background img

புதிய வரவு

Showing posts with label AIADMK. Show all posts

தமிழ்நாட்டில் அரிசி வாங்கும் குடும்ப அட்டை தாரர்களுக்கு மாதம் 20 கிலோ இலவச அரிசி வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா தேர்தல் வாக்குறுதி அளித்தார். அதன்படி வெற்றி பெற்று முதல்-அமைச்சர் பொறுப்பு ஏற்றதும் இலவச அரிசி வழங்கும் கோப்பில் ஜெயலலிதா கையெ ழுத்திட்டார்.

வருகிற 1-ந்தேதி முதல் இந்த திட்டம் தமிழ் நாட்டில் அமலுக்கு வருகிறது. அன்றைய தினம் முதல்-அமைச்சர் ஜெயலலிதா இலவச அரிசி வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கிறார். இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்துவது குறித்து உணவுத்துறை அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு ஆகியோர் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்கள். கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் கூட்டுறவுத்துறையின் உயர் அலுவலர்கள் கூட்டம் நடந்தது.

இதில் அமைச்சர் கூறியதாவது:-

முதல்-அமைச்சர் ஜெயலலிதா பதவியேற்ற உடனே அரிசி பெற தகுதியுடைய குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் இலவச அரிசி வழங்கப்படும் என ஆணையிட்டார். இலவச அரிசி அனைத்து ரேஷன் கடைகளிலும் ஜூன் 1-ந் தேதி முதல் வழங்கப்பட உள்ளது. இவ்வாறு வழங்கப்படும் இலவச அரிசியை குடும்ப அட்டைதாரர்களுக்கு தக்க ஏற்பாடுகளுடன் எவ்விதப் பிரச்சினைகளும் இன்றி வழங்கப்பட வேண்டும். அவ்வாறு வழங்கப்படும் அரிசி தரமானதாகவும், எடை குறைவின்றி வழங்கிட அலுவலர்கள் தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

தவறுகள் ஏற்படாத வகையில் அந்தந்த மண்டல இணைப்பதிவாளர்கள் தகுந்த முன் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இலவச அரிசியை குடும்ப அட்டைதாரர்கள் அவர்களின் வசதிக்கு ஏற்ப மாதத்தின் அனைத்து வேலை நாட்களிலும் நியாய விலைக்கடைகளில் பெற்றுக்கொள்ளலாம். மேலும் அனைத்து நியாய விலைக்கடைகளும் நாள் தோறும் குறிப்பிட்ட நேரத்தில் திறக்கப்படுகின்றனவா? என அலுவலர்கள் காலையிலேயே நேரடியாக சென்று ஆய்வு மேற்கொள்வதுடன், நியாய விலைக்கடை பணியாளர்கள் கடையின் பெயர் பலகையில் இருப்பு விவரப்பட்டியலை நாள்தோறும் பொதுமக்கள் அறியும் வண்ணம் எழுதி வைக்கின்றனரா? என கண் காணிக்க வேண்டும்.

நியாய விலைக்கடை பணியாளர்களும் தவறுகளுக்கு இடமளிக்காமல் சேவை மனப்பான்மையுடன் பணியாற்றிட வேண்டும் என்றார். கூட்டத்தில் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் யத்தீந்திர நாத் ஸ்வேன், கூடுதல் பதிவாளர்கள் அமுதவல்லி, அசோகன், பன்னீர்செல்வன், தமிழரசன், ராஜேந்திரன், சங்கரலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர். இதே போல் உணவுத்துறை அதிகாரிகள் கூட்டம் அமைச்சர் அக்ரி கிருஷ்ண மூர்த்தி தலைமையில் நடந்தது.

கூட்டத்தில் அமைச்சர் கூறியதாவது:-

நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்குகளில் அரிசி, சர்க்கரை, கோதுமை மற்றும் சிறப்பு பொது விநியோகத்திட்ட பொருட்கள் முன் நகர்வுக்கு ஏற்ற வகையில், போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டு, அத்தியா வசியப் பொருட்களின் இருப்பு தினசரி தீவிரமாக கண்காணிக்கப்பட வேண்டும். இருப்பு இல்லா நிலை தவிர்க்கப்பட வேண்டும். இந்திய உணவுக் கழகத் திடமிருந்து அரிசி மற்றும் கோதுமை நகர்பு செய்யும் போது அதன் தரத்தை உறுதி செய்த பின்பே நகர்வு செய்ய வேண்டும். தரம் அனைத்து நிலைகளிலும் உறுதி செய் யப்பட வேண்டும்.

இந்திய உணவுக் கழகத் திலிருந்து நகர்வு செய்யப்படும்போது அது முழுமை யாக நுகர்பொருள் வாணிபக்கழக கிடங்குகளுக்கு வந்து சேர்வது கண்காணிக்கப்பட வேண்டும். கிடங்குகளில் சமச்சீர் செய்யும்போது எடைக் குறைவு ஏற்படக்கூடாது. மறுநாள் தேவையை எதிர் நோக்கி போதுமான மூட்டைகள் சமச்சீர் செய்து இருப்பு வைத்த பின்பே கிடங்கை மூட வேண்டும். நியாய விலைக்கடைகளில் தரமற்ற பொருட்கள் வரப்பெற்றால் உடனடியாக உயர் அலுவலர்களுக்கு தெரிவித்து அதனை மாற்ற வேண்டும். அங்காடிகளில் இருப்பு வைத்திருந்தபோது தரக்குறைவு ஏற்பட்டிருப்பினும் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கிடக் கூடாது.

நியாய விலைக்கடை களின் எடைக்குறைவு ஏது மின்றி விநியோகம் செய்யப்பட வேண்டும். நியாய விலைக்கடைகளில் அனைத்து நாட்களி லும் அனைத்து பொருட்களும் விநியோகம் செய்யும் வகையில் இருப்பு பராமரிக்கப்பட வேண்டும். இது பகுதி அலுவலர்களால் முறையாக கண்காணிக்கப்பட வேண்டும். ரேஷன் கடை ஊழியர்கள் குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் பொதுமக்களிடம் கனிவுடன் நடக்க வேண்டும். சரியான நேரத்தில் அங்காடி களைத் திறந்து பொது விநியோகத் திட்டத்தை முறைப்படுத்த வேண்டும்.

காலாவதியான பொருட்களை குடும்ப அட்டைதா ரர்களுக்கு எக்காரணம் கொண்டும் வழங்குதல் கூடாது. இலவச அரிசி வழங்குவதை முறையாக விளம்பரம் செய்து 1-ந் தேதி முதல் செயல்படுத்துதல் வேண்டும். அதற்குத் தேவையான அரிசியை கிடங்குகளிலிருந்து அங்காடிக்கு முன் நுகர்வு செய்து வைத்தல் வேண்டும். வெளி ஆட்கள் அங்காடிகளில் இருப்பதை தடுத்திட ஏதுவாக பெயர் வில்லைகளை அணிந்து பணியாளர்கள் பணியாற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் கூட்டுறவு, உணவு நுகர்வோர் பாதுகாப்புத்துறை முதன்மைச் செயலாளர் ஜெயக்கொடி, உணவு வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையர் பாலச்சந்திரன், நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாக இயக்குநர் வீரசண்முகமணி, உணவுத் துறை உயர் அதிகாரிகள், மண்டல அலுவலர்கள், இணைப்பதிவாளர்கள், மாவட்ட வழங்கல் அலுவலர்கள், உதவி ஆணையாளர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்

ரேசன் கடைகளில் 1-ந்தேதி முதல் எல்லா நாட்களிலும் இலவச அரிசி பெறலாம்; அமைச்சர்கள் ஆய்வு கூட்டத்தில் முடிவு

 சென்னை: சமச்சீர் கல்வி திட்டம் நிறுத்தப்பட்டிருப்பதால் தமிழகத்தின் எதிர்கால மாணவர் சமுதாயம் பாதிப்புக்குள்ளாகும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்துக்குப் பின் அவர் அளித்த பேட்டி:

கேள்வி: சமச்சீர் கல்வியை அரசு நிறுத்தி வைத்திருக்கிறதே?

பதில்: சமச்சீர் கல்விக்கு தடை விதித்துள்ளது அதிமுக அரசு. சமச்சீர் கல்வித் திட்டம் மாணவர்கள், பெற்றோர்கள் என எல்லா தரப்பினரிடமும் ஆராய்ந்து, பல்வேறு குழுவினரிடம் கருத்து கேட்கப்பட்டு அமல்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தை ரத்து செய்வதால் மாணவர்கள் எதிர்காலம் பாதிக்கப்படும்.

கேள்வி: டெல்லி சென்ற நீங்கள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்திக்கவில்லையே?

பதில்: டெல்லியில் என்னை மத்திய மந்திரிகள் குலாம் நபி ஆசாத், ப.சிதம்பரம் ஆகியோர் சந்தித்தனர். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியே அழைப்பு விடுத்தாலும் நான் அவரை சந்திக்க மாட்டேன். கனிமொழி சிறையில் உள்ள நிலையில், சோனியாவை சந்திப்பது முறையாக இருக்காது என்பதால் சந்திக்கவில்லை.

கேள்வி: சட்ட மேலவை வராது என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருக்கிறாரே?

பதில்: தலைமை செயலகத்தை புனித ஜார்ஜ் கோட்டைக்கு மாற்றியதும், மேலவை வராது என்பதும் எதிர்பார்த்ததுதான்.

கேள்வி: திமுக ஆட்சியின் போது சொத்துக்கள் அபகரிக்கப்பட்டதாகவும், அவை பறிமுதல் செய்யப்படும் என்றும் ஜெயலலிதா கூறி இருக்கிறாரே?

பதில்: அதில் ஆட்சேபனை எதுவும் இல்லை. அப்படி சொத்து அபகரிக்கப்பட்டிருந்தால், அதை உரியவர்களிடம் ஒப்படைப்பதில் எந்த ஒரு தவறும் இல்லை.

கேள்வி: திமுக சார்பில் போராட்டம் நடத்தப்படுமா?

பதில்: இப்போது என்ன அவசரம்.

கேள்வி: திமுக தொண்டர்கள் விரக்தியில் இருக்கிறார்களா?

பதில்: தொண்டர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று ஏற்கனவே முரசொலியில் நானும் அன்பழகனும் வேண்டுகோள் விடுத்திருக்கிறோம்.

கேள்வி: பள்ளிக் கட்டண விவகாரத்தில் அரசு நேரடியாக தலையிடாது என்று ஜெயலலிதா கூறியுள்ளாரே?

பதில்: பத்திரிகையாளர்களாகிய நீங்கள் தலையிடுங்கள்.

கேள்வி: திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட பல்வேறு நலத்திட்டங்களை அதிமுக ஆட்சி ரத்து செய்துள்ளதே?

பதில்: தேர்தலில் அதிமுகவுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்தவர்கள் இதற்காக வருத்தப்பட வேண்டும் என்றார்.

மேலும் அவர் கூறுகையில், ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, சட்டரீதியாக நீதி நிலைநாட்டப்படும் என்ற உறுதியுடனும், துணிவுடனும் இருக்கிறார்.

சபாநாயகர் என்று தேதியை முடிவு செய்கிறாரோ அன்று நான் சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றுக் கொள்வேன்.

அரசின் நல்ல திட்டங்களுக்கு திமுகநிச்சயம் ஒத்துழைப்பு நல்கும். புதிதாக பதவியேற்ற அமைச்சர் மரியம் பிச்‌சை விபத்தில் இறந்தததற்கு திமுக தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது என்றார்.

அதிமுகவை வெற்றி பெறச் செய்தவர்கள் வருத்தப்பட வேண்டும்: கருணாநிதி

புதுச்சேரி: புதுச்சேரியில் முதல்வர் என்.ரங்கசாமி தனது அமைச்சரவையை வரும் 27ம் தேதி விரிவாக்க உள்ளார்.

அதிமுகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி ஆட்சியைப் பிடித்தார். 15 இடங்களில் அவரது கட்சியும் 5 இடங்களில் அதிமுகவும் வென்றன.

ஆனால், மெஜாரிட்டிக்கு 1 எம்எல்ஏ மட்டும் கிடைத்தால் போதும் என்ற நிலையில் காரைக்கால் நிரவி தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்டு வென்ற சிவக்குமாரை சேர்த்துக் கொண்டு ஆட்சியமைத்தார் ரங்கசாமி. இதையடுத்து ரங்கசாமிக்கு டோஸ் விட்டு தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டார். ரங்கசாமி துரோகம் செய்துவிட்டதாக ஜெயலலிதா கூறினார்.

இந் நிலையில் தனது அமைச்சரவையை வரும் 27ம் தேதி விரிவாக்கம் செய்யவுள்ளார் ரங்கசாமி. இந்த மாநிலத்தில் முதல்வரை சேர்த்து 6 அமைச்சர்களை நியமிக்கலாம் என்ற நிலையில் 27ம் தேதி 3 பேரை மட்டுமே அமைச்சர்களாக பதவியேற்க வைப்பார் ரங்சாமி என்கிறார்கள்.

இதில் சந்திரகாசு, ராஜவேலு, சபாபதி ஆகியோர் அமைச்சர் பதவி பெறுவார்கள் என்று தெரிகிறது.

இதைத் தவிர, மீதியுள்ள 2 அமைச்சர் பதவிகளுக்கு ரங்கசாமி உடனே யாரையும் நியமிக்கமாட்டார் என்று தெரிகிறது. ஜெயலலிதாவைச் சந்திக்க ரங்கசாமி முயன்று வருவதாகக் கூறப்படும் நிலையில் அவர் கோரினால் 2 பதவிகளை அதிமுகவுக்கு ரங்கசாமி விட்டுத் தரக் கூடும் என்கிறார்கள்.

ரங்கசாமிக்கு ஆதரவு அளித்து வரும் சுயேச்சை எம்எல்ஏ சிவக்குமார் சபாநாயகராக்கப்படலாம் என்று தெரிகிறது.

1 தொகுதியில் ரங்கசாமி ராஜினாமா:

இந் நிலையில் ரங்கசாமி தான் வெற்றி பெற்ற இரு தொகுதிகளில் ஒன்றான இந்திரா நகர் தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

அவர் இந்திரா நகர், கதிர்காமம் ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டிலும் வெற்றி பெற்றார்.

மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி இரண்டு தொகுதிகளில் வெற்றி பெறுபவர்கள் தங்களது வெற்றி அறிவிக்கப்பட்ட 14 தினங்களுக்குள் ஏதாவது ஒரு தொகுதி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இல்லை எனில் வெற்றிபெற்ற இரண்டு தொகுதிகளின் சட்டமன்ற உறுப்பினர் பதவியை இழக்க நேரிடும்.

இதையடுத்து ரங்கசாமி தனது இந்திரா நகர் தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதன் காரணமாக இந்திரா நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

புதுச்சேரி: அதிமுகவுக்கு 2 அமைச்சர்கள் பதவி தர ரங்கசாமி தயார்?

அதிமுக அரசின் முதல் அமைச்சரவைக் கூட்டம் கோட்டை தலைமைச் செயலகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் சில முக்கியத் திட்டங்களுக்கான அனுமதி கோரப்படும் எனத் தெரிகிறது.

14-வது சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. 33 அமைச்சர்களைக் கொண்ட அமைச்சரவை பொறுப்பேற்றுள்ளது. முதல்வர் ஜெயலலிதா, தான் பொறுப்பேற்ற முதல் நாளிலேயே ஏழு திட்டங்களுக்கான உத்தரவுகளில் கையெழுத்திட்டார்.

பட்டதாரி ஏழை பெண்களுக்கான திருமண நிதியுதவியை ரூ.50 ஆயிரமாக உயர்த்தவும், அரை சவரன் தங்கம் இலவசமாக வழங்கவும் உத்தரவிட்டார். 20 கிலோ இலவச அரிசி உள்ளிட்ட திட்டங்களுக்கும் உத்தரவிட்டுள்ளார். இலவச அரிசி திட்டம் ஜூன் 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என அரசு அறிவித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள கூட்டத்தில் பல முக்கியத் திட்டங்களுக்கு அமைச்சரவையின் ஒப்புதல் பெறப்படும் எனத் தெரிகிறது. சில திட்டங்கள் அடுத்த 10 நாள்களுக்குள் அமல்படுத்தப்பட இருப்பதால் அமைச்சரவைக் கூட்டத்தை உடனடியாகக் கூட்ட வேண்டிய அவசியம் இருப்பதாக தலைமைச் செயலக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்ட இரண்டாவது நாளிலேயே அமைச்சர்கள் அனைவருடனும் ஆலோசனை நடத்தினார் ஜெயலலிதா. சுமார் இரண்டரை மணி நேரத்துக்கும் மேலாக அந்தக் கூட்டம் நடைபெற்றது. இதேபோன்று, மூன்றாவது நாளும் அமைச்சர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். அமைச்சர்களுக்கான துறைகள் என்ன, அதன் தன்மைகள், கோப்புகளை எவ்வாறு கையாள்வது என்பன உள்ளிட்ட விஷயங்களை அமைச்சர்களுக்கு எடுத்துக் கூறினார் ஜெயலலிதா.

புதியவர்களுக்கு முதல் கூட்டம்: தமிழக அமைச்சரவையில் 24 பேர் புதியவர்கள். அவர்களுக்கு இது முதல் அமைச்சரவைக் கூட்டமாகும். ஞாயிற்றுக்கிழமை அமைச்சரவைக் கூட்டம் என்பதால் சனிக்கிழமை பணி இல்லாவிட்டாலும் பல அமைச்சர்கள் தலைமைச் செயலகத்திலேயே முகாமிட்டு இருந்தனர். துறைகள் பற்றிய விவரங்களை அதிகாரிகளிடம் கேட்டுத் தெரிந்த அவர்கள், அமைச்சரவைக் கூட்டத்தில் முதல்வர் கேள்விகளைக் கேட்டால் அதற்கு தங்களை தயார் செய்யும் வகையில் பணியாற்றியதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதிமுக அரசின் முதல் அமைச்சரவைக் கூட்டம்: கோட்டையில் இன்று நடைபெறுகிறது

சென்னை, மே 15: மூன்றாவது முறையாக தமிழகத்தின் முதல்வராக திங்கள்கிழமை பொறுப்பேற்க உள்ளார் ஜெயலலிதா. அவருடன் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 33 பேரும் அமைச்சர்களாக பதவிப் பிரமாணம் ஏற்க உள்ளனர். இவர்களுக்கான துறைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
திங்கள்கிழமை மாலை ஜெயலலிதாவும், அவரது அமைச்சரவை சகாக்களும் புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள தலைமைச் செயலகத்துக்கு வந்து பணிகளைத் தொடங்குவார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்றுள்ளது. இதைத் தொடர்ந்து, ஆட்சி அமைப்பதற்கான பணிகளை அந்தக் கட்சி தலைமை மேற்கொண்டுள்ளது. அதன்படி, அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் சென்னையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது. அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் அதிமுக பேரவைக் குழுத் தலைவராக ஜெயலலிதா தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கான தீர்மானம் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

ஆளுநரைச் சந்தித்தார்: அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், ஜெயலலிதாவிடம் அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, ஆளுநர் மாளிகைக்குச் சென்ற அவர், ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலாவைச் சந்தித்தார். அப்போது, தேர்தல் வெற்றிக்காக பூங்கொத்து கொடுத்து ஜெயலலிதாவுக்கு வாழ்த்துத் தெரிவித்தார் ஆளுநர்.

இதன்பின், ஆட்சி அமைப்பதற்கான உரிமையைக் கோரினார் ஜெயலலிதா. கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துடன் கூடிய கடிதத்தை ஆளுநரிடம் அளித்தார். இதன்பின் புறப்பட்டுச் சென்றார்.
இன்று பதவி ஏற்கிறார்: ஜெயலலிதாவின் கடிதத்தை ஏற்றுக் கொண்ட ஆளுநர் பர்னாலா, ஆட்சி அமைக்குமாறு அழைப்பு விடுத்துள்ளார். இதற்கான கடிதத்தை ஆளுநரின் செயலாளர் அனுப்பியுள்ளார்.

இதையடுத்து, ஜெயலலிதா தலைமையிலான புதிய அமைச்சரவை திங்கள்கிழமை பதவியேற்கிறது. 33 எம்.எல்.ஏ.க்கள் புதிய அமைச்சர்களாக பதவியேற்க உள்ளனர். அமைச்சர்களின் பெயர் பட்டியல் மற்றும் அவர்களுக்கான துறைகளும் ஞாயிற்றுக்கிழமை வெளியானது.
"சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் காலை 12.15 மணிக்கு பதவியேற்பு விழா நிகழ்ச்சி நடைபெறும்' என தலைமைச் செயலாளர் எஸ்.மாலதி தெரிவித்துள்ளார். இதையடுத்து, பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. முதல்வருக்கும், அமைச்சர்களுக்கும் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணத்தையும் ஆளுநர் செய்து வைக்கிறார்.

பதவியேற்பு விழாவில் பங்கேற்க அதிமுக அணியைச் சேர்ந்த கட்சித் தலைவர்கள், வெளி மாநிலங்களைச் சேர்ந்த முதல்வர்கள், முன்னாள் முதல்வர்கள் உள்ளிட்ட பலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி முதல்வர் இன்று சந்திப்பு: பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி திங்கள்கிழமை சென்னை வருகிறார். அப்போது, அந்த மாநிலத்தில் ஆட்சி அமைப்பது குறித்து ஜெயலலிதாவுடன் ஆலோசிக்கிறார்.

அனைவருக்கும் விருந்து: பதவியேற்பு விழா நிகழ்ச்சி முடிந்தவுடன் சென்னையில் உள்ள தாஜ் கோரமண்டல் ஓட்டலில் அனைத்து எம்.எல்.ஏ.க்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், கூட்டணிக் கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட பலருக்கும் சிறப்பு விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மாலையில் பணிகளை கவனிக்கிறார்: பதவியேற்ற பிறகு, திங்கள்கிழமை மாலை புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள தலைமைச் செயலகத்துக்கு ஜெயலலிதா வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாலை 4 மணிக்கு மேல் அவர் வந்து பணிகளைக் கவனிப்பார் என்றும், அவருடன் புதிதாக பொறுப்பேற்கும் அமைச்சர்களும் வருவார்கள் என தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அரசின் பல்வேறு துறைகளுக்கும் புதிய செயலாளர்கள், ஆணையாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என்ற கருத்து எழுந்துள்ளது. இதற்கான அறிவிப்புகள் திங்கள்கிழமை மாலை அல்லது செவ்வாய்க்கிழமை முதல் வெளிவரக் கூடும் எனத் தெரிகிறது.மின்வெட்டில்லா தமிழகம்
"தமிழகத்தில் மின்வெட்டு இல்லாத நிலை உருவாக்கப்படும்' என்று முதல்வராக பொறுப்பேற்க உள்ள ஜெயலலிதா தெரிவித்தார்.
ஆளுநர் மாளிகைக்கு ஞாயிற்றுக்கிழமை சென்ற அவர் ஆட்சி அமைப்பதற்கான உரிமையை ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலாவிடம் கோரினார். பின்னர், செய்தியாளர்கள் கேள்விகளுக்கு ஜெயலலிதா அளித்த பதில்:

முதல்வராக பொறுப்பேற்றதும் எந்த விவகாரங்களில் நீங்கள் அதிக கவனம் செலுத்துவீர்கள்?
தமிழகம் இருண்ட காலத்துக்கு சென்று விட்டது. அதனை மீட்டெடுப்பது எங்களது முக்கிய பொறுப்பு. முதலில் சட்டம்-ஒழுங்கினை சரி செய்வோம். மின்வெட்டு இல்லாத நிலையை உருவாக்குவோம். அதிமுக ஆட்சியை மக்கள் எப்போதுமே மிகவும் பாதுகாப்பாக உணருகிறார்கள். அரசின் நலத் திட்டங்கள் அனைத்தும் மக்களுக்கு முழுமையாக சென்றடையச் செய்வோம்.
தில்லிக்கு வருமாறு உங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதா?
காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி தொலைபேசியில் பேசினார். தேர்தல் வெற்றிக்காக வாழ்த்துத் தெரிவித்தார். நானும் அவருக்கு நன்றி தெரிவித்தேன். அடுத்த மாதம் தில்லி செல்ல வாய்ப்பு உள்ளது.
பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.5 உயர்த்தப்பட்டுள்ளதே?
பெட்ரோல் விலை உயர்வு துரதிருஷ்டவசமானது. இதனால், மக்கள் நிச்சயமாக பாதிக்கப்படுவர்.

தமிழக அமைச்சர்கள் பட்டியல்
  1.  ஜெயலலிதா---முதல்வர்---இந்திய ஆட்சிப் பணி,போலீஸ் பணி, பொது நிர்வாகம், மாவட்ட வருவாய்,அலுவலர்கள், லஞ்சத் தடுப்பு, காவல், உள்துறை.
  2. ஓ.பன்னீர்செல்வம்---நிதித் துறை
  3. கே.ஏ.செங்கோட்டையன்---வேளாண் துறை
  4. நத்தம் ஆர். விஸ்வநாதன்---மின்சாரத் துறை
  5. கே.பி.முனுசாமி---நகராட்சி நிர்வாகம், ஊராட்சித் துறை
  6. சி.சண்முகவேலு---தொழில் துறை
  7. ஆர்.வைத்திலிங்கம்---வீட்டுவசதி மற்றும் நகர்ப்புறத் துறை
  8. அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி---உணவுத் துறை
  9. சி.கருப்பசாமி---கால்நடைத் துறை
  10. பி.பழனியப்பன்---உயர்கல்வித் துறை
  11. சி.வி.சண்முகம்---பள்ளிக் கல்வித் துறை
  12. செல்லூர் கே.ராஜு---கூட்டுறவுத் துறை
  13. கே.டி.பச்சமால்---வனத் துறை
  14. எடப்பாடி கே.பழனிச்சாமி---நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள்.
  15. எஸ்.பி.சண்முகநாதன்---இந்து சமய அறநிலையத் துறை.
  16. கே.வி.ராமலிங்கம்---பொதுப்பணித் துறை.
  17. எஸ்.பி.வேலுமணி---சிறப்புத் திட்டங்கள் அமலாக்கம்.
  18. கே.டி.எம்.சின்னய்யா---பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை.
  19. எம்.சி.சம்பத்---சிறுதொழில்கள் துறை.
  20. பி.தங்கமணி---வருவாய்த் துறை.
  21. ஜி.செந்தமிழன்---செய்தி மற்றும் விளம்பரத் துறை.
  22. எஸ்.கோகுல இந்திரா---வணிகவரித் துறை.
  23. செல்வி ராமஜெயம்--சமூகநலத் துறை.
  24. பி.வி.ரமணா---கைத்தறி மற்றும் துணி நூல் துறை.
  25. ஆர்.பி.உதயகுமார்---தகவல் தொழில்நுட்பத் துறை.
  26. என்.சுப்பிரமணியன்---ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை.
  27. வி.செந்தில் பாலாஜி---போக்குவரத்துத் துறை.
  28. என்.மரியம் பிச்சை---சுற்றுச்சூழல் துறை.
  29. கே.ஏ.ஜெயபால்---மீன்வளத் துறை.
  30. இ.சுப்பையா---நீதித் துறை.
  31. புத்திசந்திரன்---சுற்றுலாத் துறை.
  32. எஸ்.டி.செல்லபாண்டியன்---தொழிலாளர் நலத் துறை
  33. வி.எஸ்.விஜய்---சுகாதாரத் துறை.
  34. என்.ஆர்.சிவபதி---விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை.

அதிமுக அரசில் 34 அமைச்சர்கள்: சென்னை பல்கலை. அரங்கில் இன்று பதவி ஏற்பு

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு 234 தொகுதிகளிலும் இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிடுகிறார். இவர் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் வசிப்பதால் அத்தொகுதிக்கு உட்பட்ட ஸ்டெல்லா மேரீஷ் கல்லூரி வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

இந்த தொகுதியில் அதிமுக சார்பில் வளர்மதி போட்டியிடுகிறார்.

ஜெயலலிதா வாக்களித்தார்

விஜய்யின் மக்கள் இயக்கம் தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளது. நடிகர் விஜய் ரசிகர் மன்றம் மக்கள் இயக்கமாக மாற்றப்பட்டு உள்ளது. அதன் மூலம் மக்கள் நலப்பணிகள் நடந்து வருகின்றன. நாகையில் மீனவர்களுக்கு எதிராக நடந்த விஜய் கண்டன கூட்டத்தையும் இந்த மக்கள் இயக்கம்தான் ஏற்பாடு செய்தது. அடுத்தக்கட்டமாக வருகிற சட்டமன்ற தேர்தலிலும் மக்கள் இயக்கம் நேரடியாக ஈடுபடுகிறது.

இந்த இயக்கத்தின் பொறுப்பில் இருப்பவர்கள் வேட்பாளர்களாக களம் இறங்குகின்றனர். அ.தி.மு.க. கூட்டணியில் அவர்களை இறக்க பேச்சு வார்த்தைகள் நடக்கின்றன. ஜெயலலிதாவை, விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரன் இரண்டு முறை சந்தித்தார். அப்போது இதுபற்றி அவர்கள் விவாதித்ததாகவும் கூறப்படுகிறது.

விஜய் ரசிகர்கள் தேர்தலில் போட்டியிடுவதை எஸ்.ஏ.சந்திரசேகரன் உறுதிப்படுத்தியுள்ளார். அவர் கூறும்போது ரசிகர்களுக்கு உரிய அங்கீகாரத்தை யாராவது கொடுத்தால் அவர்களுக்கு விஜய்யின் ஆதரவு இருக்கும். அங்கீகாரம் கிடைக்கும்போது அந்த ரசிகர்களுக்காக அவர்களுடைய வெற்றிகளுக்காக ஆதரவு கொடுக்கும் கட்சிகளுக்கு விஜய்யின் ஆதரவு இருக்கும் என்று தெளிவுபடுத்தினார்.

இதன்மூலம் ரசிகர்கள் போட்டியிட தொகுதி ஒதுக்கும் கட்சிக்கு ஆதரவாக விஜய் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவார் என்று தெரிய வந்துள்ளது. இரு மாதங்களுக்கு முன்பு ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் ரசிகர் மன்ற பொறுப்பாளர்கள் சென்னைக்கு வரவழைக்கப்பட்டனர். அவர்களிடம் தொகுதிகளில் விஜய்க்கு உள்ள செல்வாக்கு, வெற்றி வாய்ப்பு போன்றவை குறித்து கருத்து கேட்கப்பட்டன.

தேர்தலில் போட்டியிடுவதற்காகவே இந்த பற்றிய விவரங்களை அவர் சேகரித்ததாக கூறப்படுகிறது. ஜெயலலிதாவை விஜய் விரைவில் சந்தித்து பேசுவார் என கூறப்படுகிறது. அப்போது கூட்டணி, தொகுதி ஒதுக்கீடு போன்றவை பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். விஜய்யின் மக்கள் இயக்கம் 10 தொகுதிகளில் போட்டியிட விரும்புவதாக தெரிகிறது. எந்தெந்த தொகுதிகள் என்பதை அடையாளம் கண்டுள்ளன. அவற்றை அ.தி.மு.க.விடம் கேட்டுப்பெற முடிவு செய்துள்ளது

விஜய் ரசிகர்கள் தேர்தலில் போட்டி? அ.தி.மு.க. கூட்டணியில் “சீட்” கேட்க முடிவு

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடைபெற்ற ஊழலில் மிகத் தாமதமாக நடவடிக்கை எடுத்து, முன்னாள் அமைச்சர் ஆ.இராசாவை இப்போது கைது செய்திருப்பது மக்களை ஏமாற்றவே என்று எதிர்க்கட்சித் தலைவர் ஜெ.ஜெயலலிதா கூறியுள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களின் வினாக்களுக்கு பதிலளித்த ஜெயலலிதா, “2ஜி அலைக்கற்றை ஊழலில் நடவடிக்கை ஏதாவது எடுத்ததாக உச்ச நீதிமன்றத்திற்கு காட்ட வேண்டுமே என்பதற்காக இராசாவை கைது செய்துள்ளது சிபிஐ” என்று கூறினார்.

“2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்த முறைகேட்டின் மீது என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள் என்று உச்ச நீதிமன்றம் கேட்டதற்கு பதில் கூட முடியாத நிலையில் சிபிஐ இருந்தது. இன்னும் சில நாட்களில் உச்ச நீதிமன்றத்தில் நடவடிக்கை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்று கூறியுள்ள ஜெயலலிதா, இது நடவடிக்கை 3 ஆண்டுகளுக்கு முன்னரே எடுத்திருக்க வேண்டியது என்று கூறினார்.

தங்களைப் பொறுத்தவரை இந்த முறைகேடு தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளதாகக் கூறிய ஜெயலலிதா, இந்த ஊழல் பிரச்சனையில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு முன்னுக்குப் பின் முரணாக பேசி வருகிறது என்று கூறினார்.

“மத்திய அரசின் தலைமை கணக்காய்வாளர் மற்றும் தணிக்கையாளர் அளித்த அறிக்கையில், அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்த முறைகேட்டில் 1.76 இலட்சம் கோடி அரசுக்கு இழப்பீடு ஏற்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். அந்த அறிக்கை நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் மத்திய அமைச்சர் கபில் சிபல், முன்னாள் அமைச்சர் இராசாவின் நடவடிக்கையினால் அரசுக்கு எந்த இழப்பீடும் ஏற்படவில்லை என்று கூறினார். இப்போது ஊழல் நடந்துள்ளது என்று கூறி, இராசாவை சிபிஐ கைது செய்துள்ளது. இராசாவின் நடவடிக்கையினால் எந்த இழப்பும் ஏற்படவில்லையெனில் எதற்காக இராசா கைது செய்யப்பட வேண்டும்? என்று ஜெயலலிதா வினா எழுப்பினார்.

மக்களை ஏமாற்றவே இராசா கைது: ஜெயலலிதா

சென்னை அஇஅ‌திமுகவுட‌ன் தொகு‌தி ப‌ங்‌கீடு கு‌றி‌த்து வரு‌ம் 4ஆ‌ம் தே‌தி ம‌திமுக பே‌ச்சுவா‌ர்‌த்தை நட‌த்த உ‌ள்ளதாக அ‌க்க‌ட்‌சி‌யி‌ன் பொது‌‌ச் செய‌ல‌ர் வைகோ தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

சென்னையில் இ‌ன்று செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் பே‌சியபோது அவ‌ர், தொகுதி பங்கீடு குறித்து அ.இ.அ.தி.மு.க.வுடன் பேச்சு நடத்த ம.தி.மு.க.வில் 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது.

அந்த குழுவில் திருப்பூர் மாவட்ட செயலர் ஆர்.டி.மாரியப்பன், காஞ்‌சிபுரம் மாவட்ட செயலர் பாலவாக்கம் சோமு, முன்னாள் ச‌ட்டம‌ன்ற உறு‌ப்‌பின‌ர் குருநாதன் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த குழு வ‌ரு‌ம் 4ஆ‌ம் தேதி முதல் சுற்று பேச்சுவார்த்தை நடத்துகிறது. ம.தி.மு.க. பொதுக்குழு வருகிற 17ஆ‌ம் தேதி அண்ணாநகரில் உள்ள விஜயஸ்ரீ மண்டபத்தில் நடைபெறும் என்று வைகோ கூ‌றினா‌ர்.

தொகுதி பங்கீடு: அ.இ.அ.தி.மு.க- ம.தி.மு.க. 4ஆ‌ம் தேதி பேச்சு

தொகு‌தி உட‌ன்பாடு கு‌றி‌த்து அ.இ.அ.‌தி.மு.க தலைவ‌ர்களுட‌ன் பு‌திய த‌மிழக‌ம் க‌ட்‌சி‌‌யிட‌ன் இ‌ன்று பே‌ச்சுவா‌ர்‌த்தை நடைபெறு‌கிறது.

அ.இ.அ.‌தி.மு.க. தலைமை அலுவலக‌த்த‌ி‌ல் மாலை 5 ம‌ணி‌க்கு நடைபெறு‌ம் பே‌ச்சுவா‌ர்‌த்‌தை‌யி‌ல் பு‌திய த‌மிழக‌ம் க‌ட்‌சி‌யி‌ன் தலைவ‌ர் மரு‌‌த்துவ‌ர் க‌ிரு‌ஷ்ணசா‌மி தலைமை‌யி‌ல் குழு ச‌ந்‌தி‌க்க இரு‌க்‌கிறது.

அ.இ.அ.‌தி.மு.க தொகு‌தி ப‌ங்‌கீ‌ட்டு‌க் குழு உறு‌ப்‌பின‌ர்களான பொருளாள‌ர் ஓ.ப‌ன்‌னீ‌ர் செ‌ல்வ‌ம், தலைமை ‌நிலைய செயல‌ர் கே.ஏ.செ‌ங்கோ‌ட்டைய‌ன், தே‌ர்த‌ல் ‌பி‌ரிவு‌ச் செயல‌ர் பொ‌ள்ளா‌‌ச்‌சி ஜெயராம‌ன் ஆ‌கியோ‌ர் பு‌திய த‌மிழக‌ம் க‌ட்‌சி குழுவுட‌ன் முத‌ல் க‌ட்ட‌ப் பே‌‌ச்சுவா‌ர்‌த்தை நட‌த்த உ‌ள்ளது.

பு‌திய த‌மிழக‌ம் - அ.இ.அ.‌தி.மு.க. தொகு‌தி உட‌ன்பாடு பே‌ச்சு

திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் பேரூராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து‌ம், மழையா‌ல் பா‌தி‌க்க‌ப்ப‌ட்ட ம‌க்களு‌க்கு ‌நிவாரண தொகை வழ‌ங்‌கிடாத ‌தி.மு.க. அரசை க‌ண்டி‌த்து‌ம் அ.இ.அ.தி.மு.க சார்பில் நாளை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறு‌கிறது.

இது தொடர்பாக அ‌க்க‌ட்‌சி‌யி‌ன் பொதுச் செயலர் ஜெயலலிதா இன்று வெளியிட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல், திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வேட்டவலம் பேரூராட்சியில், அரசு ஒப்பந்த விதிமுறைகளை மீறி ரூ.58 லட்சம் மதிப்பீட்டில் நடைபெறும் சிமெண்ட் சாலை பணிகளில் முறைகேடுகள் நடைபெறுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

மக்கள் பணிகளில் பேரூராட்சி நிர்வாகம் கவனம் செலுத்துவதில்லை என்றும், அண்மையில் பெய்த கன மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் நிவாரண உதவி இதுவரை வழங்கப்படவில்லை என்றும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும், குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருவதைத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்காத பேரூராட்சி நிர்வாகம், வீட்டு வரி, குடிநீர் வரி, கட்டிட வரைபட அங்கீகார வரி ஆகியவற்றை மட்டும் உயர்த்தி விட்டதாகவும், வேட்டவலத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்களே இல்லை என்றும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

வேட்டவலம் நகரத்தில் இயங்கி வந்த மின் கட்டண வசூலிப்பு மையம் மூன்று கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சொரத்தூர் கிராமத்திற்கு மாற்றப்பட்டதன் காரணமாக மக்களுக்கு மிகுந்த சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், பேருந்து நிலையம் கட்டப்பட்டும் செயல்பாட்டிற்கு வரவில்லை என்றும், திருக்கோவிலூர் செல்லும் நெடுஞ்சாலை மிகவும் பழுதடைந்துள்ளதாகவும், குறித்த காலத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் கிடைப்பதில்லை என்றும் புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.

எனவே, வேட்டவலம் பேரூராட்சியில் நிலவும் சீர்கேடுகளுக்குக் காரணமான பேரூராட்சி நிர்வாகத்தைக் கண்டித்தும், கீழ்பென்னாத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் கன மழையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத் தொகை வழங்கிடாத மாநில அரசைக் கண்டித்தும் அ.இ.அ.தி.மு.க சார்பில் தே‌ர்த‌ல் ‌பி‌ரிவு இணை‌ச் செயல‌ர் பாலக‌ங்கா தலைமை‌யி‌ல் நாளை வேட்டவலம் காந்தி சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் எ‌ன்று ஜெயலலிதா தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

வேட்டவலத்தில் நாளை அ.இ.அ.தி.மு.க ஆர்ப்பாட்டம்

2008ஆ‌ம் ஆ‌ண்டு நடைபெ‌ற்ற திருமங்கலம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலின்போது பொதுச் சொத்துகளைச் சேதப்படுத்தியதாக ஓ. பன்னீர்செல்வம், செங்கோட்டையன், பொ‌ள்ளா‌‌ச்‌சி ஜெயராம‌ன் உ‌ள்பட அ.இ.அ.தி.மு.க.வைச் சேர்ந்த 20 பேர் மீது திருமங்கலம் குற்றவியல் நடுவர் நீதிமன்ற‌த்‌தி‌‌ல் வழ‌க்கு‌த் தொடர‌ப்ப‌ட்டது.

இ‌ந்த வழ‌க்‌‌கி‌ல் ஓ. பன்னீர்செல்வம் உ‌ள்பட 20 பேரு‌ம் ஆஜராகாததா‌ல் ‌நீ‌திம‌ன்ற‌ம் ‌பிணை‌யி‌ல் வெளிவர முடியாத பிடியாணை பிறப்பித்தது.

இ‌ந்த ‌பிடியாணையை ர‌த்து செ‌ய்ய‌க் கோ‌ரியு‌ம், மு‌ன் ‌பிணை வழ‌ங்‌க‌க் கோ‌ரியு‌ம் உய‌ர் ‌நீ‌திம‌ன்ற மதுரை ‌கிளை‌யி‌ல் ஓ.ப‌ன்‌னீ‌ர் செ‌ல்வ‌ம் உ‌ள்பட 20 பே‌‌ரு‌ம் மனு‌த் தா‌க்‌க‌ல் செ‌ய்‌திரு‌ந்தன‌ர்.

இ‌‌ந்த மனுவை ‌விசா‌ரி‌த்த ‌நீ‌திம‌ன்ற‌ம், ப‌ன்‌னீ‌ர் செ‌ல்வ‌ம் உ‌ள்பட 20 பேரு‌க்கு மு‌ன்‌பிணை வழ‌ங்‌கியதோடு ‌திரும‌ங்கல‌‌ம் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் ஆஜரா‌கி ‌பிணை பெ‌ற்று‌க் கொ‌ள்ளு‌ம்படி உ‌‌த்தர‌வி‌ட்டிரு‌ந்தது.

இ‌ந்‌நிலை‌யி‌ல் ‌திரும‌ங்கல‌‌ம் கு‌ற்ற‌விய‌ல் ‌நீ‌திம‌ன்ற‌த்த‌ி‌ல் ஓ.ப‌ன்‌னீ‌ர் செ‌‌ல்வ‌‌ம், செ‌ங்கோ‌ட்டைய‌ன், பொ‌ள்ளா‌‌ச்‌சி ஜெயராம‌ன் உ‌ள்பட 5 பே‌ர் இ‌ன்று ஆஜரா‌கின‌ர். அ‌ப்போது, 5 பே‌ரி‌‌ன் ‌பிடியாணையை ர‌த்து செ‌ய்து ‌திரும‌ங்கல‌ம் ‌நீ‌திம‌ன்ற‌ம் ‌‌பிணை வழ‌ங்‌கியது.

ஓ.ப‌ன்‌னீ‌ர் செ‌ல்வ‌ம், செ‌ங்கோ‌ட்டைய‌ன் உ‌ள்பட 5 பேரு‌க்கு ‌பிணை

WD
ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய் 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலை மூடி மறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள முதலமை‌ச்ச‌ர் கருணாநிதியைக் கண்டித்தும், ஊழலுக்குக் காரணமான முன்னாள் மத்திய அமைச்சர் ராசா மீது நடவடிக்கை எடுக்காத மத்திய அரசைக் கண்டித்தும் அ.இ.அ.தி.மு.க சார்பில் புதுக்கோட்டையில் நாளை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறு‌கிறது.

இது தொட‌ர்பாக அக்கட்சியின் பொதுச்செயலர் ஜெயலலிதா இ‌ன்று வெளியிட்டுள்ள அறிக்கை‌யி‌ல், இந்தியாவின் மிக உயரிய தணிக்கை அமைப்பான இந்திய கணக்கு, தணிக்கைத் துறை, 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டின் மூலம் ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்று இருக்கிறது என்று மதிப்பீடு செய்து அதன் அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறது. 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், சினிமா டிக்கெட் விற்பனை போல 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது என்று கூறி இருக்கிறது.

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் ஊழல் நடந்து இருக்கிறது என்பதை அறிந்து தான், “ராசா இன்னமும் அமைச்சர் பதவியில் தொடர்கிறாரா” என்ற கேள்வியை உச்ச நீதிமன்றம் எழுப்பியது. அண்மையில், 2 ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் இழப்பே ஏற்படவில்லை என்று மத்திய அமைச்சர் கபில் சிபல் கருத்து தெரிவித்ததற்கு உச்ச நீதிமன்றம் தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்தது.இந்தச் சூழ்நிலையில், உச்ச நீதிமன்றத்தின் கண்டனத்திற்கு ஆளான மத்திய அமைச்சர் கபில் சிபல் கூற்றை தெரிவித்து, இதில் ஊழல் ஏதும் நடைபெறவில்லை என்று கருத்து தெரிவித்திருக்கிறார் கருணாநிதி. கருணாநிதியின் இந்தக் கூற்று நீதிமன்ற அவமதிப்பிற்கு சமம்.

தனக்குள்ள செல்வாக்கை பயன்படுத்தி இந்த வழக்கை ஒன்றுமில்லாமல் செய்ய கருணாநிதி முயற்சிக்கிறார். 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு குறித்து மக்களை ஏமாற்றும் வகையில் அபத்தமான கருத்துக்களை எல்லாம் தெரிவித்திருக்கிறார் கருணாநிதி.

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டிற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான தேதியை ஏன் முன் தேதியிட்டு ராசா மாற்றி அமைத்தார்? ஒரு மணி நேரத்திற்குள் வரைவோலையுடன் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று தொலைத் தொடர்புத் துறை அறிவித்ததற்கான காரணம் என்ன? பிரதமரின் யோசனை புறக்கணிக்கப்பட்டதற்கான காரணம் என்ன? சட்ட அமைச்சகத்தின் கருத்துரு ஏன் புறக்கணிக்கப்பட்டது? போன்ற கேள்விகளுக்கு கருணாநிதி இதுநாள் வரை எந்தப் பதிலும் அளிக்கவில்லை.நீரா ராடியாவுடன், கருணாநிதியின் மகள் கனிமொழி, கருணாநிதியின் துணைவி ராசாத்தி, ராசா, அமைச்சர் பூங்கோதை ஆகியோர் நடத்திய உரையாடல்கள் குறித்து கேள்வி கேட்டாலே கருணாநிதிக்கு கோபம் வருகிறது.

இந்திய நாட்டின் பொருளாதாரத்தையும், பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கி உள்ள 2ஜி ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழலை மூடி மறைப்பதற்கான முயற்சியிலும், நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணைக்கு முட்டுக்கட்டை போடுவதற்கான முயற்சியிலும் கருணாநிதி ஈடுபட்டு வருவது கண்டிக்கத்தக்கது.

எனவே, ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் கோடி 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலை மூடி மறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள தி.மு.க. அரசின் முதலமை‌ச்சர் கருணாநிதியைக் கண்டித்தும், ஊழலுக்குக் காரணமான முன்னாள் மத்திய அமைச்சர் ராசா மீது நடவடிக்கை எடுக்காத மத்திய அரசைக் கண்டித்தும் அ.இ.அ.தி.மு.க சார்பில் மரு‌த்துவ அ‌ணி‌த் தலைவ‌ர் மை‌த்ரேய‌ன் தலைமை‌யி‌ல் புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் முன்பு நாளை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் எ‌ன்று ஜெயலலிதா கூ‌றியு‌ள்ளா‌ர்.
 
2 ஜி ‌ஸ்பெ‌க்‌ட்ர‌ம் ஊழல்: புதுக்கோட்டையில் அ.இ.அ.தி.மு.க நாளை ஆர்ப்பாட்டம்

தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதைத் தட்டிக் கேட்காத மத்திய அரசையும்,அதற்கு உறுதுணையாக இருக்கும் தமிழக அரசையும் கண்டித்து அதிமுக சார்பில் ஜனவரி 28 ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 14 ஆம் தேதி பெட்ரோலின் விலை லிட்டருக்கு ரூ 3 என்ற அளவில் உயர்த்தப்பட்டது. ஒரே மாதத்திற்குள் பெட்ரோலின் விலை ரூ.2.55 என்ற அளவிற்கு ஜனவரி மாதம் 14 ஆம் தேதியன்று மீண்டும் உயர்த்தப்பட்டது.

அதாவது ஒரே மாதத்தில் பெட்ரோலின் விலை லிட்டருக்கு ரூ 5.55 என்ற அளவிற்கு உயர்த்தப்பட்டுவிட்டது.

இதனால் இரு சக்கர வாகனங்களை பயன்படுத்தும் பொதுமக்களும்,ஆட்டோவில் செல்லும் சாதாரண மக்களும்,ஆட்டோ ஓட்டுநர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

மக்களை அன்றாடம் வாட்டி வதைக்கும் விலைவாசி உயர்வை குறைக்க வேண்டிய மத்திய அரசு, பெட்ரோல் விலை உயர்வின் மூலம் விலைவாசி உயர்விற்கு வழி வகுத்துள்ளது.

உள்நாட்டுப் பிரச்சினை தான் இப்படி இருக்கிறது என்றால், அண்டை நாடுகளுடனான பிரச்னை இதைவிட மோசமாக இருக்கிறது.கடந்த ஐந்து ஆண்டு கால ஆட்சியில் இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதும்,கொல்லப்படுவதும், துன்புறுத்தப்படுவதும்,அவர்களுடைய உடைமைகள் சேதப்படுத்தப்படுவதும் அன்றாட செய்திகளாக ஆகிவிட்டன.

பத்து நாட்களுக்கு முன்பு புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டினத்தைச் சேர்ந்த தமிழக மீனவர் பாண்டியன் இலங்கை கடற்படையினரால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தார்.

நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் ஒன்றியம், புஷ்பவனம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் கடலுக்குள் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது இலங்கைக் கடற்படையினரால் கழுத்தில் கயிற்றினால் சுருக்கிட்டு இழுத்துக் கொல்லப்பட்டு இருக்கிறார்.

இலங்கை அரசை கடுமையாக எச்சரிக்க வேண்டிய மத்திய அரசு இந்தப் பிரச்சினையை ஒரு பொருட்டாகவே கருதவில்லை.மத்திய அரசும், திமுக அரசும் மக்கள் விரோத அரசுகளாக விளங்குகின்றன.

எனவே, பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருவதற்குக் காரணமான, இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதைத் தட்டிக் கேட்காத மத்திய அரசைக் கண்டித்தும்,மத்திய அரசின் மக்கள் விரோத செயலை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் திமுக அரசைக் கண்டித்தும் அதிமுக சார்பில், 28.1.2011 வெள்ளிக் கிழமை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என ஜெயலலிதா தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

மீனவர் மீது தாக்குதல்:அரசைக் கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம்

முக நூல்

Popular Posts