background img

புதிய வரவு

Showing posts with label MONMOHANSINGH. Show all posts

சிறந்த ஆளுமையின் வேரை அழிப்பது மட்டுமின்றி, நமது நாட்டின் மதிப்பை பன்னாட்டு அளவில் தாழ்த்துகிறது ஊழல் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.

தனது தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசிற்கு எதிராக பல்வேறு ஊழல் குற்றச்சாற்றுகள் கூறப்பட்டுள்ள நிலையில், டெல்லியில் நடைபெற்றுவரும் மாநில அரசுகளின் தலைமை செயலர்கள் மாநாட்டில் இன்று காலை உரையாற்றிய பிரதமர் மன்மோகன் சி்ங் இவ்வாறு கூறியுள்ளார்.
\
“மிகச் சிறந்த ஆளுமையின் வேலை ஊழல் அழிக்கிறது. வேகமான வளர்ச்சிக்கு எதிரானது ஊழல், அனைத்து தரப்பு மக்களையும் முன்னேற்ற வேண்டும் என்ற குறிக்கோளுடன் நாம் மேற்கொள்ளும் அனைத்து திட்டகங்கள் எல்லாவற்றையும் சிதைக்கிறது அல்லது தடுத்துவிடுகிறது. இது நமது நாட்டின் மதிப்பை பன்னாட்டு அளவில் குறைக்கிறது. நமது மக்களே நம்மை மதிப்பின்றி பார்க்கும் நிலையை ஏற்படுத்தி விடுகிறது” என்று கூறியுள்ள மன்மோகன் சிங், ஊழலை நேரிடையாக, துணிச்சலாக, உடனடியாக எதிர்கொண்டு வீழ்த்த வேண்டும் என்றார்.

ஆளுமையின் வேரை அழிக்கிறது ஊழல்: பிரதமர்

‌ெ‌ல்‌லி‌‌யி‌ல் நடைபெ‌ற்ற காம‌‌ன்வெ‌ல்‌‌த் போ‌ட்டி‌யி‌ல் நடைபெ‌ற்ற ஊழ‌ல் கு‌றி‌த்து அமை‌க்க‌ப்ப‌ட்ட ‌விசாரணை குழு ‌பிரதம‌ரிட‌ம் அ‌றி‌க்கை தா‌க்க‌ல் செ‌ய்து‌ள்ளது.

டெல்லியில் கடந்த ஆண்டு நடந்த காமன்வெல்த் விளையாட்டு போட்டி நிகழ்ச்சிகளை தொலை‌க்கா‌ட்‌சிக‌ளி‌ல் ஒளிபரப்ப உரிமை வழங்கியதில் ஊழல் நடந்ததாக புகார் கூறப்பட்டது.

இது பற்றி ஆய்வு செய்து மத்திய அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்ய, ஆடிட்டர் ஜெனரல் வி.கே.சுங்லு தலைமையிலான கமிட்டி ஒ‌ன்று அமைக்கப்பட்டது.

இந்த கமிட்டி நட‌த்‌திய விசாரணை‌யி‌ன் அடி‌ப்படை‌யி‌ல், பிரதமர் மன்மோகன் சிங்கிடம், 236 பக்க இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்து இருக்கிறது.

அதில், காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஒளிபரப்பு உரிமை வழங்கியதில், அய‌ல்நாட்டு நிறுவனத்துக்கு பிரசார் பாரதி, தூர்தர்ஷன் அதிகாரிகள் சலுகை காட்டினார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

காமன்வெல்த் ஊழ‌‌ல்: ‌பிரதம‌ரிட‌ம் அறிக்கை தாக்கல்

பிரதமர் மன்மோகன் சிங் மத்திய அமைச்சரவையில் இன்று ஏற்படுத்தியுள்ள மாற்றங்களை ஆழமாக உற்று நோக்கினால், அதில் தனது ஆளுமையை அவர் முழுமையாக பதித்துள்ளது நன்றாகவே தெரிகிறது.

2009ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலிற்குப் பிறகு ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் பிரதமராக இரண்டாவது முறையாக பிரதமர் பொறுப்பேற்ற மன்மோனகன் சிங், அப்போது அமைத்த அமைச்சரவையில் காங்கிரஸ் தலைமையின் செல்வாக்கும், கூட்டணிக் கட்சிகளின் இழுப்பும் பெரிதாகவே இருந்தன. ஆனால் இன்று நடந்துள்ள அமைச்சரவை மாற்றம், முற்றிலுமாக மன்மோகன் சிங்கின் முத்திரையுடன் செய்யப்பட்டுள்ளது என்பதற்கு முக்கிய அத்தாட்சி, மத்திய அரசை பெரும் தலைகுனிவிற்கு ஆளாக்கிய 2 ஜி அலைக்கற்றை ஊழலைத் தொடர்ந்து வெளியான அதிகார தரகர் நீரா ராடியா உரையாடல் பதிவில் (டேப்) அடிப்பட்ட அமைச்சர்களின் பதவிகள் பறிக்கப்பட்டுள்ளதாகும். 

1. இந்திய தொழிலக கூட்டமைப்பின் தலைவராக இருந்த தருன் தாஸ் இரண்டாவது முறையாக ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அமைக்கப்பட்டபோது நீரா ராடியாவுடன் நடத்திய உரையாடலில் அமைச்சர் கமல் நாத் பற்றிப் பேசியிருந்தார். மன்மோகன் சிங் தலைமையிலான முதல் ஐ.மு.கூட்டணி அரசில் தொழில் வர்த்தக அமைச்சராக இருந்தபோது எல்லா ‘டீல’களுக்கும் 15% வைத்து நன்றாக சம்பாதித்தவர் என்று கமல் நாத் பற்றி பேசிய தருண் தாஸ், “இம்முறை அவருக்கு தரை வழி போக்குவரத்து கிடைத்திருப்பதால், தான் எதிர்பார்க்கும் 15 விழுக்காட்டையும் பெற்றுக்கொண்டு, அவர் தொடர்ந்து இந்த தேசத்திற்கும் சேவையாற்றலாம” என்று கூறியிருந்ததோடு, தனது பணத் தேவைக்காக ஏடிஎம் செல்ல வேண்டிய அவசியமே இல்லாதவர் என்றும் வர்ணித்திருந்தார். இன்று நடந்த அமைச்சரவை மாற்றத்தில் தரை வழி போக்குவரத்து துறையில் இருந்து நகர்ப் புற மேம்பாட்டு அமைச்சராக கமல் நாத் மாற்றப்பட்டுள்ளார்.

2. மத்திய அமைச்சரவையில் வான் வழி (விமான) போக்குவரத்து அமைச்சராக தனி பொறுப்புடன் இரண்டாவது முறையாகவும் பதவியேற்றவர் பிரஃபுல் பட்டேல். இவரை அதே அமைச்சகத்தில் தொடர ஜெட் ஏர்வேஸ் எனும் தனியார் விமான நிறுவன அதிபர் முடிவு செய்து வெற்றியும் பெற்றுவிட்டார் என்ற தகவல் நீரா ராடியா உரையாடில் வெளிவந்தது. வான் வழி போக்குவரத்து அமைச்சராக இருந்த பிரஃபுல் பட்டேல், முக்கிய (காபினட்) அமைச்சராக ஆக்கப்பட்டு, அவருக்கு கனரகத் தொழில் துறை வழங்கப்பட்டுள்ளது. வான் வழி போக்குவரத்து அமைச்சர் பொறுப்பு, அயல்நாடு வாழ் இந்தியர் நல விவகார அமைச்சராக இருக்கும் வயலார் இரவிக்கு கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது. 

3. நீரா ராடியா உரையாடலில் அடிபட்ட மற்றொரு பெயர் முரளி தியோரா. “எந்த வித திறனும் இன்றி அமைச்சராக இருப்பவர்” என்றும், அவர் தொடர்ந்து “பெட்ரோலியத் துறை அமைச்சராக நீடிக்க வேண்டும் என்று இந்தியாவின் மிகப் பெரிய தொழில் நிறுவனம் விரும்பியதால், அவர் அத்துறையை மீண்டும் பெற்றுள்ளார” என்று அந்த உரையாடலில் பேசப்பட்டவர். இன்று நடந்த அமைச்சரவை மாற்றத்தில் ‘சக்தி வாய்ந்’ இந்த அமைச்சக பொறுப்பு அவரிடம் இருந்து பறிக்கப்பட்டு, இதுவரை நகர்புற மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருந்த ஜெய்பால் ரெட்டியிடம் வழங்கப்பட்டுள்ளது! முரளி தியோரா பெரு நிறுவன விவகாரத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆக, நீரா ராடியா டேப்பில் வெளியாகிய அமைச்சர்களின் முக்கியத் துறைகள் அவர்களிடமிருந்து பறிக்கப்பட்டுள்ளது கண்கூடாகத் தெரிகிறது.
அது மட்டுமின்றி, தான் தெரிவு செய்ய மூன்று அமைச்சர்களை முக்கிய அமைச்சர்களாக உயர்த்தியுள்ளார் மன்மோகன் சிங். சல்மான் குர்ஷித்திற்கு நீர்வளத் துறை அமைச்சக பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. இவரிடமிருந்த பெரு நிறுவனங்கள் விவகார பொறுப்பு முரளி தியோராவிற்கு வழங்கப்பட்டுள்ளது. கமல் நாத் வசமிருந்த தரை வழிப் போக்குவரத்து அமைச்சக பொறுப்பு அளிக்கப்பட்டு முக்கிய அமைச்சராக்கப்பட்டுள்ளார் சி.பி.ஜோஷி. 

மூன்றாவதாக நிலக்கரி, சுரங்கத் துறை அமைச்சக பொறுப்பை வகித்துவந்த ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வாலை முக்கிய அமைச்சராக உயர்த்தியுள்ளார் மன்மோகன் சிங். சுரங்கத் துறை அமைச்சரை முக்கிய அமைச்சராக உயர்த்தியிருப்பது பெரு நிறுவனங்களுக்கு அளித்துள்ள ஒரு சாதகமான சமிக்ஞை என்றும் கூறப்படுகிறது. 

தி.மு.க.விற்கு மூக்கறுப்பு?

இந்த அமைச்சரவை மாற்றத்தில் முக்கியமாக எதிர்பார்க்கப்பட்டது பதவி விலகிய ஆ.இராசாவிற்கு பதிலாக தி.மு.க.விலிருந்து ஒருவர் முக்கிய அமைச்சராக பதவியேற்பார் என்பதே. ஆனால் அது நிகழவில்லை. தி.மு.க.வின் நாடாளுமன்ற கட்சித் தலைவராக இருந்த முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு மீண்டும் அமைச்சராவார் என்றே பேசப்பட்டது. அவரும் முதலில் பிரதமரையும், பிறகு சோனியா காந்தியையும் பார்த்தார். ஆனால் பாலு மட்டுமல்ல, தி.மு.க.விலிருந்து ஒருவரும் புதிய அமைச்சர்கள் பட்டியலில் இல்லை. 

FILE
டி.ஆர். பாலுவை மத்திய அமைச்சராக ஏற்க முடியாது என்று இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்றபோதே பிரதமர் கூறியதாக வந்த தகவல், இப்போது உறுதியாகியுள்ளது? டி.ஆர்.பாலுவை அமைச்சராக்க பிரதமர் மறுத்துவிட்டாரா? அப்படியாயினும் தி.மு.க.விலிருந்து வேறு ஒருவருக்கும் - இராசா வகித்த பதவிக்கு மாற்றாக - அளிக்கப்படாதது ஏன்? இதைப்பற்றிய பின்னணி விவகாரங்கள் நாளை முதல் வெளிவரலாம்.

பிரதமரின் தனித்த தேர்வுகள

புதுவையைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் வி.நாராயண சாமி, மராட்டிய முதல்வர் பொறுப்பேற்றுள்ள பிரிதிவி ராஜ் சவான் வகித்த சக்தி வாய்ந்த பிரதமர் அலுவலக அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். அவர் வகித்த நாடாளுமன்ற விவகாரத் துறைக்கு புதிய அமைச்சராக மாநிலங்களவை உறுப்பினர் அஸ்வானி குமார் பொறுப்பேற்றுள்ளார். இவருக்கு கபில் சிபல் வகித்த அறிவியல் தொழில்நுடபத் துறையும் வழங்கப்பட்டுள்ளது. இப்பொறுப்புகளை ஏற்கனவே வகித்த அஸ்வானி குமார் பஞ்சாபை சேர்ந்தவர். அங்கு அடுத்த ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளதால் மீண்டும் அமைச்சராக்கப்பட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.

அனுபவமிக்க பெனி பிரசாத் வர்மா (எஃகுத் துறை), கேரள மாநிலம் (இங்கும் அடுத்த ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தல்), ஆலப்புழா தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கே.வி.வேணுகோபால் (எரிசக்தி), அஜய் மக்கான் (விளையாட்டு, இளைஞர் விவகாரங்கள்) ஆகியோர் அமைச்சரவையில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். 

மொத்தத்தில் இன்று நடந்துள்ள அமைச்சரவை மாற்றம் மன்மோகன் சிங் நடத்திய அமைச்சரவை மாற்றம் என்பது நன்றாகவே தெரிகிறது. மத்திய அரசை முழுமையாக தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளார் பிரதமர் மன்மோகன் சிங். இதன் எதிரொலிகள் விரைவில் டெல்லி அரசியலில் வெளிப்படலாம்.

நீரா ராடியா டேப் உருவாக்கிய (அமைச்சரவை) மாற்றங்கள்?

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று காலை பிரதமர் மன்மோகன் சிங்கை அவரது இல்லத்திற்கு வந்து சந்தித்துப் பேசியது, மத்திய அமைச்சரவையில் மாற்றம் நடைபெறவுள்ளது என்ற செய்திகளுக்கு வலு சேர்த்துள்ளது.

குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலை நேற்று பிரதமர் மன்மோகன் சிங் சந்தித்துப் பேசினார். இதனைத் தொடர்ந்து இன்று காலை நடந்துள்ள பிரதமர் - சோனியா சந்திப்பு, இந்த வார இறுதியிலேயே அமைச்சரவை மாற்றம் செய்யப்படும் என்பதை உறுதிப்படுத்துவதாக தலைநகர் வட்டாரங்கள் கூறுகின்றன.

சோனியாவுடன் அவரது தனிச் செயலர் அகமது பட்டேலும் பிரதமர் சந்திப்பி்ன்போது உடனிருந்துள்ளார். ஆயினும் இந்த சந்திப்பு பொதுவாக நடப்பதுதான் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் கூறியுள்ளன.

மத்திய அமைச்சரவையில் இருந்து திமுக-வைச் சேர்ந்த ஆ.இராசா (2ஜி ஊழல் குற்றச்சாற்று காரணமாக), பிரதமர் அலுவலக அமைச்சராகவும், அறிவியல் துறை அமைச்சராகவும் இருந்த பிரிதிவிராஜ் சவான், அயலுறவு துணை அமைச்சராக இருந்த சசி தரூர் ஆகியோர் விலகியுள்ளதால், இவர்கள் வகித்த பல அமைச்சக பொறுப்புகளை பிரதமர் உள்ளிட்ட மற்ற அமைச்சர்கள் வகித்து வருகின்றனர். குறிப்பாக சரத் பவார், கபில் சிபல் ஆகியோர் கூடுதல் அமைச்சக பொறுப்புகளை கவனித்து வருகின்றனர்.

எனவே, அமைச்சரவை மாற்றம் செய்ய வேண்டும் என்பதில் பிரதமர் முனைப்பாக உள்ளார் என்று கூறப்படுகிறது. அது மட்டுமின்றி, இந்த சந்தரபத்தை பயன்படுத்திக் கொண்டு இளம் இரத்தங்களை அமைச்சரவைக்குக் கொண்டு வர பிரதமர் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

திமுக -வைச் சேர்ந்த ஆ.இராசா பதவி விலகி விட்டதால், அக்கட்சிக்குறிய பங்காக ஏற்கனவே மத்திய அமைச்சராக இருந்த டி.ஆர்.பாலு சேர்க்கப்படுவார் என்று கூறப்படுகிறது.

அமைச்சரவை மாற்றம்? பிரதமருடன் சோனியா காந்தி சந்திப்பு

உணவுப் பணவீக்கம் குறித்து மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் மன்மோகன் சிங் இன்று ஆலோசனை நடத்த உள்ளார். 

வெங்காயம், பால் மற்றும் இறைச்சி போன்ற உணவுப் பொருட்களின் விலை உயர்வு காரணமாக டிசம்பர் 25 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் உணவுப் பணவீக்க விகிதம் 18.32 விழுக்காடாக உயர்ந்தது.

போதிய விநியோகம் இல்லாததால் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வெங்காயம் விலை அதிகரித்து வருகிறது. 

இந்நிலையில், உணவுப் பணவீக்க விகிதம் குறித்து விவாதிக்க பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில், மூத்த மத்திய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்துகொள்ளும் உயர்மட்ட ஆலோசனைக் குழுக் கூட்டம் இன்று நடைபெற உள்ளது.

இந்தக் கூட்டத்தில் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், உணவு மற்றும் வேளாண்துறை அமைச்சர் சரத்பவார் மற்றும் திட்டக் கமிஷன் துணைத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா உள்ளிட்டோர் கலந்துகொள்ள உள்ளனர்.

உணவுப் பணவீக்கம்: அமைச்சர்களுடன் பிரதமர் ஆலோசனை

சென்னை : ‘திமுக & காங்கிரஸ் இடையேயான உறவு எப்போதும் போல வலுவாக உள்ளது’ என்று சென்னையில் பிரதமர் மன்மோகன்சிங் கூறினார். பிரதமர் மன்மோகன் சிங் நேற்று முன்தினம் இரவு சென்னை வந்தார். கவர்னர் மாளிகையில் தங்கியிருந்த அவரை முதல்வர் கருணாநிதி சந்தித்து பேசுவதாக இருந்தது. அன்றைய தினம் இரவு கவிஞர் வைரமுத்து புத்தக வெளியீட்டு விழாவில் முதல்வர் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் முதல்வர் நீண்ட நேரம் பங்கேற்றதால் விழா மேடையில் போடப்பட்டு இருந்த பிரகாசமான மின் விளக்குகளால் முதல்வர் கண்ணில் நீர் வடிந்து லேசான பாதிப்பு ஏற்பட்டது. அதனால் முதல்வரால் பிரதமரை அன்றைய தினம் திட்டமிட்டவாறு இரவு சந்திக்க முடியாமல் போனது. பிரதமரை முதல்வர் கருணாநிதி நேற்று காலை சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கப்பட்டது. நேற்று காலையில் முதல்வர் கருணாநிதி அகர்வால் கண் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றார். பின்னர் முதல்வர் கருணாநிதி காலை 8.30 மணிக்கு கவர்னர் மாளிகை சென்றார். தலைமை செயலர் மாலதி, டி.ஆர்.பாலு எம்பி உடன் இருந்தனர். பிரதமர் மன்மோகன் சிங், முதல்வர் கருணாநிதியை வரவேற்று அழைத்துச் சென்றார். இருவரும் அரை மணி நேரம் பேசினர். சந்திப்பு முடிந்ததும் நிருபர்கள் கேட்ட கேள்விகளும் முதல்வர் கருணாநிதி அளித்த பதில்களும் வருமாறு: பிரதமரிடம் என்ன பேசினீர்கள்? தமிழகத்தில் ஏற்பட்ட பெரு மழை, வெள்ளம் பற்றி பேசினோம். மீண்டும் மழை வரக்கூடும் என்று சொல்லப்படுகிறது. தமிழகத்தில் நிவாரண பணிகளை மேற்கொண்டு நிவாரண நிதியை நாங்கள் வழங்கிக் கொண்டு இருக்கிறோம். மத்திய அரசு இதற்கு விரைவில் நிதி உதவி அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். நேற்று பிரதமரை பார்க்க நீங்கள் செல்லாததால் நகரில் பெரிய பரபரப்பு ஏற்பட்டதே?நேற்று நான் ஏற்கனவே ஒப்புக் கொண்ட ஒரு நிகழ்ச்சி இருந்தது. கவிஞர் வைரமுத்து நூல் வெளியீட்டு நிகழ்ச்சி. அதில் பலர் பேச வேண்டியிருந்தது. அதனால் தாமதமாகி விட்டது. சந்திக்க முடியவில்லை. இன்று சந்தித்தேன். பிரதமர் அடையாறு பூங்காவை திறந்து வைக்காதது வருத்தமாக இருக்கிறதா? வருத்தம் ஒன்றும் கிடையாது. பொருத்தமான காரணங்களைத் தானே சொல்லியிருக்கிறார்கள். காங்கிரஸ் & தி.மு.க. உறவு எப்படி இருக்கிறது? எனக்கும் உங்களுக்கும் இருக்கிற அளவு இருக்கிறது. இவ்வாறு கருணாநிதி கூறினார். அதன்பின், பிரதமர் மன்மோகன் சிங் நேற்று சென்னை அருகே நடந்த இந்திய அறிவியல் மாநாட்டில் கலந்து கொண்டார். பின் அவர் நிருபர்களிடம் முதல்வர் கருணாநிதியுடன் நடந்த சந்திப்பு பற்றி கூறும் போது, தமிழகத்திற்கு வெள்ள நிவாரணம் வழங்குவது, அடையாறு பூங்காவிற்கு சுற்றுசூழல் அமைச்சக அனுமதி மற்றும் கூட்டணி பற்றி முதல்வர் பேசியதாக குறிப்பிட்டார். தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி பற்றி கேட்டதற்கு இரு கட்சிகளுக்கிடையே வலுவான உறவு எப்போதும்போல் தொடருகிறது என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.

தி.மு.க. & காங்கிரஸ் இடையே கூட்டணி வலுவாக உள்ளது : பிரதமர் மன்மோகன்சிங்

மீனம்பாக்கம்: பிரதமர் மன்மோகன் சிங் காட்டாங்கொளத்தூர் எஸ்ஆர்எம் கல்லூரி நிகழ்ச்சி முடிந்ததும் ஹெலிகாப்டரில் 12.05 மணிக்கு மீனம்பாக்கம் பழைய விமான நிலையம் வந்தார். பின்னர் அங்கிருந்து 12.35 மணிக்கு தனி விமானத்தில் மன்மோகன் சிங் டெல்லி புறப்பட்டார். துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், அரசு தலைமை செயலாளர் மாலதி, டிஜிபி லத்திகா சரண், புறநகர் போலீஸ் கமிஷனர் ஜாங்கிட் மற்றும் ஆற்காடு வீராசாமி உள்பட தமிழக அமைச்சர்கள், காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, மற்றும் எம்பி, எம்எல்ஏக்கள் சால்வை கொடுத்து வழியனுப்பினர். மத்திய அமைச்சர் ப.சிதம்பரமும் அதே விமானத்தில் டெல்லி சென்றார்

டெல்லி சென்றார் பிரதமர்!

பிரதமர் மன்மோகன் சிங்கின் சென்னை பயணத்தில் எந்தவித மாற்றமும் இல்லை. அவர் திட்டமிட்டபடி, வரும் 3ம் தேதி சென்னை வருகிறார். சென்னையில் நடக்கும் இந்திய விஞ்ஞான காங்கிரஸ் கூட்டத்தில் கலந்து கொள்கிறார். சென்னையில் அவருடைய மற்ற நிகழ்ச்சிகள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை என, பிரதமர் அலுவலக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்திய விஞ்ஞான காங்கிரசில், கடந்த 50 ஆண்டுகளில் பிரதமர் ஜவகர்லால் நேரு முதல் அனைத்து பிரதமர்களும் கலந்து கொண்டுள்ளனர். அத்தகைய நிகழ்ச்சியில், அரசியல் கலப்பதை தவிர்க்க வேண்டுமென, அதிகார வட்டாரங்கள் தெரிவித்தன.முன்னாள் அமைச்சர் ராஜாவிடம் "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக மத்திய புலனாய்வு துறை விசாரணை செய்ய இருக்கும் நிலையில், காங்கிரஸ் - தி.மு.க.,வின் அரசியல் உறவுகள் ஸ்திரமற்ற நிலையில் இருப்பதாகவும், அந்த நிலையில் பிரதமர் மன்மோகன் சிங் சென்னை வருவதை தவிர்க்க வேண்டுமென, தமிழக காங்கிரஸ் தலைவர்கள் இளங்கோவன் உட்பட பல காங்கிரஸ் தலைவர்கள் சோனியாவிடம் வேண்டுகோள் வைத்தனர்.

டில்லியை அடுத்த புராரியில், காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய மாநாடு மூன்று நாட்களுக்கு முன் நடந்த போது, தமிழக காங்கிரஸ் தலைவர்கள் சோனியாவை சந்தித்தனர். அப்போது, பிரதமர் மன்மோகன் சிங் இப்போதுள்ள அரசியல் சூழ்நிலையில் சென்னைக்கு வராமல் இருக்குமாறு பார்த்து கொள்ள வேண்டும் என்று சோனியாவிடம் முறையிட்டனர்.
சோனியாவும் அவர்களுடைய கருத்தை பரிசீலிப்பதாக கூறினார்.

ஆனால், பிரதமர் அலுவலகமோ, பிரதமரின் சென்னை பயணத்தில் எந்தவித மாற்றமும் இல்லை என நேற்று தெரிவித்தது."2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழல் புகார் வெடித்ததில் இருந்து பிரதமர் மன்மோகன் சிங், தி.மு.க., மீது வைத்திருந்த நம்பிக்கை சற்று குறைந்துள்ளது. தி.மு.க.,வை நம்பி மத்திய அரசு இருக்கும் நிலையில் கூட, ராகுல் போன்ற தலைவர்கள் தி.மு.க.,வை மறைமுகமாக எதிர்த்து வந்துள்ளனர். அ.தி.மு.க., உறவை விரும்பாத சோனியாவும், வருகின்ற சட்டசபை தேர்தலில் தி.மு.க.,வுடன் உறவு வைத்து கொள்வதை இதுவரை ஆதரித்து வருகிறார்.இவ்வாறு காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

பிரதமர் சென்னை வருகையில் மாற்றம் இல்லை

""நான் ஓடி ஒளிவதாகவும், ஏதோ சில விஷயங்களை மறைக்க முற்படுவதாகவும் எதிர்க்கட்சிகள் என்மீது குற்றம் சாட்டுகின்றன. சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவளாக  இருக்க வேண்டும். எனவே, ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக பார்லிமென்ட் பொதுக்கணக்கு குழு முன் விசாரணைக்கு ஆஜராக தயாராக உள்ளேன். இது குறித்து விரைவில் அக்குழுவின் தலைவருக்கு கடிதம் எழுதவுள்ளேன்,'' என, பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தார்.

டில்லியை அடுத்த புராரியில் நடைபெற்ற அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டில், பிரதமர் மன்மோகன் சிங் நேற்று பேசியதாவது:ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில், தவறான பிரசாரத்தை பா.ஜ., மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக என் மீது கடும் விமர்சனம் வைக்கப்படுகிறது. இவ்விஷயத்தில் நான் ஓடி ஒளிவதாகவும், ஏதோ சில விஷயங்களை மறைக்க  முயற்சிப்பதாகவும் எதிர்க்கட்சிகள் என் மீது சந்தேகம் கிளப்புகின்றன மற்றும் குற்றம் சாட்டுகின்றன.இந்நாட்டின் பிரதமர் பதவியில் உள்ளேன். மக்களுக்கு பதில் கூற வேண்டிய கடமையும், பொறுப்பும் உள்ளது. சீசரின் மனைவி என்பவள் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவளாக இருந்தாக வேண்டும். ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து பார்லிமென்டின் பொதுக்கணக்கு குழு விசாரிக்க முடிவு செய்துள்ளது.அந்த குழு விரும்பினால், தேவைப்பட்டால், பிரதமர் பதவியில் உள்ள நானே அந்த குழு முன்பாக, எப்போது வேண்டுமானாலும் ஆஜராகி விளக்கம் அளிக்கத் தயார். எனது இந்த முடிவை, பொதுக்கணக்கு குழுவின் தலைவருக்கு தெரிவிக்க, முறைப்படி கடிதம் எழுதவுள்ளேன்.பார்லிமென்டில் கூச்சலும், குழப்பத்தையும் ஏற்படுத்தி முடக்குவதிலேயே எதிர்க்கட்சிகள் குறியாக உள்ளன.

ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தை பொறுத்தவரை, விசாரணை செய்ய முறையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தீவிரமான புலன் விசாரணை ஆரம்பமாகியுள்ளது.தப்பிக்க முடியாது: நாட்டு மக்கள் அனைவருக்கும் ஒரு ஒரே சத்தியத்தை இந்நேரத்தில் அளிக்க விரும்புகிறேன். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், தப்பிவிடாதபடி நடவடிக்கை எடுக்கப்படும். எந்த கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், சமூகத்தில் எத்தனை பெரிய அந்தஸ்தில் இருந்தாலும் அவர்கள் தப்பிக்க முடியாது. இதுதான் நடக்கப் போகிறது.ஊழல் குறித்த விஷயங்களை கையாளும்போது, இந்த அரசு சில தவறுகளை செய்திருக்கலாம். சில குறைகளும் இருந்திருக்கலாம். அவற்றையெல்லாம் நிவர்த்தி செய்ய அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும்.

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தின் அனைத்து விவரங்களையும் ஆராய சுப்ரீம் கோர்ட்டின் ஓய்வு பெற்ற நீதிபதியை நியமித்துள்ளோம்.சி.பி.ஐ., உள்ளிட்ட புலனாய்வு அமைப்புகளும் விசாரணையில் இறங்கியுள்ளன. அப்படியிருக்க ஏன் தேவை இல்லாமல் பார்லிமென்ட்  கூட்டுக்குழு அமைக்க வேண்டுமென எதிர்க்கட்சிகள் பிடிவாதம் பிடிக்கின்றன என்பது தெரியவில்லை.பார்லிமென்ட் ஜனநாயகத்தின் மீது எதிர்க்கட்சிகள் நம்பிக்கை இழந்துவிட்டால், அது மிகப்பெரிய ஆபத்தாக முடியும். தற்போது நாட்டில் நிலவும் பணவீக்கம் கவலையளிப்பதாக தெரிகிறது. இதை கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. இப்போது நாட்டின் பணவீக்கம் 7.5 சதவீதமாக உள்ளது. இது மேலும்  குறைந்து, வரும் மார்ச்சில் 5.5 சதவீதமாக குறையும் என்ற நம்பிக்கை உள்ளது.இவ்வாறு பிரதமர் பேசினார்.

தீர்மானத்தில் இலங்கை விவகாரம் : அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட வெளியுறவு சம்பந்தப்பட்ட தீர்மானத்தில் இலங்கை விஷயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதில், "இலங்கையில் போர் முடிந்துள்ள நிலையில் அங்கு நல்லதொரு அரசியல் தீர்வு எட்டப்படுவதற்கு உரிய அறிகுறிகள் தென்படுகின்றன. ஒன்றுபட்ட இலங்கைக்குள் அரசியல் தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும். அங்குள்ள சிங்கள, தமிழ் மற்றும் சிறுபான்மை இனங்கள் என, அனைத்து தரப்புமே சமமாக மதிக்கப்பட வேண்டும்' என கூறப்பட்டுள்ளது.

எப்போதும் இந்தியா தரப்பில் இலங்கை குறித்து தீர்மானம் நிறைவேற்றப்படும்போது, அதிலும் குறிப்பாக காங்கிரஸ் கட்சி தீர்மானம் நிறைவேற்றும்போது, வடக்கு கிழக்கை இணைக்கும் 13வது சட்டத் திருத்தத்தை வலியுறுத்தும் ராஜிவ் - ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தை நிறைவேற்ற வேண்டும் என கூறப்படுவதுண்டு.இப்போது அதுபோல அல்லாமல் வெறும் அரசியல் தீர்வு என்றே கூறப்பட்டுள்ளது. தவிர எப்போதுமே இலங்கை குறித்த தீர்மானம் என்றாலே, அதில் தமிழர்கள் பற்றியே இருக்கும். முதன்முறையாக சிங்களர்கள் குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளது.அதேபோல, வெளியுறவு குறித்து பிரதமர் நேற்று பேசும்போது, பாகிஸ்தான், சீனா உள்ளிட்ட அண்டை நாடுகள் குறித்து பேசினார். இலங்கை குறித்து பேசவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

பொதுக்கணக்கு குழு முன் விசாரணைக்கு ஆஜராக தயார் :பிரதமர் சவால்

புதுடில்லி : இந்தியா வந்துள்ள சீனப் பிரதமர் வென் ஜியாபோவுக்கு பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதால், காங்கிரஸ் தலைவர் சோனியா, பிரதமர் மன்மோகன் சிங் வீட்டிற்கு நடந்து சென்றார்.

சீனப் பிரதமர் வென் ஜியாபோ மூன்று நாள் அரசு முறை பயணமாக, நேற்று முன்தினம் இந்தியா வந்தார். அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, திபெத்தியர்கள் போராட்டம் நடத்தினர். இதனால், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், சீனப் பிரதமருக்கு, பிரதமர் மன்மோகன் சிங் தனிப்பட்ட முறையில் தனது வீட்டில் நேற்று முன்தினம் இரவு விருந்து அளித்தார். இதில், காங்கிரஸ் தலைவர் சோனியா, சபாநாயகர் மீரா குமார், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ், ராஜ்ய சபா எதிர்க்கட்சித் தலைவர் அருண் ஜெட்லி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் சீதாராம் யெச்சூரி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் உள்ளிட்ட சிலர் மட்டுமே அழைக்கப்பட்டிருந்தனர்.

வென் ஜியாபோவுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டிருந்ததால், பிரதமர் வீடு அமைந்துள்ள பகுதியில், வாகனங்கள் செல்ல முடியாதபடி, சாலைகள் அனைத்தும் மூடி சீல் வைக்கப்பட்டன. இதனால், சோனியா காரிலிருந்து இறங்கி, பிரதமர் வீட்டிற்கு அரை கி.மீ., தொலைவு நடந்து சென்றார்.

பாதுகாப்பு கெடுபிடி : பிரதமர் வீட்டிற்கு நடந்து சென்ற சோனியா

முக நூல்

Popular Posts