background img

புதிய வரவு

Showing posts with label Cricket-India. Show all posts

2007ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட்டின் முதல் போட்டியில் வங்கதேசத்திடம் தோற்றது போல் இந்த முறை வாய்ப்பேயில்லை. வங்கதேசத்தை வீழ்த்துவோம், இது எங்களுக்கு பழிதீர்க்கும் போட்டி என்று இந்திய துவக்க வீரர் விரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார்.

"வங்கதேசத்தின் ரசிகர்கள் 2007 உலகக் கோப்பை போட்டி போல் இந்த முறையும் இந்தியாவை வீழ்த்த எதிர்பார்ப்பு கொண்டிருப்பார்கள். ஆனால் நாங்கள் நல்ல தயாரிப்பில் உள்ளோம் வங்கதேசத்தை வீழ்த்துவோம். இது எங்களுக்கு பழிவாங்கும் போட்டி. இதனை நாங்கள் எளிதாக எடுத்துக் கொள்ள மாட்டோம்."

என்று கூறியுள்ளார் சேவாக்.

அதே போல் அணியில் வீரர்கள் காயமடைந்திருப்பது, ஃபார்ம் இல்லாதது பற்றி சேவாகிடம் கேட்டதற்கு "நான் இதைப்பற்றியெல்லாம் அதிகம் கவலைப்படுவதில்லை. சில வேளைகளில் நன்றாக விளையாடுகிறோம், சில வேளைகளில் சோடைபோகிறோம், நான் 2006-07இல் சரியாக விளையாடவில்லை. ஆனால் 2008,09,10ஆம் ஆண்டுகளில் மீண்டும் என்னுடைய ஆண்டாக அமைந்தது. ஒருநாள், டெஸ்ட் இரண்டிலும் ரன்கள் எடுத்தேன். இவையெல்லாம் ஒவ்வொரு வீரரின் வாழ்க்கையிலும் ஏற்படுவது சகஜம், இதைப்பற்றி கவலையில்லை.

இந்திய ரசிகர்கள் முன்னிலையில் இந்திய வீரர்கள் விளையாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது. குறிப்பாக நான் இதனை எதிர்நோக்குகிறேன். ஒவ்வொருவரும் பெரிய சதங்களை எடுப்பதில்லை. ஆனால் இப்போது உலகக் கோப்பை கிரிக்கெட்டில் அதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. எல்லோரும் ரன் குவிப்பார்கள் என்று நம்புகிறேன்.

இந்தியாவில் விளையாடுவதால் இங்குள்ள சூழ்நிலைகள் எங்களுக்கு அத்துப்படி, களங்கள் எவ்வாறு விளையாடும் என்பது எங்களுக்குத் தெரியும். இங்கிலாந்துடன் கடைசியாக முழுத் தொடரையும் வென்றோம், டெஸ்ட் தொடரில் இங்கு 2- 1 என்று வெற்றி பெற்றுள்ளோம்.

மேற்கிந்திய அணியில் கெய்ரன் போலர்ட், கிறிஸ் கெய்ல் ஆகியோர் உள்ளனர். இவர்களுக்கு மாடிவிட்டால் இந்தியா பாடு திண்டாட்டம்தான். ஆனால் நம்மிடம் சச்சின், கம்பீர், பத்தான், கோலி, யுவ்ராஜ், ரெய்னா, தோனி ஆகியோர் உள்ளனர். இந்த உலகக் கோப்பையில் யூசுப் பத்தானின் ஆட்டத்தைப் பார்க்க ஆவலாயிருக்கிறேன். அவருக்கு உலகக் கோப்பை இந்தியாவில் நடைபெறும் தருணம் சிறப்பான தருணமாகும்.

இது என்னுடைய 3-வது உலகக் கோப்பை நான் இரண்டில் விளையாடியுள்ளேன். இந்தியாவில் நடைபெறுவது குறித்து அனைத்து வீரர்களும் மகிழ்ச்சியாக உள்ளனர். அந்த நாள் எங்களுடையதாக இருந்தால் எந்த அணியையும் வீழ்த்துவோம்."

இவ்வாறு சேவாக் கூறியுள்ளார்.

2007 தோல்விக்கு பழி தீர்ப்போம் - சேவாக்

செ‌ன்னை‌: செ‌ன்னை‌யி‌ல் உலகக் கோ‌ப்பை ‌கி‌ரி‌க்கெ‌ட் போ‌ட்டி‌க்கான டி‌க்கெ‌ட் ‌வி‌ற்பனை நாளை முத‌ல் தொட‌ங்கு‌‌கிறது. ‌வரு‌கிற 20‌ம் தே‌தி மற்றும் மா‌ர்‌ச் 6, 17, 20 ஆ‌கிய தே‌திக‌ளி‌ல் சே‌ப்பா‌க்க‌‌த்‌தி‌ல் உ‌ள்ள எ‌ம்.‌சி.ஏ மைதான‌த்த‌ி‌ல் ‌உலக கோ‌ப்பை கி‌ரி‌க்கெ‌ட் போ‌ட்டி நடைபெறு‌கிறது. ரூ. 20 ஆ‌யிர‌ம் முத‌ல் ரூ. 500 வரை டி‌க்கெ‌ட் ‌வி‌ற்பனை செ‌ய்ய‌ப்படு‌‌கிறது. மேலும் த‌னிநப‌ர் ஒருவரு‌க்கு 2 டி‌க்கெ‌ட்டு‌க்கு மே‌ல் ‌‌‌கிடை‌க்காது எ‌ன்று‌ம் த‌‌மி‌ழ்நாடு ‌கி‌ரி‌க்கெ‌ட் ‌‌ச‌ங்க‌ம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

உலகக் கோ‌ப்பை ‌கி‌ரி‌க்கெ‌ட்: செ‌ன்னை‌யி‌ல் டி‌க்கெ‌ட் ‌வி‌ற்பனை நாளை முத‌ல் தொட‌க்கம்!

செ‌ன்னை‌: செ‌ன்னை‌யி‌ல் உலகக் கோ‌ப்பை ‌கி‌ரி‌க்கெ‌ட் போ‌ட்டி‌க்கான டி‌க்கெ‌ட் ‌வி‌ற்பனை நாளை முத‌ல் தொட‌ங்கு‌‌கிறது. ‌வரு‌கிற 20‌ம் தே‌தி மற்றும் மா‌ர்‌ச் 6, 17, 20 ஆ‌கிய தே‌திக‌ளி‌ல் சே‌ப்பா‌க்க‌‌த்‌தி‌ல் உ‌ள்ள எ‌ம்.‌சி.ஏ மைதான‌த்த‌ி‌ல் ‌உலக கோ‌ப்பை கி‌ரி‌க்கெ‌ட் போ‌ட்டி நடைபெறு‌கிறது. ரூ. 20 ஆ‌யிர‌ம் முத‌ல் ரூ. 500 வரை டி‌க்கெ‌ட் ‌வி‌ற்பனை செ‌ய்ய‌ப்படு‌‌கிறது. மேலும் த‌னிநப‌ர் ஒருவரு‌க்கு 2 டி‌க்கெ‌ட்டு‌க்கு மே‌ல் ‌‌‌கிடை‌க்காது எ‌ன்று‌ம் த‌‌மி‌ழ்நாடு ‌கி‌ரி‌க்கெ‌ட் ‌‌ச‌ங்க‌ம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் ஆட்டம் கொல்கத்தாவில் நடைபெறாது என்று சரத்பவார் தெரிவித்துள்ளார். இந்த ஆட்டத்தை பெங்களூருக்கு மாற்ற இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் வைத்த பரிசீலனையை ஐ.சி.சி. ஏற்றுக் கொண்டுள்ளது.

1 லட்சம் பேர் அமரும் வசதிகொண்ட கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் 4 ஆட்டங்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. போட்டிக்காக ஈடன்கார்டன் ஸ்டேடியம் புதுப்பிக்கும் பணி நடந்து வருகிறது. பணிகள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிவடையாததால், கொல்கத்தாவில் நடக்க இருந்த இந்தியா-இங்கிலாந்து (பிப்ரவரி 27-ந் தேதி) ஆட்டத்தை அங்கு நடத்த முடியாது என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) மைதானத்தை ஆய்வு செய்த பின்னர் அறிவித்தது.

ஐ.சி.சி.யின் இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் மூலமாக பெங்கால் கிரிக்கெட் சங்கம் கோரிக்கை விடுத்தது. அத்துடன் போட்டியை இழக்காமல் இருக்க மேற்குவங்காள அரசும் பகிரத முயற்சியில் இறங்கியது. ஐ.சி.சி.தலைவர் சரத்பவாரை தொடர்பு கொண்டு பலரும் வற்புறுத்தினார்கள்.

போட்டி அமைப்பு குழுவில் இடம்பெற்றுள்ள 8 உறுப்பினர்களும் முடிவை மறுபரிசீலனை செய்ய எதிர்ப்பு தெரிவித்ததால் சரத்பவார் பிரச்சினையில் இருந்து ஒதுங்கி கொண்டார். இதைத் தொடர்ந்து கொல்கத்தாவில் இந்தியா-இங்கிலாந்து ஆட்டம் நடைபெறாது என்ற முடிவை ஐ.சி.சி, இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு முறைப்படி தெரிவித்துள்ளது. ஐ.சி.சி.யின் முடிவை சரத்பவார், மேற்குவங்காள முதல்-மந்திரி புத்ததேவ் பட்டாச்சார்யாவுக்கு டெலிபோன் மூலம் தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளார்.

கொல்கத்தா மைதானத்தில் போட்டியை நடத்த எடுத்த முயற்சி கைகூடாமல் போனதால் பெங்கால் கிரிக்கெட் சங்கம் மட்டுமின்றி ரசிகர்களும் பெருத்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

ரத்து செய்யப்பட்ட கொல்கத்தா ஆட்டம் பெங்களூர் ஸ்டேடியத்தில் நடக்கிறது. இந்த ஆட்டத்தை பெங்களூரில் நடத்தலாம் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் அளித்த பரிந்துரையை ஐ..சி.சி. ஏற்றுக் கொண்டுள்ளது.

கொல்கட்டா ஆட்டம் பெங்களூருக்கு மாற்றம்

இந்தியாவை விட பாகிஸ்தானன்டம் அதிக அளவு அணு ஆயுதங்கள் உள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் தனது அணு ஆயுதங்களின் எண்ணிக்கையை இருமடங்காக அதிகரித்துவிட்டதாகவும், தற்போது அந்நாட்டிடம் 110 அணுஆயுதங்கள் இருப்பதாகவும் 'வாஷிங்டன் போஸ்ட்' பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

அறிவியல் மற்றும் சர்வதேச பாதுகாப்புக்கான மையத்தின் தலைவர் ஆல்பிரைட் இத்தகவலை தெரிவித்தாக அப்பத்திரிகை கூறியுள்ளது.

கடந்த நான்காண்டுகளுக்கு முன்னர் அந்நாட்டிடம் 30 முதல் 80 வரையிலான அணு ஆயுதங்கள் இருக்கலாம் என மதிப்பிடப்பட்டிருந்ததாகவும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பாகிஸ்தானின் இந்த அணுஆயுதங்கள் இந்தியாவின் முக்கிய நிலைகளை குறிவைத்து எல்லை நெடுகிலும் நிறுத்தப்பட்டு உள்ளதாகவும் அதில் மேலும் கூறப்பட்டுள்ளது

இந்தியாவை விட பாக்.கிடம் அதிக அணு ஆயுதங்கள்

பிப்ரவரி 19ஆம் தேதி துவங்கவுள்ள உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்திய வெற்றியில் சச்சின் டெண்டுல்கரின் பங்களிப்பு மிக முக்கியமானது என்று 1983ஆம் ஆண்டு உலகக் கோப்பை வென்ற 'கபில்ஸ் டெவில்ஸ்' அணியின் முன்னாள் மித வேகப்பந்து வீச்சாளர் பல்வீந்தர் சிங் சாந்து தெரிவித்துள்ளார்.

1983ஆம் ஆண்டு உலக சாம்பியனான கபில்தேவ் தலைமை இந்திய அணியைக் காட்டிலும் தற்போது மகேந்திர சிங் தலைமை இந்திய அணி அனுபவம், திறமை இரண்டிலும் சிறப்பாகவே உள்ளது.

மேலும் தோல்வி பெறும் நிலையிலிருந்து வெற்றிக்கு ஆட்டத்தைத் திருப்பும் யுவ்ராஜ், யூசுஃப் பத்தான், தோனி ஆகியோர் அணியில் இருக்கின்றனர்.

டெண்டுல்கர் தற்போது இந்த உலகக் கோப்பையை வெல்வதில்தான் தன் முழு கவனத்தையும் செலுத்துவார் என்று எதிர்பார்க்கலாம்.

அவர் நன்றாகத் தன்னைத் தயார் செய்து கொள்வார், அவர் எப்போதும் உழைப்பதில் வல்லவர். இவ்வாறு பல்வீந்தர் சிங் சாந்து கூறியுள்ளார்.

வெற்றிக்கு சச்சினின் பங்கு முக்கியமானது - சாந்து

கொல்கட்டாவில் உள்ள புகழ்பெ‌ற்ற ஈடன் கார்டன் மைதானத்தை புதுப்பிக்கும் பணிகளுக்கு வரும் பிப்.7 ஆம் தேதி வரை ஐ.சி.சி. காலக்கெடு கொடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் வரும் பிப்ரவரி 19 முதல் ஏப்ரல் 2ஆம் தேதி வரை இந்தியா, வங்கதேசம், இலங்கை ஆகிய 3 நாடுகளில் நடைபெறவுள்ளன.

இதில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் போட்டி பிப்.27ஆம் தேதி ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில், ஈடன் கார்டன் மைதானத்தை ஆய்வு செய்து ஐ.சி.சி. குழு, மைதானத்தை புதுப்பிக்கும் பணிகள் முடிவடையாததால், இந்தியா-இங்கிலாந்து போட்டி நடைபெறுவதற்கான சாத்தியம் இல்லை என்றும், வேறு மைதானத்தில் நடத்துவது குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் அறிவித்தது.

இந்நிலையில், ஐ.சி.சி. தலைவர் சரத் பவார் பிப்.7 ஆம் தேதி வரையிலான காலக்கெடு முடிவை ஏற்றுக்கொண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேற்கு வங்க மாநில பொதுப் பணித்துறை, குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் மைதான பணிகளை முடித்துத் தருவதற்கு உதவுவதாக பெங்கால் கிரிக்கெட் வாரியத்திற்கு உறுதி அளித்துள்ளதை அடுத்தே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

பெங்கால் கிரிக்கெட் வாரியத் தலைவர் ஜக்மோகன் டால்மியா, நேற்று மேற்கு வங்க பொதுப்பணித் துறையிடம் மைதானப் பணிகளை முடித்துத் தரும்படி உதவி கோரியதாகவும், அதனையடுத்து பொறியாளர் குழு ஒன்று இன்று மைதானக் கட்டுமானப் பணிகளை பார்வையிடச் செல்லவுள்ளதாகவும் பொதுப்பணித்துறை அமைச்சர் கோஸ்வாமி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

ஈடன் கார்டன்: பிப்.7 வரை காலக்கெடு - ஐ.‌சி.‌சி.

இந்த உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா சாம்பியனாக யுவ்ராஜ் சிங், யூசுப் பத்தான் ஆகியோரது ஆட்டம் மிக முக்கிய மானது என்று முன்னாள் வீரர் வெங்சர்க்கார் கூறியுள்ளார்.

மகேந்திர சிங் தலைமை இந்திய அணி இறுதி வரை முன்னேறி கோப்பையை வெல்லும் திறமை படைத்ததுதான் என்று கூறியுள்ள வெங்சர்க்கார் 1983 அணியை விட இதில் திறமைகள் அதிகம் உள்ளது என்றார்.

சொந்த நாட்டில் நடப்பதாலும் கடந்த 4 ஆண்டுகளாக உலகின் தலை சிறந்த அணியாக விளங்குவதாலும் இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என்றார் வெங்சர்க்கார்.

1987ஆம் ஆண்டும் இதே போன்ற ஒரு அணிச் சேர்க்கை அமைந்தது. ஆனால் அரையிறுதி வரையே முன்னேற முடிந்தது என்றார் அவர்.

யுவ்ராஜ், பத்தான் ஆட்டம் முக்கியம்- வெங்சர்க்கார்

செஞ்சுரியன்; ""தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் அதிரடியில் மிரட்டி, அசத்தலான சதம் விளாசிய, இந்தியாவின் யூசுப் பதானை கட்டுப்படுத்துவது கடினம்,'' என்கிறார் தென் ஆப்ரிக்க அணியின் பயிற்சியாளர் வான் ஜில்.
தென் ஆப்ரிக்கா சென்ற இந்திய அணி ஒருநாள் தொடரை இழந்தது. செஞ்சுரியனில் நடந்த கடைசி ஒருநாள் போட்டியில், 8 விக்கெட்டுக்கு 118 ரன்கள் என, இந்தியா தடுமாறிய நிலையில் எழுச்சி கண்ட யூசுப் பதான், அதிரடியாக சதம் விளாசி அணியை வெற்றிக்கு அருகில் கொண்டு சென்றார். இதுகுறித்து தென் ஆப்ரிக்க பயிற்சியாளர் வான் ஜில் கூறியது:
இந்தியாவுக்கு எதிரான தொடரில், "பவுன்சர்கள்' முக்கிய பங்கு வகிக்கும் என்று நினைத்தோம். டெஸ்ட் தொடரில் இந்திய வீரர்கள் இதை அருமையாக சமாளித்தனர். ஆனால் ஒருநாள் தொடரில் சொதப்பினர். இதனால் தான் மார்கல், டிசோட்சபே இருவரும் இந்திய அணியின் "டாப் ஆர்டரை' தகர்த்து, அதிக விக்கெட் வீழ்த்த முடிந்தது.
துணிச்சல் போராட்டம்:
இந்த டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் இருந்து அதிக பாடம் கற்றுள்ளோம். நாங்கள் செய்த தவறுகளால் 1-2 என பின்தங்கி, பிறகு தொடரை வென்றோம். இந்தியா டெஸ்ட் தரவரிசையில் "நம்பர்-1' இடத்தில் உள்ள அணி. இந்நிலையில் அவர்களிடம் இருந்து, அதிக போராட்டத்தை நாங்கள் எதிர்பார்க்க வில்லை என்பது மிகவும் கேலிக்கூத்தானது.
இதை ஏற்கனவே எதிர்பார்த்து தான் இருந்தோம். ஆனால், எதிர்பார்ப்பை விட சற்று கூடுதலாகவே, போராட்டம் இருந்தது. இந்திய வீரர்கள் ஒருங்கிணைந்து, கடைசி வரை துணிச்சலாக போராடினர். இருப்பினும் தொடரை வென்றது, உலக கோப்பை தொடரை உற்சாகமாக துவக்க உதவும்.
கட்டுப்படுத்த முடியாது:
இந்தியாவின் யூசுப் பதான் அதிரடியான வீரர். செஞ்சுரியன் போட்டியில் இவரும், ஜாகிர் கானும் இணைந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இவரது சில "ஷாட்டுகள்' நம்பமுடியாத வகையில் இருந்தது. இந்தியா 8 விக்கெட்டுகளை இழந்த நிலையில், தோல்வி உறுதியாகி இருந்தது. ஆனால் யூசுப் பதான் போட்டியை எங்களிடம் இருந்து கொண்டு செல்ல இருந்தார். நல்லவேளையாக மார்கல் கைகொடுத்தார். உலக கோப்பை தொடரில் யூசுப் பதானை கட்டுப்படுத்துவது என்பது மிகவும் கடினம்.
மாறும் ஆடுகளங்கள்:
 உலக கோப்பை வெல்லும் அணிகளில் முதலிடத்தில் இருப்பது இந்தியா தான். ஏனெனில், சொந்த மண்ணில் இந்தியாவை வீழ்த்துவது என்பது கடினமான காரியம். இரண்டாவதாக இலங்கையை குறிப்பிடலாம். அடுத்து, சமீபகாலமாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இங்கிலாந்து அணியும் போட்டியில் உள்ளது. இந்தியாவில் ஆடுகளங்கள் நிலையில்லாத தன்மை கொண்டவை. ஒருநாள் போட்டிகளின் போது, திடீரென மாறும் இயல்புள்ளது. அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் எப்படி செயல்படுகின்றனர் என்பதைப் பொறுத்து, உலக கோப்பை தொடரின் வெற்றி அமையும்.
இவ்வாறு வான் ஜில் கூறினார்.

யூசுப் பதானை கட்டுப்படுத்துவது கடினம் *ஒப்புக்கொள்கிறார் தென் ஆப்ரிக்கா பயிற்சியாளர்

போர்ட் எலிசபெத்: இந்தியா, தென் ஆப்ரிக்கா அணிகள் மோதும் நான்காவது ஒருநாள் போட்டி இன்று நடக்கிறது. இதில் இந்திய அணி வெற்றி பெறும் பட்சத்தில், தென் ஆப்ரிக்க மண்ணில் முதல் முறையாக ஒருநாள் தொடரை கைப்பற்றி, வரலாறு படைக்கலாம்.
தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் மூன்று போட்டிகளின் முடிவில் இந்திய அணி 2-1 என தொடரில் முன்னிலை வகிக்கிறது. நான்காவது போட்டி, போர்ட் எலிசபெத் நகரில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பார்க் மைதானத்தில், பகலிரவு ஆட்டமாக இன்று நடக்கிறது.
பார்த்திவ் வாய்ப்பு:
முதல் போட்டியில் தோல்வி அடைந்த இந்திய அணி, அடுத்த இரண்டு போட்டிகளில் எழுச்சி கண்டது. ஆனாலும், சச்சின், சேவக், காம்பிர் இல்லாத நிலையில், அணியின் துவக்கம் பலவீனமாக உள்ளது. தமிழக வீரர் முரளி விஜய் தொடர்ந்து சொதப்புகிறார். இதையடுத்து இன்று துவக்க வீரராக பார்த்திவ் படேல் களமிறக்கப்படலாம். இளம் வீரர் விராத் கோஹ்லி நம்பிக்கை அளிக்கிறார். "மிடில்-ஆர்டரில்' சுரேஷ் ரெய்னா, யுவராஜ் சிங், கேப்டன் தோனி உள்ளிட்டோர் அதிக ரன் சேர்க்க வேண்டும்.
யூசுப் அதிரடி:
யூசுப் பதான், இக்கட்டான நிலையில் சிறப்பாக விளையாடுகிறார். கடந்த போட்டியில் வெற்றிக்கு வித்திட்ட இவரது அதிரடி ஆட்டம், இன்றும் தொடரலாம். ஹர்பஜன் சிங், "ஆல்-ரவுண்டராக' சாதிப்பது, பேட்டிங் பலத்தை அதிகரிக்கிறது.
முனாப் முன்னேற்றம்:
இத்தொடரில் இந்திய அணியின் பந்துவீச்சு நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது. முனாப் படேல், ஜாகிர் கான் உள்ளிட்ட வேகப்பந்துவீச்சாளர்கள் துல்லியமாக பந்துவீசி எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுக்கின்றனர். "சுழலில்' ஹர்பஜன் அசத்துகிறார்.
ஆம்லா ஏமாற்றம்:
தென் ஆப்ரிக்க அணிக்கு துவக்க வீரர் ஆம்லா ஏமாற்றம் அளித்து வருவது பின்னடைவான விஷயம். கேப்டன் ஸ்மித், பேட்டிங்கில் நம்பிக்கை அளிக்கிறார். காயம் காரணமாக "ஆல்-ரவுண்டர்' காலிஸ் இல்லாதது பாதிப்பை ஏற்படுத்துகிறது. டிவிலியர்ஸ், டுமினி உள்ளிட்டோர் சோபிக்க தவறுகின்றனர்.
மிரட்டல் வேகம்:
தென் ஆப்ரிக்க அணியின் பலம் வேகப்பந்துவீச்சாளர்கள் தான். ஸ்டைன், மார்கல், டிசோட்சபே அடங்கிய மூவர் கூட்டணி, இந்திய பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி அளிக்கிறது. டுமினி, போத்தாவின் "சுழல்' இதுவரை எடுபடவில்லை.
தொடரை கைப்பற்ற இந்தியாவும், சொந்த மண்ணில் சாதிக்க தென் ஆப்ரிக்காவும் தயாராக இருப்பதால், ரசிகர்கள் மீண்டும் ஒரு முறை ஆக்ரோஷமான மோதலை எதிர்பார்க்கலாம்.

முதன்முறை
ஒருநாள் தொடரில் பங்கேற்க இந்திய அணி இரண்டு முறை (1992/93, 2006/07) தென் ஆப்ரிக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டது. இதில் இரண்டு முறையும் தென் ஆப்ரிக்க அணி தொடரை கைப்பற்றியது. இன்றைய போட்டியில் இந்திய அணி வெற்றி பெறும் பட்சத்தில், தென் ஆப்ரிக்க மண்ணில் முதன்முறையாக ஒருநாள் தொடரை கைப்பற்றி புதிய வரலாறு படைக்கலாம்.
இம்மைதானத்தில் இதுவரை
போர்ட் எலிசபெத் நகரில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பார்க் மைதானத்தில், இந்திய-தென் ஆப்ரிக்க அணிகள் 3 முறை (1992, 1997, 2006) ஒருநாள் போட்டியில் மோதியுள்ளன. இதில் ஒரு போட்டியில் கூட இந்திய அணி வெற்றி பெறவில்லை. கடந்த 2001ம் ஆண்டு, கென்யா அணிக்கு எதிராக இங்கு நடந்த முத்தரப்பு ஒருநாள் போட்டியில், இந்திய அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
* இங்கு இந்திய அணியின் அதிகபட்ச ஸ்கோர் 9 விக்கெட்டுக்கு 179 ரன்கள் (1997, எதிர்-தென் ஆப்ரிக்கா). தென் ஆப்ரிக்க அணியின் அதிகபட்ச ஸ்கோர் 3 விக்கெட்டுக்கு 326 ரன்கள் (2002, எதிர்-ஆஸி.,). இந்தியாவுக்கு எதிராக தென் ஆப்ரிக்க அணியின் அதிகபட்ச ஸ்கோர், 8 விக்கெட்டுக்கு 243 ரன்கள் (2006).
நெருக்கடி இல்லை: ஸ்மித்
தென் ஆப்ரிக்க கேப்டன் ஸ்மித் கூறுகையில், ""கடந்த போட்டிகளில், உலக கோப்பை தொடரில் இடம் பிடிக்க சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில், எங்கள் அணி வீரர்கள் சோபிக்கத்தவறினர் என நினைக்கிறேன். தற்போது அணி அறிவிக்கப்பட்டதால், அடுத்து வரும் இரண்டு போட்டியிலும் எவ்வித நெருக்கடி இல்லாமல் விளையாடலாம். இதன்மூலம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தொடரை கைப்பற்றுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. எந்த ஒரு விளையாட்டாக இருந்தாலும் தோல்வியை ஏற்றுக் கொள்ள முடியாது. இருப்பினும் இத்தோல்வியில் இருந்து பாடம் கற்றுக் கொண்டுள்ளோம்,'' என்றார்.

வரலாறு படைக்குமா இந்தியா!: இன்று தென் ஆப்ரிக்காவுடன் 4வது மோதல்

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று காலை பிரதமர் மன்மோகன் சிங்கை அவரது இல்லத்திற்கு வந்து சந்தித்துப் பேசியது, மத்திய அமைச்சரவையில் மாற்றம் நடைபெறவுள்ளது என்ற செய்திகளுக்கு வலு சேர்த்துள்ளது.

குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலை நேற்று பிரதமர் மன்மோகன் சிங் சந்தித்துப் பேசினார். இதனைத் தொடர்ந்து இன்று காலை நடந்துள்ள பிரதமர் - சோனியா சந்திப்பு, இந்த வார இறுதியிலேயே அமைச்சரவை மாற்றம் செய்யப்படும் என்பதை உறுதிப்படுத்துவதாக தலைநகர் வட்டாரங்கள் கூறுகின்றன.

சோனியாவுடன் அவரது தனிச் செயலர் அகமது பட்டேலும் பிரதமர் சந்திப்பி்ன்போது உடனிருந்துள்ளார். ஆயினும் இந்த சந்திப்பு பொதுவாக நடப்பதுதான் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் கூறியுள்ளன.

மத்திய அமைச்சரவையில் இருந்து திமுக-வைச் சேர்ந்த ஆ.இராசா (2ஜி ஊழல் குற்றச்சாற்று காரணமாக), பிரதமர் அலுவலக அமைச்சராகவும், அறிவியல் துறை அமைச்சராகவும் இருந்த பிரிதிவிராஜ் சவான், அயலுறவு துணை அமைச்சராக இருந்த சசி தரூர் ஆகியோர் விலகியுள்ளதால், இவர்கள் வகித்த பல அமைச்சக பொறுப்புகளை பிரதமர் உள்ளிட்ட மற்ற அமைச்சர்கள் வகித்து வருகின்றனர். குறிப்பாக சரத் பவார், கபில் சிபல் ஆகியோர் கூடுதல் அமைச்சக பொறுப்புகளை கவனித்து வருகின்றனர்.

எனவே, அமைச்சரவை மாற்றம் செய்ய வேண்டும் என்பதில் பிரதமர் முனைப்பாக உள்ளார் என்று கூறப்படுகிறது. அது மட்டுமின்றி, இந்த சந்தரபத்தை பயன்படுத்திக் கொண்டு இளம் இரத்தங்களை அமைச்சரவைக்குக் கொண்டு வர பிரதமர் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

திமுக -வைச் சேர்ந்த ஆ.இராசா பதவி விலகி விட்டதால், அக்கட்சிக்குறிய பங்காக ஏற்கனவே மத்திய அமைச்சராக இருந்த டி.ஆர்.பாலு சேர்க்கப்படுவார் என்று கூறப்படுகிறது.

அமைச்சரவை மாற்றம்? பிரதமருடன் சோனியா காந்தி சந்திப்பு

புதுடெல்லி: பிரைஸ்வாட்டர்ஹவுஸ்கூப்பர், ‘தி வேர்ல்டு இன் 2050’ என்ற தலைப்பில் ஒரு ஆய்வு நடத்தியது. அதன் விவரம்: ஒரு நாட்டின் பொருளாதாரம், அந்நாட்டு மக்களின் வாங்கும் சக்தியை அடிப்படையாகக் கொண்டு நிர்ணயிக்கப்படுகிறது. அந்த வகையில், 2009ம் ஆண்டில் இந்தியா 4ம் இடத்தில் இருந்தது.

வேலைக்கு செல்லும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் 2050ம் ஆண்டில் வாங்கும் சக்தியில் 2ம் இடத்தைப் பிடிக்கும். இதன்மூலம் பொருளாதாரத்தில் அமெரிக் காவை பின்னுக்குத் தள்ளி இந்தியா 2ம் இடத்தை பிடிக்கும். பொருளாதாரத்தில் இப்போது முதலிடத்தில் உள்ள அமெரிக்காவை 2020ம் ஆண்டுக்குள் சீனா முந்திவிடும்.

சீனாவின் ஒரு குழந்தை திட்டத்தால் இந்தியாவில் இளைஞர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எனவே, 2050ம் ஆண்டுக்குப் பிறகு சீனாவையும் பின்னுக்குத் தள்ளி இந்தியா முதலிடத்தைப் பிடிக்க வாய்ப்பு உள்ளது.

2050ல் இந்திய பொருளாதாரம் 2ம் இடத்தை பிடிக்கும்: அமெரிக்கா பின்தங்கும்

டோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.   இரு அணிகள் இடையே யான 3 டெஸ்ட் கொண்ட தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது.
 
செஞ்சூரியனில் நடந்த முதல் டெஸ்டில் தென்ஆப்பிரிக்கா இன்னிங்ஸ் மற்றும் 24 ரன்னிலும், டர்பனில் நடந்த 2-வது டெஸ்டில் இந்தியா 87 ரன்னிலும் வெற்றி பெற்றன. கேப்டவுனில் நடந்த 3-வது டெஸ்ட் “டிரா” ஆனது. இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையே ஒரே ஒரு 20 ஓவர் போட்டி நடத்தப்படுகிறது.
 
இந்தப் போட்டி டர்பனில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.   தென்ஆப்பிரிக்கா கேப்டன் சுமித் காயம் அடைந்து உள்ளதால் நாளை விளையாட மாட்டார் என தெரிகிறது.போத்தா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். தெண்டுல்கர் ஐ.பி.எல். போட்டியில் மட்டுமே 20 ஓவர் ஆட்டத்தில் விளையாடி வருகிறார்.
 
இதனால் அவர் ஆடமாட்டார். இரு அணிகளும் 20 ஓவர் போட்டியில் இதுவரை 4 முறை மோதியுள்ளன. இதில் இந்தியா 3 ஆட்டத்தில் வெற்றி பெற்றது. தென்ஆப்பிரிக்கா 1 ஆட்டத்தில் வெற்றி பெற்றது.   இந்தப் போட்டி இந்திய நேரப்படி மாலை 6 மணிக்கு நடக்கிறது.
 
டென் கிரிக்கெட் சேனலில் இந்தப் போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இரு அணி வீரர்கள் வருமாறு:-
 
இந்தியா: டோனி (கேப்டன்), ஷேவாக், காம்பீர், வீராட் கோக்லி, ரெய்னா, யுவராஜ்சிங், யூசுப்பதான், ஹர்பஜன்சிங், ஜாகீர்கான், நெக்ரா, ஸ்ரீசாந்த், முனாப் பட்டேல், தெண்டுல்கர், அஸ்வின், பியூஸ் சாவ்லா, பிரவீண்குமார்.
 
தென்ஆப்பிரிக்கா: போத்தா (கேப்டன்), அம்லா, டிவில்லியர்ஸ், டுமினி, கோலின் இங்ராம், மில்லர், பீட்டர்சன், நிதினி, பர்னல், தெரான், டிசோட்சோபே

20 ஓவர் கிரிக்கெட்: இந்தியா - தென்ஆப்பிரிக்கா நாளை பலப்பரீட்சை