கிரிக்கெட் சூதாட்டத்தில் சிக்கி தடை செய்யப்பட்ட பாகிஸ்தான் வீரர்களான சல்மான் பட், மொகமட் ஆமீர், மொகமட் ஆசிப் ஆகியோர் மீது இங்கிலாந்து வழக்கறிஞர்கள் சேவையகம் குற்றச்சாட்டு பதிவு செய்துள்ளது.
கிரவுன் பிராசிகியூஷன் சர்வீசஸின் தலைவர் சைமன் கிளெமென்ட்ஸ் இது பற்றிக் கூறுகையில், "மொகமட் ஆமீர், சல்மான் பட், மொகமட் ஆசிப் இவர்களது தரகர் மஷார் மஜீத் ஆகியோர் மீது ஊழல் பணத்தைப் பெற்று ஏற்றுக்கொண்டது மற்றும் ஏமாற்றுவதற்கான சதி ஆகிய குற்றச்சாட்டுகள் உள்ளக்டு." என்று கூறியுள்ளார்.
அதாவது சூதாட்டத் தரகர் மஷர் மஜீத் 3-வதாக ஒருவரிடமிருந்து பணத்தைப் பெற்று வீரர்களை நோ-பால் வீச ஏற்பாடு செய்துள்ளார் என்ற அடிப்படையில் இந்த குற்றச்சாட்டு பதிவு செய்யப்படுகிறது, என்றார் அவர்.
கடந்த இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் போது லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் ஆமீர், ஆசிப் வேண்டுமென்றே நோ-பால் வீசியதாக தனியார் தொலைக்காட்சி ஒன்றின் ரகசிய விசாரணையில் அம்பலமானதையடுத்து இவர்களை ஐ.சி.சி. தடை செய்தது.
இவர்களை ஐ.சி.சி. ஊழல் தடுப்புப் பிரிவு விசாரணை செய்ய லண்டன் காவல்துறை தனியாக இந்த வழக்கைக் கையாண்டது.
இந்த நிலையில் இங்கிலாந்து வழக்கறிஞர்கள் சேவை அமைப்பு இந்த 3 கிரிக்கெட் வீரர்களையும் பிரிட்டிஷ் சட்டத்தின் முன் நிறுத்தக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

0 comments :
Post a Comment