background img

புதிய வரவு

Showing posts with label People. Show all posts

கடந்த 1989ல், தேர்தலுக்கு பிறகு நடந்த ஒவ்வொரு சட்டசபை தேர்தலிலும், ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை ஆட்சி மாற்றத்தை தமிழக வாக்காளர்கள் ஏற்படுத்தி உள்ளனர்.

தமிழகத்தில் 1977, 1980 மற்றும் 1984ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தல்களில், தொடர்ந்து எம்.ஜி.ஆர்., வெற்றி பெற்று முதல்வராக 10 ஆண்டுகள் இருந்தார். அதற்கு பிறகு 1989ல் நடந்த சட்டசபை தேர்தலில், தி.மு.க., அதிக இடங்களை பிடித்து கருணாநிதி முதல்வரானார். பின் 1991ல் நடந்த தேர்தலில், அ.தி.மு.க., அதிக இடங்களில் வெற்றி பெற்று ஜெயலலிதா முதல்வரானார். 1996ல் நடந்த தேர்தலில், மீண்டும் தி.மு.க., அதிக இடங்களில் வெற்றி பெற்று கருணாநிதி முதல்வரானார்.தொடர்ந்து 2001ல் நடந்த தேர்தலில், காங்கிரஸ், பா.ம.க., கூட்டணியுடன் அ.தி.மு.க., அதிக இடங்களை பிடித்து ஜெயலலிதா முதல்வரானார். 2006 தேர்தலில், மீண்டும் தி.மு.க., ஆட்சியை பிடித்து கருணாநிதி முதல்வரானார். 2011 தேர்தலில், மீண்டும் அ.தி.மு.க., கூட்டணி அமோக வெற்றி பெற்று ஜெ., முதல்வராக பொறுப்பேற்று உள்ளார். இவ்வாறு ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் நடைமுறை தமிழகத்தில், கடந்த 22 ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது.

இந்த வரலாறு இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு தொடரும் என்பதை காலம் உணர்த்தும். மறைந்த எம்.ஜி.ஆருக்கு பிறகு யாரும் தொடர்ந்து ஐந்தாண்டுகளுக்கு மேல் முதல்வராக இருந்தது இல்லை என்ற வரலாறும் நீடிக்கிறது.இதேபோன்ற பெருமை, அண்டை மாநிலமான கேரளாவுக்கும் உண்டு. கேரளாவில் 1957ல், இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் முதல்வராக இருந்த காலத்தில் இருந்து, அம்மாநில மக்கள் ஆட்சியை மாற்றி மாற்றி கொடுத்துள்ளனர். 1969-70 மற்றும் 1970-77ம் ஆண்டுகளில் சி.அச்சுதமேனன் தொடர்ந்து முதல்வர் பதவியில் இருந்துள்ளார். 1981-82 மற்றும் 1982-87ம் ஆண்டுகளில், கருணாகரன் தொடர்ந்து முதல்வர் பதவியில் இருந்துள்ளார். இவை மட்டுமே விதிவிலக்காக உள்ளன. மற்ற தேர்தல்களில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது கேரள மாநில மக்களின் வரலாறாக இருந்து வருகிறது.

5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆட்சி மாற்றத்தை விரும்பும் வாக்காளர்கள்

"அரசு திட்டங்கள் குறித்து அமைச்சர்கள், அதிகாரிகள் வாய் திறக்க கூடாது என்ற நிலையை, முதல்வர் ஜெயலலிதா மாற்ற வேண்டும்' என, மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான முந்தைய ஆட்சியின் போது, அரசின் திட்டங்கள், செயல்பாடுகள் குறித்து அவர் மட்டுமே பேசுவார்; அறிவிப்புகளை வெளியிடுவார். விழாக்களிலும், செய்தியாளர்கள் கூட்டத்திலும் அமைச்சர்கள், தலைமைச் செயலர் உள்பட எவரும் வாய் திறக்க மாட்டர். மக்களுக்கு உத்தரவாதம் வழங்குதல், நம்பிக்கையான வாக்குறுதி அளித்தல் போன்றவற்றுக்கும் இவர்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. மீறுபவர்கள் பதவி பறிக்கப்பட்டதும் உண்டு. தீர்க்கக்கூடிய பொதுவான பிரச்னையை சாதாரண மனிதன், முதல்வரின் தனிப்பிரிவுக்கு மனுவாக அனுப்பி, அது முதல்வர் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, நிறைவேற்றப்பட்ட பல சம்பவங்கள் உண்டு. ஆனால், அமைச்சர், அதிகாரிகளிடம் மனுவாக கொடுத்து, அது நிறைவேறிய சம்பவம் மிகச்சொற்பம் தான். அரசு விழாக்களில் அமைச்சர்கள் பேசும் போது கூட, "அம்மா அவர்கள் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்' என்று தான் கூறுவரே தவிர, தங்கள் துறை தொடர்பான தகவல்கள், முன்னேற்றங்கள், திட்டங்கள் பற்றி வாய் திறக்க மாட்டர்.

தற்போது, அ.தி.மு.க., ஆட்சி அமைந்துள்ள நிலையில், முதல்வர் ஜெயலலிதாவின் நடவடிக்கைகள், பேச்சு, செயல்பாடுகள் பெரிதும் மாறியுள்ளன. தன் கையால் அனைவருக்கும் இனிப்பு வழங்கியது, தேர்தல் முடிவுகள் வெளியான அன்று, போயஸ் கார்டனில் ஒன்றுக்கு இரண்டு முறை மாடியில் நின்று மக்களைப் பார்த்து கையசைத்து புன்னகைத்தது, பல முறை செய்தியாளர்களை சந்தித்தது, போக்குவரத்து நெரிசலின்றி தன் பயணத்திட்டத்தை வகுக்க போலீஸாருக்கு உத்தரவிட்டது, அமைச்சர்கள் தங்கள் வாகனங்களை போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்துதல், செல்லுதல் கூடாது என, உத்தரவிட்டது போன்றவை சில உதாரணங்கள். முக்கியமாக, "பதவியேற்பு விழாவில் எந்த அமைச்சரும், தன் காலில் விழக் கூடாது' என, முதல்வர் உத்தரவிட்டார். "செய்தியாளர்கள் தன்னை வழிமறித்து கேள்விகள் கேட்கக்கூடாது. வாரம் ஒரு முறை நானே பதிலளிக்கிறேன்' என்றும் தெரிவித்துள்ளார்.

தலைமைச் செயலக இடமாற்றம், கேபிள், "டிவி' அரசுடமை போன்றவை குறித்து நிருபர்களின் கேள்விக்கு, "இப்போதுதான் பொறுப்பேற்றுள்ளேன். விரைவில் அனைத்தையும் செய்து முடிப்பேன். அதற்காக தனித்துறையும், தனியாக அமைச்சரும் நியமிக்கப்பட்டுள்ளார்' என, வித்தியாசமான அணுகுமுறையை முதல்வர் கையாண்டுள்ளார். இந்த மாற்றம் மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. முதல்வரிடம், மக்களுக்கு அதிக எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மக்களின் அவசியமான கோரிக்கைகள், தேவைகள் மீது முடிவெடுக்கவும், தீர்வுக்கான வழிகளை கூறவும், திட்டங்களை அறிவிக்கவும் அமைச்சர்களுக்கு அனுமதி தர வேண்டும். அதன் பின், முதல்வர் அனுமதி பெற்று அத்திட்டங்களை செயல்படுத்துவதில் தவறில்லை. "தவறு செய்பவர்கள் மீது சாட்டை சுழலும்' என, எப்போதும் அதிரடியாக தெரிவிக்கும் முதல்வர் ஜெயலலிதா, அமைச்சர்களும், அதிகாரிகளும் தன்னிச்சையாக செயல்பட, அவர்களது வாய்ப்பூட்டு, கைக்கட்டுக்களை அவிழ்த்து, அவர்கள் மக்களுக்கு கூடுதல் சேவையாற்ற பணிக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு.

கட்டுண்ட கைகளும், வாய்ப்பூட்டும் அவிழுமா? மக்கள் எதிர்பார்ப்பு

திருவாரூர் : ""சட்டசபைக்கு என்னை 12வது முறையாக தேர்ந்தெடுத்து அனுப்ப வேண்டும்,'' என முதல்வர் கருணாநிதி, திருவாரூரில் மலரும் நினைவுகளைக் கூறி உருக்கமாக பேசினார்.

திருவாரூரில் இறுதிக் கட்ட பிரசாரமாக கீழ வீதியில் கருணாநிதி பேசியதாவது:நான் திருவாரூரில் எத்தனையோ கூட்டங்களில், விழாக்களில் பேசியிருக்கிறேன். இன்று, மணவறையில் உள்ள புதுப்பெண் போல உங்கள் முன் வந்துள்ளேன்.அண்ணாதுரை தேர்தலில் போட்டியிடுமாறு ஆணையிட்டார். அதன்படி, எந்த தொகுதியில் போட்டியிடலாம் என ஆய்வு செய்து, நாகையில் போட்டியிடலாம் என்று அண்ணாதுரையிடம் தெரிவித்தேன். அதற்கு அண்ணாதுரை, நாகையில் போட்டியிடுவதாக இருந்தால் சொந்த ஊரான திருவாரூரில் போட்டியிட வேண்டும். தனித்தொகுதியாக இருந்ததால் குளித்தலையில் போட்டியிடு என கூறினார். அதன்படி குளித்தலையில் போட்டியிட்டு வெற்றி பெற்றேன்.

பின் தஞ்சை, சென்னை உட்பட 11 இடங்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளேன். 12வது முறையாக திருவாரூரில் போட்டியிடுகிறேன். என்னை சட்டசபைக்கு தேர்ந்தெடுத்து அனுப்பி வைக்க வேண்டும். இந்த 12 என்பதற்கும், தஞ்சை மாவட்டத்திற்கும் தொடர்புண்டு. இந்த மாவட்டத்தில் உள்ள கும்பகோணத்தில், 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாமாங்கம் வரும்.திருவாரூரில் நண்பர் தென்னனுடன் சேர்ந்து விளையாடியது தான் இந்த கீழ வீதி. அவர் மட்டுமல்லாமல் வேறு சில நண்பர்களுடனும் விளையாடியுள்ளேன். திருவாரூர் போர்டு உயர்நிலைப்பள்ளியில் நானும், நண்பர்களும் படித்தபோது எடுக்கப்பட்ட போட்டோ ஒன்றை, நான் வரும் வழியில் சிறுமி ஒருவர் எனக்கு பரிசாக வழங்கினார். அதைப் பார்த்தும் அப்போது உள்ள நினைவுகள் வந்தன. மாணவப் பருவத்திலேயே அண்ணாதுரை கொள்கை மனதில் பதிந்து, நான் சுயமரியாதை காரணாக இப்போது வரை உள்ளேன்.

ஆனால், ஆத்திகருக்கும், பக்தர்களுக்கும் எந்த தீங்கும் விளைவிப்பவன் அல்ல நான். கொள்கை வேறு, நடத்தை வேறு. திருவாரூரில் தேரோட்டம் பற்றி சட்டசபையில் கேட்டபோது, நண்பர் காளிமுத்து திருவாரூரிலே தேரோட்டம் நடைபெறுகிறதா என கேட்டார். தெரியவில்லை என்றேன். "ஏரோட்டும் மக்களெல்லாம் ஏங்கி தவிக்கையிலே, தேரோட்டம் ஏன் உனக்கு தியாகராஜா' என்று பாடினீர்களே. இன்றைக்கு அனுமதிக்கிறீர்களா... இப்போது ஏங்கி தவிக்கவில்லை என்பதால் தேரோட்டம் தேவை என்று கூறினேன்.

மதவாதிகள், ஆத்திகர்கள் கொள்கைகளை எதிர்க்க மாட்டேன் என்று கூறினேன். மக்களிடம் திணிக்காமல் கருத்து கூற வேண்டும் என்பது தான் என்னுடைய வாதம். அதனால் தான், அண்ணாதுரை காலத்திலும் அதன் பிறகு எங்கும் சுய மரியாதை கொள்கையை திணித்து புண்படுத்தவில்லை. ஆட்சி வேறு; கொள்கை வேறு.எதிர்காலத்திலும் புண்படுத்த மாட்டேன். தி.மு.க., கொள்கை கடவுளுக்கு எதிரானதல்ல. கடவுள் வேண்டுமானால் எதிரியாக இருக்கலாம். கடவுளை ஏற்றுக்கொள்கிறீர்களா என்பதல்ல பிரச்னை. கடவுள் ஏற்றுக்கொள்கிற அளவுக்கு நடந்து கொள்கிறேனா என்பது தான்.சேது சமுத்திரத் திட்டத்தை ராமருக்கு ஆகாது என கூறி நிறுத்திவிட்டனர். மீண்டும் தி.மு.க., ஆட்சி வந்தால், இந்த திட்டத்தை தொடர மத்திய அரசிடம் வலியுறுத்துவோம்.

தி.மு.க., ஏதோ சிலருக்கு பதவிகளுக்காக துவங்கப்பட்ட கழகம் அல்ல. தமிழ் மொழிக்கு பெருமை கிடைப்பதற்காக துவங்கப்பட்டது. திராவிட உணர்வை ஒழிக்க சிலர் கங்கணம் கட்டி வருகின்றனர். திராவிடன் என்ற சொல் இன்று நேற்று ஏற்பட்டதல்ல. தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம் ஆகியவற்றில் கூட திராவிடன் என்ற வார்த்தை வருகிறது. இன்று புதியதாக துவங்கப்படும் கட்சிகள் கூட, திராவிட அடைமொழியுடன் துவங்குகின்றனர். திராவிடத்தை மதிக்கின்றனரோ இல்லையோ, நம்மை பழித்து பேசி வருகின்றனர். இந்த இயக்கத்தை அழிக்க நினைப்பவர்கள் அவர்கள் அழிவார்களே தவிர இந்த இயக்கம் அழியாது. எச்சரிக்கையாக அல்ல; அறிவுரையாகச் சொல்கிறேன்.

தேர்தலில் போட்டியிருக்க வேண்டும். வெறுப்பின் காரணமாக போட்டியிருக்க கூடாது. இந்த தொகுதியில் வெற்றி பெற்றாலும், என்னை எதிர்த்து போட்டியிட்டவரை அழைத்து பேசி அரவணைத்து, இந்த தொகுதிக்கு வேண்டியவற்றை செய்து முடிப்பேன். நானே ஒரு வேளை முதல்வராகிவிட்டால், எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்களை வெறுக்க மாட்டேன். அவர்களின் தேவைகளை உணர்ந்து நிறைவேற்றுவேன். எனவே, எனக்கு ஆதரவு அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு முதல்வர் கருணாநிதி பேசினார்.

12வது முறையாக தேர்ந்தெடுத்து அனுப்புங்கள்: முதல்வர் கருணாநிதி வேண்டுகோள்

சென்னை: ""தமிழக மீனவர்கள் மீது இனி துப்பாக்கிச் சூடு நடக்காமல் பார்த்துக் கொள்வோம்,'' என, சென்னையில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் காங்கிரஸ் தலைவி சோனியா உறுதியளித்தார்.

ஜனநாயக முற்போக்கு கூட்டணி தேர்தல் பிரசார பொதுக் கூட்டம் சென்னை தீவுத்திடலில், நேற்று மாலை நடந்தது. தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு வரவேற்றார். காங்கிரஸ் தலைவி சோனியா பேசியதாவது:தமிழகம் இன்று, முன்னணி மாநிலங்களில் ஒன்றாக விளங்குகிறது. நெல், கரும்பு, பருத்தி, தேயிலை ஆகியவை உற்பத்தியிலும், ஜவுளித்துறை, ஆட்டோ மொபைல், ஐ.டி., மென்பொருள் உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் தமிழகம் முன்னிலை வகிக்கிறது. கல்வி, சுகாதாரம் என அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்குகிறது. மதிய உணவுத் திட்டம், விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், திருமண உதவித் திட்டம், அங்கன்வாடி குழந்தைகளுக்கான திட்டம், மாற்று திறனாளிகளுக்கான நலத்திட்டம், முதியோருக்கான ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழக அரசு சிறப்பாக செய்து வருகிறது. ஆதிதிராவிட மக்களுக்கு உதவும் வகையிலும், மத நல்லிணக்கத்தை, ஒற்றுமையை பேணும் வகையிலும் தமிழகம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தமிழகத்தின் இத்தகைய திட்டங்களை பிற மாநில அரசுகளும் பின்பற்றும் வகையில், அரசின் செயல்பாடுகள் சிறப்பாக உள்ளன.

இத்தகைய திட்டங்களுக்கு உதவும் வகையில், மத்திய அரசு தமிழகத்திற்கான நிதி ஒதுக்கீட்டை 9 ஆயிரத்து 675 கோடி ரூபாயிலிருந்து, 17 ஆயிரத்து 500 கோடி ரூபாயாக உயர்த்தி வழங்கி, மிக அனுசரணையாக இருந்துள்ளது. ஐந்தாண்டுகளாக இந்த அரசு, கொடுத்த வாக்குறுதிகளை, சாதனைகளை கருத்தில் கொண்டு, சென்ற முறை நீங்கள் ஓட்டளித்தீர்கள். இந்த முறை கருணாநிதி அரசின் சாதனைகள் தொடர நீங்கள் ஓட்டளிக்க வேண்டும். இந்த கோரிக்கையை முன் வைத்தே நான் உங்கள் முன் நிற்கிறேன். வளர்ச்சியின் பயன்கள் அனைவரையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்பது காங்கிரசின் கொள்கை. தி.மு.க.,வும் அதே கொள்கையை கொண்டிருப்பதால், இருவரும் இணைந்து செயல்பட்டு வருகிறோம்.

மத்திய - மாநில அரசுகள் இணைந்து பல்வேறு மக்கள் நலத்திட்டங்களையும், சமூக நீதியையும் நிலைநாட்டும் வகையில் அது போன்ற நலத் திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்துவோம். இலங்கையில் வாழும் தமிழர்கள் சம உரிமை பெறவும், அவர்கள் மறு வாழ்விற்காகவும், புனரமைப்பு பணிக்காகவும் மத்திய அரசு பல்வேறு உதவிகளையும், தேவையான நிதி உதவியையும் செய்து வருகிறது. அங்கு 50 ஆயிரம் வீடுகள் கட்டுவதற்காக மத்திய அரசு உதவியுள்ளது. அத்துடன் இலங்கையில் வாழும் தமிழர்கள் சம உரிமையுடன் வாழ்வதற்காக இலங்கை அரசின் விதிமுறைகளையே மாற்றிட நடவடிக்கை எடுத்தோம். தமிழக மீனவர்களின் நலன்களை காக்கும் வகையில், மத்திய அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இனி தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடே இல்லாமல் பார்த்துக் கொள்வோம் என்ற உறுதியை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு சோனியா பேசினார்.

கூட்டத்தில், மத்திய அமைச்சர் குலாம்நபி ஆசாத், கூட்டணி கட்சித் தலைவர்கள் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், கொ.மு.க., தலைவர் பெஸ்ட் ராமசாமி, முஸ்லிம் லீக் தலைவர் காதர்மொய்தீன், மூவேந்தர் முன்னேற்றக் கழகத் தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் ஆகியோர் பங்கேற்றனர்.இறுதியாக, கூட்டணி சார்பில் போட்டியிடும் சென்னை, புறநகர் தொகுதிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் மேடையில் அறிமுகப்படுத்தப்பட்டனர்.

சோனியா கூட்டத்தில் ரகளை ஒருவருக்கு அடி - உதை *சென்னை தீவுத்திடலில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், காங்கிரஸ் தலைவர் சோனியா பேசிக் கொண்டிருந்தார். நிருபர்களின் காலரியில் நின்று கொண்டிருந்த கேமராமேன் மற்றும் போட்டோகிராபர்களை உட்காரும்படி காங்கிரஸ் தொண்டர்கள் குரல் எழுப்பினர். அப்போது நிருபர்கள் காலரிக்குள் அத்துமீறி நுழைந்த தொண்டர் ஒருவர், தனியார் "டிவி' கேமராமேனிடம் வாய் தகராறில் ஈடுபட்டார்.
நிருபர்களை செய்தி சேகரிக்க விடாமல் அந்த தொண்டர் இடையூறு செய்து கொண்டிருந்தார். திடீரென அந்த தொண்டர்கள் ரகளையில் ஈடுபட்டார். அப்போது பாதுகாப்புக்கு நின்று கொண்டிருந்த போலீசார் சிலர் ஓடி வந்து, அந்த தொண்டரை அங்கிருந்து செல்லும்படி கூறினார்.
ஆனால், போலீசாரிடமும் அந்த தொண்டர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். உடனே போலீசார் தங்களது பாணியில் அந்த தொண்டரை தூக்கிச் சென்றனர். இச்சம்பவத்தினால் கூட்டத்தில் பரப்பரப்பு ஏற்பட்டது.
*மாலை 4 மணி அளவில், தீவுத்திடலில் தொண்டர்கள் கூட்டம் குறைவாக காணப்பட்டது. மாலை 5 மணியிலிருந்து 6 மணிக்குள் தொண்டர்கள் குவியத்துவங்கிய பின், கூட்டம் அதிகரித்தது. பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
*நேரம் குறைவு காரணமாக, மத்திய அமைச்சர் குலாம்நபி ஆசாத் மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் சிலரை பேசுவதற்கு அனுமதிக்கவில்லை.
*முதல்வர் கருணாநிதி பேசும் போது, மத்திய அரசுக்கு அவர் வைத்த கோரிக்கைகளில் இரண்டு கோரிக்கைகளுக்கு மட்டும் சோனியா பதிலளித்து பேசினார்.

தமிழக மீனவர்கள் மீது இனி துப்பாக்கிச் சூடு நடக்காது : சோனியா வாக்குறுதி

தேர்தல் ஆணையத்தின் கெடுபிடிகளுக்கு மக்கள் பதிலடி தருவார்கள் என, துணை முதல் அமைச்சரும், திமுக பொருளாளருமான மு.க.ஸ்டாலின் கூறினார்.

விருதுநகர் மாட்டத்தில் திமுக கூட்டணி வேட்பளார்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்ட துணை முதல் அமைச்சரும், திமுக பொருளாளருமான மு.க.ஸ்டாலின் நேற்று இரவு மதுரையில் தங்கினார். பின்னர் காஞ்சிபுரம் புறப்படுவதற்கு முன்னர் அவரை மதுரை மாவட்ட திமுக கூட்டணி வேட்பாளர்கள் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தலில் திமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. கலைஞர் 6வது முறையாக முதல் அமைச்சராக பதவி ஏற்பார் என்றார்.

மத்திய அமைச்சர் மு.க.அழகிரிக்கு கொடுக்கப்பட்ட பாதுகாப்பை தேர்தல் ஆணையம் ரத்து செய்திருப்பது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த மு.க.ஸ்டாலின், தேர்தல் ஆணையத்தின் இதுபோன்ற வீண் கெடுபிடிகளுக்கு தேர்தலில் மக்கள் பதிலடி கொடுப்பார்கள்.

திமுகவின் தேர்தல் அறிக்கையை காப்பி அடித்துள்ளதால்தான், ஜெயலலிதாவால் அதிமுக தேர்தல அறிக்கையை பற்றி பிரச்சாரம் செய்ய முடியாமல், வேறு எதையோப் பற்றி பேசி வருகிறார் என்றார்.

மக்கள் பதிலடி தருவார்கள்: மு.க.ஸ்டாலின்

நாகர்கோவில:""தேர்தலில் கொடுக்கும் வாக்குறுதிகளை கருணாநிதி நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை உங்களிடம் இருக்கிறதா?'' என்று கேள்வி கேட்டு, பொது மக்களிடம் பதில் பெற்று ஸ்டாலின் பிரசாரம் செய்தார்.குமரி மாவட்டத்தில் ஆறு சட்டசபை தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து அவர் பிரசாரம் மேற்கொண்டார்.
பல்வேறு கூட்டங்களில் அவர் பேசியதாவது:தேர்தலில் உரிமையோடு ஓட்டு கேட்க வந்துள்ளோம். நாங்கள் தேர்தலுக்காக மட்டும் வருபவர்கள் அல்ல. 2006ல் கூறிய வாக்குறுதிகள், 100 சதவீதம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சொன்னதை விட அதிகம் இந்த ஆட்சியில் செய்யப்பட்டுள்ளது. இப்போது சிலர், வாக்குறுதிகளை அள்ளி வீசுகின்றனர். வானத்தையும், வைகுண்டத்தையும் இணைப்போம்; மணலை கயிறாகத் திரிப்போம் என்றெல்லாம் கூறி வருகின்றனர். ஆனால், தேர்தல் முடிந்தால் இவர்கள் கொடநாடு சென்று விடுவர்.இரண்டு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி என்று கூறி, ஒரு ரூபாய்க்கு அரிசி வழங்கினோம். உலகிலேயே உன்னதமான திட்டமான மருத்துவக் காப்பீடு திட்டம் இந்த ஆட்சியில் செயல்படுத்தப்பட்டது.
ஜெயலலிதா ஆட்சியில் நிறுத்தப்பட்ட திருமண உதவித்தொகை திட்டம் 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்பட்டது.ஆனால், இப்போது யார் எதுவெல்லாமோ சொல்லி வருகின்றனர். இவர்கள் எல்லாம் தேர்தலுக்கு பின் காணாமல் போய் விடுவர். தேர்தல் நேரத்தில் மட்டும் வருபவர்கள், தேர்தலுக்கு பின்னால் கொடநாட்டுக்கு சென்று விடுவர். தேர்தலுக்காக மட்டும் வருபவர்கள் நாங்கள் அல்ல. மக்களுடன் என்றும் இருக்கும் இயக்கம் தி.மு.க., தான்.தேர்தல் நேரத்தில் கொடுக்கும் வாக்குறுதிகளை முதல்வர் கருணாநிதி நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை உங்களிடம் இருக்கிறதா? என்று பொது மக்களை பார்த்து கேட்ட போது இருக்கிறது... இருக்கிறது என்று மக்கள் குரல் கொடுத்தனர். அப்படியானால், தி.மு.க., கூட்டணிக்கு ஆதரவு தர வேண்டும்.இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

கருணாநிதி மீது நம்பிக்கை இருக்கிறதா?மக்களிடம் கேள்வி கேட்ட மு.க.ஸ்டாலின்

மக்கள் மனதை அறியாத ஜெயலலிதா, அவர்களுக்கு தேவையான திட்டங்களை எப்படி நிறைவேற்றுவார் என்று ஈரோடு மேற்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் யுவராஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

திமுக அரசு செயல்படுத்தி வரும் நலத்திட்டங்களை மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளதால், எங்கள் கூட்டணி சிறப்பான வெற்றியை பெறும். கடந்த 4 ஆண்டுகளாக கொடநாட்டில் ஓய்வு எடுத்த

ஜெயலலிதா, தமிழக திட்டங்களை குறை சொல்லுவது தவறு. ஜெயலலிதா எப்படி பொதுமக்களை சந்தித்து திட்டங்களை வழங்குவார். பொதுமக்களுக்கு என்ன தேவை என்று அவர்களுக்கு தெரியுமா?

காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பிரச்சாரம் செய்யப்போவதாக கூறும் சீமான் சுயவிளம்பரத்துக்காக அவ்வாறு பேசி வருகிறார் என்றார்.

மக்கள் மனதை அறியாதவர் ஜெ. சுய விளம்பரம் தேடும் சீமான்: யுவராஜ்

டேராடூன் : உத்தரகண்ட் மாநிலத்தில், 2 ரூபாய்க்கு ஒரு கிலோ கோதுமை வழங்கும் திட்டத்தை பா.ஜ., தலைவர் நிதின் கட்காரி துவக்கி வைத்தார். உத்தரகண்ட் மாநிலத்தில், "அடல் காத்தியானா திட்டம்' என்ற 2 ரூபாய்க்கு ஒரு கிலோ கோதுமை மற்றும் 3 ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி வழங்கும் திட்டம் நேற்று துவக்கப்பட்டது. பா.ஜ., தேசிய தலைவர் நிதின் கட்காரி திட்டத்தை துவக்கி வைத்தார்.

அப்போது அவர் பேசியதாவது: நலிந்த பிரிவினரை சமூக, பொருளாதார ரீதியாக மேம்பாடு அடைய செய்ய, அரசியலை ஒரு கருவியாக கட்சி தலைவர்கள் பயன்படுத்த வேண்டும். 2 ரூபாய்க்கு ஒரு கிலோ கோதுமை மற்றும் 3 ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி வழங்கும் திட்டம் மூலம், உத்தரகண்ட் மாநிலத்தில் 30 லட்சம் மக்கள் பயனடைவர். இது மற்ற மாநிலங்களுக்கு ஒரு முன் மாதிரி திட்டமாக இருக்கும்.
அரசியலில் இருப்பவர்கள் எம்.எல்.ஏ., ஆக வேண்டும், மந்திரியாக வேண்டும் மற்றும் முதல்வராக வேண்டும் என்று மட்டும் நினைத்தால் போதாது. நாட்டில் வறுமையை ஒழிக்க வேண்டும். ஒவ்வொருவருக்கும் உணவு, உடை மற்றும் இருப்பிட வசதியை செய்து கொடுப்பது என்ற லட்சியத்தையும் கொண்டிருக்க வேண்டும். தற்போது துவக்கி வைத்தது போன்ற திட்டங்கள், குளறுபடிகள் நடைபெறாத திட்டங்களாக இருக்க வேண்டும். நலிந்த பிரிவினருக்காக துவக்கப்படும் இதுபோன்ற திட்டங்களில் ஊழலுக்கே இடமிருக்கக் கூடாது.
மேலும், ஒளிவுமறைவற்ற தன்மையும் நிலவ வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் 58 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான உணவு தானியங்கள் குடோன்களில் அழிந்து போகின்றன என, நம் விவசாய அமைச்சர் கூறுகிறார். இப்படி உணவு தானியங்கள் வீணாகாமல் தடுக்க, அவற்றை தேவையானவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நம் நாடு வேகமாக வளர்ந்து கொண்டிருந்தாலும், திட்ட கமிஷனின் ஆய்வறிக்கைகள் திருப்தி அளிப்பதாக இல்லை. நம் நாட்டில் வாழும் மக்களில் 50 சதவீதம் பேர், நாள் ஒன்றுக்கு 90 ரூபாய் அளவில் குறைவான வருவாயே பெறுகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உணவு பணவீக்கமும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இவ்வாறு நிதின் கட்காரி கூறினார்.

ஏழைகளுக்கு ரூ.2க்கு ஒரு கிலோ கோதுமை : பா.ஜ., கட்காரி துவக்கினார்

முதியவர்களுக்கு சேவை செய்யும் புதிய “ரோபோ” தயாரிப்புவளர்ந்து வரும் அறிவியல் உலகில் “ரோபோ”க்களின் பங்கு அவசியமாக திகழ்கிறது. பல துறைகளில் “ரோபோ”க்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது முதியவர்களுக்கு உதவக்கூடிய புதியவகை “ரோபோ”க்களை விஞ்ஞானிகள் தயாரித்து வருகின்றனர்.

நியூசிலாந்தை சேர்ந்த ஒரு விளையாட்டு நிறுவனம் ஒரு புதியவகை ரோபோவை வடிவமைத்து வருகிறது. அதன்மூலம் மூளையில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக அவதிப்படும் முதியோருக்கு உதவியாக இருக்கும் என கருதப்படுகிறது.

இந்த “ரோபோ” கற்றுத்தரும் “குங்பூ பங்க்” எனப்படும் புதிய விளையாட்டின் மூலம் அந்த நோயை குணப்படுத்த முடியும் என்றும் நம்பப்படுகிறது. இந்த “ரோபோ”வை நியூசிலாந்தில் உள்ள ஆக்லாந்து பல்கலைக்கழக விஞ்ஞானிகள் வடிவமைத்து வருகின்றனர்.

இதை மேலும் மாற்றியமைத்து முதியோர்களுக்கு உதவும் வண்ணம் உருவாக்க முடியும் என கருதினர். அதற்கான முயற்சியிலும் தற்போது அவர்கள் ஈடுபட்டுள்ளனர். இதில், தென் கொரியாவின் எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் தொலை தொடர்பு ஆய்வு மையமும் இணைந்து செயல்படுகிறது.

இந்த “ரோபா”க்கள் முதியோர்களுக்கு பலவிதங்களில் உதவியாக இருக்கும். ரத்த அழுத்த சோதனை, உடலில் இருக்கும் இன்சுலின் அளவு போன்றவற்றை கணக் கெடுத்து பதிவு செய்து கொள்ளும். பின்னர் அதில் பொருத்தப் பட்டுள்ள வயர்லெஸ் இணைப்பு மூலம் டாக்டர் அல்லது நர்சுகள் அறிந்து கொள்ள முடியும்.

அதே நேரத்தில் முதியவர் ஒருவர் தவறி கீழே விழுந்து கிடந்தால் கூட அதுபற்றிய தகவலையும் இது தெரிவிக்கும். இந்த தகவலை “ரோபோ”வை வடிவமைத்து வரும் விஞ்ஞானி டேவிட் காட்டர் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறும்போது, முதியோர்கள் எடுத்துக் கொள்ளக்கூடிய மருந்து மாத்திரைகள் பற்றிய தகவலை தெரிவித்தல் மற்றும் அவர்கள் செய்யக்கூடிய உடற்பயிற்சிகளை கற்றுக்கொடுத்தல் போன்ற பணிகளை செய்யும் வகையிலும் வடிவமைக்கப்பட உள்ளது என்றும் அவர் கூறினார்.

முதியவர்களுக்கு சேவை செய்யும் புதிய “ரோபோ” தயாரிப்பு

என் திறமை மீது நம்பிக்கை வைத்துள்ள நாட்டு மக்களுக்கு நன்றி என சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்.
கெüதம் பட்டாச்சார்யா என்பவர் "சச்' என்ற பெயரில் சச்சினைப் பற்றிய புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். சச்சினுக்கு மிக நெருக்கமானவரான அவர், சச்சின் கூறியதாக சில கருத்துகளை தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
தென்னாப்பிரிக்க தொடரில் பந்தை சேதப்படுத்தியதாக தடை விதிக்கப்பட்டது குறித்து கருத்து தெரிவித்துள்ள சச்சின், அது ஒரு விபத்து. அப்போது நாட்டு மக்கள் அனைவரும் எனக்கு ஆதரவாக இருந்தது மகிழ்ச்சியளித்தது.
இன்னும் நாட்டு மக்கள் என் திறமை மீது நம்பிக்கை வைத்துள்ளனர். அதை மறக்கமாட்டேன். நான் பந்தை சேதப்படுத்தியதாக எனக்கு ஓர் ஆட்டத்தில் தடை விதிக்கப்பட்டபோது அதிர்ச்சியடைந்தேன்.
நான் பந்தை சேதப்படுத்தவில்லை. பந்தின் மீது இருந்தே புற்களைத்தான் துடைத்தேன் என்று உண்மையை சொல்ல முயன்றபோதும், எனக்கு அதற்கான வாய்ப்பு அளிக்கப்படவில்லை. அப்போதைய மேட்ச் ரெப்ரி என் தரப்பு வாதத்தை கேட்கவில்லை. அந்த சம்பவத்துக்குப் பிறகு பந்தை சுத்தம் செய்ய வேண்டும் என்றால் நடுவரிடம் கொடுத்துவிடுவேன் என்று கூறியுள்ளார்.
2001-ம் ஆண்டு டெண்டுல்கர் பந்தை சேதப்படுத்தியதாக ஓர் ஆட்டத்தில் தடை விதிக்கப்பட்டாலும், பின்னர் அவர் பந்தை சேதப்படுத்தவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது. சூதாட்டத்தில் சக வீரர் சிக்கியது பற்றி கேள்விக்கு பதிலளித்துள்ள சச்சின், நான் எனது வேலையை மட்டும் செய்கிறேன். மற்றவற்றைப் பற்றி சிந்திப்பதில்லை என்று கூறியுள்ளார்.
மும்பை தாக்குதல் பற்றி பேசியுள்ள சச்சின், நாங்கள் கட்டாக்கில் இங்கிலாந்துக்கு எதிராக விளையாடிக் கொண்டிருந்தோம். அன்று இரவு மும்பையில் தாக்குதல் நடந்துள்ளது பற்றி எங்களுக்குத் தெரியவந்தது.
மும்பை தாக்குதலால் மிகவும் வேதனையடைந்தேன். இனி அதுபோன்ற ஒரு தாக்குதல் நடக்கக்கூடாது. மும்பை தாக்குதல் சம்பவம் என் வாழ்க்கையில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது என சச்சின் கூறியுள்ளார்.

என் திறமை மீது நம்பிக்கை வைத்துள்ள நாட்டு மக்களுக்கு நன்றி: சச்சின் டெண்டுல்கர்

முக நூல்

Popular Posts