background img

புதிய வரவு

Showing posts with label central government. Show all posts

If the bill relating to janlokp All parties meeting in New Delhi today (August 24) takes place.
If you have undertaken to bring the fast emphasis lokp Anna hacare strong central government led to the crisis.

ஜன்லோக்பால் மசோதா ‌தொடர்பான அனைத்துக்கட்சிக் கூட்டம் டெல்லியில் இன்று (ஆகஸ்ட் 24) நடைபெறுகிறது.

வலுவான லோக்பால் கொண்டுவர வலியுறுத்தி அன்னா ஹசாரே மேற்கொண்டிருக்கும் உண்ணாவிரதத்தால் மத்திய அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இதன் எதிரொலியாக, அன்னா ஹசாரே ஆதரவாளர்களின் ஆதரளவாளர்கள் தயாரித்துள்ள ஜன்லொக்பால் மசோதாவை பரிசீலிக்க மத்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிகிறது.

இதன் ஒரு கட்டமாக இன்று பிற்பகல் 3.30 மணி அளவில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் பாரதிய ஜனதா உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சிகள் பங்கேற்கின்றன.

இதில் பிரதமர், நீதிபதிகள் ஆகியோரை ஜன்லோக்பால் வரம்பிற்குள் கொண்டுவர மத்திய அரசுக்கு ஆட்சேப‌னை இல்லை எனபது உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என தெரிகிறது.
பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் தற்போது நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனையில் உள்ள லோக்பால் மசோதா கைவிடப்படக்கூடும் என்றும் கூறப்படுகிறதது.

ஹசாரேயின் ஜன்லோக்பால் மசோதா அனைத்துக்கட்சிகளின் சம்மதத்துடன் கொண்டுவரப்படலாம் எனவும் தெரிகிறது. ஜன்லோக்பால் மசோதா நிறைவேற எதிர்க்கட்சியினரும் ஒத்துழைப்பு தருமாறு மத்திய அரசு கோரிக்கைவிடுத்துள்ளது.

ஜன்லோக்பால் மசோதாவை நிறைவேற்றுவதற்கு ஏதுவாக , தற்போது நடைபெற்றுவரும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை மேலும் நீட்டிக்க முடிவுசெய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹசாரேவின் ஜன்லோக்பால் மசோதா பரிசீலனை – இன்று அனைத்துக்கட்சிக்கூட்டம்

ஜப்பானில் சமீபத்தில் நடந்த சுனாமி தாக்குதல் காரணமாக அணு உலைகள் பாதிப்படைந்து கதிர்வீச்சு ஏற்பட்டது.இதனால் உணவு பொருட்களிலும் கதிர்வீச்சு பரவி இருக்கலாம் என கருதப்படுகிறது. எனவே ஜப்பான் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் உணவு பொருட்களை கதிர்வீச்சு சோதனைக்கு உட்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதற்காக இந்திய அரசு நம் நாட்டுத் துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்களில் இயங்கி வரும் உணவுப் பொருட்கள் மற்றும் தரக்கட்டுப்பாடு அமைப்புகளுக்கு ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து உணவு பொருட்களிலும் கதிர்வீச்சு அபாயத்தால் பாதிப்படைந்துள்ளதா? என்று கட்டாயமாக பரிசோதனை செய்யும்படி ஆணையிட்டுள்ளது.

இதே போன்ற உத்தரவினை இந்திய அரசு வருவாய்த்துறை அனைத்து சுங்க இலாகாக்களுக்கும் பிறப்பித்து உணவுப் பொருள் மாதிரிகளை எடுத்து சோதனை செய்து பார்க்கும் படி உத்தரவிட்டுள்ளது.

ஜப்பானில் இருந்து வரும் உணவு பொருட்களில் கதிர்வீச்சு சோதனை; மத்திய அரசு உத்தரவு

ஜப்பானில் சமீபத்தில் நடந்த சுனாமி தாக்குதல் காரணமாக அணு உலைகள் பாதிப்படைந்து கதிர்வீச்சு ஏற்பட்டது.இதனால் உணவு பொருட்களிலும் கதிர்வீச்சு பரவி இருக்கலாம் என கருதப்படுகிறது. எனவே ஜப்பான் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் உணவு பொருட்களை கதிர்வீச்சு சோதனைக்கு உட்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதற்காக இந்திய அரசு நம் நாட்டுத் துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்களில் இயங்கி வரும் உணவுப் பொருட்கள் மற்றும் தரக்கட்டுப்பாடு அமைப்புகளுக்கு ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து உணவு பொருட்களிலும் கதிர்வீச்சு அபாயத்தால் பாதிப்படைந்துள்ளதா? என்று கட்டாயமாக பரிசோதனை செய்யும்படி ஆணையிட்டுள்ளது.

இதே போன்ற உத்தரவினை இந்திய அரசு வருவாய்த்துறை அனைத்து சுங்க இலாகாக்களுக்கும் பிறப்பித்து உணவுப் பொருள் மாதிரிகளை எடுத்து சோதனை செய்து பார்க்கும் படி உத்தரவிட்டுள்ளது.

திருநெல்வேலி : மத்திய அரசு நிதியினை மாநில அரசுகள் சொந்த நிதி போல முறையாக செலவழிக்க வேண்டும் என மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பேசினார்.

நெல்லை மாவட்டம் சிவகிரியில் நேற்று இரவு காங்கிரஸ் கட்சி நடத்திய மத்திய அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் பேசியதாவது: 10 ஆண்டுகளுக்கு பிறகு சிவகிரிக்கு வந்துள்ளேன். 2004 பார்லிமென்ட் தேர்தலில் பாரதிய ஜனதா 137 இடங்களையும் 8 இடங்களில் அதிகமாக 145 இடங்களில் காங்கிரஸ் கட்சியும் பிடித்தன. அப்போதைய காங்.,அரசு தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம், முதியோர் உதவிதிட்டம், மாணவர்களுக்கு கல்வி கடன் என பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியது. இதனால் 2009ல் மீண்டும் காங்.,ஆட்சியை பிடித்தது.

ஆட்சியை பிடிக்கும் கனவில் இருந்த பாரதிய ஜனதாவோ முன்பை விட குறைவான இடங்களில் வெற்றிபெற்றது. இப்போதும் பா.ஜ.,ஏதாவது குறைகளை கண்டுபிடித்து சொல்லிவருகிறார்கள். ஆனால் மத்திய அரசு ரூ 12 ஆயிரம் கோடியில் கிராமச்சாலைகள், 20 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் 30 ஆயிரம் கோடி ரூபாய் கல்விக்கடன், காமராஜர் அறிமுகப்படுத்திய மதிய உணவு திட்டம் இன்றைக்கு இந்தியா முழுவதும் அறிமுகப்படுத்தப்பட்டு 10 ஆயிரம் கோடி செலவில் 13 கோடி மாணவ, மாணவிகள் பயன்பெறுகின்றனர். 2008ல் உலகம் முழுவதும் பொருளாதார வீழ்ச்சியடைந்தது. அமெரிக்காவில் வங்கிகள் நிலைகுலைந்தன. இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளும் பாதிப்பிற்குள்ளாகின.

ஆனால் இந்தியாவில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. சுவிட்சர்லாந்தில் நடந்த பொருளாதார மாநாட்டில் நான் பங்கேற்ற போது இந்தியாவும், சீனாவும் மட்டும் பொருளாதார வீழ்ச்சியடையாமல் இருப்பது குறித்து என்னிடம் உலகத்தலைவர்கள் கருத்து கேட்டனர். 2008-2009 ஆண்டில் 6.7 சதவீதமாக இருந்த இந்தியாவின் வளர்ச்சி, 20009-10ம் ஆண்டில் 8 சதவீதமாக வளர்ச்சிபெற்றது. நடப்பு ஆண்டில் 9 சதவீதமாக உயரும். மாநிலங்களுக்கு மத்திய அரசு ஏராளமான நிதியை வழங்குகிறது. மாநில அரசுகள் அந்த நிதியை சொந்த நிதி போல முறையாக திட்டங்களுக்கு செலவழிக்க வேண்டும். மத்திய அரசு நிதியை சில இடங்களில் தவறாக பயன்படுத்துகிறார்கள். சோனியா, மன்மோகன், ராகுல் உள்ளிட்ட சுயநலமில்லாத தலைவர்களால் வளர்ச்சிப்பாதையில் செல்கிறது. எனவே இந்த வளர்ச்சியை யாராலும் தடுக்க இயலாது. விரைவில் தேர்தல் திருவிழா நடக்க இருப்பதால் உங்களை சந்திக்க மீண்டும் வருவேன் என ப.சிதம்பரம் பேசினார்.

மத்திய அரசு நிதியை முறையாக செலவழிக்க ப.சிதம்பரம் அறிவுரை

தங்களது மாநிலங்களில் தங்கியிருக்கும் ஜம்மு காஷ்மீர் மாநில மக்களை காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று கூறி துன்புறுத்தக்கூடாது என அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

இது தொடர்பாக அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் ஜம்மு காஷ்மீர் மாநில மக்களைப் பற்றிய விசாரணைகளின்போது மிகுந்த எச்சரிக்கையுடன் நடந்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

காஷ்மீர் பேச்சுவார்த்தைக் குழுவினரிடம் ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் ஒமர் அப்துல்லா, மற்ற மாநிலங்களில் ஜம்மு காஷ்மீர் மக்கள் தங்கினால் அங்குள்ள காவல்துறையினர் விசாரணை என்ற பெயரில் கடுமையாக துன்புறுத்துவதாகவும், எனவே இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியதை தொடர்ந்தே மத்திய அரசு மேற்கூறிய சுற்றறிக்கையை அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.

காஷ்மீர் மக்கள்: அனைத்து மாநிலங்களுக்கும் உத்தரவு

எகிப்து அதிபருக்கு எதிராக அந்நாட்டில் ம‌க்க‌ள் கலவர‌த்‌தி‌‌ல் ஈடுப‌ட்டு வருவதால் இந்தியர்கள் யாரும் அந்நாட்டிற்குச் செல்ல வேண்டாம் என்று மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

கடந்த 30 ஆண்டுகளாக அதிபராக இருந்துவரும் எகிப்து அதிபர் ஹோஸ்னி முபாராக், வேலையில்லா திண்டாட்டம், வறுமை, விலைவாசி போன்ற பிரச்சனைகளில் கவனம் செலுத்தவில்லை என்று மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

எகிப்து தலைநகர் கெய்ரோ உள்ளிட்ட பல இடங்களில் லட்சக்கணக்கான மக்கள் திரண்டுள்ளனர். இதனால் எகிப்து கலவர பூமியாக மாறியுள்ளது.

இதனையடுத்து, இந்தியர்கள் யாரும் அந்நாட்டிற்குப் பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்று மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. மேலும் தலைநகர் கெய்ரோவில் உள்ள இந்தியர்களை பத்திரமாக இந்திய அழைத்து வருவதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியர்கள் எகிப்திற்குச் செல்ல வேண்டாம் - மத்திய அரசு

முக நூல்

Popular Posts