background img

புதிய வரவு

இலங்கையின் வட கிழக்குப் பகுதிகளில் மீண்டும் வெள்ளம்: 10 இலட்சம் பேர் பாதிப்பு

இலங்கையில் தமிழர்களின் பாரம்பரிய பகுதிகளான வடக்கு, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களில் உள்ள ஏற்பட்டுள்ள வெள்ளத்தினால் 10 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பேரழிவு ஆளுமை மையம் தெரிவித்துள்ளது.

இந்த வெள்ளத்தால் 11 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், வெள்ளத்தில் சிக்கிய 37 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 40 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டு 430 தற்காலிக முகாம்களில் தங்கள வைக்கப்பட்டுள்ளதாகவும், வெள்ளத்தில் சிக்கி 7 பேர் உயிரிந்துள்ளதாகவும், 2 பேர் காணவில்லை என்றும் பேரழிவு ஆளுமை மையம் தெரிவித்துள்ளது.

இந்த வெள்ளத்தால் பல ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும், வெள்ளத்தின் பாதிப்பு முழுமையாக மதிப்பிடப்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

யாழ் மாணவர்கள் உதவி

சமீபத்தில் பெய்த பெரும் மழையால் கடும் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ள திருகோணமலை மாவட்ட மக்களுக்கு, யாழ்ப்பாணத்தில் சேர்த்த அத்யாவசியப் பொருட்களை யாழ் பல்கலை மாணவர்கள் கொண்டு சென்று வழங்கியுள்ளனர்.

வெருகல் என்ற கிராம்ப் பகுதியில்தான் பாதிப்பு கடுமையாக இருந்துள்ளது. அந்தப் பகுதியில் ஏற்கனவே மழை பெய்தபோதும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அப்போதும் யாழ் மாணவர்கள் அவர்களுக்கு உதவியுள்ளனர். இப்போது மாணவர்கள் அளித்துள்ள உணவுப்பொருட்கள் அடுத்த 3 நாட்களுக்கு மட்டுமே போதுமானது என்றும், அதன் பிறகு என்ன செய்வதென்று தெரியவில்லை என்றும் அம்மக்கள் கூறியுள்ளனர்.

இப்பகுதி மக்களின் தேவைகளை அரசும், தொண்டு நிறுவனங்களும் உடனடியாக நிவர்த்தி செய்ய வேண்டும் என்று யாழ் மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts