background img

புதிய வரவு

Showing posts with label Egypt. Show all posts

கெய்ரோ:எகிப்து பிரதமர் அகமது ஷபீக், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக, அந்நாட்டின் ராணுவ உயர்மட்ட கவுன்சில் தெரிவித்துள்ளது.எகிப்தில் ஏற்பட்ட அரசியல் புரட்சியை அடுத்து, நீண்ட காலமாக அந்த நாட்டின் அதிபராக இருந்த முபாரக், கடந்த மாதம் பதவி விலகினார். பதவி விலகுவதற்கு சில நாட்களுக்கு முன், அகமது ஷபீக் என்பவரை பிரதமராக நியமித்தார். தற்போது ராணுவ உயர்மட்டக் கவுன்சிலின் கட்டுப்பாட்டில் எகிப்து அரசாங்கம் நிர்வகிக்கப்படுகிறது.
இந்நிலையில், பிரதமர் ஷபீக்கிற்கு எதிராகவும் போராட்டம் வெடித்தது. ஷபீக், முன்னாள் அதிபர் முபாரக்கின் ஆதரவாளர் என்றும், உடனடியாக அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் குரல் எழுப்பினர்.இதைத் தொடர்ந்து ராணுவ உயர்மட்ட கவுன்சில் நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில்,"பிரதமர் பதவியில் இருந்து ஷபீக் ராஜினாமா செய்துள்ளார். அவரது ராஜினாமா ஏற்கப்பட்டு விட்டது. முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எசாம் ஷராப்புக்கு, புதிய அரசு அமைக்கும்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது'என, தெரிவிக்கப்பட்டுள்ளது.எசாம் ஷராப், கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன், அமைச்சர் பதவியில் இருந்து விலகினார். அன்று முதல், அதிபர் முபாரக்கிற்கு எதிரான கருத்துக்களை தெரிவித்து வந்தார். கடந்த மாதம் நடந்த போராட்டத்திலும், அவர் கலந்து கொண்டார்.

எகிப்து பிரதமர் ராஜினாமா

எ‌கி‌ப்து துணை அ‌திப‌ர் உம‌‌ர் சுலைமானை கொ‌ல்ல முய‌ற்‌சி நட‌ந்து‌ள்ளதாக அ‌‌ந்நா‌ட்டு ஊடக‌ங்க‌ளி‌ல் ச‌ெ‌ய்‌திக‌ள் வெ‌ளி‌யிட‌ப்ப‌ட்டு‌ள்ளது.

எ‌‌‌கி‌ப்து அ‌திப‌ர் முபார‌க்கு‌க்கு எ‌‌திராக நட‌ந்து வரு‌ம் போரா‌ட்ட‌ம் 12 வது நாளை எ‌ட்டியு‌ள்ளது. அ‌திப‌ர் ப‌த‌வி‌யி‌ல் இரு‌ந்து ‌வில‌க‌க் கோ‌ரி போர‌ா‌ட்ட‌க்கார‌ர்க‌ள் ‌விடு‌த்த கெடு நே‌ற்றுட‌ன் முடிவடை‌ந்தது.

இ‌ந்த ‌நிலை‌யி‌ல் போரா‌ட்ட‌‌க்கார‌ர்க‌ளி‌ன் வ‌ன்முறை அ‌திக‌ரி‌த்து‌ள்ளது. துணை அ‌திப‌ர் உம‌‌ர் சுலைமானை கொ‌ல்ல முய‌ற்‌சி நட‌ந்து‌ள்ளதாக அ‌ந்நா‌ட்டு ஊடக‌ங்‌க‌ளி‌ல் செ‌ய்‌திக‌ள் வெ‌ளியா‌கியு‌ள்ளது.

துணை அ‌திப‌ரி‌ன் 2 மெ‌ய் காவல‌‌ர்க‌ள் போரா‌ட்ட‌க்கார‌ர்களா‌ல் கொ‌ல்ல‌ப்ப‌ட்டதாகவு‌ம் செ‌ய்‌திக‌ள் வெ‌ளி‌யிட‌ப்ப‌ட்டு‌ள்ளது.

ஆனா‌ல் துணை அ‌திப‌ர் ‌மீதான தா‌க்குத‌ல் கு‌றி‌த்து செ‌ய்‌தி வெ‌ளி‌யிட எ‌‌கி‌ப்து அரசு மறு‌த்து‌வி‌ட்டது.

எ‌கி‌ப்து துணை அ‌திப‌ரை கொ‌ல்ல முய‌ற்‌சி

எகிப்து அதிபர் ஹோஸ்னி முபாரக் உடனடியாக பதவி விலகுவார் என்றும், தற்போது துணை அதிபராக இருக்கும் உமர் சுலைமான் தலைமையில், இராணுவத்தின் உதவியுடன் தற்காலிக அமைச்சரவை பதவியேற்கும் என்றும் வாஷிங்டன் செய்திகள் கூறுகின்றன.

முபாரக் பதவி விலகுவதற்கான இத்திட்டத்தை அமெரிக்கா தீட்டியுள்ளதாகவும், அதன் படி துணை அதிபர் உமர் சுலைமான் தலைமையில் பொறுப்பேற்கும் அமைச்சரவை, அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்து, வரும் செப்டம்பரில் நேர்மையாக தேர்தலை நடத்தி முடிக்கும் என்று நியூ யார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

தற்போது எகிப்தில் ஏற்பட்டிருக்கும் இந்த கிளர்ச்சி, மேலும் வலுவடைந்து இதர அரேபிய நாடுகளுக்கும் பரவும் அபாயம் உள்ளதால் அமெரிக்கா தலையிட்டு இந்த ‘ஏற்பாட்ட’ செய்துள்ளது என்று அச்செய்தி கூறுகிறது.

எகிப்து அதிபர் ஹோஸ்னி முபாரக் விலகுகிறார்?

அதிபர் பதவியில் இருந்து விலகத் தான் விரும்புவதாகவும், ஆனால் அப்படி விலகினால் அது நாட்டை குழப்பத்தில் தள்ளிவிடும் என்பதற்காகவே விலகாதிருப்பதாகவும் எகிப்து அதிபர் ஹோஸ்னி முபாரக் கூறியுள்ளார்.

அமெரிக்காவின் ஏபிசி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறியுள்ள முபாரக், “நேற்று நடந்த வன்முறை எனக்கு வருத்தத்தைத் தருகிறது, எகிப்தியர்கள் ஒருவரோடு ஒருவர் மோதிக்கொண்டு சாவதை நான் விரும்பவில்லை” என்று கூறியுள்ளார்.

முபாரக் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கூறியிருப்பது குறித்து கருத்து கேட்டதற்கு, “எகிப்து பண்பாடு பற்றி உங்களுக்கு (ஒபாமா) ஒன்றும் புரியாது. நான் பதவியில் இருந்து இறங்கினால் என்ன நடக்கம் தெரியுமா?என்று கேட்டுள்ளார்.

எகிப்து தலைநகர் கெய்ரோவில் தொடர்ந்து வன்முறைச் சூழலே நிலவி வருகிறது.

பதவி விலகினால் குழப்பமே ஏற்படும்: ஹோஸ்னி முபாரக்

எகிப்தின் அதிபராக 30 ஆண்டுக்காலமாக இருந்துவரும் ஹோஸ்னி முபாரக் பதவி விலக வேண்டும் என்று கோரி, அந்நாட்டுத் தலைநகர் கெய்ரோவில் உள்ள தாஹிர் சதுக்கத்தில் திரண்டுள்ள போராட்டக்காரர்களுக்கும் முபாரக் ஆதரவாளர்களுக்கும் ஏற்பட்ட மோதலில் 3 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

தாஹிர் சதுக்கத்தில் திரண்டுள்ள பல ஆயிரக்கணக்கான முபாரக் எதிர்ப்பாளர்களை அங்கிருந்து விரட்ட குதிரைகளிலும், ஒட்டகங்களிலும் வந்த முபாரக் ஆதரவாளர்கள் தாக்குதலில் இறங்கியதில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இந்த 3 பேர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

தலைநகர் கெய்ரோவில் நாளுக்கு நாள் நிலைமை மோசமாகி வரும் நிலையில், அங்குள்ள அமெரிக்கர்கள் அனைவரையும் வெளியேறுமாறு அமெரிக்க அரசு கூறியுள்ளது.

30 ஆண்டுகளாக தொடர்ந்து அதிபராக இருந்து வரும் ஹோஸ்னி முபாரக், தனது பதவிக்காலம் முடியும் வரை - வரும் செப்படம்பர் மாதம் வரை பதவியில் இருந்துவிட்டு வெளியேறுவதாக கூறினார். அதன் பிறகு தான் மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிட மாட்டியிடுவதில்லை என்றும் உறுதியளித்தார். ஆனால் முபாரக் உடனடியாக பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை தளர்த்தப்போவதில்லை என்று போராட்டக்காரர்கள் கூறிவிட்டனர்.

தாஹிர் சதுக்கத்தில் கலவரம்: 3 பேர் பலி

இப்போதைக்கு தாம் விலகப்போவதில்லை என்று எகிப்து அதிபர் ஹோஸ்னி முபாரக் திட்டவட்டமாக அறிவித்துவிட்டதால், வீதிகளில் திரண்டு போராட்டம் நடத்தி வரும் ஆர்ப்பாட்டக்காரர்களை கலைந்து செல்லுமாறு இராணுவம் உத்தரவிட்டுள்ளது.

அதிபர் பதவியிலிருந்து முபாரக் விலக கோரி பல்லாயிரக் கணக்கான மக்கள் தாஹ்ரி சதுக்கத்தில் குவிந்து,ஆர்ப்பாட்டம் நடத்தி வரும் நிலையில், இராணுவம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

"உங்களது செய்தி தெரிவிக்கப்பட்டுவிட்டது. உங்களது கோரிக்கைகள் தெரிந்துவிட்டன. எனவே உங்களது போராட்டத்தை முடித்துக்கொண்டு கலைந்து செல்லுங்கள்" என்று ஆர்ப்பாட்டம் நடத்தி வருபவர்களுக்கு இராணுவம் உத்தரவிட்டுள்ளது.

எகிப்து: ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு இராணுவம் உத்தரவு

கெய்ரோ,பிப்.2: ""எகிப்து நாட்டு அதிபர் பதவியிலிருந்து உடனே விலக மாட்டேன், செப்டம்பர் மாதம் இப்போதைய பதவிக்காலம் முடிந்ததும் ஓய்வு பெறுகிறேன், மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிட மாட்டேன்'' என்று ஹோஸ்னி முபாரக் (82) நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி மூலம் வாக்குறுதி அளித்தார்.
மக்கள் நிராகரிப்பு: ஆனால் அதை மக்கள் ஏற்கவில்லை. ""அதெல்லாம் வேண்டாம், 30 ஆண்டுகள் ஆண்டு நாட்டைக் குட்டிச்சுவராக்கியது போதும், வரும் வெள்ளிக்கிழமைதான் உங்களுக்கு கடைசி நாள், அன்றோடு பதவியிலிருந்து ஓய்வு பெறுங்கள், பதவி விலகாவிட்டால் எங்கள் வீடுகளுக்குத் திரும்பமாட்டோம், வீதிகளில் இருந்துகொண்டே கிளர்ச்சி செய்வோம்'' என்று நாட்டு மக்கள் ஒட்டுமொத்தமாக அவருக்குப் பதில் அளித்துவிட்டார்கள்.
ஒபாமா கண்டிப்பு: நாட்டு மக்களுக்கு உரையாற்றுவதற்கு முன்னால், அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுடன் 30 நிமிஷங்கள் தொலைபேசி மூலம் உரையாடினார் முபாரக். ""முபாரக் நீங்கள் ஆண்டது போதும், மக்கள் எழுச்சி கட்டுக்கடங்காமல் போவதற்கு முன்னால் விலகிவிடுங்கள், அது உங்களுக்கும் எகிப்துக்கும் நல்லது, வீணாக ரத்தக்களரியை ஏற்படுத்தாதீர்கள்'' என்று கண்டிப்புடன் கூறிவிட்டார் ஒபாமா.
பதவி விலகல் பற்றி முதல்முறையாக: ஒபாமா போன்ற உலகத் தலைவர்கள் தனக்கு தார்மிக ஆதரவு தந்தால் கிளர்ச்சிக்காரர்களை ஒரு கை பார்த்துவிடலாம் என்ற ரகசிய திட்டம் முபாரக்கின் நெஞ்சில் இருந்ததோ என்னவோ தெரியவில்லை, இந்த உரையாடலுக்குப் பிறகு நாட்டு மக்களிடம் பேசுகையில் பதவி விலகலைப் பற்றி முதல் முறையாகப் பேசினார்.
செப்டம்பர் வரை ஏன்? அதிபர் பதவிக்கான சட்டத்தைத் திருத்த வேண்டியிருப்பதாலும் அடுத்தவரிடம் பதவியை சுமுகமாக ஒப்படைக்க நிர்வாக ரீதியாகச் சில ஏற்பாடுகளைச் செய்ய வேண்டியிருப்பதாலும் செப்டம்பர் வரை பதவியில் நீடிக்க விரும்புவதாக முபாரக் தெரிவித்திருக்கிறார்.
முபாரக் பேசியது என்ன? ""நாட்டின் இப்போதைய நிலைமை எப்படி இருந்தாலும், அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட்டு மேலும் ஒரு முறை பதவி வகிக்க நான் விரும்பவில்லை என்பதை மிகுந்த நேர்மையோடு சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.
எந்தக் காரணத்தைக் கொண்டும் எகிப்தை விட்டு ஓடமாட்டேன்; எகிப்து மண்ணிலேயேதான் உயிரை விடுவேன். ஆட்சி அதிகாரத்தைச் சுமுகமாக அடுத்த தலைவரிடம் ஒப்படைப்பதற்காகவும், அதிபர் பதவிக்கான சட்டத்தில் சில திருத்தங்களைச் செய்வதற்காகவும் செப்டம்பர் வரையில் பதவியில் நீடிக்க விரும்புகிறேன்'' என்று முபாரக் பேசினார்.
அவருடைய பேச்சு தொலைக்காட்சியில் 8 நிமிஷங்களுக்கு ஒளிபரப்பானது. அரசை எதிர்க்கும் கிளர்ச்சிக்காரர்கள் எல்லா ஊர்களிலும் பெரிய பெரிய சதுக்கங்களில் அமைக்கப்பட்ட மிகப்பெரிய திரையில் அவருடைய தொலைக்காட்சி உரையைக் கேட்டனர்.
உடனே வெளியேற கோஷம், ஏளனக்குரல்: செப்டம்பர் வரை பதவியில் இருப்பேன் என்று முபாரக் கூறியதும் ஓ... என்று கத்தியும் ஊளையிட்டும் மக்கள் தங்களுடைய எதிர்ப்பைத் தெரிவித்தனர். ""பதவியில் இருந்தது போதும் உடனே வெளியேறு'' என்று ஆவேசமாகக் குரல் எழுப்பினர். ""வெள்ளிக்கிழமைதான் உங்களுக்குக் கடைசி நாள்'' என்றும் கோஷமிட்டனர். கிளர்ச்சிக்காரர்களில் பெரும்பாலானவர்கள் இளைஞர்கள் என்பதால் அவர்களுடைய எதிர்ப்புக்குரல் நகர சதுக்கங்களில் எதிரொலித்தது.
கெய்ரோவில் 10 லட்சம் பேர்: தலைநகர் கெய்ரோவில் தாரிர் சதுக்கத்தில் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கூடி, ""முபாரக்கே, போ போ போ'' என்று கோஷம் எழுப்பினர்.
இந்த இடத்துக்கு வருவதற்காக பெரும்பாலானவர்கள் கார், பஸ், ஸ்கூட்டர், சைக்கிள் போன்ற வாகனங்கள் எதிலும் வராமல் நடந்தே வந்தனர். கொடுங்கோலரின் ஆட்சியை நீக்குவதை ஒரு தவமாகக் கருதி தங்களுடைய உடல் சிரமத்தையும் பாராமல் பொது நன்மைக்காக அவர்கள் கூடியது பார்ப்பவர்களையும் பரவசப்படுத்தியது.
கைகலப்பு: ""அமைதியாக ஆர்ப்பாட்டம் செய்ய எல்லா உரிமைகளையும் படைத்தவர்கள் இளைஞர்கள்'' என்று சாதாரணமாக பேச்சைத் தொடங்கிய முபாரக், திடீரென குரலை கடுமையாக்கிக் கொண்டு, ""இந்த இளைஞர்களைப் பயன்படுத்திக்கொண்டு என்னுடைய ஆட்சியை சீர்குலைக்க அரசியல் எதிரிகள் முயற்சிகளைச் செய்து வருகிறார்கள்'' என்று குற்றஞ்சாட்டினார்.
அதிலிருந்தே அவர் பதவியை விட்டு விலகத் தயாராக இல்லை என்பது புரிந்துவிட்டது. அவர் பேசி முடித்ததும் இளைஞர்கள் எதிர்ப்பு கோஷம் எழுப்பியபோது திடீரென சிலர் அவர்கள் மீது பாய்ந்து தாக்கத் தொடங்கினர். பதிலுக்கு இளைஞர்கள் தாக்கத் தொடங்கிய பிறகே அவர்கள் ஓய்ந்தனர்.
நாட்டின் தலைநகரம் கெய்ரோ, சூயஸ், அலெக்சாண்டிரியா போன்ற நகரங்களில் மோதல்கள் ஆங்காங்கே மூண்டன. அலெக்சாண்டிரியாவில் திடீரென துப்பாக்கியால் சுடும் ஓசை தொடர்ந்து கேட்டது. அப்போது ராணுவ டேங்க் ஒன்று இளைஞர்களை நோக்கி வேகமாக முன்னேறி அவர்கள் அருகில் சென்றவுடன் நின்று பிறகு தான் ஆரம்பத்தில் இருந்த இடத்துக்கே வந்துவிட்டது.
இரண்டாவது முறையாக டி.வி.யில் பேச்சு: கடந்த 9 நாள்களில் இரண்டாவது முறையாக முபாரக் நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி மூலம் உரையாற்றியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மக்களைத் திருப்திப்படுத்த தன்னுடைய அமைச்சரவையிலிருந்த எல்லோரையும் ராஜிநாமா செய்யச் சொன்னார். துணை அதிபர் என்ற பதவியைக்கூட ஏற்படுத்தி அதில் ஒருவரை நியமித்தார். ஆனால் எதுவும் மக்களைத் திருப்திப்படுத்தவில்லை.
எல்பராடி கண்டனம்: முபாரக் எதிர்ப்பு கிளர்ச்சிக்கு ஆதரவு தந்துவரும் முகம்மது எல் பராடி, இந்தப் பேச்சே ஏமாற்று வேலை என்று சாடினார். இதற்குப் பிறகும் அவர் பதவி விலகாமல் இருந்தால் நடைப்பிணமாகத்தான் இருக்க வேண்டியிருக்கும் என்று எச்சரித்தார்.
முபாரக் பேசியதை ஏற்க முடியாது என்று மக்கள் தெரிவித்துவிட்டார்கள், அவர் உடனே பதவி விலக வேண்டும் என்றார் இஸ்லாமிய சகோதரத்துவம் என்ற அமைப்பின் முன்னணித் தலைவரான சாத் அல் கடாத்னி.
டுனீசியா தந்த ஊக்கம்: எகிப்து அதிபர் பதவியில் முபாரக் கடந்த 30 ஆண்டுகளாக இடைவெளியில்லாமல் ஆட்சி செய்கிறார். அவருடைய ஆட்சியில் திருப்தி இல்லாவிட்டாலும் ஏதோ சகித்துக்கொண்டே வாழ்ந்தனர்.
ஆனால் டுனீசியா நாட்டில் 23 ஆண்டுகள் தொடர்ந்து பதவியில் இருந்த ஜைனுல் ஆபுதீன் பெனானியின் ஆட்சியை அந்த நாட்டு மக்கள் திரண்டெழுந்து அகற்றிவிட்டனர் என்ற செய்தி எகிப்திய மக்களையும் விழித்தெழ வைத்தது.
எனவே கடந்த 9 நாள்களாக எகிப்து முழுக்க மக்கள் வேறு வேலை எதையும் பார்க்காமல் அதிபரைப் பதவியிலிருந்து அகற்றுவதற்கான கிளர்ச்சியிலேயே தங்களை முழுமையாக ஈடுபடுத்தி வருகின்றனர்.

எகிப்தில் மக்கள் கிளர்ச்சி உச்ச கட்டம்: "செப்டம்பரில்தான் விலகுவேன் - முபாரக்; வெள்ளிக்கிழமைதான் கடைசி - மக்கள்'

மீண்டும் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று எகிப்து அதிபர் ஹோஸ்னி முபாரக் அறிவித்துள்ளார்.

எகிப்தில் கடந்த 30 ஆண்டு காலமாக சர்வாதிகார ஆட்சி நடத்தி வரும் ஹோஸ்னி முபாரக்கை பதவி விலகக்கோரி, கடந்த ஒரு வாரமாக கிளர்ச்சியாளர்கள் போராட்டம் ந்டத்தி வருகிறார்கள்.

போராட்டத்தின்போது வெடித்த பயங்கர கலவரம் மற்றும் துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 300 ஐ தாண்டியுள்ளது.

அதிபருக்கு எதிராக நேற்று தலைநகர் கெய்ரோவின் மையப்பகுதியில் உள்ள தரிர் சதுக்கத்தில் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் திரண்டு நின்று போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில் இராணுவமும் போராட்டக்காரர்களுக்கு ஆதரவான நிலையை மேற்கொண்டு, அவர்கள் மீது தாக்குதல் நடத்தமாட்டோம் என்று அறிவித்துவிட்டது.

நிலைமை இந்த அளவிற்கு தீவிரமடைந்துள்ள போதிலும்,முபாரக் இன்னமும் பதவி விலக மறுத்துவருகிறார்.

தமது பதவிக்காலம் முடிவடையும் இந்த ஆண்டு செப்டம்பர் வரை பதவியில் தொடர்ந்து நீடிக்கபோவதாக அறிவித்துள்ளார்.அதே சமயம் போராட்டக்காரர்களை சமாதானப்படுத்தும் வகையில் தாம் மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று அறிவித்துள்ளார்.

ஆனால் முபாரக்கின் இந்த அறிவிப்பு ஏமாற்று வேலை என்று தெரிவித்துள்ள போராட்டக்காரர்கள், அவர் உடனே பதவி விலக வேண்டும் என்பதில் தாங்கள் உறுதியாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

மீண்டும் தேர்தலில் போட்டியிட மாட்டேன்: எகிப்து அதிபர் முபாரக் அறிவிப்பு

எகிப்தில் உடனடி ஆட்சி மாற்றம் வேண்டும் என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா வலியுறுத்தியுள்ளார்.

முபாரக்கிற்கு எதிரான போராட்டம் தீவிரம் அடைந்து வரும் நிலையில் இப்பிரச்சனைக்கு தீர்வு காண அமெரிக்கா முயன்று வருகிறது.

அதன் காரணமாக அதிபர் ஒபாமாவின் தூதுவர் ஒருவர் எகிப்து அனுப்பப்பட்டுள்ளார்.

எகிப்து அமெரிக்காவின் நட்பு நாடாக இருந்த போதிலும்,முபாரக் பதவில் நீடிப்பதை அந்நாட்டு மக்கள் விரும்பாத நிலையில் அவர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்றும்,எகிப்தில் அமைதி திரும்பவும், ஜனநாயக அரசு அமையவும் உடனடியாக ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என்றும் ஒபாமா விரும்புவதாக அத்தூதர் மூலம் எகிப்து அதிபர் முபாராக்கிடம் வலியுறுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

எகிப்தில் உடனடி ஆட்சி மாற்றம் வேண்டும்: ஒபாமா வலியுறுத்தல்

எகிப்து அதிபர் ஹோஸ்னி முபாரக்கை பதவி விலக கோரி போராட்டம் நடத்தி வரும் கிளர்ச்சியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

எகிப்தில் சுமார் 30 ஆண்டுகளாக அதிபராக உள்ள ஹோஸ்னி முபாரக் பதவி விலக வலியுறுத்தி தலைநகர் கெய்ரோவில் ஏறக்குறைய ஒரு வாரமாக பல இடங்களில் ஆர்ப்பாட்டக்காரர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில்,கிளர்ச்சியாளர்களை இராணுவப் படையினர் மூலம் அடக்கிவிடலாம் என்ற முடிவுக்கு வந்த அதிபர் ஹோஸ்னி முபாரக்,நேற்று இராணுவ தலைமையகத்திற்கு சென்றார்.

அங்கு இராணுவ உயரதிகாரிகள் மற்றும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள துணை அதிபர் ஒமர் சுலைமான் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினர்.

இதனைத் தொடர்ந்து வீதிகளில் கூடுதல் இராணுவப் படையினர் குவிக்கப்பட்டனர்.

இருப்பினும் கிளர்ச்சியாளர்கள் மீது இனி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட மாட்டாது என்று இராணுவம் அறிவித்ததைத் தொடர்ந்து, அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக முபாரக் அரசு தெரிவித்துள்ளது.

கிளர்ச்சியாளர்களுடன் பேச்சுவார்த்தை: எகிப்து அரசு அறிவிப்பு

கெய்ரோ: எகிப்தில் மக்களின் போராட்டத்தால் திணறி வரும் அதிபர் ஹோஸ்னி முபாரக் பதவி விலகக் கோரி ‘10 லட்சம் பேர் பேரணி’ என்ற பெயரில் எதிர்க்கட்சிகள் இன்று பிரமாண்ட பேரணி நடத்துகின்றன. இதனால், தலைநகர் கெய்ரோவில் பதற்றம் அதிகரித்துள்ளது.
எகிப்தில் நீண்ட காலமாக ஆட்சியில் இருக்கும் அதிபர் ஹோஸ்னி முபாரக், ஏழ்மை, வேலையில்லா திண்டாட்டத்தை ஒழிக்க முன்வரவில்லை என்று குற்றம்சாட்டி லட்சக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தலைநகர் கெய்ரோவின் பிரமாண்ட சதுக்கத்தில் லட்சக்கணக்கானோர் குவிந்துள்ளனர். அதிபர் உடனடியாக பதவி விலகக் கோரி கலவரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பதவி விலக மறுத்து வரும் முபாரக், தனது அமைச்சரவையை 2 நாட்கள் முன் டிஸ்மிஸ் செய்தார். புதிய பிரதமராக அகமது ஷபீக்கை நேற்று நியமித்த அவர், புதிய அமைச்சரவையையும் அறிவித்துள்ளார். வேலையில்லா திண்டாட்டத்தை ஒழிக்கவும், அரசியல் சீர்திருத்தங்களை தொடங்கவும் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு புதிய பிரதமரை கேட்டுக் கொண்டுள்ளதாக ஹோஸ்னி முபாரக் தெரிவித்தார். அவரது அறிவிப்பை அரசு தொலைக்காட்சி தொடர்ந்து ஒளிபரப்பி வருகிறது.

ஆனால், முபாரக்கின் இந்நடவடிக்கையை நிராகரித்த ஆர்ப்பாட்டக்காரர்கள், கெய்ரோவில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தலைநகர் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு ராணுவம் சுற்றி வளைத்துள்ளது. எனினும், கெய்ரோ சதுக்கத்தில் இருந்து வெளியேற போராட்டக்காரர்கள் மறுத்து விட்டனர். இரவிலும் கடுங்குளிரில் அவர்கள் அங்கேயே தங்கியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

அதிபருக்கு எதிரான மக்களின் கிளர்ச்சியில் எதிர்க் கட்சிகளும் முழுவீச்சில் குதித்துள்ளன. ‘மார்ச் ஆப் மில்லியன்ஸ்’ என்ற பெயரில் 10 லட்சத்துக்கு மேற்பட்டோர் பங்கேற்கும் பிரம்மாண்ட பேரணியை இன்று நடத்துகின்றன. இதனால், எகிப்தில் நிச்சயமற்ற நிலை நீடிக்கிறது. ராணுவத்தைக் கொண்டு கலவரம் ஒடுக்கப்படுமா அல்லது மக்கள் எதிர்ப்புக்கு பணிந்து அதிபர் ஹோஸ்னி முபாரக் பதவி விலகுவாரா என்பது மர்மமாக உள்ளது.

இதற்கிடையே, அதிபருக்கு எதிரான போராட்டத்தில் ராணுவத்தின் ஒரு பகுதியினரும் மக்களுக்கு ஆதரவாக செயல்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், எகிப்தில் ராணுவப் புரட்சி ஏற்படவும் வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. முபாரக்குக்கு எதிராக போராட்டத்தை ஆதரித்து வெளிநாடு வாழ் எகிப்து மக்களும் குரல் கொடுத்து வருகின்றனர். இதனால், எகிப்தில் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இதற்கிடையில், எகிப்தில் இருந்து நேற்று மேலும் 380 இந்தியர்கள் நாடு திரும்பினர். எகிப்தில் வசிக்கும் இந்தியர்களின் பாதுகாப்பை இந்திய தூதரகம் கண்காணித்து வருகிறது. தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்துள்ளது.

எகிப்து அதிபர் பதவி விலக கோரி 10 லட்சம் பேர் இன்று பேரணி

எகிப்தில் அதிபர் முபாரக்குக்கு எதிராக பயங்கர கலவரம் வெடித்துள்ளதா‌ல் அங்கு தவித்து கொண்டிருக்கும் இந்தியர்களை அழைத்து வர தனி விமானம் அனுப்பப்பட்டது.

முதல் கட்டமாக நேற்று 320 பேர் மும்பை வந்து சேர்ந்தனர். மேலும் ஒரு தனி விமானம் மூலம் 280 பேர் இன்று அதிகாலை மும்பை வந்து சேர்ந்தனர்.

இதற்கிடையே, எகிப்து தலைநகர் கெய்ரோவில் இன்று லட்சக்கணக்கானோர் பங்கேற்கும் மாபெரும் முற்றுகை போராட்டம் நடைபெறுகிறது.

எகிப்தில் ௦இருந்து 280 பேர் இ‌ந்‌தியா வ‌ந்தன‌ர்

எகிப்தில் அதிபர் முபாரக்குக்கு எதிராக பயங்கர கலவரம் வெடித்துள்ளதா‌ல் அங்கு தவித்து கொண்டிருக்கும் இந்தியர்களை அழைத்து வர தனி விமானம் அனுப்பப்பட்டது.

முதல் கட்டமாக நேற்று 320 பேர் மும்பை வந்து சேர்ந்தனர். மேலும் ஒரு தனி விமானம் மூலம் 280 பேர் இன்று அதிகாலை மும்பை வந்து சேர்ந்தனர்.

இதற்கிடையே, எகிப்து தலைநகர் கெய்ரோவில் இன்று லட்சக்கணக்கானோர் பங்கேற்கும் மாபெரும் முற்றுகை போராட்டம் நடைபெறுகிறது.

எகிப்து அதிபர் முபாரக்கை பதவி விலகக் கோரி தலைநகர் கெய்ரோ உள்ளிட்ட இடங்களில் தொடர்ந்து ஆர்ப்பாட்டமும், கலவரமும் நடந்து வருவதால் அங்கு அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

எகிப்து அதிபர் ஹோஸ்னி முபாரக் பதவி விலகக் கோரி மக்கள் லட்சக்கணக்கில் 5வது நாளாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும், காவல் துறைக்கும் இடையே மோதலும் வலுத்து வருகிறது. இதுவரை 50க்கும் மேற்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பல்வேறு இடங்களில் அரசு அலுவலகங்களும் தீ வைத்துக் கொளுத்தப்பட்டுள்ளன.

இதனையடுத்து, பிரச்சனையை சமாளிக்க தலைநகர் கெய்ரோ உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

கெய்ரோவில் அவரச நிலை பிரகடனம்

 கெய்ரோ: கடந்த 30 ஆண்டுகளாக எகிப்தில் ஆட்சி நடத்தி வரும் அதிபர் முபாரக் நேற்று தனது அமைச்சரவையை நீக்கினார். மேலும், இதுவரை இல்லாத துணை அதிபர் பதவியை உருவாக்கி புதிய துணை அதிபரை நியமித்துள்ளார். இருப்பினும், முபாரக் பதவி விலக வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையுடன் ஊரடங்கு உத்தரவையும் பொருட்படுத்தாமல் மக்கள் தொடர்ந்து போராட்டங்களை தீவிரப்படுத்தி வருகின்றனர்.

உளவுத்துறை தலைவர் உமர் சுலைமான் துணை அதிபராகவும், ராணுவ அதிகாரியான அஹமது ஷபீக் பிரதமராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த அறிவிப்பால் மக்கள் ஓரளவு திருப்தி அடைந்துள்ளனர். முபாரக் (82) இந்நாள் வரை தனது மகனை தனக்கு பின் ஆட்சியில் அமர வைக்கத் திட்டமிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேசமயம், முபாரக் விலக வேண்டும் என்ற கோரிக்கையிலிருந்து மக்கள் இன்னும் விலகவில்லை. கலவரத்தை அடக்க முயலும் ராணுவத்தையும் தங்களுடன் சேருமாறு அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். நேற்று கெய்ரோவில் உள்ள வரி ஆணைய கட்டிடத்திற்கு தீ வைக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் துப்பாக்கியால் சுட ஆரம்பித்தனர்.

இதற்கிடையே ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து தலைவர்கள் மக்களுக்கு எதிராக நடத்தப்படும் வன்முறையை நிறுத்திவிட்டு, தேர்தல் நடத்துமாறு கூட்டாக முபாரக்கை வலியுறுத்தியுள்ளனர்.

கடந்த வாரம் துவங்கிய முபாரக்கிற்கு எதிரான போராட்டங்களில் குறைந்தது 74 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். மேலும், தலைநகர் கெய்ரோவில் மட்டும் சுமார் 1, 030 பேர் காயம் அடைந்துள்ளனர்.

இந்நிலையில் அமெரிக்க அதிபர் ஒபாமா எகிப்து விவகாரம் குறித்து துணை அதிபர் ஜோ பிடன் மற்றும் தலைமை பாதுகாப்பு ஆலோசகர் டாம் டோனிலனுடன் கலந்தாலோசனை நடத்தியுள்ளார்.

மக்கள் தனக்கு எதிராக போராட்டங்கள் நடத்தத் துவங்கியவுடன் முபாரக் அவர்களை இரும்புக் கரம் கொண்டு அடக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொண்டுள்ளார். ஆனால் அவை பலனில்லாம்ல போனது. போராட்டக்காரர்கள் ஊரடங்கு உத்தரவையும் மதிக்காது தெருக்களில் போராட்டம் நடத்தினர். அங்கு குவிக்கப்பட்டிருந்த ராணுவ அதிகாரிகள் மக்களை தடுத்து நிறுத்தவில்லை.

இது குறித்து ஒரு போராட்டக்காரர் கூறுகையில், உமர் சுலைமான் இன்னொரு முபாரக். அவரால் எந்த மாற்றமும் ஏற்படாது. முபாரக் தான் கடைசியாக துணை அதிபராக இருந்தார். அவர் கடந்த 1981-ம் ஆண்டு அன்வர் சதாத் கொல்லப்பட்டதை அடுத்து அதிபர் ஆனார் என்றார்.

உள்துறை அமைச்சகத்திற்கு வெளியே ஆயிரக்கணக்கானோர் கூடி கோஷங்கள் எழுப்பினர். பின்னர் போலீசார் அவர்களை நோக்கி சுடத் தொடங்கினர். இதில் ஒருவர் காயம் அடைந்து அங்கேயே விழுந்தார்.

வன்முறை தொடர்ந்தால் அமெரிக்கா உதவிக்கு வரும் என்று ஹில்லாரி கிளின்டன் தெரிவித்துள்ளார்.

நேற்று அலெக்ஸான்ட்ரியாவில் நடந்த போராட்டத்தில் போலீசார் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி போராட்டக்காரர்களை கலைத்தனர்.

இது வரை இந்த போராட்டங்களுக்கு ஒரு தலைவர் இல்லை. நோபல் பரிசு பெற்ற முஹமது எல்பராதே நாட்டிற்கு திரும்பினாலும், அவர் தனது வாழ்நாளில் பெரும்பாகம் வெளிநாட்டில் தான் கழி்த்தார் என்று எகிப்தியர்கள் நினைக்கின்றனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று அனைத்து வங்கிகளும் மூடப்படுகின்றன என்று மத்திய வங்கியின் கவர்னர் ஹஷாம் ரமீஸ் தெரிவித்தார். இது தவிர இன்றைய பங்குச் சந்தையும் மூடப்படுகிறது.

அமைச்சரவையை நீக்கி துணை அதிபரை நியமித்த முபாரக்: மக்கள் போராட்டம் தொடர்கிற

முக நூல்

Popular Posts