background img

புதிய வரவு

Showing posts with label salem. Show all posts

சேலம்: நடிகர் விஜய் அ.தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பதை எதிர்த்து சேலத்தில் விஜய் மக்கள் இயக்கத்தை கலைத்து, உறுப்பினர் கார்டுகளை தீவைத்து எரித்தனர் ரசிகர்கள்.

நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணிக்கு நடிகர் விஜய்யின் ரசிகர் மன்ற அமைப்பான விஜய் மக்கள் இயக்கம் ஆதரவு தெரிவித்துள்ளது. இதனை திருச்சியில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை சந்தித்தப் பின்னர், எஸ்.ஏ.சந்திரசேகரன் அறிவித்தார்.

நடிகர் விஜய்யின் இந்த முடிவுக்கு, தமிழகத்தின் பல பகுதிகளில் உள்ள விஜய் மக்கள் இயக்கத்தினர் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. குறிப்பாக சேலத்தில் அவருடைய ரசிகர்கள் இடையே எதிர்ப்பு ஏற்பட்டு உள்ளது. ஏற்கெனவே இங்கு விஜய் ரசிகர்கள் திமுக - அதிமுக என இரு பிரிவாக நின்று சண்டை போட்டுக் கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் அதிமுக ஆதரவு நிலைப்பாட்டை விஜய் எடுத்துள்ளதால், இயக்கத்தையே கலைத்துவிட்டனர் ரசிகர்கள்.

சேலம் அழகாபுரம் பகுதியில் இருந்த, இளைய தளபதி விஜய் போக்கிரி மக்கள் இயக்கத்தை கலைத்ததோடு, உறுப்பினர் அட்டைகளையும் தீயில் போட்டுக் கொளுத்தினர் ரசிகர்கள்.

மன்ற தலைவர் ஆசைதம்பி, செயலாளர் மணிகண்டன், பொருளாளர் சசி உள்ளிட்டோர், மன்றத்தின் பிளக்ஸ் பெயர் பலகையையும் கிழித்து எறிந்தனர். ஆவேசமாக விஜய் எதிர்ப்பு கோஷங்களை முழங்கினர். அதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து மன்ற ரசிகர்கள் கூறும்போது, "விஜய் ரசிகர்மன்றத்தில் அனைத்து அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களும் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த நிலையில் விஜய் ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துள்ளார்.

ரசிகர்களை கலந்து ஆலோசிக்காமல் இப்படி ஒரு முடிவு எடுத்தது வருத்தம் அளிக்கிறது. எங்களை பொருத்தவரை நாங்கள் தி.மு.க.வின் ஆதரவாளர்கள். ஆனால் விஜய் அ.தி.மு.க.வுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துள்ளதால் நாங்கள் மன்றத்தை கலைத்துவிட்டோம்," என்றனர்.

மதுரை மற்றும் காஞ்சிபுரம் பகுதிகளிலும் விஜய் முடிவுக்கு, ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

அதிமுகவுக்கு ஆதரவுக்கு எதிர்ப்பு: சேலத்தில் விஜய் மக்கள் இயக்கம் கலைப்பு!!

சேலம், ஜன. 9: தேமுதிகவை யாரிடமும் அடகு வைக்க மாட்டேன்; நமது ஆதரவு இல்லாமல் யாரும் வெற்றி பெற முடியாது என்றார் விஜயகாந்த்.
மக்கள் உரிமை மீட்பு மாநாடு என்ற பெயரில் தேமுதிக சேலத்தில் ஞாயிற்றுக்கிழமை மாநாடு நடத்தியது.

இதில் விஜயகாந்த் பேசியது:
ஏழைகள் இருக்கும்வரை இலவசங்கள் தொடரும் என்கிறார் முதல்வர் கருணாநிதி. ஆனால் திமுக அரசு இருக்கும் வரை ஏழைகள் இருப்பார்கள் என்பதுதான் உண்மை. ஊழல் இருப்பதால்தான் வறுமை நீடிக்கிறது. எனவே வறுமையை ஒழிக்க வேண்டும் என்றால் ஊழலை ஒழிக்க வேண்டும். அதைத்தான் நாங்கள் சொல்கிறோம்.

கருணாநிதி அரசு போடும் திட்டங்களின் பலன் மக்களுக்கு சென்று சேருவதைப் போல் தெரியும். ஆனால் கடைசியில் அதன் பலன் முழுவதும் கருணாநிதி குடும்பத்துக்குதான் சென்று சேருகிறது. இலவச தொலைக்காட்சிப் பெட்டி கொடுத்தோம் என்கிறார். ஆனால் அந்த டிவிகளுக்கு கொடுத்த கேபிள் இணைப்புகள் மூலம் யாருக்குப் பலன் கிடைத்தது?
அம்பேத்கர், கக்கன், ஜெகஜீவன்ராம் போன்ற தலைவர்களால் அந்தச் சமுதாயத்துக்கு பெருமை கிடைத்தது. ஆனால் ஊழல் செய்தவர்களை தலித் என்று கூறி காப்பாற்ற முயற்சிக்கிறார் கருணாநிதி.

மனு நீதியை மறுபிறவி எடுக்க விடமாட்டோம் என்கிறார் கருணாநிதி. உண்மையில் கருணாநிதியின் குடும்ப நீதிதான் இன்று மனு நீதியைப் போல் பிறவி எடுத்துள்ளது. அந்த மனு தர்மத்தைத்தான் இன்று ஒழிக்க வேண்டும். இளைஞர்களுக்கு வேலை கிடைத்தால்தான் மகிழ்ச்சி அடைவேன் என்கிறார். ஆனால் 5 முறை முதல்வராக இருந்தபோது ஏன் இதைச் செய்யவில்லை?
எனது தொலைபேசி ஒட்டு கேட்கப்படுகிறது: தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. குற்றச் செயல்களைத் தடுக்க வேண்டிய காவல்துறை இன்று மற்ற கட்சிக்காரனை வேவு பார்க்கும் வேலையைச் செய்கிறது. எனது தொலைபேசி கூட ஒட்டுக் கேட்கப்படுகிறது. சட்டம், ஒழுங்கு சீரழிந்து பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் கூட படுகொலை செய்யப்படும் அவல நிலை உள்ளது. காவல்துறையின் இந்த ஆட்டம் வெறும் 4 மாதங்கள் மட்டுமே. காவல்துறை உள்ளிட்ட அனைத்துத் துறைகளும் விரைவிலேயே மாற்றி அமைக்கப்படும்.

ஒரு முருங்கைக்காய் 11 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இது குறித்து கேட்டால் ஒரு கிலோ அரிசி 1 ரூபாய்க்குக் கொடுக்கிறோம் என்கிறார். இவர்கள் தரும் அரிசி கால்நடைகளுக்கும் கடத்தல்காரர்களுக்கும்தான் பயன்படுகிறது. மாறி மாறிப் பேசுவதில் கருணாநிதி வல்லவர். முன்பு வெறும் மஞ்சள் பையைத் தூக்கிக் கொண்டு சென்னைக்கு வந்தவன் நான் என்றார். இப்போது கிராமத்தில் திருடர்கள் கொள்ளையடிக்கும் அளவுக்கு வசதி உடைய வீட்டில்தான் பிறந்தேன் என்கிறார்.

""ஊழலுக்கு நான் நெருப்பு'' என்கிறார். உண்மையில், ""ஊழலுக்கு நான் பொறுப்பு'' என்றுதான் கூறியிருக்க வேண்டும். காமராஜர் கல்வி கொடுத்தார். எம்.ஜி.ஆர். சத்துணவு கொடுத்தார். கருணாநிதியோ ஊழலை மட்டுமே செய்கிறார்.

தமிழர்களின் உரிமையைக் கடுகளவும் விட்டுக்கொடுக்க மாட்டேன் என்கிறார். ஆமாம் கடுகளவு அல்ல கடலளவுதான் விட்டுக் கொடுப்பார். கச்சத்தீவு, இலங்கைத் தமிழர் படுகொலை என பல உதாரணங்களைச் சொல்லலாம்.
அரக்கன் கம்சனை கிருஷ்ண பரமாத்மா வீழ்த்தினார். கருணாநிதி ஆட்சி என்ற அரக்கனை வீழ்த்தும் கிருஷ்ண பரமாத்மாக்களாக தமிழக மக்கள் முன்வர வேண்டும். தேர்தல் கூட்டணி பற்றி நான் என்ன சொல்வேன் என்பதைக் கேட்க எல்லோரும் ஆவலாக உள்ளனர்.

அரக்கன் ஆட்சியை வீழ்த்த நாம் கூட்டணி வைக்க வேண்டுமா? வேண்டாமா? வேண்டும் என்று விரும்புவோர் கையைத் தூக்குங்கள் (பெரும்பான்மையானோர் கையைத் தூக்கினர்).

சட்ட சபையில் ஆம் என்று கூறுவோரே அதிகமாக இருப்பதால் இது நிறைவேற்றப்படுகிறது என்று கூறுவார்கள். ஆனால் இப்போது கூட்டணி விஷயத்தை நான் பார்த்துக் கொள்கிறேன். கூட்டணி பற்றியோ, கட்சி வளர்ச்சி பற்றியோ யாரும் கவலைப்பட வேண்டாம். கூட்டணி பற்றி முடிவு செய்ய எனக்கு செயற்குழு, பொதுக்குழுவில் அதிகாரம் அளித்துள்ளீர்கள், அந்தக் கடமையை நான் சரியாக நிறைவேற்றுவேன்.

எனினும் கட்சியையோ கட்சித் தொண்டர்களையோ யாரிடமும் அடகு வைக்க மாட்டேன். சொத்துகளை இழந்தாலும் தொண்டர்களின் தன்மானத்தை இழக்க விடமாட்டேன். எத்தனையோ கட்சிகள் பிற கட்சிகளிடம் அடிமைகளாக உள்ளனர். நான் உங்களை யாரிடமும் அடிமையாக்க மாட்டேன். நம் கட்சியின் ஆதரவு இல்லாமல் யாரும் வெற்றி பெற முடியாது. நம் ஆதரவு இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது' என்றார் விஜயகாந்த்.

தேமுதிகவை அடகு வைக்கமாட்டேன்: சேலம் மாநாட்டில் விஜயகாந்த் சூளுரை

எதிர்க்கட்சிகள் மத்தியில் கூட்டணி உருவாகாமல் தடுக்க, ஆளுங்கட்சி சதி செய்து இருப்பதாக, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் நேற்று, "பகீர்' தகவலை வெளியிட்டுள்ளார்.

"மக்கள் உரிமை மீட்பு மாநாடு' என்ற பெயரில், சேலத்தில் தே.மு.தி.க., மாநாடு, விஜயகாந்த் தலைமையில் இன்று நடக்கிறது. இதுகுறித்த விளம்பரங்கள் பத்திரிகைகளில் வெளியாகி வருகின்றன. இதில், கட்சி நிர்வாகிகள் பெயரில், அவர்களுக்கே தெரியாமல் சில விளம்பரங்கள் வெளிவந்துள்ளதாக விஜயகாந்த் நேற்று திடீர் குற்றச்சாட்டு ஒன்றை கூறியுள்ளார்.

இதுகுறித்து தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் நேற்று வெளியிட்ட அறிக்கை: சேலத்தில் தே.மு.தி.க., சார்பில் நடக்கும் மாநாட்டை ஒட்டி, கட்சியினர், தொண்டர்கள், ஆதரவாளர்கள் பத்திரிகைகளில் விளம்பரம் அளித்து வருகின்றனர். தமிழகத்தில், நடந்து வரும் மோசமான கருணாநிதி ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்பதையே குறிக்கோளாக கொண்டு, மக்கள் உரிமை மீட்பு மாநாடு நடத்தப்படுகிறது. சற்றும் எதிர்பாராத வகையில், 7ம் தேதி (நேற்று முன்தினம்), மாலை நாளிதழ் ஒன்றில், முக்கிய எதிர்க்கட்சியான அ.தி.மு.க.,வின் தலைமையை விமர்சித்து தே.மு.தி.க., நிர்வாகிகள் பெயரில் ஒரு விளம்பரம் வந்துள்ளது. தே.மு.தி.க.,விற்கும், அந்த விளம்பரத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இன்றைய கொடுங்கோல் ஆட்சிக்கு எதிரானவர்கள் ஒன்று சேர்ந்து விடக் கூடாது என்ற தீய நோக்கத்தோடு, ஏற்கனவே ஊழலில் திளைக்கும், ஆளும் வர்க்கத்தினர் வேண்டுமென்றே, திட்டமிட்டு நச்சு நினைப்போடு, இந்த விளம்பரத்தை வெளியிட்டுள்ளனர். இந்த நயவஞ்சக நரிகளுக்கு சரியான பாடத்தை வரும் தேர்தலில் மக்கள் புகட்ட உள்ளனர்.

இந்த விஷமிகள் வேண்டும் என்றே வெளியிட்ட விளம்பரத்தை, அந்த பத்திரிகை ஏன் வெளியிட்டது என எங்களுக்கு புரியவில்லை. தே.மு.தி.க., நிர்வாகிகளான, கட்சி கொள்கை பரப்பு செயலர் வி.சி. சந்திரகுமார், மத்திய சென்னை மாவட்ட செயலர் செந்தாமரைக் கண்ணன், துறைமுகப் பகுதி செயலர் விசாகராஜன், ஆயிரம் விளக்கு பகுதி செயலர் ஆர்.கோவிந்தன் ஆகியோர் பெயரில், இந்த போலி விளம்பரம் வந்துள்ளதால், இந்த அற்ப காரியத்தை செய்த அந்த சமூக விரோதிகளை கண்டுபிடித்து, அவர்கள் மீதும், இதை வெளியிட்ட பத்திரிகை மீதும் அவதூறு வழக்கு தொடரப்படும். தே.மு.தி.க.,வை பொறுத்தவரை தெளிவான அரசியல் சிந்தனையுடன் இந்த மாநாட்டை நடத்துகிறது. எக்காரணத்தைக் கொண்டும், கருணாநிதி ஆட்சி மீண்டும் வர, தே.மு.தி.க., துணை போகாது என்பதை தமிழக மக்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு விஜயகாந்த் கூறியுள்ளார்.

அ.தி.மு.க.,வும், தே.மு.தி.க.,வும் வரவுள்ள சட்டசபை தேர்தலில் கூட்டணி அமைக்க திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வரும் நிலையில், இந்த அணி அமையாமல் இருக்க ஆளுங்கட்சி சதி செய்துள்ளதாக, விஜயகாந்த் தெரிவித்துள்ள குற்றச்சாட்டு தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. "தி.மு.க., ஆட்சி மீண்டும் வர, தே.மு.தி.க., துணை போகாது' என்று அவர் அறிவித்திருப்பதன் மூலம், அக்கட்சியின் நிலை என்ன என்பதையும் மாநாட்டுக்கு முன்பே அவர் தெளிவுபடுத்தியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.

அ.தி.மு.க., - தே.மு.தி.க., கூட்டணி உருவாகாமல் இருக்க சதி? அம்பலப்படுத்தினார் விஜயகாந்த்

சேலம்: சேலம் ஓமலூர் அருகே நடுப்பட்டியில் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். பட்டா மாற்றம் செய்ய ஆசிரியரிடம் ரூ. 6 ஆயிரம் வாங்கிய போது சிக்கினார். இதனையடுத்து கைது செய்யப்பட்ட அதிகாரி வெங்கடேசனிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலத்தில் லஞ்சம் வாங்கிய அதிகாரி கைது!

சேலம்: சேலம் ஓமலூர் அருகே நடுப்பட்டியில் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். பட்டா மாற்றம் செய்ய ஆசிரியரிடம் ரூ. 6 ஆயிரம் வாங்கிய போது சிக்கினார். இதனையடுத்து கைது செய்யப்பட்ட அதிகாரி வெங்கடேசனிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம்: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து மத்திய சிறைகளிலும் கைதிகளுக்கு பாட்டு, கவிதை, நடனப்போட்டி மற்றும் வாலிபால் விளையாட்டுப் போட்டிகள் நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது. தமிழகத்தில் சென்னை புழல், மதுரை, கோவை, திருச்சி, சேலம், நெல்லை, வேலூர், கடலூர் உள்ளிட்ட 10 இடங்களில் மத்திய சிறைகள் உள்ளன. ஆயிரத்துக்கும் மேற்பட்ட தண்டனைக் கைதிகளும், 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசாரணைக் கைதிகளும் அடைக்கப்பட்டு உள்ளனர்.

கைதிகளின் மன அழுத்தத்தைப் போக்க சிறைக்குள் என்.ஜி.ஓ.க்கள் மூலம் யோகா, தியான பயிற்சிகள், வாழ்வியல் திறன் பயிற்சிகள் ஏற்கனவே வழங்கப்பட்டு வருகின்றன. எந்த வகையிலும் குற்ற உணர்வு எழாமல் இருக்க வேண்டும் என்பதற்காக கைதிகளை ‘இல்லவாசிகள்’ என அழைக்கவும் சிறைத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

இந்நிலையில் முக்கிய விழாக்களின்போது கைதிகளின் மனம் மகிழும் வகையில் அவர்களுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடத்தவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. குறிப்பாக பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து கைதிகளுக்கும் பாட்டு, கவிதை, கட்டுரை, மியூசிக் சேர், நடனப்போட்டிகளும், வாலிபால் விளையாட்டுப் போட்டிகளும் நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது. சிறை காவலர்களுக்கும் வாலிபால் போட்டி நடத்தவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.

பொங்கல் பண்டிகை சிறை கைதிகளுக்கு டான்ஸ் போட்டி

முதல்வர் தலைமையில் மாவட்ட வாரியாக நடத்தப்படும் தி.மு.க., கருத்துகேட்பு கூட்டத்தில், அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், அவரது மகனும், எம்.எல்.ஏ.,வுமான ராஜா பற்றி சரமாரியான புகார்களை அடுக்க, எதிர் தரப்பு முடிவு செய்துள்ளது. கூட்டத்துக்கான தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. சட்டசபை தேர்தலில் ஐந்து முறை வெற்றி பெற்றதை காட்டிலும், 2011 தேர்தலில் எப்பாடுபட்டாவது வெற்றியை பெற வேண்டும் என்ற முனைப்பில், தி.மு.க., உறுதியாக உள்ளது. நான்கு ஆண்டுகள் பிரச்னையின்றி செயல்பட்ட தி.மு.க., அரசுக்கு, தற்போது நெருக்கடி முற்றியுள்ளது.
தேர்தல் நெருங்கும் வேளையில், ஸ்பெக்ட்ரம் ஊழல் பூதாகரமாக வெடித்துள்ளது, தி.மு.க.,வுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாவட்ட வாரியாக கட்சியினர் கருத்து கேட்பு கூட்டத்தை இரண்டு மாதத்துக்கும் மேலாக, தி.மு.க., தலைமை நடத்தி வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும், மாவட்ட செயலரின் அதிகாரப் போக்கு, கட்சி நிர்வாகிகளை மதிக்காதது, பொதுமக்களிடம் உள்ள அதிருப்தி போன்றவற்றை கட்சியினர் கூறி வருகின்றனர்.
இதுவரை, 18 மாவட்டங்களின் கருத்துகேட்பு கூட்டம் நடந்த நிலையில், இன்னும் 12 மாவட்டங்களுக்கு கூட்டம் நடத்த வேண்டியுள்ளது. இந்த வாரத்தில் சேலம், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களின் கூட்டம் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது. சேலம் மாவட்டத்தில், அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் உள்ளன. லோக்சபா தேர்தலின் போது, அமைச்சரின் ஆட்கள் அங்கம்மாள் காலனியில், 113 பேரின் இடத்தை கைப்பற்ற முயன்ற பிரச்னையை முன்வைத்து, அ.தி.மு.க.,வினர் செய்த பிரசாரத்தால், அக்கட்சி எளிதாக வெற்றி பெற்றது. 11 சட்டசபை தொகுதியிலும் குறைவான ஓட்டுக்களையே தி.மு.க., கூட்டணி பெற்றது. சேலம் மாநகரப் பகுதிகளில் ஓட்டு சதவீதம் வெகுவாக சரிந்திருந்தது.
இந்த சூழலில், அமைச்சரின் குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்கள் மூலம் நடந்த நில ஆக்கிரமிப்பு, கட்டப்பஞ்சாயத்து, சொத்து அபகரிப்பு, ரவுடியிசம் போன்ற சம்பவங்கள், தி.மு.க., மீதும், அமைச்சர் தரப்பு மீதும் மக்களுக்கு வெறுப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
ஓய்வு பெற்ற இன்ஸ்பெக்டர் உட்பட ஆறு பேர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அமைச்சரின் தம்பி மகன் சுரேஷ்குமார் கைதானதும், சேலம் மத்திய சிறைக்கு சென்று, அவரை அமைச்சர் நேரில் சந்தித்து வந்ததும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்ட தேர்தல் பார்வையாளராக வந்த முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலுவும், செயல்வீரர் கூட்டங்களில் பங்கேற்று மகிழ்ச்சியில்லாமல் வெளியேறியதும் குறிப்பிடத்தக்கது. சேலம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளையும் கைப்பற்ற, அ.தி.மு.க., கூட்டணி மும்முரமாக உள்ளது. அமைச்சர் மீது உள்ள குற்றச்சாட்டுக்களை பிரசாரம் மூலம் எடுத்துரைத்து, எளிதாக வெற்றியை பெற்று விடலாம் என்ற நம்பிக்கையில் அ.தி.மு.க., உள்ளது.
இதையெல்லாம் பட்டியலிட்டு, அமைச்சருக்கு எதிராக தி.மு.க.,வில் செயல்படும் ஒரு தரப்பு, கருத்து கேட்பு கூட்டத்தில் எடுத்துக்கூறி, தி.மு.க., தலைமை ஒரு நல்ல முடிவை அறிவிக்க வேண்டும் என வலியுறுத்த உள்ளது.
தமிழகத்தில் மற்ற மாவட்டங்களை காட்டிலும், தி.மு.க.,வுக்கு தற்போதைய சூழ்நிலையில், பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது சேலம் மாவட்டம் தான். இப்பிரச்னைக்கு முதல்வர் கருணாநிதி எவ்வாறு நிவாரணம் தேடுவார் என்பது தான், தி.மு.க.,வினரிடம் பரபரப்பாக நடைபெறும் விவாதமாகி விட்டது.
-நமது சிறப்பு நிருபர்-

தி.மு.க.,விற்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தும் சேலம் மாவட்டம்

முக நூல்

Popular Posts