background img

புதிய வரவு

Showing posts with label Rajabakse. Show all posts

தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்காக கூட்டப்படுகிற நாடாளுமன்ற தேர்வுக் குழுக் கூட்டத்தை புறக்கணிப்போம் என்று இலங்கையின் முக்கிய சிங்களக் கட்சியான ஜே.வி.பி. அறிவித்துள்ளது.

இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்காக நாடாளுமன்ற தேர்வுக் குழு ஒன்றை மகிந்த ராஜபக்சே அரசு அமைத்துள்ளது. ஆனால் தமிழர்களுக்கு சிறிதளவு அதிகாரம் வழங்கக் கூட சிங்களவர் கட்சிகள் ஒத்துக் கொள்ளாது என்பதால் தமிழ்க் கட்சிகளின் கூட்டமைப்பாகிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இக்குழுவில் இடம்பெறாமல் இருக்கிறது. இக்குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இடம்பெற வேண்டும் என்பது மேற்குலக நாடுகளின் நிலைப்பாடு.

இந்நிலையில் இது போன்ற குழுக்களின் கூட்டத்தில் பங்கேற்று நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை என்று ஜே.வி.பி. அறிவித்துளது. நாடாளுமன்ற தேர்வுக் குழு என்பது பயனற்றது என்கிறது ஜே.வி.பி.

நாடாளுமன்ற தேர்வுக் குழு என்பதே நாடகம்தான் என்றும் இதனால் எந்த ஒரு பயனும் விளையப்போவதில்லை என்பதும் தமிழர்களின் கருத்து. இந்த நிலையில் ஜேவிபியும் புறக்கணித்திருப்பது தமிழர் பிரச்சனைக்கான அமைதித் தீர்வை அந்நாட்டு அரசு உடனடியாக ஏற்படுத்திவிடாது என்பதையே காட்டுகிறது .

தமிழர் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்கான நாடாளுமன்ற தேர்வு குழுக் கூட்டத்தால் பயனில்லை: ஜே.வி.பி.

கொழும்பு:இலங்கையில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் அதிபர் ராஜபக்ஷேவின் ஐக்கிய மக்கள் விடுதலை கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது.இலங்கையில் நேற்று முன்தினம் 234 கவுன்சில்களுக்கு தேர்தல் நடந்தது. இதில் ராஜபக்ஷே தலைமையிலான ஐக்கிய மக்கள் விடுதலை கூட்டணி 205 இடங்களை கைப்பற்றியுள்ளது. எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சி ஒன்பது இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. தமிழ் தேசிய கூட்டணி 12 இடங்களிலும், இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் நான்கு இடங்களிலும், மற்றொரு தமிழ் கட்சி ஒரு இடத்திலும், சுயேச்சைகள் மூன்று இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.கடந்த அதிபர் தேர்தலில் ராஜபக்ஷே கட்சி 58 சதவீத ஓட்டுகளை பெற்றது. ஆனால், இந்த தேர்தலில் 55 சதவீத ஓட்டுகளே கிடைத்துள்ளன. ஓட்டுகளின் எண்ணிக்கை 3 சதவீதம் குறைந்துள்ளது.

ராஜபக்ஷே கட்சிஅபார வெற்றி

முக நூல்

Popular Posts