தென்னாப்பிரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதிச்சுற்றுக்கு இந்தியாவின் சோம்தேவ் முன்னேறியுள்ளார்.
இவர் 6-2, 6-4 என்ற நேர் செட்களில் தென்னாப்பிரிக்காவின் ஐசக் வான் டெர் மெர்வை தோற்கடித்தார். இறுதிச்சுற்றில் தென்னாப்பிரிக்காவின் கெவின் ஆண்டர்சனை எதிர்கொள்கிறார் சோம்தேவ்.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் அரைஇறுதியில் இந்தியாவின் சோம்தேவ், வைல்டுகார்டு முறையில் போட்டியில் பங்கேற்ற தென்னாப்பிரிக்காவின் ஐசக் வான் டெர் மெர்வை எதிர்கொண்டார்.
முதல் செட்டில் முதல் கேமிலேயே ஐசக் வானின் சர்வீûஸ முறியடித்து 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றார் சோம்தேவ். அடுத்த கேமில் தனது சர்வீûஸ தன்வசமாக்கிய சோம்தேவ், 3-வது கேமில் ஐசக் வானின் சர்வீûஸ மீண்டும் முறியடித்தார்.
இதனால் முதல் 4 கேம்களின் முடிவில் 4-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றார் சோம்தேவ். இறுதியில் 8-வது கேமில் தனது சர்வீûஸ தன்வசமாக்கி 6-2 என்ற கணக்கில் வென்று முதல் செட்டை 39 நிமிடங்களில் முடிவுக்குக் கொண்டு வந்தார் சோம்தேவ்.
பின்னர் நடைபெற்ற இரண்டாவது செட்டில் ஐசக் வான் சற்று நெருக்கடி கொடுத்து ஆடியபோதும், அந்த செட்டை 6-4 என்ற கணக்கில் வென்று ஆட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தார் சோம்தேவ். இதன் மூலம் 6-2, 6-4 என்ற நேர் செட்களில் வெற்றிபெற்று இறுதிச்சுற்றை உறுதி செய்தார் சோம்தேவ்.
கடந்த 2009-ல் சென்னை ஓபனில் இறுதிச்சுற்று வரை முன்னேறிய சோம்தேவ், குரேஷியாவின் மரின் சிலிச்சிடம் தோற்று சாம்பியன் பட்டத்தை தவறவிட்டார். அதன்பிறகு இரண்டு ஆண்டுகள் கழித்து இப்போது இரண்டாவது முறையாக இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார் சோம்தேவ்.
கெவின் ஆண்டர்சன் வெற்றி: மற்றொரு அரைஇறுதியில் தென்னாப்பிரிக்காவின் கெவின் ஆண்டர்சன் 6-7 (3), 6-0, 6-4 என்ற கணக்கில் பிரான்ஸின் அட்ரியன் மன்ரினோவை வென்று இறுதிச்சுற்றுக்கு தகுதிபெற்றார்.

0 comments :
Post a Comment