background img

புதிய வரவு

Showing posts with label CM. Show all posts

கலைஞர் அரசின் ஒரு சில தவறுகளின் காரணமாக கோபமுற்ற மக்கள் தேர்த லின் மூலமாக ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினர். கடந்த கால அரசுகளின் தவறுகளை களைந்து புதிய வளர்ச்சித் திட்டங்களை உருவாக்க வேண்டி யது புதிய அரசின் கடமை.

தவறான திட்டங்களையும், நடைமுறைகளையும் மட்டுமே களைய வேண்டிய ஜெயலலிதா அரசு மக்கள் ஆதரவையும், வரவேற்பையும் பெற்ற நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சி திட்டங்களின் மீது கை வைத்திருப்பது மக்கள் மத்தியில் எதிர்ப்பலைகளை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் சி.பி.எஸ்.இ., ஸ்டேட் போர்டு, ஓரியன்டல் ஸ்கூல் ஆப் எஜுகேஷன், ஆங்கிலோ இந்தியன், மெட்ரி குலேஷன் என்று பலவகையான பாடத் திட்டங்கள் நடைமுறையில் உள்ளன.

சி.பி.எஸ்.இ பாடத் திட்டப் பள்ளிக ளில் அகில இந்தியா முழுவதும் ஒரே பாடத் திட்டமே (சமச்சீர்) அமுலில் உள் ளது. பல்வேறு கல்வி முறையில் ஏற் றத் தாழ்வுகள் நிலவி வந்தது. தங்கள் பள்ளிகளில் தகுதி, திறமை ஆகிய வற்றை அதிகப்படுத்தும் கல்வி முறை உள்ளதாக கூறி மெட்ரிகுலேஷன் பள் ளிகள் கட்டணக் கொள்ளை அடித்தன.

பணம் படைத்தவர்களுக்கு மட் டுமே தரமான கல்வி கிடைக்கும் என்ற நிலை உருவானது. சாதீய, பொருளா தார ஏற்றத்தாழ்வுகள் படிக்கும் மாண வர்களிடையே உருவாகக் கூடாது என்கி றஅடிப்படையில் சீருடைத் திட் டம் கொண்டு வரப்பட்டது.

பள்ளி மாணவர்கள் அணியும் ஆடையில் ஏற்றத்தாழ்வுகள் தெரியக் கூடாது என்றால் படிக்கும் பாடத் திட் டங்களில் மட்டும் ஏன் ஏற்றத்தாழ்வு? என்ற கேள்வியை பல ஆண்டுகளாக கல்வியாளர்கள் எழுப்பி வந்தனர்.

கல்வியாளர்கள் மற்றும் பெரும் பான்மை மக்களின நீண்ட கால கோரிக் கையின் அடிப்படையில் கல்வியாளர் கள் அமைந்த குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் நிறைவேற்றப்பட்ட திட் டம்தான் சமச்சீர் கல்வி திட்டம்.

சமச்சீர் கல்வி உருவான வரலா ற்றை கவனத்தில் கொள்ளாமல் கரு ணாநிதி ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டம் என்ற எண்ணத்தோடு அதனை தடுத்து நிறுத்தும் முயற்சியில் இறங்கி மூக்குடைபட்டுள்ளார் முதல்வர்.

சமச்சீர் கல்வி திட்டம் அமுல்படுத் தப்பட்டால் தமிழ்நாடு முழுவதும் அனைத்துப் பள்ளிகளும் ஒரே பாடத் திட்டம் அமையும். இதனால் ஏழைகள் பணக்காரர்கள் என்கிற பேதம் இல்லா மல் அனைவருக்கும் சமமான கல்வி கிடைக்கும்.

இது வரவேற்கத்தக்க திட்டம் என் பதை யாராலும் மறுக்க முடியாது என் றாலும் தனியார் பள்ளிகளின் அநியாய வசூலுக்கு வேட்டு வைக்கும் என்பதால் நொண்டிச் சாக்குகளை கூறி திட் டத்தை தடுத்து நிறுத்தும் நடவடிக்கை யில் இறங்கினர் ஆதிக்கவர்க்கத்தினர்.

சமச்சீர் கல்வி திட்டத்தை சமத் தாழ்வு திட்டம் என்று கேலி பேசி எள்ளி நகையாடினர். தகுதி, திறன் என்று கூறி தங்கள் ஆதிக்க மனோபாவத்திற்கு ஆதரவு சேர்த்தனர். எல்லா கேள்வி கணைகளும் முனை மழுங்கிய வேளையில் ஆதிக்க வர்க்கத்தினர் ஆட்சி மாற்றத்தை தமக்கு ஆதரவாக (ஆதாரமாக) மாற்றிக் கொண்டனர்.

நேரடியாக சமச்சீர் கல்வித் திட் டத்தை நிறைவேற்றக் கூறினால் முடி யாது என்பதை உணர்ந்த ஆதிக்க வர்க்கம் பாடத் திட்டங்கள் சரியில்லை பாடத் திட்டங்களில் தரமில்லை என்று மகுடி ஊதினார்.

ஆதிக்க வர்க்கத்தினரின் சாகசப் பேச்சில் மயங்கிய முதல்வர் சமச்சீர் கல்வி திட்டத்தை தள்ளிப் போடும் நடவடிக்கையில் இறங்கினார். இந்த ஆண்டில் சமச்சீர் கல்வியை நிறுத்தி வைப்பதற்கான சட்டத்திருத்த தீர்மா னத்தை சட்டசபையில் நிறைவேற்றி னார்.

சட்டத் திருத்தத்திற்கு கல்வியாளர் கள் எதிர்ப்பு தெரிவித்தவுடன் தற்காலி கம்தான் நிரந்தரமில்லை என்று கூறி சமாளிக்கப் பார்த்தார்.

இதனை ஏற்றுக் கொள்ளாத கல்வி யாளர்கள் உயர் நீதிமன்றத்தை நாடி னார். உயர் நீதிமன்றம் வழக்கு விசா ரித்து சமச்சீர் கல்வித் திட்டம் தொடரும் என்று தீர்ப்பளித்தது. தீர்ப்பைக் கண்ட வுடன் எச்சரிக்கை அடைந்து தமிழக முதல்வர் தன்னுடைய போக்கை மாற்றிக் கொள்ளாமல் ஈகோவுடன் மோதல் போக்கை தொடர்ந்தார்.

உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத் தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே சமச்சீர் கல்வித் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட 1, 6ம் வகுப்புக ளுக்கு திட்டம் தொடரலாம். மற்ற வகுப் புகளுக்கு ஆய்வுக் குழு அமைத்து பரிசீலிக்குமாறும், அதன் அடிப்படை யில் உயர் நீதிமன்றம் தீர்ப்பளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

உச்ச நீதிமன்றஉத்தரவின்படி தமிழக அரசின் தலைமைச் செயலாளர் தேவேந்திரநாத் சாரங்கி தலைமையில் குழு அமைக்கப்பட்டது. தனியார் பள்ளி நிர்வாகிகளையும் உறுப்பினர்களாகக் கொண்டு அமைக்கப்பட்ட அந்தக் குழு அளித்த ஆய்வறிக்கை கல்வியாளர் கள் மத்தியில் கண்டனத்தை எழுப்பி யது.

இது பற்றிக் கருத்து தெரிவித்த மூத்த கல்வியாளரும், முன்னாள் துணை வேந்தருமான வசந்தி தேவி, ""ஏழை மற்றும் கிராமப்புற மாணவர் களைக் கேவலப்படுத்தி விட்டது தமி ழக அரசின் சமச்சீர் கல்விக்கான ஆய் வுக்குழு - ஆதங்கமும் வேதனையும் ஒரு சேரப் பொங்குகிறது...'' என்று தெரிவித்தார்.

உயர் நீதிமன்றத்தில் இரு தரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலை யில் சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் ஆகியோர் கொண்ட முதலாவது பெஞ்ச் வழங்கிய தீர்ப்பு தமிழக அர சின் நடு மண்டையில் நச்சென்று இறங்கியது.

சமச்சீர் கல்வியை நடப்பு கல்வி யாண்டில் நிறுத்தி வைக்கும் சட்டத் திருத்தத்தின் 3வது பிரிவு செல்லாது. புதிய பாடத் திட்டத்தின்படி அச்சிடப் பட்டு தயாராக உள்ள பொதுப்பாட நூல் களை 22ம் தேதிக்குள் மாணவர்க ளுக்கு விநியோகிக்க வேண்டும். அந்தப் பாடப் புத்தகங்களில் குறைகள் இருக்குமானால் அவற்றைக் கண்ட றிந்து, களைவதற்கு ஒரு குழு அமைத்து 3 மாதங்களுக்குள் உரிய மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

பள்ளிகள் திறந்து எந்தப் பாடப் புத்தகங்களும் இல்லாமல் வெறுமனே மாணவர்கள் சென்று வருகின்றனர். ஆசிரியர்களும் எந்தப் பாடத்தை நடத் துவது என்று குழம்பிய மனநிலையில் உள்ளனர். தமிழக அரசு இனிமேலும் ஈகோ, மேல்முறையீடு என்று கால த்தை கடத்தாமல் சமச்சீர் கல்வித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் முனைப்பு காட்ட வேண்டும்.

நான் பிடித்த முயலுக்கு மூணு கால் என்ற மனப்பான்மையில் முதல்வர் செயல்படுவாரேயானால் முதல் கோணல் முற்றிலும் கோணலாக மாறி விடும். ஐந்தாண்டு காலம் காத்திருந்து பெற்றவெற்றி எல்லாம் உள்ளாட்சித் தேர்தலிலும், பாராளுமன்றத் தேர்தலிலும் காணாமல் போய் விடும்.

Thanks கீற்று

முதல்வருக்கு முதல் அடி

சென்னை, மே 24: தமிழகத்தில் சட்டமேலவை வருவதற்கு அதிமுக அரசு அனுமதிக்காது என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார்.

கேபிள் டி.வி. அரசுடைமை ஆக்கப்பட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

முதலமைச்சராகப் பதவி ஏற்ற பிறகு நிருபர்களை தலைமைச் செயலகத்தில் முதல் முறையாகச் சந்தித்த அவர், அவர்களின் கேள்விகளுக்குப் பதில் அளித்தார். வாரந்தோறும் செய்தியாளர்களைச் சந்திக்கப்போவதாகவும் அவர் தெரிவித்தார்.

"திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம், மேலவை அமைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கும். அதிமுக ஆட்சிக்கு வந்ததும் அதுகுறித்த தீர்மானங்களை ரத்து செய்யும்.

மேலவை தேவையில்லை என்கிற முடிவை அதிமுக நிறுவனர் எம்.ஜி.ஆர். எடுத்தார். அந்த முடிவில் எந்த மாற்றமும் இல்லை. தமிழகத்தில் மேலவை வராமல் இருக்க என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்வோம்.

கேபிள் டி.வி. அரசுடமையாக்கப்படும் என அதிமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அரசுடமையாக்கப்படும். எப்போது எனக் கேட்டால், அதை நடைமுறைக்குக் கொண்டு வரும்போது உங்களுக்குத் தெரியும். அதிமுக அரசு பொறுப்பேற்று எட்டு நாட்கள்தான் ஆகிறது. அதற்குள்ளாக மிகவும் சீக்கிரமாக இந்தக் கேள்வியைக் கேட்கிறீர்கள்.

மாணவ-மாணவிகளுக்கு மடிக்கணினி (லேப்-டாப்) வழங்குவது உள்ளிட்ட திட்டங்கள் பற்றி ஆளுநர் உரையில் அறிவிப்புகள் வெளியாகும்.

அச்சுறுத்திப் பறித்த சொத்துகள்: திமுகவினர் ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி மக்களை அச்சுறுத்திப் பறித்துள்ள சொத்துகள் மீட்கப்படும் என அதிமுக தேர்தல் அறிக்கையிலே தெரிவிக்கப்பட்டுள்ளது. அது நிறைவேற்றப்படும்.

அலைக்கற்றை விவகாரம்: 2ஜி அலைக்கற்றை விவகார வழக்கு இப்போது சரியான திசையில் சென்று கொண்டிருக்கிறது.

இப்போது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை மூலம் நீதித் துறையின் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

பெண் என்பதால் ஒரு வழக்கில் இருந்து சலுகை காட்ட வேண்டும் என்கிற வாதமே தவறானது. பெண் என்பதற்காக கிரிமினல் வழக்குகளில் அவருக்கு சலுகை கோர உரிமையில்லை.

தலைமைச் செயலகம்: தலைமைச் செயலகத்தைக் கட்டுவதற்கு திமுக அரசு அதிக ஆண்டுகளை எடுத்துக் கொண்டது. ஆனால், அந்தக் கட்டடத்தை என்ன செய்வது என்பது குறித்து எங்களை சீக்கிரம் முடிவெடுக்கச் சொல்கிறீர்கள்.

பெட்ரோல் விலை உயர்வு: விலைவாசி உயர்வால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அனைத்துப் பொருள்களின் விலை உயர்வுக்கும் பெட்ரோல், டீசல் விலை உயர்வுதான் மூல காரணமாகும். எனவே அவற்றின் விலையை உயர்த்தும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும்.

தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்று ஒருவாரம்தான் ஆகிறது. எனவே பெட்ரோல், டீசல் மீதான மாநில அரசின் விற்பனை வரியைக் குறைப்பது பற்றி இன்னும் ஆராயவில்லை. அதுகுறித்து ஆராய்ந்து முடிவெடுக்கப்படும்.

கட்டுமானப் பொருள்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த விலைவாசியையும் குறைக்க அரசு நடவடிக்கைகள எடுக்கும்.

பள்ளிக் கட்டணம்: தனியார் பள்ளிக்கூடங்களில் வசூலிக்கப்படும் கல்விக் கட்டணத்தை நிர்ணயிக்கும் விஷயத்தில் அரசு நேரடியாகச் சம்பந்தப்படவில்லை. இதற்கென கட்டண நிர்ணயக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

அந்தக் குழு கட்டணத்தை நிர்ணயிக்கிறது. அதை பள்ளிகள் அமல்படுத்துகின்றன. பள்ளிகளுக்கும், அந்தக் குழுவுக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டு இந்த விஷயத்தில் தலையிட வேண்டும் என பள்ளிகள் விரும்பினால் அரசு தலையிடும்.

சமச்சீர் கல்வி: சமச்சீர் கல்வி இந்த ஆண்டு அமல் செய்யப்படாது. இந்த கல்வித் திட்டத்தை ஆய்வு செய்வதற்காக குழு அமைக்கப்படும். கல்வித் திட்டத்தை ஆராய்ந்து குழுவின் சார்பில் பரிந்துரைகள் அளிக்கப்படும். இதற்கென கால நிர்ணயம் ஏதும் வகுக்கப்படவில்லை.

மெட்ரோ ரயில்: மெட்ரோ ரயில் உள்பட திமுக அரசு தொடங்கியுள்ள திட்டங்களின் நிலை குறித்து ஆய்வு செய்யப்பட்டு முடிவெடுக்கும்போது உங்களுக்குத் தெரிவிப்போம் என்று கூறினார் ஜெயலலிதா.

சட்டமேலவை கிடையாது: முதல்வர் ஜெயலலிதா

மேற்குவங்கத்தில், மம்தா பானர்ஜி 20.05.2011 அன்று முதல்வராக பதவியேற்க உள்ள நிலையில், இந்த விழாவில் காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா பங்கேற்க மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சோனியாவிற்கு பதிலாக, மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் பங்கேற்க உள்ளார்.

இந்த பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ளுமாறு முன்னாள் முதல்வர் புத்த‌தேவ் பட்டாச்சார்யாவிற்கு மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்துள்ளார். அதற்கு இடதுசாரிகள் கட்சி சார்பில் அதன் பிரதிநிதிகள் கலந்து கொள்வர் என்று அவர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்க சட்டசபை தேர்தலில், மம்தாவின் திரிணமுல் காங்கிரஸ் கட்சி, 184 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம், மேற்கு வங்கத்தில், கடந்த 34 ஆண்டுகளாக நடந்து வந்த கம்யூனிஸ்ட் ஆட்சிக்கு, முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், திரிணமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம், கோல்கட்டாவில் நடந்தது. இதில், கட்சியின் சட்டசபை தலைவராக மம்தாவும், துணைத் தலைவராக பார்த்தா சட்டர்ஜியும், தலைமை கொறடாவாக, சுபந்தேவ் சட்டோபாத்யாவும் தேர்வு செய்யப்பட்டனர்.

பதவியேற்பு விழாவிற்கு வருமாறு சோனியா காந்தியை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார் மம்தா பானர்ஜி. சோனியா காந்தியை தொடர்ந்து, பிரதமர் மன்மோகன் சிங்கையும் சந்தித்து மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்தார்.

மம்தா பானர்ஜி பதவியேற்பு: சோனியா புறக்கணிப்பு

ஜெனிவா:பீகார் முதல்வர் நிதிஷ்குமார், குழந்தைகளுக்கான தடுப்பூசி திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி வருவதாக, உலக கோடீஸ்வரரான பில்கேட்ஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.

உலக சுகாதார நிறுவனத்துக்கு, அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக, "மைக்ரோ சாப்ட்' நிறுவன தலைவர் பில்கேட்ஸ் தான், அதிக நிதியுதவி அளித்து வருகிறார்.உலக சுகாதார நிறுவனத்தின், 64வது ஆண்டு கூட்டம் ஜெனிவாவில் நேற்று முன்தினம் நடந்தது.

இதில் கலந்து கொண்டு பில்கேட்ஸ் பேசுகையில், "மருத்துவ வசதிகள் அதிகரித்து விட்டதாக கூறப்பட்டாலும் குழந்தைகளின் இறப்பு விகிதம் அதிகமாகத்தான் உள்ளது. குறிப்பாக இந்தியாவில் தான் குழந்தைகளின் இறப்பு விகிதம் உலகிலேயே அதிகமாக உள்ளது."குழந்தைகளுக்கான தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்கள் சகாய விலையில் இந்த மருந்தை அளிக்க முன்வர வேண்டும். குழந்தைகளுக்கான தடுப்பூசி திட்டத்தை நிறைவேற்றுவதில் பீகார் முதல்வர் நிதிஷ்குமாரும், நைஜீரியா நாட்டின் போலியோ ஒழிப்பு திட்ட தலைவர் முகமது பேட்டும் சிறப்பாக செயல்படுகின்றனர்' என்றார்.

பீகார் முதல்வருக்கு பில்கேட்ஸ் பாராட்டு

கேரளா சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கூட்டணி இன்று உம்மன்சாண்டி தலைமையில் ஆட்சி அமைக்கிறது. திருவனந்தபுரத்தில் உள்ள கவர்னர் மாளிகையில் இன்று மதியம் 2 மணிக்கு நடக்கும் பதவி ஏற்பு விழாவில் முதல்-மந்திரி உம்மன் சாண்டிக்கு கவர்னர் கவாய் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.

முதல் கட்டமாக உம்மன் சாண்டியுடன் கூட்டணி கட்சியான கேரள காங்கிரசைச் சேர்ந்த மானி நிதிதுறை மந்திரியாகவும், ஜோசப் நீர் வளத்துறை மந்திரியாகவும் பதவி ஏற்கிறார்கள். முஸ்லிம் லீக் கட்சி குஞ்சாலிகுட்டிக்கு விவசாய துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

சோசலிஸ்டு ஜனதா கட்சியைச் சேர்ந்த மோகனன் தொழில் வள மந்திரியாகிறார். கேரள காங்கிரஸ்(ஜே) கட்சியைச் சேர்ந்த ஜேக்கப்புக்கு உணவு துறையும், சிபுபேபிஜானுக்கு தொழிலாளர் நலத்துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது.

நடிகர் கணேஷ்குமார் போக்குவரத்து மற்றும் சுற்றுலாத்துறை இலாகாவுக்கு மந்திரியாக பொறுப்பேற்கிறார். உம்மன்சாண்டியுடன் இவர்கள் இன்று பதவி ஏற்கிறார்கள். இதையடுத்து காங்கிரசைச் சேர்ந்த திருவாஞ்சூர் ராதா கிருஷ்ணன் ஆரியாடம் பீர்முகமது, ஜோசப், சிவக் குமார், அடூர் சுரேஷ், பாலகிருஷ்ணன், கெங்காதரன், தீரன்பிரதா பன் ஆகியோருக்கு மந்திரி பதவி வழங்கப்பட உள்ளது.

முதல்-மந்திரி பதவி ஏற்ற பின்பு உம்மன்சாண்டியும், மாநில காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதலாவும் அமைச்சர்கள் பட்டியலுடன் நாளை டெல்லி செல்கிறார்கள். அங்கு சோனியாகாந்தி மற்றும் காங்கிரஸ் மேலிட தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி மந்திரிகள் பட்டியலை இறுதி செய்கிறார்கள். இதைத் தொடர்ந்து வருகிற 23-ந்தேதி நடைபெறும் விழாவில் காங்கிரசைச் சேர்ந்த 9 பேர் மந்திரிகளாக பதவி ஏற்பார்கள்.

கவர்னர் மாளிகையில் விழா: கேரள முதல்-மந்திரியாக உம்மன்சாண்டி இன்று பதவி ஏற்பு; மந்திரி சபையில் கூட்டணி கட்சிகளுக்கு 6 இடம்

சென்னை: சென்னை போலீஸ் கமிஷ்னராக ஜே.கே.திரிபாதியை நியமித்து உத்தரவிட்டுள்ளார் முதல்வர் ஜெயலலிதா.

இதுவரை இந்தப் பதவியில் இருந்த ராஜேந்திரன் சிறைத்துறை கூடுதல் டிஜிபியாக மாற்றப்பட்டுள்ளார்.

அவர் பதவியேற்றவுடன் செய்யப்பட்டுள்ள முதல் அதிகாரிகள் மாற்றம் இதுவாகும்.

இவரைத் தொடர்ந்து தலைமைச் செயலாளர் உள்பட மாநிலத்தில் பெரும்பாலான அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படுவர் என்று தெரிகிறது.

சென்னை போலீஸ் கமிஷ்னராக திரிபாதி நியமனம்-ஜெ முதல் அதிரடி

சென்னை: சென்னை போலீஸ் கமிஷ்னராக ஜே.கே.திரிபாதியை நியமித்து உத்தரவிட்டுள்ளார் முதல்வர் ஜெயலலிதா.

இதுவரை இந்தப் பதவியில் இருந்த ராஜேந்திரன் சிறைத்துறை கூடுதல் டிஜிபியாக மாற்றப்பட்டுள்ளார்.

அவர் பதவியேற்றவுடன் செய்யப்பட்டுள்ள முதல் அதிகாரிகள் மாற்றம் இதுவாகும்.

இவரைத் தொடர்ந்து தலைமைச் செயலாளர் உள்பட மாநிலத்தில் பெரும்பாலான அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படுவர் என்று தெரிகிறது.

இடாநகர், மே 5: ஹெலிகாப்டர் விபத்தில் டோர்ஜி காண்டு இறந்ததையடுத்து அருணாசலப் பிரதேச புதிய முதல்வராக ஜர்போம் கேம்லின்(50) வியாழக்கிழமை பதவியேற்றார். காண்டுவின் அமைச்சரவையில் மின்துறை அமைச்சராக கேம்லின் பதவி வகித்தார்.
ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் ஆளுநர் ஜெ.ஜெ.சிங் அவருக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். முன்னதாக முதல்வரைத் தேர்ந்தெடுப்பதற்காக இடாநகரில் வியாழக்கிழமை நடந்த பேரவை காங்கிரஸ் உறுப்பினர்கள் கூட்டத்தில் ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை. இதையடுத்து, முதல்வரைத் தேர்ந்தெடுப்பதற்கு காங்கிரஸ் தலைவருக்கு அதிகாரம் அளித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அருணாசல் முதல்வராக கேம்லின் பதவியேற்பு

இடாநகர் மே 4: அருணாசலப் பிரதேச முதல்வர் டோர்ஜி காண்டு (56) சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது உறுதியாகியுள்ளது. அவர் உள்பட ஹெலிகாப்டரில் பயணம் செய்த 5 பேரும் மரணம் அடைந்தனர்.
இதை மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் புதன்கிழமை உறுதி செய்தார். டோர்ஜி காண்டுவின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள அவர் இடாநகருக்கு ஹெலிகாப்டரில் புறப்பட்டுச் சென்றார்.
அருணாசலப் பிரதேசத்தின் தவாங் மாவட்டத்தில் கேலா, லுகுதாங்குக்கு இடைப்பட்ட மலைப் பிரதேசத்தில் டோர்ஜி காண்டு சென்ற ஹெலிகாப்டரின் சிதறிய பாகங்கள் கண்டறியப்பட்டன.
அந்த இடத்தில் 5 உடல்களும் கருகிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதில் ஒரு உடலை டோர் ஜி காண்டுதான் என்று அவரது உறவினரும், பஞ்சாயத்துத் தலைவருமான துப்தன் என்பவர் அடையாளம் கண்டு கூறினார். மற்றொருவரின் உடலும் அடையாளம் காணப்பட்டது. பிற மூவரின் உடல்களை அடையாளம் காண முடியவில்லை.
டோர்ஜி காண்டு சென்ற ஹெலிகாப்டர் காணாமல் போனதும் கிராம மக்களின் உதவியும் கோரப்பட்டது. இதையடுத்து அவர்களும் முழுவீச்சில் தேடிவந்தனர். இந்நிலையில் தவாங் மாவட்டத்தின் மலைப் பகுதியில் சுமார் 4900 மீட்டர் உயரத்தில் ஹெலிகாப்டர் சிதைந்து கிடப்பதைத் தேடும் பணியில் ஈடுபட்டிருந்த கிராம மக்கள் கண்டறிந்தனர். இடாநகரில் உள்ள காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர்.
ராணுவக் குழு விரைவு... பின்னர் இதுகுறித்து அருகில் உள்ள ராணுவ சோதனை சாவடிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் அங்கு விரைந்துள்ளனர். ஹெலிகாப்டர் சிதைந்து கிடக்கும் இடத்தை ராணுவ வீரர்கள் சென்றடைய இன்னும் சில மணி நேரம் ஆகும் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
முதல்வர் டோர்ஜி காண்டு கடந்த சனிக்கிழமை தவாங்கில் இருந்து இடாநகருக்கு பவன் ஹான்ஸ் நிறுவனத்தின் ஹெலிகாப்டரில் பயணம் செய்தார். அவருடன் 2 விமானிகள் உள்பட 4 பேர் இருந்தனர். புறப்பட்ட 20 நிமிடங்களில் ஹெலிகாப்டர் அனைத்து தகவல் தொடர்பையும் இழந்தது.
இதையடுத்து ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியிருக்குமோ என்ற சந்தேகம் எழுந்தது. ஹெலிகாப்டரைத் தேடும் பணி முடுக்கிவிடப்பட்டது.
இதனிடையே, இஸ்ரோவின் உதவியும் நாடப்பட்டது. செயற்கைக்கோள் படம் பிடித்து அனுப்பியதில் இந்திய எல்லையை ஒட்டிய பூடான் பகுதியில் ஹெலிகாப்டரின் உடைந்த பாகங்கள் கிடப்பது போல் தெரிந்தது. இதையடுத்து அந்த இடத்துக்கு ஐடிபிபி வீரர்கள் 300 பேர் அனுப்பி வைக்கப்பட்டனர்.
சொந்த வாழ்க்கை: டோர்ஜி காண்டு மோன்பா பழங்குடியினத்தைச் சேர்ந்தவர். பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்தியவர். ராணுவத்தில் 7 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியுள்ளார். வங்கதேசப் போரின் போது சிறப்பாகப் பணியாற்றியதற்கு தங்கப் பதக்கம் பெற்றவர். பணி ஓய்வுக்குப் பின்னர் காங்கிரஸில் தன்னை இணைத்துக் கொண்டு தீவிரமாகச் செயல்பட்டார். அருணாசலப் பிரதேசத்தின் 6-வது முதல்வர். இப்போது 2-வது தடவையாக முதல்வர் பதவி வகித்தார். இவருக்கு 2 மனைவிகள். 4 மகன்கள். 2 மகள்கள் உள்ளனர்.
வேதனையாக உள்ளது...
தில்லியில் புதன்கிழமை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், டோர்ஜி காண்டுவின் ஹெலிகாப்டர் மாயமாகி சில தினங்கள் ஆனாலும் அவர் உயிருடன் இருப்பார் என்று நம்பி வந்தோம். அவரை மீட்க பல்வேறு வழிகளில் தீவிரமாக முயற்சித்தோம். இந்நிலையில் தவாங் மாவட்டத்தில் ஹெலிகாப்டர் ஒன்று சிதறிக்கிடப்பதை கிராம மக்கள் கண்டறிந்துள்ளனர். அங்கு கிடந்த உடலை டோர்ஜி காண்டுதான் என்று அவரது உறவினர் அடையாளம் காட்டியுள்ளார். அந்த இடத்துக்கு ராணுவம் விரைந்துள்ளது. இந்த செய்தி வேதனையை ஏற்படுத்தியுள்ளது என்றார்.
விபத்தில் சிக்கியதா?
டோர்ஜி காண்டு சென்ற ஹெலிகாப்டர் பறந்து கொண்டிருக்கும் போது தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கீழே விழுந்து நொறுங்கியதா? அல்லது மோசமான வானிலை காரணமாக மலையின் மீது மோதி விபத்துக்குள்ளானதா? அல்லது சதி வேலையா என்பது குறித்தும் விசாரணை நடைபெறும் என்று தெரிகிறது.
சொந்த கிராமத்தில் அடக்கம்
இடாநகரில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த வடகிழக்கு மாநிலங்களின் மேம்பாட்டுக்கான மத்திய அமைச்சர் பி.கே.ஹண்டிக், ஹெலிகாப்டரின் பாகங்கள் சிதறிக் கிடக்கும் இடத்தில் 5 உடல்களும் இருப்பதாக தகவல் வந்துள்ளது. அடர்ந்த வனப் பகுதியாக இருப்பதால் உடல்களை அங்கிருந்து கொண்டுவருவது சிரமமாக இருக்கும். இதில் தாமதமும் ஏற்படலாம்.
ஆனால் டோர்ஜியின் உடல் எப்படியும் இடாநகருக்கு கொண்டுவந்து பொதுமக்களின் அஞ்சலிக்கு வைக்கப்படும். பின்னர் தவாங் மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த கிராமமான கியாங்கருக்கு கொண்டு சென்று அடக்கம் செய்யப்படும் என்றார்.
அடுத்த முதல்வர் யார்?
முதல்வர் டோர்ஜி காண்டு மரணம் அடைந்துள்ளதால், அந்த மாநிலத்தின் அடுத்த முதல்வராக யார் தேர்வு செய்யப்படுவார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதுகுறித்து மத்திய அமைச்சர் ஹண்டிக்கிடம் கேட்டதற்கு, அடுத்த முதல்வர் யார் என்று இப்போது சொல்ல முடியாது.
மாநிலத்தின் நலனை கருத்தில் கொண்டு நல்ல முடிவு எடுக்கப்படும்.
இப்போது மாநிலத்தின் அரசியல் சூழலை மத்திய அமைச்சர்கள் நாராயணசாமியும், முகுல் வாஸ்னிக்கும் கூர்ந்து கவனித்து வருகின்றனர் என்றார் ஹண்டிக்.

ஹெலிகாப்டர் விபத்தில் அருணாசல முதல்வர் மரணம்

தனி பெரும்பான்மையுடன் வெற்றி பெறும்பட்சத்தில், தனித்து ஆட்சி அமைக்க அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதா ஆலோசனை நடத்தி வருகிறார். சொல் பேச்சு கேட்கும் கட்சிகளை மட்டும் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டு, மீதமுள்ளவற்றை கழற்றி விடும் முடிவில் உள்ள அவர், சீனியர் மாவட்ட செயலர்களுக்கு, இம்முறை அமைச்சர் பதவி வழங்கவும் திட்டமிட்டுள்ளார்.

கடந்த 2006 வரை ஆட்சிக்கட்டிலில் இருந்த அ.தி.மு.க., வுக்கு, இம்முறை மீண்டும் ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளதாக அ.தி.மு.க., வினர் கூறி வருகின்றனர். தி.மு.க., அரசு மீதான குற்றச்சாட்டுக்கள், அ.தி.மு.க.,வின் கூட்டணி பலம் ஆகியவை அவர்களுக்கு வெற்றியை தேடித்தரலாம். சிறு, குறு கட்சிகளை சேர்த்துக் கொண்டு, சட்டசபை தேர்தலில் களம் கண்ட ஜெயலலிதா, "வெற்றி நமதே' என்ற நம்பிக்கையில் உள்ளார்.தே.மு.தி.க., வைப் பொறுத்தமட்டில் கூட்டணியில் இருந்தாலும், அது பெயரளவுக்கு மட்டுமே என அ.தி.மு.க.,வினர் கூறிவருகின்றனர். அ.தி.மு.க., தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெறும்போது, தே.மு.தி.க., கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளை கழற்றி விட்டு, சிறிய கட்சிகளை மட்டும் வைத்துக் கொண்டு, ஆட்சியில் அமர ஜெயலலிதா முடிவு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

ஓய்வுக்காக கோடநாடு சென்றுள்ள அவர், ஆட்சி அமைப்பது, அமைச்சர் பட்டியல் குறித்து மாநில நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.தி.மு.க.,வை காட்டிலும், அ.தி.மு.க., ஆட்சியில் அமைச் சரவை விசாலமாக இருக்கும். 35 பேர் வரை அமைச்சர் பட்டியலில் இடம் பெறக்கூடும். மாநில நிர்வாகிகளுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டாலும், மாவட்ட செயலர்களில், சீனியர், எந்தவித புகாருக்கும் இடம் தராமல், கட்சி தாவாமல், ஒதுக்கிய தொகுதிகளில் வெற்றிகளை தேடித்தந்தவர்களுக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கவும் ஜெயலலிதா முடிவு செய்துள்ளார்.

தனித்து ஆட்சி அமைக்க அ.தி.மு.க., ஆலோசனை

சென்னை: திமுக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைத்தால் முக ஸ்டாலினுக்கு முதல்வர் பதவி அளிக்கப்படுவது பற்றகி திமுக பொதுக்குழு முடிவு செய்யும், என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.

முதல்வர் கருணாநிதி ஒரு தனியார் தொலைகாட்சிக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம்:

கருத்துக்கணிப்பில் வெற்றி

கேள்வி: சமீபத்திய கருத்துக் கணிப்பில் தி.மு.க. வெற்றிபெறும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அதைப் பற்றி நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

பதில்: பொதுவாக நான் கருத்துக் கணிப்புகளில் ஆர்வம் காட்டுவதில்லை. இந்தக் கருத்துக் கணிப்பு சரியாக இருக்குமேயானால், தொடர்ந்து அடுத்தடுத்து இந்தப் பத்திரிகை சார்பில் செய்யப்படுகின்ற கருத்துக் கணிப்புகளில் நம்பிக்கை வைப்பேன்.

கேள்வி: இதிலே எந்தெந்த விஷயங்கள் தி.மு.க.விற்கு ஆதரவாக வந்துள்ளன என்று நினைக்கிறீர்கள்?

பதில்: தி.மு.க. என்பது ஒரு இயக்கம். திராவிட இயக்கம். திராவிட இயக்கத்தின் பால் மக்களுக்கு ஓர் ஆர்வமும், அக்கறையும் உள்ளது. இது வெறும் இயக்கமாக மாத்திரம் இல்லாமல் ஆளுங்கட்சியாக வந்து மக்களுக்கு அண்மைக் காலத்தில் பல சாதனைகளைச் செய்து முடித்திருக்கின்றது. நம்பகத்தன்மை வாய்ந்த கட்சியாக மக்களுக்கு இது இருக்கின்றது.

கூட்டணி அமைச்சரவையா?

கேள்வி: உங்கள் கூட்டணி வெற்றி பெற்றால், கூட்டணி அமைச்சரவைக்கு நீங்கள் ஒத்துக் கொள்வீர்களா? கூட்டணி அமைச்சரவை தான் அமையுமென்று நினைக்கிறீர்களா?

பதில்: சூழ்நிலைக்கேற்ப எங்கள் கட்சி முடிவெடுக்கும். கூட்டணி ஆட்சி என்பது கூடாது என்றல்ல, கூட்டணி ஆட்சிதான் மத்தியிலே நடக்கின்றது.

கேள்வி: தேர்தலுக்கு முன்பு பல பேர் உங்கள் கட்சி ஆட்சியின் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை அவதூறுகளைச் சொன்னார்கள். அதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

பதில்: நீங்களே கேட்கும் போது அவையெல்லாம் அவதூறுகள் என்று சொல்லி கேட்டிருக்கிறீர்கள். அது அவதூறுகள் தான்.

சட்டரீதியாக சந்திப்போம்:

கேள்வி: மத்தியிலும் உங்கள் ஆட்சி தான் நடக்கிறது. இப்போது கருத்துக் கணிப்பில் நீங்கள்தான் வருவீர்கள் என்று சொல்லப்பட்டுள்ளது. தொடர்ந்து உங்கள் ஆட்சி மீது வழக்குகள் வருகிறதே, அதெல்லாம் எப்படி இருக்கும்?

பதில்: வழக்குகளை நாங்கள் சட்ட ரீதியாகச் சந்திப்போம்.

கேள்வி: மக்களுக்கு ஏதாவது செய்தி சொல்ல விரும்புகிறீர்களா?

பதில்: இங்கே மேலே எழுதியிருக்கிறார்கள் பாருங்கள். "வாய்மையே வெல்லும்''. அதுதான் நான் சொல்ல விரும்பும் செய்தி.

ஸ்டாலினுக்கு முதல்வர் பதவி?

கேள்வி: நீங்கள் ஆட்சிக்கு வந்தால் நீங்கள் முதல்வராக தொடர்வீர்களா? அல்லது ஸ்டாலின் முதல்வராவாரா?

பதில்: அதெல்லாம் எங்கள் கட்சியின் பொதுக்குழு முடிவு செய்ய வேண்டிய விஷயங்கள்.

கேள்வி: உங்களுடைய ஆசை என்ன?

பதில்: மக்கள் நன்றாக இருக்க வேண்டும்.

இவ்வாறு முதல்வர் கூறினார்.

மு.க.ஸ்டாலினுக்கு முதல்வர் பதவியா? - கருணாநிதி பதில்

திருவாரூர் : ""சட்டசபைக்கு என்னை 12வது முறையாக தேர்ந்தெடுத்து அனுப்ப வேண்டும்,'' என முதல்வர் கருணாநிதி, திருவாரூரில் மலரும் நினைவுகளைக் கூறி உருக்கமாக பேசினார்.

திருவாரூரில் இறுதிக் கட்ட பிரசாரமாக கீழ வீதியில் கருணாநிதி பேசியதாவது:நான் திருவாரூரில் எத்தனையோ கூட்டங்களில், விழாக்களில் பேசியிருக்கிறேன். இன்று, மணவறையில் உள்ள புதுப்பெண் போல உங்கள் முன் வந்துள்ளேன்.அண்ணாதுரை தேர்தலில் போட்டியிடுமாறு ஆணையிட்டார். அதன்படி, எந்த தொகுதியில் போட்டியிடலாம் என ஆய்வு செய்து, நாகையில் போட்டியிடலாம் என்று அண்ணாதுரையிடம் தெரிவித்தேன். அதற்கு அண்ணாதுரை, நாகையில் போட்டியிடுவதாக இருந்தால் சொந்த ஊரான திருவாரூரில் போட்டியிட வேண்டும். தனித்தொகுதியாக இருந்ததால் குளித்தலையில் போட்டியிடு என கூறினார். அதன்படி குளித்தலையில் போட்டியிட்டு வெற்றி பெற்றேன்.

பின் தஞ்சை, சென்னை உட்பட 11 இடங்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளேன். 12வது முறையாக திருவாரூரில் போட்டியிடுகிறேன். என்னை சட்டசபைக்கு தேர்ந்தெடுத்து அனுப்பி வைக்க வேண்டும். இந்த 12 என்பதற்கும், தஞ்சை மாவட்டத்திற்கும் தொடர்புண்டு. இந்த மாவட்டத்தில் உள்ள கும்பகோணத்தில், 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாமாங்கம் வரும்.திருவாரூரில் நண்பர் தென்னனுடன் சேர்ந்து விளையாடியது தான் இந்த கீழ வீதி. அவர் மட்டுமல்லாமல் வேறு சில நண்பர்களுடனும் விளையாடியுள்ளேன். திருவாரூர் போர்டு உயர்நிலைப்பள்ளியில் நானும், நண்பர்களும் படித்தபோது எடுக்கப்பட்ட போட்டோ ஒன்றை, நான் வரும் வழியில் சிறுமி ஒருவர் எனக்கு பரிசாக வழங்கினார். அதைப் பார்த்தும் அப்போது உள்ள நினைவுகள் வந்தன. மாணவப் பருவத்திலேயே அண்ணாதுரை கொள்கை மனதில் பதிந்து, நான் சுயமரியாதை காரணாக இப்போது வரை உள்ளேன்.

ஆனால், ஆத்திகருக்கும், பக்தர்களுக்கும் எந்த தீங்கும் விளைவிப்பவன் அல்ல நான். கொள்கை வேறு, நடத்தை வேறு. திருவாரூரில் தேரோட்டம் பற்றி சட்டசபையில் கேட்டபோது, நண்பர் காளிமுத்து திருவாரூரிலே தேரோட்டம் நடைபெறுகிறதா என கேட்டார். தெரியவில்லை என்றேன். "ஏரோட்டும் மக்களெல்லாம் ஏங்கி தவிக்கையிலே, தேரோட்டம் ஏன் உனக்கு தியாகராஜா' என்று பாடினீர்களே. இன்றைக்கு அனுமதிக்கிறீர்களா... இப்போது ஏங்கி தவிக்கவில்லை என்பதால் தேரோட்டம் தேவை என்று கூறினேன்.

மதவாதிகள், ஆத்திகர்கள் கொள்கைகளை எதிர்க்க மாட்டேன் என்று கூறினேன். மக்களிடம் திணிக்காமல் கருத்து கூற வேண்டும் என்பது தான் என்னுடைய வாதம். அதனால் தான், அண்ணாதுரை காலத்திலும் அதன் பிறகு எங்கும் சுய மரியாதை கொள்கையை திணித்து புண்படுத்தவில்லை. ஆட்சி வேறு; கொள்கை வேறு.எதிர்காலத்திலும் புண்படுத்த மாட்டேன். தி.மு.க., கொள்கை கடவுளுக்கு எதிரானதல்ல. கடவுள் வேண்டுமானால் எதிரியாக இருக்கலாம். கடவுளை ஏற்றுக்கொள்கிறீர்களா என்பதல்ல பிரச்னை. கடவுள் ஏற்றுக்கொள்கிற அளவுக்கு நடந்து கொள்கிறேனா என்பது தான்.சேது சமுத்திரத் திட்டத்தை ராமருக்கு ஆகாது என கூறி நிறுத்திவிட்டனர். மீண்டும் தி.மு.க., ஆட்சி வந்தால், இந்த திட்டத்தை தொடர மத்திய அரசிடம் வலியுறுத்துவோம்.

தி.மு.க., ஏதோ சிலருக்கு பதவிகளுக்காக துவங்கப்பட்ட கழகம் அல்ல. தமிழ் மொழிக்கு பெருமை கிடைப்பதற்காக துவங்கப்பட்டது. திராவிட உணர்வை ஒழிக்க சிலர் கங்கணம் கட்டி வருகின்றனர். திராவிடன் என்ற சொல் இன்று நேற்று ஏற்பட்டதல்ல. தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம் ஆகியவற்றில் கூட திராவிடன் என்ற வார்த்தை வருகிறது. இன்று புதியதாக துவங்கப்படும் கட்சிகள் கூட, திராவிட அடைமொழியுடன் துவங்குகின்றனர். திராவிடத்தை மதிக்கின்றனரோ இல்லையோ, நம்மை பழித்து பேசி வருகின்றனர். இந்த இயக்கத்தை அழிக்க நினைப்பவர்கள் அவர்கள் அழிவார்களே தவிர இந்த இயக்கம் அழியாது. எச்சரிக்கையாக அல்ல; அறிவுரையாகச் சொல்கிறேன்.

தேர்தலில் போட்டியிருக்க வேண்டும். வெறுப்பின் காரணமாக போட்டியிருக்க கூடாது. இந்த தொகுதியில் வெற்றி பெற்றாலும், என்னை எதிர்த்து போட்டியிட்டவரை அழைத்து பேசி அரவணைத்து, இந்த தொகுதிக்கு வேண்டியவற்றை செய்து முடிப்பேன். நானே ஒரு வேளை முதல்வராகிவிட்டால், எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்களை வெறுக்க மாட்டேன். அவர்களின் தேவைகளை உணர்ந்து நிறைவேற்றுவேன். எனவே, எனக்கு ஆதரவு அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு முதல்வர் கருணாநிதி பேசினார்.

12வது முறையாக தேர்ந்தெடுத்து அனுப்புங்கள்: முதல்வர் கருணாநிதி வேண்டுகோள்

வேலூர் : ""எங்களை தோற்கடியுங்கள்; நாங்கள் தோற்றாலும் உங்களை மறக்க மாட்டோம்,'' என, வேலூர் பிரசார கூட்டத்தில் முதல்வர் கருணாநிதி உருக்கமாக பேசினார்.

வேலூர் மாவட்டத்தில் 13 தொகுதிகளில் போட்டியிடும் தி.மு.க., கூட்டணி வேட்பாளர்கள் அறிமுக கூட்டம், வேலூர் கோட்டை வெளி மைதானத்தில் நேற்றுமுன்தினம் இரவு நடந்தது. அமைச்சர் துரைமுருகன் வரவேற்றார்.

வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி தமிழக முதல்வர் கருணாநிதி பேசியதாவது: முந்தா நாள் அரசியலுக்கு வந்தவர்கள் எங்களை விமர்சனம் செய்கின்றனர். 75 ஆண்டு காலம் அரசியலில் இருந்து வந்தவன். பல்வேறு சிறைகளில் தண்டனை அனுபவித்தவன். இந்த சமுதாயத்துக்கு இன்னமும் உழைத்துக் கொண்டுள்ளேன். ஆனால், இவர்கள் இப்படி பேசலாமா?
நான் தமிழக முதல்வராக இருக்கின்றேனா, இல்லையா என்ற சந்தேகம் வந்துள்ளது. தமிழக முதல்வர் கருணாநிதி அரசு ஆள்கிறதா, தேர்தல் கமிஷன் ஆள்கிறதா? தேர்தல் கமிஷனுடன் மோத விருப்பமில்லை.அவர்கள் நடுநிலையாக செயல்பட்டால் குறை சொல்ல மாட்டேன். சட்டப்படி, நியாயப்படி நடக்க வேண்டும் என்பதில் எனக்கு மாறுபட்ட கருத்தில்லை.

கருணாநிதி தமிழகத்தை ஆளக்கூடாது என்கின்றனர். அண்ணாதுரை சொன்னபடி, படி அரிசி போடவில்லை. கருணாநிதி ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி போட்டான். சொன்ன வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றி விட்டான்.இவன் தொடர்ந்து ஆட்சிக்கு வந்தால், நம்மால் எப்போதும் ஆட்சிக்கு வர முடியாது என்று சிலர் நினைக்கின்றனர். தமிழகத்தில் இலவச "டிவி', காஸ் அடுப்பு, "108' ஆம்புலன்ஸ் என, பல திட்டங்களை நிறைவேற்றியுள்ளேன். இவனை விட்டு வைத்தால் இன்னும் ஆயிரம் ஆண்டுகள் ஆட்சிக்கு வர முடியாது என்பதால் இவனை அழிக்க நினைக்கின்றனர்.நான், இந்த ஐந்தாண்டுகள் நல்லாட்சி தரவில்லையா? ஆறாவது முறையும் நல்லாட்சி தருவோம்.ஜெயலலிதா ஆட்சியில் அரசு ஊழியர்களை கைது செய்து சிறையில் அடைத்தார். என்னை, நள்ளிரவு 12 மணிக்கு கைது செய்தார். 12 ஆயிரம் சாலைப் பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பினார்.

நான் கொண்டு வந்த பல்வேறு திட்டங்களை சிதைத்து விட்டார்.இத்தகைய ஆட்சியை தொடர ஓட்டளிக்கும்படி ஜெயலலிதா கேட்கின்றார். இந்த ஆட்சி தொடர வேண்டுமா? இந்த ஆட்சி மீண்டும் வந்தால் நான் கொண்டு வந்த திட்டங்கள் அனைத்தும் செய்ய முடியாமல் போகும். ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சத்துணவில் முட்டை போட மாட்டார். அதனால், மாணவர் முட்டை போடும் நிலைமை வரும். இதை ஏற்றுக் கொள்வதாக இருந்தால் ஜெயலிதாவை ஆதரியுங்கள். எங்களை தோற்கடியுங்கள். நாங்கள் தோற்றாலும், உங்களை மறக்க மாட்டோம்.இவ்வாறு கருணாநிதி பேசினார்.

நாங்கள் தோற்றாலும் உங்களை மறக்க மாட்டோம் : முதல்வர் கருணாநிதி உருக்கம்

சென்னை: மு.க.ஸ்டாலின்தான் என்னுடைய அரசியல் வாரிசு என்பது கேள்விக் குறியாக வாய்ப்பில்லை என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

சிஎன்என்-ஐபிஎன் ஆங்கிலத் தொலைக்காட்சிக்கு அவர் அளித்துள்ள சிறப்புப் பேட்டி விவரம்:

எனது சாதனைகளை நம்புகிறீர்களா இல்லையா?:

கேள்வி: இந்தத் தேர்தலில் தமிழக வாக்காளர்கள் முன் திமுக வைக்கும் கேள்விகள் என்ன?

கருணாநிதி: திமுக அரசு 1967ம் ஆண்டு முதல் இதுவரையில் ஆற்றியுள்ள சாதனைகளில் உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதா?, இல்லையா?. நாங்கள் நம்பகமானவர்கள் என்பதை நீங்கள் புரிந்து கொண்டிருக்கிறீர்களா?. இல்லையா?, நாங்கள் அறிவித்த திட்டங்கள், வாக்குறுதிகள் ஆகியவற்றை நிறைவேற்றியிருக்கிறோமா?, இல்லையா?. அப்படி நிறைவேற்றக் கூடிய அளவுக்கு ஆற்றலும், அறிவும் அதே நேரத்தில் அக்கறையும் உள்ளவர்கள் நாங்கள் என்பதை நீங்கள் உணருகிறீர்களா?, இல்லையா?. தமிழ்நாட்டில் உள்ள ஏழை-எளிய மக்களுக்கு பாடுபடுகின்ற அரசு இது என்பதை, அடித்தட்டு மக்களுக்காக உழைக்கின்ற அரசு இது என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்களா?, இல்லையா?. இத்தகைய கேள்விகளைத்தான் நான் வாக்காளப் பெருமக்களிடம் முன் வைக்க விரும்புகிறேன்.

இலவசங்கள் எதற்காக?:

கேள்வி: தேர்தல் அறிக்கையில் பல இலவசத் திட்டங்களை அறிவித்துள்ளீர்கள். 2006ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் இலவச கலர் தொலைக் காட்சி பெட்டிகளை வழங்கினீர்கள். தற்போது லேப்-டாப், கிரைண்டர், மிக்ஸி வழங்கப் போவதாக அறிவித்திருக்கிறீர்கள். தேர்தலில் வெற்றித் தோல்வியை நிர்ணயிப்பது இலவச திட்டங்கள் மட்டும் தானா?

கருணாநிதி: இலவச சலுகைகள் என்பது வாக்குகளைப் பெறுவதற்காக அல்ல. ஏழை-எளிய மக்கள் தமிழகத்தில் ஏராளமாக இருக்கிறார்கள். அவர்களை வாழ வைக்க வேண்டும் என்ற குறிக்கோள் திமுக அரசுக்கு இன்று, நேற்றல்ல- இந்த இக்கத்தை தொடங்கியதே அந்த ஏழைகளை வாழ வைப்பதற்காகத்தான். ஏழையின் சிரிப்பிலே இறைவனைக் காண்போம் என்பது தான் எங்கள் தலைவர் அண்ணாவின் முழக்கம். எழைகளின் முகங்களிலே அந்தச் சிரிப்பைக் காண்பதற்காகத்தான் நாங்கள் எடுத்துக் கொண்டிருக்கின்ற முயற்சிகளில் இந்த இலவச திட்டங்களும் ஒன்றாகும்.

தேர்தலுக்குப் பின்னும் கூட்டணி தொடருமா?:

கேள்வி: கட்சிகளிடையே தொகுதி ஒதுக்கீடு பற்றிய பேச்சுவார்த்தை நடந்தபோது காங்கிரசுக்கும், திமுகவிற்கும் இடையே கருத்து மாற்றங்கள் ஏற்பட்டன. தேர்தலுக்குப் பிறகும் இந்தக் கூட்டணி தொடரும் என்ற நம்பிக்கை உங்களுக்கு இருக்கிறதா?

கருணாநிதி: இரண்டும் அகில இந்திய அளவில் இல்லாவிட்டாலும், இந்திய அளவில் காங்கிரசும், தமிழ்நாட்டளவில் திமுகவும் பெரிய கட்சிகள் என்பதை நாங்கள் பரஸ்பரம் உணர்ந்தவர்கள். எங்களுக்கு ஒரு சில கொள்கைகள், லட்சியங்கள் இருக்கின்றன. அவைகளை நிறைவேற்றுவதற்காக எங்களுக்கு மத்திய அரசின் உதவி தேவைப்படுகிறது. உதாரணமாக தமிழைச் செம்மொழியாக ஆக்க வேண்டும் என்பதற்காக நூற்றாண்டு காலத்திற்கு முன்பு நாங்கள் திட்டம் வகுத்து- பரிதிமாற்கலைஞர் என்ற சூரிய நாராயண சாஸ்திரிகள் தமிழ் செம்மொழியாகாக வேண்டுமென்பதற்காகக் குரல் கொடுத்தார்.

அந்தக் குரல் என்ன ஆகுமோ என்ற அளவுக்கு இடையில் வந்த ஆட்சியாளர்கள் அதைப் பற்றி கவலைப்படாமல் இருந்தபோது, சோனியா காந்தி வந்து தான் அந்தக் கோரிக்கையை நிறைவேற்றித் தர அவர்களே முன்னின்று முயற்சித்து மறைந்த கல்வி அமைச்சர் அர்ஜுன் சிங் உதவியோடு தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து பெற்று தந்தார்கள்.
ஆகவே நாங்கள் மாறுபடுவதாக இருந்தால், எங்களுக்கும் மத்தியிலே அமைகிற அரசுக்கும் மாறுபட்ட கொள்கைரீதியாக வித்தியாசங்கள் இருக்கலாம், அதாவது திட்டங்கள் தமிழகத்திற்கு இன்னும் நிறைய வேண்டும் என்று கருணாநிதி போராடுவதின் காரணமாக ஏற்படுகிற மாறுபாடுகள் இருக்கலாம்.

ஆனால் அடிப்படைக் கொள்கைகளில் எங்களுக்கும் அவர்களுக்கும் அதாவது மதவாதத்தை ஒழிப்பது, இந்தியாவில் சமதர்ம சமுதாயத்தை உருவாக்குவது போன்றவற்றில் நாங்கள் இருவரும் மாறுபட்டவர்கள் அல்ல.

கூட்டணி ஆட்சியா?:

கேள்வி: இந்த முறை திமுக தேர்தலில் இதுவரை இல்லாத அளவிற்கு மிகக் குறைவாக 121 இடங்களில் தான் போட்டியிடுகிறது. தேர்தலில் திமுக வென்றாலும் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமையப் போகிறது என்பதற்கான முன் அறிவிப்பதாக இதனை எடுத்துக் கொள்ளலாமா?

கருணாநிதி: அரசியல் மாற்றங்களைப் பொறுத்தவரையில் ஒரே கட்சியின் ஆட்சியா? அல்லது கூட்டணி ஆட்சியா? என்பதை தேர்தல் முடிந்த பிறகு தான் சொல்ல முடியும்.
மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆளுங்கட்சியாக இருந்தாலும், தேர்தல் முடிவு வருவதற்கு முன்பே கூட்டணி அமைத்து அந்தக் கூட்டணியில் பல கட்சிகள் இணைந்து- இடதுசாரிக் கட்சிகள், பார்வர்டு பிளாக் எல்லாம் இடம் பெற்று,அரசு அமைக்கிறார்கள்.

அதே நேரத்தில் தமிழ்நாட்டு மக்களும் மற்றவர்களும் தமிழகத்தில் ஒரே கட்சியின் ஆட்சி நீடிக்க வேண்டுமென்று தான் கருதுவார்கள் என்று எண்ணுகிறேன். ஒரு வேளை 'வோட்டிங் பேட்டன்' (voting pattern) என்று சொல்வார்களே, அதிலே மாற்றம் ஏற்பட்டு கூட்டணி ஆட்சி அமைந்தால் தான் ஒரு அரசு நிலைத்திருக்க முடியும் என்ற சூழ்நிலை தோன்றினால் நாங்கள் அப்போது மற்ற கட்சிகளோடு கலந்து பேசி அதைத் தீர்மானிப்போம்.

அரசியல் வாரிசு முக ஸ்டாலின்தான்:

கேள்வி: 12வது முறையாக வேட்பாளராக நீங்கள் போட்டியிடுகிறீர்கள். இந்தத் நேரத்தில் உங்கள் மகன், துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் தான் உங்களுடைய அரசியல் வாரிசு என்பதில் ஏதாவது கேள்விக்குறி இருக்க முடியுமா?

கருணாநிதி: எந்த கேள்விக் குறிக்கும் இடம் இல்லாமல் வளர்ந்தவர் தான் மு.க. ஸ்டாலின். நான் அரசியலில் நுழைந்து அறிஞர் அண்ணா தலைமையில் ஒரு அரசியல் கட்சியின் முக்கிய பொறுப்பை ஏற்றுக் கொள்பவனாக இருந்து, பொருளாளராக அண்ணா அவர்களால் நியமிக்கப்பட்டு, தேர்ந்தெடுக்கப்பட்டு, அந்த பொறுப்பை நான் எப்படி நிறைவேற்றினேனோ, அதற்கு அண்ணா காட்டிய அன்பும் என்னிடம் அவர்கள் வைத்த நம்பிக்கையும், அதற்கு கொஞ்சமும் குந்தகம் இல்லாமல் எப்படி நான் நடந்து கொண்டேனோ, அதைப் போலவே என்னுடைய தலைமையில் மு.க.ஸ்டாலின் தொண்டாற்றி வருகிறார்.

என்னிடத்தில் நம்பிக்கை வைத்திருக்கின்ற கழகத் தோழர்கள் கழகத்திலே இருக்கின்ற முன்னணியினர் பொதுக்குழு உறுப்பினர்கள் எல்லாம் மு.க.ஸ்டாலினிடமும் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். எனவே ஸ்டாலின் மீதான நம்பிக்கை குறித்து கேள்விக் குறி எழ எந்தவித நியாயமும் இல்லை.

திமுக சங்கர மடம் அல்ல!:

கேள்வி: ஸ்டாலினை அடுத்த தலைவராக திமுகவில் அனைவரும் ஏற்பார்களா?

கருணாநிதி: திராவிட முன்னேற்ற கழகம் ஒரு ஜனநாயக இயக்கம், அடுத்தது யார் என்ற கேள்விக்கு நாமே ஒருவரைப் பிடித்து வைத்து, இவர் தான் அடுத்தது என்று சொல்லக்கூடிய இயக்கம் அல்ல இது. அதாவது மடாதிபதிகள் நடத்துகின்ற மடம் அல்ல இது. மடாதிபதி என்றால், உதாரணம் சொல்ல வேண்டுமேயானால் சங்கரமடம் இருக்கிறது அல்லவா, அந்த மடத்திலே பெரியவர் சங்கராச்சாரியார் இருந்து, தனக்கு பின்னர் இவர் தான் என்று ஒருவரை அடையாளம் காட்டி விட்டு சென்றார். அதை அந்த மடத்தை சேர்ந்தவர்கள் எல்லோரும் ஏற்றுக் கொண்டார்கள். அதைப் போல திராவிட முன்னேற்ற கழகம் ஒரு மத ஸ்தாபனம் அல்ல. இது ஜனநாயகரீதியான ஸ்தாபனம். ஜனநாயகத்தில் தலைவர்களை எப்படித் தேர்ந்தெடுக்கிறார்களோ, அதை போல தான் இயக்கத் தோழர்கள், கழகச் செயலாளர்கள் எல்லாம் சேர்ந்து இவர் இந்தப் பொறுப்பு வகிக்க தகுதியானவர் என்று கருதினால் அவர்கள் தேர்ந்தெடுப்பார்கள்.

யார்-யாரோ சேர்ந்து கொண்டு சில குடும்பங்கள் உருவாகின்றன:

கேள்வி: நீங்கள் குடும்ப அரசியலை ஊக்குவிக்கிறீர்கள் என்ற குற்றச்சாட்டு உள்ளதே?

கருணாநிதி: எனக்கு குடும்பம் இருப்பது தான் பெரிய தொல்லையே. என் குடும்பத்தைப் பற்றி பேசுபவர்கள், முதலில் அவர்களுக்கு குடும்பம் இருக்கிறதா இல்லையா என்பதைப் பார்க்க வேண்டும். குடும்பம் நடத்துவது என்றால் திருமணமாகி ஆணும், பெண்ணும் சேர்ந்து அவர்களுக்கு பிறக்கின்ற பிள்ளைகள், அண்ணன், தம்பி இவர்கள் தான் குடும்பம் என்று அர்த்தம் அல்ல.

துணைக்கு யார்-யாரோ சேர்ந்து கொண்டு சில குடும்பங்கள் உருவாகின்றன. நான் அப்படிப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவன் அல்ல. ஒரு நேர்மையான குடும்பத்தைச் சேர்ந்தவன்.

கலைஞர் டிவி விவகாரம்-ஊழலே அல்ல:

கேள்வி: ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டு ஊழலில் சிபிஐ உங்கள் மகளையும், மனைவியையும் விசாரித்ததோடு கலைஞர் தொலைக்காட்சி நிறுவனத்தின் கணக்குகளையும் விசாரித்துள்ளது. அதனால் எதிர்க்கட்சிகள் உங்களுக்கு தெரியாமல் எதுவும் இதிலே நடைபெற்றிருக்க முடியாது என்று சொல்கிறார்கள். இதற்கு என்ன பதில் கூறுகிறீர்கள்?

கருணாநிதி: இது ஊழலே அல்ல. இதைப் பற்றி பகிரங்கமாக எங்கள் பத்திரிகையிலே விளக்கம் வெளியிட்டுள்ளோம். கலைஞர் டி.வியில் என் பெயர் இடம் பெற்றிருக்கிறதே தவிர எனக்கு அதில் எந்தவிதமாக உரிமையும் கிடையாது. அதில் என்னுடைய மகள் (உதவியாளரிடம் விசாரித்து விட்டு) 20 சதவீதம் பங்குதாரர். என்னுடைய மனைவி தயாளு 60 சதவிகித பங்குதாரர்.

சரத்குமார் 20 சதவிகித பங்குதாரர். இந்த விவரத்தையே நான் விசாரித்து விட்டு தான் கூறுகிறேன் என்பதை நீங்கள் பார்க்கலாம். கலைஞர் டி.வி. கருணாநிதிக்கு சொந்தமானதல்ல. கருணாநிதி குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பேர் அதிலே பங்குதாரர்களாக இருக்கிறார்கள். இந்தக் குற்றச்சாட்டு எழுந்தவுடனேயே அதைப் பற்றி பத்திரிகைகளில் சரத்குமார் ஒரு விளக்க அறிக்கையினைத் தந்திருக்கிறார்.

அது எல்லா பத்திரிகைகளிலும் வெளிவந்திருக்கிறது. ஒரு கடனை அடைப்பதற்காக ஒருவரிடம் கடன் பெற்றார்கள். பிறகு பெற்ற கடனை வட்டியோடு திருப்பிக் கொடுத்து விட்டார்கள். அதற்கான வருமான வரி தொகை எல்லாம் தரப்பட்டு அந்த ஆதாரங்களையும் காட்டியிருக்கிறார்கள். இதற்குப் பிறகு அது எப்படி ஊழலாகும் என்று எனக்குத் தெரியவில்லை.

பம்பையடிக்கும் அரசியல் பூசாரிகள்:

கேள்வி: இந்த ஊழல் குற்றச்சாட்டால் திமுகவின் பெயருக்கு களங்கம் ஏற்பட்டு விட்டதா?

கருணாநிதி: சைபர், சைபர், சைபர், சைபர் என்று போட்டு இவ்வளவு பெரிய ஊழல் நடந்திருக்கிறது என்று சொல்லும் போது ''பல்லுக்கு பல் இரு காதம், பல்லிடுக்கு மூன்று காதம்'' என்று அந்த காலத்தில் பூசாரிகள் பம்பை அடிப்பார்கள். அதைக் கேட்டு இன்னொருவர் ஆமாம், ஆமாம் என்பார். மக்களும் அதை கேட்டு தலையட்டிக் கொண்டிருப்பார்கள்.

'காதம்' என்றால் பத்து மைல் தொலைவு. பல்லுக்கு பல் இரு காதம் என்றால் இருபது மைல் தூரம். பல்லிடுக்கு மூன்று காதம் என்றால் முப்பது மைல். அந்த அளவிற்கு பல்லுக்கிடையே இடைவெளி என்றால் வாய் எந்த அளவிற்கு இருக்கும் என்பதையெல்லாம் நினைத்துப் பார்க்காமல், ஆமாம், ஆமாம் என்று ஒப்புக் கொண்டு பூசாரி பம்மை அடிப்பதைப் போல பாமர மக்களை ஏமாற்றிட ஒரு சில அரசியல்வாதிகள் பம்பை அடிக்கிறார்கள்.

அது தான் உண்மை என்று வேறு சிலர் பம்பை அடிக்கிறார்கள். அந்த விஷயத்தைப் பற்றி நான் விரிவாக, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடைபெறுகின்ற காரணத்தால் எதுவும் சொல்ல விரும்பவில்லை. ஊழலா, இல்லையா என்பதைக் கண்டுபிடித்துச் சொல்ல வேண்டியது உச்ச நீதிமன்றம். அதிலே நான் தலையிட விரும்பவில்லை.

அந்த நிறுவனத்துக்கு கடனைக் கொடுத்தவர்கள் மீது வழக்கு இருக்கலாம். கடன் வாங்கிய பணம் ஊழல் பணம் என்று சொல்வது முறையல்ல. அது நீண்ட விசாரணைக்கு பிறகுதான் தெரியும்.

இவ்வாறு தனது பேட்டியில் கருணாநிதி கூறியுள்ளார்.

ஸ்டாலின்தான் அரசியல் வாரிசு என்பது கேள்விக்குறியாக வாய்ப்பில்லை!-கருணாநிதி

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா முதல்வராவார் என்று நான் கூறவில்லையென ம.தி.மு.க. பொதுச்செயலர் வைகோ பேசினார்.

ஈரோட்டில் ம.தி.மு.க., மாவட்டக் குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய ம.தி.மு.க., பொது செயலர் வைகோ,

அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து ம.தி.மு.க. வெளியேற்றப்பட்டுள்ளது. அ.தி.மு.க.வின் இந்தச் செயல் அந்தக் கட்சித் தொண்டர்களுக்கே மிகுந்த வேதனையை அளித்துள்ளது.

கடந்த 5 ஆண்டுகளாக அ.தி.மு.க. பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெறும் என்றுதான்

கூறினேன். ஜெயலலிதா முதல்வராவார் என்று கூறவில்லை. ம.தி.மு.க. உண்மையான ஜனநாயகக் கட்சி. இந்த முடிவின் மூலம் மக்கள் நல்லெண்ணத்தை கட்சி பெற்றுள்ளது.

இந்த காலகட்டத்தில் படித்தவர்களையும், கட்சி மீது நல்லெண்ணம் கொண்டவர்களையும் பெருமளவில் கட்சியில் சேர்க்க வேண்டும். ஜனநாயக முறைப்படி கட்சியை வலுப்படுத்த தொண்டர்கள் அயராது உழைக்க வேண்டும் என்றார்.

ஜெ. முதல்வராவார் என்று கூறவில்லை: வைகோ

திருவனந்தபுரம் : "சட்டசபை தேர்தலில் கேரள முதல்வர் அச்சுதானந்தன் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலர் பினராயி விஜயனும் போட்டியிடக் கூடாது' என, கட்சி செயற்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி, களத்தில் குதித்துள்ளது.
தேர்தலில் கட்சி வேட்பாளர்கள் மற்றும் இக்கட்சிக்கு ஆதரவு தரும் சுயேச்சை வேட்பாளர்கள் உட்பட 93 தொகுதிகளில், மா.கம்யூ., கட்சி போட்டியிட உள்ளது. இத்தேர்தலில், தற்போது மாநில முதல்வராக உள்ள வி.எஸ். அச்சுதானந்தன் போட்டியிடுவாரா என்ற கேள்வி, பல நாட்களாக கட்சித் தொண்டர்கள் உட்பட மாநில வாக்காளர்களிடம் இருந்து வந்தது.
இதுகுறித்து அவரிடம் கேட்ட போதெல்லாம், "நான் தேர்தலில் போட்டியிடவேண்டுமா, வேண்டாமா என்பது குறித்து கட்சி தான் முடிவு செய்யும்' என, கூறி வந்தார். இந்நிலையில், ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள தொகுதிகளில் யார் யாரை நிறுத்துவது என்ற பட்டியலை மாவட்ட கட்சி நிர்வாகிகள் தயாரித்து அனுப்ப, கட்சி மேலிடம் கேட்டுக் கொண்டது.
திருவனந்தபுரத்தில் நேற்று, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலர் பிரகாஷ் கராத் தலைமையில், மாநில செயற்குழுக் கூட்டம் நடந்தது. நான்கு மணி நேரம் நீடித்த இக்கூட்டத்தில் வி.எஸ். அச்சுதானந்தன், பினராயி விஜயன் ஆகியோர் தேர்தலில் போட்டியிடக் கூடாது என தடை விதித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அவர்கள் போட்டியிடாததால், தற்போதைய உள்ளாட்சித் துறை அமைச்சர் கொடியேறி பாலகிருஷ்ணன், இடது ஜனநாயக முன்னணிக்கு தலைமை தாங்கி தேர்தலை வழி நடத்துவார் என்றும், அவர், தலசேரி தொகுதியில் நிறுத்தப்படுவார் என்றும் தீர்மானிக்கப்பட்டது.

கேரளாவில் முதல்வர் போட்டியிட தடை : சட்டசபை தேர்தலில் திடீர் திருப்பம்

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் தொடர்புடைய சாதிக் பாட்சா தற்கொலை சம்பவம் மற்றும் அ.தி.மு.க., வேட்பாளர் பட்டியல் வெளியீடு உள்ளிட்ட அடுத்தடுத்த சம்பவங்களால், தி.மு.க., வட்டாரம் அதிர்ச்சியடைந்துள்ளது. தி.மு.க., வேட்பாளர் பட்டியலை இறுதி செய்ய நேற்று காலை மாமல்லபுரம் சென்ற முதல்வர் கருணாநிதி நேற்று மாலையே வீடு திரும்பினார்.
ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள, முன்னாள் மத்திய அமைச்சர் ராஜாவின் நண்பர் சாதிக் பாட்சா, தேனாம்பேட்டையில் உள்ள தனது வீட்டில் நேற்று காலை தற்கொலை செய்து கொண்டார். சி.பி.ஐ., விசாரணை வளையத்தில் சிக்கியுள்ள சாதிக் பாட்சாவின் தற்கொலை சம்பவம், தி.மு.க., வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன் அண்ணா அறிவாலயத்தில் உள்ள, "கலைஞர் டிவி' அலுவலகத்தில் சி.பி.ஐ., திடீர் சோதனை நடத்தி பரபரப்பு ஏற்படுத்தினர். அதன் தொடர்ச்சியாக, சாதிக் பாட்சா தற்கொலை சம்பவம் நடந்துள்ளது, சட்டசபை தேர்தலில் பின்னடைவை ஏற்படுத்தும் என தி.மு.க., தலைமை அதிர்ச்சியடைந்துள்ளது.
இந்த அதிர்ச்சிக்கிடையே, அ.தி.மு.க., போட்டியிடும் 160 தொகுதிகளின் வேட்பாளர் பட்டியலை அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா நேற்று மாலை திடீரென அறிவித்தார். ஸ்ரீரங்கத்தில் ஜெயலலிதா போட்டியிட உள்ளதாகவும், மதுரையில் நாளை (வெள்ளி) ஜெயலலிதா, பிரசாரத்தை துவங்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தி.மு.க., வேட்பாளர் பட்டியலை இறுதி செய்வதற்காக, நேற்று காலை மாமல்லபுரம் சென்ற முதல்வர் கருணாநிதிக்கு இந்த இரு தகவல்களும் தெரிவிக்கப்பட்டதால் அவர், "அப்செட்' ஆனதாக கூறப்படுகிறது. இதையடுத்து நேற்று மாலை அவர் தனது கோபாலபுரம் வீட்டுக்கு திரும்பி, முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.

கருணாநிதி அப்செட்

இதுவரை தொடர்ந்து 11 முறை தேர்தல் களம் கண்டு, அத்தனை முறையும் வென்று, நீண்ட ஜனநாயகப் பயணத்தை தொடர்ந்து வரும் தி.மு.க., தலைவர் கருணாநிதி, 12வது முறையாக மீண்டும் தேர்தல் களம் காண்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

"இது தான் நான் களமிறங்கும் கடைசி தேர்தல்' என்று, 2001 பிப்ரவரியில் நடந்த கட்சிப் பொதுக்குழுவில் உருக்கமுடன் குறிப்பிட்டார் கருணாநிதி. உடனே பொதுக்குழு உறுப்பினர்கள், "அப்படி சொல்லக் கூடாது' என்று குரல் எழுப்பினர். அவர்களின் கோரிக்கை ஏற்கப்பட்டு, அந்தத் தேர்தலில் மட்டுமல்லாது, அடுத்து வந்த 2006ம் ஆண்டு சட்டசபை தேர்தலிலும் போட்டியிட்டு வென்றார். முதல்வராகவும் அரியணை ஏறினார். ஆனால், தற்போதைய நிலைமை அப்படி இல்லை. "தமிழக முதல்வர் என்று என்னை அழைப்பதை விட, தி.மு.க., தலைவர் என்று அழைப்பதையே பெருமையாக கருதுகிறேன்' என்றெல்லாம், பல முறை தனது எண்ணத்தை வெளிப்படுத்தியுள்ளார். கட்சியை வழிநடத்தவும், ஆட்சியை நடத்தவும் அழகிரி, ஸ்டாலின் என இருவரும் தயாராகிவிட்ட நிலையில், முதல்வர் இந்த முடிவை எடுப்பதற்கான சூழல் கனிந்துவிட்டதாகவே பலரும் நினைத்தனர். லோக்சபா தேர்தல் நேரத்திலும் பிரசாரத்திற்கான நாட்களை தி.மு.க., தலைவர் குறைத்துக்கொண்டார். ஐந்தாண்டுகளில் நடந்த எந்த இடைத்தேர்தலிலும் பிரசாரத்துக்குச் செல்லவில்லை - பென்னாகரத்தில் நடந்த ஒரே ஒரு பொதுக்கூட்டத்தைத் தவிர.

அவரது உடல்நிலை முன்னைப்போல் ஒத்துழைக்காததை அவரது குடும்பத்தினரும் கவலையோடு கவனித்து வந்தனர். இந்த சட்டசபைத் தேர்தலைப் பொறுத்தவரை, இளைஞர்களுக்கு, மூத்தவர்கள் வழிவிட வேண்டும் என்ற கோஷம் தி.மு.க.,வில் எழுந்துள்ளது. அவர்களுக்கு முன்மாதிரியாக, முதல்வர் கருணாநிதி, இந்தத் தேர்தலில் போட்டியிட மாட்டார் என்று கருத்து வலுப்பட்டுள்ளது. அவரது இந்த ஆலோசனைக்கு, அவரது குடும்ப சூழலும் ஒரு காரணமாக முன்வைக்கப்படுகிறது. காங்கிரசுடனான கூட்டணியில் ஏற்பட்ட கசப்பான சூழ்நிலையையும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது. "ஓய்வு என்பது வேலை செய்து கொண்டிருப்பது தான் என உணர்பவர்களே, பொதுத் தொண்டில் ஊக்கமுடையவர்களாக இருக்க முடியும்' என்பது தி.மு.க., தலைவரின் வார்த்தைகள். தேர்தல் களம் கண்டு, தொடர்ந்து வேலை செய்துகொண்டிருப்பதா அல்லது அடுத்த தலைமுறைக்கு வாய்ப்பு கொடுத்து, முதுகெலும்பாய் நிற்பதா என்பது, முதல்வரின் முடிவில் இருக்கிறது.

தயாராகிறது திருவாரூர்: இந்த சட்டசபைத் தேர்தலில் முதல்வர் போட்டியிட மாட்டார் என்றே, அவரை நன்கு அறிந்த வட்டாரங்கள் சொல்கின்றன. மூத்த தலைவர்களின் நெருக்குதல் காரணமாக, ஒருவேளை அவர் போட்டியிட்டால், திருவாரூரைத் தேர்ந்தெடுக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதை வலியுறுத்தி, ஏராளமானோர் விருப்ப மனுவும் தாக்கல் செய்துள்ளனர். தி.மு.க., மேல்மட்டத்தில் சிலரிடம் விசாரித்தபோது, "அடிப்படைப் பணிகள் எப்போதோ துவங்கிவிட்டன. சொந்தத் தொகுதியில் முதல்வர் களமிறங்குவது நிச்சயம்' என்கின்றனர்.

சட்டசபை தேர்தலில் முதல்வர் போட்டியில்லை?

சென்னை : ""ஓய்வு எடுக்க வேண்டும் என டாக்டர்கள் சொன்னதால், ஜெயலலிதா ஓய்வெடுப்பதாகக் கூறுகின்றனர். அந்த ஓய்வு, நிரந்தர ஓய்வாகத்தான் அவருக்கு இருக்கப்போகிறது,'' என முதல்வர் கருணாநிதி பேசினார்.

எம்.ஜி.ஆர்., அ.தி.மு.க.,வில் கொள்கை பரப்புச் செயலராகவும், ஆட்சி மன்றக் குழு உறுப்பினராகவும் இருந்து பா.ஜ.,வில் இணைந்தவர் கவிஞர் காசி முத்துமாணிக்கம். அக்கட்சியில் மாநில இலக்கிய அணித் தலைவர் உட்பட பல்வேறு பதவிகளை வகித்த காசி முத்துமாணிக்கம், 2,000 ஆதரவாளர்களுடன், முதல்வர் கருணாநிதி முன்னிலையில் நேற்று தி.மு.க.,வில் இணைந்தார். தி.மு.க., தலைமை அலுவலகமான சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்த இவ்விழாவில் கவிஞர் காசி முத்துமாணிக்கம் பேசும் போது, "எல்லாரும் தாய் கழகத்தில் இணைவர். நான் என் தந்தை கழகத்தில் இணைந்திருக்கிறேன். எனது தந்தை, புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் முதல்வர் கருணாநிதி பங்கேற்ற பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தவர். அந்த கட்சியில் சமீபகாலமாக நடைமுறைகள், நடவடிக்கைகள் சரியில்லை. அந்த அதிருப்தியால் தான் இன்று தி.மு.க.,வில் இணைந்திருக்கிறோம்' என்றார்.

புதிதாக கட்சியில் இணைந்தவர்களை வரவேற்று முதல்வர் கருணாநிதி பேசியதாவது: கவிஞர் காசி முத்துமாணிக்கம் இன்று தி.மு.க.,வில் இணைந்ததாகச் சொன்னார்கள். புதிதாக கட்சியில் இணைந்தார் என்ற உணர்வும் வரவில்லை. எந்த கட்சியில் அவர் இருந்தாலும், எங்களிடம் நெருக்கமாகத்தான் இருந்தார். அதனால், எங்களிடமே இருந்து எங்களிடம் வந்து சேர்ந்திருக்கிறார் என்ற உணர்வு தான் ஏற்படுகிறது. ஓய்வு எடுக்க வேண்டும் என்று டாக்டர்கள் சொன்னதால், ஜெயலலிதா ஓய்வெடுப்பதாகச் சொல்கின்றனர். அந்த ஓய்வு, நிரந்தர ஓய்வாகத்தான் அவருக்கு இருக்கப் போகிறது. சொத்து குவிப்பு வழக்கில் விரைவில் தீர்ப்பு வரும். பா.ஜ.,வினர் ஒன்றரை வருடம் காத்திருந்து தி.மு.க.,வில் இணைந்ததாகச் சொன்னார்கள். நாங்களும் அவர்கள் வருகைக்காக ஒன்றரை ஆண்டுகள் காத்திருந்தோம். இவ்வாறு முதல்வர் கருணாநிதி பேசினார்.

ஜெ., எடுக்கும் ஓய்வு நிரந்தரமாக இருக்கப்போகிறது: முதல்வர் பேச்சு

எஸ்.பி., மற்றும் டி.ஐ.ஜி., பதவி உயர்வு பட்டியலில் உள்ள ஐ.பி.எஸ்., அதிகாரிகளுக்கு, வரும் சட்டசபை தேர்தலை மனதில் வைத்து பணியிடம் ஒதுக்கப்பட உள்ளது. அவர்களில், சட்டம் ஒழுங்கு பணியிடம் இல்லாத, "நான் சென்சிடிவ்' இடத்தில் இருப்பவர்களை, அந்த இடத்திலயே பதவி உயர்வு அளித்து பணியமர்த்தும் திட்டமும் உள்ளதாக தெரிகிறது.

தமிழகத்தில் சமீபத்தில், ஐ.ஜி., யாக இருந்த, எட்டு பேர் கூடுதல் டி.ஜி.பி.,யாக பதவி உயர்த்தப்பட்டனர். அடுத்தபடியாக, பதவி உயர்வுக்காக டி.ஐ.ஜி., டூ ஐ.ஜி., மற்றும் எஸ்.பி., டூ டி.ஐ.ஜி., ரேங்கில் உள்ளவர்கள் காத்திருக்கின்றனர். அவர்களுக்கு பதவி உயர்வு அளிப்பதற்காக, அரசுத்துறையில் உள்ள உயர்மட்ட அதிகாரிகள் கூட்டம், கடந்த செவ்வாய் முடிவடைந்தது. அதில், பதவி உயர்வுக்காக காத்திருக்கும், ஐ.பி.எஸ்., அதிகாரிகளுக்கு, எந்தெந்த இடங்களை ஒதுக்கலாம் என, ஆலோசித்து இறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. டில்லியில் நடைபெறும் முதல்வர்கள் மாநாட்டில் பங்கேற்க, முதல்வர் கருணாநிதி, தலைமைச் செயலர் மாலதி ஆகியோர் செல்கின்றனர். அவர்கள் சென்னை திரும்பிய பின், பதவி உயர்வு பட்டியல், "ரிலீஸ்' செய்யப்பட உள்ளது.

இதற்கிடையே, அரசில், "பவர் புல்லாக' இருக்கும் சில, ஐ.பி.எஸ்., அதிகாரிகளின் புதிய இடங்கள் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னை மாநகர மத்திய குற்றப்பிரிவு துணை போலீஸ் கமிஷனராக ஸ்ரீதர் உள்ளார். அவரை இணை கமிஷனராக நியமித்து, அவருக்கு கீழ் மத்திய குற்றப்பிரிவு, நுண்ணறிவுப்பிரிவு, தலைமைச் செயலக பாதுகாப்பு பிரிவுகள் கூடுதலாக கொடுக்கப்படும் என தெரிகிறது. மத்திய சென்னை இணை கமிஷனர் தாமரைக்கண்ணன், ஐ.ஜி.,யாக பதவி உயர்வு பெற்று, சி.பி.சி.ஐ.டி.,க்கு செல்ல உள்ளார். காலியாகவுள்ள அந்த இடத்தில், அடையாறு துணை கமிஷனராக உள்ள சாரங்கன் உட்பட, அவரது, "பேட்ஜ்' அதிகாரிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுவதாக தகவல் வெளியாகியுள்ளது. சட்டம் ஒழுங்கை தவிர, "நான் சென்சிடிவ்' பணியிடத்தில் உள்ளவர்களை, அவர்கள் பணியாற்றும் இடத்திலேயே பதவி உயர்வு அளித்து நியமிக்கும் திட்டமும் பரிசீலனையில் உள்ளது.

டி.ஐ.ஜி., டூ ஐ.ஜி.,பதவி உயர்வு லிஸ்ட்: நேரடி ஐ.பி.எஸ்., அதிகாரிகளாக 1993ம் ஆண்டு பேட்ஜில் தேர்வாகி, டி.ஐ.ஜி., யாக, அசோக்குமார்தாஸ், சைலேஷ்குமார் யாதவ் உள்ளனர். இதே பேட்ஜில், நேரடி டி.எஸ்.பி.,யாக தேர்வாகி, பதவி உயர்வில் டி.ஐ.ஜி.,யாக உள்ள ஆறுமுகம், மாசானமுத்து, கண்ணப்பன், அருணாச்சலம், பாலசுப்பிரமணி, தாமரைக் கண்ணன் ஆகியோர் விரைவில் ஐ.ஜி.,யாக பதவி உயர்த்தப்பட உள்ளனர். இந்த, "லிஸ்ட்' ரெடியாகி வருகிறது.

எஸ்.பி., டூ டி.ஐ.ஜி.,பதவி உயர்வு லிஸ்ட்: தமிழக நேரடி ஐ.பி.எஸ்., அதிகாரிகளாக 1997ம் ஆண்டு தேர்வாகி, துணை போலீஸ் கமிஷனராக ஆயிஷ்மணி திவாரி, மகேஷ்வர் தியாள், சுமித் சரன், அபின் தினேஷ் மோடக், சஞ்சய்குமார் உள்ளனர். இவர்கள் ஐந்து பேரும் மத்திய அரசு பணியில் உள்ளதால், அங்கேயே டி.ஐ.ஜி.,யாக பதவி உயர்த்தப்பட உள்ளனர். இதே பேட்ஜில் குரூப்-1(நேரடி டி.எஸ்.பி.,) அதிகாரிகளாக தேர்வாகி, துணை போலீஸ் கமிஷனராக உள்ள பெரியய்யா, மவுரியா, பாரி, செந்தாமரை கண்ணன், சத்தியமூர்த்தி, ஸ்ரீதர், முருகன், வரதராஜு, சாரங்கன் ஆகிய ஒன்பது பேரும் தமிழக சர்வீசில் உள்ளனர். முக்கிய இடங்களை பிடிக்க இவர்களுக்குள் ஒரு சில அதிகாரிகள் இப்போதே, "பிடிக்க வேண்டியவர்களை பிடித்து' "துண்டு' போட்டு வைத்துள்ளனர். சி.பி.ஐ., எஸ்.பி.,யாக முருகன் இருப்பதால், இந்த போட்டியில் இருந்து அவர் ஒதுங்கியுள்ளார். "பின்னணி' இல்லாத அதிகாரிகள், எங்கு பணியமர்த்தப்பட்டாலும், அங்கு செல்ல தயாராக உள்ளதாக தெரிகிறது.

சட்டசபை தேர்தலை "மனதில்' வைத்து ஐ.பி.எஸ்., அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

முக நூல்

Popular Posts