background img

புதிய வரவு

Showing posts with label Ramadhas. Show all posts

தேர்தலுக்கு பிறகு கூட்டணி மந்திரி சபை அமைந்தாலும் அதில் பா.ம.க. சேர்ந்து கொள்ளாது என, ராமதாஸ் கூறினார்.

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஜனநாயக முற்போக்கு கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நாகை மாவட்டத்தில் பிரசாரம் செய்தார்.

முன்னதாக வேளாங்கண்ணியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

தி.மு.க. தலைமையிலான ஜனநாயக முற்போக்கு கூட்டணி இந்த தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெறும். கும்மிடிப்பூண்டி எல்லையிலிருந்து தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வரை பல மாவட்டங்களுக்கு கடந்த 15 நாட்களாக சென்று வந்துள்ளேன்.

அங்கெல்லாம் எங்கள் கூட்டணிக்கு ஆதரவு அலை வீசுகிறது. இன்னும் இரண்டு, மூன்று நாட்களில் இந்த அலை ஜெயலலிதாவிற்கு எதிராக வீசப்போகிறது.

தமிழகத்திற்கு தேர்தலுக்கு பிறகு கூட்டணி மந்திரிசபை அமையுமா என்ற கேள்விக்கு முதல் அமைச்சர் கருணாநிதி கருத்து தெரிவித்துள்ளார். தேர்தலுக்கு பிறகு கூட்டணி மந்திரி சபை அமைந்தாலும் அதில் பா.ம.க. சேர்ந்து கொள்ளாது என்றார்.

மந்திரி சபையில் பாமக சேராது: ராமதாஸ்

தமிழகத்தில் திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்கு கூட்டணிக்கு ஆதரவு அலை வீசுவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். திமுக அறிவித்துள்ள தேர்தல் அறிக்கை மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் திமுக வேட்பாளர் மற்றும் கள்ளக்குறிச்சி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் ஆகியோரை ஆதரித்து பாமக நிறுவனர் ராமதாஸ் பிரச்சாரம் மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களை ராமதாஸ் சந்தித்தார். அப்போது செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த அவர்,

முதல் அமைச்சர் கலைஞர் செயல்படுத்திய திட்டங்களும், அறிவித்துள்ள திட்டங்களும் பொதுமக்களின் மனதில் இடம்பிடித்துள்ளது.

பாமர மக்களையும் திமுக தேர்தல் அறிக்கை சென்றடைந்துள்ளது. தமிழகத்தின் முதல் அமைச்சராக கலைஞரே வரவேண்டும் என பொதுமக்கள் விரும்புகிறார்கள்.

நடைபெறவுள்ள தேர்தலில் திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்கு கூட்டணிக்கு ஆதரவு அலை வீசுகிறது என்றார்.

திமுக கூட்டணிக்கு ஆதரவு அலை: ராமதாஸ்

திண்டுக்கல்: ""பொய்யின் மொத்த உருவமான அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையை மக்கள் நம்ப மாட்டார்கள்,'' என பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேசினார்.

திண்டுக்கல்லில் தி.மு.க., கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் கூட்டத்தில் அவர் பேசியதாவது: முதல்வர் கருணாநிதி தேர்தல் அறிக்கையில் கிரைண்டர், மிக்சி தருவதாகவும், பெண்களின் திருமணத்திற்கு ரூ.30 ஆயிரமும், படிப்பிற்கு ரூ.20 ஆயிரமும் வழங்குவதாக அறிவித்தார். பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவன் காப்பியடிக்கும் போது, பறக்கும் படையினரிடம் சிக்கிக் கொள்வான். இதுமாதிரி தி.மு.க., தேர்தல் அறிக்கையை, ஜெயலலிதா காப்பியடிப்பது வெளியிட்டுள்ளார். இதை மக்கள் கண்டுபிடித்து விட்டார்கள். ஏழைகளுக்கு ஆடு, மாட்டை இலவசமாக வழங்குவாராம். ஜெயலலிதா தமிழர்களை ஆடு, மாடு மேய்க்க சொல்கிறார். கருணாநிதி மாணவ, மாணவிகளுக்கு லேப்டாப் தந்து, நன்றாக படித்து, தமிழர்கள் உலக அரங்கில் முன்னேற வேண்டும் என்று நினைக்கிறார்.

தமிழகத்தில் 30 லட்சம் பேர் வறுமை கோர்ட்டிற்கு கீழ் உள்ளனர். இவர்களுக்கு எப்படி ஆடு, மாடு கொடுக்க முடியும். பொய்யின் மொத்த உருவமான அ.தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கையை மக்கள் நம்ப மாட்டார்கள். கடந்த காலத்தில் ஜெயலலிதா, தனது வளர்ப்பு மகனுக்கு திருமணத்தை நடத்தி வைத்தார். பின்பு, அவர் மீதே கஞ்சா வழக்கு போட்டார். ஒரே நாளில் இரண்டரை லட்சம் அரசு ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பினார். மீண்டும் கருணாநிதி முதல்வராக நீங்கள் பாடுபட வேண்டும். தமிழகத்தில் வரலாறு காணாத அளவிற்கு தேர்தல் கமிஷன் கெடுபிடிகளை விதித்துள்ளது. வாகன சோதனை என்ற பெயரில் பலவித இன்னல்களுக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். வணிகர்களும், பொதுமக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். தேர்தல் கமிஷன் நடவடிக்கைகளுக்கு ஐகோர்ட் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் அமைச்சர் ஐ.பெரியசாமி, சித்தன் எம்.பி., திண்டுக்கல் பா.ம.க., வேட்பாளர் ஜே.பால்பாஸ்கர் உட்பட பலர் பங்கேற்றனர்.

பொய்யின் மொத்த உருவம் அ.தி.மு.க., தேர்தல் அறிக்கை: பா.ம.க., ராமதாஸ்

முக நூல்

Popular Posts