழக்கு தொடருவது குறித்து ஆலோசித்து வருவதாக அவர் மேலும் கூறினார்.

குடியரசு தினத்தன்று காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரின் லால் சவுக்கில் தேசியக் கொடியேற்றுவதற்காக புறப்பட்ட பா.ஜனதா கட்சியின் இளைஞரணி (ஏக்தா) யாத்திரை, மாநில எல்லையில் நேற்று தடுத்து நிறுத்தப்பட்டது.

கட்சித் தலைவர்கள் சுஷ்மா ஸ்வராஜ்,அருண் ஜெட்லி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு, ஹால்மார்க் ஹோட்டலில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டு நேற்று விடுதலை செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

'ஏக்தா'யாத்திரை: ஜம்மு காஷ்மீர் அரசுக்கு எதிராக பா.ஜ.வழக்கு

கர்நாடக முதல்வர் எடியூரப்பா மற்றும் உள்துறை அமைச்சர் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக வழக்குத் தொடர அனுமதியளித்து ஆளுநர் பரத்வாஜ் பிறப்பித்த உத்தரவின் நகலை அளிக்கக் கோரி ஆளுநர் மாளிகை நோக்கி அந்த மாநில அமைச்சர்கள் இன்று பேரணி நடத்தினர்.

தம்மீது வழக்குத் தொடர அனுமதியளித்த ஆளுநரின் செயலைக் கண்டித்திருந்த முதல்வர் எடியூரப்பா, "அரசியல் சட்டப்படி, ஒரு மாநிலத்தின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் ஒருவர் என் மீது வழக்குத் தொடர்வதற்கு அனுமதியளித்த உத்தரவை எனக்குத் தராமல் இருப்பது துரதிருஷ்டவசமானது" என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் ஆளுநர் பரத்வாஜ் பிறப்பித்த உத்தரவின் நகலை அளிக்கக் கோரி சட்டத் துறை அமைச்சர் சுரேஷ் குமார் தலைமையில் நடைபெற்ற பேரணியில் பல் அமைச்சர்கள் கலந்து கொண்டனர். ஆளுநர் மாளிகையில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவு வரை நடந்து வந்த அவர்கள்: ஆளுனருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

ஆளுநர் மாளிகையை நோக்கி கர்நாடக அமைச்சர்கள் பேரணி

காஷ்மீரின் லால் சவுக்கில், குடியரசு தினத்தன்று ஏற்கனவே அறிவித்தபடி தேசியக் கொடி ஏற்றப்படும் என்று பா.ஜனதா திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

பா.ஜனதா இளைஞரணி தலைவர் தாகூர் கடந்த 12 ஆம் தேதி தொடங்கிய ராஷ்ட்ரீய ஏக்தா யாத்திரை, வருகிற 26 ஆம் தேதி குடியரசு தினத்தன்று ஸ்ரீநகரில் உள்ள லால் சவுக்கில் முடிவடைகிறது. அப்போது அங்கு தேசிய மூவர்ண கொடியை ஏற்றப்போவதாக தாகூர் அறிவித்துள்ளார்.

ஆனால் லால் சவுக்கில் தேசியக் கொடியை ஏற்றுவது அப்பகுதியில் மதக்கலவரம் ஏற்படும் வாய்ப்பை ஏற்படுத்திவிடும் என்பதால்,. அத்திட்டத்தை கைவிடுமாறு ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் ஒமர் அப்துல்லா, பா.ஜனதாவுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இது தொடர்பாக அவர் பிரதமர் மன்மோகன் சிங்கையும் சந்தித்துப் பேசி இருந்தார்.

இந்நிலையில் ஒமர் அப்துல்லாவின் வேண்டுகோளை நிராகரித்துள்ள பா..ஜனதா, திட்டமிட்டபடி லால் சவுக்கில் தேசியக் கொடி ஏற்றப்பட்டே தீரும் என்றும், ஒமர் அப்துல்லாவும் இதில் கலந்துகொள்ளவேண்டும் என்றும் கூறியுள்ளது.

சண்டிகரில் இதனை இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்த தாகூர், பிரிவினைவாதிகள் எங்களுக்கு உத்தரவிடுவதை அனுமதிக்க முடியாது என்று மேலும் கூறினார்.

கொடியேற்றும் பிரச்சனை: ஒமர் அப்துல்லா வேண்டுகோளை நிராகரித்தது பா.ஜ

முக நூல்

Popular Posts