background img

புதிய வரவு

என் திறமை மீது நம்பிக்கை வைத்துள்ள நாட்டு மக்களுக்கு நன்றி: சச்சின் டெண்டுல்கர்

என் திறமை மீது நம்பிக்கை வைத்துள்ள நாட்டு மக்களுக்கு நன்றி என சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்.
கெüதம் பட்டாச்சார்யா என்பவர் "சச்' என்ற பெயரில் சச்சினைப் பற்றிய புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். சச்சினுக்கு மிக நெருக்கமானவரான அவர், சச்சின் கூறியதாக சில கருத்துகளை தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
தென்னாப்பிரிக்க தொடரில் பந்தை சேதப்படுத்தியதாக தடை விதிக்கப்பட்டது குறித்து கருத்து தெரிவித்துள்ள சச்சின், அது ஒரு விபத்து. அப்போது நாட்டு மக்கள் அனைவரும் எனக்கு ஆதரவாக இருந்தது மகிழ்ச்சியளித்தது.
இன்னும் நாட்டு மக்கள் என் திறமை மீது நம்பிக்கை வைத்துள்ளனர். அதை மறக்கமாட்டேன். நான் பந்தை சேதப்படுத்தியதாக எனக்கு ஓர் ஆட்டத்தில் தடை விதிக்கப்பட்டபோது அதிர்ச்சியடைந்தேன்.
நான் பந்தை சேதப்படுத்தவில்லை. பந்தின் மீது இருந்தே புற்களைத்தான் துடைத்தேன் என்று உண்மையை சொல்ல முயன்றபோதும், எனக்கு அதற்கான வாய்ப்பு அளிக்கப்படவில்லை. அப்போதைய மேட்ச் ரெப்ரி என் தரப்பு வாதத்தை கேட்கவில்லை. அந்த சம்பவத்துக்குப் பிறகு பந்தை சுத்தம் செய்ய வேண்டும் என்றால் நடுவரிடம் கொடுத்துவிடுவேன் என்று கூறியுள்ளார்.
2001-ம் ஆண்டு டெண்டுல்கர் பந்தை சேதப்படுத்தியதாக ஓர் ஆட்டத்தில் தடை விதிக்கப்பட்டாலும், பின்னர் அவர் பந்தை சேதப்படுத்தவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது. சூதாட்டத்தில் சக வீரர் சிக்கியது பற்றி கேள்விக்கு பதிலளித்துள்ள சச்சின், நான் எனது வேலையை மட்டும் செய்கிறேன். மற்றவற்றைப் பற்றி சிந்திப்பதில்லை என்று கூறியுள்ளார்.
மும்பை தாக்குதல் பற்றி பேசியுள்ள சச்சின், நாங்கள் கட்டாக்கில் இங்கிலாந்துக்கு எதிராக விளையாடிக் கொண்டிருந்தோம். அன்று இரவு மும்பையில் தாக்குதல் நடந்துள்ளது பற்றி எங்களுக்குத் தெரியவந்தது.
மும்பை தாக்குதலால் மிகவும் வேதனையடைந்தேன். இனி அதுபோன்ற ஒரு தாக்குதல் நடக்கக்கூடாது. மும்பை தாக்குதல் சம்பவம் என் வாழ்க்கையில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது என சச்சின் கூறியுள்ளார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts