background img

புதிய வரவு

ஒற்றையர் அரையிறுதியில் சோம்தேவ் தேவ்வர்மன்

தென் ஆப்பிரிக்க ஓபன் டென்னிஸ் ஒற்றையர் அரையிறுதிக்கு இந்தியாவின் சோம்தேவ் தேவ்வர்மன் தகுதி பெற்றார்.

தென் ஆப்பிரிக்க வீரர் ரிக் டீ வோஸ்ட் என்பவரை சோம்தேவ் 3- 6, 7- 6, 6- 1 என்ற நேர் செட்களில் வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தார்.

முதல் செட்டில் சோம்தேவ் சர்வ் ஒன்றை பிரேக் செய்து 3- 1 என்று முன்னிலை வகித்தார். ஆனால் வோஸ்ட் சிறப்பாகவ் விளையாடி அடுத்த 5 சர்வ்கேம்களிலும் வென்று முதல் செட்டைக் கைப்பற்றினார்.

இரண்டாவது செட்டிலும் சோம்தேவ் 4- 1 என்று முன்னிலை பெற்றார். ஆனால் 7-வது சர்வ் கேமை சோம்தேவ் தோற்க அந்த செட் டை பிரேக்கருக்குச் சென்றது.

டை பிரேக்கரிலும் சோம்தேவ் 3 புள்ளிகள் பெற்று முன்னிலை வகித்தார். ஆனால் வோஸ்ட் விடாப்பிடியாக சமன் செய்தார். ஆனால் இந்த முறை சோம்தேவ் விடவில்லை. டை பிரேக்கரில் செட்டைக் கைப்பற்றி 3-வது செட்டுக்குள் நுழைந்தார்.

3-வது செட்டில் சோம்தேவின் ஆதிக்கம் கூடியது. ஏஸ்கள் பலவர்ற்றை தொடர்ச்சியாக வீசினார் சோம்தேவ்.

அரையிறுதியில் மற்றொரு தென் ஆப்பிரிக்க வீரர் ஐசக் வான் டெர் மெர்வைச் சந்திக்கிறார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts