background img

புதிய வரவு

கடந்த ஆண்டே ஓய்வு பெற நினைத்தேன் -யுவ்ராஜ் சிங்

டெஸ்ட் மற்றும், ஒரு நாள் கிரிக்கெட் அணிகளிலிருந்து நீக்கப்பட்டதையடுத்து மனமுடைந்து சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறலாம் என்ற முடிவுக்கே வந்து விட்டேன் என்று யுவ்ராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

மோசமான ஆட்டம் காரணமாக யுவராஜ்சிங் கடந்த ஆண்டு டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டியில் இருந்து நீக்கப்பட்டார்.

நான் கடந்த 10 ஆண்டுகளாக விளையாடி வருகிறேன். எனது பெற்றோரின் உதவிதான் இதற்கு காரணம் கடந்த ஆண்டு டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டியில் இருந்து நீக்கப்பட்டேன். அப்போது எனக்கு மிகுந்த சோதனை நிறைந்ததாக இருந்தது. இதன் காரணமாக சர்வதேச போட்டிகளில் இருந்து விலகிவிடலாம் என்று நான் நினைத்தேன். ஆனால் எனது பெற்றோர் தான் எனக்கு சில விஷயங்களை புரிய வைத்தனர். பீல்டிங்கின் போது ஒவ்வொரு முறையும் எனக்கு காயம் ஏற்படும்.

அந்த நேரம் எனக்கு உண்மையில் மோசமாக இருக்கும் அப்போது எனது நண்பர்களும், பெற்றோரும் எனது தன்னம்பிக்கையை ஏற்படுத்தி கடினமாக பயிற்சி பெற வைத்தனர்.

இந்த உலகக் கோப்பையை சச்சினுக்காக வெல்வோம். இந்தியாவுக்கு அது கனவு நனவாகும் தருணமாகும். இவ்வாறு கூறினார் யுவ்ராஜ் சிங்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts