background img

புதிய வரவு

Showing posts with label US. Show all posts

தங்களிடம் உள்ள அணு ஆயுதங்களை குறைத்துக்கொள்ளும் ஒப்பந்தத்தை அமெரிகாவும், இரஷ்யாவும் கையெழுத்திட்டு பரிமாற்றிக் கொண்டுள்ளன.

முனிக் நகரில் இன்று நடந்த சந்திப்பில் தங்களிடம் உள்ள அணு ஆயுதங்களான 2,200ஐ 1,550 ஆக குறைத்துக் கொள்ள ஒப்புக்கொண்டு இரு நாடுகளின் அரசுகளும் ஏற்றுக்கொண்டு கையெழுத்திட்ட ஒப்பந்தத்தை, அமெரிக்க அயலுறவுச் செயலர் ஹில்லாரி கிளிண்டனும், இரஷ்ய அயலுறவு அமைச்சர் செர்கி லாவ்ரோவும் பரிமாறிக்கொண்டனர்.

இது மட்டுமின்றி, அணு ஆயுதங்களை இரு தரப்பும் கண்காணிக்கும் ஒப்பந்தத்தையும் புதுப்பித்து இரு தலைவர்களும் பரிமாறிக்கொண்டனர்.

அணு ஆயுத குறைப்பு ஒப்பந்ததை அங்கீகரித்து நிறைவேற்றுமாறு அதிபர் பராக் ஒமாபா கேட்டுக்கொண்டதற்கு இணங்க கடந்த ஆண்டு டிசம்பரில் அமெரிக்க செனட் சபை நிறைவேற்றியது. அதனை இரஷ்ய அரசு கடந்த மாதம் ஏற்றுக்கொண்டு ஒப்புதல் அளித்தது.

யு.எஸ்.-இரஷ்யா அணு ஆயுத குறைப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது

இது தொடர்பாக அமெரிக்க அயலுறவுத் துறை அமைச்சகம் விடுத்துள்ள எச்சரிக்கை அறிவிப்பில், அல் காய்தா மற்றும் தாலிபான் தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் இருப்பதால் அவசியம் இல்லாமல் அமெரிக்கர்கள் பாகிஸ்தான் செல்ல வேண்டாம் என்று கூறப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் பெருநகரங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு அதிகப்படுத்தியுள்ளது.

எனினும் அமெரிக்கர்களும், மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்தவர்களும் அடிக்கடி கூடும் மற்றும் பார்வையிடும் வணிக வளாகங்கள், ஹோட்டல்கள், கிளப்கள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பள்ளிகள் உள்ளிட்ட இடங்களைத் தாக்கும் நோக்கத்துடன் அவற்றை பயங்கரவாதக் குழுக்கள் தொடர்ந்து கவனித்து வருவதால் அந்த இடங்களுக்குச் செல்லும்போது அமெரிக்கர்கள் உஷாராக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் என அதில் மேலும் கூறப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் செல்ல வேண்டாம்: அமெரிக்கர்களுக்கு எச்சரிக்கை

2008 ஆம் ஆண்டு நடந்த மும்பை தாக்குதலுக்கு முன்னரே பாகிஸ்தான் தீவிரவாத முகாம்களில் "வெள்ளை முகங்கள்" காணப்பட்டதாக அமெரிக்காவை இந்தியா எச்சரித்தது என்று "விக்கிலீக்ஸ்' மூலம் தகவல் வெளியாகி உள்ளது.

டெல்லியில் தம்மை சந்தித்த அமெரிக்க சென்ட் சபை உறுப்பினர்கள் ருஷ் ஃபெயின்கோல்ட் மற்றும் பாப் கேஸி ஆகியோரிடம், அப்போதைய இந்திய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் இத்தகவலை தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானையொட்டியுள்ள பாகிஸ்தான் தீவிரவாத முகாம்களில் "வெள்ளை முகங்கள்" காணப்பட்டதாக நாராயணன் கூறினார் என்று 2008 ஆம் ஆண்டு மே மாதம் 30 ஆம் தேதியன்று அமெரிக்க அரசுக்கு அனுப்பிய தமது கடிதத்தில் அமெரிக்க தூதரக அதிகாரி தெரிவித்துள்ளார்

இத்தகவல் "விக்கிலீக்ஸ்" வெளியிட்டுள்ள ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க

மும்பை தாக்குதலுக்கு முன்னரே அமெரிக்காவை எச்சரித்த இந்தியா!

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் மனைவி தன் மகள்களுடன் மீண்டும் இந்தியா வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மனைவி மிச்சேல் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் முறையாக தமது கணவருடன் இந்தியா வந்தார்.

மும்பை, டெல்லி ஆகிய நகரங்களுக்கு சென்ற அவர் மீண்டும் தன் மகள்கள் சஷா, மாலியாவுடன் இந்தியா வர இருக்கிறார்.

இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கரமேனனை வெள்ளை மாளிகையில் சந்தித்து பேசியபோது அவரிடம் இந்த தகவலை ஒபாமாவே தெரிவித்ததாக செய்திகள் கூறுகின்றன.

இந்தியாவில் தங்கி இருந்த நாட்களை சுகமான அனுபவமாக மிச்சல் கருதினார் என்றும், அவர் தன் மகள்களுடன் மீண்டும் இந்தியா வர விரும்புகிறார் என்றும் ஒபாமா கூறியதாகவும் அச்செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.

மீண்டும் இந்தியா வருகிறது ஒபாமா குடும்பம்

கலி்ஃபோர்னியாவிலுள்ள டிரை-வாலி பல்கலைக்கு மோசடி விசா பெற்று படிக்கச் சென்று, தற்போது சட்டச் சிக்கலில் உள்ள இந்திய மாணவர்களின் நலனைக் காப்போம் என்று அயலுறவு அமைச்சர் கிருஷ்ணா கூறியுள்ளார்.

டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, இந்த மாதம் இரண்டாவது வாரத்தில் அமெரிக்கா செல்லும் அயலுறவுச் செயலர் நிருபமா ராவ், அமெரிக்கா அரசு அதிகாரிகளிடம் இப்பிரச்சனையை எழுப்புவார் என்று கூறியுள்ளார்.

இந்தியா - அமெரிக்கா இடையே இராஜதந்திர கூட்டாண்மை மேம்படுத்த வரும் ஏப்ரல் மாதம் வருகை தரவுள்ள அமெரிக்க அயலுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் பயணம் தொடர்பாக இறுதி செய்ய அமெரிக்கா செல்லும் நிருபமா, இந்திய மாணவர்கள் பிரச்சனையையும் கையாள்வார் என்று கிருஷ்ணா கூறியுள்ளார்.

இதற்கிடையே, சட்டச் சிக்கலில் உள்ள இந்திய மாணவர்களின் கால்களில் கண்காணிப்பு டிராக்கரை பொறுத்தியுள்ளதை நீக்க வேண்டும் என்று இந்தியத் தூதரம் அமெரிக்க சுங்க மற்றும் குடியுரிமைத் துறையிடன் கோரியுள்ளது. தங்களால் சட்டத்திற்குட்பட்டு என்ன செய்ய முடியுமோ அதனை செய்வோம் என்று அந்தத் துறை அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.

இந்திய மாணவர்கள் நலனைக் காப்போம்: கிருஷ்ணா உறுதி

கலிஃபோர்னியாவின் டிரை-வாலி பல்கலைக் கழகத்தால் விசா மோசடிக்கு ஆளான இந்திய மாணவர்கள் சிலரின் கால்களில் கண்காணிப்பு டிராக்கரை விலங்கைப் போல் மாட்டியிருப்பதை, “சிறைக்குப் பதிலான பொதுவான நடைமுறைதான” என்று அமெரிக்க அரசு சுங்க மற்றும் குடியேற்ற புலனாய்வுத் துறை நியாயப்படுத்தியுள்ளது.

‘மானிடரிங் டிராக்கர்ஸ்’ என்றழைக்கப்படும் இந்த கண்காணிப்பு விலங்குகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கு அணிவிக்கப்படுவதால் அவர்களுடைய சுதந்திரம் எந்த விதத்திலும் பாதிக்கப்படாது என்றும், விசாரணையில் உள்ள அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்பதை எந்த நேரத்திலும் அறிந்துகொள்ளவே இந்த முறை கையாளப்படுகிறது என்று டெல்லியில் உள்ள அமெரிக்கத் தூதரகம் விளக்கமளித்துள்ளது.

இப்படிப்பட்ட டிராக்கர்களை பொருத்துவது ஏற்புடையதல்ல என்றும், அதனை உடனடியாக விலக்க வேண்டும் என்றும் அயலுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா கூறியிருந்தார். அதனைத் தொடர்ந்து அமெரிக்கத் தூதரகம் இந்த விளக்கத்தை அளித்துள்ளது.

“பல்வேறு விசாரணைகளில் உள்ளவர்களுக்கு டிராக்கர்களை பயன்படுத்தவது அமெரிக்காவில் பரவலாக நடைமுறையில் உள்ளது. அதனை பொருத்துவதாலேயே ஒருவர் குற்றவாளி என்றோ அல்லது ஐயத்திற்கிடமானவர் என்றோ பொருளில்லை. அந்த கண்காணிப்பு கருவியில் இருந்து ரேடியோ அலைக்கற்றை வெளிப்படுகிறது. அதனை வைத்து அந்த நபர் எங்கிருக்கிறார் என்பதை அறியலாம். விசாரணைக்கு உட்படுத்தப்படுபவர் சிறையில் அடைப்பதை விட, இப்படி கண்காணிப்பு டிராக்கரை மாற்றாக பயன்படுத்தப்படுகிறது” என்று அமெரிக்கத் தூதரக விளக்கம் கூறுகிறது.

இந்திய மாணவர்களுக்கு கண்காணிப்பு டிராக்கர் அணிவிப்பு: நியாயப்படுத்துகிறது யு.எஸ்.

அதிநவீன போர் விமானம் தயாரித்ததில் அமெரிக்காவின் தொழில்நுட்பத்தை திருடவில்லை என்று சீனா மறுத்துள்ளது.

'ஜெ-20' என்னும் அதிநவீன போர் விமானத்தை சீனா சமீபத்தில் சோதனை செய்தது. இந்நிலையில், அந்த விமானத்தின் தொழில்நுட்பத்தை அமெரி்க்காவிடம் இருந்து சீனா திருடியதாக புகார் எழுந்தது.

இதுதொடர்பாக தொழில்நுட்ப ரகசியத்தை அளித்ததாக அமெரிக்காவைச் சேர்ந்த நோஷிர் கோவாடியா என்பவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் 32 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கியுள்ளது.

இந்நிலையில், "ஜெ-20" விமானத்தின் தொழில்நுட்பத்தை அமெரிக்காவிடம் இருந்து திருடவில்லை என்று சீன பாதுகாப்பு அதிகாரிகளும், இராணுவ நிபுணர்களும் தெரிவித்துள்ளனர்.

தங்களது தொழில்நுட்ப கண்டுபிடிப்பின் மகுடம்தான் 'ஜெ-20' போர் விமானம் என்றும் சீனா கூறியுள்ளது.

இத்தகவல் சீன அரசின் அதிகாரப்பூர்வ பத்திரிகையில் இன்று வெளியாகியுள்ளது.

அமெரிக்க போர் விமான தொழில்நுட்பத்தை திருடவில்லை: சீனா

உலகின் அமைதி மற்றும் நன்மைக்காக இந்தியாவுடன் புதிய ஒப்பந்தம் ஒன்றை அமெரிக்கா செய்துகொள்ள உள்ளதாக அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.

அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையின்போது இதனை தெரிவித்த அவர், பயங்கரவாதத்தை ஒழிக்கவும், பாதுகாப்பை பலப்படுத்தவும் இந்தியாவுடன் மேற்கொண்டுள்ள ஒப்பந்தங்கள் மேலும் பலப்படுத்தபட உள்ளதாக அவர் கூறினார்.

இந்தியா மற்றும் ரஷ்யாவுடன் புதிய ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்பட உள்ளதாகவும், இதற்காக இந்தாண்டு மார்ச் மாதத்தில் பிரேசில்,சிலி,சால்வடார் உள்ளிட்ட நாடுகளுக்கு தான் செல்ல உள்ளதாகவும் ஒபாமா மேலும் தெரிவித்தார்.

இந்தியாவுடன் புதிய ஒப்பந்தம்:ஒபாமா அறிவிப்பு

முக நூல்

Popular Posts