background img

புதிய வரவு

Showing posts with label Praveen kumar. Show all posts

புதுக்கோட்டை : ""தமிழகத்தில், 2.11 லட்சம் தபால் ஓட்டுகள் வினியோகம் செய்யப்பட்டுள்ளன,'' என, மாநில தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் கூறினார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள புதுக்கோட்டை கந்தர்வக்கோட்டை (தனி), ஆலங்குடி, விராலிமலை, அறந்தாங்கி, திருமயம் தொகுதிகளுக்கான, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், புதுக்கோட்டை அரசு மகளிர் கல்லூரியில், பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.
மாநில தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன் குமார், உதவி தேர்தல் அதிகாரி அமுதா ஆகியோர், நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். உடன், கலெக்டர் சுகந்தி, எஸ்.பி., முத்துச்சாமி இருந்தனர். ஆய்வு முடித்தபிறகு, பிரவீன் குமார் கூறியதாவது: தபால் ஓட்டுகளை பொறுத்தவரை, பணி நேரம் உள்ளிட்ட பிரச்னைகளால், கடைசி தேதிக்கு பின்னர் பலர் தாமதமாக விண்ணப்பித்ததால், முழுமையாக விண்ணப்பங்களை வழங்க முடியவில்லை. இதுவரை தமிழகம் முழுவதும், 2 லட்சத்து, 11 ஆயிரம் தபால் ஓட்டுகள் கொடுக்கப்பட்டுள்ளன. தபால் ஓட்டு போடுபவர்கள், ஓட்டு எண்ணிக்கை துவங்கும், 13ம் தேதியன்று, காலை 8 மணிக்குள் ஓட்டுகளை கொடுக்க வேண்டும்.
ஐந்து மாநில தேர்தல்களில், அந்தந்த மாநிலங்களில் உள்ள சட்ட விதிமுறைகளை கொண்டு தேர்தல் நடத்தப்பட்டது. தமிழகத்தில் பொது இடங்களில் சுவர் விளம்பரம், சுவரொட்டிகள் ஒட்டுவது, 1959ம் ஆண்டு சட்டத்தின்படி தடை செய்யப்பட்டது.
இந்த தேர்தலில் செலவின கணக்கு, பறக்கும் படை போன்ற புதிய விதிமுறைகளை அமல்படுத்தி, பணப்பட்டுவாடா உள்ளிட்ட விஷயங்களை கடுமையாக கண்காணித்தோம். அது ஒரு சிலருக்கு பாதகமாக இருப்பதால், எங்களை குறை கூறுகின்றனர்.
கட்சி பாகுபாடின்றி நடவடிக்கை எடுத்துள்ளோம். குறிப்பிட்ட கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க முடியாது. பணப்பட்டுவாடா செய்யவில்லை என, முழுமையாக மறுக்கவில்லை. வெளிப்படையாக நடக்காத வண்ணம் தடுத்திருக்கிறோம். மறைமுகமாக, சில இடங்களில் மட்டும், எங்களின் கண்காணிப்பையும் மீறி சிறிய அளவில் பணம் கொடுக்கப்பட்டது.
தேர்தல் விதிமுறைகளை மீறியதாக, தமிழகம் முழுவதும், 62 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில், 52 ஆயிரம் வழக்குகள் சுவரொட்டி, சுவர் விளம்பரம் தொடர்பானவை. பணப்பட்டுவாடா செய்ததாக, 1,700 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஓட்டு எண்ணிக்கைக்கு முதல்நாளான, 12ம் தேதிக்குள், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளேன்.
ஓட்டு எண்ணும் இடங்களில், மொபைல் போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தேர்தல் பார்வையாளர்கள் மட்டுமே மொபைல் போன் கொண்டு செல்லலாம். "பிரஸ் ரூம்' வரை, பத்திரிகையாளர்கள் மொபைல் போன் கொண்டு செல்லலாம். மதுரை கலெக்டர் சகாயம் மட்டுமல்லாது, தேர்தல் அலுவலர்கள் அனைவருக்கும் தேர்தல் கமிஷன் உரிய பாதுகாப்பு அளித்துள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலை பொறுத்தவரை, தேர்தல் கமிஷனரான நான் ஹீரோ இல்லை. தேர்தலை சிறப்பாக நடத்திய அதிகாரிகள், முழுமையாக ஒத்துழைப்பு அளித்த தமிழக மக்கள் தான் ஹீரோ. இவ்வாறு பிரவீன் குமார் கூறினார்.

தமிழகத்தில் 2.11 லட்சம் தபால் ஓட்டு வினியோகம் : தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் தகவல்

தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண் குமாரை, அதிமுகவைச் சேர்ந்த மூத்த நிர்வாகிகள் சந்தித்து பேசினர்.

சென்னை கோட்டையில் தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமாரை அ.தி.மு.க. நிர்வாகிகள் ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன், மைத்ரேயன் எம்.பி. ஆகியோர் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினர்.

அப்போது, ஓட்டு எண்ணும் இடங்களில் தற்போது போதிய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருப்பது திருப்தி அளிப்பதாக அவர்கள் தெரிவித்ததாக பிரவீண்குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமாருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு

தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண் குமாரை, அதிமுகவைச் சேர்ந்த மூத்த நிர்வாகிகள் சந்தித்து பேசினர்.

சென்னை கோட்டையில் தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமாரை அ.தி.மு.க. நிர்வாகிகள் ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன், மைத்ரேயன் எம்.பி. ஆகியோர் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினர்.

அப்போது, ஓட்டு எண்ணும் இடங்களில் தற்போது போதிய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருப்பது திருப்தி அளிப்பதாக அவர்கள் தெரிவித்ததாக பிரவீண்குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

சென்னை : ""தமிழக சட்டசபை தேர்தல் அமைதியாக நடந்தது. 81 சதவீதம் வரை ஓட்டுகள் பதிவாகியிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அளவிற்கு ஓட்டு சதவீதம் அதிகரித்ததற்கு, மக்களிடையே ஏற்பட்ட விழிப்புணர்வு தான் காரணம்,'' என்று, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் கூறினார். மூன்று ஓட்டுச்சாவடிகளில் மட்டும், 15ம் தேதி மறு வாக்குப்பதிவு நடைபெறும் என்றும், அவர் தெரிவித்தார்.

இரவு அவர், நிருபர்களிடம் கூறியதாவது:ஓட்டுப்பதிவு குறித்த சதவீதம் இன்னும் முழுமையாக கிடைக்கவில்லை. பல ஓட்டுச்சாவடிகளில் கூட்டம் அதிகம் இருந்ததால், ஓட்டுப்பதிவு தொடர்ந்து நடந்து வருகிறது. எனவே, முழுமையான விவரம் நள்ளிரவுக்குள் அல்லது நாளை (இன்று) காலை தான் முழுமையான விவரம் தெரியவரும். எனினும், ஓட்டுப்பதிவு சதவீதம் 75 முதல் 81க்குள் இருக்கும் என எதிர்பார்க்கிறோம். மாநில அளவில் 65 மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பழுதடைந்ததாக, புகார்கள் வந்தன. அதில், 11 இயந்திரங்கள் சரி செய்யப்பட்டன. 54 இயந்திரங்களுக்கு பதில், புதிய ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டன.திருவிடைமருதூரில் இரண்டு ஓட்டுச்சாவடிகளில் அடங்கிய வாக்காளர்கள், தேர்தலை புறக்கணித்துள்ளனர். ஓட்டுச்சாவடி இடம் மாற்றம் தொடர்பான பிரச்னையில், இந்த முடிவை எடுத்ததாக அவர்கள் கூறினர். இந்த ஓட்டுச்சாவடிகளில் தலா 1,300 ஓட்டுகள் இருந்தன. மாநில அளவில், பெரிய அளவில் எந்தவிதமான அசம்பாவிதங்களும் நடைபெறவில்லை.

நெய்வேலியில், 7.10க்கு இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில், ஒரு ஓட்டுச்சாவடியில் இருந்த ஓட்டுப்பதிவு இயந்திரம் முற்றிலும் சேதம் அடைந்துள்ளது. எனவே, அந்த ஓட்டுச்சாவடியில் மீண்டும் ஓட்டுப்பதிவு நடைபெற வாய்ப்புள்ளது. மேலும், கன்னியாகுமரியில் ஒரு ஓட்டுச்சாவடியிலும், திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் ஒரு ஓட்டுச்சாவடியிலும் அமைக்கப்பட்டிருந்த மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில், ஓட்டுகள் பதிவாகவில்லை. எனவே, இந்த இரு ஓட்டுச் சாவடிகளிலும் மறு ஓட்டுப்பதிவு நடைபெறும்.இது குறித்து, தேர்தல் கமிஷனுக்கு தெரிவித்துள்ளோம். உத்தரவு வந்ததும், மறு ஓட்டுப்பதிவு 15ம் தேதி நடைபெறும். அதிகபட்சமாக கரூர் மாவட்டத்தில் 86 சதவீதம் ஓட்டுகள் பதிவாகியுள்ளது. குறைந்தபட்சமாக, தூத்துக்குடியில் 74 சதவீதம் ஓட்டுகள் பதிவாகியுள்ளன. கடந்த சட்டசபை தேர்தலை விட (70%), இந்த தேர்தலில் ஓட்டுப்பதிவு அதிகரித்ததற்கு, மக்களிடையே குறிப்பாக இளைஞர்களிடையே அதிகளவில் ஏற்பட்ட விழிப்புணர்வு தான் காரணம்.

சென்னையில், நடுத்தர மக்களும், உயர்தட்டு மக்களும் அதிகளவில் குடும்பம், குடும்பமாக வந்து ஓட்டளித்தனர். தேர்தல் கமிஷன் மற்றும் அரசியல் கட்சியினர் ஏற்படுத்திய விழிப்புணர்வும், ஓட்டு சதவீதம் அதிகரித்ததற்கு முக்கிய காரணம். மத்திய பாதுகாப்பு படை வீரர்களுக்கு, படியை குறைத்துவிட்டதாக கூறப்பட்டது தவறு. முன்னாள் ராணுவ வீரர்களுக்கான படி, முந்தைய தேர்தலை விட 60 ரூபாய் குறைக்கப்பட்டது. இந்த தொகையை தருவதாக தெரிவித்துள்ளோம்.வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக, 11ம் தேதி இரவு 53 பேர் கைது செய்யப்பட்டனர். இது போன்று, 1,565 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், சம்பந்தபட்டவர்களுக்கு ஒரு ஆண்டு வரை சிறை தண்டனை கிடைக்கும். மாநிலத்தில், எந்த ஓட்டுச்சாவடிகளிலும் கள்ள ஓட்டு சம்பவம் நடைபெறவில்லை.இவ்வாறு பிரவீன்குமார் கூறினார்.

ஓட்டு எண்ணிக்கை எங்கு நடக்கும்? சென்னை மாவட்டத்திற்கான ஓட்டு எண்ணிக்கை, அண்ணா பல்கலைக்கழகம், லயோலா கல்லூரி மற்றும் ராணி மேரி கல்லூரி ஆகிய மூன்று இடங்களில் நடைபெறும் என, பிரவீன்குமார் தெரிவித்தார். தொகுதி வாரியாக பதிவான ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், இந்த மூன்று இடங்களிலும் பிரித்து பாதுகாப்புடன் வைக்கப்படும் என்றும், அவர் தெரிவித்தார்.

அதிக ஓட்டுப்பதிவுக்கு மக்களின் விழிப்புணர்வே காரணம் : பிரவீன்குமார் பேட்டி

தமிழக தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது தேர்தல் கட்டுப்பாடு பற்றி அவர் கூறியதாவது:-

* கோவில், மசூதி, ஆலயங்களில் தேர்தல் பிரசாரம் செய்யக்கூடாது.

* ஜாதி, மதத்தை தூண்டும் வகையில் பிரசாரம் செய்யக் கூடாது.

* பொதுக்கூட்டங்கள், தேர்தல் பிரசார சுற்றுப்பயணங்கள், ஊர்வலங்கள் அனைத்துக்கும் போலீஸ் முன் அனுமதி பெறவேண்டும்.

* பொது இடங்களில் சுவர் விளம்பரம் செய்யக் கூடாது. தனியார் இடங்களில் சுவர்களின் அனுமதி பெற்ற பிறகே தேர்தல் விளம்பரம் செய்யவேண்டும்.

* விளம்பர செலவுகள் அனைத்தும் வேட்பாளர் செலவு கணக்கில் சேர்க்கப்படும்.

* அரசியல் பொதுக் கூட்டங்கள், பிரசாரங்கள், சுவர் விளம்பரங்கள், ஊர்வலங்கள், பேனர்கள் அனைத்தும் வீடியோவில் பதிவு செய்யப்படும். இதற்கான செலவுகள் கணக்கிடப்பட்டு வேட்பாளர் செலவில் சேர்க்கப்படும்.

* தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் கார், வேன், பஸ் ஆகியவற்றின் வாடகை எவ்வளவு என்பதை கலெக்டர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் முடிவு செய்து அந்த தொகை தேர்தல் செலவில் சேர்க்கப்படும்.

* தேர்தலில் முறைகேட்டை கண்காணிக்க பறக்கும்படை அமைக்கப்படும். இதில் ஒரு துணை தாசில்தார், ஒரு போலீஸ் அதிகாரி, 4 போலீசார், ஒரு வீடியோ கிராபர் இடம் பெறுவார். இவர்கள் தவிர ஒவ்வொரு தொகுதியிலும் 4 அல்லது 5 சோதனை மையம் அமைக்கப்படும். இந்த மையங்கள் அடிக்கடி இடமாற்றப்படும்.

* ஒவ்வொரு மாவட்டத்திலும் வருமான வரித்துறை சார்பில் வருமான வரி உதவி இயக்குனர் நியமிக்கப்படுவார். அவர் மூலம் வேட்பாளருக்கு வரும் பணம் ஆய்வு செய்யப்படும்.

* வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்யும்போது 3 வாகனங்கள் மட்டுமே வேட்பு மனுதாக்கல் அலுவலகம் அருகே 100 மீட்டர் வரை அனுமதிக்கப்படும். வேட்பாளர் உள்பட 5 பேர் மட்டுமே வேட்பு மனுதாக்கல் செய்யும் இடத்துக்கு செல்லலாம். அனுமதி பெறாத வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்.

* தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் சொத்து விவரம், வழக்கு விவரம் ஆகிய 2 வகை பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். சொத்துக்கள் விவரங்களை மொத்தமாக குறிப்பிடாமல் தனித்தனியாக குறிப்பிடவேண்டும். அந்த சொத்து யாரிடம் வாங்கியது? அது என்ன சொத்து? வாங்கிய போது மதிப்பு என்ன? இப்போது மதிப்பு என்ன? அதில் முதலீடு செய்த தொகை என்ன? போன்ற விவரங்களை தெரிவிக்க வேண்டும். இதுதவிர அவரது குடும்பத்தில் உள்ள வாரிசு தாரர்கள் சொத்து கணக்கு காட்டவேண்டும்.

* கல்யாண மண்டபங்கள் கண்காணிக்கப்படும். அதில் என்ன விழா நடக்கிறது? எதற்காக வாடகைக்கு விடப்பட்டுள்ளது? என்பது பற்றி கண்காணிக்கப்படும்.

* மொத்தமாக எஸ்.எம்.எஸ். மூலம் விளம்பரம் செய்யவும் அனுமதி பெற வேண்டும். இது செலவு கணக்கில் சேர்க்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தமிழக தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தேர்தல் அறிவிக்கப்பட்ட 1.3.2011 முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமுலுக்கு வந்துவிட்டன. இதன்படி புதிய திட்டங்கள் பற்றிய அறிவிப்பு ஏதும் வெளியிடப்படக்கூடாது ஏற்கனவே அறிவிக்கப்பட்டு ஆரம்பிக்கப்படாத புதிய திட்டங்களையும் தொடங்கக் கூடாது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் இணையதளத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம். மேலும், 1959-ல் கூறப்பட்டுள்ள விதிகள் அனைத்தும் கண்டிப்பாக நடைமுறைப்படுத்தப்படும்.

இந்த விதிகள் நடைமுறைப்படுத்துவதை கண்காணிக்க தேர்தல் பொதுப்பார்வையாளரும் மற்றும் தேர்தல் செலவீன கணக்குகளை கண்காணிக்க ஒரு செலவீன பார்வையாளர் தேர்தல் ஆணையத்தால் நியமனம் செய்யப்படுவார்கள். வேட்பாளர்களின் செலவீனங்களை கண்காணிப்பதற்காக ஒவ்வொரு செலவீன பார்வையாளரின் கீழ் ஒரு உதவி செலவீன பார்வையாளர் சம்பந்தப்பட்ட மாவட்ட தேர்தல் அதிகாரிகளால் நியமனம் செய்யப்படுவார்கள்.

மேலும், ஒவ்வொரு சட்ட மன்றத் தொகுதியிலும் வீடியோ கண்காணிப்புக்குழு எடுக்கப்பட்ட படங்களை கண்காணிக்கும் குழு மற்றும் கணக்குக்குழு ஆகியவை நியமனம் செய்யப்பட உள்ளன. ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியின் எல்லைக்குட்பட்ட ஒவ்வொரு காவல் நிலைய ஆளுமை பகுதியில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் வழங்கப்படுவதை கண்காணிக்கவும், தடுக்கவும் பறக்கும்படை ஒன்றும் அமைக்கப்பட உள்ளது.

ஒவ்வொரு பறக்கும்படையின் கீழும் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட குழு அமைக்கப்பட்டு அவைகள் சோதனைச் சாவடிகளாக ஆங்காங்கே செயல்படும். தேர்தல் செலவினங்கள் குறித்த விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் இணைய தளத்தின் மூலம் தெரிந்துக் கொள்ளலாம். தலைமைத் தேர்தல் அலுவர் அலுவலகம் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலகங்களிலும் தேர்தல் கட்டுப்பாட்டு அறை மற்றும் கால் சென்டர் 24 மணி நேரமும் தேர்தல் நடைபெற்று முடியும் வரை செயல்பட உள்ளன.

வாக்காளர்கள் கட்டணமின்றி 1965 என்ற எண்ணினைப் பயன்படுத்தி கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு தகவல்களை தெரிவிக்கலாம். ஊடகச்சான்று மற்றும் கண்காணிப்புக்குழுக்கள் தலைமைத் தேர்தல் அலுவல கத்திலும் மாவட்ட தேர்தல் அலுவலகத்திலும் செயல்பட உள்ளன. வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் தொடர்பான விளம்பரங்களை ஊடகங்கள் மூலம் விளம்பரம் செய்வதற்கு மேற்படி குழுக்களின் சான்று கண்டிப்பாக பெற்றிருக்கவேண்டும்.

இந்தக் குழு வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் ஊடகங்களுக்கு கட்டணம் செலுத்தி தேர்தல் விளம்பரங்கள் மற்றும் செய்திகளை வெளியிடுகின்றனரா? என்பதைக் கூர்ந்து கவனித்து விதிமீறல்கள் ஏதேனும் இருப்பின் தகுந்த நடவடிக்கை எடுக்க ஆவன செய்யும். மேலும், போட்டியிடும் வேட்பாளர்கள் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்த நாள் முதல் தேர்தல் தொடர்பான கணக்குகளை உரிய பதிவேட்டில் பதிவு செய்து பராமரிக்க வேண்டும்.

தேர்தல் பிரச்சாரத்தின்போது தேர்தல் நடத்தும் அலுவலர் குறிப்பிடும் 3 நாட்களில் தனது தேர்தல் கணக்குகளை ஆய்வுக்கு தாக்கல் செய்ய வேண்டும். தேர்தல் முடிவுகள் வெளியான பின்பு 30 நாட்களுக்குள் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் தங்களது தேர்தல் கணக்குகளை மாவட்ட தேர்தல் அலுவலர் பார்வைக்கும், ஒப்புதலுக்கும் சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பிரசாரம்-ஊர்வலம் வீடியோ படமாக எடுக்கப்படும்: தேர்தல் கமிஷன் கடும் கட்டுப்பாடு; வேட்பாளர்கள் குடும்ப சொத்து கணக்கை காட்ட வேண்டும்

முக நூல்

Popular Posts