background img

புதிய வரவு

Showing posts with label one day. Show all posts

தினசரி மூன்று கதலி வாழைப்பழங்களை (Banana) சாப்பிடுவதன் மூலம் பக்கவாதம் ஏற்படுவதைத் தவிர்‌‌க்க முடியும் என்று ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

காலை உணவுக்குப் பின் ஒன்றும், பகல் உணவுக்குப் பின் ஒன்றும் பின்னர் மாலை வேளையில் ஒன்றுமாகச் சாப்படுவது நல்லது என்றும் விஞ்ஞானிகள் யோசனை தெரிவித்துள்ளனர்.

இது உடலுக்குத் தேவையான பொட்டாஸியத்தை வழங்குகின்றது. அதன்மூலம் மூளையில் இரத்தக் கட்டுக்கள் ஏற்படுவது 21 ‌விழு‌க்காடு தடுக்கப்படுகின்றது. பிரிட்டிஷ் மற்றும் இத்தாலிய ஆய்வாளர்களே இந்த முடிவுக்கு வந்துள்ளனர்.

பசளிக் கீரை, விதைவகைகள், பால், மீன், பருப்பு வகைகள் போன்ற பொட்டாஸிய உணவு வகைகளை உட்கொள்வதன் மூலமும் ஆயிரக்கணக்கானவர்களுக்கு பக்கவாதம் ஏற்படுவதைத் தடுக்க முடியும் என்று விஞ்ஞானிகள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

இதற்கு முந்தைய சில ஆய்வுகளிலும் வாழைப்பழங்கள் இரத்த ஓட்டத்தை சீர்படுத்தி பக்கவாதத்தை தடுக்கக் கூடியவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

1960ஆம் ஆண்டுகளின் நடுப்பகுதி முதல் நடத்தப்பட்ட 11 வெவ்வேறு ஆய்வுகளின் அடிப்படையிலேயே இந்த முடிவுக்கு விஞ்ஞானிகள் வந்துள்ளனர்.

தினசரி உணவில் 1600 மில்லி கிராம் பொட்டஸியத்தைச் சேர்த்துக் கொண்டாலே போதுமானது என்றும் அமெரிக்க இதய நோய்கள் கல்லூரியின் சஞ்சிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாழைப்பழத்தில் சராசரியாக 500 மில்லி கிராம் பொட்டாஸியம் அடங்கியுள்ளது. இது இரத்த அழுத்தத்தை சீர்படுத்தி உடம்பின் நீர்த்தன்மை சமநிலையையும் பேணுகின்றது எ‌ன்று தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

‌தின‌ம் மூ‌ன்று வாழை‌ப்பழ‌ம் சா‌ப்‌பி‌ட்டா‌ல் ப‌க்கவாத‌த்தை த‌வி‌ர்‌க்கலா‌ம்!

அமெரிக்காவில் உள்ள நியூஜெர்சியை சேர்ந்தவன் ஜெஸ்சி சாக்ஷான். 4 வயது சிறுவனான இவன் தனது தாயுடன் காரில் வெளியில் சென்று இருந்தான். திடீரென மனச்சோர்வடைந்த அவன் காரில் அமர்ந்தபடி அழுது கொண்டிருந்தான்.

இதை பார்த்த அவனது தாய் ஏன் அழுகிறாய் என கேட்டார். அதற்கு அவன் நான் நியூஜெர்சி மாகாண கவர்னராக வேண்டும் என தனது ஆசையை தெரிவித்தான். உடனே, அவனது தாய், நீ சிறுவனாக இருக்கிறாய். எனவே தற்போது கவர்னராக முடியாது.

வளர்ந்து பெரியவன் ஆனதும் நீயும் கவர்னர் பதவி வகிக்கலாம் என்றார். ஆனால், சிறுவன் ஜெஸ்சி சாக்சன் கேட்கவில்லை. தொடர்ந்து அழுதபடி அடம் பிடித்தான். பின்னர் ஒரு வழியாக சமாதானம் செய்து அவனது தாய் அழைத்து சென்றார்.

இச்சம்பவம் அனைத்தும் “யூடியூப்” இணைய தளத்தில் வீடியோ காட்சியாக ஒளிபரப்பானது. அதை நியூஜெர்சி மாகாணத்தின் தற்போதைய கவர்னர் கிரிஸ் கிறிஸ்டி பார்த்தார். இதை தொடர்ந்து அச்சிறுவனின் ஆசையை தீர்த்து வைக்க விரும்பினார்.

ஆகவே அவனை நியூஜெர்ஸி மாகாணத்தின் ஒருநாள் கவர்னர் ஆக்க முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளை செய்தார். பின்னர் சிறுவன் ஜெஸ்சி சாக்சான் ஒரு நாள் கவர்னராக பதவி வகித்தான். இதை அவர் நிருபர்களிடம் தெரிவித்தார்.

மேலும் தனது தம்பி கவர்னராக இருந்த ஆலிவுட் நடிகர் அர்னால்டு ஷ்வார்ஷ் னேஷரை போல தானும் கவர்னராக வேண்டும் என இதுபோன்று அழுது அடம் பிடித்ததாக பலத்த சிரிப்புக்கு இடையே கூறினார்.

“முதல்வன்” சினிமா படத்தில் நடிகர் அர்ஜூன் ஒருநாள் முதல்-அமைச்சராவது போல் நடித்து இருந்தார். ஆனால் அமெரிக்காவில் 4 வயது சிறுவன் உண்மையிலேயே ஒரு நாள் கவர்னராக பதவி வகித்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறான்.

அமெரிக்கா நியூஜெர்சியில் ஒருநாள் கவர்னராக பதவி வகித்த 4 வயது சிறுவன்

இன்றைய அவசர யுகத்தின் தவிர்க்க முடியாத பிரச்சனையாகி விட்ட உடல் பருமன் மற்றும் தொப்பை ஏற்படக் காரணமான கொழுப்பை விரட்ட, உணவு பழக்கம் மிக முக்கியமான ஒன்றாக உள்ளது.

ஒரு சில ஊட்டச்சத்து நிபுணர்கள் மற்றும் மருத்துவர்கள், உணவை ஒரு நாளைக்கு சிறிது சிறிதாக ஆறு வேளைக்கு உண்பது அதிக கொழுப்பு சேர வழி வகுக்காது என்று கூறியிருந்தனர்.

இந்நிலையில் ஆறு வேளை வேண்டாம்; நாளொன்றுக்கு 3 வேளை உணவே சிறந்தது என்ற புதிய ஆய்வறிக்கை ஒன்றை அமெரிக்கவின் இண்டியானா மாகாணத்தில் உள்ள புர்டியு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர்.

குறிப்பாக உடல் பருமனான நபர்கள் 6 வேளை உண்பதற்குப் பதிலாக, 3 வேளை மட்டும் கலோரி குறைந்த, புரதச்சத்து நிறைந்த உணவு நல்லது என்றும், அது அவர்களுக்கு பசியை குறைத்து, திருப்திகரமான உணர்வை தரும் என்று அவர்கள் கூறுகின்றனர்.

நாம் மேற்கூறியபடி உணவை சிறிது சிறிதாக அதிக அளவு உண்பது நல்லது என்ற எண்ணம் பரவலாக ஏற்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ள அந்த ஆராய்ச்சியாளர்கள், 3 வேளை உணவுதான் சிறந்தது என்றும், இந்த "மினி மீல்ஸ்" பழக்கம் எவ்வித பலனையும் தராது என்று அடித்துக்கூறுகின்றனர்.

3 வேளை உணவே சிறந்த உணவு பழக்கம்!

சென்னை : தி.மு.க., கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 63 தொகுதிகளில் போட்டியிட விருப்பம் தெரிவித்து, ஒரே நாளில் 600 மனுக்கள் சத்தியமூர்த்தி பவனில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. கோஷ்டித் தலைவர்களின் ஆதரவாளர்கள் சீட் கேட்டு குவிந்ததால், கட்சியினர் நெரிசலில் சிக்கித் தவித்தனர்.
தி.மு.க., அணியில், காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 63 தொகுதிகளுக்கு மட்டும் விருப்ப மனுக்கள் பெறப்படும் என அக்கட்சியின் தலைவர் தங்கபாலு அறிவித்தார். பொதுத் தொகுதிக்கு 5,000 ரூபாய், தனித் தொகுதிக்கு 2,500 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ராஜிவ் அரங்கத்தில் விண்ணப்ப படிவம் வழங்கப்பட்டது. நீண்ட கியூவில் நின்று படிவங்களை கட்சியினர் பெற்றுக் கொண்டனர். மயிலாப்பூர் தொகுதிக்கு கராத்தே தியாகராஜன், ஆலந்தூர், தி.நகர், ஆவடிக்கு எஸ்.டி.நெடுஞ்செழியன், அண்ணா நகருக்கு ஜி.ஆர்.கதிரவன், ருக்மாங்கதன், ஜி.ஆர்.வெங்கடேஷ், ஆவடிக்கு ஐஸ் அவுஸ் தியாகு, பொன் கிருஷ்ணமூர்த்தி, மனோகரன் ஆகியோர் மனு தாக்கல் செய்துள்ளனர்.
ஈரோடு மேற்கு தொகுதிக்கு யுவராஜா, வாசுதேவநல்லூருக்கு முன்னாள் மத்திய அமைச்சர் அருணாசலத்தின் தம்பி மகன் தங்கை கணேசன், ராயபுரத்திற்கு மனோ, பாலசந்தானம், விருத்தாசலத்திற்கு மெய்யப்பன், கிருஷ்ணகிரிக்கு சுகந்தன், ஆலந்தூருக்கு கத்திப்பாரா ஜனார்த்தனம், ராமநாதபுரத்திற்கு கரு சுப்பிரமணியம், ஆம்பூருக்கு ஹசீனா சையத், வெங்கட், மயிலாப்பூருக்கு எஸ்.வி.சேகர், மங்கள்ராஜ், அசோக்குமார் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர்.
தி.நகருக்கு சேம.நாராயணன், வக்கீல் சத்தியமூர்த்தி, முக்தா சீனிவாசன், ஆத்தூருக்கு உலகநம்பி ஆகியோர் விருப்ப மனுக்களை தாக்கல் செய்தனர். அறந்தாங்கி தொகுதியில் முன்னாள் அமைச்சர் திருநாவுக்கரசர் போட்டியிடுவதற்கு வக்கீல் சிவராஜசேகரனும், தி.நகர் தொகுதிக்கு செல்லக்குமார் போட்டியிடுவதற்கு எஸ்.எம்.குமார், முனீஷ்வர கணேஷ் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர். தி.நகர், அண்ணா நகர், மயிலாப்பூர் தொகுதிக்கு மத்திய அரசு வக்கீல் மோகன்தாஸ் விருப்ப மனு தாக்கல் செய்தார்.
கட்சியினர் வாகனங்கள் சத்தியமூர்த்தி பவன் வெளியே நிறுத்தப்பட்டதால், ஜெனரல் பீட்டர்ஸ் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மனு வாங்கும் இடத்திலும் கூட்டம் அதிகமாக இருந்ததால், கட்சியினர் நெரிசலில் சிக்கித் தவித்தனர். நேற்று மாலை நிலவரப்படி, 63 தொகுதிகளுக்கு போட்டியிடுவதற்கு 600 மனுக்கள் குவிந்தன. விருப்ப மனுவில், சிறை சென்ற அனுபவம், வெற்றி வாய்ப்புக்கான விவரங்கள், இதற்கு முன் தேர்தலில் போட்டியிட்ட அனுபவம் உண்டா? உள்ளிட்ட கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.
வேட்பு மனுவை பெறும் நிகழ்ச்சியை துவக்கி வைத்து தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு நிருபர்களிடம் கூறும்போது, ""புதன், வியாழன் ஆகிய இரு நாட்கள் விருப்ப மனுக்கள் பெறப்படும். விருப்ப மனுக்களை ஆய்வு செய்து, வெற்றி பெறக்கூடிய சிறப்பான வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படுவர். வேட்பாளர் பட்டியலை தேர்வுக் குழு இறுதி செய்து, சோனியா ஒப்புதலுடன் வெளியிடப்படும்,'' என்றார்.
தந்தை, மகன் ஒரே தொகுதியில் போட்டியிட விருப்ப மனு : முன்னாள் எம்.எல்.ஏ.,வும், மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் ஆதரவாளருமான குமாரதாஸ், கிள்ளியூர், விளவங்கோடு, குளச்சல் ஆகிய மூன்று தொகுதிகளில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார். அவரது மகன் கே.வி.தேவ், கிள்ளியூர் தொகுதியில் போட்டியிட விருப்ப மனு கொடுத்துள்ளார். தந்தையும், மகனும் கிள்ளியூர் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்திருப்பதால், யாருக்கு சீட் கிடைக்கும் என்பது கேள்விக்குறியாக உள்ளது.
"புது நெல்லு புது நாத்து' படத்தில் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் விக்னேஷ். இவர், சமீபத்தில் டில்லியில் மத்திய அமைச்சர் வாசன் முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். மூப்பனார் பேரவைக்கு மாநிலச் செயலர் பதவியும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. கட்சியில் சேர்ந்து ஒரு வாரம் கூட ஆகவில்லை, அவரும் நிலக்கோட்டை தொகுதிக்கு விருப்ப மனு கொடுத்தார்.
சிட்டிங் எம்.எல்.ஏ.,க்கள் கோவை தங்கம் வால்பாறைக்கும், ஞானசேகரன் வேலூருக்கும், விடியல் சேகர் காங்கேயத்திற்கும், விஷ்ணு பிரசாத் செய்யாறுக்கும், ராணி வெங்கடேசன் ஸ்ரீவைகுண்டத்திற்கும் விருப்ப மனு தாக்கல் செய்தனர்.

காங்கிரஸ் 63 தொகுதிகளுக்கு ஒரே நாளில் 600 பேர் விருப்ப மனு

முக நூல்

Popular Posts