background img

புதிய வரவு

Showing posts with label tamilnadu government. Show all posts

மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசு மக்கள் நலப்பணிகளை மட்டுமே கவனத்தில் கொள்ளவேண்டும். அந்த மக்கள் நலப் பணிகளுக்கு தேவையான நிதிகளை உரிய நியாயமான வரி விதிப்பின் மூலம் பெற்று, அதை சரியான வகையில் செலவிடுவதில் கவனம் செலுத்த வேண்டும்.

ஆனால் அரசுகளோ மக்களின் வரிப்பணத்தில் மட்டுமன்றி உலக வங்கியிலிருந்து பெரும் கடன்களின் மூலம் கிடைக்கும் தொகைகளை தேவையற்ற இலவசங்களை வழங்குவதற்கும், தமிழில் திரைப்படத்திற்கு பெயர் வைத்தால் வரிவிலக்கு என்பது போன்றவைகளுக்கும், ஆடம்பர அரசியலுக்கும் பயன்படுத்தி வருகின்றன. இவைகளில் அரசின் கஜானா காலியாகி விடுவதால், நாட்டின் மூலாதாரப் பணிகளுக்கு மேலும் கடன்களை வாங்குவதோடு, டாஸ்மாக் எனும் சாராய வியாபாரத்தை செய்தும் கஜானாவை நிறைக்கிறது.

தமிழ்நாட்டில் மதுக்கடைகளை டாஸ்மாக் நிறுவனம் நடத்தி வருகிறது. தமிழகம் முழுவதும் 6696 மதுக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. ஆண்டுக்கு 15 ஆயிரம் கோடி வருமானம் இதன் மூலம் கிடைக்கிறது. மேலும், தற்போது சரக்குகளின் விலையையும் உயர்த்தி 'குடிமகன்'களை குடிக்காமலேயே தள்ளாட வைத்துள்ளது. குவாட்டர் பாட்டில் ரூ.5, ஆர்ப்பாட்டில் ரூ.10, முழுபாட்டில் ரூ.20, பீர் வகைகள் ரூ.5 என விலை உயர்த்தப்பட்டுள்ளது.

விஸ்கி, பிராந்தி, ரம், பீர் உள்ளிட்ட அனைத்து மது பானங்களின் விலை உயர்வு உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. இந்த விலை உயர்வினால் குடிப்பவர்களின் எண்ணிக்கை ஒரு போதும் குறையப்போவதில்லை. மாறாக குடும்பத்திற்கு குடிமகன்கள் வழங்கும் தொகைதான் குறைய வாய்ப்புண்டு.

அடுத்து இன்னும் ஒரு அதிர்ச்சியான செய்தி என்னவெனில், நாடெங்கும் பூரண மதுவிலக்கு வேண்டும் என்று சில அரசியல் கட்சிகளும், இந்திய தவ்ஹீத் ஜமாஅத் போன்ற சமுதாய நலன் நாடும் இயக்கங்களும், சமூக ஆர்வலர்களுக்கும் குரல் கொடுத்து வரும் நிலையில், 280 மதுக்கடைகளை கூடுதலாக திறக்க டாஸ்மாக் நிறுவனம் முடிவு செய்துள்ளதாகவும், இது தவிர எலைட் ஷாப், எலைட் பார் என்று சொல்லக்கூடிய புதிய நவீன கடைகளும் திறக்கவுள்ளதாகவும், இவைகளில் பார் வசதியுடன் உயர்தர மதுபானங்கள், வெளிநாட்டு மது வகைகள் விற்க உள்ளதாகவும் செய்திகள் கூறுகின்றன.

ஏற்கனவே பெட்டிக் கடைகள் போல் அரசின் மதுக்கடையான டாஸ்மாக் மலிந்து பரவிக்கிடக்கும் நிலையில், அதை இன்னும் அதிகப்படுத்துவது மக்கள் நல அரசுக்கு நல்லதல்ல. தாலிக்கு தங்கம் வழங்கும் அரசு, இந்த குடி மூலம் அதே தாலி கீழே இறங்குவதற்கு காரணமாகவுள்ள மதுக்கடையை அதிகரிப்பது அநீதியாகும்.

நாட்டின் குடிமக்களை காக்க வேண்டிய அரசு 'குடிமகன்கள்' அரசாக மாறுவது அரசுக்கு நிரந்தர அவப்பெயரையே பெற்றுத்தரும் என்பதை ஆளும் அரசு உணர்ந்து பூரண மதுவிலக்கை தமிழகத்தில் அமுல்படுத்தி மக்கள் மனதில் இடம்பெற முதல்வர் முன்வரலாமே!

Thanks கீற்று

குடிமக்கள் அரசா? குடிமகன்கள் அரசா?

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கடந்த மார்ச் ஏப்ரல் மாதங்களில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நடந்தது. இந்த தேர்வை 9 லட்சத்து 50 ஆயிரம் மாணவ-மாணவிகள் எழுதினார்கள். இதில் 8 லட்சத்து 56 ஆயிரத்து 956 பேர் பள்ளிகள் மூலமாக தேர்வு எழுதியவர்கள் ஆவர். 4 லட்சத்து 22 ஆயிரத்து 21 பேர் மாணவர்களும் 4 லட்சத்து 35 ஆயிரத்து 935 பேர் மாணவிகளும் தேர்வு எழுதினார்கள்.

சென்னையில் 232 பள்ளிகளைச் சேர்ந்த 36 ஆயிரத்து 148 பேர் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை எழுதினார்கள். விடைத்தாள்கள் திருத்தம் பணி முடிந்து பாட வாரியாக மதிப்பெண்கள் கம்ப்யூட்டரில் பதிவு செய்யும் பணி நடந்தது. பின்னர் விடைத்தாளில் உள்ள மார்க்கையும் கம்ப்யூட்டரில் உள்ள மார்க்கையும் ஒப்பிட்டு சரி பார்க்கும் பணி நடந்தது.அனைத்து பணிகளும் முடிந்து தேர்வு முடிவுகள் வெளியிட தயாராக உள்ளது.

இந்த நிலையில் இன்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா, நாளை மறுநாள் (27-ந்தேதி) எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு வெளியாகும் என்று அறிவித்தார். இது தொடர்பாக வெளியிடப்பட்ட அரசு செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா 2011-ம் ஆண்டு மார்ச் மற்றும் ஏப்ரலில் நடைபெற்று முடிந்த பத்தாம் வகுப்பு பள்ளி இறுதித் தேர்வு (எஸ்.எஸ்.எல்.சி.) மெட்ரிக்குலேஷன், ஆங்கிலோ இந்தியன் மற்றும் ஓ.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வுகளுக்கான முடிவுகள் ஆகியவற்றை 27.5.2011 (வெள்ளிக்கிழமை) அன்று வெளியிட ஆணையிட்டுள்ளார்.

இந்தத் தேர்வுகளின் முடிவுகள் 27.5.2011 அன்று காலை 10 மணிக்கு வெளியிடப்படும். மாணவ- மாணவியர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளின் மூலமாகவும், இணைய தளங்கள் மற்றும் குறுந்தகவல் (எஸ்.எம்.எஸ்.) மூலமாகவும், தெரிந்து கொள்ளலாம்.

இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

எஸ்.எஸ்.எல்.சி.தேர்வு முடிவு 27-ந்தேதி வெளியாகிறது; ஜெயலலிதா அறிவிப்பு

நிலத்தடி நீரை எடுத்து விற்பனை செய்வதற்கு த‌மிழக அரசு அனுமதிக்கக்கூடாது என்று சென்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் ‌உ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளது.

உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தில் திருப்பூர் மாவ‌ட்ட‌ம் வீரபாண்டி கிராமத்தைச் சேர்ந்த பரமசிவம், ஆண்டிபாளையத்தைச் சேர்ந்த பூமணி ஆகியோர் தா‌க்க‌ல் செ‌ய்த மனு‌வி‌ல், எங்களுக்கு சொந்தமாக திறந்தவெளி கிணறுகள், ஆழ்துளை கிணறுகள் உள்ளன. அவற்றில் இருந்து தண்ணீர் எடுத்துச் செல்வதற்கு வருவாய் கோட்டாட்சியர், காவ‌ல்துறை‌யின‌ர் குறுக்கிடுகின்றனர்.

எங்கள் கிணற்றிலிருந்து எடுக்கப்படும் தண்ணீரை திருப்பூர், பல்லடம் பகுதிக்கு கொண்டு செல்கிறோம். எனவே தண்ணீரை கொண்டு செல்வதில் தலையிட அவர்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

இந்த வழக்கு நிலுவையில் இருக்கும் போது, புதிய திருப்பூர் பகுதி வளர்ச்சி ஆணையம் தரப்பில் தங்களையும் இந்த வழக்கில் இணைத்துக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்தனர். ஆனால் இதை தனி நீதிபதி ஏற்கவில்லை. மனுதாரர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

அந்த உத்தரவை எதிர்த்து உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்த‌ி‌ல் ஆணையம் மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டு வழக்கை நீதிபதிகள் தர்மாராவ், அரிபரந்தாமன் ஆகியோர் விசாரித்து அ‌ளி‌த்த உ‌த்தர‌வி‌ல், தமிழ்நாடு நிலத்தடி நீர்மேம்பாடு, நிர்வாகச் சட்டத்தின் (2003) அடிப்படையில் அரசிடம் இருந்து சில விளக்கங்களை பலமுறை ‌நீ‌திம‌ன்ற‌ம் கேட்டது.

கடந்த ஜனவரி மாதம் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சிறப்பு அரசு பிளீடர், பொதுப்பணித்துறை செயலாளரின் கடிதம் ஒன்றை தாக்கல் செய்தார். அதில், வேளாண்மையை ஊக்குவிக்கவும், விவசாயிகளின் சமூக, பொருளாதார வளர்ச்சியை கருத்தில் கொண்டும் நிலத்தடி நீர்மேம்பாடு, நிர்வாக சட்டத்தில் சில திருத்தங்களை கொண்டு வருவதாக கூறப்பட்டு இருந்தது.

2003ஆம் ஆண்டில் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டது. 3 ஆண்டுகள் முடிந்தும் அதை அமல்படுத்துவதற்கான நடைமுறைகளை அரசு மேற்கொள்ளவில்லை. இதற்கு என்ன காரணம் என்பதும் தெரியவில்லை. உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் 2 முறை உத்தரவு பிறப்பித்த பிறகும், அந்த சட்டத்தை அறிவிப்பாணையாக வெளியிடவில்லை என்று கேள்வி எழுப்பிய பிறகும் அதை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசு எடுக்கவில்லை.

எனவே விவசாயிகளுக்காக, வர்த்தக நோக்கம் உள்ளவர்களிடம் இருந்து நிலத்தடி நீரை பாதுகாப்பதற்காக உத்தரவு பிறப்பிக்கிறோம். அதன்படி இந்த சட்டம் சம்பந்தமான அறிவிப்பாணை வெளியிடப்படும் வரை, நிலத்தடி நீரை எடுத்து விற்பனை செய்வதற்கு யாரையும் அரசு அனுமதிக்கக் கூடாது எ‌ன்று உ‌த்தர‌வி‌ட்ட ‌நீ‌திப‌திக‌ள், வழக்‌கு விசாரணையை 4 வாரத்துக்கு தள்ளிவை‌த்தன‌ர்.

நிலத்தடி நீரை எடுத்து விற்பனை செய்ய தடை

முக நூல்

Popular Posts