background img

புதிய வரவு

Showing posts with label thirumavalavan. Show all posts

ஆம்பூர் & உளுந்தூர்பேட்டை: அதிமுக கூட்டணியில் நேற்று இருந்தவர்கள் இன்று இல்லை, அதன்படி வைகோவும் இப்போது இல்லை என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறினார்.

ஆம்பூரில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜெ.விஜய் இளஞ்செழியனை ஆதரித்து அவர் பிரச்சாரம் செய்கையில், திமுக கூட்டணியில் காங்கிரஸ், பாமக, விடுதலைச் சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் உள்ளன. இது பலமான கூட்டணி.

அதிமுக கூட்டணியில் நேற்று இருந்தவர்கள் இன்று இல்லை. வைகோவும் இப்போது இல்லை. ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு கொள்கை. திமுக கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளுக்கும் ஒரே கொள்கை. அது இந்தியா மதசார்பற்ற நாடாக இருக்க வேண்டுமென நினைப்பது தான்.

திமுக தலைவர் கருணாநிதி கடுமையான உழைப்பாளி. பொருளாதார மேதையும் கூட. ஏழை, எளிய மக்களின் தேவையை அறிந்தவர். அதனால் தான் இலவசங்களை வழங்கினார். வரும் தேர்தலிலும் மிக்ஸி, கிரைண்டர் ஆகியவற்றை இலவசமாக வழங்குவதாக அறிவித்துள்ளார். அவற்றை நிச்சயம் வழங்குவார்.

கடந்த அதிமுக ஆட்சியில் யானைகள் மீது தான் ஜெயலலிதா அக்கறை காட்டினார். மக்கள் மீது அக்கறை காட்டவில்லை. ஆனால் கருணாநிதிக்கு எப்பொழுதும் மக்கள் மீது அக்கறை உண்டு. யாருக்கு வாக்களிக்க வேண்டுமென சிந்தித்து செயல்பட வேண்டும்.

மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட்டால் தான் மக்களுக்கு நல்ல திட்டங்களை வழங்க முடியும் என்றார்.

ஏமாற்றம் தந்த ஜெயலலிதா ஆட்சி-வாசன்:

மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜி.கே.வாசன் திருவாரூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் முதல்வர் கருணாநிதிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து பேசுகையில்,

திமுக ஆட்சியில் பல்வேறு சாதனைகள் செய்யப்பட்டுள்ளன. அதிமுக ஆட்சியில் வேதனையையும், சோதனையையும், ஏமாற்றத்தையும் மக்களுக்கு அளித்தார்கள். உங்களுடைய வாக்கு வளர்ச்சிக்காக இருக்க வேண்டுமே தவிர, வீழ்ச்சிக்காக இருக்கக் கூடாது.

முதல்வர் கருணாநிதி மூத்த அரசியல் தலைவர். மதவாத சக்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து, மதச்சார்பின்மைக்கு தோள் கொடுத்தவர். திருவாரூரில் மாணவராக வலம் வந்த முதல்வர், இன்று தமிழகத்தின் பெரும் தலைவராக உருவாகியுள்ளார்.

இதுவரை 11 முறை சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் கருணாநிதி, தற்போது 12 வது முறையாக திருவாரூரில் போட்டியிடுகிறார். தமிழகத்தில் திமுக ஆட்சியில், மத்திய அரசு உதவியுடன் ஏராளமானத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. இதற்கெல்லாம் காரணம் மத்திய, மாநில அரசுகளின் இணக்கமான போக்குதான் என்றார்.

துரோகம் செய்தவர் ஜெயலலிதா-திருமா:

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் உளுந்தூர்பேட்டை தொகுதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் மு.முகமது யூசுப்பை ஆதரித்து வாக்குச் சேகரித்தார்.

அப்போது பேசுகையில், 2006ல் நடைபெற்ற உள்ளாட்சி மன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்திருந்தபோது, நமது கட்சியினருக்கு ஒருசில இடங்களை ஒதுக்கிவிட்டு, அந்த இடங்களில் நம்மை கேட்காமலேயே அதிமுக வேட்பாளர்களை அறிவித்து கூட்டணிக் கட்சியிலிருந்து வெளியேற்றி நம்மை அழிக்க துரோகம் செய்தவர்தான் ஜெயலலிதா.

ஆனால் அப்போது முதல்வர் கருணாநிதி நமது கட்சியினருக்கு ஆதரவு கரம் நீட்டி அவரது வேட்பாளருக்கு அறிவித்த ஒரு சில இடங்களை வாபஸ் பெற்று நமது கட்சியினருக்கு பதவிகளை வாரி வழங்கி பெருமை செய்தவர்.

சிட்டுக் குருவிகளுக்குக்கூட வீடு இருக்கிறது. ஆனால் மனிதர்களாகிய இவர்களுக்குச் சொந்தமாக வீடுகள் இல்லை. இவர்களுக்கு குடிசை வீடுகளை அகற்றி காரை வீடுகள் வழங்கியவர் முதல்வர் கருணாநிதி.

ஜெயலலிதாவின் ஆட்சிக்காலத்தில் செய்த சாதனை என்னவென்றால் அவர்களுக்குப் பிடிக்காதவர்களை சிறையில் அடைத்து வைத்து கொடுமைப்படுத்தியதுதான் சாதனை. ஜெயலலிதாவையே நம்பியிருந்த அண்ணன் வைகோவை நம்பவைத்து கழுத்தை அறுத்துவிட்டார். அவருக்கு செய்தது பச்சை துரோகம் என்றார்.

'வைகோவை நம்ப வைத்து கழுத்தை அறுத்த ஜெ'-திருமாவளவன் தாக்கு

அரூர்: ஆயிரக்கணக்கானோர் மத்தியில் வேட்பாளரை அடித்து உதைக்கும் விஜயகாந்த் வெற்றி பெற்றார் நாடு என்ன ஆகும் என்று விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவவன் கேள்வி எழுப்பினார்.

தர்மபுரி மாவட்டம் அரூர் தொகுதியில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளரை ஆதரித்து திருமாவளவன் பிரச்சாரம் செய்து பேசுகையில்,

திமுக அறிவித்துள்ள திட்டங்கள் மூலம் சமூகத்தில் பின்தங்கிய, ஏழை, எளிய மக்கள் பயன் அடைந்துள்ளனர். தமிழகத்தில் அதிக வாக்கு வங்கி கொண்ட கட்சிகளான திமுக, காங்கிரஸ், பாமக ஓரணியில் உள்ளதால் திமுக கூட்டணி வெற்றி பெறும்.

எந்தக் கட்சி தலைவராவது சொந்த கட்சி வேட்பளாரை பொது இடத்தில் தாக்குவார்களா?. வேட்பாளர் என்ன சொன்னார், பெயரை தப்பா சொல்லாதையா என்று சொன்னார். பெயரை பாண்டியன் பாண்டியன் என்று சொல்லாதையா. பாஸ்கர் என்று சொல்லுயா என்று வேட்பாளர் சொல்லுகிறார்.

என்னையே எதிர்த்து பேசுகிறாயா, உங்க அப்பா உனக்கு பாஸ்கர் என பெயர் வைத்திருக்கலாம். நான் பாண்டியன் என்றுதான் கூப்பிடுவேன் என்று சொல்லி விஜய்காந்த் தாக்கியுள்ளார்.

இவரைப் போன்றவர் எல்லாம் வென்றால், ஆட்சிக்கு வந்தால் நாடு என்ன ஆகும் என்றார்.

பின்னர் மேட்டூரில் நிருபர்களிடம் பேசிய திருமா, கடந்த 5 ஆண்டுகால திமுக ஆட்சியின் சாதனைகள் பொதுமக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. பாமகவும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் சேர்ந்திருப்பது திமுக கூட்டணிக்கு வலுசேர்த்துள்ளது.

நடிகர் விஜயகாந்த்தின் நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் நாளுக்கு நாள் அவரது மதிப்பை குறைத்து வருகிறது. அதிமுக கூட்டணியில் உள்ளவர்களே விஜயகாந்த்தை நம்புவதில்லை என்றார்.

விஜயகாந்த்தை அதிமுக கூட்டணி கட்சியினரே நம்பவில்லை-திருமா

நடிகர் விஜயகாந்த்துடன் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா ஒரே மேடையில் பேச மறுப்பதற்கு காரணம் உள்ளதாக தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.

அரக்கோணம் தொகுதி விடுதலைச் சிறுதிதைகள் கட்சி வேட்பாளரை ஆதரித்துப் பேசிய அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன்,

விஜயகாந்த் குடித்துவிட்டு சட்டசபைக்கு செல்வதாக ஜெயலலிதா கூறினார். குடித்துவிட்டு விஜயகாந்த் உளறுகிறார் என்று ஜெயலலிதா சொன்னார். உடனே நீங்கதான் ஊத்தி கொடுத்தீங்களா என்று விஜயகாந்த் கேட்டார்.

தற்போது கூட்டணி அமைந்தவுடன் விஜயகாந்த் ஆடி ஆடி பேச, இந்த அம்மா அவரை ஒரு

சைடாக பார்க்க, சரி விஜயகாந்த் சொன்னது போலத்தான் நடந்திருக்கு என்று மக்கள் நினைப்பார்கள் என்றுதான் இருவரும் ஒரே மேடையில் ஏறுவதில்லை.

அதிமுக கூட்டணி அமைத்தவுடன் இதுவரை அந்த தலைமை கூட்டணி கட்சித் தலைவர்களுடன் மேடை ஏறியிருக்கிறார்களா? அரசியல் நாகரீகத்தை அதிமுக அணியில் பார்க்க முடியுமா? அதிமுக அணி கொள்கை உறுதி இல்லாதது என்றார்.

விஜயகாந்த்துடன் ஜெயலலிதா ஒரே மேடையில் பேச மறுப்பதற்கு காரணம் உள்ளது: திருமாவளவன்

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் தாயார் பார்வதி அம்மாள் இறுதிச் சடங்கில் பங்கேற்க விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மற்றும் அவரது தனிச் செயலாளர்கள் மடிப்பாக்கம் வெற்றிச் செல்வன், இளஞ்சேகுவாரா ஆகியோர் இலங்கை சென்றனர்.

அவர்களை வல்வெட்டித் துறைக்கு அனுப்ப மறுத்து திருப்பி அனுப்பிவிட்டனர். இலங்கை அரசின் கெடுபிடி காரணமாக திருமாவளவன் இன்று காலை 5.45 மணிக்கு சென்னை வந்தார்.

இதையடுத்து இலங்கை அரசை கண்டித்து ஆழ்வார் பேட்டை டி.டி.கே. சாலையில் உள்ள இலங்கை தூதரகத்தை திருமாவளவன் தலைமையில் விடுதலை சிறுத்தை கட்சியினர் இன்று காலை முற்றுகையிட்டனர்.

அப்போது அவர்கள் இலங்கை அரசை கண்டித்து கோஷம் எழுப்பினார்கள். பின்னர் இலங்கை கொடி மற்றும் அதிபர் ராஜபக்சேயின் உருவ படங்களை தீ வைத்து எரித்தனர். பின்னர் பார்வதி அம்மாள் உருவ படத்தை ஏந்தியபடி டி.டி.கே.சாலையில் ஊர்வலமாக சென்று மறியலில் ஈடுபட்டனர்.

இதைத் தொடர்ந்து திருமாவளவன், ரவிக்குமார் எம்.எல்.ஏ. மாநில பொருளாளர் முகமது யூசுப், பொது செயலாளர் கலைக்கோட்டுதயம், வன்னியரசு, வீரமுத்து, இளஞ்செழியன், சைதை பாலாஜி, கபிலன், இரா.செல்வம், பொன்னிவளவன், கமலக் கண்ணன் உள்பட 800 பேர் கைது செய்யப்பட்டனர்.

முன்னதாக திருமாவளவன் நிருபர்களிடம் கூறியதாவது:-

இலங்கை வல்வெட்டித்துறையில் வைக்கப்பட்டுள்ள பிரபாகரன் தாயார் பார்வதி அம்மாள் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தவே கொழும்பு சென்றேன். ஆனால் இலங்கை அரசு வல்வெட்டித்துறைக்கு செல்ல அனுமதி மறுத்துவிட்டது.

வேறுவழியின்றி திரும்பி வந்தேன். நான் பார்வதி அம்மாள் இறுதி சடங்கில் கலந்து கொள்ளவிடாமல் இலங்கை அரசு தடுத்ததற்கு மத்திய அரசுதான் காரணம். ஒரு எம்.பி.யை திருப்பி அனுப்பியது வெட்கக்கேடானது. எனவே மத்திய அரசு இலங்கை அரசை கண்டிக்க வேண்டும். அதுவரை விடுதலை சிறுத்தைகள் கட்சியினரின் போராட்டம் தொடரும்.

சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை மூட வேண்டும். என்னை திருப்பி அனுப்பியதன் மூலம் இந்தியாவை இலங்கை அரசு அவமதித்துள்ளது. இது பற்றி நான் பாராளுமன்றத்தில் விளக்கம் கேட்டு கேள்வி எழுப்புவேன். இவ்வாறு திருமாவளவன் கூறினார்.

திருமாவளவனை இலங்கை அரசு திருப்பி அனுப்பியதை கண்டித்து விருத்தாசலத்தில் விடுதலை சிறுத்தை கட்சியினர் 25 பேர் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களை போலீசார் கைது செய்தனர்.

இலங்கை தூதரகம் முற்றுகை: திருமாவளவன் கைது

தூ‌த்து‌க்குடி மாவ‌ட்ட‌ம் திருச்செந்தூருக்கு இன்று வரவிருக்கும் ‌விடுதலை ‌சிறு‌த்தைக‌ள் கட‌்‌சி‌த் தலைவ‌ர் தொ‌ல் திருமாவளவனுக்கு எதிர்ப்பு தெரிவித்து அ‌ங்கு ‌வியாபா‌ரிக‌ள் கடையடைப்புப் போராட்ட‌த்‌தி‌ல் 2வது நாளாக ஈடுப‌ட்டு‌ள்ளன‌ர்.

இலங்கைத் தமிழர் பிரச்சனையின்போது தீக்குளித்து இறந்த முத்துக்குமாரின் நினைவாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக ‌விடுதலை ‌சிறு‌த்தைக‌ள் க‌ட்‌சி‌த் தலைவ‌ர் தொ‌ல் திருமாவளவன் திருச்செந்தூருக்கு இன்று வருகிறார்.

இந்நிகழ்ச்சிகளை ஒட்டி, திருச்செந்தூர் நக‌ர் முழுவது‌ம் வை‌க்க‌ப்ப‌ட்டிரு‌ந்த அவரது உருவ‌ம் பொ‌றி‌த்த பேனர்கள், விளம்பரத் தட்டிகள் இர‌ண்டு நா‌ட்களு‌க்கு முன்னர் க‌ட்‌சி‌யி‌ன் சா‌ர்‌பி‌ல் வைக்கப்பட்டன.

இ‌ந்த ‌விள‌ம்பர பேன‌ர்களா‌ல் பொதுமக்களுக்கும் தங்களுக்கும் இடையூறு ஏற்படுவதாகக் கூறி கடை வியாபாரிகள் நேற்று சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தின்போது சில டிஜிட்டல் பேனர்கள் கி‌ழி‌த்து எ‌‌றிய‌ப்ப‌ட்டன.

நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர வியாபாரிகள் மீது காவ‌ல்துறை‌யின‌ர் தடியடி நடத்தினர். இதில் சிலருக்கு காயம் ஏற்பட்டது. நே‌ற்‌றிரவு இது மோதலாக வெடி‌த்ததை‌த் தொட‌ர்‌ந்து பேருந்துக‌ள் அடித்து நொறுக்கப்பட்டது.

இந்நிலையில் காவ‌ல்துறை‌யின‌ரி‌ன் தடியடியை க‌ண்டி‌த்து‌ம், இந்த ‌நிக‌ழ்வுக்கு காரணமாக இருந்தவர்களைக் கைது செய்யக் கோரியும், திருச்செந்தூர் நகருக்கு வருகை தரும் திருமாவளவனுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் திருச்செந்தூர், ‌ஆறுமுகநே‌ரி, உட‌ன்குடி, குரு‌ம்பூ‌ர், ஆ‌த்தூ‌ர் ஆ‌கிய இட‌ங்க‌ளி‌ல் வர்த்தகர்கள் சங்கங்களின் சார்பில் இ‌ன்று வியாபாரிகள் கடையடைப்பு போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

திருமாவளவனுக்கு எதிர்ப்பு: திருச்செந்தூரில் கடையடைப்பு

இலங்கையில் நடைபெற்ற போரை தடுத்துநிறுத்தக் கோரி தீக்குளித்து உயிரிழந்த முத்துக்குமாரின் உருவச் சிலையை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் வரு‌ம் 29ஆ‌ம் தே‌தி திறந்து வை‌க்‌கிறா‌ர்.

சிங்கள இனவெறிப் போரை தடுத்து நிறுத்தக் கோரி உயிரிழந்த முத்துக்குமாரின் 2ஆம் ஆண்டு நினைவுதினம், வெண்கல உருவச்சிலை திறப்பு நிகழ்ச்சி வரு‌ம் 29ஆம் தேதி அவரது சொந்த ஊரான திருச்செந்தூரில் விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் நடைபெறுகிறது.

நிகச்சிக்கு முத்துக்குமார் பாசறையின் முதன்மைச் செயலர் சங்கத்தமிழன் தலைமை வகிக்கிறார். முத்துக்குமாரின் சிலையை கட்சியின் தலைவர் திருமாவளவன் திறந்துவைத்து உரையாற்றுகிறார்.

இந்நிகழ்ச்சியில் தமிழகம் முழுவதிலும் இருந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் கலந்துகொள்ள உள்ளதாக அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் வன்னிஅரசு தெரிவித்துள்ளார்.

திரு‌ச்செ‌ந்தூ‌ரி‌ல் முத்துக்குமார் சிலையை திறக்கிறார் திருமாவளவன்

முக நூல்

Popular Posts