background img

புதிய வரவு

Showing posts with label parliament. Show all posts

இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் யூன் 4ம் திகதி மாநிலங்களவை எம்.பியாக பதவியேற்க உள்ளார்.
கடந்த ஏப்ரல் 26ல் மத்திய அரசால் மாநிலங்களவை எம்.பி பதவிக்கு சச்சின் டெண்டுல்கர் பரிந்துரைக்கப்பட்டார்.
.பி.எல் போட்டிகளில் விளையாடிக் கொண்டிருந்தால் அவரால் அப்போது பதவியேற்க முடியவில்லை.
இதனையடுத்து, சச்சின் வரும் யூன் 4ம் திகதி பதவியேற்றுக் கொள்வார் என்று மாநிலங்களவை இணை அமைச்சர் ராஜிவ் சுக்லா தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், சச்சின் டெண்டுல்கருக்கு மாநிலங்களவைத் தலைவர் ஹமீத் அன்சாரி பதவிப் பிரமாணம் செய்துவைப்பார் எனவும் கூறப்படுகிறது.
சச்சினுடன் மாநிலங்களவை எம்.பியாக நியமிக்கப்பட்ட நடிகை ரேகா மற்றும் தொழிலதிபர் அனு ஆகா ஆகியோர் தற்போது முடிவடைந்த பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே பதவியேற்றுக் கொண்டனர்.
மேலும், மாநிலங்களவை உறுப்பினராகும் முதல் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் என்பது குறிப்பிடத்தக்கது.

சதநாயகன் சச்சின் 4ம் திகதி எம்.பி யாக பதவியேற்கிறார்

சட்டசபையில் இடைக்கால பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடங்கியது. முதலில் அ.தி.மு.க. உறுப்பினர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி பேசினார். அவர் கூறியதாவது:-

இந்த பட்ஜெட்டில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் இல்லை. விலைவாசி உயர்வை சுட்டிக் காட்டினால் அமைச்சர் புள்ளி விவரத்தை கூறுகிறார். இது எங்களுக்கு புரியவில்லை. இன்று விலை குறைந்திருப்பதாக அமைச்சர் கூறுகிறார்.

அமைச்சர் எ.வ.வேலு:- அ.தி.மு.க. ஆட்சியில் ஜனவரி மாதம் ஒரு கிலோ புளி ரூ.22-க்கு விற்றது. அவர்களது ஆட்சியில் அதே அக்டோபர் மாதத்தில் ஒரு கிலோ புளி ரூ.45-க்கு விற்கப்பட்டுள்ளது. எனவே விலை ஏற்றம் - இறக்கம் அவ்வப்போது நடைபெறுவதுதான். இன்று காய்கறிகளின் விலை குறைந்து விட்டது.

செங்கோட்டையன் (அ.தி.மு.க.): புளி விலையை அமைச்சர் எடுத்து சொன்னார். வருகிற தேர்தலை எண்ணி தி.மு.க.வுக்கு புளியை கரைக்கிறது.

அக்ரி கிருஷ்ணமூர்த்தி:- அத்தியாவசிய பொருள் விலை மட்டும் உயரவில்லை. சிமெண்ட், மணல், கம்பி விலையும் உயர்ந்து விட்டது. அமைதிப் பூங்காவாக இருந்த தமிழகம் இப்போது அமளி காடாக காட்சி அளிக்கிறது. தினமும் கொலை, கொள்ளை, வழிப்பறி, கடத்தல் நடக்கிறது. காவல்துறை செயல்படுகிறதா? என்று சந்தேகம் எழுகிறது. பொதுமக்களுக்கு ஆபத்து என்றால் காவல்துறையில் முறையிடலாம். ஆனால் காவல்துறைக்கே ஆபத்து என்றால் யாரிடம் முறையிடுவது? இவ்வாறு கூறிவிட்டு முதல்-அமைச்சரை சம்பந்தப்படுத்தி சில வார்த்தைகளை கூறினார்.

இதற்கு அமைச்சர் பொன்முடி கடும் எதிர்ப்பு தெரிவித்து அதை அவை குறிப்பில் இருந்து நீக்க கோரினார். அந்த ஆட்சேபகரமான வார்த்தை நீக்கப்பட்டது.

முல்லை வேந்தன் (தி.மு.க.):- மக்களுக்கு நன்மை பயக்கும் வகையில் தி.மு.க. அரசு பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கி தந்துள்ளது. காங்கிரீட் வீடு கட்டும் திட்டம் சிறப்பாக நடக்கிறது. அ.தி.மு.க. ஆட்சியில் டெஸ்மா, எஸ்மா சட்டம் கொண்டு வந்ததோடு பணி நியமன தடை சட்டமும் வந்தன. இதனால் பலர் வேலையின்றி தவித்தனர். இப்போது தி.மு.க. ஆட்சியில் 5 லட்சம் பேருக்கு வேலை வழங்கியவர் முதல்- அமைச்சர் கலைஞர்.

செங்கோட்டையன் (அ.தி.மு.க.):- திருப்பூர், கரூர், கோவையில் மின்வெட்டால் 10 லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர்.

பொன்முடி:- இது எங்கள் தவறல்ல. நீதிமன்ற தீர்ப்பால் நடந்துள்ளது. இன்றைக்கு தமிழ்நாட்டில் கூலிக்கு ஆள் கிடைக்காத நிலைதான் உள்ளது. அனைவரின் வருமானமும் உயர்ந்துள்ளது.

முல்லை வேந்தன் (தி.மு.க.):- அ.தி.மு.க. ஆட்சியில் நடந்ததை மனதில் வைத்து அக்ரி கிருஷ்ணமூர்த்தி பேசி விட்டு கடைசியில் தி.மு.க. ஆட்சியில் நடந்ததுபோல் சொல்கிறார். சட்டம் - ஒழுங்கு பற்றி பேசினார்.

சுப்பிரமணியசாமிக்கு கோர்ட்டில் நீங்கள் எப்படி எதிர்ப்பு தெரிவித்தீர்கள் என்பது நாட்டுக்கு தெரியும். ரூ.100 கோடி செலவில் நடந்த திருமணமும் நாட்டுக்கு தெரியும். கும்பகோணம் மகாமகம், 3 கல்லூரி மாணவிகள் எரிப்பு... இப்படி எத்தனையோ கொடுமைகளை சொல்லிக் கொண்டே போகலாம். கிழக்கே உதிக்கும் சூரியன் இனி மேற்கே உதித்தாலும் நீங்கள் (அ.தி.மு.க.) இனி கோட்டைக்குள் நுழையப் போவதில்லை.

செங்கோட்டையன்:- சுப்பிரமணியசாமிக்கு கறுப்பு கொடி காட்டியதை கூறினார். பிரதமர் இந்திராகாந்திக்கு நீங்கள் கறுப்பு கொடி காட்டியபோது நடந்ததை நாடே அறியும்.

அமைச்சர் துரைமுருகன்:- நாங்கள் கறுப்பு கொடி காட்டியது அரசியலுக்காக. ஆனால் நீங்கள் சுப்பிரமணியசாமியை அவமானப் படுத்தினீர்கள். இதுதான் வித்தியாசம். இதைத் தொடர்ந்து முல்லை வேந்தன் பேசும் போது சில ஆட்சேபகரமான வார்த்தைகளை பேசியதற்கு அ.தி.மு.க.வினர் எழுந்து எதிர்ப்பு தெரிவித்தனர்.

சில குறிப்பிட்ட வார்த்தைகளை அவை குறிப்பில் இருந்து நீக்க அ.தி.மு.க.வினர் வற்புறுத்தினர். இதனால் சபையில் தி.மு.க. - அ.தி.மு.க. இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இறுதியில் முல்லைவேந்தன் பேசிய சில ஆட்சேபகரமான வார்த்தைகள் அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டன. அதன்பிறகே சபையில் அமைதி நிலவியது.

சட்டசபையில் தி.மு.க. - அ.தி.மு.க. கடும் வாக்குவாதம்

நேபீட்டா : மியான்மர் வரலாற்றில், 20 ஆண்டுகளுக்குப் பின் நேற்று முதன் முறையாக பார்லிமென்டின் இரு அவைகளும் கூடின. இந்த முதல் கூட்டத்தில், நாட்டின் புதிய அரசியல் சாசனம் அமலுக்கு கொண்டு வரப்பட்டது. 50 ஆண்டுகளாக நாட்டில் நிலவி வந்த ராணுவ ஆட்சி முடிவுற்றதாக அறிவிக்கப்பட்டது. அதேநேரம், நாடு முழுவதும் நேற்று 14 மாகாண சட்டசபைகளும் முதன் முறையாகக் கூடின.
மியான்மரில் 1962ல் இருந்து ராணுவ ஆட்சி நடந்து வருகிறது. கடந்தாண்டு நவம்பர் 7ம் தேதி, பொதுத் தேர்தல் நடந்தது. இதில், அவுங் சான் சூச்சியின் தேசிய ஜனநாயக லீக் கட்சி கலந்து கொள்ளவில்லை. தேர்தல் முடிவுகளில், ராணுவத் தலைமையால் இயக்கப்படும் ஐக்கிய ஒற்றுமை மற்றும் மேம்பாட்டுக் கட்சி(யு.எஸ்.டி.பி.,) பெரும்பான்மை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, கடந்த 20 ஆண்டுகளுக்குப் பின் நேற்று முதன் முதலாக அந்நாட்டு பார்லிமென்ட் கூட்டம் துவங்கியது. மொத்தம் 440 இடங்கள் கொண்ட கீழவையும், 224 இடங்கள் கொண்ட மேலவையும் ஒரே நேரத்தில் நேற்று காலை துவங்கின. பெரும்பான்மையான இடங்களில் யு.எஸ்.டி.பி., கட்சி உறுப்பினர்கள் அமர்ந்திருந்தனர். அவுங் சான் சூச்சி கட்சி தேர்தலில் பங்கேற்காததால் அதன் உறுப்பினர்கள் யாரும் இடம் பெறவில்லை. கூட்ட நடவடிக்கைகளைப் பார்வையிட பத்திரிகையாளர்கள், அரசியல் நிபுணர்கள், பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
கேமரா, மொபைல் போன், கணினிகள், டேப் ரிக்கார்டர் உள்ளிட்ட பிற எலக்ட்ரானிக் பொருட்களை பார்லிக்குள் கொண்டு வர தடை விதிக்கப்பட்டது. பார்லியின் இந்த முதல் கூட்டம், இரண்டு வாரங்களுக்கு நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டின் 14 மாகாண சட்டசபைகளும் நேற்று முதன் முறையாகக் கூடின. அவற்றிலும் பெரும்பான்மை உறுப்பினர்களாக ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்களே இடம் பெற்றனர்.
சூச்சி கட்சி இணையதளம் துவக்கம்: இதற்கிடையில், சூச்சி தன் கட்சியின் www.nldburma.org என்ற இணையதளத்தை நேற்று துவக்கி வைத்தார். "உலக மலர்ச்சிக்கான மக்கள் ஜனநாயகத்தை அமைப்பதற்கு நம்மிடையே தகவல் தொடர்பு அவசியம். மிக விரைவில் நாம் ஜனநாயகத்தை அடைவோம் என்று நான் நம்புகிறேன்' என இந்த இணையதளத்தில் அவர் எழுதியுள்ளார்.

20 ஆண்டுகளுக்கு பின் வரலாறு : மியான்மரில் பார்லிமென்ட் கூடியது

முக நூல்

Popular Posts