background img

புதிய வரவு

Showing posts with label Passed away. Show all posts

இடாநகர்: அருணாசலப் பிரதேசத்தில் 23 பேருடன் சென்ற ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது. அதில் பயணம் செய்த இரு குழந்தைகள் உள்பட 17 பேர் பலியாகிவிட்டதாக அஞ்சப்படுகிறது.

அஸ்ஸாம் தலைநகர் குவஹாத்தியிலிருந்து பவன் ஹான்ஸ் விமான சேவை நிறுவனத்துக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் இன்று 18 பயணிகள், 2 விமானிகள், 3 சிப்பந்திகளுடன் அருணாசலப் பிரதேச மாநிலம் தவாங் நகருக்குக் கிளம்பியது. இந்த ஹெலிகாப்டர் தினமும் இந்த இரு நகர்களுக்கு இடையே இயக்கப்படுவது வழக்கம்.

பிற்பகல் 1.15 மணியளவில் மேற்கு அருணாசலப் பிரதேசத்தின் தவாங் நகரின் ஹெலிபேட் அருகே சென்றபோது திடீரென ஹெலிகாப்டர் தரையில் விழுந்து நொறுங்கியது. 15 மீட்டர் உயரத்தில் இருந்து மரங்கள் அடர்ந்த காட்டுப்பகுதியில் அந்த ஹெலிகாப்டர் விழுந்தது.

இதில் இரு குழந்தைகள் உள்பட 17 பேர் பலியாகிவிட்டதாகத் தெரிகிறது. 6 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

கிழக்கு இமயமலைத் தொடரில் 11,000 அடி உயரத்தில் உள்ளது தவாங். சீன எல்லையில் உள்ள இந்தப் பகுதிக்குச் செல்ல ஹெலிகாப்டர்களே அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

சென்னையில் தரை இறங்கிய விமானத்தின் டயர் வெடித்தது:
Read: In English
இதற்கிடையே ஹைதராபாத்திலி்ருந்து சென்னைக்கு 95 பயணிகளுடன் ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம் வந்தது. காலை 11 மணிக்கு அந்த விமானம் மீனம்பாக்கம் விமான நிலையத்தில் தரை இறங்கியது. விமானம் ஓடு பாதையில் வேகமாக சென்று இறங்கியபின் விமானம் நிறுத்தப்படும் இடம் நோக்கி திரும்பியது.

அப்போது விமானத்தின் ஒரு டயர் வெடித்தது. உடனே விமானி விமானத்தை நிறுத்தியதால் விபத்து தவிர்க்கப்பட்டது.

அருணாசலப் பிரதேசத்தில் ஹெலிகாப்டர் விபத்து: 17 பேர் பலி?

நடிகரும் இயக்குநருமான பாண்டியராஜனின் தாயார் இன்று மரணமடைந்தார்.

கன்னிராசி மூலம் இயக்குநராகவும், ஆண்பாவம் படத்தில் நடிகராகவும் அறிமுகமாகி திரையிலகில் தனி இடம் பிடித்தவர் பாண்டியராஜன்.

இவரது தாயார் சுலோச்சனா. சில தினங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். இன்று அவர் காலமானார். சென்னை தி.நகரில் உள்ள பாண்டியராஜன் இல்லத்தில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

பாண்டியராஜனின் தாயார் உடலுக்கு திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

பாண்டியராஜன் தாயார் மரணம்!

தெற்கு சீனாவில் குவாங்டாங் மாகாணத்தில் போஸ் கான் நகரம் உள்ளது. இது தொழிற்சாலைகள் நிறைந்த பகுதியாகும். நேற்று இங்கு கடுமையான சூறாவளி காற்று வீசியது. அதைத்தொடர்ந்து ஆலங்கட்டி மழையும் பெய்தது. இதனால் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

போஸ்கான் நகரம் மட்டுமின்றி அதை சுற்றியுள்ள ஹாங்ஷூ, ஷாலோகிங், டொங்கன் ஆகிய இடங்களிலும் கடும் சூறாவளியுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. வினாடிக்கு 45.5 மீட்டர் வேகத்தில் காற்று வீசியது. இதனால் அங்கிருந்த வீட்டு சுவர்கள் இடிந்து விழுந்தன. வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளின் கூரைகள் காற்றில் பறந்தன.

அதே நேரத்தில் பேய்மழை பெய்ததால் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. நேற்று வீசிய சூறாவளி காற்று மற்றும் ஆலங்கட்டி மழைக்கு 17 பேர் பலியாகினர். 118 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். மழையால் 506.7 ஹெக்டேர் விளைநிலங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. இதனால் ரூ.35 கோடிக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.

சீனாவில் சூறாவளியுடன் ஆலங்கட்டி மழை:17 பேர் பலி; 118 பேர் காயம்

முக நூல்

Popular Posts