background img

புதிய வரவு

Showing posts with label Problem. Show all posts

நடிகை வனிதாவுக்கும் அவரது முதல் கணவர் ஆகாசுக்கும் பிறந்த மகன் விஜய் ஸ்ரீஹரியை இருவரும் தங்களிடம் ஒப்படைக்க கோரி போராடி வருகின்றனர். தற்போது விஜய் ஸ்ரீஹரி ஆகாஷ் வசம் இருக்கிறான். அவனை தன்னிடம் ஒப்படைக்கும்படி வனிதா வற்புறுத்தி வருகிறார்.

இதுகுறித்து கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. “விஜய் ஸ்ரீஹரி வாரத்தில் 3 நாட்கள் வனிதாவிடம் இருக்க வேண்டும் என்றும் மற்ற நாட்கள் ஆகாஷ் பாதுகாப்பில் இருக்க வேண்டும்” என்றும் கோர்ட்டு உத்தரவிட்டது.

ஆனால் கோர்ட்டு தீர்ப்புப்படி மகனை ஆகாஷ் தன்னிடம் ஒப்படைக்கவில்லை என்று போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வனிதா நேற்று முன்தினம் புகார் அளித்தார்.

இப்பிரச்சினை மீது போலீசார் விசாரணை நடத்தினர். விஜய் ஸ்ரீஹரியிடம் போலீசார் பேசினர். அப்போது அவன் வனிதாவுடன் செல்ல பிடிவாதமாக மறுத்து விட்டான்.

இதையடுத்து விஜய் ஸ்ரீஹரியை குழந்தைகள் நல மருத்துவரிடம் காட்டி ஆலோசனை பெற வேண்டும் என்று கோர்ட்டு அறிவுறுத்தியது. இந்த நிலையில் விஜய் ஸ்ரீஹரியை தன்னிடம் ஒப்படைக்க வற்புறுத்தி வனிதா இன்று உண்ணாவிரத போராட்டம் நடத்தினார்.

காலை 12 மணிக்கு படுக்கையுடன் சாலிகிராமம் லோகையா வீதி 5-வது குறுக்கு தெருவில் உள்ள ஆகாஷ் வீட்டுக்கு வந்தார். தனது பெண் குழந்தையையும் உடன் அழைத்து வந்தார். ஆகாஷ் வீட்டு முன் படுக்கையை விரித்தார். அதில் அமர்ந்து உண்ணாவிரதத்தை தொடங்கினார்.

தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்தனர். வனிதாவிடம் அவர்கள் சமரசம் பேசினர். ஆனால் உண்ணாவிரதத்தை கைவிட மறுத்து விட்டார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

உண்ணாவிரதம் இருப்பது பற்றி வனிதா கூறியதாவது:-

எனது மகனை என்னுடன் அனுப்பி வைக்க வேண்டும் என்று கடந்த 7 மாதங்களாக ஐகோர்ட்டு முதல் சுப்ரீம் கோர்ட்டு வரை சென்று வந்து விட்டேன். ஆனாலும் எனக்கு நீதி கிடைக்கவில்லை.

என் குழந்தையை என்னுடன் அனுப்ப ஆகாஷ் மறுக்கிறார். என்னைப் பற்றி தவறான தகவல்களை ஸ்ரீஹரியிடம் சொல்லி என்னுடன் சேர விடாமல் மிரட்டுகிறார். என் குழந்தை இல்லாமல் இந்த இடத்தை விட்டு நான் நகர மாட்டேன்.

தண்ணீர், சாப்பாடு, கூட சாப்பிட மாட்டேன். இங்கிருந்து என் குழந்தையோடுதான் செல்வேன். இல்லையென்றால் சாவேன். ஆகாஷ் செய்யும் தவறை போலீசார் கண்டு கொள்ளவில்லை. கீழ்மட்டத்தில் உள்ள போலீசார் தவறு செய்கிறார்கள்.

என் குழந்தை என்னிடம் சேராமல் இருப்பதற்கு போலீசாரும் ஒரு காரணம். இந்த அரசு மீது எனக்கு நம்பிக்கையிருக்கிறது. என் குழந்தையை என்னிடம் சேர்த்து வைக்க நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புகிறேன்.

பெத்த குழந்தையை மீட்க எனக்கு உரிமை இல்லையா? இந்த பிரச்சினைக்கு பின்னால் என் தந்தை இருக்கிறார். கோர்ட்டு உத்தரவுபடி என் குழந்தையை போலீசாரிடம் ஒப்படைக்க வேண்டும்.

இவ்வாறு வனிதா கூறினார்.

வனிதா உண்ணாவிரதம் தொடங்கிய சிறிது நேரத்தில் ஆகாஷ் வீட்டில் இருந்து வெளியேறினார். அப்போது நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-

கோர்ட்டு உத்தரவுபடி விஜய் ஸ்ரீஹரி விருப்பபட்டால் வனிதாவை 3 நாட்கள் சந்திக்கலாம். அவன் தனது தாயாரை பார்க்க விருப்பம் இல்லாத பட்சத்தில் அவனை சமாதானப்படுத்தி தாயார் வனிதாவிடம் அனுப்பலாம். ஆனால் அவன் போக மறுக்கிறான். தாயார் குழந்தையிடம் அன்பாக இருந்தால் பாசத்துடன் செல்லும். அவனை வனிதாவிடம் செல்ல கட்டாயப்படுத்தினால் அவரிடம் செல்ல மறுத்து அடம் பிடிக்கிறான்.

அதனால் மனோத்துவ டாக்டரை அணுகி குழந்தையை சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபடுகிறேன். 3 வருடம் குழந்தை ஹரி வனிதாவிடம் இருந்தது. இப்போது 3 நாள் அவருடன் அனுப்புவதில் எனக்கு எந்தவித பிரச்சினையும் இல்லை. என்னிடம் இருந்து அவன் செல்ல மறுக்கிறான். ஆனால் வலுக்கட்டாயமாக வனிதா இழுப்பதால் வெறுக்கிறான். இதனால் திடீர் என்று அவன் எப்படி மாறுவான்.

இவ்வாறு ஆகாஷ் கூறினார்.

மகனை ஒப்படைக்க கோரி முதல் கணவர் வீட்டு முன்பு நடிகை வனிதா உண்ணாவிரதம்

திருச்சி : ""மரியம்பிச்சையின் சாவில் மர்மம் இருக்கிறது,'' என்று, முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டசபைத் தேர்தலில், திருச்சி மேற்கு தொகுதியில் தி.மு.க., அமைச்சர் நேருவை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்ற அ.தி.மு.க.,வின் மரியம்பிச்சை, சுற்றுச்சூழல் அமைச்சராக நியமிக்கப்பட்டார்.நேற்று முன்தினம், சென்னையிலிருந்து திருச்சி வந்த அவர், நேற்று காலை 6.30 மணிக்கு பெரும்பிடுகு முத்தரையரின் சதய விழாவை முன்னிட்டு, அவரது சிலைக்கு மாலை அணிவித்தார். இந்நிகழ்ச்சியில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சிவபதி, கலெக்டர் மகேசன் காசிராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழாவுக்குப் பின், அங்கிருந்தே சென்னையில் நடந்த எம்.எல்.ஏ.,க்கள் பதவியேற்பு விழா நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அமைச்சர்கள் மரியம்பிச்சையும், சிவபதியும் தனித்தனி காரில் புறப்பட்டனர்.அமைச்சர் மரியம்பிச்சையின் கார் பாடாலூர் அருகே சென்று கொண்டிருந்த போது, முன்னால் சென்ற கன்டெய்னர் லாரி மீது மோதியது. இதில், காரின் ஒருபக்க முன்பகுதி நொறுங்கியது. டிரைவர் அருகில் உட்கார்ந்திருந்த அமைச்சர் மரியம்பிச்சை, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.அவருக்கு பின்னால் வந்த பாதுகாப்பு போலீசாரின் சுமோவில், திருச்சி அரசு மருத்துவமனைக்கு, போலீசார் கொண்டு வந்து பரிசோதித்த போது, அவர் இறந்தது உறுதி செய்யப்பட்டது. பிரேத பரிசோதனைக்குப் பின், மரியம்பிச்சை உடல், வீட்டில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

அமைச்சர் மரியம்பிச்சையின் மரண செய்தி கேள்விப்பட்ட முதல்வர் ஜெயலலிதா, சென்னையில் நடந்த எம்.எல்.ஏ.,க்கள் பதவியேற்பு விழாவில் சிறிது நேரம் பங்கேற்று விட்டு, அமைச்சர்கள் பன்னீர்செல்வம், செங்கோட்டையன் ஆகியோருடன் தனி விமானத்தில், மதியம் 2.30 மணிக்கு திருச்சி வந்தார்.விமான நிலையத்தில் இருந்து நேராக, மரியம்பிச்சை வீட்டுக்குச் சென்ற முதல்வர் ஜெயலலிதா, மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அப்போது, அங்கிருந்த மரியம்பிச்சை மனைவி பாத்திமா கனி, மகன் ஆசிக் மீரான் உள்ளிட்ட குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார்.

பின்னர் நிருபர்களிடம் ஜெயலலிதா கூறியதாவது:மரியம்பிச்சை இழப்பு கட்சிக்கும், அவரது குடும்பத்துக்கும் பேரிழப்பு. மூன்று முறை மாநகராட்சி கவுன்சிலராக இருந்து படிப்படியாக அரசியலில் உயர்ந்தவர். நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவர், இப்படி அகால மரணம் அடைவார் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை.பொதுமக்கள், கட்சியினர், அவரது குடும்பத்தாரிடம் விசாரித்ததில், மரியம்பிச்சையின் சாவில் மர்மம் இருக்கிறது. அதுகுறித்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளேன். இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி., போலீசாரின் விசாரணைக்கு மாற்றப்படும். குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர். மரியம்பிச்சையின் ஆத்மா சாந்தியடைய, எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறினார்.

"மரியம்பிச்சையின் சாவில் மர்மம் இருக்கிறது' : முதல்வர் ஜெ., பரபரப்பு பேட்டி

ஸ்பெக்ட்ரம் வழக்கில் கனிமொழி கைது செய்யப்பட்டு, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் தன்னை ஜாமீனில் விடுவிக்கக்கோரி, நேற்று டெல்லி ஐகோர்ட்டில் கனிமொழி மனுதாக்கல் செய்தார்.

இதேபோல் கலைஞர் டி.வி. நிர்வாக இயக்குநர் சரத்குமாரும் மனுதாக்கல் செய்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.

மனுவை விசாரித்த நீதிபதி வழக்கை வருகிற 30-ம் தேதிக்கு தள்ளிவைத்தார். மேலும் இது குறித்து விளக்கம் கேட்டு சி.பி.ஐ.க்கு நோட்டீஸ் அனுப்ப கோர்ட் உத்தரவிட்டது.

கனிமொழி ஜாமீன் மனு :விசாரணை ஒத்திவைப்பு

சென்னையை அடுத்த படப்பை அருகே நடிகர் வடிவேலுவின் பண்ணை வீட்டின் கண்ணாடி ஜன்னல்கள் மர்ம நபர்களால் அடித்து நொறுக்கப்பட்டது.

படப்பையை அடுத்த புஷ்பகிரி பகுதியில் நடிகர் வடிவேலுவுக்கு மாமர தோப்புடன் கூடிய பண்ணை வீடு உள்ளது. இங்கு வேலு என்பவர் காவலாளியாக வேலை செய்து வருகிறார்.

வேலு தனது குடும்பத்துடன் இந்த தோப்பில் தனி வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் திங்கள்கிழமை மாலை வடிவேலுவின் பண்ணைக்கு வந்த சுமார் 30க்கும் மேற்பட்ட மர்ம நபர்கள், காவலாளி வேலுவிடம் வடிவேலுவின் தொலைபேசி எண்ணைக் கொடுக்குமாறு மிரட்டியுள்ளனர். அதற்கு அவர், தொலைபேசி எண் தெரியாது என்று கூறியுள்ளார்.

உடனே மர்ம நபர்கள் வேலுவுடைய செல்போனைப் பிடுங்கி அதில் வடிவேலுவின் நம்பர் இருக்கிறதா என பார்த்தனராம். அதில் நடிகர் வடிவேலுவின் எண் இல்லாததால் செல்போனை

அவரிடம் கொடுத்த மர்ம நபர்கள், வீட்டின் 6 கண்ணாடி ஜன்னல்களை அடித்து நொறுக்கினர். மேலும் வரும் சனிக்கிழமைக்குள் இந்த இடத்தை காலி செய்துவிடவேண்டும் என்றும் இல்லையென்றால் நாங்களே ஜேசிபி இயந்திரம் கொண்டு வந்து வீட்டை இடிப்போம் என்றும் மிரட்டிச் சென்றுள்ளனர்.

இதையடுத்து காவலாளி வேலு பண்ணை மேலாளர் சங்கருக்கு இந்தத் தகவலைத் தெரிவித்தார். மேலாளர் சங்கர் மணிமங்கலம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். இது குறித்து மணிமங்கலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

நடிகர் வடிவேலு பண்ணை வீடு மீது தாக்குதல்

ஆந்திர திரையுலகில் நடிகை இலியானா சிக்கலுக்கு மேல் சிக்கலை சந்தித்து வருகிறார். அவருக்கு தொழில் தடை விதிக்க சக்தி பட தயாரிப்பாளர் முயன்று வருகிறார். தெலுங்கில் சக்தி என்ற படத்தில் நடித்தார் இடுப்பழகி இலியானா. இந்த படத்தில் நடிப்பதற்காக அவர் வாங்கிய சம்பளம் ரூ. ஒன்றரை கோடி. தென்னிந்திய நடிகைகளிலேயே அதிக சம்பளம் வாங்கியவர் என்ற பெருமையுடன் வலம் வந்த இலியானாவுக்கு இப்போது புதிய சிக்கல் உருவாகியிருக்கிறது.

படத்தின் ஹீரோ ஜூனியர் என்டிஆருக்கும், இலியானாவுக்கு சூட்டிங் ஸ்பாட்டில் ஆரம்பித்த பிரச்னை படம் ரீலிஸ் ஆன பிறகும் தொடர்ந்தது. சூட்டிங் சமயத்தில் டைரக்டர் மற்றும் ஹீரோவுக்கு சரிவர ஒத்துழைப்பு கொடுக்காததால் இலியானா மீது ஏக கடுப்பில் இருந்த தயாரிப்பு தரப்பு, ரீலிசுக்கு பிறகும் அம்மணியின் ஒத்துழைப்பு இல்லாததால் கடுப்பின் உச்சத்துக்கே சென்று விட்டதாம். சக்தி பட புரமோஷன் நிகழ்ச்சிகளுக்கு வர முடியாது என்று இலியானா கூறியதால், அப்செட் ஆன படக்குழுவினர், படத்தின் தோல்வியால் மெலும் அப்செட் ஆனார்கள்.

இலியானா மட்டும் பு‌ரமோஷனுக்கு வந்திருந்தால், ஓரளவு படம் இன்னும் கொஞ்ச நாள் ஓடியிருக்கும் என்று வாதிடும் தயாரிப்பாளர், இதுதொடர்பாக சங்கத்தில் முறையிட்டிருக்கிறார். முடிந்தால் கொடுத்த சம்பளத்தில் பாதியை பிடுங்குவது; இல்லையென்றால் இலியானாவுக்கு தொழில் தடை விதிப்பது என இரண்டு முடிவுகளையும் சொல்லி சங்கத்தை நெருக்குகிறாராம் தயாரிப்பாளர்.

ஏற்கனவே தமிழ் திரையுலகிற்கு எதிராக செயல்பட்ட குத்து ரம்யா உள்ளிட்ட சில நடிகைகளுக்கு கோலிவுட்டில் தொழில் தடை விதித்ததும், அதன் பிறகும் அவர்கள் அடுத்தடுத்த படங்களில் நடித்துக் கொண்டிருப்பதும் பாமர ரசிகனுக்குக் கூட தெரியுமே!

இலியானாவுக்கு தொழில் தடை! சிக்கலுக்கு மேல் சிக்கல்!!

தெய்வத் திருமகன் படத்தின் பெயரை மாற்றக் கோரி நடிகர் விக்ரம் வீட்டு முன்பு ஆர்ப்பாட்டம் நடத்திய 100 பேரை போலீசார் கைது செய்தனர்.

சென்னையில் திருவான்மியூரில் உள்ள நடிகர் விக்ரம் வீட்டு முன்பு ஃபார்வர்டு பிளாக் கட்சியைச் சேர்நதவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். விக்ரம் நடித்துள்ள தெய்வத் திருமகன் படத்தின் பெயரை மாற்றக்கோரி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

'மாத்து மாத்து தேவரய்யாவை இழிவுபடுத்து பேரை மாத்து' என அவர்கள் கோஷமிட்டபடி வீட்டை முற்றுகையிட முனைந்தனர்.

இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஃபார்வர்டு பிளாக் கட்சியைச் சேர்நத 100 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து நடிகர் விக்ரம் வீட்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

நல்ல முடிவு வரும்...

இதுகுறித்து பின்னர் கருத்து தெரிவித்த நடிகர் விக்ரம், "இதுபற்றி நான் கருத்து சொல்லி அவர்களின் கோபத்தை கிளற விரும்பவில்லை. இந்தப் பட பெயர் யாரையும் இழிவுபடுத்தாது. பெருமைதான் சேர்க்கும். சம்பந்தப்பட்டவர்களுடன் பேசி நல்ல முடிவு எட்டப்படும்", என்றார்.

'பேரை மாத்து...': விக்ரம் வீடு ஆர்ப்பாட்டம்; 100 பேர் கைது

தமிழகத்தில், காங்., தலைவர் தங்கபாலுவுக்கு நாளுக்கு நாள் எதிர்ப்பு வலுப்பதால், அவரை நீக்கிவிட்டு, வேறு தலைவரை நியமிக்கலாமா என, கட்சித் தலைமை தீவிர ஆலோசனையில் இறங்கியுள்ளது. ஏற்கனவே, மத்திய அமைச்சர் சிதம்பரம், இதே கோரிக்கையை வலியுறுத்திய நிலையில், மத்திய அமைச்சர் வாசனும், சோனியாவை நேற்று சந்தித்து, தங்கபாலுவை நீக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். இதையடுத்து, தமிழக காங்கிரசில், தேர்தல் முடிவுக்குப் பின், பெரிய மாற்றம் வரலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.

காங்கிரஸ் கட்சியில் நாளுக்கு நாள், கோஷ்டிப் பூசல் வலுக்கிறது. கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் துணைமேயர் கராத்தே தியாகராஜன், எஸ்.வி.சேகர் எம்.எல்.ஏ., தென் சென்னை மாவட்டத்தலைவர் மங்கள்ராஜ் உட்பட, 19 பேரை, தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, அதிரடியாக நீக்கினார்.நீக்கப்பட்ட மூவரும், மத்திய அமைச்சர்கள் சிதம்பரம், வாசன், முன்னாள் அமைச்சர் இளங்கோவனின் ஆதரவாளர்கள். எனவே, தங்கபாலுவின் அதிரடி நீக்கம் நடவடிக்கை, தமிழக காங்கிரசுக்குள் பெரும் புயலை கிளப்பியுள்ளது. வேட்பாளர் தேர்வில் தங்கபாலு செய்த குளறுபடியால், அனைத்து கோஷ்டித் தலைவர்களும் தங்கபாலு மீது அதிருப்தி அடைந்தனர்.தங்கபாலுவுக்கு எதிராக, தினமும் நடந்து வரும் போராட்டத்தை, டில்லி மேலிடம் உன்னிப்பாக கவனித்து வருகிறது. உள்துறை அமைச்சர் சிதம்பரம், சோனியாவை சந்தித்து பேசியபோது, "தங்கபாலு, தன்னிச்சையாக கட்சியை நடத்துகிறார். கட்சியின் விதிமுறைகளுக்கு முரணாக, பலரையும் நீக்கம் செய்துள்ளார். இவரது தலைமை நீடிக்கக் கூடாது' என்ற கோரிக்கையை விடுத்திருந்தார்.

இந்நிலையில், நேற்று காலை 11.30 முதல், 12.05 மணி வரை, சோனியாவை, வாசன் நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது, தேர்தல் வெற்றி வாய்ப்பு, வேட்பாளர்கள் குளறுபடி, தமிழக காங்கிரஸ் தலைமை மீது தொண்டர்களுக்கு ஏற்பட்டுள்ள அதிருப்தி குறித்து, சோனியாவிடம் விளக்கியுள்ளார்.வாசன் தெரிவித்த அனைத்து விவரங்களையும், அமைதியாக கேட்டு கொண்டிருந்த சோனியா, "நீங்கள் ஏன் தமிழக காங்., தலைவர் பதவியை ஏற்றுக்கொள்ள கூடாது?' என கேட்டதாகவும், அதற்கு வாசன், "நான் அகில இந்திய காங்கிரஸ் செயலராகவும், தமிழக காங்., தலைவராகவும் பணியாற்றியிருக்கிறேன்' என்ற பதிலை மட்டும் கூறியதாகவும், டில்லி வட்டாரங்கள் கூறுகின்றன.சோனியாவே கேட்டுக் கொண்டதால், தட்டிக் கழிக்காமல், வாசன் தலைவர் பதவியை ஏற்க முன் வருவாரா அல்லது தன் ஆதரவாளர்களுக்கு தலைவர் பதவியை பெற்றுக் கொடுப்பாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. தற்போது, அவர் கேபின்ட் அமைச்சராக இருப்பதால், மாநில தலைவர் பதவியை விரும்பவில்லை.

மத்திய அமைச்சர் மற்றும் மாநில தலைவர் என்ற இரண்டு பதவிகளையும் கொடுத்தால், தலைவர் பதவியை ஏற்க வாசன் விருப்பம் தெரிவிப்பார். இல்லையென்றால் தன் ஆதரவாளர்களான எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியத்திற்கு தலைவர் பதவியை பெற்றுக் கொடுப்பார் என, அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.

சிதம்பரம் தரப்பில், கடலூர் எம்.பி., கே.எஸ்.அழகிரியை தலைவராக்குவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளதாக தெரிகிறது. ஒட்டு மொத்த கோஷ்டித் தலைவர்களுக்கும் பொதுவானவர் என்ற அடிப்படையில், இளங்கோவனை தலைவராக நியமிக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது.தேர்தல் முடிவு வெளியாகி, புதிய அரசுகள் அமைந்த பின், சில மாநிலங்களில் காங்கிரஸ் தலைவர்கள் பதவி மாற்றப்படுகிறது. அந்த மாநில தலைவர்கள் மாற்றம் பட்டியலில், தமிழகமும் இடம் பெறும் என, காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் காங்., தலைவருக்கு வலுக்கிறது எதிர்ப்பு: கட்சித் தலைமை தீவிர யோசனை

தெற்கு சீனாவில் குவாங்டாங் மாகாணத்தில் போஸ் கான் நகரம் உள்ளது. இது தொழிற்சாலைகள் நிறைந்த பகுதியாகும். நேற்று இங்கு கடுமையான சூறாவளி காற்று வீசியது. அதைத்தொடர்ந்து ஆலங்கட்டி மழையும் பெய்தது. இதனால் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

போஸ்கான் நகரம் மட்டுமின்றி அதை சுற்றியுள்ள ஹாங்ஷூ, ஷாலோகிங், டொங்கன் ஆகிய இடங்களிலும் கடும் சூறாவளியுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. வினாடிக்கு 45.5 மீட்டர் வேகத்தில் காற்று வீசியது. இதனால் அங்கிருந்த வீட்டு சுவர்கள் இடிந்து விழுந்தன. வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளின் கூரைகள் காற்றில் பறந்தன.

அதே நேரத்தில் பேய்மழை பெய்ததால் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. நேற்று வீசிய சூறாவளி காற்று மற்றும் ஆலங்கட்டி மழைக்கு 17 பேர் பலியாகினர். 118 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். மழையால் 506.7 ஹெக்டேர் விளைநிலங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. இதனால் ரூ.35 கோடிக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.

சீனாவில் சூறாவளியுடன் ஆலங்கட்டி மழை:17 பேர் பலி; 118 பேர் காயம்

தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவை, சட்டசபை தேர்தலுக்கு முன்பே மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை, கோஷ்டித் தலைவர்கள் சிலர் காங்கிரஸ் தலைவர் சோனியாவிடம் தெரிவித்தனர்.

சட்டசபை தேர்தலை முன்னிட்டு, தி.மு.க., கூட்டணியில் காங்கிரஸ் 63 தொகுதிகளை கடும் போராட்டத்திற்கு பின் பெற்றது. வேட்பாளர்கள் தேர்வில் ஐவர் குழுவினரின் சிபாரிசு பட்டியல் எடுபடவில்லை. தங்கபாலுவின் ஆதரவாளர்கள் 11 பேர் இடம் பெற்றனர். இதனால், தங்கபாலு மீது ஐவர் குழுவினர் அதிருப்தி அடைந்தனர்.

அத்துடன், கட்சிக்கு எதிராக செயல்பட்டதாக, முன்னாள் துணை மேயர் கராத்தே தியாகராஜன், நடிகர் எஸ்.வி.சேகர் எம்.எல்.ஏ., உட்பட 19 பேரை காங்கிரசிலிருந்து நீக்கி விட்டதாக தங்கபாலு அதிரடியாக அறிவித்தார். இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ் கட்சியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தங்கபாலுவுக்கு எதிராக தினம் ஒரு போராட்டம் நடந்து வருகிறது.

முன்னாள் மத்திய அமைச்சர் இளங்கோவன், தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா, அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், கே.எஸ்.அழகிரி எம்.பி., ஜெயக்குமார் எம்.எல்.ஏ., ஆகியோர் தங்கபாலுவின் முடிவுக்கு தங்களது எதிர்ப்பை பத்திரிகைகள் மூலமாக தெரிவித்துள்ளனர்.

கடந்த இரு தினங்களுக்கு முன் காங்கிரஸ் தலைவர் சோனியாவை, டில்லியில் சந்தித்த மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம், தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவை மாற்ற வேண்டும் என, வலியுறுத்தினார்.
இந்நிலையில், மத்திய அமைச்சர் வாசனும் நேற்று மாலை சென்னையிலிருந்து டில்லிக்கு புறப்பட்டு சென்றார்.

டெல்லி சென்ற அவர் இன்று சோனியா காந்தியை சந்தித்தார். அப்போது தமிழகத்தில் தேர்தலுக்கு பிறகு உள்ள சூழ்நிலை குறித்து சோனியா கேட்டறிந்தார். மேலும் 19 பேரை காங்கிரசிலிருந்து நீக்கி தங்கபாலு அறிவித்தது குறித்தும் வாசன் சோனியாவுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

சோனியா - ஜி.கே.வாசன் சந்திப்பு தமிழக காங். பிரச்சனை குறித்து ஆலோசனை

பெரெய்லி: ஓடும் ரயிலில் இருந்து கால்பந்து வீராங்கனையை, கொள்ளையர்கள் வெளியே தள்ளி விட்டுள்ளனர். அப்போது, எதிரே வந்த ரயில் அவரது கால் மீது ஏறிச் சென்றதால், இடது காலை பரிதாபமாக இழந்துள்ளார்.
இந்தியாவின் முன்னணி கால்பந்து வீராங்கனை சோனு என்ற அருணிமா சின்கா(23). இவர் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்றுள்ளார். வாலிபால் போட்டிகளிலும் பங்கேற்ற அனுபவம் இவருக்கு உண்டு. வேலை வாய்ப்பு தேடி, பரீட்சை எழுத லக்னோவில் இருந்து "பத்மாவதி எக்ஸ்பிரஸ்' மூலம் டில்லி சென்றுள்ளார். உ.பி.,யில் உள்ள பெரெய்லி மற்றும் செனாடி இடையே ரயில் சென்ற போது, சில கொள்ளையர்கள் சோனுவை சூழ்ந்து கொண்டுள்ளனர். அவரது கழுத்தில் இருந்த தங்கச் செயினை பறிக்க முயன்றுள்ளனர். அப்போது சோனு தடுக்க, ஆத்திமடைந்த கொள்ளையர்கள், அவரை பிடித்து ஓடும் ரயிலில் இருந்து வெளியே தள்ளி விட்டுள்ளனர்.
தண்டவாளத்தில் விழுந்த நிலையில், அவரை துரதிருஷ்டம் துரத்தியுள்ளது. எதிர் திசையில் மின்னல் வேகத்தில் வந்த மற்றொரு ரயில் சோனுவின் கால்கள் மீது ஏறிச் சென்றுள்ளது. இதில், இடது முழங்காலுக்கு கீழே துண்டிக்கப்பட்டு ரத்தம் கொட்டியிருக்கிறது. உடனே அருகில் இருந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு இடது காலை அகற்ற வேண்டிய பரிதாப நிலைமை ஏற்பட்டது.
இது குறித்து அருணிமா கூறுகையில்,""எனது தங்கச் செயினை பறிக்க கொள்ளையர்கள் முயன்றனர். இதனை தடுத்த போது, என்னை ஓடும் ரயிலில் இருந்து வெளியே தள்ளி விட்டனர். தண்டவாளத்தில் விழுந்த என்னால் எழுந்திருக்க முடியவில்லை. எதிரே வந்த ரயில் எனது கால் மீது ஏறிச் சென்றது,''என்றார்.
இது குறித்து மத்திய விளையாட்டு துறை அமைச்சர் அஜய் மேகன் கூறுகையில்,""இச்சம்பவம் பற்றி விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யும்படி ரயில்வே துறையை கேட்டுக் கொண்டுள்ளோம். சோனுவுக்கு சிறந்த மருத்துவ சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்படும்,''என்றார்.

காலை இழந்த கால்பந்து வீராங்கனை ஓடும் ரயிலில் கொள்ளையர் அட்டகாசம்

மதுரை : ""இத்தேர்தலில் வேட்பாளர் செலவு செய்ய வேண்டிய தொகையை காட்டிலும் குறைவாக தான் தி.மு.க., வேட்பாளர்கள் செலவு செய்திருக்கின்றனர்,'' என, மத்திய அமைச்சர் மு.க.அழகிரி கூறினார். மதுரை மேற்கு தொகுதிக்குட்பட்ட முத்துப்பட்டி மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில், மு.க.அழகிரி தனது குடும்பத்தினருடன் ஓட்டளித்தார்.
பின் அவர் கூறியதாவது: தி.மு.க.,வினர் ஓட்டுக்கு 200 ரூபாய் கொடுப்பதாக அ.தி. மு.க.,வினர் கூறுகின்றனரே?
எப்போதுமே அப்படி தான் கூறுவர். தோல்வி பயத்தில் பலவற்றை கூறுகின்றனர். "நாங்கள் வன்முறையில் ஈடுபடுவோம்; பணம் கொடுக்குகிறோம்' என்று ஏதோதோ கூறுகின்றனர்.
தேர்தலில் தி.மு.க., 50 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்ததாக ஜெயலலிதா கூறியிருக்கிறாரே?
தேர்தல் கமிஷன் எப்படி இருந்தது என்பது உங்களுக்கு தெரியும். நாங்கள் எப்படி அவ்வளவு செலவு செய்திருக்க முடியும். ஒரு வேட்பாளர் செலவு செய்ய வேண்டிய தொகையை காட்டிலும் குறைவாக தான் செலவு செய்திருக்கிறோம்.
தேர்தல் பிரசாரத்தில் ஊழல் பெரிய விஷயமாக...
(இடைமறித்து) எங்கள் சாதனைகளை சொல்லி ஓட்டு கேட்கிறோம். 200 இடங்களில் வெற்றி பெறுவோம். அவர்கள் எந்த சாதனையும் செய்யவில்லை. கருணாநிதி குடும்பத்தை மட்டும் தான் குறை கூறுகின்றனர்.
"2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழல்...
(இடைமறித்து) "2ஜி'யும் கிடையாது. "1ஜி'யும் கிடையாது.
தி.மு.க., தலைவர்களை ஜெயலலிதா அதிக விமர்சனம் செய்கிறாரே?
அவருக்கு கொள்கை எதுவும் கிடையாது. தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் பழிவாங்கும் என்று கூறுவார். அவர் சொல்வதை தான் பத்திரிகைகள் பெரிதுபடுத்துகின்றன.
தி.மு.க., மீது அதிகம் குற்றம் சாட்டப்படுகிறதே?
தேர்தல் கமிஷன் அ.தி. மு.க.,வுக்கு ஆதரவாக, மதுரை மட்டுமின்றி, தமிழகம் முழுவதும் செயல்படுகிறது. தி.மு.க., கூட்டணி தோற்க வேண்டுமென்று அவர்கள் வேலை பார்க்கின்றனர்.
கருத்து கணிப்பு பற்றி?
அதெல்லாம் சும்மா. தென் மாவட்டங்களில் குறைந்தது 40 முதல் 45 இடங்களில் வெற்றி பெறுவோம். இவ்வாறு அழகிரி கூறினார்.

ரூ.50 ஆயிரம் கோடி செலவு செய்தோமா? அழகிரி

நடிகை திரிஷாவின் வீடு, சென்னை ஆழ்வார்பேட்டையில் இருக்கிறது. அவர் ஓட்டுப்போடுவதற்காக, ஆழ்வார்பேட்டையில் உள்ள பிரான்சிஸ் சேவியர் பள்ளியில் அமைக்கப்பட்டு இருந்த ஓட்டுச்சாவடிக்கு, பிற்பகல் 1 மணிக்கு வந்தார். அவருடன் தாயார் உமா கிருஷ்ணன், பாட்டி சாரதா ஆகியோரும் வந்தார்கள்.

அப்போது அந்த வாக்குச்சாவடியில் கூட்டம் குறைவாகவே இருந்தது. திரிஷா தனது தாயார், பாட்டி ஆகியோருடன் கியூவில் நிற்காமல், நேராக ஓட்டுப்போடும் அறையை நோக்கி சென்றார்.

உடனே, கியூவில் நின்ற ஒரு வாக்காளர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். கியூவில் நின்று ஓட்டுப்போடும்படி திரிஷாவிடம் கூறினார். அதை பொருட்படுத்தாமல் திரிஷா, ஓட்டுப்போடும் அறைக்குள் செல்ல முயன்றார்.

அப்போது திரிஷாவுக்கும், எதிர்ப்பு தெரிவித்த வாக்காளருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. இருவரும் ஒருவரையொருவர் ஆங்கிலத்தில் திட்டிக்கொண்டார்கள்.

எதிர்ப்பு தெரிவித்த வாக்காளர் அங்கு நின்று கொண்டிருந்த போலீஸ் அதிகாரியிடம் சென்று, திரிஷா மீது புகார் செய்தார். எல்லோரும் கியூவில் நின்று ஓட்டுப்போடும்போது, திரிஷா மட்டும் நேராக சென்று ஓட்டுப்போடலாமா?'' என்று கேட்டார்.

உடனே அந்த போலீஸ் அதிகாரி, புகார் செய்த வாக்காளரிடம் அடையாள அட்டையை காண்பிக்கும்படி கேட்டார். அவர் அடையாள அட்டையை காண்பித்ததும், போலீஸ் அதிகாரி திரிஷாவிடம் சென்று, உங்கள் பாட்டி மூத்த குடிமகள் என்பதால், அவர் கியூவில் நிற்க தேவையில்லை. ஆனால் நீங்களும், உங்கள் தாயாரும் கியூவில் நின்று ஓட்டுப்போட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

அதன்பிறகு திரிஷாவும், அவருடைய தாயாரும் சுமார் 20 நிமிடங்கள் கியூவில் நின்று ஓட்டுப்போட்டார்கள்.

நடிகை திரிஷாவுக்கும், வாக்காளருக்கும் தகராறு

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் தொழில் தரகர் நீரா ராடியாவுக்கு தொடர்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. ஸ்பெக்ட்ரம் தொடர்பாக அவர் பல்வேறு தொழில் அதிபர்களிடமும் மற்றவர்களிடமும் டெலிபோனில் பேசிய டேப் ஆதாரங்கள் சிக்கி இருந்தன. அதுபற்றி நீரா ராடியாவிடம் சி.பி.ஐ. பல்வேறு கட்டமாக விசாரணை நடத்தியது.

சமீபத்தில் பாராளுமன்ற கூட்டுக்குழு அவரிடம் விசாரித்தது. இந்த நிலையில் நேற்று நீரா ராடியா திடீரென மயங்கி விழுந்தார். பேச்சு, மூச்சு இல்லாமல் மயங்கி கிடந்த அவரை தனியார் ஆஸ்பத்திரி ஒன்றில் சேர்த்தனர். நீண்ட நேர சிகிச்சைக்கு பிறகு அவர் மயக்கம் தெளிந்தார்.

இதுபற்றி டாக்டர்களிடம் கேட்டபோது, ராடியா உடலில் ஏற்பட்ட ஏதோ பாதிப்பின் காரணமாக மயக்கம் ஏற்பட்டுள்ளது.இதை கண்டறிய பல்வேறு சோதனைகளை நடத்தி வருகிறோம். சோதனை முடிவில்தான் மயக்கத்துக்கான காரணம் தெரிய வரும். பின்னர் அதற்குரிய சிகிச்சை அளிக்கப்படும் என்றனர்.

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சிக்கிய நீரா ராடியா மயங்கி விழுந்தார்; ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் தொழில் தரகர் நீரா ராடியாவுக்கு தொடர்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. ஸ்பெக்ட்ரம் தொடர்பாக அவர் பல்வேறு தொழில் அதிபர்களிடமும் மற்றவர்களிடமும் டெலிபோனில் பேசிய டேப் ஆதாரங்கள் சிக்கி இருந்தன. அதுபற்றி நீரா ராடியாவிடம் சி.பி.ஐ. பல்வேறு கட்டமாக விசாரணை நடத்தியது.

சமீபத்தில் பாராளுமன்ற கூட்டுக்குழு அவரிடம் விசாரித்தது. இந்த நிலையில் நேற்று நீரா ராடியா திடீரென மயங்கி விழுந்தார். பேச்சு, மூச்சு இல்லாமல் மயங்கி கிடந்த அவரை தனியார் ஆஸ்பத்திரி ஒன்றில் சேர்த்தனர். நீண்ட நேர சிகிச்சைக்கு பிறகு அவர் மயக்கம் தெளிந்தார்.

இதுபற்றி டாக்டர்களிடம் கேட்டபோது, ராடியா உடலில் ஏற்பட்ட ஏதோ பாதிப்பின் காரணமாக மயக்கம் ஏற்பட்டுள்ளது.இதை கண்டறிய பல்வேறு சோதனைகளை நடத்தி வருகிறோம். சோதனை முடிவில்தான் மயக்கத்துக்கான காரணம் தெரிய வரும். பின்னர் அதற்குரிய சிகிச்சை அளிக்கப்படும் என்றனர்.

‘அருந்ததீ’ படமம் மூலம் தமிழில் அறிமுகமானவர் அனுஷ்கா. தொடர்ந்து சிங்கம், வேட்டைக்காரன் போன்ற படங்களில் நடித் துள்ளார். அனுஷ்காவின் ஐதராபாத் வீட்டில் சமீபத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

இதில் கணக்கில் காட்டாத தங்க நகைகள், ரொக்கம், சொத்து பத்திரங்கள் போன்றவற்றை கைப்பற்றினர். விசாகபட்டினம் வீட்டில் அனுஷ்காவுக்கு சொந்தமாக உள்ள வீட்டு பத்திரங்களையும் பறிமுதல் செய்தனர்.அந்த வீடு எப்படி வாங்கப்பட்டது என்று கேள்வி கேட்டனர்.

நாகார்ஜுனா, ரவிதேஜா, வீடுகளிலும் சோதனை நடந்தது. இந்த சோதனையால் அனுஷ்கா மிகவும் அதிர்ச்சியாகி உள்ளார். தன்னை குறிவைத்து திட்டமிட்டு இந்த சோதனை நடத்தப் பட்டதாகவும், தனக்கு எதிராக சதி திட்டங்கள் நடப்பதாகவும் நெருக்கமானவர்களிடம் கூறிவருகிறார்.

தெலுங்கு பட உலகின் பிரபல நடிகர் ஒருவரின் வற்புறுத்தலால்தான் விசாகபட்டினம் பீச்சில் வீடு வாங்கியதாக கூறப்படுகிறது. அது சர்ச்சையை கிளப்பும் என்று எதிர்பார்க்க வில்லை. சில நாட்கள் பெங்களூர் வீட்டில் தங்கி கவலையை மறக்க முடிவு செய்துள்ளாராம்.

வருமான வரி சோதனை; அனுஷ்காவை சிக்க வைத்த தெலுங்கு நடிகர்

புதுடில்லி: ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு மோசடி தொடர்பாக, வரும் 31ம் தேதிக்குள் தி.மு.க., எம்.பி.,யும், முதல்வர் கருணாநிதியின் மகளுமான கனிமொழியிடம் சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தலாம் என, கூறப்படுகிறது. சுப்ரீம் கோர்ட்டிற்கு விரைவில் பதிலளிக்க வேண்டிய சூழ்நிலை சி.பி.ஐ.,க்கு ஏற்பட்டிருக்கிறது.

"2ஜி' ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு மோசடி தொடர்பாக, முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா உட்பட சிலர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். அமைச்சராக இருந்த போது, சுவான் டெலிகாம் நிறுவனத்திற்கு ராஜா சலுகை காட்டியதாகவும், அதற்கு பிரதிபலனாக கலைஞர் "டிவி'க்கு குறிப்பிட்ட தொகையை சுவான் நிறுவனத்தின் தலைவர் பல்வா வழங்கியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவின்படி, வரும் 31ம் தேதிக்குள் ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ., அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அதனால், அதற்கு முன்பாக முக்கிய பிரமுகர்கள் சிலரிடம் ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு மோசடி தொடர்பாக விசாரணை நடத்த சி.பி.ஐ., அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். அந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்களில் குறிப்பிடத்தக்கவர் ராஜ்யசபா எம்.பி.,யும், முதல்வர் கருணாநிதியின் மகளுமான கனிமொழி. அவரிடம் வரும் 31ம் தேதிக்குள் சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தலாம்.

இது தொடர்பாக சி.பி.ஐ., உயர் அதிகாரி ஒருவர் ஐ.ஏ.என்.எஸ்., செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், "ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக, முதல்வர் கருணாநிதியின் மகள் கனிமொழியிடம் விசாரணை நடத்துவது தவிர்க்க முடியாதது. அவரிடம் மார்ச் 31ம் தேதிக்குள் விசாரணை நடத்தப்படும். இது தொடர்பாக கனிமொழிக்கு விரைவில் சம்மன் அனுப்பப்படும். சுவான் டெலிகாம் நிறுவன புரமோட்டர் ஷாகித் பல்வாவின் டிபி ரியாலிட்டி நிறுவனத்திடம் இருந்து கலைஞர் "டிவி'க்கு 200 கோடி ரூபாய் வழங்கப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்தப்படும். கலைஞர் "டிவி'யில் கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்களுக்கு பங்கு உள்ளது. குறிப்பாக கனிமொழிக்கு 20 சதவீத பங்கு உள்ளது' என்றார். இருந்தாலும், அதே கலைஞர் "டிவி'யின் மற்றொரு பங்குதாரராக உள்ள கருணாநிதியின் மனைவி தயாளுவிடம் விசாரணை நடத்தப்படுவதற்கு வாய்ப்பில்லை. அவர் அதில், "சிலீப்பிங் பார்ட்னர்' என்ற வகையில் அவரை விசாரிக்க வாய்ப்பில்லை என்று சி.பி.ஐ., தரப்பில் கூறப்படுகிறது.

கனிமொழியிடம் விசாரிப்பதற்கு முன்னதாக கலைஞர் "டிவி' நிர்வாக இயக்குனர் சரத்குமாரிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது. இதற்காக கடந்த 8ம் தேதியே அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அவர் ஏற்கனவே சி.பி.ஐ., நடத்திய விசாரணையில், பல்வாவிடம் இருந்து பணம் ஏதும் பெறவில்லை என்று குறிப்பிட்டிருந்தார். தற்போது ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை சுப்ரீம் கோர்ட் கண்காணிப்பில் சி.பி.ஐ., விசாரிப்பதால், விசாரணைத் தகவல்கள், அது குறித்த டைரிக் குறிப்புகளை சுப்ரீம் கோர்ட்டில் தெரிவிக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. கடந்த சில தினங்களுக்கு முன், காங்கிரஸ் - தி.மு.க., இடையே நடந்த "சீட்' ஒதுக்கீடு பிரச்னையின் போது, தி.மு.க., அமைச்சர்கள் ராஜினாமா முதலில் காங்கிரசை வியப்படைய வைத்தது. "2ஜி' ஸ்பெக்ட்ரம் விஷயத்தில் நடத்தப்படும் விசாரணை சற்று மெதுவாகச் செல்ல வேண்டும் என்ற கருத்தை தி.மு.க., தரப்பில் முன்வைத்ததாகவும், இதில் காங்கிரஸ் தலைவர் சோனியா கோபமடைந்து முதலில் இவர்களுடைய குழுவுடன் பேச முன்வரவில்லை என்றும் கூறப்பட்டது. ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் தங்கள் கைகள் கட்டப்பட்டிருக்கிறது என்றும், சுப்ரீம் கோர்ட்டிற்கு பதிலளிக்கும் நிலை இருக்கிறது என்பதையும் சுட்டிக்காட்டியதாகக் கூறப்பட்டது. ஆனால், தற்போது ஜே.பி.சி., விசாரணைக்கு அனுமதி, மறுபக்கம் பி.ஏ.சி., எனப்படும் பார்லிமென்ட் பொதுக் கணக்கு குழு ஆகியவை தீவிரமாக இருப்பதால், சி.பி.ஐ., மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் தலையிட முடியாத நிலை அரசுக்கு உள்ளது என்றும் கூறப்படுகிறது.

24ம் தேதி ஆலோசனை: "2ஜி' ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக விசாரிக்க நியமிக்கப்பட்ட பார்லிமென்ட் கூட்டுக் குழுவின் முதல் கூட்டம், வரும் 24ம் தேதி நடைபெற உள்ளது. இத்தகவலை, குழுவின் தலைவர் பி.சி.சாக்கோ கூறினார். இந்த கூட்டத்தில் குழுவினர் செய்ய வேண்டியது என்ன, யார் யாரிடம் விசாரணை நடத்துவது, என்னென்ன ஆவணங்கள் பரிசீலிக்கப்பட வேண்டும் என்பது குறித்து முடிவு செய்யப்படும். 30 உறுப்பினர்களைக் கொண்ட பார்லிமென்ட் கூட்டுக்குழு, பார்லிமென்டின் அடுத்த கூட்டத்தொடர் முடிவடைவதற்குள் தனது அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு: கனிமொழியிடம் விரைவில் சி.பி.ஐ., விசாரணை

முக நூல்

Popular Posts