background img

புதிய வரவு

Showing posts with label seeman. Show all posts

வேலூர்: காங்கிரஸுடன் இனி எந்தக் கட்சி கூட்டணி வைத்தாலும் அந்தக் கட்சி அடியோடு காணாமல் போகும், என்ற நிலையை நாம் தமிழர் இயக்கம் ஏற்படுத்தும் என்று இயக்குநர் சீமான் தெரிவித்தார்.

ஐநா நிபுணர் குழுவின் அறிக்கைக்கு ஆதரவு கோரியும், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் 20 ஆண்டுகளுக்கும் மேல் உள்ள நளினி, முருகன் உள்ளிட்டோரை விடுதலை செய்யக் கோரியும், நாம் தமிழர் கட்சி சார்பில் வேலூரில் பொதுக் கூட்டம் நேற்றிரவு நடந்தது.

கூட்டத்தில் கட்சியின் நிறுவனரும், இயக்குநருமான சீமான் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:

இலங்கை அதிபர் ராஜபக்சே மீது ஐ.நா.சபை அறிவித்துள்ள போர்க் குற்றவாளி விசாரணைக்கும், இலங்கையில் முள்வேலிக் கம்பிக்குள் அடைபட்டுக் கிடக்கும் நம் உறவுகளை விடுதலை செய்ய வலியுறுத்தியும், ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்று 20 ஆண்டுகளாக சிறையில் இருப்பவர்களை விடுவிக்க கோரி வலியுறுத்தியும் இந்த கூட்டம் நடைபெறுகிறது.

இலங்கை முள்ளி வாய்க்காலில் பல்லா யிரக்கணக்கானவர்ககள் கொல்லப்பட்ட இந்த நாளை (மே-18) அமெரிக்கா மற்றும் வெளிநாடுகளில் உள்ள நம் உறவுகள் துக்க நாளாக கடைப்பிடிக்கின்றனர். ஆனால் நாம் அப்படி எடுத்துக் கொள்ள வில்லை. வீழ்ந்ததெல்லாம் அழுவதற்காக அல்ல, எழுவதற்காகவே என நினைத்து இங்கு கூடியுள்ளோம். ஒன்றாய் விழுந்தால் ஒன்பதாய் எழுவோம் என தமிழீழ தேசிய தலைவர் கூறியதற்கு இணங்க, லட்சமாய் விழுந்து கோடியாய் எழுந்து நிற்கிறோம்.

நாம் வீழ்ச்சிக்காக கண்ணீர் சிந்தும் கூட்டமல்ல. எழுச்சிக்காக ரத்தம் சிந்தும் கூட்டம். கட்சி தொடங்கிய 7 மாதங்களில் 5 மாதங்கள் நான் சிறையில் இருந்தேன். மீதி நாட்களில் என்ன சாதித்தது நாம் தமிழர் கட்சி என்று கேட்பார்கள். இனத்தின் எதிரிகளை அடியோடு அழித்தொழித்தோம். பிறந்து 1 ஆண்டு கூட ஆகாத இந்த நாம் தமிழர் எனும் குழந்தை, காங்கிரஸ் எனும் இன எதிரியின் மார்பில் எட்டி உதைத்து மாநிலத்தை விட்டே விரட்டியுள்ளது.

எல்லோரும் இதை தேர்தலாய் பார்த்தார்கள். நாம் தமிழர் மட்டும் இதை யுத்தமாய் பார்த்தது. இது பிரபாகரனின் தம்பி சீமானுக்கும் சோனியாவின் மகன் ராகுலுக்கும் நடந்த யுத்தம். இனத்தை அழிக்க ராஜபக்சே கூட்டத்துக்கு ஆயுதம் தந்த காங்கிரஸ் அடியோடு ஒழிந்தது இந்தத் தேர்தலில்.

என் அண்ணன் பிரபாகரனை பெற்ற வீரமாதா திருமதி பார்வதி அம்மாள் அவர்களுடைய புனித சாம்பல் எனக்கு வந்தது. என்னைப்போலவே அண்ணன் நெடுமாறன், அண்ணன் வைகோ அவர்களுக்கும் வந்தது. அவர்கள் இருவரும் கடல் நீரிலே கரைத்தார்கள். ஆனால் நான் பத்திரமாக இன்னும் என் அறையில் வைத்திருக்கிறேன். என்றைக்கு என் லட்சியத்தை தொடுகிறேனோ, அன்றுதான் என் தாயின் சாம்பலை நான் கரைப்பேன்.

என் தாயின் சாம்பல் மட்டுமல்ல. தமிழ் சொந்தங்கள் உறங்கிக்கொண்டிருந்தபோது அவர்களை உசுப்பிவிடுவதற்காக தீக்குச்சாக மாறி வெந்து செத்தானே என் தம்பி முத்துக்குமாரின் புனித சாம்பலும் என்னிடத்தில்தான் இருக்கிறது. அதையும் பத்திரமாக வைத்திருக்கிறேன். என் இனம் என்று விடுதலை அடைகிதோ, அன்றுதான் அந்த சாம்பலை நான் கரைப்பேன். அதுவரை ஒவ்வொரு போருக்கும், ஒவ்வொரு களத்திற்கும் நான் செல்லும்போது அந்த சாம்பல் மீது சத்தியம் செய்துதான், நானும் என் தம்பிகளும் களத்திலே இறங்குவோம்.

2 ஜியால் வந்த தோல்வியா இது?

இந்த தேர்தலில் காங்கிரஸுக்கும் அதன் இனத் துரோக கூட்டணிக்கும் கிடைத்த தோல்வி 2 ஜி ஊழலால், குடும்ப ஆதிக்கத்தால் ஏற்பட்டது என கூறி வருகிறார்கள்.

2 ஜி என்பது தேசியப் பிரச்சினைதானே, அப்படியானால் கேரளாவில், அஸாமில், மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் எப்படி வென்றது? 2 ஜி அங்கு பாதிப்பை ஏற்படுத்தவில்லையா?

உண்மையான காரணம், எனது இனத்தை அழித்த காங்கிரஸுக்கு சமாதி கட்டுவதே தமிழனின் நோக்கமாக இருந்தது. அந்த காங்கிரஸின் கூட்டாளிகளைக் கவிழ்ப்பதே அவன் நினைப்பாக இருந்தது.

110 ஆண்டு பாரம்பரியமிக்க காங்கிரஸ் இன்று அடியோடு சரிந்து கிடக்கிறதென்றால், அது எனது இனத்தைக் கொன்றொழித்த படுபாதகச் செயலுக்கு தமிழன் கொடுத்த பரிசு. பழிக்குப் பழி.

பாமக, விடுதலைச் சிறுத்தை தோல்வி ஏன்?

சரி, திமுகவும் காங்கிரஸும்தான் 2 ஜியால் தோற்றார்கள் என்றால், பாமகவும், விடுதலைச் சிறுத்தைகளும் தோற்றது எதனால்? பதில் சொல்ல ஒரு பயலுக்கும் திராணியில்லை.

தமிழ் இனத்தைக் கருவறுத்த கயவர்களின் கூட்டம் மொத்தமாக இந்தத் தேர்தலில் மரண அடி வாங்கியது என எழுத, சொல்ல தைரியமில்லாதவன், தயங்குபவன் எப்படி தமிழனாக இருக்க முடியும்?

ரங்கசாமி தமிழன்...

ஈழத்தமிழர் படுகொலைக்கு காங்கிரசும் திமுகவும் துணை போனதும், அதை தம்பி சீமான் பரப்புரை செய்ததும்தான் இந்தத் தேர்தலில் திமுக - காங்கிரஸ் வீழ்ச்சிக்கு முழு காரணம் என்று...நான் சொல்லவில்லை. புதுவை முதல்வராகியிருக்கும் என் ரங்கசாமி பகிரங்கமாக சொன்னார். அவர் முன்னாள் காங்கிரஸ்காரர்தான். ஆனால் தமிழன். நல்ல தமிழன். அதனால் அவருக்கு உண்மையான காரணம் தெரிந்திருக்கிறது.

அப்படியும் இந்தத் தோல்வியில் உனக்கு சந்தேகம் இருக்கிறதா.. இன்னும் இரண்டரை ஆண்டுகள்தான். வா பார்த்து விடலாம், இன்னொரு தேர்தலில். காங்கிரஸ் மற்றும் தமிழின அழிப்புக்கு துணைபோன துரோகிகளுக்கு சொல்கிறேன்.. இந்த சீமான் உயிருடன் இருக்கும் வரை இதுதான் உங்கள் நிலை.

மதவாத பாஜவோடு கூட்டணி சேர எல்லோரும் எப்படி பயந்து வெறுத்து ஒதுங்கி ஓடுகிறார்களோ, அதே நிலைதான் இனி காங்கிரசுக்கும்.

உண்மையி்ல் காங்கிரஸின் இந்தத் தோல்வியில் மகிழ்ச்சியில்லை. ஆனால், பணத்தால், சாதியால் இந்த மக்களாட்சியை வென்று விடலாம் என்ற நினைப்புக்கு தமிழன் கொடுத்த மரண அடிதான் எனக்கு உண்மையான சந்தோஷம்.

சாதி பார்க்காமல், பணத்துக்காக இனத்தைக் காட்டிக் கொடுக்காமல், இனத்தைக் கொன்றழித்தவனைப் பழிக்குப் பழி வாங்கிய தமிழனை நினைத்து பெருமைப்படுகிறேன்.

ஆனாலும் எப்படியோ இந்த 5 சீட்டில் ஜெயிச்சிட்டாங்க. இந்த தொகுதிகளுக்கு மட்டும் நான் போகவில்லை என்பது ஒரு காரணம். இங்கே பரப்புரை செய்த நமது தோழர்கள், காங்கிரஸ் தவிர, யாருக்கு வேண்டுமானாலும் போடுங்கள் என்று சொல்லிவிட்டார்கள். அதுதான் இந்த 5-ல் காங்கிரஸ் நின்றுவிட்டது. இல்லையேல் அங்கும் தலை தெறிக்க ஓட்டமெடுக்க வைத்திருப்போம்.

இந்தத் தேர்தல் பரப்புரையில், தமிழன் ஒரு அப்பன் ஆத்தாளுக்குப் பிறந்தவனா இருந்தா தமிழனைக் கொன்றொழித்த காங்கிரஸுக்கு ஓட்டுப் போடக் கூடாது என்று சொன்னோம். தான் ஒரு அப்பனுக்கும் ஆத்தாளுக்கும் பிறந்தவன்தான் என நிரூபித்துவிட்டான் தமிழன்.

இது எனக்கு கிடைத்த வெற்றி இல்லையடா.. தமிழனுக்கு கிடைத்த வெற்றி. இன உணர்வு கொண்ட அத்தனை பேரின் வெற்றி. காங்கிரசுடன் சேர்ந்து யார் தேர்தலில் நின்றாலும் மானமுள்ள தமிழன் இனி வாக்கு செலுத்தமாட்டான்.

முள்ளிவாய்க்கால் சோகம் நடந்து 1000 ஆண்டுகளா ஆகிவிட்டது... அல்லது நூறு ஐம்பது என ஆண்டுகள் ஓடிவிட்டனவா... இதோ இரண்டாண்டுகளுக்கு முன் நடந்த இனப்படுகொலை அது. அந்த ரத்த வாடை இன்னும் என் மக்கள் நாசியில் இருக்கிறது. அதனால்தான் அடித்து விரட்டப்பட்டது காங்கிரஸ்.

நாம் தமிழர் மட்டுமே...

இந்தத் தேர்தலில், ஈழத் தமிழனின் உரிமை, இனத்துக்கு நேர்ந்த அவலம் பற்றிப் பேச இந்தப் பரந்த தமிழகத்தில் ஒரு கட்சி கூட இல்லை. இந்த நாம் தமிழர் மட்டுமே அதைப் பேசியது. இதைவிட அவமானம் வேறு உண்டா... இத்தனை பெரிய இனத்துக்காகப் பரிந்து பேச ஒரே ஒரு கட்சி மட்டும்தானா...

நாமெல்லாரும் தமிழர்கள்தானே... இதை நினைவுபடுத்த நாம் தமிழர் என்று சொல்ல வேண்டியிருக்கிறதே... இதைவிட கேவலம் உண்டா....

தமிழனுக்கு எதிரி ஜாதி மதம்தான்:

தமிழன் ஒற்றுமையாக இருந்தால் வாழ்வு பொன்னாகும், இல்லாவிட்டால் வாழ்வு மண்ணாகும்.

தமிழனின் எதிரி சிங்களவன் இல்லை. வேறு யாரும் இல்லை. அவனது சாதி மத வெறிதான். இந்த வேற்றுமைதான் நம் இனத்தை ஒன்று சேரவிடாமல் பிரித்தே வைக்கிறது. நாம் இனி சாதியின் பெயரால் அறியப்படும் அவலத்தை மாற்றுவோம். இந்த சீமான் ஒரு தமிழன். அதைப் போல நீயும் ஒரு தமிழன். நானும் தமிழன், நீயும் தமிழன்... நாம் தமிழர்!

ராஜீவின் மரணம் பற்றி யாரும் பேசக் கூடாது...

ராஜீவின் மரண்ம் பற்றி இனி யாரும் பேசத் தேவையில்லை. ராஜீவின் கொலை பற்றிப் பேசினால், அந்த ராஜீவ் ஈழத்திலே 12500 தமிழர்களைக் கொன்றாரே, அதைப்பற்றிப் பேசுங்கள்.

இரட்டை கோபுரத்தை தகர்த்த ஒசாமாவை பாகிஸ்தானில் போய் கொன்றுவிட்டு வருகிறது அமெரிக்கா. அதைப்பற்றி ஒரு பயல் பேசியதுண்டா... ஆனால் ஈழத்திலே 12500 பேரை, பீரங்கியால் சுட்டும் நசுக்கியும் கொடூரமாகக் கொன்றது ராஜீவின் ராணுவம். அந்த ராஜீவைக் கொன்றதில் என்ன தவறு? ஒசாமாவுக்கு ஒரு நியாயம் உனக்கொரு நியாயமா?

ராஜீவ் மரணம் பற்றி என்னுடன் நேருக்கு நேர் நின்று வாதாட தயாரா?

இனி ராஜீவ் மரணம் பற்றிப் பேசினால் தோற்றுப் போவோம் என்ற பயம் ஒவ்வொரு காங்கிரஸ்காரனுக்கும் வரவேண்டும்.

பிரிவினை கூடாதா...?

இறையாண்மை என்றும், பிரிவினை கூடாது என்றும் பேசுகிறார்களே... அப்படியானால் உலகம் இத்தனை நாடுகளாகப் பிரிந்ததுதான் எப்படி? கொசோவா, கிழக்கு தைமூர், செர்பியா இப்படி சமீபத்திய உதாரணங்கள் எத்தனை... நீங்கள் செய்தால் போராட்டம்... அதையே தமிழன் செய்தால் பிரிவினைவாதமா?

ஈழத்திலே நடந்தது இனப்படுகொலை, இந்திய துணையுடன் இலங்கை திட்டமிட்டு அரங்கேற்றி படுகொலை என்பதை நிரூபிப்பதே நம் வேலை.

எமக்கான அங்கீகாரத்தை சீனாவோ, ரஷ்யாவோ இல்லை இந்தியாவோ தர வேண்டாம். நாங்களே அதை தீர்மானிக்கிறோம். ஒரு கோடி தமிழர்கள் ஒன்றாய் திரண்டால் அதை சாதிக்க முடியும். அதற்கு ஒரு முன்னோட்டம் இந்த கூட்டம். இவர்கள் கூலிக்கு கூடிய கூட்டமல்ல. கொள்கைக்கு கூடிய கூட்டம்.

நன்றிக் கடனாக...

நாம் தமிழர் என்ற கருத்தை எப்போதும் மனதில் இருத்துவோம்.தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை மக்கள் விரும்பினார்கள். ஆட்சி மாற்றம் நடந்தது. அதற்கு நன்றிக் கடனாக, தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள முதல்வர் நல்லாட்சி தருவார் என நம்புவோம். ஊழலற்ற ஆட்சி, உண்மையான ஆட்சியை தருவார் என வாழ்த்துவோம்.

ராஜீவ் கொலையில் மிகச் சாதாரண குற்றங்களுக்காக இருபது ஆண்டுகளாக சிறையில் வாடும் நம் சகோதர சகோதரிகளை விடுவிப்போம். இந்த கோரிக்கையை முதல்வர் ஜெயலலிதா பரிசீலிப்பார் என நம்புவோம்.

பிரபாகரனே தலைவன்:

சீமான் தலைவன் என்று நினைக்கக் கூடாது. நான் யார் என் இனத்தின் விடுதலைக்கு, உண்மையாக நேர்மையாக அர்ப்பணிப்போடு போராடுகிற எண்ணற்ற தலைவர்களை உருவாக்குகிற ஒரு முதண்மை தொண்டன். அப்படியானால் இந்த கட்சிக்கு யார் தலைவர். இந்த கட்சிக்கு மட்டுமல்ல. உலகம் முழுவதும் பரவிக்கிடக்கின்ற 12 கோடி தேசிய இன மக்களுக்கு ஒரே தலைவர் பிரபாகரன்.

நாம் தமிழர் என்கிற கட்சி தேசிய இன விடுதலைக்கான மக்கள் ஜனநாயக புரட்சி. நாம் தமிழர் கட்சி ஆட்சிக்காகவா, தமிழினம் மீட்சிக்காக. நாம் தமிழர் கட்சி ஆள்வதற்காகவா, தமிழர்கள் வாழ்வதற்காக. நாம் தமிழர் கட்சி பணத்திற்காகவா, சத்தியமாக இனத்திற்காக. நாம் தமிழர் கட்சி மக்களை வைத்து பிழைப்பதற்காகவா, மக்களுக்காக உழைப்பதற்காக. நாம் தமிழர் கட்சி பதவிக்காகவா, மக்களுக்கான உதவிக்காக. இதனை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும் எனது அன்பு தம்பிகள்.

என் மொழி காக்க, என் இனம் காக்க, என் மண் காக்க, என் மக்களை காக்க, என் உயிருக்கும் மேலாக நின்று போராடிக்கொண்டிருக்கிற எழுச்சிமிக்க இளைஞர்களின் பாசறைதான் இந்த நாம் தமிழர் கட்சி.

ஓயாமல் கொள்கை என்ன என்று கேட்டுக்கொண்டிருக்கக் கூடாது. கொள்கையை கேட்டுக்கிட்டா விஜயகாந்த்துக்கு 29 இடத்தில் ஓட்டு போட்டீர்கள். இவர்களுக்கு கொள்கை இருக்கிறதா. கொள்கையை கேட்டுக்கிட்டா போட்டீர்கள். ஆட்சி மாற்றத்தை மக்கள் விரும்பினார்கள். அந்த ஆட்சி மாற்றம் நடந்திருக்கிறது.

ஆனால் இந்த நாம் தமிழருக்கு கொள்கை இருக்கு. அது இன நலம். இலவசங்களை ஒழிப்பது. கல்வி வேலையை கொடு... ஒரு ரூபாயோ நூறு ரூபாயோ, சொந்தக் காசை கொடுத்து அரிசி வாங்கி சாப்பிட்டுக் கொள்கிறான்.

பெட்டி வாங்கினேனா...?

என்னை பார்த்து சிலர் பிரபாகரனிடம் பெட்டி வாங்கி விட்டார். ஜெயலலிதாவிடம் பெட்டி வாங்கிவிட்டுத்தான் பேசுகிறார் என்றார்கள். பெட்டி வாங்கி பழக்கப்பட்டவர்கள் தான் அப்படி பேசுகிறார்கள். அயோக்கியர்கள்.

மத்திய-மாநில அரசுகளை வேண்டி கேட்டுக் கொள்கிறேன். சிறையில் இருப்பவர்களை விடுதலை செய்ய வேண்டும். இலங்கையின் வடக்கு பகுதியில் இருக்கும் இடம் பெயர்ந்தோர் முகாம்களை மூடிவிட்டு அங்கு இருக்கும் தமிழர்களை விடுவித்து அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைக்க வேண்டும்", என்றார் சீமான்.

முன்னதாக வேலூர் கோட்டை சுற்றுச்சாலையில் இருந்து நாம் தமிழர் கட்சியினர் வேலூர் ரெயில் நிலையம் அருகே அமைக்கப்பட்டிருந்த விழா மேடை வரை ஊர்வலமாக சென்றனர். இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

பொதுக்கூட்டத்தில் பேராசிரியர் தீரன், சாகுல் அமீது, இயக்குநர் ஆர்.கே.செல்வமணி, வெற்றிக்குமரன் உள்பட பலர் பேசினார்கள்.

காங்கிரஸுடன் இனி எந்தக் கட்சி கூட்டணி வைத்தாலும் தோல்வி நிச்சயம்! - சீமான்

இலங்கையில் 2009ஆம் ஆண்டு மே 18ஆம் தேதி முள்ளிவாய்க்காலில் அந்நாட்டு அரசு நடத்திய இனப்படுகொலையை கண்டித்தும், ஈழத் தமிழர்களுக்கு எதிரான இலங்கை அரசின் கொடும் போர் குறித்து ஐ.நா.நிபுணர் குழு அளித்த அறிக்கைக்கு ஆதரவாகவும், இலங்கையை இனப்படுகொலை செயத நாடு என அறிவிக்க வலியுறுத்தியும் நாம் தமிழர் கட்சி சார்பில் 18.05.2011 அன்று வேலூர் பெரியார் பூங்காவில் இருந்து கோட்டை அருகே உள்ள மைதானம் வரை பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

பேரணிக்குப் பின்னர் நடந்த கூட்டத்தில் பேசிய சீமான்,

யாரும் வரலாம். இங்கு வாழலாம். நாங்கள்தான் ஆளுவோம். என் பாட்டன் வீரபாண்டிய கட்டப்பொம்மன் படையிலே, என் பாட்டன் வெள்ளைய தேவன் தளபதியாக இருந்ததுபோல, எத்தனை தளபதிகள் எங்களுக்கு இருக்கலாம். நான்தான் மன்னன். அதில் எந்த மாற்றமும் கிடையாது. யாரும் வரலாம். வாழ்த்துக்கலாம். நான்தான் ஆளுவேன். வந்தவர்களையெல்லாம் வாழ வைத்ததில் எனக்கு சிக்கல் வரவில்லை. வந்தவனையெல்லாம் ஆளவைத்தில் எனக்கு சிக்கல். அதனை புரிந்துகொள்ள வேண்டும். யாரும் வரலாம். இங்கு வாழலாம். நாங்கள்தான் ஆளுவோம். இதுதான் எங்கள் கொள்கை.

ஓயாமல் கொள்கை என்ன என்று கேட்டுக்கொண்டிருக்கக் கூடாது. கொள்கையை கேட்டுக்கிட்டா விஜயகாந்த்துக்கு 29 இடத்தில் ஓட்டு போட்டீர்கள். கொள்கை இருக்குதா. கொள்கையை கேட்டுக்கிட்டா போட்டீர்கள். ஆட்சி மாற்றத்தை மக்கள் விரும்பினார்கள். அந்த ஆட்சி மாற்றம் நடந்திருக்கிறது. இவ்வாறு சீமான் பேசினார்.

கொள்கையை கேட்டுக்கிட்டா விஜயகாந்த்துக்கு 29 இடங்களில் ஓட்டு போட்டீர்கள்? சீமான்

நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

வணிகர் தினத்தையொட்டி வணிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன். தங்கள் பிரச்சினைக்கு மட்டுமின்றி அரசியல் பிரச்சினைகளுக்கும் வணிகர்கள் குரல் கொடுக்கிறார்கள்.

உலக மயமாக்கலால் வணிகத்துக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஆன்லைன் வர்த்தகம் வணிகர்களுக்கு எதிராக நடக்கிறது. இவைகளுக்கு எதிராக வணிகர்கள் ஒற்றுமையுடன் போராடி வெற்றி பெற வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

ஆன்லைன் வர்த்தகம் சீமான் எதிர்ப்பு

மக்கள் மனதை அறியாத ஜெயலலிதா, அவர்களுக்கு தேவையான திட்டங்களை எப்படி நிறைவேற்றுவார் என்று ஈரோடு மேற்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் யுவராஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

திமுக அரசு செயல்படுத்தி வரும் நலத்திட்டங்களை மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளதால், எங்கள் கூட்டணி சிறப்பான வெற்றியை பெறும். கடந்த 4 ஆண்டுகளாக கொடநாட்டில் ஓய்வு எடுத்த

ஜெயலலிதா, தமிழக திட்டங்களை குறை சொல்லுவது தவறு. ஜெயலலிதா எப்படி பொதுமக்களை சந்தித்து திட்டங்களை வழங்குவார். பொதுமக்களுக்கு என்ன தேவை என்று அவர்களுக்கு தெரியுமா?

காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பிரச்சாரம் செய்யப்போவதாக கூறும் சீமான் சுயவிளம்பரத்துக்காக அவ்வாறு பேசி வருகிறார் என்றார்.

மக்கள் மனதை அறியாதவர் ஜெ. சுய விளம்பரம் தேடும் சீமான்: யுவராஜ்

நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டம் கோவை ராஜவீதியில் நடை பெற்றது. கூட்டத்தில் கட்சியின் முதன்மை ஒருங்கிணைப்பாளரும் டைரக்டருமான சீமான் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:-

தமிழகத்தில் புதிய மாற்றம் தொடங்கி இருக்கிறது. சாதிக்காக, மதத்துக்காக, கூடிய தமிழர்கள் இன்று தமிழ் என்ற பொது இனத்துக்காக கூட தொடங்கி உள்ளனர். இது காலம் கடந்து நடப்பது ஏமாற்றம் அளிக்கிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னதாக இந்த உணர்வு ஏற்பட்டிருந்தால் இலங்கையில் தமிழீழம் மலர்ந்திருக்கும். அங்குள்ள லட்சக்கணக்கான தமிழர்களை காப்பாற்றி இருக்க முடியும்.

இதை உணர்ந்து செய்வதறியாமல் நிர்கதியாக நிற்கும் தமிழர்களை ஒருங்கிணைப்பதற்காகவே நாம் தமிழர் கட்சி உள்ளது. மாற்றத்துக்கு நாம் தயாராக வேண்டும். எகிப்தும், லிபியாவும் நமக்கு உணர்த்துவது இதைதான். ஈழத்தில் தமிழர்களின் அழிவுக்கு காரணமான காங்கிரஸ் கட்சியை தேர்தலில் தமிழர்கள் தோற்கடிக்க வேண்டும். கற்ற தமிழை விற்றுப் பிழைக்கின்ற வியாபாரிகள், சுயமரியாதை, தன்மானம் குறித்து பேசக்கூடாது. அதற்கு அவர்களுக்கு தகுதி இல்லை.

இவ்வாறு சீமான் பேசினார்.

இந்து மக்கள் கட்சி நிறுவன தலைவர் அர்ஜூன் சம்பத், பெரியார் திராவிடர் கழக பொது செயலாளர் ராமகிருஷ்ணன் ஆகியோரும் சிறப்புரையாற்றினார்கள். இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர்கள் ஞானசம்பந்தன், செந்தில்குமார், மாவட்ட தலைவர் மாணிக்கம், நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் கார்வண்ணன், மக்கள் ஜனநாயக கட்சி அஸ்லாம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தமிழகத்தில் புதிய மாற்றம் ஏற்பட்டுள்ளது; சீமான் பேச்சு

ஊட்டி: ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் ஆர ராசாவை மட்டும் கைது செய்தது உள்நோக்கம் கொண்டது, என்றார் இயக்குநர் சீமான்.

நாம்தமிழர் அமைப்பின் மாநில தலைவர் சீமான் ஊட்டியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில், தமிழ்நாட்டில் வரவுள்ள சட்டப் பேரவைத் தேர்தலின்போது, காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளில் அந்தக் கட்சி வேட்பாளர்களை எதிர்த்து தீவிர பிரச்சாரம் செய்வேன்.

ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் காங்கிரஸ் அரசிந் செயல்பாடு சந்தேகம் தருவதாக உள்ளது. ஆதர்ஷ் அடுக்குமாடி ஊழல், காமன்வெல்த் ஊழல் உள்ளிட்ட ஊழல்களின் சிக்கியவர்களை ஒன்றும் செய்யாமல், ஸ்பெக்ட்ரம் ஊழலில் சிக்கிய ஆ.ராசாவை மட்டும் கைது செய்து நடவடிக்கை எடுப்பதில் உள்நோக்கம் உள்ளது என்றார்.

முன்னதாக கோவையில் நிருபர்களிடம் பேசிய அவர், தமிழகத்தை ஆண்ட கட்சிகள், ஆளும் கட்சிகள் தங்களது கருத்துக்களை வெளிப்படுத்த விரும்பிய இடத்தில் சுவரொட்டிகளை வைத்து கொள்கிறது. ஆனால் நாம் தமிழர் கட்சி சார்பில் சுவரொட்டிகள் வைக்க அரசு அனுமதிப்பது இல்லை.

இறையாண்மைக்கு எதிராக பேசுவேன் என்று யூகித்து கொண்டு அனுமதி மறுப்பது தவறானது. என்னுடைய பேச்சை கேட்கலாமா? வேண்டாமா? என்று மக்கள் முடிவு செய்ய வேண்டும் அதிகாரிகள் முடிவு செய்ய கூடாது. கருத்து தெரிவிக்கும் சுதந்திரத்தை அளிக்க வேண்டும்.

தமிழ்நாட்டை தமிழர்கள் தான் ஆளவேண்டும். தேசிய கட்சிகளின் ஆட்சி தேவையில்லை. எனவே சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் பிரசாரம் செய்வோம். இதற்காக மற்றவர்களை ஆதரிக்கவும் மாட்டோம். போட்டியிடவும் மாட்டோம். மக்கள் இயக்கமாகவே செயல்படுவோம் என்றார்.

தமிழ்நாட்டை தமிழர்கள் தான் ஆளவேண்டும்-சீமான்

சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக நாம் தமிழர் இயக்கம் பிரசாரம் செய்யும் என்று நாம் தமிழர் இயக்க தலைவர் டைரக்டர் சீமான் கூறினார். சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் நாம் தமிழர் இயக்க கூட்டம் நடந்தது.

மாநில தலைவரும், சினிமா டைரக்டருமான சீமான் கலந்து கொண்டு பேசியதாவது:-

இலங்கையில் அப்பாவி தமிழர்கள் இறக்க காரணமாக இருந்தது காங்கிரஸ் கட்சி. தி.மு.க. தலைவர் கருணாநதி கடந்த 5 ஆண்டுகளாக ஆட்சி செய்தும் முடியும் தருவாயில் குடிசை வீடுகளை மாற்றி காங்கிரட் வீடுகள் கட்டி தருவதாக கூறுகிறார். இந்த திட்டத்தை முன்பே செய்திருக்க வேண்டும். ஆட்சி முடியும் தருவாயில் தற்சமயம் அறிவிக்கிறார்.

தி.மு.க. ஆட்சியில் தெருவில் நூலகங்கள் இல்லை. ஆனால் தெருக்கள் தோறும் பிராந்தி கடைகள் (டாஸ்மாக்) உருவாகியுள்ளன. வைகை ஆற்றில் தண்ணீர் இல்லை. ஆனால் 60 அடி ஆழத்திற்கு பொக்லைன் கொண்டு மணல் அள்ளுகிறார்கள்.

இவ்வாறு மணல் அள்ளு வதால் குடிநீர் திட்டமும் அடியோடு பாதிக்கிறது. மேலும் விவசாய விளை நிலங்களின் உற்பத்தியும் பாதிக்கிறது. இந்தியாவில் ஒரு லட்ச விவசாயிகள் பட்டினியால் இறக்கிறார்கள். ஆனால் மத்திய அரசின் உணவு கிடங்கில் உணவு பொருட் கள் மக்கி மக்களுக்கு பயன் படவில்லை.

பாராளுமன்றத் தில் தமிழக மீனவர்கள் இறந்தால் இந்தியன் இறந்து விட்டார் என கூறுகிறார்கள். தமிழன் இறந்து விட்டதாக யாரும் கூறவில்லை. காங்கிரஸ் கட்சி காமன் வெல்த் ஊழல், பீரங்கி ஊழல், 2ஜி ஸ்பெக்டரம் போன்ற ஊழலில் சிக்கி திணறுகிறது.

காங்கிரஸ் கட்சி நமக்கு எதிரி. காங்கிரஸ் கட்சியை தோற்கடிக்க நாம் தமிழர் இயக்கத்தினர் வீடு வீடாக சென்று தேர்தலில் கை சின்னத்திற்கு ஓட்டளிக்க கூடாது என மக்களிடத்தில் தெளிவாக பிரசாரம் செய்ய வேண்டும். காங்கிரஸ் கட்சியை தேர்லில் தோற்கடித்து விட்டு இதே இடத்தில் மீண்டும் வெற்றி கூட்டங்கள் நடத்துங்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்துக்கு செல்வ ராஜ் தலைமை தாங்கினார். பழ.செல்வராஜ் முன்னிலை வகித்தார். இந்த ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட ஒருங் கிணைப்பாளர் தீனதயாளன், கவிஞர் அமீர், புலவர் தமிழ் கூத்தன், கோட்டைக்குமார் உள்பட பலர் பேசினார்கள். ஜெயக்குமார் வரவேற்றார். முடிவில் சதீஷ் நன்றி கூறினார்.

சட்டசபை தேர்தலில் காங்கிரசுக்கு எதிராக பிரசாரம் டைரக்டர் சீமான் பேட்டி

சுமத்த 'ஆபரேஷன் கடல் சிங்கம்'... இந்திய - இலங்கை அரசுகளின் சதி!: சீமான்

சென்னை: விடுதலைப் புலிகள் மீது அபாண்ட பழி சுமத்த, தமிழக மீனவர்களைக் கொல்லும் மிகப் பெரிய சதித் திட்டத்தை இலங்கை - இந்திய அரசுகள் ஆபரேஷன் கடல் சிங்கம் என்ற பெயரில் நடத்த உள்ளதாக நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் விடுத்துள்ள அறிக்கை:

"தமிழக மீனவர்கள் இதுவரை 540க்கும் மேற்பட்டோர் சிங்கள கடற்படையால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் தமிழகம் எங்கும் எழுந்துள்ள கடும் எதிர்ப்பின் காரணமாக இந்திய அரசு தனது வெளியுறவு செயலர் நிருபமாராவ் கண்துடைப்பாக உடனே இலங்கைக்கு அனுப்பியது.

தமிழகத்திற்கான சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் நடை பெற்று வரும் மீனவர் படுகொலைகள் தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணியின் வெற்றி வாய்ப்பை கேள்விக் குறியாக்கும் என்பதே கடந்த 20 ஆண்டுகளாக எவ்வித எதிர்ப்பும் காட்டாது கள்ள மவுனம் காத்த மத்திய அரசு இப்போது புதிதாக பெயரளவுக்கு கண்டனம் தெரிவிப்பதற்கும் வெளியறவு செயலர் நிருபமாராவ் திடீர் இலங்கை பயணத்திற்கும் உண்மை காரணமாகும்.

இலங்கை அரசு தனது தமிழின அழிப்பு நடவடிக்கை தொடர்வதற்கு தமிழகத்தில் தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி மீண்டும் ஆட்சி அதிகாரத்தில் அமர்வதையே விரும்புகின்றது.

இதனால் சிங்கள ராஜபக்சே அரசு மிகப்பெரிய சதி நட வடிக்கை ஒன்றை அரங்கேற்ற முடிவு செய்து, அதற்கான ஆயத்தங்களை மேற்கொண்டு வருகின்றது எனவும் அதற்கு இந்திய அரசு மறைமுக உதவி புரிவதாகவும் 'ஆபரேஷன் கடல் சிங்கம்' என்ற திட்டத்துடன் இது நடைமுறைப்படுத்த உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி இலங்கையில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள 'முன்னாள் போராளிகள்' என்று கூறப்படும் சிலர் தேர்ந்தெடுக்கப்பட்டு தீவிர பயிற்சிகள் வழங்கப்பட்டு வருவதாகவும் அதன்படி, ஆயுதங்கள் சகிதம் கடற்படை உடைகளில் அவர்கள் இலங்கையின் கடற்படை வழங்கும் படகில் தமிழக மீனவர்கள் நடமாடும் பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு,

அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் திட்டம் மேற் கொள்ளப்படலாம். அந்த வேளையில் அங்கு முன்கூட்டியே திட்ட மிட்டபடி வருகை தரும் சிங்கள கடற்படை அவர்கள் மீது எதிர்தாக்குதல் தொடுத்து தமிழக மீனவர்களை காப்பாற்றுவது போன்று திட்ட மிடப்பட்டுள்ளது.

மீனவர்கள் மீதான தாக்குதலில் ஈடுபட்டவர்கள் தமி ழீழ விடுதலைப்புலிகள் அமைப்பை சேர்ந்தவர்கள் என்று அறிவித்து விட்டு கைது செய்யப்படுவார்கள். இதுவரை தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் இவர்களே என்ற விதத்தில் இந்தியா வுக்கும் உலகின் பார்வைக்கும் சிங்கள அரசினால் தகவல்கள் வழங்கப்படும் நயவஞ்சக திட்டம் இருப்பதாக அறிய முடிகிறது. இதுவே 'ஆபரேஷன் கடல் சிங்கம்' பெயரினாள செயல் திட்டமாகும்.

தமிழக மீனவர்கள் மீது தமது கடற்படையினர் தாக்குதல் எதுவும் நடத்தவே இல்லை என்று நிராகரித்த சிங்கள அரசு, மூன்றாவது சக்தி ஒன்று இந்த தாக்குதல்களை நடத்தி இருக்கலாம் என்று கடந்த மாதம் கூறியது இந்த திட்டத்தின் அடிப்படையில்தான்.

தனக்கு ஆதரவான காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி தமிழ்நாட்டில் மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கு உதவி புரிவது, விடுதலைப்புலிகள் மீதான வெறுப்பை தமிழக மக்கள் மனங்களில் விதைப் பது, தன் மீதான கொலைப் பழியை சர்வதேச அளவில் மறைப்பது ஆகியவையே சிங்கள அரசின் ஆபரேஷன் கடல் சிங்கம் திட்டத்தின் நோக்கமாகும்.

ஆகவே தமிழர்கள் குறிப்பாக மீனவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் இந்த சதி திட்டத்திற்கு பலியாக கூடாது என்றும் கேட்டுக் கொள்கிறேன்", என்று தெரிவித்துள்ளார்.

புலிகள் மீது பழி சுமத்த 'ஆபரேஷன் கடல் சிங்கம்'... இந்திய - இலங்கை அரசுகளின் சதி!: சீமான்

மாதவனை வைத்து தம்பி ஹிட் படம் கொடுத்தவர் சீமான். தற்போது அரசியல் கட்சி துவங்கியுள்ளார்.இவர் அடுத்து விஜய் நடிக்க புதுப்பட மொன்றை இயக்கப் போவதாக பேச்சு அடிபடுகிறது. இருவரும் இதற்காக சமீபத்தில் சந்தித்து பேசினர்.

விஜய்யுடன் சீமான்

சென்னை: நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமானை, முதல்வர் கருணாநிதிக்கு எதிராக பொது வேட்பாளராக களம் இறக்குகிறது அதிமுக.

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, தனக்குச் சாதகமான முறையில் அனைத்தையும் மாற்றும் வேலையில் படு மும்முரமாக, கில்லாடித்தனமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். அத்தனை பேரும் கூட்டணி குறித்து கவலையில் உள்ள நிலையில் இவர், கூட்டணியைத் தாண்டி வேறு பல முக்கிய விஷயங்களையும் கவனத்தில் கொண்டு காய் நகர்த்தி வருகிறார்.

ஜாதி ரீதியாக, உணர்வு ரீதியாக திமுகவுக்கு எதிராக உள்ளவற்றை ஒருங்கிணைத்து தன் பக்கம் திருப்ப முயன்று வருகிறார் ஜெயலலிதா. அதில் ஒன்றுதான் சீமானை அதிமுக கூட்டணிக்கு ஆதரவாக திருப்பியது.

ஈழத்தில் நடந்த மகா அக்கிரமமான போர், ஈழப் போர் கோரமாக முடிந்த அவலம் உள்ளிட்டவற்றில் முதல்வர் கருணாநிதிக்கு எதிராக கடும் அதிருப்தி நிலவி வருவதை உணர்ந்த ஜெயலலிதா இப்போது அத்தனையையும் ஒரே வடிகாலாக்கி, அதிமுக பக்கம் திருப்ப முனைந்துள்ளார் சீமான் மூலமாக.

இந்தப் பணியை ஜெயலலிதாவுக்காக வைகோ செய்து முடித்துள்ளார். வருகிற சட்டசபைத் தேர்தலில் முதல்வர் கருணாநிதிக்கு எதிராக சீமானை பொது வேட்பாளராக்கப் போகிறது அதிமுக. நாம் தமிழர் கட்சி சார்பாகவே இத்தேர்தலில் போட்டியிடப் போகிறார் சீமான். அவருக்கு அதிமுக, மதிமுக, இடதுசாரிகள் உள்ளிட்ட அதிமுக கூட்டணி ஆதரவு அளிக்கும்.

இந்தத் திட்டத்திற்கு சீமானும் சம்மதித்து விட்டார். இதை நேற்று வைகோவை சந்தித்துப் பேசிய பின்னர் செய்தியாளர்களிடம் சீமானே தெரிவித்தார். தான் தேர்தலில் முதல்வரை எதிர்த்துப் போட்டியிடப் போவதாக அவரே அறிவித்தார்.

இதற்கிடையே முதல்வருக்கு எதிராக சீமானை நிறுத்த வேண்டும் என்ற கருத்து நேற்று பகிரங்கமாகவே ஒரு அரங்கில் வைக்கப்பட்டது. தமிழறிஞரும், ஈழ விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் கேவலமான செயல்பாடுகளை பகிரங்கமாக கண்டித்து அக்கட்சியை தூக்கி எறிந்து விட்டு வெளியேறியவருமான தமிழருவி மணியன் எழுதிய நூல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது.

இந்த விழாவின்போது முதல்வருக்கு எதிராக சீமானை பொது வேட்பாளராக்க வேண்டும் என்ற கருத்து பலமாக வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பழ. நெடுமாறன், நடிகர்கள் நாசர், மணிவண்ணன் மற்றும் சீமான் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். மதிமுக சார்பில் மல்லை சத்யாகலந்து கொண்டார். திமுகவுடன் நெருங்கி வந்து கொண்டிருப்பதால் ஈழ விவகாரம் குறித்து இப்போதெல்லாம் ஒதுங்கிப் போய்க் கொண்டிருக்கும் பாமக சார்பிலும் ஒருவர் கலந்து கொண்டார். அவர் எம்.எல்.ஏ. வேலுச்சாமி.

நிகழ்ச்சியில் பேசிய அனைவரும் (பாமகவைத் தவிர) திமுக, காங்கிரஸ் கூட்டணிய வேரறுக்க வேண்டும், வீழ்த்த வேண்டும் என்று ஆவேசமாகப் பேசினர். ஒருவர் பாமகவைக் கண்டித்துப் பேசியதால் சலசலப்பும் ஏற்பட்டது. 

இலங்கை இன அழிப்புப்போர் குறித்த 300 புகைப்படங்களுடன் கூடிய அரிய தொகுப்பாக என்ன செய்ய வேண்டும் இதற்காக என்ற இந்த நூல் 
உருவாகியுள்ளது.

மொத்தத்தில் தமிழ் ஈழ ஆதரவாளர்களின் கோபத்தையும், குமுறலையும் சீமான் பக்கம் திருப்பி அவரை வெற்றி பெற வைத்து முதல்வர் கருணாநிதியை வீழ்த்த அதிமுக வகுத்துள்ள வியூகம் தெளிவாகியுள்ளது

முதல்வர் கருணாநிதிக்கு எதிராக பொது வேட்பாளராக களமிறக்கப்படுகிறார் சீமான்

முக நூல்

Popular Posts