background img

புதிய வரவு

Showing posts with label Speak. Show all posts

வேலூர் : ""எங்களை தோற்கடியுங்கள்; நாங்கள் தோற்றாலும் உங்களை மறக்க மாட்டோம்,'' என, வேலூர் பிரசார கூட்டத்தில் முதல்வர் கருணாநிதி உருக்கமாக பேசினார்.

வேலூர் மாவட்டத்தில் 13 தொகுதிகளில் போட்டியிடும் தி.மு.க., கூட்டணி வேட்பாளர்கள் அறிமுக கூட்டம், வேலூர் கோட்டை வெளி மைதானத்தில் நேற்றுமுன்தினம் இரவு நடந்தது. அமைச்சர் துரைமுருகன் வரவேற்றார்.

வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி தமிழக முதல்வர் கருணாநிதி பேசியதாவது: முந்தா நாள் அரசியலுக்கு வந்தவர்கள் எங்களை விமர்சனம் செய்கின்றனர். 75 ஆண்டு காலம் அரசியலில் இருந்து வந்தவன். பல்வேறு சிறைகளில் தண்டனை அனுபவித்தவன். இந்த சமுதாயத்துக்கு இன்னமும் உழைத்துக் கொண்டுள்ளேன். ஆனால், இவர்கள் இப்படி பேசலாமா?
நான் தமிழக முதல்வராக இருக்கின்றேனா, இல்லையா என்ற சந்தேகம் வந்துள்ளது. தமிழக முதல்வர் கருணாநிதி அரசு ஆள்கிறதா, தேர்தல் கமிஷன் ஆள்கிறதா? தேர்தல் கமிஷனுடன் மோத விருப்பமில்லை.அவர்கள் நடுநிலையாக செயல்பட்டால் குறை சொல்ல மாட்டேன். சட்டப்படி, நியாயப்படி நடக்க வேண்டும் என்பதில் எனக்கு மாறுபட்ட கருத்தில்லை.

கருணாநிதி தமிழகத்தை ஆளக்கூடாது என்கின்றனர். அண்ணாதுரை சொன்னபடி, படி அரிசி போடவில்லை. கருணாநிதி ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி போட்டான். சொன்ன வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றி விட்டான்.இவன் தொடர்ந்து ஆட்சிக்கு வந்தால், நம்மால் எப்போதும் ஆட்சிக்கு வர முடியாது என்று சிலர் நினைக்கின்றனர். தமிழகத்தில் இலவச "டிவி', காஸ் அடுப்பு, "108' ஆம்புலன்ஸ் என, பல திட்டங்களை நிறைவேற்றியுள்ளேன். இவனை விட்டு வைத்தால் இன்னும் ஆயிரம் ஆண்டுகள் ஆட்சிக்கு வர முடியாது என்பதால் இவனை அழிக்க நினைக்கின்றனர்.நான், இந்த ஐந்தாண்டுகள் நல்லாட்சி தரவில்லையா? ஆறாவது முறையும் நல்லாட்சி தருவோம்.ஜெயலலிதா ஆட்சியில் அரசு ஊழியர்களை கைது செய்து சிறையில் அடைத்தார். என்னை, நள்ளிரவு 12 மணிக்கு கைது செய்தார். 12 ஆயிரம் சாலைப் பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பினார்.

நான் கொண்டு வந்த பல்வேறு திட்டங்களை சிதைத்து விட்டார்.இத்தகைய ஆட்சியை தொடர ஓட்டளிக்கும்படி ஜெயலலிதா கேட்கின்றார். இந்த ஆட்சி தொடர வேண்டுமா? இந்த ஆட்சி மீண்டும் வந்தால் நான் கொண்டு வந்த திட்டங்கள் அனைத்தும் செய்ய முடியாமல் போகும். ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சத்துணவில் முட்டை போட மாட்டார். அதனால், மாணவர் முட்டை போடும் நிலைமை வரும். இதை ஏற்றுக் கொள்வதாக இருந்தால் ஜெயலிதாவை ஆதரியுங்கள். எங்களை தோற்கடியுங்கள். நாங்கள் தோற்றாலும், உங்களை மறக்க மாட்டோம்.இவ்வாறு கருணாநிதி பேசினார்.

நாங்கள் தோற்றாலும் உங்களை மறக்க மாட்டோம் : முதல்வர் கருணாநிதி உருக்கம்

மும்பை: இந்தியா-பாக். அணிகள் மோதின அரையிறுதிப் போட்டியை பாலிவுட் பாதுஷா ஷாருக் கான் மன்னத்தில் உள்ள தனது இல்லத்தில் நண்பர்களுடன் கண்டு ரசித்தார். இறுதிப் போட்டியிலும் இந்தியா தான் வெற்றி பெறும் என்று அவர் தெரிவித்தார்.

வரும் சனிக்கிழமை மும்பையில் உள்ள வாங்கடே அரங்கில் இந்தியா-இலங்கை அணிகள் மோதும் இறுதிப் போட்டி நடக்கிறது. இதை ஷாருக் கான் தனது குடும்பத்தோடு அரங்கில் வந்து கண்டு ரசிக்கவிருக்கிறார்.

இது குறித்து அவர் கூறியதாவது,

நாம் தான் இறுதிப் போட்டியிலும் வெல்வோம். அதற்காக நான் ஒரு எக்ஸ்ட்ரா டி சர்ட் வாங்கி வைத்திருக்கிறேன். அதை அணிந்து கொண்டு தான் நான் மும்பை அரங்கிற்கு சென்று இறுதி ஆட்டத்தை காணவிருக்கிறேன். என் குழந்தைகளும் ஆட்டத்தைப் பார்க்க ஆவலாக இருக்கின்றனர்.

சிறந்த வீரர்களுக்கு நெருக்கடி கொடுக்கக் கூடாது. சச்சின் தான் இந்திய அணிக்கு உற்சாகம் அளிப்பவர். 85 ரன்கள் என்பது சிறந்த ஸ்கோர். அவருக்கு அவ்வளவு நெருக்கடி கொடுக்கக் கூடாது.

அரையிறுதி ஆட்டத்தை ஷாருக் கான் கரன் ஜோஹார், பர்ஹான் அக்தர். சூசன் ரோஷன், கரிஷ்மா கபூர், சஞ்சய் கபூர், ரவீனா, அர்ஜுன் ராம்பல், பிரத்தீக் பாபர், சங்கி பாண்டே மற்றும் பலருடன் சேர்ந்து தனது இல்லத்தில் பார்த்தார்.

அரையிறுதி ஆட்டத்தில் ஆட்ட நாயகன் சச்சின் டெண்டுல்கர் தனது 100-வது சர்வேதச சதத்தை 15 ரன்களில் நழுவவிட்டார்.

இறுதிப் போட்டியிலும் இந்தியா தான் வெல்லும்: ஷாருக் கான்

நடிகர் விஜயகாந்த்துடன் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா ஒரே மேடையில் பேச மறுப்பதற்கு காரணம் உள்ளதாக தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.

அரக்கோணம் தொகுதி விடுதலைச் சிறுதிதைகள் கட்சி வேட்பாளரை ஆதரித்துப் பேசிய அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன்,

விஜயகாந்த் குடித்துவிட்டு சட்டசபைக்கு செல்வதாக ஜெயலலிதா கூறினார். குடித்துவிட்டு விஜயகாந்த் உளறுகிறார் என்று ஜெயலலிதா சொன்னார். உடனே நீங்கதான் ஊத்தி கொடுத்தீங்களா என்று விஜயகாந்த் கேட்டார்.

தற்போது கூட்டணி அமைந்தவுடன் விஜயகாந்த் ஆடி ஆடி பேச, இந்த அம்மா அவரை ஒரு

சைடாக பார்க்க, சரி விஜயகாந்த் சொன்னது போலத்தான் நடந்திருக்கு என்று மக்கள் நினைப்பார்கள் என்றுதான் இருவரும் ஒரே மேடையில் ஏறுவதில்லை.

அதிமுக கூட்டணி அமைத்தவுடன் இதுவரை அந்த தலைமை கூட்டணி கட்சித் தலைவர்களுடன் மேடை ஏறியிருக்கிறார்களா? அரசியல் நாகரீகத்தை அதிமுக அணியில் பார்க்க முடியுமா? அதிமுக அணி கொள்கை உறுதி இல்லாதது என்றார்.

விஜயகாந்த்துடன் ஜெயலலிதா ஒரே மேடையில் பேச மறுப்பதற்கு காரணம் உள்ளது: திருமாவளவன்

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வேலூர் மாவட்டம் சோளிங்கர், ராணிப்பேட்டை, வேலூர், அணைக்கட்டு தொகுதிகளில் போட்டியிடும் அ.தி.மு.க.- தே.மு.தி.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தார்.

அப்போது அவர், ‘’ஆளும் கட்சியினர் பாலாற்றில் மணல் கொள்ளையும், ஆட்சியில் பகல் கொள்ளையும் அடித்தனர். பாலாற்றில் 100 லாரிகளில் மணல் அள்ள லைசென்ஸ் கொடுத்து விட்டு 5 ஆயிரம் லாரிகளில் மணலை கடத்துகின்றனர்.

தண்ணீருக்காக இவர்கள் போராடவில்லை. மணல் எடுப்பதற்காக போராடினார்கள். உங்களை (மக்கள்) ஏமாற்றி உங்கள் வரிபணத்தை கொள்ளையடித்தவர்களுக்கு ஓட்டு போடாதீர்கள்.

ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். அப்போது தான் நாடு நாடாக இருக்கும். இன்று விலைவாசி விண்ணை முட்டுகிறது.

விலைவாசி உயர்வால் பொது மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்ணாவின் வழிவந்தவர்கள் என்று கூறி ஏமாற்றுபவர்களுக்கு ஓட்டு போட வேண்டுமா? அவர்களின் முகத்திரையை கிழிக்க வேண்டும்.

அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை நீங்கள் வெற்றி பெறச் செய்ய நான் பெரிதும் நேசித்த எம்.ஜி.ஆரின் கட்சியுடன் தான் கூட்டணி வைத்துள்ளேன். நான் ஆட்சியில் பங்கோ, துணை முதல்வர் பதவியோ கேட்கவில்லை.

நாடு நன்றாக இருக்க வேண்டுமானால் கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெற செய்யுங்கள் கட்சியினர்கள் வேறுபாடுகளை மறந்து அனைவரும் ஒற்றுமையாக இருந்து தேர்தல் பணியாற்ற வேண்டும்.

சிப்பாய் கலகம் நடந்த இந்த வேலூரில் மக்கள் தி.மு.க. ஆட்சியை அகற்ற வேண்டும். வேலூர் புதிய பஸ் நிலையம் பகுதியில் உள்ள நிலத்தை அபகரிக்க தி.மு.க.வினர் முயல்கின்றனர். தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நான் சமாளித்து விடுவேன்.

பொதுமக்களாகிய நீங்கள் சமாளிப்பது கஷ்டம். எனவே அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெற இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களியுங்கள்’’ என்று பேசினார்.

நான் சமாளித்துவிடுவேன்; நீங்கள் சமாளிப்பது கஷ்டம்: விஜயகாந்த் பேச்சு

புதுடில்லி: இரண்டாண்டு இடைவெளிக்கு பின், இந்தியா - பாக்., உள்துறை செயலர்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தை நேற்று டில்லியில் நடந்தது. இதில், பயங்கரவாதத்தை கட்டுப்படுத்துவது உள்ளிட்ட முக்கிய பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டன.

இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான உறவை மேம்படுத்துவது தொடர்பாக, நீண்ட காலமாக இருநாட்டு தலைவர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு இடையே பேச்சுவார்த்தை நடந்து வந்தது. கடந்த 2008ல், மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து, பாகிஸ்தானுடனான பேச்சுவார்த்தையை இந்தியா நிறுத்தி வைத்தது. இந்நிலையில், இரண்டாண்டு இடைவெளிக்கு பின், தற்போது மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான சூழல் உருவானது.

இதையடுத்து, டில்லியில் உள்ள ஐந்து நட்சத்திர ஓட்டலில், இருநாட்டு உள்துறை செயலர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நேற்று நடந்தது. இந்திய உள்துறை செயலர் ஜி.கே.பிள்ளை, பாக்., உள்துறை செயலர் சவுத்ரி கமார் ஜமாம் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர். இருநாட்டின் சார்பிலும் தலா 17 அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர். இதில், மும்பை குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் உள்ளிட்டவர்களை இந்தியாவிடம் ஒப்படைப்பது, பயங்கரவாதத்தை கட்டுப்படுத்துவது, மும்பை தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஷாகிர் ரகுமான் லக்வி உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்துவதற்கு இந்திய அதிகாரிகளை அனுமதிப்பது உள்ளிட்ட விவரங்கள் குறித்து, இதில் பேசப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

கூட்டம் முடிந்ததும், பாகிஸ்தான் தூதரக அதிகாரி ஷாகித் மாலிக் கூறுகையில், "பேச்சுவார்த்தை நல்ல முறையில் நடந்தது' என்றார். மத்திய உள்துறை செயலர் ஜி.கே.பிள்ளை கூறுகையில், "பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்தது. சரியான திசையை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம்' என்றார். இன்றும் இப்பேச்சு தொடர்கிறது. டில்லி மொகாலியில் நடைபெறும் கிரிக்கெட் போட்டியை காண பாக்., பிரதமர் கிலானி வருகிறார். இந்தியா - பாக்., அணிகள் மோதும் இப்போட்டி நடைபெறும் முன், இருதரப்பும் சேர்ந்து கூட்டறிக்கை விடும் சூழ்நிலையும் உருவாகியிருக்கிறது.

நீண்ட இடைவெளிக்குப் பின் இந்தியா - பாக்., சுமுக பேச்சு

கோவை: மாணவர்கள் ஆங்கிலம் கலக்காத சுத்தத் தமிழில் பேச முயற்சிக்க வேண்டும் என்று அறிவுரை கூறினார் நடிகர் சிவகுமார்.

கோவை சரவணம் பட்டியில் அமைந்துள்ள தனியார் கல்லூரி ஒன்றின் தமிழ் மன்றம் தொடக்க விழாவில் நடிகர் சிவகுமார் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். விழாவில் அவர் பேசுகையில், உலகத்தில் 3 ஆயிரம் மொழிகள் உள்ளதாக கூறப்படுகிறது. இதில் 6 மொழிகள்தான் செம்மொழிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. அதில் ஒன்று தமிழ் மொழி.

ஆனால் பாருங்கள், தமிழ்நாட்டில் பிறந்து தமிழராக வாழ்கிறோம். தமிழ் பேசுகிறோம் என்பதை தவிர 100க்கு 90 பேருக்கு தமிழ் மொழி அதிகமாக தெரியாது. இதைவிட அவமானம் இருக்க முடியுமா...

எனவே மாணவர்கள் தமிழில் உரையாடும் பொழுது ஆங்கில கலப்பில்லாமல் தூய தமிழிலேயே பேச வேண்டும். ஆங்கில கலப்பினால் தமிழ் தனது தனித்தன்மையை இழந்து விடுகிறது.

கல்லூரி பருவத்தில் மாணவர்கள் ஒழுக்கத்தையும் கல்வியையும் இரு கண்களாக கொள்ளவேண்டும். இந்த வயதில் எதையும் சுலபத்தில் கற்றுக் கொள்ளலாம். நீங்கள் நல்ல விஷயங்களைக் கற்றுக் கொள்ளுங்கள்...,", என்றார்.

'சுத்த தமிழ்ல பேசுங்கப்பா...!' - சிவகுமார்

முக நூல்

Popular Posts