background img

புதிய வரவு

Showing posts with label ADMK Jeyalalitha. Show all posts

இந்தியாவில் “யூனியன் பிரதேசங்கள்” எனப்படும் மத்திய அரசின் நேரடி பகுதிகள் தவிர,33 மாநிலங்கள் இருக்கின்றன. அதேபோல அமெரிக்காவில் மொத்தம் ஐம்பது { 50 } மாநிலங்கள் இருக்கின்றன. அங்குள்ள மத்திய அரசும் இந்திய மத்திய அரசைப் போலவே ” மரணதண்டனையை” தனது சட்டத்தில் இன்னமும் வைத்துக் கொண்டுள்ளது. ஆனால் அங்குள்ள மாநிலங்கள் பல துணிச்சலாக முடிவு எடுத்துள்ளனர். அதாவது 13 மாநிலங்கள் ” மரண தண்டனையை” தங்கள் மாநிலங்களில் “ரத்து” செய்துள்ளன. அங்குள்ள 50 மாநிலங்களில் 13 மாநிலங்கள் துணிச்சலாக இந்த காரியத்தை செய்துள்ளன.அவையாவன: அலாஸ்கா, ஹவாய், லோவா, மைனே, மசாசுசெட்ஸ், மிசிகன், மின்னேசோட்டா, நியு ஜெர்சி, வடக்கு டகோடா, ரோடே தீவு, வேர்மோன்ட், மேற்கு வெர்ஜினியா, விஸ்கான்சின், ஆகியவையே அந்த பதின்மூன்று மாநிலங்கள். அது தவிர, “நெபராஸ்கா” அன்ர மாநிலத்தில் உள்ள “உச்சநீதிமன்றம்” மரணதண்டனைகளை “மின்சாரம் பாய்ச்சி” நடத்துவது, ” கொடுமையானதும், மனிதத்தன்மை அற்றதும்” என்று தீர்ப்பு கொடுத்துள்ளது. அதனால் அந்த மாநிலத்திலும் மரணதண்டனை செயல்பாட்டில் இல்லை.

இத்தகைய அதாவது அமெரிக்கா போன்ற “அரசு கட்டமைப்போ” அல்லது மாநிலங்களுக்கு தனி உச்ச நீதிமன்றங்களோ இந்தியாவில் இல்லை என்றாலும், இங்குள்ள மாநிலங்களின் “அமைச்சரவைகள்” இந்திய அரசியல் சட்டத்தில் இருக்கும் 161 ஆம் பிரிவு உட்பட பல்வேறு பிரிவுகளில் வழங்கப்பட்டுள்ள வாய்ப்புகளை பயன்படுத்தி, “மரணதண்டனையை, ஆயுள் தணடனையாக” குறைக்கலாம். அதற்கு அமெரிக்காவின் முன்னுதாரணத்தை , தமிழக முதல்வர் முதன் முதலாக இந்திய நாட்டில் பயன்படுத்தி, வரலாறு உருவாக்கலாம்.
Thanks Meenagam

அமெரிக்க மாநிலங்களை முதல்வர் பின்பற்றலாமே?

No conditions of the people are stretched out his hand to anyone. In my lifetime I have seen that the condition is not interested. Chief Minister Jayalalithaa in the Assembly Sentimental Talk

தமிழக மக்கள் யாரிடமும் கையை நீட்டி பெறுகின்ற நிலைமை இருக்ககூடாது. அந்த நிலையை எனது வாழ்நாளில் நான் காண வேண்டும் என்ற ஆசை எனக்கு இருக்கிறது. என் லட்சியமும் அதுதான் என் என்று சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா உருக்கமாக கூறினார்.
சட்டசபையில் அ.தி. மு.க. ஆட்சியின் 100 நாள் சாதனையை பாராட்டி பேசிய உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்து முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது:
தமிழக மக்களின் மகத்தான ஆதரவுடன் 3 மாதங்களுக்கு முன்பு அமைக்கப்பட்ட அ.தி.மு.க. தலைமையிலான அரசு தன்னுடைய பணியில் 100 நாட்களை இன்று நிறைவு செய்ததையொட்டி இங்கே சட்டமன்ற கட்சி தலைவர்கள் பலரும் பேசி தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தார்கள். இங்கு பேசிய உறுப்பினர்கள், சட்டமன்ற கட்சி தலைவர்கள் தெரிவித்த கருத்துக்களை பாராட்டுகளை கேட்கின்றபோது ஏதோ சம்பிரதாயத்துக்காக தெரிவிக்கப்பட்ட பாராட்டுகள் போல எனக்கு தோன்றவில்லை. ஒவ்வொருவரும் தங்களுடைய உள்ளத்தின் அடிதளத்தில் இருந்து வந்த உணர்வுகளை இங்கே வெளிப்படுத்தியதாக நான் கருதுகிறேன்.   இந்த பாராட்டுரைகளை எல்லாம் கேட்கும்போது எனக்கு மகிழ்ச்சி என்பதை விட என்றுமே என் வாழ்க்கையில் தோன்றாத ஒரு அச்ச உணர்வு இப்போது தோன்றி இருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.
100 நாட்கள் முடிந்த பின்னர் எங்கள் ஆட்சியின் பணியை இன்று ஒருவர் கூட குறை சொல்லாமல் இப்படி தாராளமனதோடு, முழுமனதோடு பாராட்டு தெரிவித்து இருக்கிறார்களே. இது தொடர்ந்து நீடித்து நிலைத்திருக்க வேண்டும் என்று எண்ணும் போது ஒரு  சிறிய அச்ச உணர்வு ஏற்படுகிறது.
இந்த 100 நாட்களுடன் எல்லாம் முடிந்து விடவில்லை. இன்னும் 5 ஆண்டுகள் நிறைவு செய்ய வேண்டும். அந்த 5 ஆண்டுகள் முடியும் வரையிலும் இந்த 100 நாட்கள் பணியை மிஞ்சுகின்ற அளவுக்கு எங்கள் அரசின் பணிகள் அமைய வேண்டுமே…   இங்குள்ள உறுப்பினர்கள், சட்டமன்ற கட்சி தலைவர்கள் தொடர்ந்து நம்மை வாழ்த்தி பாராட்ட வேண்டுமே… அதற்கேற்றார் போல் நம்முடைய செயல்பாடுகள் அமைய வேண்டுமே.. என நினைக்கும் போது இது மிகப்பெரிய சவாலாகவே எனக்கு தோன்றுகிறது.
என்னை பொறுத்தவரை அனைவரது ஆதரவோடும் வாழ்த்துக்களோடும் சாதிக்க முடியும் என்று நம்புகிறேன். காரணம்- நாங்கள் எதை செய்தாலும் உள்ள சுத்தியுடன் செய்கிறோம். மக்களை ஏமாற்ற வேண்டும் என்ற எண்ணம் எங்களிடம் கிஞ்சித்தும்  இல்லை.
இந்த நேரத்தில் தமிழக மக்களுக்கு நான் நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறேன். இன்று ஒரு உண்மையை நான் இங்கே வெளிப்படுத்த விரும்புகிறேன். இது ஏற்கனவே எனக்கு தெரிந்த விவரமென்றாலும் அதை சொல்லக்கூடிய ஒரு சந்தர்ப்பம் அமைய வில்லை.  இன்று சொல்லி விடலாம் என்று எண்ணுகிறேன்.
கடந்த தி.மு.க. ஆட்சியாளர்கள் மலைபோல் நம்பி இருந்தது பண பலத்தைத் தான். ஆட்பலத்தை விட, படை பலத்தை விட, அதிகார பலத்தை விட அவர்கள் நம்பியிருந்தது பண பலத்தைத்தான்.
3 மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற சட்டமன்ற பொதுத் தேர்தலில் தி.மு.க.வினர் புழகத்தில் விட்ட பணம் எவ்வளவு தெரியுமா? ரூ.5 ஆயிரம் கோடி. அந்த தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருந்த போது, தேர்தல் பிரச்சாரம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது இந்திய தேர்தல் ஆணையம் சில கடுமையான நடவடிக்கை எடுத்தது.
அப்போது இந்திய தேர்தல் ஆணையம் எடுத்த நடவடிக்கைகளின் காரணமாக தி.மு.க.வினரிடம் இருந்து ரூ.50 கோடி ஒட்டு மொத்தமாக கைப்பற்றப்பட்டது. இது எல்லா  பத்திரிகைகளிலும் வெளியே வந்தது.
இந்த செய்தி வந்த போது முன்னாள் முதல்வர் குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமானவர்கள் இங்கே சென்னை மெரினா கடற்கரையில் நடைபயிற்சி செய்து கொண்டிருந்தனர். எனக்கு வேண்டியவரும் அவர்கள் அருகிலேயே இருந்தார். அவர் யாரென்று அவர்களுக்கு தெரியாது.
அப்போது ஒருவர் கேட்கிறார் எலக்ஷன் கமிஷன் பரவாயில்லையே. ரூ.50 கோடியை அவர்கள் கைப்பற்றி விட்டார்களே என்று சொல்கிறார். அதற்கு இன்னொருவர் சொல்கிறார்.. இந்த ரூ.50 கோடி என்பது எங்களுக்கு, அதாவது முன்னாள் முதல்வர் குடும்பத்திற்கு ஒரு பானை தண்ணீர் கொண்டு செல்லும் போது சிதறி சில துளிகள் விழுமே, அது போன்ற சிதறல்தான் என்றார்.
இந்த ரூ.50 கோடி வெறும் சிதறல், எங்களுக்கு இது பொருட்டே அல்ல. ஒட்டு மொத்தமாக எங்கள் அண்ணன், எந்த அண்ணன், அஞ்சாமல் இருந்து இன்று காணாமல் போன அண்ணன் புழக்கத்தில் விட்ட பணம் ரூ.5 ஆயிரம் கோடி என்று அவர்கள் அங்கே தெரிவித்தார்கள்.
இதை எதற்காகச் சொல்ல வருகிறேன் என்றால், அந்த ரூ. 50 கோடி புழக்கத்தில் விட்டு இவ்வளவு ஆசை காட்டி அவர்கள் என்ன செய்தாலும் மக்கள் அதற்கெல்லாம் மசியாமல் இடம் கொடுக்காமல் அதற்கு இளகிவிடாமல், மக்கள் உறுதியாக இருந்து, இவர்கள் எவ்வளவு பணத்தைக் கொட்டினாலும் சரி, எத்தனை பவுன் தங்கத்தை கொடுத்தாலும் சரி, எத்தனை சேலைகளைக் கொடுத்தாலும் சரி, என்ன கொடுத்தாலும் சரி அ.தி.மு.க. விற்கு வாக்களிப்போம். அதன் கூட்டணி கட்சிகளுக்கு வாக்களிப்போம் என்று ஒரு உறுதியுடன் இருந்து சாதித்துக் காட்டினார்கள்.
அதனால் தான் இன்று கொடுத்த விளம்பரங்களில் சொல்லியிருக்கிறோம். “மாற்றத்தைக் கொண்டு வந்த தமிழக மக்களுக்கு ஏற்றத்தை தருகின்ற அரசு என்று.
இங்கே பேசிய சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர்கள் எல்லாம் குறிபிட்டார்கள்.. இந்த அரசுக்கு, இந்த முதல்வருக்கு செய்ய வேண்டும் என்று மனம் இருக்கிறது. ஆனால் ஒட்டு மொத்தத்தில் அமைச்சர் பேசுகின்ற பேச்சுகளைப் பார்க்கும் போது, முதல்வர் சொல்லுகின்ற கருத்துக்களைப் பார்க்கும் போதும் நிதிப் பற்றாக்குறைதான் அவர்களுக்கு ஒரு தடையாக இருக்கிறது என்று சொன்னார்கள். அது நூற்றுக்கு நூறு உண்மை.
தமிழக மக்களுக்கு எவ்வளவோ செய்ய வேண்டும் என்ற ஆசை எனக்கு இருக்கிறது. எங்கள் அரசுக்கு இருக்கிறது. ஏற்கனவே இருந்த ஆட்சியாளர் எப்படி தமிழக மக்களை கடனாளியாக்கி விட்டு சென்றார்கள் என்பதை இங்கே பேசிய அனைவரும் குறிப்பிட்டார்கள்.
மத்திய அரசும் நமக்குச் செய்ய வேண்டிய உதவிகளை செய்யாமல் எப்படி பாராமுகமாக இருக்கிறது என்பதையும் இங்கே குறிப்பிட்டார்கள். ஆனால் அத்தனையையும் மீறி நாங்கள் சாதிப்போம் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
இந்த நேரத்தில் தமிழக மக்களுக்கு நான் சொல்லிக் கொள்ள விரும்புவது இதுதான். ‘‘வருந்தாதே ஏழை மனமே.. வரும் காலம் நல்ல காலம். மனம் போல் இன்பம் நேரும் திருநாளும் வந்து சேரும். தினம் இரவு பகலும் மாறி வரும் முறையை எண்ணிப்பாரு’’ என்பதைச் சொல்லி, நல்ல காலம் வரும் என்ற நம்பிக்கை நிச்சயமாக எனக்கு இருக்கிறது.
இன்று விலையில்லா அரிசி, இன்னும் கிரைண்டர், மிக்சி, விசிறி, போன்ற எத்தனையோ பொருட்களை மக்களுக்கு கொடுப்பதைப் பற்றி பலரும் குறிப்பிட்டார்கள். ஆடு மாடுகள் வழங்குவதைப் பற்றியும் இங்கே குறிப்பிட்டார்கள். அதற்குப் பாராட்டு தெரிவித்தார்கள்.
எனக்கு மனதில் இருக்கின்ற எண்ணம், ஆசை இதுதான். எல்லாமும் எல்லாரும் பெற வேண்டும் இங்கே இல்லாமை இல்லாத நிலை வேண்டும் ஒரு காலகட்டத்தில் தமிழக மக்களுக்கு யாரும் எந்த உதவியும் இலவசமாக தர வேண்டிய அவசியம் இருக்கக் கூடாது.
தமிழக மக்கள் யாரிடத்திலேயும் கையை நீட்டிப் பெறுகின்ற நிலைமை இருக்கக்கூடாது. அந்த நிலையை எனது வாழ்நாளில் நான் காண வேண்டுமென்ற ஆசை எனக்கு இருக்கிறது.அதுதான் என்னுடைய லட்சியம் உங்கள் அனைவரின் ஒத்துழைப்போடும், நல்வாழ்த்துகளோடும் தமிழக மக்களின் அன்போடும், ஆதரவோடும் எனது லட்சியம் நிறைவேறியே தீரும் நிறைவேற்றியே தீருவோம் என்று சொல்லிக் கொள்கிறேன்.
இவ்வாறு ஜெயலலிதா பேசினார்.

தமிழக மக்கள் யாரிடமும் கை நீட்டும் நிலை இருக்க கூடாது – சட்டசபையில் ஜெ. உருக்கமான பேச்சு

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கடந்த மார்ச் ஏப்ரல் மாதங்களில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நடந்தது. இந்த தேர்வை 9 லட்சத்து 50 ஆயிரம் மாணவ-மாணவிகள் எழுதினார்கள். இதில் 8 லட்சத்து 56 ஆயிரத்து 956 பேர் பள்ளிகள் மூலமாக தேர்வு எழுதியவர்கள் ஆவர். 4 லட்சத்து 22 ஆயிரத்து 21 பேர் மாணவர்களும் 4 லட்சத்து 35 ஆயிரத்து 935 பேர் மாணவிகளும் தேர்வு எழுதினார்கள்.

சென்னையில் 232 பள்ளிகளைச் சேர்ந்த 36 ஆயிரத்து 148 பேர் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை எழுதினார்கள். விடைத்தாள்கள் திருத்தம் பணி முடிந்து பாட வாரியாக மதிப்பெண்கள் கம்ப்யூட்டரில் பதிவு செய்யும் பணி நடந்தது. பின்னர் விடைத்தாளில் உள்ள மார்க்கையும் கம்ப்யூட்டரில் உள்ள மார்க்கையும் ஒப்பிட்டு சரி பார்க்கும் பணி நடந்தது.அனைத்து பணிகளும் முடிந்து தேர்வு முடிவுகள் வெளியிட தயாராக உள்ளது.

இந்த நிலையில் இன்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா, நாளை மறுநாள் (27-ந்தேதி) எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு வெளியாகும் என்று அறிவித்தார். இது தொடர்பாக வெளியிடப்பட்ட அரசு செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா 2011-ம் ஆண்டு மார்ச் மற்றும் ஏப்ரலில் நடைபெற்று முடிந்த பத்தாம் வகுப்பு பள்ளி இறுதித் தேர்வு (எஸ்.எஸ்.எல்.சி.) மெட்ரிக்குலேஷன், ஆங்கிலோ இந்தியன் மற்றும் ஓ.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வுகளுக்கான முடிவுகள் ஆகியவற்றை 27.5.2011 (வெள்ளிக்கிழமை) அன்று வெளியிட ஆணையிட்டுள்ளார்.

இந்தத் தேர்வுகளின் முடிவுகள் 27.5.2011 அன்று காலை 10 மணிக்கு வெளியிடப்படும். மாணவ- மாணவியர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளின் மூலமாகவும், இணைய தளங்கள் மற்றும் குறுந்தகவல் (எஸ்.எம்.எஸ்.) மூலமாகவும், தெரிந்து கொள்ளலாம்.

இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

எஸ்.எஸ்.எல்.சி.தேர்வு முடிவு 27-ந்தேதி வெளியாகிறது; ஜெயலலிதா அறிவிப்பு

சென்னை, மே 24: தமிழகத்தில் சட்டமேலவை வருவதற்கு அதிமுக அரசு அனுமதிக்காது என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார்.

கேபிள் டி.வி. அரசுடைமை ஆக்கப்பட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

முதலமைச்சராகப் பதவி ஏற்ற பிறகு நிருபர்களை தலைமைச் செயலகத்தில் முதல் முறையாகச் சந்தித்த அவர், அவர்களின் கேள்விகளுக்குப் பதில் அளித்தார். வாரந்தோறும் செய்தியாளர்களைச் சந்திக்கப்போவதாகவும் அவர் தெரிவித்தார்.

"திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம், மேலவை அமைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கும். அதிமுக ஆட்சிக்கு வந்ததும் அதுகுறித்த தீர்மானங்களை ரத்து செய்யும்.

மேலவை தேவையில்லை என்கிற முடிவை அதிமுக நிறுவனர் எம்.ஜி.ஆர். எடுத்தார். அந்த முடிவில் எந்த மாற்றமும் இல்லை. தமிழகத்தில் மேலவை வராமல் இருக்க என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்வோம்.

கேபிள் டி.வி. அரசுடமையாக்கப்படும் என அதிமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அரசுடமையாக்கப்படும். எப்போது எனக் கேட்டால், அதை நடைமுறைக்குக் கொண்டு வரும்போது உங்களுக்குத் தெரியும். அதிமுக அரசு பொறுப்பேற்று எட்டு நாட்கள்தான் ஆகிறது. அதற்குள்ளாக மிகவும் சீக்கிரமாக இந்தக் கேள்வியைக் கேட்கிறீர்கள்.

மாணவ-மாணவிகளுக்கு மடிக்கணினி (லேப்-டாப்) வழங்குவது உள்ளிட்ட திட்டங்கள் பற்றி ஆளுநர் உரையில் அறிவிப்புகள் வெளியாகும்.

அச்சுறுத்திப் பறித்த சொத்துகள்: திமுகவினர் ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி மக்களை அச்சுறுத்திப் பறித்துள்ள சொத்துகள் மீட்கப்படும் என அதிமுக தேர்தல் அறிக்கையிலே தெரிவிக்கப்பட்டுள்ளது. அது நிறைவேற்றப்படும்.

அலைக்கற்றை விவகாரம்: 2ஜி அலைக்கற்றை விவகார வழக்கு இப்போது சரியான திசையில் சென்று கொண்டிருக்கிறது.

இப்போது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை மூலம் நீதித் துறையின் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

பெண் என்பதால் ஒரு வழக்கில் இருந்து சலுகை காட்ட வேண்டும் என்கிற வாதமே தவறானது. பெண் என்பதற்காக கிரிமினல் வழக்குகளில் அவருக்கு சலுகை கோர உரிமையில்லை.

தலைமைச் செயலகம்: தலைமைச் செயலகத்தைக் கட்டுவதற்கு திமுக அரசு அதிக ஆண்டுகளை எடுத்துக் கொண்டது. ஆனால், அந்தக் கட்டடத்தை என்ன செய்வது என்பது குறித்து எங்களை சீக்கிரம் முடிவெடுக்கச் சொல்கிறீர்கள்.

பெட்ரோல் விலை உயர்வு: விலைவாசி உயர்வால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அனைத்துப் பொருள்களின் விலை உயர்வுக்கும் பெட்ரோல், டீசல் விலை உயர்வுதான் மூல காரணமாகும். எனவே அவற்றின் விலையை உயர்த்தும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும்.

தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்று ஒருவாரம்தான் ஆகிறது. எனவே பெட்ரோல், டீசல் மீதான மாநில அரசின் விற்பனை வரியைக் குறைப்பது பற்றி இன்னும் ஆராயவில்லை. அதுகுறித்து ஆராய்ந்து முடிவெடுக்கப்படும்.

கட்டுமானப் பொருள்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த விலைவாசியையும் குறைக்க அரசு நடவடிக்கைகள எடுக்கும்.

பள்ளிக் கட்டணம்: தனியார் பள்ளிக்கூடங்களில் வசூலிக்கப்படும் கல்விக் கட்டணத்தை நிர்ணயிக்கும் விஷயத்தில் அரசு நேரடியாகச் சம்பந்தப்படவில்லை. இதற்கென கட்டண நிர்ணயக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

அந்தக் குழு கட்டணத்தை நிர்ணயிக்கிறது. அதை பள்ளிகள் அமல்படுத்துகின்றன. பள்ளிகளுக்கும், அந்தக் குழுவுக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டு இந்த விஷயத்தில் தலையிட வேண்டும் என பள்ளிகள் விரும்பினால் அரசு தலையிடும்.

சமச்சீர் கல்வி: சமச்சீர் கல்வி இந்த ஆண்டு அமல் செய்யப்படாது. இந்த கல்வித் திட்டத்தை ஆய்வு செய்வதற்காக குழு அமைக்கப்படும். கல்வித் திட்டத்தை ஆராய்ந்து குழுவின் சார்பில் பரிந்துரைகள் அளிக்கப்படும். இதற்கென கால நிர்ணயம் ஏதும் வகுக்கப்படவில்லை.

மெட்ரோ ரயில்: மெட்ரோ ரயில் உள்பட திமுக அரசு தொடங்கியுள்ள திட்டங்களின் நிலை குறித்து ஆய்வு செய்யப்பட்டு முடிவெடுக்கும்போது உங்களுக்குத் தெரிவிப்போம் என்று கூறினார் ஜெயலலிதா.

சட்டமேலவை கிடையாது: முதல்வர் ஜெயலலிதா

அதிமுக அரசின் முதல் அமைச்சரவைக் கூட்டம் கோட்டை தலைமைச் செயலகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் சில முக்கியத் திட்டங்களுக்கான அனுமதி கோரப்படும் எனத் தெரிகிறது.

14-வது சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. 33 அமைச்சர்களைக் கொண்ட அமைச்சரவை பொறுப்பேற்றுள்ளது. முதல்வர் ஜெயலலிதா, தான் பொறுப்பேற்ற முதல் நாளிலேயே ஏழு திட்டங்களுக்கான உத்தரவுகளில் கையெழுத்திட்டார்.

பட்டதாரி ஏழை பெண்களுக்கான திருமண நிதியுதவியை ரூ.50 ஆயிரமாக உயர்த்தவும், அரை சவரன் தங்கம் இலவசமாக வழங்கவும் உத்தரவிட்டார். 20 கிலோ இலவச அரிசி உள்ளிட்ட திட்டங்களுக்கும் உத்தரவிட்டுள்ளார். இலவச அரிசி திட்டம் ஜூன் 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என அரசு அறிவித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள கூட்டத்தில் பல முக்கியத் திட்டங்களுக்கு அமைச்சரவையின் ஒப்புதல் பெறப்படும் எனத் தெரிகிறது. சில திட்டங்கள் அடுத்த 10 நாள்களுக்குள் அமல்படுத்தப்பட இருப்பதால் அமைச்சரவைக் கூட்டத்தை உடனடியாகக் கூட்ட வேண்டிய அவசியம் இருப்பதாக தலைமைச் செயலக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்ட இரண்டாவது நாளிலேயே அமைச்சர்கள் அனைவருடனும் ஆலோசனை நடத்தினார் ஜெயலலிதா. சுமார் இரண்டரை மணி நேரத்துக்கும் மேலாக அந்தக் கூட்டம் நடைபெற்றது. இதேபோன்று, மூன்றாவது நாளும் அமைச்சர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். அமைச்சர்களுக்கான துறைகள் என்ன, அதன் தன்மைகள், கோப்புகளை எவ்வாறு கையாள்வது என்பன உள்ளிட்ட விஷயங்களை அமைச்சர்களுக்கு எடுத்துக் கூறினார் ஜெயலலிதா.

புதியவர்களுக்கு முதல் கூட்டம்: தமிழக அமைச்சரவையில் 24 பேர் புதியவர்கள். அவர்களுக்கு இது முதல் அமைச்சரவைக் கூட்டமாகும். ஞாயிற்றுக்கிழமை அமைச்சரவைக் கூட்டம் என்பதால் சனிக்கிழமை பணி இல்லாவிட்டாலும் பல அமைச்சர்கள் தலைமைச் செயலகத்திலேயே முகாமிட்டு இருந்தனர். துறைகள் பற்றிய விவரங்களை அதிகாரிகளிடம் கேட்டுத் தெரிந்த அவர்கள், அமைச்சரவைக் கூட்டத்தில் முதல்வர் கேள்விகளைக் கேட்டால் அதற்கு தங்களை தயார் செய்யும் வகையில் பணியாற்றியதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதிமுக அரசின் முதல் அமைச்சரவைக் கூட்டம்: கோட்டையில் இன்று நடைபெறுகிறது

தேர்தல் பிரசாரத்தில் உறுதி அளித்தபடி, சாயப்பட்டறை பிரச்சினையை தீர்க்க பதவியேற்ற 4-வது நாளிலேயே முதல்-அமைச்சர் ஜெயலலிதா நடவடிக்கை எடுத்துள்ளார்.

கடந்த மாதம் 7-ந் தேதி திருப்பூரில் தேர்தல் பிரசார கூட்டத்தில் ஜெயலலிதா பேசும்போது, சாயப்பட்டறை பிரச்சினைக்கு மிக முக்கியத்துவம் கொடுத்து பேசி சில உறுதிமொழிகளையும் கூறினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

உயர்நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்த கருணாநிதி நடவடிக்கை எடுக்காததன் காரணமாக, 750-க்கும் மேற்பட்ட சாய, சலவை பட்டறைகள் மூடப்பட்டு விட்டன. தொழிலாளர்கள் வேலையின்றி தவிக்கின்றனர். உற்பத்தி இழப்பும், அரசுக்கு வருவாய் இழப்பும் ஏற்பட்டு இருக்கிறது. இதன்விளைவாக பனியன் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. ஜவுளித்தொழில் முடங்கும் நிலைக்கு வந்துவிட்டது.

மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி வந்தவுடன், விவசாய நிலங்கள் பாதிக்கப்படாத வகையிலும், நிலத்தடி நீர் மாசுபடாத வகையிலும், அனைத்து தரப்பினரையும் அழைத்துப்பேசி மூடப்பட்டுள்ள சாய, சலவை ஆலைகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், திருப்பூர், ஈரோடு, கரூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள சாயத்தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரை கடலுக்கு கொண்டு செல்லும் திட்டத்தை செயல்படுத்தும் வகையில், தேவையான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்படும்.

இவ்வாறு ஜெயலலிதா உறுதி அளித்தார்.

அதன்படி, சாயப்பட்டறை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண பதவியேற்ற 4-வது நாளிலேயே முதல்-அமைச்சர் ஜெயலலிதா நடவடிக்கை எடுத்துள்ளார். இதுதொடர்பாக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நேற்று தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா தலைமையில் திருப்பூர் சாயப்பட்டறைகள் பிரச்சினை குறித்து தீர்வு காண ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில், நிதித்துறை அமைச்சர், வேளாண்மைத்துறை அமைச்சர், தொழில்துறை அமைச்சர், பொதுப்பணித்துறை அமைச்சர், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர், சுற்றுச்சூழல் துறை அமைச்சர், தலைமைச்செயலாளர், நிதித்துறை செயலாளர், கைத்தறி மற்றும் துணிநூல் துறை செயலாளர், சுற்றுச்சூழல் மற்றும் வனங்கள் துறை செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில், திருப்பூர் சாயப்பட்டறைகள் பிரச்சினைக்கு நிரந்தரமாக தீர்வு காணும் பொருட்டு தேவையான நடவடிக்கைகள் விரைந்து எடுக்கப்பட வேண்டும் என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவுறுத்தினார். முதல்கட்டமாக சாயத்தொழில் அதிபர்கள் கூட்டமைப்பின் பிரதிநிதிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என்றும், அதைப்போலவே பாதிக்கப்பட்ட விவசாயிகளையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்திட வேண்டும் என்றும், அதன்மூலம் இந்த பிரச்சினைக்கு விரைவில் சுமுகமான தீர்வு காணப்பட வேண்டும் என்றும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

சிறப்புடன் பணி முடித்த அமுதா * எல்லோராலும் பாராட்டப்பட்ட கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி பி.அமுதா, தேர்தல் பணியில் இருந்து விடுவிக்கப்படுகிறார். மிகவும் கண்டிப்பான அதே நேரத்தில் தனது உறுதியான உத்தரவுகளை அன்போடு பேசி நிறைவேற்றும் ஆற்றல் படைத்தவர். இரும்பு உத்தரவுகளைக்கூட தென்றலாய் பிறப்பிக்கும் அவரது பாங்கினை அனைத்து அரசியல் கட்சியினரும் பாராட்டினார்கள். தனது செல்போன் எண்ணை வெளிப்படையாக எல்லோருக்கும் தெரிவித்த அமுதா, தேர்தல் நேரங்களில் யார் அந்த செல்போனில் பேசினாலும் உடனே பேசி குறைகளை நிவர்த்தி செய்தார். தேர்தல் பணிக்காகவே அவர் இந்த பதவியில் அமர்த்தப்பட்டார்.

இப்போது அவரது பணி முடிந்துவிட்டது. இனிமேல் அவரை விடுவிக்கலாம் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் தேர்தல் கமிஷனுக்கு கடிதம் எழுதியுள்ளார். தேர்தல் கமிஷனும் ஓரிரு நாளில் தேர்தல் பணியில் இருந்து பி.அமுதாவை விடுவித்துவிடும்.

அதன்பிறகு தமிழக அரசில் அவருக்கு உரிய ஒரு பதவி வழங்கப்படும். - முதல்-அமைச்சரின் மக்கள் தொடர்பு அதிகாரிகள் * முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் மக்கள் தொடர்பு அதிகாரிகளாக ந.தங்கையன், த.சரவணன் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர். இதற்கான உத்தரவை தமிழக அரசு நேற்று பிறப்பித்தது. அவர்கள் உடனடியாக பொறுப்பேற்றுக் கொண்டனர்.

கடந்த ஆட்சிக்காலத்தில் அவர்கள் இருவருமே சஸ்பெண்டு செய்யப்பட்டிருந்தனர். இப்போது அந்த சஸ்பெண்டு உத்தரவு ரத்து செய்யப்பட்டு அவர்களுக்கு புதிய பணியிடம் வழங்கப்பட்டு உள்ளது. - எப்படி கொடுப்பது 20 கிலோ அரிசி? * பதவியேற்ற நாளிலே முதல்-அமைச்சர் ஜெயலலிதா, ரேஷனில் 20 கிலோ அரிசி இலவசமாக வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டு அதற்கான கோப்பில் கையெழுத்திட்டார். அதன்படி, ஜுன் 1-ந் தேதியில் இருந்து ரேஷன் கடைகளில் 20 கிலோ இலவச அரிசி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், அரிசி பெற தகுதியுடைய குடும்ப அட்டைதாரர்களுக்கு 20 கிலோ அரிசியையும், அந்தியோதயா அன்னயோஜனா குடும்ப அட்டைதாரர்களுக்கு 35 கிலோ அரிசியையும் எப்படி வழங்குவது என்று உணவுத்துறை தீவிர ஆலோசனையில் இறங்கியுள்ளது. பெண்களால் ஒரே தடவையாக 20 கிலோ அல்லது 35 கிலோ அரிசி எடுத்துச்செல்ல முடியாது. இவ்வளவு எடையுள்ள அரிசியை பாலிதீன் பைகளிலும் போட்டு கொடுக்க இயலாது.

இந்த திட்டத்தை முதல்-அமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைப்பதாக இருந்தால், அதற்கு முன்பே 20 கிலோ அரிசியையும் ஒரே தடவையாக கொடுப்பதா அல்லது பல கட்டங்களாக கொடுப்பதா என்பதும், அரிசியை தனியாக பையில் போட்டுத்தருவதா அல்லது பயனாளிகள் எடுத்து வரும் பைகளில் அளந்து போடுவதா என்பதும் முடிவாகிவிடும். - சிறு வியாபாரிகள் பெரும் மகிழ்ச்சி

*புதிய தலைமை செயலகம் செயல்பட தொடங்கியதால் பழைய தலைமை செயலகத்திற்கு பொதுமக்கள் போக்குவரத்து குறைந்துவிட்டது. இதனால், புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் இருந்த கடைகளில் குறிப்பாக சிறு வியாபாரிகளின் வியாபாரம் பெரிதும் பாதித்தது. வருமானம் குறைந்ததால் வியாபாரிகள் அவதிப்பட்டார்கள். இனி என்ன செய்யப்போகிறோம்? என்ற கவலையில் இருந்தனர்.

இந்த நிலையில், அ.தி.மு.க. மீண்டும் ஆட்சியைப்பிடித்து, ஜெயலலிதா 3-வது முறையாக முதல்-அமைச்சரானார். இதையடுத்து அமைச்சர்கள், அதிகாரிகள், கட்சிக்காரர்கள், பொதுமக்கள் ஆகியோரின் வருகையால் கோட்டை மறுபடியும் களைகட்டிவிட்டது. வியாபாரமும் சூடுபிடித்துள்ளது.

இதனால் வறுகடலை, பழங்கள், காய்கறிகள், கைக்குட்டை போன்றவற்றை விற்பனை செய்யும் சிறு வியாபாரிகள் பெரும் மகிழ்ச்சியடைந்து உள்ளனர்

தேர்தல் பிரசாரத்தில் உறுதி அளித்தபடி சாயப்பட்டறை பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை; பதவியேற்ற 4-வது நாளிலேயே ஜெயலலிதா பேச்சுவார்த்தை

சென்னை: பெண்களுக்கு தாலிக்கு தங்கம் இலவசம், ரேஷன் கார்டுதாரர்களுக்கு இலவச அரிசி, ஓய்வூதியத் தொகை உயர்வு உள்ளிட்ட ஏழு கோப்புகளில், கோட்டையில் பொறுப்பேற்றதும் முதல்வர் ஜெயலலிதா கையெழுத்திட்டார்.

முதல்வராக ஜெயலலிதா நேற்று பகலில், சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் பொறுப்பேற்றார். பின், மாலை 6:40 மணிக்கு கோட்டைக்கு வந்தார். அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். தலைமைச் செயலக ஊழியர் சங்கம் சார்பில், மலர் தூவி வரவேற்பு அளிக்கப்பட்டது. இதன் பின், முதல்வர் அறையில் பணியை துவக்கிய ஜெயலலிதா, ஏழு முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார். நேற்று பவுர்ணமி என்பதால், முக்கிய உத்தரவுகளில் இரவில் அவர் கையெழுத்திட்டுள்ளார். இந்த உத்தரவுகள் குறித்து, நிருபர்களிடம் ஜெயலலிதா கூறியதாவது:

* படித்த ஏழைப் பெண்களுக்கு திருமண நிதியுதவியாக தற்போது வழங்கப்பட்டு வரும் 25 ஆயிரம் ரூபாய் நிதியுதவியோடு, மணப்பெண்ணின் திருமாங்கல்யம் செய்ய, 4 கிராம் (அரை சவரன்) தங்கம் இலவசமாக வழங்கப்படும் என்ற வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், ஆணை பிறப்பித்து, அதற்குரிய கோப்பில் கையெழுத்திட்டேன்.

* இளநிலை பட்டம் அல்லது டிப்ளமோ பட்டயம் பெற்ற பெண்களுக்கு திருமண உதவித் தொகையை 25 ஆயிரத்தில் இருந்து 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்குவதோடு, மணப்பெண் திருமாங்கல்யம் செய்ய 4 கிராம் தங்கம் இலவசமாக வழங்கப்படும்.

* முதியோர், மாற்றுத் திறனாளிகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் கைம்பெண்களுக்கு வழங்கப்படும் மாத உதவித்தொகை ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படுமென, தேர்தல் அறிக்கையில் அறிவித்திருந்தோம். அதன்படி, ஓய்வூதியத் திட்டங்களின் கீழ் பலன் பெறும் பயனாளிகளுக்கு தற்போது வழங்கப்படும் 500 ரூபாய் மாத ஓய்வூதியம், ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.

* பொது வினியோகத் திட்டத்தில் அரிசி பெறத் தகுதியுடைய குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதந்தோறும் 20 கிலோ அரிசி இலவசமாக வழங்கவும், அந்தியோதயா அன்னயோஜனா குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வரும் 35 கிலோ அரிசியை இலவசமாக வழங்கவும் உத்தரவிடப்பட்டது.

* தமிழகத்தின் கடலோர மீன் வளத்தை பாதுகாக்க வேண்டி, ஒவ்வொரு ஆண்டும் 45 நாட்கள் மீன் பிடிக்க தடை விதிக்கப்படும் காலத்தில் பாதிக்கப்படும் மீனவக் குடும்பங்களுக்கு தற்போது வழங்கப்படும் ஆயிரம் ரூபாய் உதவித் தொகையை, 2,000 ரூபாயாக உயர்த்தி வழங்க உத்தரவிடப்பட்டது.

* அரசு பணிபுரியும் தாய்மார்கள் தங்களது பச்சிளம் குழந்தைகளை பேணிப் பாதுகாக்க, மகப்பேறு கால சலுகையாக ஆறு மாத காலம் மகப்பேறு விடுப்பு அளிக்க ஒப்புதல் அளித்து, உத்தரவிடப்பட்டது.

* அத்துடன் தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றவும், அதற்கான திட்டங்களை வகுத்து சிறப்புடன் செயல்படுத்தவும், அரசின் சிறப்புத் திட்டங்களை செம்மையோடு செயல்படுத்தவும், புதிய துறை ஒன்றை துவக்க உத்தரவிடப்பட்டது. இத்துறை, "சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை' என்ற பெயரில் அழைக்கப்படும். இத்துறைக்கென தனி அமைச்சர் நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு ஜெயலலிதா தெரிவித்தார். முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ள சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை, தேர்தல் வாக்குறுதிகள் அமலாக்கத் துறையின் அமைச்சராக தொண்டாமுத்தூர் தொகுதியில் வெற்றி பெற்ற வேலுமணி பொறுப்பேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

முதல்வருக்கு ராசி எண் 7: முதல்வர் ஜெயலலிதாவுக்கு 7ம் எண் ராசியான எண்ணாக கருதப்படுவதால், 7ம் எண்ணுக்கு தற்போது முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. ஆன்மிகம், ஜோதிடம், எண் கணிதம் மீது முதல்வர் ஜெயலலிதா மிகுந்த நம்பிக்கை கொண்டவர். கடந்த 1991-96ம் ஆண்டு வரை முதல்வராக இருந்த போது, 9ம் எண் அவருக்கு ராசியான எண்ணாக இருந்தது. கடந்த 2001-06ம் ஆண்டு வரை முதல்வராக இருந்த போது, 6ம் எண் அவருக்கு ராசியான எண்ணாக இருந்து. தற்போது கேது திசையின் அடிப்படையில், 7ம் எண் அவருக்கு ராசியான எண்ணாகக் கருதப்படுகிறது. தேர்தலில் அ.தி.மு.க., வெளியிட்ட வேட்பாளர்கள் பட்டியலில், 160 பேர் இடம் பெற்றனர். அதன் கூட்டுத்தொகை 7. அதேபோல் முதல்வர் பதவியை ஏற்ற நேற்று 16ம் தேதி. அதன் கூட்டுத்தொகை 7. புதிய அமைச்சரவையில் இடம் பெற்றவர்கள் 34 பேர். அதன் கூட்டுத்தொகையும் 7. முதல்வராக பொறுப்பேற்ற பின் ஜெயலலிதா, நேற்று பழைய தலைமை செயலக அலுவலகத்திற்கு சென்று, 7 கோப்புகளில் கையெழுத்திட்டார். எந்த செயலிலும் தற்போது, 7ம் எண் முக்கியத்துவம் பெறுகிறது. எனவே, 7ம் எண் முதல்வருக்கு ராசியான எண்ணாக அ.தி.மு.க.,வினர் கருதுகின்றனர்.

கோட்டையில் ஜெ.,: முதல்வராக மீண்டும் பொறுப்பேற்பு: முதல் கையெழுத்திலேயே அதிரடி

சென்னை, மே 15: மூன்றாவது முறையாக தமிழகத்தின் முதல்வராக திங்கள்கிழமை பொறுப்பேற்க உள்ளார் ஜெயலலிதா. அவருடன் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 33 பேரும் அமைச்சர்களாக பதவிப் பிரமாணம் ஏற்க உள்ளனர். இவர்களுக்கான துறைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
திங்கள்கிழமை மாலை ஜெயலலிதாவும், அவரது அமைச்சரவை சகாக்களும் புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள தலைமைச் செயலகத்துக்கு வந்து பணிகளைத் தொடங்குவார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்றுள்ளது. இதைத் தொடர்ந்து, ஆட்சி அமைப்பதற்கான பணிகளை அந்தக் கட்சி தலைமை மேற்கொண்டுள்ளது. அதன்படி, அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் சென்னையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது. அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் அதிமுக பேரவைக் குழுத் தலைவராக ஜெயலலிதா தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கான தீர்மானம் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

ஆளுநரைச் சந்தித்தார்: அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், ஜெயலலிதாவிடம் அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, ஆளுநர் மாளிகைக்குச் சென்ற அவர், ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலாவைச் சந்தித்தார். அப்போது, தேர்தல் வெற்றிக்காக பூங்கொத்து கொடுத்து ஜெயலலிதாவுக்கு வாழ்த்துத் தெரிவித்தார் ஆளுநர்.

இதன்பின், ஆட்சி அமைப்பதற்கான உரிமையைக் கோரினார் ஜெயலலிதா. கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துடன் கூடிய கடிதத்தை ஆளுநரிடம் அளித்தார். இதன்பின் புறப்பட்டுச் சென்றார்.
இன்று பதவி ஏற்கிறார்: ஜெயலலிதாவின் கடிதத்தை ஏற்றுக் கொண்ட ஆளுநர் பர்னாலா, ஆட்சி அமைக்குமாறு அழைப்பு விடுத்துள்ளார். இதற்கான கடிதத்தை ஆளுநரின் செயலாளர் அனுப்பியுள்ளார்.

இதையடுத்து, ஜெயலலிதா தலைமையிலான புதிய அமைச்சரவை திங்கள்கிழமை பதவியேற்கிறது. 33 எம்.எல்.ஏ.க்கள் புதிய அமைச்சர்களாக பதவியேற்க உள்ளனர். அமைச்சர்களின் பெயர் பட்டியல் மற்றும் அவர்களுக்கான துறைகளும் ஞாயிற்றுக்கிழமை வெளியானது.
"சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் காலை 12.15 மணிக்கு பதவியேற்பு விழா நிகழ்ச்சி நடைபெறும்' என தலைமைச் செயலாளர் எஸ்.மாலதி தெரிவித்துள்ளார். இதையடுத்து, பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. முதல்வருக்கும், அமைச்சர்களுக்கும் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணத்தையும் ஆளுநர் செய்து வைக்கிறார்.

பதவியேற்பு விழாவில் பங்கேற்க அதிமுக அணியைச் சேர்ந்த கட்சித் தலைவர்கள், வெளி மாநிலங்களைச் சேர்ந்த முதல்வர்கள், முன்னாள் முதல்வர்கள் உள்ளிட்ட பலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி முதல்வர் இன்று சந்திப்பு: பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி திங்கள்கிழமை சென்னை வருகிறார். அப்போது, அந்த மாநிலத்தில் ஆட்சி அமைப்பது குறித்து ஜெயலலிதாவுடன் ஆலோசிக்கிறார்.

அனைவருக்கும் விருந்து: பதவியேற்பு விழா நிகழ்ச்சி முடிந்தவுடன் சென்னையில் உள்ள தாஜ் கோரமண்டல் ஓட்டலில் அனைத்து எம்.எல்.ஏ.க்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், கூட்டணிக் கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட பலருக்கும் சிறப்பு விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மாலையில் பணிகளை கவனிக்கிறார்: பதவியேற்ற பிறகு, திங்கள்கிழமை மாலை புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள தலைமைச் செயலகத்துக்கு ஜெயலலிதா வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாலை 4 மணிக்கு மேல் அவர் வந்து பணிகளைக் கவனிப்பார் என்றும், அவருடன் புதிதாக பொறுப்பேற்கும் அமைச்சர்களும் வருவார்கள் என தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அரசின் பல்வேறு துறைகளுக்கும் புதிய செயலாளர்கள், ஆணையாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என்ற கருத்து எழுந்துள்ளது. இதற்கான அறிவிப்புகள் திங்கள்கிழமை மாலை அல்லது செவ்வாய்க்கிழமை முதல் வெளிவரக் கூடும் எனத் தெரிகிறது.மின்வெட்டில்லா தமிழகம்
"தமிழகத்தில் மின்வெட்டு இல்லாத நிலை உருவாக்கப்படும்' என்று முதல்வராக பொறுப்பேற்க உள்ள ஜெயலலிதா தெரிவித்தார்.
ஆளுநர் மாளிகைக்கு ஞாயிற்றுக்கிழமை சென்ற அவர் ஆட்சி அமைப்பதற்கான உரிமையை ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலாவிடம் கோரினார். பின்னர், செய்தியாளர்கள் கேள்விகளுக்கு ஜெயலலிதா அளித்த பதில்:

முதல்வராக பொறுப்பேற்றதும் எந்த விவகாரங்களில் நீங்கள் அதிக கவனம் செலுத்துவீர்கள்?
தமிழகம் இருண்ட காலத்துக்கு சென்று விட்டது. அதனை மீட்டெடுப்பது எங்களது முக்கிய பொறுப்பு. முதலில் சட்டம்-ஒழுங்கினை சரி செய்வோம். மின்வெட்டு இல்லாத நிலையை உருவாக்குவோம். அதிமுக ஆட்சியை மக்கள் எப்போதுமே மிகவும் பாதுகாப்பாக உணருகிறார்கள். அரசின் நலத் திட்டங்கள் அனைத்தும் மக்களுக்கு முழுமையாக சென்றடையச் செய்வோம்.
தில்லிக்கு வருமாறு உங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதா?
காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி தொலைபேசியில் பேசினார். தேர்தல் வெற்றிக்காக வாழ்த்துத் தெரிவித்தார். நானும் அவருக்கு நன்றி தெரிவித்தேன். அடுத்த மாதம் தில்லி செல்ல வாய்ப்பு உள்ளது.
பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.5 உயர்த்தப்பட்டுள்ளதே?
பெட்ரோல் விலை உயர்வு துரதிருஷ்டவசமானது. இதனால், மக்கள் நிச்சயமாக பாதிக்கப்படுவர்.

தமிழக அமைச்சர்கள் பட்டியல்
  1.  ஜெயலலிதா---முதல்வர்---இந்திய ஆட்சிப் பணி,போலீஸ் பணி, பொது நிர்வாகம், மாவட்ட வருவாய்,அலுவலர்கள், லஞ்சத் தடுப்பு, காவல், உள்துறை.
  2. ஓ.பன்னீர்செல்வம்---நிதித் துறை
  3. கே.ஏ.செங்கோட்டையன்---வேளாண் துறை
  4. நத்தம் ஆர். விஸ்வநாதன்---மின்சாரத் துறை
  5. கே.பி.முனுசாமி---நகராட்சி நிர்வாகம், ஊராட்சித் துறை
  6. சி.சண்முகவேலு---தொழில் துறை
  7. ஆர்.வைத்திலிங்கம்---வீட்டுவசதி மற்றும் நகர்ப்புறத் துறை
  8. அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி---உணவுத் துறை
  9. சி.கருப்பசாமி---கால்நடைத் துறை
  10. பி.பழனியப்பன்---உயர்கல்வித் துறை
  11. சி.வி.சண்முகம்---பள்ளிக் கல்வித் துறை
  12. செல்லூர் கே.ராஜு---கூட்டுறவுத் துறை
  13. கே.டி.பச்சமால்---வனத் துறை
  14. எடப்பாடி கே.பழனிச்சாமி---நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள்.
  15. எஸ்.பி.சண்முகநாதன்---இந்து சமய அறநிலையத் துறை.
  16. கே.வி.ராமலிங்கம்---பொதுப்பணித் துறை.
  17. எஸ்.பி.வேலுமணி---சிறப்புத் திட்டங்கள் அமலாக்கம்.
  18. கே.டி.எம்.சின்னய்யா---பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை.
  19. எம்.சி.சம்பத்---சிறுதொழில்கள் துறை.
  20. பி.தங்கமணி---வருவாய்த் துறை.
  21. ஜி.செந்தமிழன்---செய்தி மற்றும் விளம்பரத் துறை.
  22. எஸ்.கோகுல இந்திரா---வணிகவரித் துறை.
  23. செல்வி ராமஜெயம்--சமூகநலத் துறை.
  24. பி.வி.ரமணா---கைத்தறி மற்றும் துணி நூல் துறை.
  25. ஆர்.பி.உதயகுமார்---தகவல் தொழில்நுட்பத் துறை.
  26. என்.சுப்பிரமணியன்---ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை.
  27. வி.செந்தில் பாலாஜி---போக்குவரத்துத் துறை.
  28. என்.மரியம் பிச்சை---சுற்றுச்சூழல் துறை.
  29. கே.ஏ.ஜெயபால்---மீன்வளத் துறை.
  30. இ.சுப்பையா---நீதித் துறை.
  31. புத்திசந்திரன்---சுற்றுலாத் துறை.
  32. எஸ்.டி.செல்லபாண்டியன்---தொழிலாளர் நலத் துறை
  33. வி.எஸ்.விஜய்---சுகாதாரத் துறை.
  34. என்.ஆர்.சிவபதி---விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை.

அதிமுக அரசில் 34 அமைச்சர்கள்: சென்னை பல்கலை. அரங்கில் இன்று பதவி ஏற்பு

சென்னை, மே 14: தமிழக முதல்வராக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா, திங்கள்கிழமை பதவியேற்கிறார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி 203 தொகுதிகளைக் கைப்பற்றி பெரும் வெற்றி பெற்றுள்ளது.
அ.தி.மு.க. 146 தொகுதிகளில் வெற்றி பெற்று, தனித்து ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை பலத்தைப் பெற்றுள்ளது.

இதைத் தொடர்ந்து ஜெயலலிதா தலைமையில் அ.தி.மு.க. அரசு பொறுப்பேற்பதற்கான பணிகள் தொடங்கியுள்ளன.

அ.தி.மு.க. சார்பில் வெற்றி பெற்ற சட்டப்பேரவை உறுப்பினர்களின் கூட்டம் சென்னை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் அ.தி.மு.க. சட்டப்பேரவை கட்சித் தலைவராக ஜெயலலிதா தேர்வு செய்யப்பட இருக்கிறார். அதற்கான தீர்மானமும் கூட்டத்தில் நிறைவேற்றப்படவுள்ளது.
அதன் பிறகு காலை 10.30 மணியளவில் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்குச் செல்லும் ஜெயலலிதா, ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலாவைச் சந்தித்து, அ.தி.மு.க. சட்டப்பேரவை கட்சித் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டதற்கான தீர்மான நகலை அவரிடம் அளிப்பார். ஆட்சி அமைக்க அழைக்கும்படி ஆளுநரிடம் ஜெயலலிதா உரிமை கோர உள்ளார். அதைத் தொடர்ந்து, ஆட்சி அமைக்கும்படி ஜெயலலிதாவுக்கு ஆளுநர் முறைப்படி அழைப்பு விடுப்பார் எனத் தெரிகிறது. இதையடுத்து அமைச்சரவை பட்டியலை ஆளுநர் மாளிகைக்கு அனுப்பக்கூடும்.

அதன் தொடர்ச்சியாக ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. அமைச்சரவை பதவியேற்கும் நிகழ்ச்சி சேப்பாக்கத்தில் உள்ள சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் திங்கள்கிழமை நண்பகல் நடைபெற உள்ளது. அந்நிகழ்ச்சியில் முதலில் ஜெயலலிதா தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொள்வார். அவருக்கு ஆளுநர் பர்னாலா பதவிப் பிரமாணம் செய்து வைப்பார். தொடர்ந்து அமைச்சர்கள் பதவியேற்றுக் கொள்வார்கள்.

ஏற்பாடுகள் தீவிரம்: அ.தி.மு.க. அமைச்சரவை பதவியேற்கும் விழா சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு மண்டபத்தில் நடைபெறுவது சனிக்கிழமை காலை உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அங்கு பதவியேற்பு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகின்றன. விழா மேடை அலங்கரிப்பு, அதிக வெளிச்சம் தரும் விளக்குகள் பொருத்தும் பணிகள் போன்றவை அரங்கின் உள்ளே நடைபெற்று வருகின்றன. அரங்கின் வெளியே பதவியேற்பு நிகழ்ச்சியை பொதுமக்கள் பார்க்கும் வகையில் பிரமாண்டமான திரைகள் அமைக்கப்படுகின்றன. மாநகராட்சி சார்பில் குடிநீர், கழிவறை வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன.

நாளை பதவியேற்கிறார் ஜெயலலிதா

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

காவிரி ஆற்றின் கிளை நதியான நொய்யல் ஆற்றில் திருப்பூரில் உள்ள சாய, சலவை ஆலைகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர் கலப்பதாக புகார் தெரிவித்து அதை தடுத்து நிறுத்துமாறு நொய்யல் பாசன விவசாயிகள் சங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. இந்த வழக்கினை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அனைத்து சாய, சலவை ஆலைகளும் 31.7.2007-க்குள் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்திடமிருந்து ஜீரோ டிஸ்சார்ஜ் சான்றிதழை பெற வேண்டும் என்றும், இந்தக் காலகட்டத்திற்குள் கழிவு நீரை வெளியேற்றும் ஆலைகள் அதற்கான அபராதத் தொகையை செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்து 22.10.2006 அன்று ஓர் உத்தரவினை பிறப்பித்தது.

இது மட்டுமல்லாமல் சாய மற்றும் சலவை ஆலை களில் கூடுதலாக உள்ள இயந்திரங்களை நீக்குமாறு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு 28.4.2008 அன்று ஓர் இடைக்கால உத்தரவினையும் பிறப்பித்தது. சென்னை உயர்நீதி மன்றத்தின் உத்தரவினை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை செயல்படுத்த மூன்று மாத கால அவகாசத்தை அளித்து 6.10.2009 அன்று தீர்ப்பளித்தது. உச்ச நீதிமன்றம் அளித்த இந்த கால அவகாசம் 2011-ம் ஆண்டு ஜனவரி மாதம் முடிவுக்கு வந்துவிட்டது.

இந்தச் சூழ்நிலையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நொய்யல் பாசன விவசாயிகள் சங்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் “ஜீரோ டிஸ்சார்ஜ்” சான்று பெறாத ஆலைகள், பொது மற்றும் தனியார் சுத்திகரிப்பு நிலையங்கள் உடனடியாக மூடப்பட வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது.

சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவினையடுத்து திருப்பூரில் உள்ள சுமார் 750 ஆலைகளிலும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு விட்டதாகவும், இந்த மின் இணைப்பு துண்டிப்பு காரணமாக தங்களது இயந் திரங்களை சமூக விரோதிகள் எடுத்துச் சென்று விடுவார்களோ என்ற அச்சம் ஆலை உரிமையாளர்களிடையே ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வருகின்றன.

இது மட்டுமல்லாமல், இந்த ஆலைகளில் பணிபுரியும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு 50 லட்சம் ரூபாய் அளவுக்கு தொழி லாளர்களுக்கு வருமான இழப்பு ஏற்பட்டு இருக்கிறது. இது மட்டுமல்லாமல், ஒரு நாளைக்கு 5 கோடி ரூபாய் வரை உற்பத்தி இழப்பு ஏற்பட்டு இருக்கிறது.

இந்த நிலை நீடித்தால் பின்னலாடை தொழில் முடங்கும் அபாயம் ஏற்பட்டுவிடும் என்றும், இதன் விளைவாக 50 கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தக இழப்பு ஏற்படும் என்றும், அந்நியச் செலாவணி இழப்பு ஏற்படும் என்றும் இந்தத் துறையில் உள்ளவர்கள் தெரிவிக்கின்றனர்.சென்னை உயர் நீதி மன்றம் இவ்வாறு உத்தரவு பிறப்பிப்பதற்கு முக்கியக் காரணம் அரசின் அலட்சியப்போக்கு தான். நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த நடவடிக்கை எடுக்காமல் தமிழ்நாடு மாசுக் கட்டுபாட்டு வாரியம் தூங்கிக் கொண்டிருப்பது அவர்கள் சமர்ப்பித்த மனுவிலிருந்து தெரிய வருகிறது என்று சென்னை உயர் நீதிமன்றம் தன்னுடைய உத்தரவில் தெளிவாக குறிப்பிட்டு இருக்கிறது.

2006-ம் ஆண்டைய சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி, சாய, சலவை ஆலைகளைச் சேர்ந்த நிர்வாகத்தினரையும், நொய்யல் பாசன விவசாயிகள் சங்கத் தினரையும் அழைத்துப் பேசி, “ஜீரோ டிஸ்சார்ஜ்” கழிவு நீரை ஆலைகள் வெளியேற்றும் அளவுக்கு தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் மூலம் ஓர் ஒருங்கிணைப்பு நடவடிக்கையை அரசு எடுத்திருக்குமேயானால் இது போன்றதொரு சிக்கல் தற்போது ஏற்பட்டு இருக்காது. சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி, 95 கோடி ரூபாய் அளவுக்கு அபராதத் தொகை செலுத்தியுள்ளதாக சாய, சலவை ஆலைகள் தெரிவிக்கின்றன.

இருப்பினும், ஆலைகளை மூட வேண்டிய அவல நிலைமை அவர்களுக்கு ஏற்பட்டு இருக்கிறது. திருப்பூர், ஈரோடு, கரூர் மாவட்டங்களில் உள்ள சாயத் தொழிற்சாலைகளில் சுத்திகரிக்கப்பட்ட உப்பு நீரைக் கடலுக்குக் கொண்டு செல்லும் திட்டத்திற்கு 200 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு இருப்பதாக 19.3.2010 அன்று தி.மு.க. அரசால் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. ஆனால், இந்தத் திட்டத்தை நிறைவேற்ற எந்த நடவடிக்கையையும் தி.மு.க. அரசு எடுக்கவில்லை. திருப்பூர் சாய ஆலைகள் பிரச்சினையில் கவனம் செலுத்தாமல் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கின்ற அரசிற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சாயப்பட்டறைகளுக்கு மின்இணைப்பு துண்டிப்பு: திருப்பூர் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம்; ஜெயலலிதா அறிக்கை

Jayalalitha and Karthickவிலைவாசி உயர்வை கண்டித்து அதிமுக கூட்டணி கட்சிகள் சார்பில் மாநிலம் முழுவதும், அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் வரும் 8ம் தேதி போராட்டம் நடத்தப்படவுள்ளது.

இது தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன், தமிழ்நாடு தேசியவாத காங்கிரஸ் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி, பார்வர்டு பிளாக் மாநில பொதுச் செயலாளர் கதிரவன், மூவேந்தர் முன்னணி கழகத் தலைவர் டாக்டர் சேதுராமன், புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, மனித நேய கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் ஜவாஹிருல்லா, இந்திய நாடாளும் மக்கள் கட்சி தலைவர் கார்த்திக், குடியரசு கட்சி மாநில தலைவர் செ.கு. தமிழரன், தமிழ் மாநில முஸ்லிம் லீக் தலைவர் ஷேக் தாவூத், இந்திய உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் வேட்டவலம் மணிகண்டன், கிறிஸ்தவ முன்னேற்ற கழக தலைவர் ஜோசப் பெர்னாண்டோ ஆகியோர் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் கூறியிருப்பதாவது:

மத்திய அரசின் தாராளமய பொருளாதாரக் கொள்கை, சர்வதேச சந்தை விலைக்கு ஏற்ப பெட்ரோல் விலை எண்ணெய் நிறுவனங்களே உயர்த்திக் கொள்ள அனுமதி, ஆன்லைன் வர்த்தகம் ஆகியவற்றின் காரணமாக அனைத்துப் பொருட்களின் விலைகளும் விஷம் போல் உயர்ந்து கொண்டே வருகின்றன. பெட்ரோலின் விலை கடந்த ஆறு மாதத்தில் ஏழு முறை உயர்த்தப்பட்டு இருக்கிறது.

இதன் காரணமாக அனைத்துத் தரப்பு மக்களும் செய்வதறியாது திகைக்கின்றனர். ஒரு கிலோ, அரை கிலோ என்ற அளவில் காய்கறிகளை வாங்கிக் கொண்டிருந்த மக்கள் இப்போது எண்ணி, எண்ணி வாங்கும் அளவுக்கு காய்கறிகளின் விலை உயர்ந்துவிட்டது. விலைவாசி உயர்வு காரணமாக, மக்கள் பெருத்த இன்னலுக்கு ஆளாகியுள்ள இந்தச் சூழ்நிலையில், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் உள்பட பல்வேறு ஊழல்களில் மத்திய அரசும், தி.மு.க. அரசும் ஈடுபட்டு இருப்பது இந்தியாவிற்கு, குறிப்பாக தமிழகத்திற்கு தலைக்குனிவை ஏற்படுத்தியுள்ளது.

இதன் காரணமாக, இந்தியாவின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதோடு மட்டுமல்லாமல், இந்தியாவின் பாதுகாப்பும் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது. இந்த ஊழல்கள் நடைபெறாமல் இருந்திருந்தால் அரசுக்கு பெரிய அளவில் வருமானம் கிடைத்திருக்கும் என்பதும், அதன் மூலம் விலைவாசி கட்டுப்படுத்தப்பட்டு இருக்கும் என்பதும் மக்கள் மத்தியில் தற்போது பரவலாக உள்ள ஒரு கருத்தாகும்.

இந்தச் சூழ்நிலையில், விலை உயர்விற்கும், ஊழல்களுக்கும் காரணமான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசையும், தி.மு.க. அரசையும் எதிர்த்து நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்துவது குறித்து அ.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், அகில இந்திய பார்வர்டு பிளாக் உள்ளிட்ட ஒன்பது கட்சிகள் 20.1.2011 அன்று டெல்லியில் கூடி விவாதித்தன.

இதையடுத்து, தி.மு.க. அங்கம் வகிக்கும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசை எதிர்த்து 3.2.2011 முதல் 9.2.2011 வரை நாடு தழுவிய இயக்கத்திற்கு அறைகூவல் விடுக்கப்பட்டது.

இந்த முடிவிற்கேற்ப, அ.தி.மு.க, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, ம.தி.மு.க., அகில இந்திய பார்வர்டு பிளாக் ஆகிய கட்சிகள் 8-2-2011 அன்று தமிழகத்தில் விலைவாசி உயர்வு எதிர்ப்பு இயக்கம் நடத்திட திட்டமிட்டுள்ளன.

இதன்படி, உணவுப் பொருட்கள் மற்றும் அத்தியா வசியப் பொருட்களை முன்பேர வர்த்தகத்தில் ஈடுபடுத்துவதற்கு தடை விதித்தல், பொது விநியோக முறையை அனைவருக்கும் பயனளிக்கும் வகையில் மாற்றுதல், இருப்பில் உள்ள கூடுதல் உணவு தானியங்களை மானிய விலையில் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள மக்களுக்கு விநியோகித்தல், பதுக்கல், கடத்தல் ஆகிய வற்றில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுத்தல், விவசாயிகளின் விளை பொருட்களுக்கு உரிய ஆதார விலையை வழங்குதல்,

மானிய விலையில் உரம் மற்றும் இடுபொருட்கள் அளித்தல், பெட்ரோலின் விலையை எண்ணெய் நிறுவனங்களே உயர்த்திக் கொள்ள அனுமதித்ததை ரத்து செய்தல், உயர்த்தப்பட்ட பெட்ரோல் விலையை ரத்து செய்தல், சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு அனுமதிக்கப்படுவதை தடுத்தல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு அளித்தல் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 8-2-2011 அன்று தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மற்றும் முக்கிய நகரங்களிலும் மாலை 5 மணி முதல் 7 மணி வரை தொடர் முழக்கம் எழுப்பும் போராட்டம் நடத்திட முடிவெடுக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் நலன்களை வலியுறுத்தி நடைபெறும் இந்தத் தொடர் முழக்கப் போராட்டத்திற்கு ஆதரவு தருமாறு அனைத்துத் தரப்பு மக்களையும் கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

விலைவாசி உயர்வை கண்டித்து 8ம் தேதி அதிமுக கூட்டணி போராட்டம்: ஜெயலலிதா-கார்த்திக் அறிவிப்பு

முக நூல்

Popular Posts