background img

புதிய வரவு

Showing posts with label world cup. Show all posts

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதற்காக மைசூர் சாமுண்டீசுவரி அம்மனுக்கு 202 தேங்காய்கள் உடைத்து நடிகர் அம்பரீஷ் வேண்டுதலை நிறைவேற்றினார்.

உலக கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இலங்கை அணியை வென்றதன் மூலம் 28 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி கோப்பையை கைப்பற்றி சாதனை படைத்தது. இதற்காக நாடு முழுவதும் உள்ள ரசிகர்கள் கோவில்களில் சிறப்பு பூஜை செய்து தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றினார்கள்.

இதேபோல் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அம்பரீஷ், இந்திய அணியின் வெற்றிக்காக மைசூர் சாமுண்டீசுவரி அம்மனுக்கு 202 தேங்காய்கள் உடைத்து வேண்டுதலை நிறைவேற்றினார்.

இதற்காக தனது மனைவியும், நடிகையுமான சுமலதாவுடன் அம்பரீஷ் சாமுண்டீசுவரி அம்மன் கோவிலுக்கு வந்தார். கோவிலில் சிறப்பு பூஜை செய்து சாமி கும்பிட்டு விட்டு தேங்காய்களை உடைத்தார். அவருடைய மனைவி சுமலதாவும் தேங்காய் உடைத்தார். அவர்களுடன் நடிகரும், பட அதிபருமான ராக்லைன் வெங்கடேஷ் உள்ளிட்ட பலர் சிறப்பு பூஜையில் கலந்து கொண்டனர்.

பின்னர் அம்பரீஷ் கூறியதாவது: உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரைஇறுதி ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்றால் 101 தேங்காய்களும், இறுதி போட்டியில் வெற்றி பெற்றால் 101 தேங்காய்களும் உடைப்பதாக சாமுண்டீசுரி அம்மனை வேண்டிக் கொண்டேன்.

எனது வேண்டுதலை நிறைவேற்றிய அம்மனுக்கு இன்று தேங்காய் உடைத்தேன். 10 தேங்காய்கள் மட்டும் உடைக்கும்படியும், மீதி தேங்காய்களை அன்னதானத்துக்கு வழங்கும்படியும் கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர். அதன்படி, 10 தேங்காய்களை உடைத்து வேண்டுதலை நிறைவேற்றினேன். மீதி தேங்காய்களை அன்னதானத்துக்காக வழங்குவது மேலும் மகிழ்ச்சியையும், மனநிம்மதியையும் கொடுத்து உள்ளது என்றார்.

உலக கோப்பையை இந்தியா வென்றதற்காக சாமுண்டீசுவரி அம்மனுக்கு 202 தேங்காய் உடைத்த நடிகர்

மும்பை: தோனிக்கு சாதகமாக கிரகங்களின் அமைப்பு இருப்பதால், இம்முறை இந்திய அணி உலக கோப்பை வெல்ல வாய்ப்பு இருப்பதாக, ஜோதிடரின் கணிப்பு தெரிவிக்கிறது.
உலக கோப்பை கிரிக்கெட் லீக் போட்டிகள் முடிந்து, காலிறுதி போட்டிகள் நாளை முதல் துவங்குகின்றன. மார்ச் 24ம் தேதி நடக்கும் இரண்டாவது காலிறுதியில் இந்திய அணி, "நடப்பு சாம்பியன்' ஆஸ்திரேலியாவை சந்திக்கிறது.
தோனி "1981':
இந்தச் சூழலில் இந்தியா தான் கோப்பை வெல்லும் என மும்பை ஜோதிடர் ஒருவர் கணித்துள்ளார். இதற்கு கேப்டன் தோனியின் பிறந்த ஆண்டு பலமாக இருப்பது தான் காரணம். இவர் 1981ல் பிறந்துள்ளார். இதே ஆண்டில் பிறந்த ஸ்பெயின் கால்பந்து அணியின் கேப்டன் கேசில்லாஸ், 2010ல் உலக கோப்பையை வென்றார். தற்போது பாலிவுட்டில் பிரபலமாக உள்ள ஷாகித் கபூர் 1981, ரன்பீர் கபூர் 1982ல் பிறந்தவர்கள் தான். அதாவது அனைத்து துறையிலும் 1981ல் பிறந்தவர்கள் தான் ஆதிக்கம் செலுத்துகின்றனர்.
கடந்த 1974ல் பிறந்த ஆஸ்திரேலியாவின் பாண்டிங், ஏற்கனவே இரண்டு முறை கோப்பை வென்று விட்டார். இதனால் இத்தொடரில் 1981ல் பிறந்த இந்திய அணி கேப்டன் தோனி, தென் ஆப்ரிக்க கேப்டன் ஸ்மித் ஆகியோரில் ஒருவருக்கு கோப்பை வெல்லும் வாய்ப்புள்ளது.
மற்றவர்கள் எப்படி:
சூரியன், செவ்வாய் கிரகங்களின் ஆதிக்கம் நிறைந்த இலங்கை கேப்டன் சங்ககராவுக்கு (1977), இம்முறை உலக கோப்பை கிடைக்காது. இங்கிலாந்தின் ஸ்டிராசிற்கு (1977), ஆஷஸ் வெற்றியுடன் எல்லாம் முடிந்து விட்டது. இதனால் தான் அடுத்து வந்த ஒருநாள் தொடரில் மோசமாக தோற்றது. பாகிஸ்தான் கேப்டன் அப்ரிதி (1980) சிறப்பாக செயல்பட்டாலும், இவர் இம்ரான் கான் ஆகமுடியாது. வெட்டோரி (1979), சமிக்கும் (1983) கிரகபலன்கள், அவ்வளவு அனுகூலமாக இல்லையாம்.
கிளார்க் வந்தால்...:
கடந்த 2006 உலக கோப்பை கால்பந்து சாம்பியன் பட்டம் வென்ற, இத்தாலி கேப்டன் கன்னவரோ பிறந்த ஆண்டு 1973. ஆஸ்திரேலிய அணி பார்ப்பதற்கு வலிமையாக இருந்தாலும், பாண்டிங்கிற்கு மீண்டும் கோப்பை வெல்லும் அதிர்ஷ்டம் இல்லை. ஒருவேளை காயம் காரணமாக பாண்டிங் விலகி, 1981ல் பிறந்த மைக்கேல் கிளார்க் கேப்டன் பதவியேற்றால் மீண்டும் கோப்பை வெல்ல வாய்ப்பு ஏற்படும்.
இந்தியாவுக்கு வாய்ப்பு:
தற்போதுள்ள இந்திய அணி, "நாக் அவுட்' சுற்றில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்த காத்திருக்கிறது. அரையிறுதியில் பாகிஸ்தானை சந்திக்க நேர்ந்தாலும், மீண்டும் வெற்றி பெறுவது உறுதி.
கிரகங்களில் வலிமையானதாக உள்ள புளூட்டோ தான், 1983ல் கபில் தேவுக்கு சாதகமாக இருந்து, யாரும் எதிர்பார்க்காத வகையில் கோப்பை வெல்லச் செய்தது. தற்போது இதே பலன்கள் தோனிக்கு ஊக்கமாக அமைவதால், ஆஸ்திரேலியாவின் வெற்றி நடைக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்.

இந்தியாவுக்கு உலக கோப்பை வாய்ப்பு *தோனிக்கு சாதகமான கிரகங்கள்

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியையொட்டி பயிற்சி ஆட்டங்கள் இன்று தொடங்கின. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தென் ஆப்பிரிகா-ஜிம்பாப்வே அணிகள் மோதிய பயிற்சி ஆட்டம் நடந்தது.

இதில் முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 41.5 ஓவர்களில் 152 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக டெய்லர் 40 ரன்களும், வில்லியம்ஸ் 35 ரன்களும் எடுத்தனர். அடுத்து களம் இறங்கிய தென் ஆப்பிரிக்க அணி 23.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. காலிஸ் ஆட்டம் இழக்காமல் 49 ரன்கள் எடுத்தார். ஆம்லா 45 ரன்களும், சுமித் 41 ரன்களும் எடுத்தனர்.

இலங்கை-நெதர்லாந்து அணிகள் இடையிலான பயிற்சி ஆட்டம் கொழும்பு சிங்ஹலிஸ் மைதானத்தில் நடந்தது. முதலில் பேட் செய்த இலங்கை அணி 50 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 351 ரன்கள் குவித்தது. பின்னர் விளையாடிய நெதர்லாந்து அணி 47.3 ஓவர்களில் 195 ரன்களில் ஆட்டம் இழந்தது.

கொழும்பு பிரேமதாசா ஸ்டேடியத்தில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி, கென்யாவை சந்தித்தது. இதில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 253 ரன்கள் சேர்த்தது. அடுத்து களம் இறங்கிய கென்யா அணி 45.3 ஓவர்களில் 192 ரன்களில் ஆல்-அவுட் ஆனது.

சிட்டகாங்கில் நடந்த வங்காளதேசம்-கனடா இடையிலான ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த கனடா 37.3 ஓவர்களில் 112 ரன்களில் சுருண்டது. தொடர்ந்து ஆடிய வங்காளதேச அணி 19.2 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 113 ரன்கள் சேர்த்து 9 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது.

உலக கோப்பை பயிற்சி ஆட்டம்: தென் ஆப்பிரிக்கா, இலங்கை, வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேசம் வெற்றி

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்க இன்னும் 9 தினங்களே உள்ளது. உலக கோப்பை போட்டிக்காக இந்திய வீரர்களின் பயிற்சி முகாம் பெங்களூரில் நேற்று தொடங்கியது. இந்திய அணி கேப்டன் டோனி இன்று காலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

உலக கோப்பை போட்டிக்காக தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறோம். 15 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவில் உலக கோப்பை போட்டி நடைபெறுவதால் அதிக எதிர்பார்ப்பு உள்ளது. அதோடு இந்திய அணி விளையாடும்போது எப்போதும் எதிர்பார்ப்பு இருக்கும். ஆனால் மற்ற போட்டிகளை விட உலக கோப்பை மிகப் பெரிய போட்டியாகும்.

இதனால் அதற்கு ஏற்றவாறு நாங்கள் திட்டமிட்டு விளையாடுவோம். 2007 உலக கோப்பை போட்டியில் முதல் சுற்றிலே வெளியேற்றப்பட்டதால் அதில் இருந்து பாடம் கற்றுக் கொண்டோம். உலக கோப்பை போட்டி என்பதால் இந்திய அணிக்கு கூடுதல் நெருக்கடி இல்லை. ஆனால் பொறுப்பு கூடுதலாக இருப்பதாக நினைக்கிறேன்.

இந்திய அணி அனுபவம் வாய்ந்தது. அணியில் உள்ள பெரும்பாலான வீரர்கள் 5 முதல் 7 ஆண்டுகள் வரை விளையாடிய அனுபவம் வாய்ந்தவர்கள். இதனால் நெருக்கடி நேரத்தில் எப்படி ஆடுவது என்பது அவர்களுக்கு தெரியும். மேலும் ஆட்டத்தின் போக்கை மாற்றக்கூடிய திறமை வாய்ந்த இளம்வீரர்களும் அணியில் உள்ளனர்.

இந்திய துணைக் கண்டத்தில் ரன்சேஸ் செய்வதை விட முதலில் பேட்டிங் செய்வது சிறந்தது என்று கருதுகிறேன். பவர்பிளே ஆட்டத்தின் தன்மையை மாற்றும்.தெண்டுல்கருக்கு இது கடைசி உலக கோப்பை போட்டியாகும்.

நாங்கள் உலக கோப்பை போட்டிக்காக எல்லா வகையிலும் தயாராகி வருகிறோம். போட்டி அட்டவணை திருப்தி அளிக்கிறது. போட்டியின் தொடக்கத்தை விட மத்தியில் அதிக பரபரப்பு இருக்கும். “நாக்அவுட்” சுற்று பரபரப்பாக இருக்கும். “லீக்” ஆட்டங்களில் தொய்வு இருப்பதாக கருத முடியாது. ஏனென்றால் கடந்த உலக கோப்பையில் சிறிய அணிகள் அதிர்ச்சி கொடுத்தன.

இதனால் எல்லா போட்டிகளும் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். உலக கோப்பை போட்டியில் பங்கேற்கும் எல்லா அணிகளும் அபாயகரமானதே. ஒவ்வொரு அணிக்கு அதன்பலம் தெரியும். பெரும் பாலான அணிகள் பந்து வீச்சில் பலம் பொருந்தியவையாக இருக்கும் என்று கருதுகிறேன். டெஸ்ட் கிரிக்கெட்டுக்கும், 20 ஓவர் போட்டிக்கும் இடையே மாறுபட்டது 50 ஓவர் போட்டி. நான் ஒருநாள் போட்டியின் ரசிகன் ஆவேன். ஒருநாள் போட்டியை நேசிக்கிறேன். அதற்காக டெஸ்ட் அல்லது, 20 ஓவர் போட்டியை விரும்பவில்லை என்று அர்த்தம் கிடையாது.

பிரவீன்குமார் சிறந்த வீரர். நேர்த்தியுடன் பந்து வீசக் கூடியவர். அவர் காயத்தால் உலக கோப்பையில் ஆட முடியாமல் போனது துரதிருஷ்டமே. அவரை நாங்கள் அதிகமாக இழந்து வருகிறோம். சில வீரர்கள் லேசான காயத்தில் இருக்கலாம். அது எப்போதும் நடக்க கூடியதுதான். ஆனால் கவலைப்படும் படும்படி ஒன்றும் இல்லை. எந்த ஒரு வீரருக்கும் பயப்படும்படி பெரிய அளவிலான காயம் இல்லை.

இவ்வாறு டோனி கூறினார்.

ஷேவாக், காம்பீர், தெண்டுல்கர் ஆகியோர் காயத்தில் இருந்து தற்போது முழு குண மடைந்து விட்டனர். உலக கோப்பை போட்டியில் இந்திய அணி “பி” பிரிவில் இடம்பெற்றுள்ளது. தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, வெஸ்ட்இண்டீஸ், வங்காளதேசம், நெதர்லாந்து, அயர்லாந்து அணிகளும் அந்த பிரிவில் இடம் பெற்றுள்ளன. இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் வங்காள தேசத்தை 19-ந் தேதி எதிர்கொள்கிறது.

இந்த ஆட்டம் மிர்பூரில் நடக்கிறது. இதற்கு முன்னதாக இந்திய அணி 2 பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது. ஆஸ்திரேலியாவுடன் 13-ந்தேதியும், நியூசிலாந்துடன் 16-ந்தேதியும் விளையாடுகிறது.

உலக கோப்பை போட்டியில் இந்திய அணிக்கு நெருக்கடி இல்லை: டோனி பேட்டி

மும்பை: கடும் போட்டிகளுக்கு இடையே,உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.)அதிகாரப்பூர்வ கார் பார்ட்னர் அந்தஸ்தை ஹூண்டாய் நிறுவனம் பெற்றுள்ளது.

ஐ.சி.சி.,உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் வரும் 19ந்தேதி துவங்க உள்ளது.இந்தியா, வங்கதேசம் மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் இந்த மெகா திருவிழாவை இணைந்து நடத்துகின்றன.

உலககோப்பை கிரிக்கெட் போட்டிகளை இணைந்து நடத்துவதற்கான ஒத்துழைப்பு மற்றும் சேவையை வழங்கும் வகையில்,பல்வேறு பிரிவுகளின் கீழ் பல முன்னணி நிறுவனங்களை ஐ.சி.சி அதிகாரப்பூர்வமாக நியமித்துள்ளது.

இதில்,ஐ.சி.சி.யின் கார் பார்ட்னர் அந்தஸ்தை ஹூண்டாய் நிறுவனம் பெற்றுள்ளது.கார் பார்ட்னர் அந்தஸ்தை பெறுவதற்கு மாருதி சுஸுகி உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் கடுமையாக போட்டியிட்டன.இறுதியில் ஹூண்டாய் நிறுவனத்திற்கு வாய்ப்பு கிட்டியுள்ளது.

இதன்மூலம்,இந்த உலககோப்பை கிரிக்கெட் போட்டி முதல் அடுத்த 4 ஆண்டுகளுக்கு ஐ.சி.சி.யின் அதிகாரப்பூர்வ கார் பார்ட்னராக இருப்பதற்கு ஹூண்டாய் நிறுவனம் ஐ.சி.சி.யுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.மேலும்,உலககோப்பை போட்டியில் ,வீரர்கள், நிர்வாகிகள் உள்ளிட்டவர்களை போட்டிகளுக்கு அழைத்து செல்வதற்கு ஹூண்டாய் கார்கள் பயன்படுத்தப்படும்.

இதுகுறித்து ஹூண்டாய் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி(சி.இ.ஒ.,) கூறியதாவது:

"ஐ.சி.சி.யின் கார் பார்ட்னர் அந்தஸ்தை பெற்றது மட்டற்ற மகிழ்ச்சி அளிக்கிறது.இந்த மெகா திருவிழாவில் நிர்வாகிகள்,வீரர்கள்,விருந்தினர்கள் உள்ளிட்டவர்களை அழைத்து செல்வதற்கு ஹூண்டாய் கார்கள் பயன்படுத்தப்படும்.இதற்காக ஐ10,சாண்டா எஸ்யூவீ,வெர்ணா,சொனாட்டா உள்ளிட்ட கார்கள் பயன்படுத்தப்படும்.

இதுதவிர,ஒப்பந்தத்தின்படி,வரும் 2015ம் ஆண்டு வரை ஐ.சி.சி.யின் அதிகாரப்பூர்வ கார் பார்ட்னராக ஹூண்டாய் இருக்கும்.மகளிர் உலக கோப்பை கிரிக்கெட்,ட்வென்ட்டி20 போட்டிகளிலும் ஐ.சி.சி.கார் பார்ட்னராக ஹூண்டாய் செயல்படும்,"என்றார்.

பிபா உலககோப்பை கால்பந்து போட்டியின் அதிகாரப்பூர்வ கார் பார்ட்னராகவும்,ஐ.சி.சி.விருது வழங்கும் விழாவிற்கான பெயர் காப்புரிமை பெற்ற நிறுவனமாகவும் ஹூண்டாய் நிறுவனம் திகழ்கிறது.

உலகக் கோப்பை கிரிக்கெட்-அதிகாரப்பூர்வ கார் பார்ட்னர் ஹூண்டாய்

முக நூல்

Popular Posts