background img

புதிய வரவு

Showing posts with label Roja. Show all posts

ஆந்திர மாநிலம் கடப்பா எம்.பி. தொகுதி இடைத்தேர்தலில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன்ரெட்டி போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக நடிகை ரோஜா பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

நடிகர் சிரஞ்சீவி கட்சி தொடங்கியபோது காங்கிரஸ் தலைவர் சோனியாவை கடுமையாக விமர்சித்தார். அவரை பேய் என்று கூட சொல்லி இருக்கிறார். ஆனால் தற்போது தனது கட்சியையே காங்கிரசுக்கு விற்று விட்டார்.

இதற்காக அவர் ரூ. 500 கோடி வரை வாங்கி உள்ளார். பணத்திற்காக தனது கொள்கைகளையும், மானத்தையும் அடகு வைத்து விட்டார். இதை அவரது கட்சி தொண்டர்கள் யாரும் ஏற்கமாட்டார்கள். இப்படிப்பட்டவர் ஜெகன் மோகன் ரெட்டியை விமர்சிப்பது வேடிக்கையாக உள்ளது.

பிரசாரத்தின் போது சினிமா ஸ்டைலில் தொடையை தட்டியும், மீசையை முறுக்கியும் சவால் விடுகிறார். இந்த சவால் எல்லாம் கடப்பா மக்களிடம் எடுபடாது. அவர்கள் காங்கிரசுக்கு நல்ல பாடம் புகட்டுவார்கள்.

அவரது கட்சியில் தற்போது 18 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். அவர் தனது கட்சியை காங்கிரசுடன் இணைக்கும்போது பாதி பேர் வேறு கட்சிகளுக்கு தாவி விடுவார்கள். ஆந்திர மக்கள் தொடக்கத்தில் இருந்தே சிரஞ்சீவியை நம்பவில்லை. இனியும் நம்ப மாட்டார்கள்.

இவ்வாறு ரோஜா பேசினார்.

கட்சியை இணைப்பதற்காக சிரஞ்சீவி காங்கிரசிடம் ரூ. 500 கோடி வாங்கினார்; நடிகை ரோஜா குற்றச்சாட்டு

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகியும், நடிகையுமான ரோஜா ஐதராபாத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர், ‘’கடப்பா எம்.பி. தொகுதியில் போட்டியிடும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டியின் வெற்றி உறுதியாகி விட்டது. அவர் அதிக அளவு ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என்பது தான் எங்கள் குறிக்கோள். அவரை எதிர்த்து யாரை நிறுத்தலாம் என்று காங்கிரஸ் மேலிடம் தீவிரமாக பரிசீலித்து வருகிறது.

ஜெகன்மோகனை யார் எதிர்த்து நின்றாலும் எங்களுக்கு கவலை இல்லை. அவரது வெற்றியை யாரும் தடுக்க முடியாது. இந்த இடைத் தேர்தல் மூலம் காங்கிரஸ் மேலிடத்திற்கு ஆந்திர மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்’’ என்று கூறினார்.

ஜெகன்மோகன் வெற்றி உறுதி: நடிகை ரோஜா

ஜெகன்மோகன்ரெட்டி தொடங்கியுள்ள “ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ்” கட்சிக்கு ஆந்திர மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. அனைத்து ஊர்களிலும் பொதுமக்கள பட்டாசு வெடித்து ஒருவருக்கொருவர் இனிப்பு கொடுத்து கொண்டாடி வருகிறார்கள்.

இந்நிலையில் ஜெகன் மோகன் ரெட்டி கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான நடிகை ரோஜா நிருபர்களிடம் கூறியதாவது:- ஜெகன்மோகன்ரெட்டி தொடங்கியுள்ள ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

ஆந்திர மக்கள் காங்கிரஸ் கட்சி மீது நம்பிக்கை இழந்து விட்டனர். மாநிலம் முழுவதும் சட்டம்- ஒழுங்கு சீர்குலைந்து விட்டது. எந்தவித வளர்ச்சி திட்டங்களும் செயல்படுத்தப்படவில்லை. ஏழை மருத்துவ- என்ஜினீயரிங் மாணவர்களுக்கு அரசு கட்டணம் செலுத்த தயக்கம் காட்டுகிறது.

இதனால் பொதுமக்கள் ஆந்திர அரசு மீது கடும் அதிருப்தியில் உள்ளனர். எனவே ஆந்திராவில் தேர்தல் எப்போது வந்தாலும் ஜெகன்மோகன்ரெட்டி ஆட்சியை பிடிப்பார். ஆந்திராவில் ராஜசேகர ரெட்டிக்கு பிறகு மக்கள் செல்வாக்கு மிகுந்த ஒரே தலைவர் ஜெகன் மோகன் ரெட்டிதான்.

அவரை யாராலும் வீழ்த்த முடியாது. சந்திரபாபுநாயுடு தற்போது காங்கிரஸ் ஆட்சி மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தால் அரசு கவிழ்ந்து விடும். ஆனால் அவர் காங்கிரசை மறைமுகமாக ஆதரித்து வருகிறார். அவர் காங்கிரசுடன் கூட்டணி சேர முயன்று வருகிறார். இவ்வாறு அவர் கூறினார்.

ஆந்திரா தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியை பிடிப்பார் நடிகை ரோஜா சொல்கிறார்

நடிகர் சிரஞ்சீவி 2 ஆண்டுகளுக்கு முன்பு பிரஜா ராஜ்ஜியம் என்ற கட்சியை தொடங்கினார். இக்கட்சிக்கு கடந்த சட்டசபை தேர்தலில் 18 இடங்களில் வெற்றி பெற்றன. இந்நிலையில் சிரஞ்சீவி சமீபத்தில் டெல்லியில் சோனியாகாந்தியை சந்தித்து காங்கிரசில் சேர்ந்தார்.

இதனால் அவரது கட்சி எம்.எல். ஏ.க்கள் 2 பேர் ஜெகன்மோகன் ரெட்டி அணிக்கு தாவி விட்டனர். இந்நிலையில் ஐதராபாத்தில் நடிகை ரோஜா நிருபர்களிடம் கூறியதாவது:-

நடிகர் சிரஞ்சீவி சினிமாவில் வாய்ப்பு குறைந்ததால்தான் தனிக்கட்சி தொடங்கினார். இவர் ஆந்திர மக்களுக்கு நல்லது செய்வார் என்று வேறு கட்சிகளில் இருந்து ஏராளமான தொண்டர்கள் அவரது கட்சியில் சேர்ந்தனர்.
ஆனால் அவர் திடீரென தனது கட்சியை காங்கிரசிடம் விற்று விட்டு அதில் போய் சேர்ந்து விட்டார்.

இனி சிரஞ்சீவியால் தனித்து செயல்பட முடியாது. சோனியா காந்தி- ராகுல்காந்தி ஆகியோரின் புகழ்பாட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். இதனால் அவரது கட்சியில் இருந்த ஏராளமான தொண்டர்கள் ஜெகன் மோகன் ரெட்டி அணிக்கு வந்து விட்டனர்.

தற்போது அவரது கட்சியைச் சேர்ந்த 16 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே அவருக்கு ஆதரவாக உள்ளனர். இனி சிரஞ்சீவிக்கு அரசியலில் நல்ல எதிர்காலம் இல்லை. அவரை காங்கிரசில் உள்ள மற்ற கோஷ்டி தலைவர்கள் வளர விட மாட்டார்கள். ஜெகன் மோகன் ரெட்டி அணி தற்போது பலமான அணியாக உள்ளது.

இவ்வாறு ரோஜா கூறினார்.

சிரஞ்சீவிக்கு தொண்டர்கள் ஆதரவு இல்லை; நடிகை ரோஜா சொல்கிறார்

முக நூல்

Popular Posts