background img

புதிய வரவு

Showing posts with label China. Show all posts

சீனாவில் எழுப்பப்பட்ட சிவன் கோயில் சீன சக்கரவர்தியான குப்லாய்கானின் ஆணையின் கீழ் கட்டப்பட்டது என்பதைக் குறிக்கும் கல்வெட்டு உள்ளது. இக்கல்வெட்டின் கடைசி வரிகள் சீன எழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளன.
சீன நாட்டில் காண்டன் எனும் நகருக்கு 500 கல் வடக்கே உள்ள சூவன்சௌ என்னும் துறைமுக நகர் உள்ளது. பண்டைய காலத்திலும் இது சிறந்த துறைமுகமாக விளங்கிற்று. அந்தக் காலத்தில் தமிழ் வணிகர்கள் இந்நகருக்கு அடிக்கடி வந்து சென்றுள்ளனர்.
தமிழ்நாட்டிலிருந்து புறப்படும் வணிகக் கப்பல்கள் தாய்லாந்து சென்று அதன் மேற்குக் கரையோரமாக உள்ள சில துறைமுகங்களிலும் தங்கிப் பிறகு வியத்து நாம் சென்று அங்கிருந்து சீனநாட்டை அடைந்துள்ளனர்.
தமிழ் நாட்டிலிருந்து நேரடியாகச் சீனாவிற்குக் கடல் வழியாகச் செல்லவேண்டுமானால் வங்காள விரிகுடாவைக் கடந்து உள்ள மாலக்கா வழியாகத் தென்சீனக் கடலை அடையலாம். மலேசியத் தீபகற்பத்தைச் சுற்றி இவர்கள் செல்லவேண்டியிருக்கும். ஆனால் இந்தவழி சுற்றுவழியாகும். ஆயிரம் கல்களுக்கு அதிகமாகப் பயணத்தொலைவு நீளும். மேலும் பயணநேரத்திலும் பல மாதம் கூடிவிடும்.
சீனாவில் தமிழர்கள் காண்டன் நகரில் மட்டுமன்று. வேறு சில இடங்களிலும் வணிகக் குடியேற்றங்களை அமைத்திருந்தனர். பிற்காலச் சோழர் காலத்தில், புகழ்பெற்ற வணிகக் குழாமான திசை ஆயிரத்து ஐந்நூற்றுவர் எனும் குழுவினர் சீனநாட்டின் பல்வேறு பகுதியிலும் வணிகம் செய்துள்ளனர் என்பதற்குப் பல ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
சூவன்லிசௌ துறைமுக நகரில் சிவாலயம் ஒன்று உள்ளது. இந்த ஆலயத்தில் நிறுவப் பெற்றுள்ள சில விக்கிரகம் குப்லாய்கான என்னும் புகழ்ப் பெற்ற சீனச் சக்கரவர்த்தியின் ஆணையால் அமைக்கப் பட்டதாகும். இவருக்குச் சேகாசைகான் என்ற பெயரும் உண்டு. இவரின் உடல் நலத்திற்காக இந்த ஆலயம் எழுப்பப்பட்டது.
இந்தக் கோயில் திருக்கதாலீசுவரம் என வழங்கப்பட்டது. இந்த ஆலயத்தில் உள்ள சிவன் திருக்கதாலீசுவரன் உதயநாயனார் என அழைக்கப்பட்டார். சீனச் சக்கரவர்த்தியின் இந்த ஆணையை நிறைவேற்றியவரின் பெயர் தவச்சக்கரவர்த்திகள் சம்பந்தப் பெருமாள் என்பதாகும்.
சக யுகம் சித்திராபவுர்ணமி அன்று இந்த ஆலயம் நிறுவப்பட்டது. கி.பி 1260ம் ஆண்டு குப்லாய்கான் முடிசூடினான். இவன் உலகையே நடுங்க வைத்த மங்கோலியச் சக்கரவர்த்தியான செங்கிசுகானின் பேரனாவான. மங்கோலியச் சக்கரவர்த்திகள் ஆளுகையில் சீனாவும் இருந்தது.
இவன்தான் பெய்சிங் நகரைக்கட்டி அதைத் தனது பேரரசின் தலைநகராக்கினான். அவருடைய பேரரசு விரிந்து பரந்திருந்தது. வலிமை வாய்ந்த சக்கரவர்த்தியாக அவன் திகழ்ந்தான் புகழ்பெற்ற யுவான் அரசமரபை இவனே தொடங்கியவனாவான். தமிழ்நாட்டில் பிற்காலப் பாண்டியப் பேரரசு அரசோச்சிய காலத்தில் இவன் சீனப்பேரரசின் சக்கரவர்த்தியாகத் திகழ்ந்தான். பாண்டிய அரச குலமும் குப்லாய்கானும் மிகுந்த நட்புறவுடன் திகழ்ந்தனர். அப்போதிருந்த பாண்டிய மன்னன் குலசேகர பாண்டியன் ஆவான். இருநாடுகளுக்கிடையேயும் தூதர்கள் பரிமாற்றம் செய்துகொள்ளப்பட்டது.
சீனாவில் எழுப்பப்பட்ட இந்த சிவன் கோயில் சீன சக்கரவர்தியான குப்லாய்கானின் ஆணையின் கீழ் கட்டப்பட்டது என்பதைக் குறிக்கும் கல்வெட்டு இக்கோவிலில் உள்ளது. இக்கல்வெட்டின் கடைசி வரிகள் சீன எழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளன. இக்கோவிலில் சோழர்காலச் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டுக்கு வெளியே கண்டுபிடிக்கப்பட்ட மிக அபூர்வமான தமிழ்க்கல்வெட்டு இதுவாகும்.

சீன நாட்டில் தமிழ் கல்வெட்டு

ஸ்ரீநகர்: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் சீனா வளர்ச்சி பணிகளை மேற் கொண்டு வருவதாக வடக்கு பிராந்திய ராணுவ அதிகாரி கே.டி.,பர்நாயக் தெரிவித்துள்ளார். சீனாவின் கட்டுமான பொறியாளர்கள் மூலம் சாலை வசதிகளை மேம்படுத்துதல், மிக அதிக அளவில் அணைகளை கட்டுதல் போன்ற பணிகளை செய்துவருவதாகவும் இவை அனைத்தும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.பாக்., ஆக்ரமிப்பு பகுதியில் வளர்ச்சி பணிகள் நடைபெற்று வந்தாலும் பணிகள் அனைத்தும் இருநாட்டின் எல்லைப்பகுதியில் அமைந்துள்ளாதல் சீனாவின் நடவடிக்கை உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்

எல்லையில் சீனா வளர்ச்சி பணிகள் துவக்கம்

தெற்கு சீனாவில் குவாங்டாங் மாகாணத்தில் போஸ் கான் நகரம் உள்ளது. இது தொழிற்சாலைகள் நிறைந்த பகுதியாகும். நேற்று இங்கு கடுமையான சூறாவளி காற்று வீசியது. அதைத்தொடர்ந்து ஆலங்கட்டி மழையும் பெய்தது. இதனால் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

போஸ்கான் நகரம் மட்டுமின்றி அதை சுற்றியுள்ள ஹாங்ஷூ, ஷாலோகிங், டொங்கன் ஆகிய இடங்களிலும் கடும் சூறாவளியுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. வினாடிக்கு 45.5 மீட்டர் வேகத்தில் காற்று வீசியது. இதனால் அங்கிருந்த வீட்டு சுவர்கள் இடிந்து விழுந்தன. வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளின் கூரைகள் காற்றில் பறந்தன.

அதே நேரத்தில் பேய்மழை பெய்ததால் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. நேற்று வீசிய சூறாவளி காற்று மற்றும் ஆலங்கட்டி மழைக்கு 17 பேர் பலியாகினர். 118 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். மழையால் 506.7 ஹெக்டேர் விளைநிலங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. இதனால் ரூ.35 கோடிக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.

சீனாவில் சூறாவளியுடன் ஆலங்கட்டி மழை:17 பேர் பலி; 118 பேர் காயம்

அதிநவீன போர் விமானம் தயாரித்ததில் அமெரிக்காவின் தொழில்நுட்பத்தை திருடவில்லை என்று சீனா மறுத்துள்ளது.

'ஜெ-20' என்னும் அதிநவீன போர் விமானத்தை சீனா சமீபத்தில் சோதனை செய்தது. இந்நிலையில், அந்த விமானத்தின் தொழில்நுட்பத்தை அமெரி்க்காவிடம் இருந்து சீனா திருடியதாக புகார் எழுந்தது.

இதுதொடர்பாக தொழில்நுட்ப ரகசியத்தை அளித்ததாக அமெரிக்காவைச் சேர்ந்த நோஷிர் கோவாடியா என்பவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் 32 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கியுள்ளது.

இந்நிலையில், "ஜெ-20" விமானத்தின் தொழில்நுட்பத்தை அமெரிக்காவிடம் இருந்து திருடவில்லை என்று சீன பாதுகாப்பு அதிகாரிகளும், இராணுவ நிபுணர்களும் தெரிவித்துள்ளனர்.

தங்களது தொழில்நுட்ப கண்டுபிடிப்பின் மகுடம்தான் 'ஜெ-20' போர் விமானம் என்றும் சீனா கூறியுள்ளது.

இத்தகவல் சீன அரசின் அதிகாரப்பூர்வ பத்திரிகையில் இன்று வெளியாகியுள்ளது.

அமெரிக்க போர் விமான தொழில்நுட்பத்தை திருடவில்லை: சீனா

ஐ.நா. செயல்பாடுகள் குறித்த செய்திகளை வெளியிடும் 'இன்னர் சிட்டி பிரஸ்' ஊடாக ஐ.நா.செயலாளருக்கு மின்னஞ்சல் மூலம் விடுக்கப்பட்ட வினாவிற்கு பதிலளிக்கும் விதமாகவே ஐ.நா.பேச்சாளர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

ஆலோசனைக் குழு மற்றும் இலங்கைக்கு இடையே தொடர்ந்து கலந்துரையாடல் இடம்பெறுவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையின் பொறுப்புகளுக்கு ஏற்ப செயற்பாடுகளுக்கு பங்களிப்பு செய்வதற்கு பான் கீ மூனின் ஆலோசனைக் குழுவுக்கு தேவைப்பாடு உள்ளது.

எனினும்,இது தொடர்பாக அவர்களுக்கு இலங்கைக்கு பயணம் செய்ய அவசியம் இல்லை என்று ஐ.நா.பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அவ்வாறான பயணம் பயனுள்ள விடயமாக மாத்திரமே அமையும் என அவர் மேலும் கூறியுள்ளார்.

'போர்க் குற்றம்: ஐ.நா. குழு இலங்கை செல்லாது'

சீனா ஆயுதப் போட்டியில் ஈடுபடாது: என்று அந்நாட்டு அதிபர் ஹூ ஜிண்டாவோ அறிவித்துள்ளார்.

அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து வரும் ஜின்டாவோ, வாஷிங்டனில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அமெரிக்க - சீன வர்த்தக கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர், ஆயுதப்போட்டியில் சீனா ஒருபோதும் ஈடுபடாது என்று அறிவித்தார்.

சீனா எந்த ஒரு நாட்டுக்கும் ஆபத்தாக இருக்காது. அதோடு நாடு பிடிக்கும் ஆசையும் எங்களுக்கு கிடையாது.

சர்வதேச பிரச்சனைகளுக்கு அமைதி தீர்வு காணவே நாங்கள் விரும்புகிறோம். ஆசியா பசிபிக் நாடுகளின் வளர்ச்சிக்கு அமெரிக்காவும், சீனாவும் கடமைப்பட்டு உள்ளன என்று அவர் மேலும் கூறினார்.

ஆயுதப் போட்டியில் ஈடுபடமாட்டோம்: சீன அதிபர் ஜிண்டாவோ அறிவிப்பு

சீனா ஆயுதப் போட்டியில் ஈடுபடாது: என்று அந்நாட்டு அதிபர் ஹூ ஜிண்டாவோ அறிவித்துள்ளார்.

அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து வரும் ஜின்டாவோ, வாஷிங்டனில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அமெரிக்க - சீன வர்த்தக கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர், ஆயுதப்போட்டியில் சீனா ஒருபோதும் ஈடுபடாது என்று அறிவித்தார்.

சீனா எந்த ஒரு நாட்டுக்கும் ஆபத்தாக இருக்காது. அதோடு நாடு பிடிக்கும் ஆசையும் எங்களுக்கு கிடையாது.

சர்வதேச பிரச்சனைகளுக்கு அமைதி தீர்வு காணவே நாங்கள் விரும்புகிறோம். ஆசியா பசிபிக் நாடுகளின் வளர்ச்சிக்கு அமெரிக்காவும், சீனாவும் கடமைப்பட்டு உள்ளன என்று அவர் மேலும் கூறினார்.

குவாங்சு: ஆசிய விளையாட்டு போட்டி வண்ணமயமான நிறைவு விழாவுடன், இனிதே முடிந்தது. கண்கவர் வாணவேடிக்கை, "லேசர் ÷ஷா' ஒளிவெள்ளம், ஆயிரக்கணக்கான கலைஞர்களின் ஆடல், பாடல் என நிகழ்ச்சிகள் களை கட்டின.
சீனாவின் குவாங்சு நகரில் 16வது ஆசிய விளையாட்டு போட்டி கடந்த 12ம் தேதி துவங்கியது. இதில், முதலிடம் பெற்ற சீனா 199 தங்கம் உட்பட மொத்தம் 416 பதக்கங்கங்கள் பெற்று, தனது ஆதிக்கத்தை நிலைநாட்டியது. 14 தங்கம் உட்பட 64 பதக்கம் வென்ற இந்தியா 6வது இடம் பிடித்தது.
கடந்த 16 நாட்கள் உலக ரசிகர்களை கட்டிப் போட்ட ஆசிய விளையாட்டு திருவிழா நேற்று நிறைவு பெற்றது. இதற்காக "பேர்ல்' நதிக் கரையில் அமைக்கப்பட்டிருந்த பிரத்யேக அரங்கில் நிறைவு விழா மிகச் சிறப்பாக நடந்தது. சீனாவின் தேசிய கீதத்துடன் விழா துவங்கியது. கண்கவர் வாணவேடிக்கை மற்றும் "லேசர் ÷ஷா' ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. பின் ஒவ்வொரு நாட்டின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றன. இந்தியா சார்பில் ரவி திரிபாதி மற்றும் தான்யா குப்தா இணைந்து அசத்தலாக பாடினர். அப்போது பஞ்சாப் "பாங்கரா' உள்ளிட்ட இந்திய நடனங்களை கலைஞர்கள் ஆடினர்.
வீரர்கள் அணிவகுப்பை தொடர்ந்து, ஒவ்வொரு நாட்டின் சார்பிலும் அலங்கரிக்கப்பட்ட படகுகள் அணிவகுத்து வந்தன. வரும் 2014ல் அடுத்த போட்டியை நடத்த <உள்ள தென் கொரியாவின் இன்ச்சியான் நகர நிர்வாகிகளிடம், ஆசிய ஒலிம்பிக் கவுன்சிலின் கொடி ஒப்படைக்கப்பட்டது. பின் அதிர வைக்கும் வாணவேடிக்கைக்கு மத்தியில், ஆசிய விளையாட்டு ஜோதி அணைக்கப்பட்டு, போட்டிகள் முறைப்படி நிறைவு பெற்றன. 
விஜேந்தர் கவுரவம்
ஆசிய விளையாட்டு குத்துச்சண்டையில் தங்கம் வென்ற இந்தியாவின் விஜேந்தர், நிறைவு விழா அணிவகுப்பில் மூவர்ணக் கொடியை ஏந்தி வந்தார். உலகின் "நம்பர்-1' வீரரான இவர், தனது இடது கை கட்டை விரலில் ஏற்பட்ட காயத்தை பொருட்படுத்தாது, கொடியுடன் கம்பீரமாக வந்தார்.
ஆசிய விளையாட்டில் இந்தியா
ஆசிய விளையாட்டில் சிறப்பாக செயல்பட்ட நம்மவர்கள் மொத்தம் 64 பதக்கம் கைப்பற்றினர். இதன்மூலம் ஆசிய விளையாட்டில் அதிகபட்ச பதக்கத்தை பதிவு செய்து அசத்தினர். முன்னதாக கடந்த 1982ல் டில்லியில் நடந்த ஆசிய விளையாட்டில் மொத்தம் 57 பதக்கம் வென்றிருந்ததே அதிகபட்சமாக இருந்தது.
இதுவரை நடந்துள்ள 16 ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவின் செயல்பாடு:
ஆண்டு    இடம்    தங்கம்    வெள்ளி    வெண்கலம்    மொத்தம் (தரவரிசை)
1951    புதுடில்லி    15    16    20    51 (2வது)
1954    பிலிப்பைன்ஸ்    4    4    5    13 (5வது)
1958    ஜப்பான்    5    4    4    13 (6வது)
1962    இந்தோனேஷியா    12    13    27    52 (3வது)
1966    தாய்லாந்து    7    4    11    22 (5வது)
1970    தாய்லாந்து    6    9    10    25 (5வது)
1974    ஈரான்    4    12    12    28 (7வது)
1978    தாய்லாந்து    11    11    6    28 (6வது)
1982    புதுடில்லி    13    19    25    57 (5வது)
1986    தென் கொரியா    5    9    23    37 (5வது)
1990    சீனா    1    8    14    23 (11வது)
1994    ஜப்பான்    4    3    15    22 (8வது)
1998    தாய்லாந்து    7    11    17    35 (9வது)
2002    தென் கொரியா    10    12    13    35 (8வது)
2006    கத்தார்    10    17    26    53 (8வது)
2010    சீனா    14    17    33    64 (6வது)
தடகளம் அசத்தல்
ஆசிய விளையாட்டில் இம்முறை இந்தியாவுக்கு தடகளப் போட்டியில் அதிகப்பதக்கம் கிடைத்தது. தடகளத்தில் சாதித்த இந்திய நட்சத்திரங்கள் 5 தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் உட்பட மொத்தம் 11 பதக்கம் வென்றனர். இதனை தொடர்ந்து குத்துச்சண்டையில் மொத்தம் 9 பதக்கம் கிடைத்தது. ஆனால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாட்மின்டனில் ஒரு பதக்கம் கூட கிடைக்கவில்லை.
ஒவ்வொரு போட்டியிலும் இந்தியா வென்ற பதக்கம்:
போட்டி    தங்கம்    வெள்ளி    வெண்கலம்    மொத்தம்
தடகளம்    5    2    4    11
குத்துச்சண்டை    2    3    4    9
டென்னிஸ்    2    1    2    5
கபடி    2    0    0    2
துப்பாக்கி சுடுதல்    1    3    4    8
படகு வலித்தல்    1    3    1    5
பில்லியர்ட்ஸ்    1    1    2    4
வில்வித்தை    0    1    2    3
உஷு    0    1    1    2
கோல்ப்    0    1    0    1
பாய்மரப்படகு    0    1    0    1
ஸ்குவாஷ்    0    0    3    3
மல்யுத்தம்    0    0    3    3
செஸ்    0    0    2    2
ஸ்கேட்டிங்    0    0    2    2
நீச்சல்    0    0    1    1
ஜிம்னாஸ்டிக்ஸ்    0    0    1    1
ஹாக்கி    0    0    1    1
மொத்தம்    14    17    33    64
சோம்தேவ் அபாரம்
ஆசிய விளையாட்டில் அதிக பதக்கம் வென்ற இந்திய வீரர் வரிசையில் டென்னிஸ் நட்சத்திரம் சோம்தேவ் தேவ்வர்மன் முன்னிலை வகிக்கிறார். இவர் 2 தங்கம் உட்பட மொத்தம் 3 பதக்கம் வென்றுள்ளார்.
இரண்டு பதக்கங்களுக்கு மேல் வென்ற இந்திய நட்சத்திரங்கள்:
வீரர்    போட்டி    தங்கம்    வெள்ளி    வெண்கலம்    மொத்தம்
சோம்தேவ்    டென்னிஸ்    2    0    1    3
அஷ்வினி    தடகளம்    2    0    0    2
ரஞ்சன் சோதி    துப்பாக்கி சுடுதல்    1    0    1    2
பிரிஜா ஸ்ரீதரன்    தடகளம்    1    1    0    2
சனம் சிங்    டென்னிஸ்    1    0    1    2
ககன் நரங்    துப்பாக்கி சுடுதல்    0    2    0    2
அனில் குமார்    படகு வலித்தல்    0    2    0    2
சஜி தாமஸ்    படகு வலித்தல்    0    2    0    2
ரஞ்சித் சிங்    படகு வலித்தல்    0    2    0    2
மஞ்சித் சிங்    படகு வலித்தல்    0    2    0    2
ஜெனில் கிருஷ்ணன்    படகு வலித்தல்    0    2    0    2
ராஜேஷ் குமார் யாதவ்    படகு வலித்தல்    0    2    0    2
லோகேஷ் குமார்    படகு வலித்தல்    0    2    0    2
சானியா மிர்சா    டென்னிஸ்    0    1    1    2
விஷ்ணு வர்தன்    டென்னிஸ்    0    1    1    2
ஆதித்ய மேக்தா    பில்லியர்ட்ஸ்    0    1    1    2
கவிதா ராத்    தடகளம்    0    1    1    2
விஜய் குமார்    துப்பாக்கி சுடுதல்    0    0    2    2
சவுரவ் கோசால்    ஸ்குவாஷ்    0    0    2    2
அனுப் குமார் யமா    ஸ்கேட்டிங்    0    0    2    2

ஆசிய விளையாட்டு: கண்கவர் நிறைவு விழா: சீனா மீண்டும் ஆதிக்கம்

முக நூல்

Popular Posts