background img

புதிய வரவு

யு.எஸ்.-இரஷ்யா அணு ஆயுத குறைப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது

தங்களிடம் உள்ள அணு ஆயுதங்களை குறைத்துக்கொள்ளும் ஒப்பந்தத்தை அமெரிகாவும், இரஷ்யாவும் கையெழுத்திட்டு பரிமாற்றிக் கொண்டுள்ளன.

முனிக் நகரில் இன்று நடந்த சந்திப்பில் தங்களிடம் உள்ள அணு ஆயுதங்களான 2,200ஐ 1,550 ஆக குறைத்துக் கொள்ள ஒப்புக்கொண்டு இரு நாடுகளின் அரசுகளும் ஏற்றுக்கொண்டு கையெழுத்திட்ட ஒப்பந்தத்தை, அமெரிக்க அயலுறவுச் செயலர் ஹில்லாரி கிளிண்டனும், இரஷ்ய அயலுறவு அமைச்சர் செர்கி லாவ்ரோவும் பரிமாறிக்கொண்டனர்.

இது மட்டுமின்றி, அணு ஆயுதங்களை இரு தரப்பும் கண்காணிக்கும் ஒப்பந்தத்தையும் புதுப்பித்து இரு தலைவர்களும் பரிமாறிக்கொண்டனர்.

அணு ஆயுத குறைப்பு ஒப்பந்ததை அங்கீகரித்து நிறைவேற்றுமாறு அதிபர் பராக் ஒமாபா கேட்டுக்கொண்டதற்கு இணங்க கடந்த ஆண்டு டிசம்பரில் அமெரிக்க செனட் சபை நிறைவேற்றியது. அதனை இரஷ்ய அரசு கடந்த மாதம் ஏற்றுக்கொண்டு ஒப்புதல் அளித்தது.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts