background img

புதிய வரவு

Showing posts with label CM karunanidhi. Show all posts

சென்னை: “உங்களுக்கு ஒரு பெண் இருந்து அவர் கைது செய்யப்பட்டால் நீங்கள் எந்த மனநிலையில் இருப்பீர்களோ, அந்த மனநிலையில் தான் நான் இருக்கிறேன்” என்று தி.மு.க., தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

 கனிமொழி கைது குறித்து நிருபர்களிடம் பேசிய அவர், கனிமொழி கைதால் தி.மு.க., காங்கிரஸ் இடையேயான உறவு பாதிக்கப்படாது என்று தெரிவித்த அவர், அடுத்த நடவடிக்கை குறித்து கட்சியின் உயர்நிலை செயற்குழு கூடி முடிவெடுக்கும் என்று தெரிவித்தார்.

கைதையடுத்து அவருடைய மனநிலை குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “உங்களுக்கு ஒரு பெண் இருந்து அவர் கைது செய்யப்பட்டால் நீங்கள் எந்த மனநிலையில் இருப்பீர்களோ, அந்த மனநிலையில் தான் நான் இருக்கிறேன்” என்று தெரிவித்தார். மேலும் இது தொடர்பாக டில்லி செல்லும் எண்ணம் ஏதுமில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

கனிமொழி கைது: கருணாநிதி கருத்து

சென்னை: கத்தியை எடுத்தவனுக்கு கத்தியால்தான் சாவு என்ற பழமொழிக்கேற்ப பின்லேடனின் வாழ்க்கை அமைந்துள்ளது என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

உலக நாடுகளில் அதிர்வையும், அச்சத்தையும் ஏற்படுத்தி - உலக வல்லரசுகளில் ஒன்றான அமெரிக்காவுக்கே பெரும் சவாலாக இருந்துவந்த ஒசாமா பின்லேடன் எனும் உசாமா பின் முகமது பின் அவாத் பின் லாடின் இன்று இல்லை. ஆம்; 40 நிமிடங்களில் அவரது கதை முடிந்து விட்டது. அமெரிக்கப் படையினரால் அவர் நேற்று முன்தினம் சுட்டுக் கொல்லப்பட்டார்.

தொடர்ந்து 10 ஆண்டுகளாக அமெரிக்க நாட்டின் கண்களை மண்ணைத் தூவி மறைத்துவிட்டு, எந்தவித சல்லடைத் தேடலுக்கும் சிக்காமல், உலகத்தின் தலைசிறந்த உளவு அமைப்பு என்று கருதப்படும் அமெரிக்காவின் சி.ஐ.ஏ.யையே ஏமாற்றி, அதன் பரந்து விரிந்த வலைகளில் மாட்டிக் கொள்ளாமல், தான் ஏற்றுக்கொண்ட சித்தாந்தத்தையும், அதன் அடிப்படையில் தான் உருவாக்கிய அமைப்பையும் காப்பாற்று வதற்காக, தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்த ஒசாமா பின்லேடனின் பயங்கரவாதச் சரித்திரம் முடிவுக்கு வந்துவிட்டது.

சோவியத்திற்கு எதிரான தாக்குதலை தனது கல்லூரிப் பேராசிரியர் தீவிரப்படுத்தி வந்ததைக் கண்ட பின்லேடன், அவருக்கு ஆதரவாக இறங்கினார். 1984-ம் ஆண்டில் அஜாமும், பின்லேடனும் இணைந்து `மக்தாப் அல் கடாமத்' என்ற அமைப்பைத் தொடங்கினர்.

இந்த அமைப்பின் நோக்கம், பணம் படைத்த இஸ்லாமிய நாடுகளிடம் இருந்து பணம், ஆயுதம் பெற்று, புனிதப் போரில் ஈடுபடுபவர்களுக்குக் கொடுப்பதாகும். மதச் சட்டங்கள் கடுமையாகக் கடைப் பிடிக்கப்பட வேண்டும் - அதை மீறுபவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் மிகுந்த ஈடுபாடு கொண்ட பின்லேடன், தனது நண்பர்களுடன் சேர்ந்து 1988-89-ல் `அல் கய்தா' என்ற அமைப்பைத் தொடங்கினார்.

சவுதி அரேபிய அரசு அவருக்குத் தடை விதிக்கவே, சூடானில் அடைக்கலம் புகுந்தார் பின்லேடன். நைரோபி, கென்யா, தான்சானியா உள்பட பல இடங்களில் உள்ள அமெரிக்கத் தூதரகங்களிலும், அமெரிக்காவிலும் `அல் கய்தா' அமைப்பு குண்டு வெடிப்பை நடத்தியது. சூடானில் இருந்தும் நாடு கடத்தப்பட்ட பின்லேடன், ஆப்கானிஸ்தானில் தஞ்சம் அடைந்து, அமெரிக்காவுக்கு எதிராகப் புனிதப்போர் என அறிவித்தார்.

நிïயார்க் நகரில் உள்ள 111 மாடிகள் கொண்ட இரட்டை கோபுரக் கட்டிடம் பின்லேடனின் சதித்திட்டத்தால் தகர்த்தெறியப்பட்டது. அப்பாவிகளான 3,000 பேர் அதில் பலியானார்கள். இதுதான், அமெரிக்காவின் தீராக் கோபத்திற்கு காரணமானது. பின்லேடனை தங்களிடம் ஒப்படைக்கும்படி அமெரிக்கா கோரியது. இதற்கு ஆப்கானிஸ்தான் மறுக்கவே, அந்த நாட்டின் மீது அமெரிக்கா தொடர்ந்து விமானத் தாக்குதலை நடத்தியது. இறுதிக் கட்டமாக, ஒசாமா பின்லேடன் பாகிஸ்தானில், அபோதாபாத் நகரில் மறைந்திருந்த இடம் கண்டுபிடிக்கப்பட்டு, அமெரிக்கப் படையினால் அவரது 55-ஆவது வயதில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

சுட்டுக் கொல்லப்பட்ட பின்லேடனின் உடல், எத்தனையோ சாம்ராஜ்யங்களையும், லட்சக்கணக்கான மனித உயிர்களையும் விழுங்கிவிட்டு, எப்போதும்போல் அலைகளை எழுப்பிக் கொண்டிருக்கும் கடலில் மூழ்கடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பின்லேடனின் முடிவை உலக நாடுகளில் பெரும்பாலானவை மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளன. அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா ``ஒசாமாவை சுட்டுக் கொன்றதில் நீதி நிலை நாட்டப்பட்டது. அமெரிக்க மக்கள் நினைப்பதை நிறைவேற்றுபவர்கள் என்பதை, இதன் மூலம் தெரிவிக்க விரும்புகிறேன். இந்தப் போராட்டத்துக்கு அமெரிக்கா அதிக விலை கொடுத்துள்ளது.

இதை அமெரிக்கர்கள் புரிந்து கொள்வர். நம் பாதுகாப்பு, அச்சுறுத்தலுக்கு உள்ளாவதைக் கண்டு நாம் பொறுத்துக் கொள்ள மாட்டோம்; நம் மக்கள் கொல்லப்படும் போது சும்மா இருக்க மாட்டோம். நாம் என்ன நினைக்கிறோமோ, அதைச் செய்து காட்டுவோம் என்பதை, இப்போது மீண்டும் நிரூபித்துக் காட்டியுள்ளோம். அதுதான் நம் வரலாறு'' என்று பெருமிதத்தை வெளியிட்டுள்ளார்.

ஆப்கானிஸ்தானில், சோவியத் படைகளுக்கு எதிராக கலகம் செய்ய வேண்டும் என்பதற்காகவே, தாலிபான்களை அமெரிக்கா ஊக்குவித்தது. இன்றைக்கு அதே தாலிபான்களை ஒடுக்குவதற்காக, ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகள் குவிக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவால் ஊக்குவிக்கப்பட்ட தாலிபான்களுக்கு உதவுவதற்காகவே, பின்லேடன் ஆப்கானிஸ்தான் வந்தார் என்பதை செய்திகள் நமக்குச் சுட்டிக்காட்டுகின்றன.

பயங்கரவாதிகள் என்பதற்கு, ``பயங்கர வாதிகள் சமூகத்திலிருந்து தம்மை தனிமைப்படுத்தி உணர்வார்கள். தமக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகக் கருதுவார்கள். பெரும்பாலானோர் நிராதரவாக்கப்பட்டவர்களே. அரசியல் ரீதியான அல்லது மத ரீதியான தங்களுடைய கொள்கைகளுக்காக, தங்களை அர்ப்பணித்துக் கொள்வார்கள். தங்கள் வன்முறைச் செயலை, குற்றச் செயலாக எப்போதும் ஒப்புக் கொள்ள மாட்டார்கள்.

அவர்கள் சிறந்த விசுவாசிகளாகவும், சூழ்ச்சி கொண்டவர்களாகவும், இரக்கத் தன்மையற்ற கொடியவர்களாகவும் இருப்பார்கள்'' என்று பொருள் சொல்லப்படுகிறது. பயங்கரவாதி என்பதற்கான இந்த வரையறைகள் எந்த அளவுக்கு ஒசாமா பின்லேடனுக்குப் பொருந்துகின்றன என்பதை, அவரது வாழ்க்கை நிகழ்ச்சிகளை ஊன்றி, பகுத்து ஆய்பவர்களுக்குத் தெரியும்.

தேசிய பயங்கரவாதம், மத பயங்கரவாதம், இடதுசாரித் தீவிரவாதம், வலதுசாரி பயங்கர வாதம், அரசையே அழிக்கும் பயங்கரவாதம்; அணு பயங்கரவாதம், ரசாயன பயங்கர வாதம், நுண்ணுயிரியல் பயங்கரவாதம், போதை பயங்கரவாதம் என்று பயங்கரவாதம் எந்த உருவெடுக்க முனைந்தாலும்; அதனை முளையிலேயே கிள்ளி எறிவதும், முகிழ்த்து விடாமல் எச்சரிக்கை கடைப்பிடிப்பதும், அறிவுடையோர் கடமையாகும்.

``வரலாறு தனது வரிகளை இரத்தத்தால் தவிர வேறு எதனாலும் எழுதுவதில்லை. புகழ் எனும் உயர்ந்த மாளிகை மண்டை ஓடுகளால் தவிர வேறு எதனாலும் கட்டப்படுவதில்லை. கவுரவத்திற்கும், மதிப்பிற்கும், உடைந்த எலும்புகளாலும், பிணங்களாலும் தவிர வேறு எதனைக் கொண்டும் அடித்தளம் இடப்படுவதில்லை'' என்று பின்லேடனின் ஆசிரியர் தந்த போதனையை அப்படியே உணர்ச்சிப்பூர்வமாக ஏற்றுக்கொண்டு, அதை நிலைநிறுத்துவதற்கு வாழ்நாள் முழுவதும் முயற்சி செய்த ஒசாமா பின்லேடன், தன் கையில் எடுத்த கருவிதான் ``பயங்கரவாதம்''.

ஒசாமா பின்லேடன் பின்பற்றிய பயங்கரவாதத்திற்கு, ``இஸ்லாமிய பயங்கரவாதம்'' என்ற லேபிளை ஒட்ட எத்தனையோ பேர் எத்தனிக்கிறார்கள். அதனை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. `இஸ்லாம்' என்ற சொல்லுக்கு மற்றொரு பொருளே `சமாதானம்' என்பதாகும். ``இஸ்லாம் ஒரு சமாதான, சகிப்புத் தன்மை கொண்ட மதம் என்றும்; ஒரு முஸ்லிம், இறைவனுடனும், மனிதனுடனும் சமாதானமாக இருத்தல் வேண்டும்'' என்பதும், முகம்மது தோற்றுவித்த 10 அம்சங்களில் ஒன்று என்பதை நாம் மறந்துவிட முடியாது.

எல்லா மதங்களைச் சார்ந்தவர்கள் மத்தியிலிருந்தும் பயங்கரவாதிகள் உருவாவதை சரித்திரம் நமக்குச் சான்றுகளோடு எடுத்துக் காட்டுகிறது. தனி நபர்களையும், அப்பாவி களையும் கொல்லும் பயங்கரவாதம்; கண்டிக்கப்பட வேண்டும் என்பதிலும், தண்டிக்கப்பட வேண்டும் என்பதிலும் யாருக்கும் கருத்து வேறுபாடு இருக்க முடியாது.

எந்தவித நியாயமான குறைகள் அல்லது கோபம் யார் மீது இருந்தபோதிலும், பயங்கரவாதத்தை யாரும் நியாயப்படுத்துவதற்கான அடிப்படை அறவே கிடையாது.

``கத்தியைக் கையில் எடுத்தவன்; கத்தியாலேயே அழிவான்'' என்பது பழமொழி. அந்த பழமொழிக்கான பாடம்தான் ஒசாமா பின்லேடனின் வாழ்க்கை. ``கத்தியைத் தீட்டாதே; புத்தியைத் தீட்டு'' என்ற அண்ணாவின் அன்புமொழியை அனைவரும் நெஞ்சில் நிறுத்திக் கொள்வோமாக என்று அவர் கூறியுள்ளார்.

கத்தியை எடுத்தவனுக்கு கத்தியால்தான் சாவு-பின்லேடன் குறித்து கருணாநிதி

சென்னை: என் குடும்பத்தினர் திரைப்படத்துறையில் ஈடுபட்டால் ஏன் தான் இந்த நெஞ்செரிச்சலோ? என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக முதல்வரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை:

முதுபெரும் எழுத்தாளர்களில் ஒருவரும் எனது மனம் கவர்ந்த கருத்தாளர்களில் ஒருவருமான "சோலை'' எதை எழுதினாலும் அதை விருப்பு வெறுப்பின்றி ஒரே சீரான மனநிலையில் நான் படிப்பது வழக்கம். பாலும் நீரும் கலந்த கலவையில், தனக்கு வேண்டியதை மாத்திரம் எடுத்துக் கொள்ளும் அன்னப் பறவை போன்ற நிலையினின்று என்றைக்கும் தடுமாறாதவன் நான்.

ஆதலால், தமிழகத் திரைப்படத் துறை குறித்து அவர் எழுதியுள்ள ஒரு கட்டுரையை வார இதழ் ஒன்றில் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தொண்டாற்றியும் தொடர்ந்து தியாகங்கள் செய்தும் இயக்கத்தின் தருக்களாக வளர்ந்துள்ள என் பிள்ளைகள் அழகிரி, ஸ்டாலின், தமிழரசு ஆகியோரும், அவர்களுடைய பிள்ளைகளும் திரையுலகிலும் பொருளீட்டி புகழ் ஈட்டுவதை பொறுத்துக் கொள்ள முடியாத சிலர் எனக்கு நண்பர்களாக இருந்து கொண்டே நச்சுக்கணைகள் பாய்ச்சுவதை நாட்டுக்கு உணர்த்தி பகுத்தாய்ந்து; தெளிந்திடுக எனும் வேண்டுகோளோடு இந்த விளக்கத்தை அளிக்க விரும்புகிறேன்.

எனது அருமை நண்பர்கள்

1945-ம் ஆண்டு முதல் இதுவரையில் 75-க்கு மேற்பட்ட திரைப்படங்களுக்கு திரைக்கதை வசனம் எழுதி இருக்கிறேன். நான் திரைக்கதை வசனம் எழுதிய முதல் படங்களான அபிமன்யூ, ராஜகுமாரி ஆகியவற்றில் எனது அருமை நண்பர் எம்.ஜி.ஆர். கதாநாயகனாக தோன்றி இருக்கிறார்.

அவரை அடுத்து எனது அன்பு நண்பர் சிவாஜி "பராசக்தி'' படத்தில் கதாநாயகனாக நடித்து பெரும் புகழ் பெற்றார். இப்படி எனக்கும் திரைப்படக் கலைஞர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், இசைவாணர்கள், கவிஞர்கள், தொழிலாளர்கள் ஆகியோருக்கும் இருந்த தொடர்புகளையும், இருக்கின்ற தொடர்புகளையும் திரையுலகை தெளிவாக புரிந்தவர்கள் மறந்திருக்க முடியாது.

சினிமா துறைக்கு விடிவு காலம்

எழுத்து நடையின் வேகத்தில் சோலை, யாரோ ஒருவர், பெரியதோர் தயாரிப்பாளர் கோபத்தின் உச்சத்தில், இந்த ஆட்சி மாறினால்தான் சினிமா துறைக்கு விடிவு காலம் என்று ஆதங்கப்படுவதாகக் குறிப்பிட்டு, அவர் பெயரையும் வெளிப்படையாகச் சொல்லி இருக்கிறார். தயாரிக்கப்பட்ட திரைப்படங்களை வெளியிட தியேட்டர்களே கிடைக்கவில்லை என்று சினிமா வட்டாரத்தில் விமர்சிக்கிறார்கள் என்று சொல்லவும் சோலை தவறவில்லை.

என்ன செய்வது? படம் எடுப்பதற்கு ஆள் இல்லாமல், ஸ்டுடியோக்களையும், திரையரங்குகளையும் மூடிவிட்டு, அந்த இடங்களை திருமண மண்டபங்களாகவும், ஓட்டல்களாகவும், கிடங்குகளாகவும் மாற்றிடும் நிலைமை ஏற்பட்டது ஒரு காலம். தற்போது படங்களை வெளியிட தியேட்டர்களே கிடைக்கவில்லை என்று அலைகின்ற ஒரு நிலைமை ஏற்பட்டிருக்கிறது.

தியேட்டர் கிடைக்கவில்லை

நான் எழுதி வெளி வந்துள்ள "பொன்னர்-சங்கர்'' திரைப்படத்துக்கும் எங்கும் தியேட்டர்கள் கிடைக்கவில்லை அலையாய் அலைந்துதான் தியேட்டர்களை பிடிக்க முடிந்தது என்று அதன் தயாரிப்பாளர்கள் கண்ணீர் விட்ட நிகழ்ச்சி எல்லாம் எனக்குத் தெரியும்.

கடலூரில் ஒரு தியேட்டரில் "பொன்னர் சங்கர்'' திரைப்படம் திரையிடப்பட்டு அரங்கம் நிறைந்த காட்சிகளாக நடைபெற்றுக் கொண்டிருந்த போதே 2-ம் நாளே அந்த படத்தை கட்டாயப்படுத்தி எடுத்து விட்ட செய்திகள் எல்லாம் சோலைக்கு தெரிந்திருக்க நியாயமில்லை.

திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார் சத்திரம் ஒன்றியத்தில் ஒரு மூதாட்டி "கருணாநிதியின் பேரன் பேத்திகள் எல்லாம் சினிமா படம் எடுக்கிறார்களே, எப்படி?'' என்று கேட்டதாக சோலை எழுதி இருக்கிறார்.

மற்றவர்களையும் பாருங்கள்

பாவம்; அந்தப் பாட்டிக்கு ஏ.வி.மெய்யப்ப செட்டியார் திரைப்படம் எடுத்து பின்னர் அவருடைய மகன்கள் ஏ.வி.எம்.முருகன், ஏ.வி.எம். குமரன், ஏ.வி.எம்.பாலசுப்ரமணியம், ஏ.வி.எம். சரவணன், அவருடைய மகன் குகன், மருமகள் நித்யா போன்றவர்கள் எல்லாம் திரைப்படத் துறையிலே இருப்பதும், சிவாஜிக்குப் பிறகு அவருடைய மகன்கள் ராம்குமார், பிரபு, அவருடைய மகன் துஷ்யந்த் போன்றவர்கள் திரைப்படத் துறையில் ஈடுபட்டதும்,

ரஜினி, அவரது மகள் ஐஸ்வர்யா, மருமகன் தனுஷ் ஆகியோர் திரைப்படத் துறையில் இருப்பதும் கமல், அவரது சகோதரர் சாருஹாசன், மகள் ஸ்ருதி, மற்றும் சுகாசினி, மணிரத்னம், அனுஹாசன் போன்றவர்கள் எல்லாம் இந்தத் துறையிலே ஈடுபட்டிருப்பதும் தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி மற்றும் அவரது பிள்ளைகள் ஜீவா, ஜித்தன் ரமேஷ் போன்றவர்கள் இருப்பதும், நடிகர் சிவகுமார், அவரது பிள்ளைகள் சூர்யா, கார்த்தி போன்றவர்கள் திரைப்படத் துறையில் ஈடுபட்டிருப்பதும் ரெட்டியார் சத்திரம் மூதாட்டிக்குத் தெரியாமல் போனதுதான் வேடிக்கை.

ஓட்டாண்டிகள்

அது மாத்திரம் அல்ல, கடந்த காலத்தில் எத்தனை படத் தயாரிப்பாளர்கள் படங்களைத் தயாரித்து அதை முடிக்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டார்கள், எத்தனை பேர் படம் எடுத்த காரணத்தினாலேயே ஓட்டாண்டியாக ஆகி தெருவிலே நின்றார்கள் என்பதை எல்லாம் என் நண்பர் கவிஞர் கண்ணதாசன் எழுதி புத்தகமாக வெளியிட்டார்.

என் குடும்பத்திலே என்னுடைய பிள்ளைகளோ, பெண்களோ, பேரர்களோ அரசியலிலே ஈடுபட்டால் வாரிசு அரசியல் என்பதற்கும் திரைப்படத் துறையிலே ஈடுபட்டால் அதற்கு அர்த்தம் கற்பிப்பதற்கும் என்னதான் காரணமோ? ஏன்தான் இந்த நெஞ்செரிச்சலோ? ஆட்சி மாற வேண்டுமென்று துர்வாச முனிவரை போல கோபப்பட்ட தயாரிப்பாளருக்கு நான் நினைவூட்ட விரும்புவது, ஏன் அவரே பல முறை கொஞ்ச காலத்திற்கு முன்பு வரையில் பல மேடைகளில் சொல்லியதுதான். அவை வருமாறு:

சினிமா துறைக்கு அளித்த சலுகைகள்

குறைந்த செலவில் தயாரிக்கப்படும் தமிழ்ப் படங்களை ஊக்குவிக்கும் நோக்குடன் தகுதி வாய்ந்த தமிழ்த் திரைப்படங்களுக்கு அவை வெளியிடப்பட்டது முதல் 4 வாரங்கள் வரை கேளிக்கை வரியில் இருந்து விலக்கு அளிக்கும் திட்டம் முதன் முதலாக 12.12.1996 அன்று தி.மு.க. அரசினால் அறிமுகப்படுத்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் அதற்கு முன்பு இருந்த ஆட்சியில் கேளிக்கை வரி வசூலிக்கப்பட்டுத்தான் வந்தது.

புதிய படங்களுக்குக் கேளிக்கை வரியை 54 சதவீதத்தில் இருந்து 40 சதவீதமாக 1989-ம் ஆண்டில் குறைத்த தி.மு.க. அரசு, 1.8.1998 முதல் அதை 30 சதவீதமாகவும், 2000-ல் 25 சதவீதமாகவும் குறைத்தது. 10 ஆண்டுகளுக்கு முன்வந்த திரைப்படங்களுக்குக் கேளிக்கை வரியை 40 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக 1.8.1998 அன்று குறைத்ததுடன்; மொழி மாற்றுப் படங்களுக்கான கேளிக்கை வரியையும் பிற தமிழ்ப்படங்களுக்குக் குறைக்கப்பட்டது போல் குறைத்தது தி.மு.க. அரசு. இதே போல, இணக்க வரி விதிப்புகளும் அதற்கேற்றாற்போல் குறைக்கப்பட்டன.

கேளிக்கை வரி ரத்து

இந்த வரிக்குறைப்புகளின் மூலம் ஆண்டிற்கு ரூ.60 கோடி அளவிற்கான வரிச் சலுகைகளை தமிழ்த் திரைப்பட வரலாற்றில் இல்லாத அளவில் 1998-ம் ஆண்டிலேயே தி.மு.க. அரசு வழங்கியது. விற்பனை வரிச் சட்டத்தின்படி, திரைப்படங்களுக்கான உரிமை மாற்றம் மீது 1.4.1986 முதல் 11.11.1999 வரை செலுத்த வேண்டிய வரியை தள்ளுபடி செய்தது.

அத்துடன் உரிமை மாற்றத்திற்கான விற்பனை வரியை 12.11.1999 முதல் 11 சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாகவும் குறைக்கப்பட்டது. 1.4.2000 முதல் திரைப்படங்கள் குத்தகை மீதான 4 சதவீத விற்பனை வரி அறவே நீக்கப்பட்டது. திரைப்படங்களுக்கு தமிழ்ப் பெயர்கள் வைக்கப்படுமானால், அதற்கு முழு கேளிக்கை வரி முழுமையும் ரத்து செய்யப்பட்டிருப்பதும் இந்த ஆட்சியிலேதான்.

படப்பிடிப்பு க் கட்டணம் குறைப்பு

தொல்பொருள் ஆய்வுத் துறையின்கீழ் உள்ள மற்றும் கலைச்சின்னங்கள் உள்ள இடங்களுக்குச் செலுத்தி வந்த படப்பிடிப்புக் கட்டணம் ஓரிடத்திற்கு ஒரு நாளைக்கு ரூ.5,000 என்பதை ஆயிரம் ரூபாய் எனவும், ஏனைய இடங்களுக்கு ரூ.2,500 என்பதை ரூ.500 எனவும் 1996-ல் குறைத்தது தி.மு.க. அரசு. ராஜாஜி மண்டப படப்பிடிப்பு வாடகை தி.மு.க. ஆட்சியில் ஒரு நாளைக்கு ஆயிரம் ரூபாய் என்று இருந்ததை 2003-ல் ஒரு லட்சமாக உயர்த்தியது ஜெயலலிதா அரசு.

2004 நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. தோல்விக்குப்பின் அது ரூ.25 ஆயிரமாக குறைக்கப்பட்டது. அது, 25.6.2006 அன்று தி.மு.க. அரசினால் ரூ.10 ஆயிரமாக மேலும் குறைக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பு நடத்தப்படும் இடங்களில் வகை-1 என்ற பிரிவில் குறிப்பிடப்பட்ட இடங்களுக்கு ஜெயலலிதா ஆட்சியில் ரூ.10 ஆயிரம் என்று விதிக்கப்பட்ட கட்டணம் ரூ.5 ஆயிரமாகவும், வகை-2-ன் கீழ்வரும் இடங்களுக்கு முந்தைய அ.தி.மு.க ஆட்சியில் ரூ.5 ஆயிரம் என்று விதிக்கப்பட்ட கட்டணம் ரூ.3,000 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது.

திரைப்பட தொழிலாளர்களுக்கு குடியிருப்பு

சின்னத் திரைக்கான படப்பிடிப்புக் கட்டணங்கள் பெரிய திரைக்கான கட்டணங்களில் 50 சதவீதம் மட்டுமே செலுத்தினால் போதும் எனவும் 25.6.2006 அன்று ஆணையிட்டது தி.மு.க. அரசு. தமிழ்த் திரைப்படங்களில் நடிக்கும் சண்டைப் பயிற்சியாளர்கள் சண்டைக் காட்சியின்போது உயிரிழக்க நேர்ந்தால் அவர்களின் குடும்பத்திற்கு ஒரு லட்ச ரூபாயும், செயல்பட முடியாத அளவிற்குக் காயம்பட்டு ஊனமடைய நேர்ந்தால் ரூ.50 ஆயிரமும் நிவாரண உதவி வழங்கும் திட்டம் 1996-ல் அறிமுகப்படுத்தி தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

திரைப்படக் கலைத்துறை, சின்னத்திரை சார்ந்த தயாரிப்பாளர்கள், கலைஞர்கள், தொழில்நுட்ப உதவியாளர்கள், தொழிலாளர்கள் அனைவருக்கும் வீடுகள் கட்டுவதற்காக காஞ்சீபுரம் மாவட்டம் சிறுதாவூருக்கு அருகில் பையனூரில் 96 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டுள்ளது.

திரைப்படத்துறையின் உழைப்பாளிகள் நலன்களைக் காத்திட திரைப்படத் துறையினர் நல வாரியம் அமைக்கப்பட்டு இருக்கிறது. 9.7.2008 அன்று "உளியின் ஓசை'' படத்தின் மூலம் எனக்குக் கிடைத்த கதை வசனத்துக்கான ஊதியம் ரூ.25 லட்சத்தில் வருமானவரி போக ரூ.18 லட்சம் திரைத்துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றும் மூத்த கலைஞர்களுக்கு நேரடியாக வழங்கப்பட்டது.

போர்க் கருவிகள்

நண்பர் சோலை, திரைப்படத் துறையிலே உள்ள ஒரு சிலரின் எண்ணத்தை, தன் கட்டுரையின் வாயிலாக தெரிவித்திருப்பதையொட்டி இந்த விளக்கத்தை அவர்களுக்கு தெரிவித்திட உதவியதற்காக நன்றி தெரிவித்துக் கொண்டு திரையுலகத்திற்கு தி.மு.க. ஆட்சியிலே செய்யப்பட்ட ஒரு சில சாதனைகளை இங்கே சொல்லியிருக்கிறேன்.

இதை எல்லாம் செய்த குற்றத்திற்காகத்தான் இந்த ஆட்சி மாற வேண்டு மென்று திரைப்படத் துறையிலே உள்ள ஒரு சிலர் எண்ணுவார்களானால், அவர்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டிய பொறுப்பு நண்பர் சோலைக்குத்தான் உண்டு.

கலைத் துறை, இலக்கியத் துறை இரண்டையும் என் அரசியல் இலட்சியப் போராட்டத்திற்குத் தேவையான போர்க்கருவிகளாக நான் கருதுகிறேன். சில பேர் லட்சிய போரின் பக்கம் அடியெடுத்து வைக்காமல், தலைவைத்துப் படுக்காமல் கலைத்துறை, இலக்கியத் துறைகளால் மட்டுமே ஈர்க்கப்பட்டு செயல்படுகிறார்கள். காரணமின்றி அவர்களில் சிலருக்கு என் மீது அழுக்காறும், அசூயையும் ஏற்படுவது இயல்புதான். அதற்காக நான் என்னுடைய லட்சியத்தை புதைத்து விட்டு, லட்சங்களைத் தேடி அலைய மாட்டேன்.

-இவ்வாறு முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

என் குடும்பத்தினர் சினிமா எடுத்தால் மட்டும் ஏன் இந்த நெஞ்செரிச்சலோ? - கருணாநிதி

பண்ருட்டி: இந்த நாட்டைப் பிடித்த சனியன் கருணாநிதி. அவரது மகன் ஸ்டாலின் ஒரு பிணி என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் மிகக் கடுமையாக தாக்கியுள்ளார்.

பண்ருட்டியில் இன்று பிற்பகல் தேமுதிக வேட்பாளர் சிவக்கொழுந்துவை ஆதரித்துப் பேசினார் விஜயகாந்த். மிகப் பெரிய அளவில் திரண்டிருந்த தொண்டர்கள் மத்தியில், விஜயகாந்த் பேசுகையில் கூறியதாவது:

என்னைப் பற்றி விமர்சிக்கிறார் மு.க.ஸ்டாலின். உண்மையில், இந்த நாட்டைப் பிடித்த சனியன்தான் உங்க அப்பா. உங்க அப்பாதான் இந்த நாட்டின் சனியன். நீங்கள் இந்த நாட்டைப் பிடித்த பிணி.

எங்களது கூட்டணியை எண்ணெயும், தண்ணீரும் போல என்கிறார்கள். உண்மையில் உங்களது கூட்டணிதான் எண்ணெயும், தண்ணீரும் போல. எங்களது கூட்டணி, தேனும் பாலும் போல. எங்களது கூட்டணி மக்கள் கூட்டணி.

உங்களை சமூக நீதி காத்த கூட்டணி என்கிறீர்கள். ஆனால் உண்மையில் அது சமுதாய விரோத கூட்டணி. பாமக தலைவர் சொன்னாரே, கலைஞர் அலை வீசுகிறது என்று. ஆனால் அனல் காற்றுதான் வீசுகிறது.

என்னைக் காடுவெட்டி குரு பயமுறுத்துகிறார். எனக்குப் பயமெல்லாம் கிடையாது. உங்க தலைவர்தானே அன்று கலைஞர் ஆட்சிக்கு சைபர் மார்க் போட்டார். கருணாநிதி ஆட்சிக்கு அதிக சைபர்களைப் போட்டவர் ராமதாஸ்தான். இன்று அந்த சைபர் கூட்டணியில் போய்ச் சேர்ந்திருக்கிறார்.

தமிழினத் தலைவர் என்று கூறிக் கொள்கிறாரே கலைஞர், உண்மையில் அவர் தமிழினத்தை அழித்த தலைவர். அவரால் ஒரு இனமே அழிந்து போய் விட்டது. தமிழ் மக்களுக்காகப் போராடுவேன் என்று கூறுகிறார் கருணாநிதி, அவரை இலங்கைப் படையிடம் சிக்கி உயிரிழந்த 550 மீனவர்களின் ஆவி கூட மன்னிக்காது.

கருணாநிதி ஆட்சி சாதனை அல்ல, பெரும் வேதனைதான். மக்கள் அவர்களுக்கு தீர்ப்பளிக்கப் போகிறார்கள். நிச்சயம் அவர்களை வீட்டுக்கு அனுப்புவார்கள்.

டெல்லியில் இன்று அன்னா ஹஸாரே உண்ணாவிரதம் இருக்கிறார். எதற்காக, ஊழலை நாட்டை விட்டே விரட்ட வேண்டும் என்பதற்காக. ஆனால் கலைஞரோ, அண்ணாவின் பெயரைச் சொல்லி நாட்டை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்.

மே 13க்குப் பிறகு தெரியும், மானாடுதா, மயிலாடுதா என்பது. அரசன் அன்று கொல்வான். தெய்வம் நின்று கொல்லும். கலைஞர் வீடா, தமி்ழ்நாடா என்பதை வாக்களிக்கப் போகும் முன்பு நினைத்துப் பார்த்து முடிவு செய்து கொண்டு வாக்களியுங்கள் என்றார் விஜயகாந்த்.

கருணாநிதி நாட்டைப் பிடித்த சனி, ஸ்டாலின் ஒரு பிணி-விஜயகாந்த் கடும் தாக்கு

சென்னை:பெட்ரோல் மீதான விற்பனை வரியை 30 சதவீதத்தில் இருந்து, 27 சதவீதமாக குறைத்து முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார். இதனால், பெட்ரோல் விலை ஒரு ரூபாய் 38 காசு குறையும்.

முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிவிப்பு:உலகளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து கொண்டே போவதால், எண்ணெய் நிறுவனங்கள், அதற்கேற்ப பெட்ரோல் விலையை உயர்த்தி அறிவிக்கிறது. இதனால், நடுத்தர மக்கள் பாதிக்கப்படுவதை மனதில் கொண்டு, தமிழக அரசு தன்னால் இயன்ற அளவு, அவ்வப்போது அதற்குரிய விற்பனை வரியை குறைத்து அறிவிப்பதை மக்கள் நன்கறிவர்.பெட்ரோல் பொருள்களின் விலையை மத்திய அரசு உயர்த்தும் போது, தமிழக அரசுக்கான நிர்வாகச் செலவு அதிகமாகிறது. மத்திய அரசு பெட்ரோல் விலையை உயர்த்த வேண்டிய நெருக்கடிக்கு ஆளாகி, உயர்த்துவதால், நடுத்தர மக்கள் குறிப்பாக, இருசக்கர வாகனங்களை பயன்படுத்துவோர் பெரிதும் பாதிக்கப்படக் கூடாது.

இதற்காக, தமிழக அரசு பெட்ரோல் மூலம் தனக்கு கிடைக்கும் விற்பனை வரியை ஓரளவு குறைத்துக் கொள்ள வேண்டியுள்ளது. தற்போது பெட்ரோல் மீது தமிழக அரசு விதித்துள்ள 30 சதவீதம் விற்பனை வரியை 3 சதவீதம் குறைத்து, 27 சதவீதம் மட்டும் வசூலிப்பதென்று முடிவு செய்துள்ளது.இதனால், ஆண்டுக்கு தமிழக அரசுக்கு 210 கோடி ரூபாய் வரி இழப்பு ஏற்படும். பெட்ரோல் பயன்படுத்துவோருக்கு லிட்டர் ஒன்றுக்கு ஒரு ரூபாய் 38 காசு குறையும். விலை குறைப்பு உடனே அமலுக்கு வரும். விற்பனை வரியை குறைத்த பின், தமிழகத்தில் உள்ள 27 சதவீத விற்பனை வரி என்பது, தென் மாநிலங்களிலேயே மிகவும் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.

பெட்ரோல் மீதான விற்பனை வரி குறைப்பு: முதல்வர் கருணாநிதி

 தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய மனைகள் ஒதுக்கீட்டில் விருப்புரிமையின் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் முறைகேடுகள் நடைபெற்றதாகக் கூறப்படுவது தொடர்பாக, முதல்வர் கருணாநிதி மீது வழக்குத் தொடர ஆளுநரிடம் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி அனுமதி கோரியுள்ளார்.

இது தொடர்பான மனுவை கிண்டி ஆளுநர் மாளிகையில் ஆளுநரின் தனிபாதுகாவல் அதிகாரியிடம் திங்கள்கிழமை அவர் அளித்தார். அதன் பின்னர் நிருபர்களிடம் சுப்பிரமணியன் சுவாமி கூறியது:
தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தில் உருவாக்கப்படும் மனைகள் மற்றும் வீடுகளை அரசின் விருப்புரிமைப் பிரிவின்கீழ் ஒதுக்கீடு செய்ததில் பெருமளவில் முறைகேடுகள் நடைபெற்றதாக ஊடகங்கள் மூலமாகத் தெரியவந்துள்ளது. விதிகளுக்கு உட்பட்டு உரிய நபர்களுக்கு ஒதுக்கீடு செய்யாமல், அதிகாரத்தில் உள்ளவர்களில் வேண்டியவர்களுக்கும், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர அனுமதி கேட்டு ஆளுநரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
அரசின் விருப்புரிமைப் பிரிவின்கீழ், தகுதியின்றி மனை ஒதுக்கீடு பெற்றவர்கள் பட்டியல், இதில் நடைபெற்றுள்ள விதி மீறல்கள், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியின் உதவியாளருக்கு தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய மனையை ஒதுக்கீடு செய்ய தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கை ஆகியவை அடங்கிய 3 இணைப்புகளைக் கொண்டதாக அந்த மனு அளிக்கப்பட்டுள்ளது.
தகவல் பெறும் உரிமை சட்ட ஆர்வலர்கள் மூலம் இது தொடர்பான ஆவணங்கள் திரட்டப்பட்டன. இது உள்பட தமிழக முதல்வர் மீது 23 ஊழல் புகார்கள் தொடர்பான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இதில் முதலில் வீட்டுவசதி வாரிய முறைகேடு தொடர்பாக வழக்குத் தொடர ஆளுநரின் அனுமதி கோரப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்தவுடன் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்படும்.
2ஜி ஒதுக்கீட்டில்: 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு முறைகேட்டில் பணம் வாங்கிய விவகாரத்தில் முதல்வர் கருணாநிதி தனிப்பட்ட முறையில் செயல்பட்டுள்ளதால், அதில் வழக்குத் தொடர ஆளுநரின் அனுமதி தேவையில்லை.
2ஜி ஒதுக்கீடு தொடர்பாக ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட வழக்கு வரும் 22-ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது. அப்போது, முதல்வர் கருணாநிதி மீதான வழக்கை தனியாகத் தொடர்வதா அல்லது ஏற்கெனவே உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்குடன் சேர்த்து நடத்துவதா என்பது குறித்து முடிவு செய்யப்படும் என்றார் சுவாமி.

முதல்வர் மீது வழக்கு தொடர அனுமதி கோரி ஆளுநரிடம் சுப்பிரமணியன் சுவாமி மனு

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான விவகாரத்தில் முதல்வர் கருணாநிதியின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் விதத்தில் கருத்து தெரிவித்ததாகக் கூறி, ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமிக்கு வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழல் புகார் தொடர்பான வழக்கு தில்லியில் சி.பி.ஐ. நீதிமன்றத்தில் சனிக்கிழமை விசாரணைக்கு வந்தபோது சுப்பிரமணியன் சுவாமி ஆஜரானார்.
இந்த வழக்கில் தமிழக முதல்வர் கருணாநிதி உள்ளிட்ட சிலரையும் சேர்க்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
இதுகுறித்து ஞாயிற்றுக்கிழமை பத்திரிகைகளில் செய்தி வெளியானது. சுப்பிரமணியன் சுவாமியின் மேற்படி புகார் தொடர்பாக அவருக்கு முதல்வர் சார்பில் வழக்கறிஞர் மூலம் ஞாயிற்றுக்கிழமை நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
நோட்டீஸ் விவரம்:
பொது வாழ்வில் 70 ஆண்டுகளுக்கும் மேலாகச் செயல்பட்டு வருபவர் முதல்வர் கருணாநிதி. தி.மு.க. தலைவராகவும், 50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக சட்டப்பேரவை உறுப்பினராகவும், ஐந்தாவது முறையாக தமிழக முதல்வராகவும் செயல்பட்டு வருகிறார். தமிழக அரசியலில் மட்டுமன்றி, இந்திய அரசியலிலும் மூத்த அரசியல்வாதியாக மதிக்கப்படுகிறார்.
2 ஜி அலைக்கற்றை வழக்கு சி.பி.ஐ. விசாரிக்கும் தன்மையைவிட விரிவானது என்றும், இதில் நாட்டின் பாதுகாப்புக்குக் கவலை தரும் விஷயங்கள் உள்ளடங்கி இருப்பதாகவும், ""தமிழக முதல்வருக்கு இதில் தொடர்பு இருப்பதாகவும்'' நீங்கள் கூறியதாகப் பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகியுள்ளன.
தனிப்பட்ட அரசியல் விரோதம் காரணமாகவும், மலிவான விளம்பரம் தேடும் நோக்கிலும் நீங்கள் தெரிவித்த இந்தக் கருத்து, முதல்வர் கருணாநிதியின் புகழுக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் உள்ளது.
தவறானது என்று தெரிந்தும், எமது கட்சிக்காரரின் (முதல்வர் கருணாநிதி) புகழுக்கும் நற்பெயருக்கும் களங்கம் ஏற்படுத்தும் நோக்கத்தில் இதைக் கூறியிருக்கிறீர்கள்.
2 ஜி அலைக்கற்றை எனப்படும் இந்த வழக்கில் எனது கட்சிக்காரருக்குத் தொடர்பு இருப்பதாக எந்தத் தகவலும் உங்களிடம் இல்லை என்று எமது கட்சிக்காரர் (கருணாநிதி) தெரிவிக்கிறார்.
இந்த 2 ஜி அலைக்கற்றை விஷயத்தில் தமக்கு எந்தவிதமான தொடர்பும் இல்லை என்றும் அவர் உறுதியாகக் கூறியுள்ளார். அவருடைய நற்பெயரை இதில் சேர்க்கும் உங்களின் முயற்சி உள்நோக்கம் கொண்டது என்றும் கூறியுள்ளார். மேற்படி கருத்து அவருடைய நற்பெயருக்குக் களங்கம் கற்பிப்பதற்காக வேண்டுமென்றே செய்ததுபோல அமைந்துள்ளது.
எனவே, தங்களது இந்தக் கருத்தை 24 மணி நேரத்துக்குள் திரும்பப்பெற வேண்டும். இல்லையெனில் தங்கள் மீது அவதூறு வழக்குத் தொடரப்படும் என்று அந்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் கருணாநிதியின் சார்பில் வழக்கறிஞர் பி.ஆர். ராமன் இந்த நோட்டீûஸ அனுப்பியுள்ளார்.

இதுபற்றி சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்த கருத்து:
முதல்வர் பெயரையும் வழக்கில் சேர்க்க வேண்டும் என்பது தொடர்பான கருத்துகள் நீதிமன்றத்தில்தான் தெரிவிக்கப்பட்டன. எனவே இது குறித்து நோட்டீஸ் அனுப்புவது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும். நீதிமன்றத்தில் தெரிவித்த கருத்துகளுக்கோ அல்லது அதை வெளியில் தெரிவித்தமைக்கோ சட்டபூர்வ நடவடிக்கை எதுவும் எடுக்க முடியாது.
இது பற்றிய சட்ட விவரங்கள் தெரியாமல் நோட்டீஸ் அனுப்பியதாகச் செய்தி வெளியாகியுள்ளது. எனக்கு அதுபோன்ற நோட்டீஸ் எதுவும் இதுவரை வரவில்லை என்றார் சுவாமி.

சுப்பிரமணியன் சுவாமிக்கு கருணாநிதி நோட்டீஸ்

டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் தேசிய பாதுகாப்பு சம்பந்தப்பட்டுள்ளது. மேலும், முதல்வர் கருணாநிதிக்கும் இதில் தொடர்புள்ளது. எனவே எனது தனி வழக்கை டெல்லி கோர்ட் தொடர்ந்து விசாரிக்க வேண்டும் என்று ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சாமி கூறியுள்ளார்.

ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த நிலையில் டெல்லி சிறப்பு சிபிஐ நீதிமன்றத்தில் தனியாக சாமியும் ஒரு வழக்குப் பதிவு செய்துள்ளார். ஸ்பெக்ட்ரம் வழக்கில் தன்னை அரசுத் தரப்பில் வக்கீலாக கருதி சேர்க்க வேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.

இதுகுறித்த மனுவை விசாரித்து வரும் நீதிமன்றம் இன்று சாமியிடம் சில கேள்விகளைக் கேட்டது. இதுகுறித்து நீதிபதி பிரதீப் சத்தா கேட்கையில், ஸ்பெக்ட்ரம் வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. முன்னாள் அமைச்சர் ராசாவும் கைது செய்யப்பட்டுள்ளார். நடவடிக்கைகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் இந்த வழக்கின் அவசியம் என்ன என்று கேட்டார்.

அதற்குப் பதிலளித்த சாமி, இந்த வழக்கு தேசிய பாதுகாப்பு சம்பந்தப்பட்டது. மேலும், தமிழக முதல்வர் கருணாநிதிக்கும் இதில் தொடர்பு உள்ளது. எனவே இந்த வழக்கை தொடர்ந்து நடத்த வேண்டும். எனது மனுவை தொடர்ந்து விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இதையடுத்து, இந்த விவகாரத்தில் தேசிய பாதுகாப்பு சம்பந்தப்பட்டுள்ளதா என்பது குறித்து விளக்கம் அளிக்குமாறு சிபிஐக்கு உத்தரவிட்ட நீதிபதி நோட்டீஸ் அனுப்பவும் ஆணையிட்டார்.

வழக்கு விசாரணை பிப்ரவரி 23ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

ஸ்பெக்ட்ரம் ஊழலில் கருணாநிதிக்கும் தொடர்புண்டு-சாமி வாதம்

தி.மு.க. கூ‌ட்ட‌ணி‌யி‌ல் சே‌ர்வது கு‌றி‌த்து பா.ம.க. இ‌ன்னு‌ம் முடிவு செ‌ய்ய‌வி‌ல்லை எ‌ன்று பா.ம.க. தலைவ‌ர் ராமதா‌ஸ் கூ‌றியு‌ள்ள‌தை தொட‌ர்‌ந்து இ‌வ்வாறு கருணா‌நி‌தி ப‌தி‌ல் அ‌ளி‌த்து‌ள்ளா‌ர்.

டெ‌‌ல்‌லி‌யி‌லசெ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌மபே‌சிமுதலமை‌ச்‌ச‌ரகருணா‌நி‌தி, ி.ு.அணியிலசேருவதபற்றி ா.ம.க. முடிவசெய்யவில்லஎன்றால், ி.ு.க.வும்கூஅதுபற்றி இன்னுமமுடிவெடுக்கவில்லை. இதுபற்றி மேலுமஅவரஎதுவுமகூறவில்லை எ‌ன்று தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

பா.ம.க.வை சே‌ர்‌ப்பது ப‌ற்‌றி நாங்களும் முடிவு செய்யவில்லை: கருணாநிதி

தி.மு.க. கூ‌ட்ட‌ணி‌யி‌ல் சே‌ர்வது கு‌றி‌த்து பா.ம.க. இ‌ன்னு‌ம் முடிவு செ‌ய்ய‌வி‌ல்லை எ‌ன்று பா.ம.க. தலைவ‌ர் ராமதா‌ஸ் கூ‌றியு‌ள்ள‌தை தொட‌ர்‌ந்து இ‌வ்வாறு கருணா‌நி‌தி ப‌தி‌ல் அ‌ளி‌த்து‌ள்ளா‌ர்.

டெ‌‌ல்‌லி‌யி‌லசெ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌மபே‌சிமுதலமை‌ச்‌ச‌ரகருணா‌நி‌தி, ி.ு.அணியிலசேருவதபற்றி ா.ம.க. முடிவசெய்யவில்லஎன்றால், ி.ு.க.வும்கூஅதுபற்றி இன்னுமமுடிவெடுக்கவில்லை. இதுபற்றி மேலுமஅவரஎதுவுமகூறவில்லை எ‌ன்று தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

முக நூல்

Popular Posts