background img

புதிய வரவு

Showing posts with label vijaykanth. Show all posts

தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், இன்று சட்டசபை எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்பேற்கவுள்ள நிலையில், அவர் போலீஸ் பாதுகாப்பை ஏற்றுக்கொள்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அ.தி.மு.க., கூட்டணியில் 41 தொகுதிகளில் போட்டியிட்ட தே.மு.தி.க., 29 எம்.எல்.ஏ.,க் களை பெற்றுள்ளது. ஆட்சியில் இருந்த தி.மு.க., எதிர்க்கட்சி அந்தஸ்தையும் இழந்துள்ளதால், அதிக எம்.எல்.ஏ.,க்கள் கொண்ட இரண்டாவது பெரிய கட்சியாக தே.மு.தி.க., உருவெடுத்துள்ளது. தே.மு.தி.க.,வின் இந்த எதிர்பாராத வெற்றியால், அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் இன்று சட்டசபை எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்பேற்க இருக்கிறார். அவருக்கு பல தரப்பில் இருந்து வாழ்த்து குவிந்து வருகிறது. நேற்று ச.ம.க., தலைவர் நடிகர் சரத்குமார், விஜயகாந்தை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அப்போது, விரைவில் நடக்கவுள்ள தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் குறித்தும் அவர்கள் ஆலோசனை நடத்தியுள்ளனர். விவசாய சங்கத்தினர், போலீஸ் உயர் அதிகாரிகள், தொழிலதிபர்கள் என பல தரப்பட்டவர்களும் விஜயகாந்திற்கு நேரிலும், தொலைபேசி வழியாகவும் வாழ்த்து தெரிவித்தனர்.

தே.மு.தி.க., தலைமை அலுவலக செய்திக்குறிப்பில்,"தே.மு.தி.க., சட்டசபை தலைவராக விஜயகாந்த், துணைத் தலைவராக அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், கொறடாவாக கொள்கை பரப்பு செயலர் சந்திரகுமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்' என தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டசபை எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்பேற்பவர்களுக்கு, அமைச்சர் அந்தஸ்தில் சிவப்பு சுழல் விளக்கு பொருத்தப்பட்ட அரசு வாகனம், போலீஸ் பாதுகாப்பு, அரசு வீடு ஆகியவை வழங்கப்படுவது வழக்கம். ஆனால், விஜயகாந்த், போலீஸ் பாதுகாப்பை ஏற்றுக்கொள்ள மாட்டார் என அக்கட்சியினர் ஆணித்தரமாக தெரிவிக்கின்றனர். இதனால், விஜயகாந்த் போலீஸ் பாதுகாப்பை ஏற்றுக்கொள்வாரா என்பதில் கேள்வி எழுந்துள்ளது.

எதிர்க்கட்சி தலைவர் விஜயகாந்த் போலீஸ் பாதுகாப்பை ஏற்பாரா?

சென்னை: "தி.மு.க.,வினரின் வன்முறை செயல்களைத் தடுக்க, தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: தே.மு.தி.க., தொண்டர்கள், பல இடங்களில் குறிவைத்து தாக்கப்படுகின்றனர். திருவாரூர் மாவட்டம் வேப்பம்பட்டு கிராமத்தில், தே.மு.தி.க.,வைச் சேர்ந்த தங்கவேலு குடும்பத்தார் தாக்கப்பட்டு படுகாயம் அடைந்துள்ளனர். வேடசந்தூர் தொகுதியில், தி.மு.க.,வினர் தாக்கியதில், தே.மு.தி.க.,வைச் சேர்ந்த மூன்று தொண்டர்கள் காயமடைந்து உள்ளனர். சோழிங்கநல்லூர் தொகுதியில், தே.மு.தி.க., கிளைச் செயலரின் ஆட்டோவை, தீ வைத்து கொளுத்தியுள்ளனர். காரைக்கால் தெற்கு தொகுதி வேட்பாளர் அசனா வீட்டை, தி.மு.க.,வினர் தாக்கியுள்ளனர்.

இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இந்நிலை நீடித்தால், ஓட்டுஎண்ணிக்கை தினமான மே 13ம் தேதி, தி.மு.க.,வினரின் வன்முறைச் செயல்கள் யூகிக்க முடியாத அளவுக்கு அதிகரித்து விடும். எனவே, வன்முறையில் ஈடுபடும் தி.மு.க.,வினர் மீது, நடிவடிக்கை எடுக்க வேண்டும். தே.மு.தி.க., தொண்டர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். தி.மு.க., காபந்து சர்க்காராக இருக்கும் இந்த நேரத்தில், போலீசார் தைரியமாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மக்களின் உயிருக்கும், உடைமைக்கும் உத்தரவாதம் அளிக்க, தேர்தல் கமிஷன் உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

வன்முறையை தடுக்க தேர்தல் கமிஷனுக்கு விஜயகாந்த் வேண்டுகோள்

சென்னை: இந்திய ராணுவத்திற்கு எதிராக கருத்து தெரிவித்த விஜயகாந்தின் தேமுதிகவின் அங்கீகாரத்தை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது குறித்து விளக்கம் கேட்டு விஜயகாந்திற்கு நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தேமுதிகவின் அங்கீகாரத்தை ரத்து செய்யக்கோரி டி.எஸ். ராஜன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார். அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது,

கடந்த மாதம் 24-ம் தேதி தேமுதிக தலைவர் விஜயகாந்த் விழுப்புரத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது தேர்தல் குறித்து உங்கள் வியூகம் என்ன என்று கேட்டதற்கு, கார்கில் போர் நடந்தபோதும் சரி, பாகிஸ்தானுடன் மோதும்போதும் சரி ராணுவத்தினர் என்ன திட்டம்போட்டா எதிர்கொண்டனர். எந்த நேரத்தில் எது நடக்க வேண்டுமோ அது நடக்கும் என்று கூறினார்.

இந்த பேச்சு இந்திய இறையாண்மைக்கும், அரசியல் சாசனத்திற்கும் எதிரானது. எனவே தேமுதிகவின் தேர்தல் ஆணைய பதிவு அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும். வரும் சட்டசபை தேர்தலில் தேமுதிக வேட்பாளர்கள் வெற்றி பெற்றால் அந்த முடிவை நிறுத்தி வைக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் இது குறித்து இன்னும் 4 வார காலத்திற்குள் பதில் அளி்க்குமாறு விஜயகாந்திற்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

தேமுதிக அங்கீகாரத்தை ரத்து செய்யக்கோரி வழக்கு: விஜயகாந்த், தேர்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ்

ரிஷிவந்தியம்:பின்தங்கிய தொகுதியான ரிஷிவந்தியத்தை, முன்மாதிரியாக மாற்ற தொடர்ந்து போராடுவேன் என, விஜயகாந்த் பேசினார்.

ரிஷிவந்தியம் தொகுதியில், விஜயகாந்த் கடந்த நான்கு நாட்களாக தங்கி கிராமம் கிராமமாக சென்று பிரசாரம் செய்தார். தொண்டை வலியால் அவதிப்பட்ட அவர், பல ஊர்களில் பேச முடியாமல் சைகைமூலம் பிரசாரம் செய்தார்.

நேற்று மாலை 4 மணிக்கு ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவில் எதிரில் அமைக்கப்பட்ட பொதுக்கூட்ட மேடையில் தன் பிரசாரத்தை முடித்து விஜயகாந்த் பேசியதாவது:ரிஷிவந்தியம் தொகுதியை ஏன் தேர்ந்தெடுத்தேன் என்று நான் சொல்லியாக வேண்டும். தொண்டை வலியால் அவதிப்பட்ட என்னை டாக்டர் பேசக்கூடாது என்று கூறியுள்ளார். இருப்பினும் மக்களுக்காக நான் பேசித்தான் ஆக வேண்டும். இதோ சிவனின் எதிரில் நின்று பேசுகிறேன். ரிஷிகளின் வனம் தான் ரிஷிவந்தியம். இது சிவனுக்கு உகந்த இடம்.ஆனால், இத்தொகுதியில் சிவராஜ் செய்வது அட்டூழியமாக உள்ளது. நான் பிரசாரத்திற்காக சென்ற இடமெல்லாம் எந்த சாலையும் சரியில்லை. ஐந்து முறை சிவராஜ் எம்.எல்.ஏ., என்று கூறுகிறார்களே இந்த தொகுதிக்காக என்ன செய்தார்?ரிஷிவந்தியத்தை முன்மாதிரியாக மாற்றுவதற்காகவே போட்டியிடுகிறேன். இதற்காக நான் தொடர்ந்து போராடுவேன். சாதனையை சொல்லி ஓட்டு கேட்காமல் இரவுநேரத்தில் வந்து 500 ரூபாய் தந்து ஓட்டுகேட்கும் நிலையில் சிவராஜ் உள்ளார்.

காங்., கட்சி கருணாநிதியுடன் கூட்டணி வைத்துள்ளதே, உருப்பட முடியுமா; வீல் சேரில் உட்கார்ந்து கொண்டு தமிழகத்தையே வீல்சேரில் கருணாநிதி உட்கார வைத்து விட்டார். ஊழல் செய்வதற்கு மட்டும் அவருக்கு உடலும் உள்ளமும் சோர்வடைவதில்லை. வெட்டு ஒன்று துண்டு ரெண்டு என்று நான் பேசுபவன். வழவழ கொழகொழவென்று பேசப்பிடிக்காது. எனக்கு மூன்று ஆண்டுகள், "டைம்' கொடுங்கள் மணலூர்பேட்டையில் தென்பெண்ணை ஆற்றில் பாலம், ஆர்கவாடி பாலம் உள்ளிட்டவற்றை நிறைவேற்றி காட்டுகிறேன்.சனி என்பது கருணாநிதி, பிணி என்பது ஸ்டாலின். இவர்களுக்கு தேர்தலில் பாடம் புகட்டுவேன். காடுவெட்டி குரு என்றால் எனக்கு பயமா; யாருக்கும் பயப்படவேண்டிய அவசியம் எனக்கு இல்லை.

விழுப்புரத்தில் பேசிய ஸ்டாலின், மக்கள் காலில் விழுகிறேன் என்று கூறினார். ஏன், இத்தனை நாள் செய்த சாதனைகள் எடுபடவில்லையா? நேற்று முன்தினம் 200 ரூபாய், நேற்று 500 ரூபாய் என்று ஓட்டுக்கு பணம் கொடுக்கின்றனர். இதை தேர்தல் கமிஷன் வேடிக்கை பார்க்கிறது.பெரியாரை பற்றி பேசும் கருணாநிதி, தனது தோளில் உள்ள மஞ்சள் துண்டு, சிவப்பு கல் மோதிரத்தை கழட்டி போடுவாரா?சுனாமியால் அடித்துச் செல்லப்பட்ட ஊராக ரிஷிவந்தியம் உள்ளது. மூன்று பாலம், இணைப்பு சாலை, மாணவர்கள் பள்ளிக்கு செல்ல பஸ்வசதி இவைகளை செய்துவிட்டுத்தான் அனைத்து கிராமத்திற்கும் நான் வருவேன்.அத்தியாவசியப் பொருட்களை பார்த்து பார்த்து நாம் வாங்குகிறோம், வாழ்க்கைக்கு உபயோகப்படும் கட்சியை கவனமுடன் பார்த்து தேர்ந்தெடுக்க வேண்டாமா? இந்த தொகுதியை முன்னேற்ற உங்களின் ஆதரவை தர வேண்டும்.இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.மாலை 4.38 மணிக்கு தனது பேச்சை முடித்துக் கொண்டு விஜயகாந்த் புறப்பட்டு சென்றார்.

கருணாநிதி தமிழகத்தையே வீல் சேரில்உட்கார வைத்து விட்டார்: விஜயகாந்த்

தஞ்சை மாவட்டம் பேராவூரணி தொகுதியில் தே.மு.தி.க. சார்பில் நடிகர் அருண்பாண்டியன் போட்டியிடுகிறார். அவருக்கு ஓட்டு கேட்டு பேராவூரணி பெரியார் சிலை அருகே தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பிரச்சாரம் செய்தார்.

பிரச்சாரத்தின் போது விஜயகாந்த், ‘’இந்த தேர்தலில் என்னை இழுக்க அழகிரி முயற்சித்தார். அவர் முயற்சி பலிக்கவில்லை. மனிதனின் அடிப்படை குணத்தை மாற்ற முடியாது.

விஜயகாந்த் கோபக்காரன்தான். அந்த கோபம் பிள்ளையை படிக்க சொல்லி தந்தை கண்டிப்பது போன்றது. அதை பெரிது படுத்துகிறார்கள். அதுபற்றி நான் கவலைப்படவில்லை.

5 ஆண்டுகளாக நான் கேட்ட எந்த கேள்விக்கும் முதலமைச்சர் கருணாநிதி பதில் அளிக்கவில்லை. துணிவு இருந்தால் என்னுடைய கேள்விக்கு நேரடியாக அவர் பதில் சொல்லட்டும். சமச்சீர் கல்வி என்பது சென்னையில் உள்ள புகழ்பெற்ற பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு கிடைக்கும்.

கல்வி, கிராமத்து மாணவர்களுக்கும் கிடைக்க வேண்டும். ஆனால் 5-ம், 6-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரே பாடம் தான் சமச்சீர் கல்வி என்று கருணாநிதி சொல்கிறார்.

கருணாநிதியால் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த முடியவில்லை. இலங்கையில் தமிழ் இனத்தை காட்டி கொடுத்து அந்த இனத்தையே அழித்தது காங்கிரஸ். அதற்கு கருணாநிதி துணை போனார்.

கரும்பு தோட்டத்துக்கு யானையையும், கழனி மேட்டுக்கு எருமையையும், கொய்யா தோப்புக்கு குரங்கையும் காவல் வைத்தது போல தி.மு.க.விடம் தமிழ் நாட்டை ஒப்படைத்து விட்டோம். தி.மு.க. ஆட்சியை அகற்ற வாக்காளர்கள் அனைவரும் முரசு சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்’’ என்று பேசினார்.

அழகிரி முயற்சி பலிக்கவில்லை : விஜயகாந்த்

திருச்சி: ""என்னை கண்டு கருணாநிதிக்கு பயம் வந்து விட்டது. அதனால் தான் என்னை பின் தொடர்ந்து தவறான செய்திகளை பரப்புகின்றனர்,'' என, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் திருச்சியில் பேசினார்.

திருச்சி வந்த தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், ஸ்ரீரங்கத்தில் போட்டியிடும் ஜெயலலிதா, திருவெறும்பூர் செந்தில்குமார், மண்ணச்சநல்லூர் பூனாச்சி, முசிறி சிவபதி ஆகியோரை ஆதரித்து ஓட்டு வேட்டையாடினார். திருவெறும்பூர், ரயில்நகர், திருவானைக்காவல், மண்ணச்சநல்லூர், முசிறி ஆகிய இடங்களில் விஜயகாந்த் பேசியதாவது: "பால் உற்பத்தியாளர்களுக்கு விலையை உயர்த்தி தரவேண்டும். குறைந்த விலையில் பால் விற்பனை செய்ய வேண்டும்' என்று மூன்றாண்டுக்கு முன் நான் கூறினேன். ஆனால், இப்போது தான் கருணாநிதி பால் உற்பத்தியாளர்களுக்கு விலை உயர்த்தி தருவதாக அறிவித்துள்ளார்.

பெட்ரோல், டீசல் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. டில்லிக்கு பலமுறை சென்ற கருணாநிதி, பெட்ரோல் விலை உயர்வு குறித்து வாய்திறந்திருப்பாரா? 5 ஆண்டுக்கு முன், 33.55 ரூபாயாக இருந்த பெட்ரோல் இன்று, 63 ரூபாய்க்கு விற்கிறது. அனைத்து தொழில்களும் இழுத்து மூடப்பட்டுவிட்டன. "கரன்ட் கட்' அதிகரித்துள்ளது. கலர், கலராக டிக்கெட்டை கொடுத்து பஸ் கட்டணத்தை மறைமுகமாக உயர்த்தியுள்ளனர். தவறு செய்தால் யாரையும் விடமாட்டேன். கருணாநிதி, தன் பிள்ளைகள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், ஒன்றியம், வார்டு, வட்ட செயலர் வரை அனைவரையும் தவறு செய்யும்படி கூறுகிறார். எங்கும், எதிலும் ஊழல், லஞ்சம் தலைவிரித்தாடுகிறது.

எனது கட்சி வேட்பாளரை அடித்ததாக, "டிவி'யில் அடிக்கடி ஒளிபரப்புகின்றனர். நான் என் கட்சிக்காரரை தானே அடித்தேன்; உங்களையா அடித்தேன்? கூட்டத்துக்கு வரும் தொண்டர்களை கொடியை கீழே இறக்கச் சொல்கிறார் என்கின்றனர். பின்னால் நிற்கும் மக்கள் என்னை பார்க்க முடியாது என்பதால், கொடியை கீழே இறக்கும்படி கூறுகிறேன். இதை ஏதோ தவறுபோல், சித்தரித்து "டிவி'க்களில் ஒளிபரப்புகின்றனர். என்னை கண்டு கருணாநிதிக்கு பயம் வந்துவிட்டது. அதனால் தான் என்னை பின் தொடர்கின்றனர். தவறான செய்திகளை பரப்புகின்றனர். விஜயகாந்த் வேட்பாளரை அடிச்சான்; கொடியை இறக்கச் சொன்னான்; வாந்தி எடுத்தான் என, என்ன வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளுங்கள். என்னைப் பற்றி என் தொண்டர்களுக்கும், மக்களுக்கும் தெரியும். ரோட்டில் ஒருவர் நடந்து செல்கிறார். அப்போது, அவர் திடீரென மயங்கி விழுகிறார். உடனடியாக என்ன செய்ய வேண்டும்? அவரது முகத்தில் தண்ணீர் தெளித்து, சோடா கொடுத்து அவரை மீட்க வேண்டும். அதுபோல், தமிழகத்தை மீட்க கருணாநிதியை ஆட்சியிலிருந்து துரத்துவது தான் தமிழகத்தின் உடனடி தேவை. இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.

என்னைப்பற்றி தவறான செய்திகளை பரப்புகின்றனர்:விஜயகாந்த்

சென்னை: நீ அடிச்சா மகாராஜா ஆகிடுவாங்கன்னு சொல்றியே, பேசாம உன்னோட கல்யாண மண்டபத்து உன் கட்சிக்காரங்கள வரிசையில நிக்க வச்சு ஆளுக்கு நாலு குத்து நங்கு நங்குன்னு குத்தி, எல்லோரையும் மகாராஜா ஆக்க வேண்டியதுதானே. அதுக்கு எதுக்குடா எலக்ஷன் என்று விஜயகாந்த்தை காட்டமாக கேட்டுள்ளார் நடிகர் வடிவேலு.

சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஜே.அன்பழகனை ஆதரித்து வடிவேலு பிரசாரம் செய்தார்.

அப்போது அவர் பேசுகையில், பொது இடத்தில வச்சு தன்னோட தப்பை சுட்டிக் காட்டிய வேட்பாளரை நங்கு நங்குன்னு குத்துறியே. கேட்டா, என்கிட்ட குத்து வாங்கினா மகாராஜா ஆகிடுவான்னு சொல்ற. நான் சொல்றேன், பேசாம உன் கட்சிக்காரங்களை உன்னோட கல்யாண மண்டபத்துக்கு வர வச்சு வரிசையா நிக்க வச்சு ஆளுக்கு நாலு குத்து குத்து. எல்லாத்தையும் மகாராஜா ஆக்கி விட்டுப் போ.

அப்புறம் எதுக்குடா எலக்ஷனு. பேசாம கூட்டணிய கலைச்சுடு. பொது இடத்துல வச்சு நாலு பேரு பாக்கற மாதிரி நங்கு நங்குன்னு குத்துறான். இதை இந்த தேர்தல் அதிகாரிங்க பார்த்துக்கிட்டு என்ன செய்றாங்க. அந்தாளை கைது செய்ய வேண்டாமா.

இஸ்லாமியப் பெருமக்களை தனது படங்களில் தீவிரவாதிகளாகத்தான் காட்டுவார் விஜயகாந்த். தன்னை ஹீரோவாக காட்டிக்கொள்வார். இஸ்லாமியர்கள் மீது பாசமாக இருப்பது போல காட்டிக் கொள்ளும் அவர் தேர்தலில் மட்டும் ஏன் உரிய வகையில் சீட் கொடுக்கவில்லை.

தன்னோட கட்சி சார்பா போட்டியிடும் 41 வேட்பாளர்கள் பெயரையும், ஒரு பெயர் விடாம சரியா சொல்லட்டும் விஜயகாந்த். நான் இந்த பிரசாரத்தை விட்டே போய்டுறேங்க என்றார் வடிவேலு.

வரிசையா நிக்க வச்சு நாலு குத்து குத்தி மகாராஜா ஆக்கி விடு-விஜயகாந்த்துக்கு வடிவேலு 'ஐடியா'!

சென்னை : ""மக்களை அழ விடாமல், அவர்கள் வருமானத்தை சுரண்டாமல், விலைவாசி உயர்வைக் குறைத்து, சுகாதாரம், சமச்சீர் கல்வி, வேலைவாய்ப்பு அளித்து, எப்போதும் அவர்களை சிரிக்க வைத்துக் கொண்டே இருக்க எந்த தியாகத்தையும் செய்ய தயாராக இருக்கிறேன். நான் யாருடன் கூட்டணி வைக்கிறேனோ அக்கட்சிக்கு மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும், '' என, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பேசினார்.

திருவள்ளூர் கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த 5,000 பேர், பல கட்சிகளில் இருந்து விலகி தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் முன்னிலையில் அக்கட்சியில் நேற்று இணைந்தனர். திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலர் சேகர், தேர்தல் நிதியாக 10 லட்ச ரூபாயை விஜயகாந்திடம் வழங்கினார்.

சென்னை, கோயம்பேடு தே.மு.தி.க., தலைமை அலுவலகத்தில் நடந்த விழாவில், புதிதாக கட்சியில் இணைந்தவர்களை வரவேற்று விஜயகாந்த் பேசியதாவது:ரேஷன் பொருட்கள் விலையை கிலோவுக்கு 10 ரூபாய் குறைத்து, அது பிப்ரவரி முதல் தேதியில் இருந்து அமலுக்கு வரும் என அறிவித்துள்ளனர். கடந்த ஐந்து ஆண்டுகளில் பல பிப்ரவரி மாதங்கள் வந்துள்ளன.அப்போதெல்லாம் விலையைக் குறைக்காதவர்கள், தேர்தல் வருகிறது என்பதால் விலையைக் குறைத்து மக்களை ஏமாற்றப் பார்க்கின்றனர். உண்மையிலேயே விலையைக் குறைக்க வேண்டும் என்றால் வெங்காயம், தக்காளியை 10 ரூபாய்க்கு கொடுக்க வேண்டும்.பெட்ரோல் விலையில், 100 ரூபாய்க்கு 52 ரூபாயை வரியாக வசூல் செய்கின்றனர். அந்த வரிப்பணத்தை பாதியாவது குறைத்து கொடுத்திருக்க வேண்டும். இதையெல்லாம் சுட்டிக் காட்டினால் விஜயகாந்த் குடித்துவிட்டு பேசுவதாக கூறுகின்றனர்.

குடித்தால் உளறுவார்கள்; நான் நியாயத்தைத் தான் கேட்கிறேன். உண்மையை மறைத்து, நான் குடித்து விட்டு பேசுவதாக பொய் பிரசாரம் செய்து, அசிங்கமான அரசியல் செய்கின்றனர். "முதல்வர் பதவியை விட தலைவர் பதவிக்கு முக்கியத்துவம் அளிக்கப் போகிறேன்' என்கிறார் கருணாநிதி.மக்கள் அவருக்கு நிரந்தர ஓய்வு கொடுக்க முடிவு செய்து விட்டதை முன்கூட்டியே அறிந்து, இந்த முடிவை எடுத்துள்ளார். படுத்த படுக்கையாக இருப்பது போன்று பாசாங்கு செய்து, மக்களின் அனுதாப ஓட்டுக்களை வாங்க அவர் திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.உண்மைக்கு அரிச்சந்திரன் என்றால், பொய்யின் உச்சத்திற்கு உச்சம் கருணாநிதி தான்.

எனது மண்டபத்தை இடித்துவிட்டு பயன்படுத்த முடியாத அளவுக்கு ஒரு பாலத்தை கட்டியுள்ளனர். எத்தனையோ பாலங்களை திறந்து வைத்த, கருணாநிதி இந்த பாலத்தை மட்டும் திறந்து வைக்காதது ஏன்?வரும் 30ம் தேதி நடக்கவுள்ள முதல்வர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள கருணாநிதி டில்லி செல்ல இருக்கிறார். கடந்த முறை நடந்த முதல்வர்கள் மாநாட்டில், துணை முதல்வர் ஸ்டாலின் தான் பங்கேற்றார். காங்கிரஸ் கட்சியுடன் தொகுதி பங்கீடு செய்யவே, கருணாநிதி டில்லி செல்கிறார். தனக்கு ஒரு தேவை இருந்தால் மட்டுமே கருணாநிதி அங்கு செல்வார்.

மக்கள் பிரச்னையை பற்றியும், விலைவாசி உயர்வு பற்றியும் அவருக்கு கவலையில்லை. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ஊழல் நடக்கவில்லை; வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது என்கின்றனர். ஒருவர் சொந்தமாக கடை வைத்து, அங்கு கொள்முதல் விலையைவிட குறைந்த விலையில் பொருட்கள் விற்றால் அதற்கு என்ன பெயர்?.இழப்பு ஏற்படுத்தும் அமைச்சரை வைத்துக் கொண்டு அவருக்கு சாதகமாக "ஜால்ரா' போடுகின்றனர். பணம் என்ற ஆயுதத்தை கையில் வைத்துக் கொண்டு தேர்தலில் வெற்றி பெறலாம் என கணக்கு போடுகின்றனர்.என்னை அழிக்கவும் திட்டம் போடுகின்றனர்.

இவர்களுக்கு, ஓட்டு மூலம் மக்கள் பாடம் கற்றுத்தர வேண்டும். பொதுமக்களை அழ விடாமல், அவர்கள் வருமானத்தை சுரண்டாமல், விலைவாசியை குறைத்து, சுகாதாரம், சமச்சீர் கல்வி, வேலைவாய்ப்பு அளித்து, எப்போதும் அவர்களை சிரிக்க வைத்துக் கொண்டே இருப்பதற்காக எந்த தியாகத்தையும் செய்ய தயாராக இருக்கிறேன்.நான் யாருடன் கூட்டணி வைப்பேன் என்பதை இப்போது கூற முடியாது. ஆனால், யாருடன் கூட்டணி வைக்கிறேனோ அவர்களுக்கு மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும்.இவ்வாறு, விஜயகாந்த் பேசினார். மாநில நிர்வாகிகள் பண்ருட்டி ராமச்சந்திரன், பார்த்தசாரதி, இளங்கோவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மக்களை அழ வைக்காமல் இருக்கும் கட்சியுடன் கூட்டணி : விஜயகாந்த்

அ.இ.அ.தி.மு.க. கூட்டணிக்குள் வரவேண்டுமானால் தனது கட்சிக்கு 70 இடங்களை ஒதுக்கிட வேண்டும் என்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உறுதியாக கூறிவிட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

சேலத்தில் நடந்த தே.மு.தி.க. மாநாட்டில் கூட்டணி பற்றிய அறிவிப்பை வெளியிடுவார் என்று அவருடைய கட்சியின் தொண்டர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்டது. மற்ற அரசியல் கட்சிகளிடமும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், கூட்டணி வைக்கலாமா, வேண்டாமா என்று கேட்டு, தனது தொண்டர்களை கை தூக்கச் சொன்ன விஜயகாந்த், அவர்களில் பெரும்பாலானோர் கூட்டணிக்கு ஆதரவாக கை தூக்கியதை பார்த்த பிறகு, “கூட்டணியை நான் முடிவு செய்வேன், உங்களை யாரிடமும் அடகு வைத்து விட மாட்டேன்” என்று கூறி சப்பென்று முடித்தார்.

அதன் பிறகு விழுப்புரத்தில் நடந்த கூட்டத்திலும் கூட்டணி பற்றிய முடிவை அறிவிக்கவில்லை. கூட்டணித் தொடர்பான (இரகசிய) பேச்சுவார்த்தைகள் இன்னமும் தொடர்ந்து வருகிறது என்றும், விஜயகாந்த் கேட்கும் அளவிற்கு தொகுதிகளை ஒதுக்கித் தருவதற்கு அ.இ.அ.தி.மு.க. தலைமை தயாராக இல்லையென்பதால், கூட்டணி அமைவது இன்னமும் உறுதியாகவில்லை என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையில், அ.இ.அ.தி.மு.க. தலைமைக்கு சமீபகாலமாக அ.இ.அ.தி.மு.க. தலைமைக்கு மழைபோல் சோவென்று ஆலோசனைகளை கொட்டி வரும் ‘பழைய’ ஆளே ஈடுபட்டு வருகிறார் என்றும், அவரிடம் 70 இடங்களுக்கு குறைய மாட்டோம் என்று விஜயகாந்த் திட்டவட்டமாக தெரிவித்து விட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன.அ.இ.அ.தி.மு.க. தலைமை குறைந்தது 150 இடங்களிலாவது போட்டியிட்டால் மட்டுமே தங்களால் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்க முடியும் என்றும், அப்படிப்பட்ட நிலையில் மற்ற கட்சிகளுக்கும் இடம் ஒதுக்க வேண்டியுள்ளதால், தே.மு.தி.க. தங்களது கோரிக்கையில் இருந்த இறங்கி வர வேண்டும் என்று கோரியதாகவும், அதற்கு பதிலளித்த விஜயகாந்த், தி.மு.க.வை ஆட்சியில் இருந்த இறக்க வேண்டுமானால், நீங்கள் இறங்கி வர வேண்டும் என்று கூறியது மட்டுமின்றி, கூட்டணி ஆட்சிக்கும் தயாராக இருக்க வேண்டு்ம் என்று கூறியுள்ளார். இது அ.இ.அ.தி.மு.க. தலைமைக்கு கசப்பாக இருக்கிறதாம்.

விஜயகாந்தின் இந்த ‘விடாக்கண்டன்’ நிலையே கூட்டணி அமைவதில் முன்னேற்றம் காண முடியாத நிலை உள்ளதென கூறப்படுகிறது.

பணமோ பணம்!

இதற்கிடையே, தே.மு.தி.க.வை தனியாக போட்டியிட வைக்க தி.மு.க. தரப்பில் பெரும் முயற்சி செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது. இந்த முயற்சியில் அக்கட்சியின் முன்னணி அமைச்சர் ஒருவரே ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

தே.மு.தி.க. தலைமைக்கு ‘கணிசமான’ தொகை (பல நூறு கோடிகள்) கொடுக்கப்படும், அது மட்டமின்றி, தொகுதிக்கு ஒரு கோடி ரூபாய் அளிக்கப்படும் என்றெல்லாம பேசப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இதற்கு இணங்க விஜயகாந்த் மறுத்துவிட்டதாகவும், அதை கருத்தில் வைத்தே, “உங்களை நான் அடகு வைத்துவிட மாட்டேன்” என்று கூறியதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

மொத்தத்தில், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்தின் கூட்டணி முடிவே தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் முடிவை அ.இ.அ.தி.மு.க.விற்கு சாதமாக திருப்ப முடியும் என்ற கருத்து தே.மு.தி.க.வையும் தாண்டி எல்லா கட்சி வட்டாரங்களிலும் நிலவுகிறது.

70 இடங்கள் - விஜயகாந்தின் நிபந்தனை?

ஏழைகளுக்கு குறைந்த விலையிலும்,பணக்காரர்களுக்கு கூடுதல் விலையிலுமபெட்ரோலிய பொருள்களின் விலையநிர்ணயிக்க வேண்டு‌ம் என்று ே.ு.ி.க.தலைவர் விஜயகாந்த் கூ‌றியு‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக அ‌வர் வெளியிட்அறிக்கை‌யி‌ல், எதிர்பாராத அளவுக்கபெட்ரோலிய பொருள்களின் விலையை மத்திஅரசு உயர்த்தி வருவது தொடரகதையாகிவிட்டது எ‌ன்று கு‌ற்ற‌ம்சா‌ற்‌றியு‌ள்ளா‌ர்.

விலைவாசி உயர்வுக்கு பெட்ரோலிபொருள்களின் விலை உயர்வும் முக்கிய காரணம் எ‌ன்று ‌விஜயகா‌ந்‌த் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

உலகச் சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்ந்து கொண்டசெல்வதால் விலையை உயர்த்த வேண்டியுள்ளது என்று ‌ம‌த்‌திய அரசு விள‌க்க‌ம் தருவதாக கூ‌றியு‌ள்ள ‌விஜயகா‌ந்‌த், வரி அதிகமாக விதிக்கப்படுவதால் பெட்ரோலிபொருள்களின் விலை அதிகரிக்கும் போதெல்லாம் மத்திய, மாநில அரசுகளுக்ககூடுதல் வருமானம் கிடைக்கிறது எ‌ன்று தெ‌‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

இந்த கூடுதல் வருமானத்தை விட்டுக் கொடுத்து வரியை ஒரே நிலையிலவைத்திருந்தால் விலையை உயர்த்த வேண்டிய அவசியம் இல்லை எ‌ன்று‌ம் ‌விஜயகா‌ந்‌த் கூ‌றியு‌ள்ளா‌ர்.

பெட்ரோல் விலை ூ.100 என்றால் அதில் அரசுக்கு செலுத்த வேண்டிய வரிூ. 52 க உள்ளது எ‌ன்று‌ம் அவ‌ர் தெ‌‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

ஏழை, நடுத்தர மக்களின் அத்தியாவசியப் பயணங்களுக்கு குறைந்விலையிலும், ஆடம்பர வாகனங்களைப் பயன்படுத்தும் பணக்காரர்களுக்ககூடுதல் விலையிலும் பெட்ரோலியப் பொருள்களின் விலையை நிர்ணயிக்வேண்டும் என்று‌ம் விஜயகாந்த் யோசனை தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

பண‌க்கார‌ர்களு‌க்கு கூடுத‌ல் விலையில் பெட்ரோல்: விஜயகாந்த்

சேலம், ஜன. 9: தேமுதிகவை யாரிடமும் அடகு வைக்க மாட்டேன்; நமது ஆதரவு இல்லாமல் யாரும் வெற்றி பெற முடியாது என்றார் விஜயகாந்த்.
மக்கள் உரிமை மீட்பு மாநாடு என்ற பெயரில் தேமுதிக சேலத்தில் ஞாயிற்றுக்கிழமை மாநாடு நடத்தியது.

இதில் விஜயகாந்த் பேசியது:
ஏழைகள் இருக்கும்வரை இலவசங்கள் தொடரும் என்கிறார் முதல்வர் கருணாநிதி. ஆனால் திமுக அரசு இருக்கும் வரை ஏழைகள் இருப்பார்கள் என்பதுதான் உண்மை. ஊழல் இருப்பதால்தான் வறுமை நீடிக்கிறது. எனவே வறுமையை ஒழிக்க வேண்டும் என்றால் ஊழலை ஒழிக்க வேண்டும். அதைத்தான் நாங்கள் சொல்கிறோம்.

கருணாநிதி அரசு போடும் திட்டங்களின் பலன் மக்களுக்கு சென்று சேருவதைப் போல் தெரியும். ஆனால் கடைசியில் அதன் பலன் முழுவதும் கருணாநிதி குடும்பத்துக்குதான் சென்று சேருகிறது. இலவச தொலைக்காட்சிப் பெட்டி கொடுத்தோம் என்கிறார். ஆனால் அந்த டிவிகளுக்கு கொடுத்த கேபிள் இணைப்புகள் மூலம் யாருக்குப் பலன் கிடைத்தது?
அம்பேத்கர், கக்கன், ஜெகஜீவன்ராம் போன்ற தலைவர்களால் அந்தச் சமுதாயத்துக்கு பெருமை கிடைத்தது. ஆனால் ஊழல் செய்தவர்களை தலித் என்று கூறி காப்பாற்ற முயற்சிக்கிறார் கருணாநிதி.

மனு நீதியை மறுபிறவி எடுக்க விடமாட்டோம் என்கிறார் கருணாநிதி. உண்மையில் கருணாநிதியின் குடும்ப நீதிதான் இன்று மனு நீதியைப் போல் பிறவி எடுத்துள்ளது. அந்த மனு தர்மத்தைத்தான் இன்று ஒழிக்க வேண்டும். இளைஞர்களுக்கு வேலை கிடைத்தால்தான் மகிழ்ச்சி அடைவேன் என்கிறார். ஆனால் 5 முறை முதல்வராக இருந்தபோது ஏன் இதைச் செய்யவில்லை?
எனது தொலைபேசி ஒட்டு கேட்கப்படுகிறது: தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. குற்றச் செயல்களைத் தடுக்க வேண்டிய காவல்துறை இன்று மற்ற கட்சிக்காரனை வேவு பார்க்கும் வேலையைச் செய்கிறது. எனது தொலைபேசி கூட ஒட்டுக் கேட்கப்படுகிறது. சட்டம், ஒழுங்கு சீரழிந்து பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் கூட படுகொலை செய்யப்படும் அவல நிலை உள்ளது. காவல்துறையின் இந்த ஆட்டம் வெறும் 4 மாதங்கள் மட்டுமே. காவல்துறை உள்ளிட்ட அனைத்துத் துறைகளும் விரைவிலேயே மாற்றி அமைக்கப்படும்.

ஒரு முருங்கைக்காய் 11 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இது குறித்து கேட்டால் ஒரு கிலோ அரிசி 1 ரூபாய்க்குக் கொடுக்கிறோம் என்கிறார். இவர்கள் தரும் அரிசி கால்நடைகளுக்கும் கடத்தல்காரர்களுக்கும்தான் பயன்படுகிறது. மாறி மாறிப் பேசுவதில் கருணாநிதி வல்லவர். முன்பு வெறும் மஞ்சள் பையைத் தூக்கிக் கொண்டு சென்னைக்கு வந்தவன் நான் என்றார். இப்போது கிராமத்தில் திருடர்கள் கொள்ளையடிக்கும் அளவுக்கு வசதி உடைய வீட்டில்தான் பிறந்தேன் என்கிறார்.

""ஊழலுக்கு நான் நெருப்பு'' என்கிறார். உண்மையில், ""ஊழலுக்கு நான் பொறுப்பு'' என்றுதான் கூறியிருக்க வேண்டும். காமராஜர் கல்வி கொடுத்தார். எம்.ஜி.ஆர். சத்துணவு கொடுத்தார். கருணாநிதியோ ஊழலை மட்டுமே செய்கிறார்.

தமிழர்களின் உரிமையைக் கடுகளவும் விட்டுக்கொடுக்க மாட்டேன் என்கிறார். ஆமாம் கடுகளவு அல்ல கடலளவுதான் விட்டுக் கொடுப்பார். கச்சத்தீவு, இலங்கைத் தமிழர் படுகொலை என பல உதாரணங்களைச் சொல்லலாம்.
அரக்கன் கம்சனை கிருஷ்ண பரமாத்மா வீழ்த்தினார். கருணாநிதி ஆட்சி என்ற அரக்கனை வீழ்த்தும் கிருஷ்ண பரமாத்மாக்களாக தமிழக மக்கள் முன்வர வேண்டும். தேர்தல் கூட்டணி பற்றி நான் என்ன சொல்வேன் என்பதைக் கேட்க எல்லோரும் ஆவலாக உள்ளனர்.

அரக்கன் ஆட்சியை வீழ்த்த நாம் கூட்டணி வைக்க வேண்டுமா? வேண்டாமா? வேண்டும் என்று விரும்புவோர் கையைத் தூக்குங்கள் (பெரும்பான்மையானோர் கையைத் தூக்கினர்).

சட்ட சபையில் ஆம் என்று கூறுவோரே அதிகமாக இருப்பதால் இது நிறைவேற்றப்படுகிறது என்று கூறுவார்கள். ஆனால் இப்போது கூட்டணி விஷயத்தை நான் பார்த்துக் கொள்கிறேன். கூட்டணி பற்றியோ, கட்சி வளர்ச்சி பற்றியோ யாரும் கவலைப்பட வேண்டாம். கூட்டணி பற்றி முடிவு செய்ய எனக்கு செயற்குழு, பொதுக்குழுவில் அதிகாரம் அளித்துள்ளீர்கள், அந்தக் கடமையை நான் சரியாக நிறைவேற்றுவேன்.

எனினும் கட்சியையோ கட்சித் தொண்டர்களையோ யாரிடமும் அடகு வைக்க மாட்டேன். சொத்துகளை இழந்தாலும் தொண்டர்களின் தன்மானத்தை இழக்க விடமாட்டேன். எத்தனையோ கட்சிகள் பிற கட்சிகளிடம் அடிமைகளாக உள்ளனர். நான் உங்களை யாரிடமும் அடிமையாக்க மாட்டேன். நம் கட்சியின் ஆதரவு இல்லாமல் யாரும் வெற்றி பெற முடியாது. நம் ஆதரவு இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது' என்றார் விஜயகாந்த்.

தேமுதிகவை அடகு வைக்கமாட்டேன்: சேலம் மாநாட்டில் விஜயகாந்த் சூளுரை

எதிர்க்கட்சிகள் மத்தியில் கூட்டணி உருவாகாமல் தடுக்க, ஆளுங்கட்சி சதி செய்து இருப்பதாக, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் நேற்று, "பகீர்' தகவலை வெளியிட்டுள்ளார்.

"மக்கள் உரிமை மீட்பு மாநாடு' என்ற பெயரில், சேலத்தில் தே.மு.தி.க., மாநாடு, விஜயகாந்த் தலைமையில் இன்று நடக்கிறது. இதுகுறித்த விளம்பரங்கள் பத்திரிகைகளில் வெளியாகி வருகின்றன. இதில், கட்சி நிர்வாகிகள் பெயரில், அவர்களுக்கே தெரியாமல் சில விளம்பரங்கள் வெளிவந்துள்ளதாக விஜயகாந்த் நேற்று திடீர் குற்றச்சாட்டு ஒன்றை கூறியுள்ளார்.

இதுகுறித்து தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் நேற்று வெளியிட்ட அறிக்கை: சேலத்தில் தே.மு.தி.க., சார்பில் நடக்கும் மாநாட்டை ஒட்டி, கட்சியினர், தொண்டர்கள், ஆதரவாளர்கள் பத்திரிகைகளில் விளம்பரம் அளித்து வருகின்றனர். தமிழகத்தில், நடந்து வரும் மோசமான கருணாநிதி ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்பதையே குறிக்கோளாக கொண்டு, மக்கள் உரிமை மீட்பு மாநாடு நடத்தப்படுகிறது. சற்றும் எதிர்பாராத வகையில், 7ம் தேதி (நேற்று முன்தினம்), மாலை நாளிதழ் ஒன்றில், முக்கிய எதிர்க்கட்சியான அ.தி.மு.க.,வின் தலைமையை விமர்சித்து தே.மு.தி.க., நிர்வாகிகள் பெயரில் ஒரு விளம்பரம் வந்துள்ளது. தே.மு.தி.க.,விற்கும், அந்த விளம்பரத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இன்றைய கொடுங்கோல் ஆட்சிக்கு எதிரானவர்கள் ஒன்று சேர்ந்து விடக் கூடாது என்ற தீய நோக்கத்தோடு, ஏற்கனவே ஊழலில் திளைக்கும், ஆளும் வர்க்கத்தினர் வேண்டுமென்றே, திட்டமிட்டு நச்சு நினைப்போடு, இந்த விளம்பரத்தை வெளியிட்டுள்ளனர். இந்த நயவஞ்சக நரிகளுக்கு சரியான பாடத்தை வரும் தேர்தலில் மக்கள் புகட்ட உள்ளனர்.

இந்த விஷமிகள் வேண்டும் என்றே வெளியிட்ட விளம்பரத்தை, அந்த பத்திரிகை ஏன் வெளியிட்டது என எங்களுக்கு புரியவில்லை. தே.மு.தி.க., நிர்வாகிகளான, கட்சி கொள்கை பரப்பு செயலர் வி.சி. சந்திரகுமார், மத்திய சென்னை மாவட்ட செயலர் செந்தாமரைக் கண்ணன், துறைமுகப் பகுதி செயலர் விசாகராஜன், ஆயிரம் விளக்கு பகுதி செயலர் ஆர்.கோவிந்தன் ஆகியோர் பெயரில், இந்த போலி விளம்பரம் வந்துள்ளதால், இந்த அற்ப காரியத்தை செய்த அந்த சமூக விரோதிகளை கண்டுபிடித்து, அவர்கள் மீதும், இதை வெளியிட்ட பத்திரிகை மீதும் அவதூறு வழக்கு தொடரப்படும். தே.மு.தி.க.,வை பொறுத்தவரை தெளிவான அரசியல் சிந்தனையுடன் இந்த மாநாட்டை நடத்துகிறது. எக்காரணத்தைக் கொண்டும், கருணாநிதி ஆட்சி மீண்டும் வர, தே.மு.தி.க., துணை போகாது என்பதை தமிழக மக்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு விஜயகாந்த் கூறியுள்ளார்.

அ.தி.மு.க.,வும், தே.மு.தி.க.,வும் வரவுள்ள சட்டசபை தேர்தலில் கூட்டணி அமைக்க திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வரும் நிலையில், இந்த அணி அமையாமல் இருக்க ஆளுங்கட்சி சதி செய்துள்ளதாக, விஜயகாந்த் தெரிவித்துள்ள குற்றச்சாட்டு தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. "தி.மு.க., ஆட்சி மீண்டும் வர, தே.மு.தி.க., துணை போகாது' என்று அவர் அறிவித்திருப்பதன் மூலம், அக்கட்சியின் நிலை என்ன என்பதையும் மாநாட்டுக்கு முன்பே அவர் தெளிவுபடுத்தியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.

அ.தி.மு.க., - தே.மு.தி.க., கூட்டணி உருவாகாமல் இருக்க சதி? அம்பலப்படுத்தினார் விஜயகாந்த்

முக நூல்

Popular Posts