background img

புதிய வரவு

Showing posts with label thangabalu. Show all posts

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியில் இருந்து தங்கபாலு ராஜினாமா செய்துள்ளார். தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்ததற்கு பொறுப்பேற்று விலகுவதாகவும், ராஜினாமா கடிதத்தை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு அனுப்ப உள்ளதாகவும் தங்கபாலு கூறியுள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த காங்கிரஸ் கட்சி 63 தொகுதிகளை பெற்றது. ஆனால் 5 தொகுதிகளை மட்டுமே காங்கிரஸ் கட்சி கைப்பற்றியது.

காங். தலைவர் பதவி: தங்கபாலு ராஜினாமா

நடைமுறைகள் எதையும் பின்பற்றாமல் எம்.எல்.ஏ., வாக இருப்பவரையும், இன்ன பிற முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்களையும் தன்னிச்சையாக தங்கபாலு நீக்கியுள்ளார். இவரை, தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து நீக்க வேண்டுமென்று சோனியாவிடம் உள்துறை அமைச்சர் சிதம்பரம் கோரிக்கை வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறி கராத்தே தியாகராஜன், மங்கள்ராஜ், செங்கை செல்லப்பா என 19 பேரை தமிழக காங்கிரசில் இருந்து தங்கபாலு அதிரடியாக நீக்கம் செய்தார். சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவு முடிந்த மறுநாளே எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கை, தமிழக காங்கிரசில் பெரும் புயலை ஏற்படுத்தியுள்ளது.
நீக்கப்பட்டவர்கள் பலரும் தங்கபாலுவுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி வரும் நிலையில், சோனியாவை உடனடியாக சிதம்பரம் சந்தித்தார். டில்லியில் சோனியாவை சந்தித்த உள்துறை அமைச்சர் சிதம்பரம், தங்கபாலுவின் தன்னிச்சையான நடவடிக்கைகள் குறித்து புகார் எழுப்பியதாக கூறப்படுகிறது.

சோனியாவுடனான சிதம்பரத்தின் சந்திப்பு குறித்து தகவலறிந்த வட்டாரங்கள் நேற்று கூறியதாவது: சென்னையில் தங்கபாலு நீக்கம் செய்து அறிவிப்பு வெளியிட்டதை அடுத்து, காலதாமதம் ஏதுமின்றி உடனடியாக சிதம்பரம் களத்தில் இறங்கி சோனியாவை சந்தித்தார். அப்போது எம்.எல்.ஏ., மாவட்ட தலைவர் மற்றும் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் என 19 பேர், தமிழக காங்கிரசில் இருந்து திடீரென நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களது நீக்கம் குறித்து தமிழக காங்கிரஸ் கமிட்டியின் விதிமுறைகள் எவையும் பின்பற்றப்படவில்லை. முழுக்க முழுக்க தன்னிச்சையாக தங்கபாலு செயல்பட்டுள்ளார்.

தற்போது நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் காங்கிரசின் வெற்றிவாய்ப்பு என்பது கூட தங்கபாலுவின் தவறான நடவடிக்கைகள் காரணமாகவே பெரிதும் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது என்றும் சுட்டிக்காட்டினார். மேலும், அவர் போட்டியிடும் மயிலாப்பூர் தொகுதியிலேயேகூட தங்கபாலு பெரும் தோல்வியை சந்திப்பார் என்றே தகவல்கள் வருவதாகவும் சிதம்பரம் தெரிவித்தார்.
தங்கபாலு, தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை தன் இஷ்டத்திற்கு நடத்துவது ஏற்கத்தக்கது அல்ல என்றும், அவரது இந்த எதேச்சதிகார நடவடிக்கை முற்றிலும் சட்டவிரோதமானது. இவரது தலைமை தமிழகத்தில் தொடர்ந்தால், கட்சியின் எதிர்காலம் நிச்சயம் பாழாகிவிடும். அந்த அபாயத்திலிருந்து கட்சியை மீட்டெடுக்க வேண்டுமெனில் உடனடியாக தங்கபாலுவை, தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து நீக்க வேண்டும். சிதம்பரத்தின் புகாரை கேட்டுக் கொண்ட சோனியா, இதுகுறித்து உரிய முறையில் பரிசீலனை செய்வதாகவும் உறுதியளித்துள்ளார். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

தாமதமின்றி தங்கபாலுவை நீக்குங்கள் : சோனியாவிடம் சிதம்பரம் கோரிக்கை

சென்னை: சென்னை மயிலாப்பூர் தொகுதியில் முதலில் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர் ஜெயந்தி. ஆனால் பெரும் குழப்பம் ஏற்பட்டு கடைசியில் ஜெயந்தியின் கணவரான தங்கபாலுவே அங்கு வேட்பாளராகி விட்டார். இந்த நிலையில், இன்று காலை வாக்களிப்பதற்காக வேளச்சேரி கஸ்தூரிபாய் நகரில் உள்ள வாக்குச் சாவடிக்கு வந்தார் ஜெயந்தி. ஆனால் அவரது பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை. இதனால் புகைப்பட அடையாள அட்டை வைத்திருந்தும் கூட ஜெயந்தியால் வாக்களிக்க முடியவில்லை. இதனால் அவர் பெரும் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினார்.

ஜெயந்தி தங்கபாலுவுக்கு ஓட்டு இல்லை

காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக தங்கபாலுவுக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. மயிலாப்பூர் தொகுதியில் ஜெயந்தியின் மனு தள்ளுபடி செய்யப்பட்டு தங்கபாலு வேட்பாளரானது காங்கிரசாரிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

இன்று காலை 11 மணி அளவில் மத்திய சென்னை மாவட்ட இளைஞர் காங்கிரசார் மாவட்ட பொதுச் செயலாளர் ரஞ்சன்குமார் தலைமையில் சத்தியமூர்த்தி பவனுக்கு திரண்டு வந்தனர். அலுவலக வாசலில் முற்றுகையிட்டு அமர்ந்தனர்.

அனைவரும் தங்கபாலுவுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினார்கள். மயிலாப்பூர் தொகுதி மகளிர் காங்கிரஸ் நிர்வாகி சுசீலா என்பவர் உடலில் மண்எண்ணை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அவரை போலீசார் தடுத்தனர்.

இளைஞர் காங்கிரசார் தயாராக வைத்திருந்த தங்கபாலு உருவ பொம்மைகளை தீ வைத்து எரித்தனர்.

சத்தியமூர்த்தி பவனில் இன்று நடந்த சம்பவத்தை தொடர்ந்து மீண்டும் அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்.சி. பிரிவு மாநில தலைவர் செங்கை செல்லப்பன் தலைமையில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மகா கவிபாரதி நகரில் நடந்தது.

இதன் பின்னர், காங்கிரஸ் எஸ்.சி. பிரிவு மாநில பொதுச் செயலாளர் உலகநம்பி கூறும்போது, சோனியாகாந்தியை ஏமாற்றி மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிடும் தங்கபாலுவை தோற்கடிக்க வேண்டும். அவருக்கு எதிராக காங்கிரசார் பிரசாரம் செய்ய வேண்டும் என்றார்.

சோனியாவை ஏமாற்றிய தங்கபாலு : காங்கிரசார் ஆவேசம்

காஞ்சிபுரம் : காங்கிரஸ் கட்சி யாருக்கும் தலை வணங்காது. வரும் காலம் காங்கிரஸ் கட்சிக்கு வசந்த காலமாக இருக்கும் என, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலு தெரிவித்தார். காஞ்சிபுரத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில், நடந்த ஓ.வி. அளகேசன் நூற்றாண்டு விழாவில் அவர் பேசியதாவது:
காங்கிரஸ் கட்சியின் 125வது ஆண்டு விழாவையொட்டி மறைந்த தலைவர்களுக்கு விழா எடுக்கப்படுகிறது. காமராஜர், கக்கன், சி. சுப்பிரமணியம், சட்ட நாதன் கரையாலர் ஆகியோருக்கு விழா எடுத்தோம். தற்போது ஓ.வி. அளகேசன் நூற்றாண்டு விழா காஞ்சிபுரத்தில் கொண்டாடப்படுகிறது. அவர் கண்டிப்பானவர். நேர்மையானவர். தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருந்து, காங்கிரஸ் கட்சியை தமிழகத்தில் பலப்படுத்தியவர். மத்தியில் காங்கிரஸ் அரசு சோனியா, பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில், பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. 71 ஆயிரம் கோடி ரூபாய் விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. இதற்கு காரணகர்த்தாவாக இருந்தவர் மத்திய அமைச்சர் சிதம்பரம். காமராஜர் கொண்டு வந்த சத்துணவு திட்டம் இன்று நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ளது. காங்கிரஸ் ஆட்சியிலிருக்கும் போது நாடு வளர்கிறது. காங்கிரஸ் வீழ்ந்தால் நாடு வீழ்கிறது.
ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் அரசாகவும், காங்கிரஸ் அரசு திகழ்கிறது. காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய சக்தியாக வளர்ந்துள்ளது. யாருக்கும் தலை வணங்காது. அன்புக்கு அடி பணிவோம். ஆதிக்கத்திற்கு தலை வணங்க மாட்டோம். சோனியாவையும் , ராகுலையும் மதிப்பவர்களை மதிப்போம். எதிர்ப்பவர்களை எதிர்ப்போம். தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி முதன்மை கட்சியாக வர வேண்டும் என விரும்புகிறோம். வரும் காலம் காங்கிரஸ் கட்சிக்கு வசந்த காலமாக இருக்கும். இவ்வாறு தங்கபாலு தெரிவித்தார்.

காங்கிரசுக்கு இனி வசந்த காலம் : தங்கபாலு பேச்சு

சென்னை, ஜன.7: முதல்வர் கருணாநிதியை தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.வி.தங்கபாலு ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள முதல்வர் அறையில் இன்று சந்தித்துப் பேசினார்.

மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நடந்ததாக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருணாநிதியுடன் தங்கபாலு சந்திப்பு

சென்னை, ஜன.7: முதல்வர் கருணாநிதியை தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.வி.தங்கபாலு ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள முதல்வர் அறையில் இன்று சந்தித்துப் பேசினார்.

மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நடந்ததாக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக நூல்

Popular Posts