background img

புதிய வரவு

Showing posts with label victary. Show all posts

ஆக்லாந்தில் சற்று முன் முடிந்த பாகிஸ்தான், நியூஸீலாந்து அணிகளுக்கு இடையிலான 6-வதும் இறுதியுமான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானை 57 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது நியூஸீலாந்து.

இதன் மூலாம் பாகிஸ்தான் தொடரை 3- 2 என்ற கணக்கில் கைப்பற்றியது. ஒரு போட்டி மழையால் கைவிடப்பட்டது.

முதலில் பேட் செய்த நியூஸீலாந்து 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 311 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து அடிய பாகிஸ்தான் 44.1 ஓவரில் 254 ரன்களில் சுருண்டது.

டாஸ் வென்ற அஃப்ரீடி முதலில் ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தார். பிரெண்டன் மெக்கல்லம் தன்வீர் பந்தில் 12 ரன்களுக்கு ஆட்டமிழக்க, கப்தில் 44 ரன்கள் எடுத்தார். இவரும் ஜெஸ்ஸி ரைடரும் இணைந்து 21 ஓவர்களில் 123 ரன்களை 2-வது விக்கெட்டுக்காகச் ஸேர்த்தனர்.

பிறகு ரைடர் 82 பந்துகளில் சதம் அடித்தார். அவர் மொத்தம் 93 பந்துகளைச் சந்தித்து 7 பவுண்டரிகள் 6 சிக்சர்கள் சகிதம் 107 ரன்கள் விளாசி ஆட்ட நாயகன் விருதைத் தட்டிச் சென்றார்.

டெய்லர் 5 ரன்களுக்கும் பிராங்கிளின் 8 ரன்களுக்கு ம் ஆட்ட்மிழக்க நியூசீலாந்து 32 ஓவர்களில் 174/4 என்று இருந்தது.

கடைசி 14 ஓவர்களில் 120 ரன்களை நேதன் மெக்கல்லமும் ஸ்காட் ஸ்டைரிஸும் அடித்து நொறுக்கினர். ஸ்டைரிஸ் 44 பந்துகளில் 6 பவுண்டரிகள் ஒரு சிக்சருடன் 58 ரன்களையும், நேதன் மெக்கல்லம் 50 பந்துகளில் 7 பவுண்டரிகள் 3 சிக்சர்கள் சகிதம் 65 ரன்கள் எடுத்தார்.

நியூஸீலாந்து 311 ரன்கள் குவித்தது. சொகைல் தன்வீர் அதிகபட்சமாக 8 ஓவர்களில் 78 ரன்களை விட்டுக் கொடுத்தார். ஹஃபீஸ் 2 விக்கெட்டுகளையும் ரசாக் 7 ஓவர்களில் 23 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

தொடர்ந்து விளையாடிய பாகிஸ்தான் அணியில் துவக்க வீரர்கள், யூனிஸ் கான் சொற்ப ரன்களில் வெளியேற 12 ஓவர்களில் 58/3 என்று ஆனது.

அதன் பிறகு கம்ரன் அக்மல் அதிரடி ஆட்டம் ஆடி 84 பந்துகளில் 5 பவுண்டரிகள் 3 சிக்சர்கள் சகிதம் 89 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

கடைசியில் அஃப்ரீடியும், தன்வீரும் இணைந்து 9 ஓவர்களில் 58 ரன்களை 8-வது விக்கெட்டுக்காகச் சேர்த்தனர். தன்வீர் 5 பவுண்டரிகளுடன் 30 ரன்கள் எடுத்திருந்தபோது சவுத்தீயின் புத்தி சாதுரியத்தினால் ரன் அவுட் ஆனார்.

அஃப்ரீடி 35 பந்துகளில் 4 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க பாகிஸ்தான் வெற்றி வாய்ப்பு இழக்கப்பட்டது.

44.1 ஓவரில் 254 ரன்களுக்கு பாகிஸ்தான் சுருண்டது. ஹாமிஸ்க் பென்னெட் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். பிராங்கிளின் 3 விக்கெட்டுகளையும் மில்ஸ் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

கடைசி ஒரு நாள் போட்டி: நியூஸீலாந்து வெற்றி

கொழும்புவில் இலங்கை மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்திய தீவுகளை இலங்கை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

இதன் மூலம் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் இலங்கை 1-0 என்று முன்னிலை வகிக்கிறது. முதல் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது.

வெற்றி பெற 204 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி தில்ஷான் விக்கெட்டை அவரது சொந்த எண்ணிக்கையான 11 ரன்களில் ராம்பாலிடம் இழந்தது.

அதன் பிறகு ரோச், ராம்பால், சம்மி, கெய்ல் ஆகியோர் நெருக்க ரன் விகிதம் மெதுவாகவே ஏறியது. தரங்காவும் ஜெயவர்தனேயும் 14.3 ஓவர்களில் ஸ்கோரை 46 ரன்களுக்குக் கொண்டு சென்றபோது மழை வரத்தொடங்கியது. பிறகு ஆட்டம் 3.15 மணிக்குத் துவங்கியபோது இலக்கு 47 ஓவர்களில் 197 ரன்களாகக் குறக்கப்பட்டது.

இதில் உபுல் தரங்கா அபாரமாக விளையாடி 101 ரன்களையும், ஜெயவர்தனே 46 பந்துகளில் 48 ரன்களையும் எடுத்து இன்னும் 27 பந்துகள் மீதமிருக்க 199/2 என்று வெற்றி பெறச் செய்தனர்.

இடையில் சங்கக்கார 20 ரன்களில் பிராவோவிடம் ஆட்டமிழந்தார். ஜெயவர்தனேயும், தரங்காவும் 97 ரன்களை ஆட்டமிழக்காமல் சேர்த்தனர்.

ஆட்டநாயகனாக உப்புத் தரங்கா தேர்வு செய்யப்பட்டார்.

இரண்டாவது ஒருநாள்: இலங்கை வெற்றி

முக நூல்

Popular Posts