background img

புதிய வரவு

Showing posts with label Osama Bin Laden. Show all posts

உலகை அச்சுறுத்தி வந்த அல்கொய்தா தீவிரவாத இயக்கத்தலைவர் ஒசாமா பின்லேடன் கடந்த 2-ந்தேதி பாகிஸ்தான் அபோதாபாத்தில் அமெரிக்க படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். அப்போது அவர் தங்கியிருந்த வீட்டில் அமெரிக்கா உளவுத்துறை நடத்திய சோதனையில் சில முக்கிய ஆவணங்கள் சிக்கின.

அதில், பின்லேடன் தீட்டி இருந்த சதி திட்டம் பற்றிய பல அதிர்ச்சிகள் இருந்தன. அதில், இந்திய பெருங்கடல், அரபிக்கடல் மற்றும் அட்லாண்டிக்கடல் பகுதியில் செல்லும் எண்ணை கப்பல்களை கடத்தி அவற்றை தகர்க்க அல்கொய்தா திட்டமிட்டிருந்தது. அதற்கான மிகப்பெரிய சதி திட்டத்தை பின்லேடன் தயாரித்து இருந்தார்.

இதை கடந்த ஆண்டு கோடை காலத்தில் செயல்படுத்த திட்டமிட்டிருந்தார்.இதன் மூலம் உலகம் முழுவதும் கச்சா எண்ணை விலை தாறுமாறாக உயரும். இதனால் உலக பொருளாதாரம் சீரழிந்து பெருமளவில் பாதிப்பு ஏற்படும் என பின்லேடன் கருதினார். ஆனால், கப்பல்களை தகர்க்கும் கடல் பகுதிகளில் முஸ்லிம்கள் அதிகம் வாழ்வதால் பெருமளவில் பாதிப்பு ஏற்படும் என கருதி அதற்கு மறுத்து விட்டார். அல்கொய்தா தீவிரவாதிகள் மறுத்து விட்டனர். அதனால் இந்த திட்டம் கைவிடப்பட்டது.

இவ்வாறு அந்த ஆவணத்தில் கூறப்பட்டுள்ளது. இத்தகவலை அமெரிக்கா உளவு நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலக பொருளாதாரத்தை சீர்குலைக்க எண்ணை கப்பல்களை தகர்க்க பின்லேடன் திட்டம் தீட்டியிருந்தார்; அமெரிக்கா தகவல்

கெய்ரோ:ஒசாமா பின்லாடனின் பேச்சு அடங்கிய ஆடியோவை, அல்-குவைதா அமைப்பு வெளியிட்டுள்ளது.அல்-குவைதா அமைப்பின் தலைவரும், சர்வதேச பயங்கரவாதியுமான ஒசாமா பின்லாடன், கடந்த 2ம் தேதி, பாகிஸ்தானில், அமெரிக்க அதிரடி படையால் கொல்லப்பட்டார்.அவர் கொல்லப்படுவதற்கு, சில வாரங்களுக்கு முன்பாக பேசிய அவரது, 13 நிமிட உரை அடங்கிய ஆடியோவை, அல்-குவைதா அமைப்பு வெளியிட்டுள்ளது. இது, பெரும்பாலான அரேபிய இணையதளங்களில் வெளியாகியுள்ளது.இந்த ஆடியோவில் ஒசாமா குறிப்பிடுகையில், "வட ஆப்ரிக்காவின் மக்ரெப் பகுதியில் துவங்கிய புரட்சி தீ, துனிசியா, எகிப்து என பரவி வருகிறது. இது, பாராட்டுக்குரியது. மக்களின் ஒடுக்கப்பட்ட உணர்வுகள், தாமதமாக கிளர்தெழுந்ததால் தான் இந்த புரட்சி உருவாகியுள்ளது. இறைவன் அருளால் இந்த புரட்சி உலகம் முழுவதும் பரவும்' என தெரிவித்துள்ளார்.

ஒசாமா ஆடியோ வெளியீடு

மும்பை : மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் தேடப்படும் முக்கிய குற்றவாளி தாவூத் இப்ராகிம், பாகிஸ்தானில் இருந்து சவுதி அரேபியாவுக்கு தப்பியோடி விட்டான். அல் கய்தா தீவிரவாத இயக்க தலைவன் ஒசாமா பின்லேடன் சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து, பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ, தாவூத்தை பாதுகாப்பாக அனுப்பி வைத்த தகவல் வெளியாகி உள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் மும்பையின் பல இடங்களில் கடந்த 1993ம் ஆண்டு பயங்கர வெடிகுண்டுகள் வெடித்தன. இதில் பலர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயம் அடைந்தனர். இந்த தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் தேடப்பட்டு வரும் முக்கிய குற்றவாளி தாவூத் இப்ராகிம். மும்பையில் சதி திட்டத்தை நிறைவேற்றிய பின், இவன் தனது குடும்பத்துடன் பாகிஸ்தானுக்கு தப்பி விட்டான்.

அங்கு கராச்சி நகரில் அந்நாட்டு உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யின் பாதுகாப்பில் வசித்து வந்தான். ‘பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வரும் குற்றவாளியான தாவூத் இப்ராகிமை ஒப்படைக்க வேண்டும்‘ என்று மத்திய அரசு பலமுறை பாகிஸ்தானிடம் வலியுறுத்தியுள்ளது. அதற்கான ஆதாரங்களையும் அந்நாட்டுக்கு மத்திய அரசு அளித்தது. ஆனால், தாவூத் தங்களது நாட்டில் இல்லை என்று பாகிஸ்தான் அரசு மறுத்து வருகிறது.

போதைப் பொருள் கடத்தல், கூலிக்கு கொலை செய்தல் போன்ற வழக்குகளில் சர்வதேச போலீசாராலும் தாவூத் தேடப்பட்டு வருகிறான். இவன் தனது குடும்பத்துடன் கராச்சி நகரில் கிளிப்டன் பகுதியில் சவுதி மசூதி அருகே சொகுசு மாளிகையில் வசித்து வந்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தன.

இந்த நிலையில், சர்வதேச தீவிரவாதி பின்லேடன் சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து சவூதி அரேபியாவுக்கு மே 1ம் தேதி இரவு தாவூத் தனது நெருங்கிய கூட்டாளி சோட்டா ஷகீலுடன் தப்பிவிட்டதாகவும், அதற்கு ஐ.எஸ்.ஐ. முழு ஏற்பாடு செய்ததாகவும் புலனாய்வுத் துறை வட்டாரங்கள் கூறுகின்றன.

தேடப்படும் 2வது குற்றவாளி

சர்வதேச அளவில் இரண்டாவது முக்கிய தீவிரவாதி தாவூத் இப்ராகிம். 2ம் இடத்துக்கு முன்னேறியுள்ளான். இதுவரை பின்லேடன், மெக்சிகோ போதைக் கடத்தல் மன்னன் சினாலோ ஆகியோருக்கு அடுத்ததாக 3ம் இடத்தில் தாவூத் பெயர் இருந்தது. பின்லேடன் பலியாகி விட்ட நிலையில், தாவூத் 2வது இடத்துக்கு வந்துள்ளான்.

25 பேர் பட்டியல்

இந்தியாவில் நாசவேலைகளில் ஈடுபட்ட டைகர் மேமன், ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதி மசூத் அசார், ஜமாத் உத் தவா தலைவன் ஹபிஸ் சயீத் ஆகியோர் உட்பட 25 தீவிரவாதிகளை ஒப்படைக்க வேண்டுமென்று கடந்த 4ம் தேதி பாகிஸ்தானுக்கு இந்தியா கடிதம் அனுப்பியது. அந்த கடிதத்தில் தாவூத் பெயரும் இடம்பெற்றுள்ளது.

பின்லேடன் கொல்லப்பட்டதை அடுத்து சவுதிக்கு தாவூத் தப்பியோட்டம்

வாஷிங்டன்: பாகிஸ்தானில் கொல்லப்பட்ட ஒசாமா பின் லேடனின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட திசுவிலிருந்த டிஎன்ஏவை, இறந்து போன அவரது சகோதரியின் மூளை திசுவிலிருந்து எடுத்த டிஎன்ஏவுடன் ஒப்பிட்டுப் பார்த்து, அது பின் லேடன் தான் என்ற முடிவுக்கு வந்துள்ளது சிஐஏ.

நியூயார்க்கில் விமானத் தாக்குதல் நடந்தவுடன் அமெரிக்காவின் சிஐஏ உளவுப் பிரிவு உலகம் முழுதும் வசித்து வரும் பின்லேடனின் குடும்ப உறுப்பினர்களை பட்டியல் எடுத்து, அவர்களில் பெரும்பாலானவர்களின் ரத்த மாதிரியையும் திசுக்களையும் எடுத்து டிஎன்ஏ 'சிக்னேச்சரையும்' பதிவு செய்து வைத்துவிட்டது.

வழக்கமாக ஒரு நபரின் டிஎன்ஏ அவரது பெற்றோர் அல்லது குழந்தையின் டிஎன்ஏவோடு 50 சதவீதம் தான் ஒத்து இருக்கும். இன்னொரு 50 சதவீத டிஎன்ஏ அவருக்கே உரிய தனித்துவத்துடன் இருக்கும்.

இதனால் டிஎன்ஏ மேட்சிங் செய்யும்போது ஏற்படும் குறையைக் கலைய, பெற்றோர், குழந்தைகள் மற்றும் நெருங்கிய உறவுகளின் டிஎன்ஏக்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கப்படும். இதன்மூலம் குறையை (error) கலைய முடியும்.

இதற்காக கடந்த 10 ஆண்டுகளாகவே பின்லேடனின் பல உறவினர்களிடமும் சிஐஏ டிஎன்ஏ மாதிரிகளை சேகரித்து வந்தது.

ஆனால், பின்லேடனுக்கு உடன் பிறந்த சகோதர சகோதரிகள் இல்லை. அவரது சகோதரர்கள், சகோதரிகள் அனைவருமே ஒன்றுவிட்ட சகோதரிகள் அல்லது சகோதரர்கள் தான் (siblings). இவர்களில் பெரும்பாலானவர்கள், பின்லேடன் தீவிரவாதப் பாதைக்குத் திரும்பியவுடனேயே அவருடனான தொடர்பை துண்டித்துக் கொண்டவர்கள்.

இதில் ஒரு சகோதரி அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் வசித்து வந்தார். புற்று நோயால் பாதிக்கப்பட்ட அவர் மசாசூசெட்ஸ் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பலியானவுடன், அமெரிக்க அதிகாரிகள் நீதிமன்ற உதவியோடு, அந்தப் பெண்ணின் மூளையில் இருந்து திசுக்களில் இருந்து டிஎன்ஏ மாதிரியை எடுத்து வைத்திருந்தனர்.

பின்லேடன் கொல்லப்பட்டவுடன், அவரது உடலிருந்து எடுக்கப்பட்ட டிஎன்ஏவை அவரது இந்த உறவினர்களின் உடலிலிருந்து எடுக்கப்பட்ட டிஎன்ஏவோடு ஒப்பிட்டபோது 99.9 சதவீதம் இது பின்லேடன் என்று உறுதிப்படுத்தப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இது தவிர பாகிஸ்தானில் பிடிபட்ட பின்லேடனின் இரு மனைவிகளிடமும் அவரது உடலை அமெரிக்கப் படையினர் காட்டி, அது பின்லேடன் தான் என்று உறுதி செய்ததாகவும் கூறப்படுகிறது.

வழக்கமாக டிஎன்ஏ மேட்சிங் செய்ய 14 நாட்கள் வரை ஆகும். ஆனால், கடந்த ஆண்டு அரிசோனா பல்கலைக்கழகத்தின் நுண்ணியிரியல் பிரிவு ஒரு சாதனத்தைக் கண்டுபிடித்தது. 2 மணி நேரத்தில் டிஎன்ஏ மேட்சிங் செய்யும் அந்த அதிநவீன கருவியை சிஐஏ, ஆப்கானில்தானில் தயார் நிலையில் வைத்திருந்தது.

பின்லேடனின் உடலை அங்கு கொண்டு சென்று டிஎன்ஏ சோதனையை முடித்துவிட்டு, இது 99.9 சதவீதம் பின்லேடன் தான் என்று தகவல் தரப்பட்ட பின்னரே தொலைக்காட்சிகள் முன் தோன்றி அவர் கொல்லப்பட்டதை அறிவித்தார் அமெரிக்க அதிபர் ஒபாமா.

ஆனாலும் மிச்சமுள்ள 0.1 சதவீத சந்தேகத்தை வைத்து இது பின்லேடன் இல்லை என்று வாதிடுவோர் நிச்சயம் இருக்கத் தான் செய்வார்கள் என்கிறார், டிஎன்ஏ ஆராய்ச்சியாளரான கி்ட் ஏடன்.

இறந்தது பின்லேடன் தான்-உறுதி செய்ய உதவிய இறந்து போன சகோதரியின் மூளை திசு டிஎன்ஏ!

வாஷிங்டன்: அமெரிக்காவின் சிம்மசொப்பனமாக விளங்கிய ஒசாமாபின்லாடன் பாகிஸ்தானில் பதுங்கி இருந்தபோது அமெரிக்க உளவுப்படையினரின் அதிரடி ஆப்ரேஷன் திட்டத்தில் குறி வைத்து காலி செய்யப்பட்டான். அமெரிக்காவின் நீண்டகால ஆசையும், முக்கிய நோக்கமும் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இவரது பலி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அமெரிக்க அதிபர் பராக்ஒபாமா டி.வி.,யில் தோன்றி அறிவித்தார்.

சவுதியில் பிறந்து மதவாதியான ஒசாமா பின்லாடன் பயங்கரவாத அமைப்பான அல்குவைதாவின் தலைவரானான். இவனுக்கு வயது 54. ஆப்கானிஸ்தானை மையமாக கொண்டு பயங்கரவாத அமைப்பை உலகமே கண்டு அச்சுறும் வகையில் மிக ரகசியமாக நடத்தி வந்தான். இவனது அமைப்பில் உள்ளவர்கள் தற்கொலை படை தாக்குதல் நடத்துவதில் கில்லாடிகள். அமெரிக்காவே எங்கள் எதிரி என்றும், அவர்களுக்கு எதிராகவே எங்களின் போர் நடக்கும் என ஒசாமா கூறி வந்தான். கடந்த 2001 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11 ம் தேதி அமெரிக்காவின் புகழ்பெற்ற வர்த்தக இரட்டை கோபுரத்தை விமானத்தை கொண்டு மோதி தூள், தூளாக்கினான். இதில் அமெரிக்கா நிலைகுலைந்து பெரும் அழிவை சந்தித்தது. ஆயிரக்கணக்கானவர்கள் உயிரிழந்தனர். இந்த நாள் முதல் சர்வதேச குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு தேடப்பட்டு வந்தான் ஒசாமா .

இவனை உயிருடன் பிடித்து சட்டத்தின் முன்நிறுத்துவோம் என அமெரிக்க அதிபர்கள் புஷ், பராக்ஒபாமா உறுதியாக சொல்லி வந்தனர். ஒசாமா பாகிஸ்தான் பகுதிகளில்தான் பதுங்கி இருப்பான் என அமெரிக்க அமைச்சர் ஹிலாரி கிளிண்டன், உயர் அதிகாரிகள் கூறி வந்தனர். ஒசாமாவை பிடிப்பதே முக்கியப்பணியாக இருக்கும் என்றனர். இதனையடுத்து இந்த பகுதிகள் ரகசியமாக கண்காணிக்கப்பட்டு வந்தன.

ஒசாமாவின் வீடியோ காட்சிகள் அவ்வப்போது ஒளிபரப்பாகி வந்தன. இந்நிலையில் ஒசாமா பின்லாடன் கொல்லப்பட்டான் என்ற செய்தி வெளிவந்திருக்கிறது. பல முறை ஒசாமா கொல்லப்பட்டான் என்ற செய்தி வருவதும், இதனை அல்குவைதா மறுப்பதும் நடந்திருக்கிறது. ஆனால் இதுவரை இன்றைய ஒசாமா பலி குறித்து அல்குவைதா அமைப்பினர் எவ்வித மறுப்பும் தெரிவிக்கவில்லை.

இந்த முறை இவனது உடலை டி.என்.ஏ., டெஸ்ட் மூலம் ஒசாமாதான் என்று உறுதி செய்யப்பட்டதாக அமெரிக்க மத்திய உளவு நிறுவனம் தெரிவித்துள்ளது. இவன் கொல்லப்பட்ட இன்றைய நாள் அமெரிக்காவிற்கு முக்கியத்துவம் வாய்ந்த சிறப்பான நாள் என அமெரிக்க முன்னாள் அதிபர் புஷ்சின் தலைமை அதிகாரி ஆண்டிகார்ட்டு கூறியுள்ளார்.

ஒசாமா பின்லாடன் கொல்லப்பட்டது எப்படி? : பாகிஸ்தானில் இஸ்லாமாபாத் நகரில் பதுங்கி இருப்பதாக அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அதிகாரிகள் மாற்று உடையில் சென்று கண்காணித்து இவனை எப்படி கொல்வது என திட்டமிடப்பட்டது. ஒரு வாரத்தில் இந்த ஆப்ரேஷன் கச்சிதமாக முடிக்கப்பட்டது. எப்போதும் வனப்பகுதி , மலைப்பள்ளத்தாக்கில்தான் ஒசாமா பதுங்கி இருப்பான் என்ற செய்தியைத்தான் கேள்விப்பட்டிருக்கிறோம் இந்தமுறை இஸ்லாமாபாத் நகரில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் ஒசாமா தங்கியிருந்திருக்கிறான். இதனையடுத்து உளவு துறை அதிகாரிகள் தாக்குதல் நடத்தி ஒசாமாவை கொன்றனர். இந்த பண்ணை வீட்டின் வெளியே ஒசாமா பிணமானான். அமெரிக்காவின் முக்கியப்பணி முடிந்தது.

அதிபர் பராக் ஒபாமா மகிழ்ச்சி: பின்லாடன் இறந்ததகவலை அமெரிக்க அதிபர் ஒபாமா உறுதி செய்தார். நாட்டு மக்களுக்கு டி.வி., மூலம் அறிவித்த போது அமெரிக்காவின் நீண்டகால ஆசை நிறைவேறியிருக்கிறது என்றும், நீதி நிலைநாட்டப்பட்டிருப்பதாகவும் கூறினார். அவர் மேலும் கூறுகையில், 10 ஆண்டு காலத்துக்கும் மேலாக ஒசாமா பின் லேடன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர்கள் , உளவு அதிகாரிகளுக்கு அமெரிக்கா மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறது. இந்த வெற்றி செப்டம்பர் 11ம் தேதி இரட்டைக் கோபுர தாக்குதலில் பலியான அப்பாவி மக்களின் ஆத்ம சாந்திக்கு சமர்ப்பிக்கப்படுகிறது. அந்த பயங்கரவாத தாக்குதலில் உற்றார் , உறவினர்களை பலி கொடுத்த அமெரிக்க குடும்பங்களை மறந்து விடவில்லை. இந்த தருணத்தில் அவர்களை நினைவு கூறுகிறோம். அல்குவைதாவை அழிக்கும் பணி தொடர்ந்து நடக்கும். இத்துடன் முடிவதில்லை. இவ்வாறு ஒபாமா கூறினார்.

அமெரிக்காவின் முக்கிய எதிரி ஒசாமா ஒழிந்தான்; பாகிஸ்தானில் பதுங்கி இருந்த போது குண்டுக்கு பலி

முக நூல்

Popular Posts