background img

புதிய வரவு

Showing posts with label petrole. Show all posts

புதுடில்லி:பொதுத்துறை எண்ணெய் நிறுவனமான இந்தியன் ஆயில் கழகம், பெட்ரோல் விலை எந்த நேரத்திலும் உயர்த்தப்படும் என அறிவித்துள்ளது.

பெட்ரோல் விலையை நிர்ணயம் செய்யும் கட்டுப்பாடு முறை, மத்திய அரசு வசம் இருந்துவந்தது. இதனால், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலை உயர்வை ஈடுகட்ட முடியாமல், அரசு நிர்ணயித்த விலைக்கு விற்றுவந்தன.இதனால், பெரும் இழப்பு ஏற்பட்டது. இதை ஈடுகட்ட, மானியம் உட்பட, சில சலுகைகளை அரசு வழங்கியபோதும், அது, போதுமானதாக இல்லை. சர்வதேச சந்தை விலைக்கு ஏற்ப, பெட்ரோல் விலையை நிர்ணயம் செய்யும் உரிமையை, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கே வழங்கும் வகையில் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டது.இது, கடந்தாண்டு முதல் அமலுக்கு வந்தது. இதைத் தொடர்ந்து, 50 ரூபாய்க்கு கீழ் இருந்த ஒரு லிட்டர் பெட்ரோல், தொடர்ந்து ஆறு முறை உயர்த்தப்பட்டு, தற்போது, 60 ரூபாயை தாண்டி நிற்கிறது.

தற்போது, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயரே போய் கொண்டிருக்கிறது. இதனால், பெட்ரோல் விலையை உயர்த்த வேண்டிய நிலைக்கு, எண்ணெய் நிறுவனங்கள் தள்ளப்பட்டுள்ளன. ஆனால், சட்டசபை தேர்தலை காரணம் காட்டி, இதை தள்ளிப்போடும்படி மத்திய அரசு கொடுத்த நிர்பந்தம் காரணமாக, நிறுவனங்கள், முடிவை தள்ளிப்போட்டு வந்தன.

இந்நிலையில், இந்தியன் ஆயில் கழக தலைவர் ரன்பீர சிங் புடோலா, நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:சட்டசபை தேர்தல் காரணமாக, கடந்த ஜனவரி முதல், பெட்ரோல் விலை எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. மக்கள் மற்றும் அரசை பாதிக்காத வகையில், நாங்கள் முடிவு எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். நாங்கள் எடுக்கும் சில நடவடிக்கைகள், மக்களையும், அரசையும் பாதிக்கக் கூடாது என்பதற்காக, பொறுமை காக்க வேண்டியுள்ளது.இருப்பினும், சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை சமாளிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.கடந்த மார்ச் வரை, 53 ஆயிரம் கோடி ரூபாய் கடன் சுமை ஏற்பட்டுள்ளது. இந்திய ஆயில் கழகத்திற்கு, ஒரு லிட்டர் பெட்ரோல் விற்பனை மூலம், 7 ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, விரைவில் பெட்ரோல் விலை உயர்வு பற்றிய அறிவிப்பு வரும்.இவ்வாறு ரன்பீர சிங் புடோலா கூறினார்.

மேற்கு வங்கத்தில், மே மாதம் 10ம் தேதியுடன், சட்டசபை தேர்தல் முடிகிறது. அன்று இரவிலிருந்து, பெட்ரோல் விலை உயர்வு பற்றிய அறிவிப்பு வரலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.எண்ணெய் நிறுவனங்களின் கூற்றுப்படி, ஒரு லிட்டர் பெட்ரோல் விலை, 70 ரூபாயை நெருங்கும் எனத் தெரிகிறது.

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.70 ஆகும்

சென்னை:பெட்ரோல் மீதான விற்பனை வரியை 30 சதவீதத்தில் இருந்து, 27 சதவீதமாக குறைத்து முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார். இதனால், பெட்ரோல் விலை ஒரு ரூபாய் 38 காசு குறையும்.

முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிவிப்பு:உலகளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து கொண்டே போவதால், எண்ணெய் நிறுவனங்கள், அதற்கேற்ப பெட்ரோல் விலையை உயர்த்தி அறிவிக்கிறது. இதனால், நடுத்தர மக்கள் பாதிக்கப்படுவதை மனதில் கொண்டு, தமிழக அரசு தன்னால் இயன்ற அளவு, அவ்வப்போது அதற்குரிய விற்பனை வரியை குறைத்து அறிவிப்பதை மக்கள் நன்கறிவர்.பெட்ரோல் பொருள்களின் விலையை மத்திய அரசு உயர்த்தும் போது, தமிழக அரசுக்கான நிர்வாகச் செலவு அதிகமாகிறது. மத்திய அரசு பெட்ரோல் விலையை உயர்த்த வேண்டிய நெருக்கடிக்கு ஆளாகி, உயர்த்துவதால், நடுத்தர மக்கள் குறிப்பாக, இருசக்கர வாகனங்களை பயன்படுத்துவோர் பெரிதும் பாதிக்கப்படக் கூடாது.

இதற்காக, தமிழக அரசு பெட்ரோல் மூலம் தனக்கு கிடைக்கும் விற்பனை வரியை ஓரளவு குறைத்துக் கொள்ள வேண்டியுள்ளது. தற்போது பெட்ரோல் மீது தமிழக அரசு விதித்துள்ள 30 சதவீதம் விற்பனை வரியை 3 சதவீதம் குறைத்து, 27 சதவீதம் மட்டும் வசூலிப்பதென்று முடிவு செய்துள்ளது.இதனால், ஆண்டுக்கு தமிழக அரசுக்கு 210 கோடி ரூபாய் வரி இழப்பு ஏற்படும். பெட்ரோல் பயன்படுத்துவோருக்கு லிட்டர் ஒன்றுக்கு ஒரு ரூபாய் 38 காசு குறையும். விலை குறைப்பு உடனே அமலுக்கு வரும். விற்பனை வரியை குறைத்த பின், தமிழகத்தில் உள்ள 27 சதவீத விற்பனை வரி என்பது, தென் மாநிலங்களிலேயே மிகவும் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.

பெட்ரோல் மீதான விற்பனை வரி குறைப்பு: முதல்வர் கருணாநிதி

லண்டன்: தற்போது இயற்கையாக கிடைக்கும் கச்சா எண்ணெயிலிருந்து தயாரிக்கப்படும் பெட்ரோல் தட்டுப்பாடு நிலவுகிறது. இந்நிலையில் இங்கிலாந்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் செயற்கை பெட்ரோலை தயாரித்துள்ளனர். ஹைட்ரனை மையமாக வைத்து புதிய மூலக்கூறுகளுடன் அது தயாரிக்கப்படுகிறது.

இந்த பெட்ரோல் மூலம் கார்கள் மற்றும் என்ஜின்களை இயக்க முடியும். இதிலிருந்து வெளியாகும் புகையால் காற்றில் மாசு ஏற்படாது. சுற்றுச்சூழல் பாதிக்கப்படாது. செயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட இந்த பெட்ரோல் ஒரு லிட்டர் 14 ரூபாய்க்கு விற்க திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் இந்த பெட்ரோல் பங்க்குகள் மூலம் விற்பனையாக இன்னும் 3 ஆண்டுகளாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இங்கிலாந்தில் செயற்கை பெட்ரோல் தயாரிப்பு!

ஏழைகளுக்கு குறைந்த விலையிலும்,பணக்காரர்களுக்கு கூடுதல் விலையிலுமபெட்ரோலிய பொருள்களின் விலையநிர்ணயிக்க வேண்டு‌ம் என்று ே.ு.ி.க.தலைவர் விஜயகாந்த் கூ‌றியு‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக அ‌வர் வெளியிட்அறிக்கை‌யி‌ல், எதிர்பாராத அளவுக்கபெட்ரோலிய பொருள்களின் விலையை மத்திஅரசு உயர்த்தி வருவது தொடரகதையாகிவிட்டது எ‌ன்று கு‌ற்ற‌ம்சா‌ற்‌றியு‌ள்ளா‌ர்.

விலைவாசி உயர்வுக்கு பெட்ரோலிபொருள்களின் விலை உயர்வும் முக்கிய காரணம் எ‌ன்று ‌விஜயகா‌ந்‌த் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

உலகச் சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்ந்து கொண்டசெல்வதால் விலையை உயர்த்த வேண்டியுள்ளது என்று ‌ம‌த்‌திய அரசு விள‌க்க‌ம் தருவதாக கூ‌றியு‌ள்ள ‌விஜயகா‌ந்‌த், வரி அதிகமாக விதிக்கப்படுவதால் பெட்ரோலிபொருள்களின் விலை அதிகரிக்கும் போதெல்லாம் மத்திய, மாநில அரசுகளுக்ககூடுதல் வருமானம் கிடைக்கிறது எ‌ன்று தெ‌‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

இந்த கூடுதல் வருமானத்தை விட்டுக் கொடுத்து வரியை ஒரே நிலையிலவைத்திருந்தால் விலையை உயர்த்த வேண்டிய அவசியம் இல்லை எ‌ன்று‌ம் ‌விஜயகா‌ந்‌த் கூ‌றியு‌ள்ளா‌ர்.

பெட்ரோல் விலை ூ.100 என்றால் அதில் அரசுக்கு செலுத்த வேண்டிய வரிூ. 52 க உள்ளது எ‌ன்று‌ம் அவ‌ர் தெ‌‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

ஏழை, நடுத்தர மக்களின் அத்தியாவசியப் பயணங்களுக்கு குறைந்விலையிலும், ஆடம்பர வாகனங்களைப் பயன்படுத்தும் பணக்காரர்களுக்ககூடுதல் விலையிலும் பெட்ரோலியப் பொருள்களின் விலையை நிர்ணயிக்வேண்டும் என்று‌ம் விஜயகாந்த் யோசனை தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

பண‌க்கார‌ர்களு‌க்கு கூடுத‌ல் விலையில் பெட்ரோல்: விஜயகாந்த்

முக நூல்

Popular Posts