background img

புதிய வரவு

Showing posts with label england. Show all posts

பிரிட்டனில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட ஒருவர் இலங்கையில் சித்ரவதைக்கு உள்ளான ஆதாரம் தம்மிடம் இருப்பதாகக் கூறும் ''சித்ரவதைகளில் இருந்து விடுதலை'' (Freedom from Torture) என்னும் அமைப்பு, ஆகவே பிரிட்டிஷ் அரசாங்கம் இலங்கைக்கு தமிழர்களை திருப்பி அனுப்பக் கூடாது என்று கேட்டுள்ளது.
பிரிட்டனில் தஞ்சம் நிராகரிக்கப்பட்ட மற்றுமொரு தொகுதியினர் வியாழனன்று இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படவுள்ளதாக செய்திகள் வெளியான நிலையிலேயே இந்த அமைப்பு இவ்வாறு கூறியுள்ளது.
பிரிட்டனைத் தளமாகக் கொண்ட இந்த அமைப்பின் தலைமை நிர்வாக இயக்குனர் கீத் பெஸ்ட் அவர்கள் இது குறித்து பிபிசியிடம் பேசும் போது, பிரிட்டனில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டு, இலங்கையில் சித்ரவதைக்கு உள்ளாகி, மீண்டும் பிரிட்டனில் தஞ்சம் கோரியுள்ள ஒருவர் பற்றிய ஆதாரம் தம்மிடம் இருப்பதாகக் கூறியுள்ளார்.
இது குறித்த தகவல்களை தாம் பிரிட்டிஷ் அதிகாரிகளுடன் பகிர்ந்துகொண்டுள்ள போதிலும், பிரிட்டன் தொடர்ந்தும் இலங்கைக்கு தஞ்சம் நிராகரிக்கப்பட்டவர்களை திருப்பி அனுப்புவது துரதிர்ஸ்டவசமானது என்றும் அவர் தெரிவித்துள்ளார். அது மாத்திரமன்றி பிரிட்டிஷ் அரசாங்கம் அவர்களை ஒரு வகையில் ரகசியமான முறையில் திருப்பி அனுப்பும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.
இலங்கை மக்கள் தொடர்பில் இவ்வாறான பல சம்பவங்கள் குறித்த தகவல்கள் தம்மிடம் இருப்பதாகக் கூறும் கீத் பெஸ்ட் அவர்கள், இப்படியான சம்பவங்கள் குறித்து இலங்கையில் ஒரு முழுமையான பொறுப்புக் கூறல் நடக்கும் வரை தஞ்சம் கோரியவர்களை அங்கு பிரிட்டிஷ் அரசாங்கம் திரும்ப அனுப்பக் கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த விடயத்தில் பிரிட்டிஷ் அரசாங்கம் ஒரு முழுமையான தெளிவு பெறும் வரை தமது நடவடிக்கைகள் தொடரும் என்றும் அவர் கூறியுள்ளார்.

பிரிட்டனில் தஞ்சம் நிராகரிக்கப்பட்டவர்களை இலங்கைக்கு அனுப்பக் கூடாது

இங்கிலாந்து இளவரசர் சார்லஸ், டயானா தம்பதியின் மூத்த மகன் வில்லியம். இவருக்கு வருகிற ஏப்ரல் 29-ந்தேதி லண்டனில் திருமணம் நடைபெற உள்ளது. இவர் தனது நீண்ட நாள் காதலி கேத் மிடில் டன்னை மணக்கிறார். திருமணத்துக்கு இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் நிச்சயம் அழைக்கப்படுவார் என தெரிகிறது.

அதே நேரம் அமெரிக்க அதிபர் ஒபாமா மற்றும் உலக தலைவர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட மாட்டாது. ஏனெனில் இளவரசர் வில்லியம் பட்டத்து அரசர் இல்லை. அவரது தந்தை சார்லசுக்கு அடுத்தபடியாக 2-வது இடத்தில் தான் உள்ளார். இங்கிலாந்து கால்பந்து வீரர்கள் டேவிட், மற்றும் பெக்காம் ஆகியோர் திருமணத்துக்கு அழைக்கப்பட உள்ளனர்.

மேலும் வில்லியம் தனது முன்னாள் காதலிகள் ஜெகா கிரேக், ஒலிவியா ஹன்ட் ஆகியோருக்கு திருமண அழைப்பு அனுப்பியுள்ளார். அதே போன்று கேத் மிடில் டன் தனது முன்னாள் காதலரை தனது திருமணத்துக்கு அழைத்துள்ளார். திருமணத்துக்கு இன்னும் 1 மாதங்களே உள்ளன. எனவே, திருமண அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது.

இளவரசர் வில்லியமின் பாட்டி ராணி எலிசபெத் திருமணத்துக்கு அழைப்பது போன்று பத்திரிகை தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும், அழைப்பிதழ் அனுப்பப்படுவோரின் பட்டியலும் தயாரிக்கப்பட்டுள்ளது. அநேகமாக 1900 பேர் முதல் 2 ஆயிரம் பேருக்கு அழைப்பு அனுப்பப்படலாம் என தெரிகிறது.

ஆனால் அவர்களின் பட்டியல் வெளியிடப்படவில்லை. இளவரசர் வில்லியம் திருமணத்துக்கு குதிரை வண்டி மற்றும் கார் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது கேத் மிடில் திருமணம் நடக்கும் சர்ச் வேச்த்மின்ச்ட்டர் அப்பேக்கு 1977 ரோல்ஸ் -ராயல்ஸ்சில் வருகின்றார் பின்னர் சர்ச் லிருந்து இளவரசர் வில்லியம் - கேத் மிடில் வேச்த்மின்ச்ட்டர் அப்பே டு புச்கின்காம் பேலஸ்க்கு 5 குதிரை வண்டிகள் தொடர புச்கின்காம் பேலஸ் செல்கின்றனர்.

இளவரசர் வில்லியம் திருமணத்துக்கு குதிரை வண்டி மற்றும் கார் ஏற்பாடு

பெங்களூரு: உலக கோப்பை தொடரில் கத்துக்குட்டி அயர்லாந்திடம் வீழ்ந்ததால், இங்கிலாந்து ரசிகர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர். படுமோசமான "பீல்டிங்' மற்றும் சரியான வியூகம் அமைக்காததே இங்கிலாந்தின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. அணியின் சொதப்பலான ஆட்டத்தை, அங்குள்ள "மீடியா' கடுமையாக விமர்சித்துள்ளன. வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை, அயர்லாந்து ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடினர்.
பெங்களூருவில் நேற்று முன் தினம் நடந்த "பி' பிரிவு லீக் போட்டியில் அயர்லாந்து அணி, இங்கிலாந்தை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, மிகப் பெரும் அதிர்ச்சி அளித்தது. முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 327 ரன்களை குவித்த போதும், வெற்றியை வசப்படுத்த முடியவில்லை.
பீல்டிங் மோசம்:
இப்போட்டியில் அயர்லாந்து வீரர் கெவின் ஓ' பிரையன், உலக கோப்பை அரங்கில் அதிவேக சதம் அடித்து சாதனை படைத்தார். இவரை இங்கிலாந்து பவுலர்களால் கட்டுப்படுத்த தவறினர். சுவான் தவிர மற்றவர்கள் மோசமாக பந்துவீசினர். தவிர, பீல்டிங்கும் படுமட்டமாக இருந்தது. நான்கு முக்கிய "கேட்ச்' வாய்ப்புகளை வீணாக்கினர். கெவின் கொடுத்த "கேட்ச்' வாய்ப்பை, கேப்டன் ஸ்டிராசே கோட்டை விட்டார். பேட்டிங்கில் 300 ரன்களை கடந்ததும், இங்கிலாந்து வீரர்கள் சோர்வடைந்தனர். கடைசி 5 ஓவரில் வெறும் 33 ரன்கள் தான் எடுத்தனர். 327 ரன்களை அயர்லாந்து அணியால் எடுக்க இயலாது என்று தப்புக்கணக்கு போட்டனர். ஆனால், கெவின் ஓ பிரையனின் அசத்தல் ஆட்டம் அயர்லாந்தின் வெற்றியை உறுதி செய்தது.
இத்தோல்வியை இங்கிலாந்து "மீடியா' கடுமையாக விமர்சித்துள்ளது. "" இங்கிலாந்துக்கு பெரும் அவமானத்தை ஏற்படுத்தினார் கெவின்; இவரது அதிரடி ஆட்டத்துக்கு முன், ஏதோ கிளப் அணி போல இங்கிலாந்து காட்சி அளித்தது,''என்று "சன்' பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.
"தி டெலிகிராப்' வெளியிட்டுள்ள செய்தியில்,""சமீப காலமாக இங்கிலாந்தின் தேசிய விளையாட்டான கிரிக்கெட், தோல்விப் பாதையில் பயணிக்கிறது,''என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பி.பி.சி., செய்தியாளர் ஜோனாதன் ஆக்னியு கூறுகையில்,"" இத்தோல்வியில் இருந்து இங்கிலாந்து மீள்வது கடினம். காலிறுதியை கடப்பதற்கு வாய்ப்பு இல்லை,''என்றார்.
பிரதமர் பாராட்டு:
கடந்த 2007ல் நடந்த உலக கோப்பை தொடரில் அயர்லாந்து அணி, பாகிஸ்தானை வீழ்த்தி அதிர்ச்சி அளித்தது. இம்முறை பரம எதிரியான இங்கிலாந்தை வென்று, புதிய வரலாறு படைத்துள்ளது. மகத்தான வெற்றி பெற்ற அயர்லாந்து வீரர்கள் புதிய "ஹீரோக்களாக' வலம் வருகின்றனர். அயர்லாந்தின் பிரதமராக உள்ள எண்டா கென்னி கூறுகையில்,""அயர்லாந்து அணியினர் மிகுந்த துணிச்சலாக ஆடினர். தன்னம்பிக்கை இருந்தால் எதையும் சாதித்துக் காட்டலாம் என்பதை நிரூபித்துள்ளனர். இந்த வெற்றி மக்களுக்கு ஊக்க சக்தியாக அமைந்துள்ளது,''என்றார்.
------------
கெவின் ஐ.பி.எல்., கனவு
அதிவேக சதம் அடித்த அயர்லாந்தின் வெற்றி நாயகன் கெவின் ஓ பிரையன் கூறுகையில்,""இங்கிலாந்தை எந்த ஒரு போட்டியில் வீழ்த்தினாலும், அது அயர்லாந்து மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும். எனது ஆட்டம் "டுவென்டி-20'க்கு ஏற்றது என்கின்றனர். பணம் கொழிக்கும் ஐ.பி.எல்., தொடரில் விளையாட யாருக்கு தான் ஆசை இருக்காது. எனக்கும் அந்த ஆர்வம் உண்டு,''என்றார்.
---------------
ஸ்டிராஸ் புலம்பல்
இங்கிலாந்து கேப்டன் ஸ்டிராஸ் கூறுகையில்,""தோல்வி பற்றி விளக்கம் அளிக்க முடியாத நிலையில் உள்ளேன். நான்கு "கேட்ச்' வாய்ப்புகளை தவற விட்டதால், சிக்கல் ஏற்பட்டது. ஒரு பேட்ஸ்மேன் கொடுக்கும் "கேட்ச்' வாய்ப்பை வீணாக்கினால், அதற்கு பின் அவரது விக்கெட்டை கைப்பற்றுவது கடினம். எங்களது உலக கோப்பை கனவு இன்னும் முடிந்து விடவில்லை,''என்றார்.
-----------
ஐ.சி.சி.,க்கு கோரிக்கை
அயர்லாந்து கேப்டன் போர்டர்பீல்டு கூறுகையில்,""அடுத்த உலக கோப்பை தொடரில் கத்துக்குட்டி அணிகள் நீக்கப்படும் என்ற ஐ.சி.சி.,முடிவு ஏமாற்றம் அளிக்கிறது. தகுதிச் சுற்று போட்டிகள் வைத்து அனைத்து அணிகளுக்கும் வாய்ப்பு அளிக்க வேண்டும். உலக கோப்பை அரங்கில் பாகிஸ்தானை காட்டிலும் இங்கிலாந்துக்கு எதிராக வென்றதே சிறப்பானது. இம்முறை மிகப் பெரும் இலக்கை சேஸ் செய்து காட்டியுள்ளோம்,''என்றார்.

"கத்துக்குட்டியிடம்' கவிழ்ந்தது ஏன்? * இங்கிலாந்து "மீடியா' கடும் விமர்சனம் * அயர்லாந்தில் வெற்றி கொண்டாட்டம்

பெங்களூரு: உலக கோப்பை தொடரில் மிகப் பெரும் அதிர்ச்சி. பரபரப்பான லீக் போட்டியில் அயர்லாந்து அணி, இங்கிலாந்தை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. கெவின் ஓ'பிரையனின் அதிவேக சதம், அயர்லாந்தின் வெற்றிக்கு பக்கபலமாக இருந்தது.
இந்திய துணைக் கண்டத்தில் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. நேற்று பெங்களூருவில் நடந்த "பி' பிரிவு லீக் போட்டியில் (பகலிரவு) இங்கிலாந்து, அயர்லாந்து அணிகள் மோதின. "டாஸ்' வென்ற இங்கிலாந்து கேப்டன் ஸ்டிராஸ், "பேட்டிங்' தேர்வு செய்தார்.
பீட்டர்சன் அதிரடி:
இங்கிலாந்து அணிக்கு கேப்டன் ஸ்டிராஸ், கெவின் பீட்டர்சன் ஜோடி சூப்பர் துவக்கம் அளித்தது. அயர்லாந்து பந்துவீச்சை பதம்பார்த்த இந்த ஜோடி, முதல் விக்கெட்டுக்கு 91 ரன்கள் சேர்த்த போது, ஸ்டிராஸ் (34) அவுட்டானார். மறுமுனையில் அதிரடி காட்டிய பீட்டர்சன் (59) நம்பிக்கை அளித்தார்.
டிராட் சாதனை:
பின் ஜோனாதன் டிராட், இயான் பெல் இணைந்து அசத்தலாக ஆடினர். டிராட் 64 ரன்கள் எடுத்த போது, ஒரு நாள் போட்டிகளில் அதிவேகமாக ஆயிரம் ரன்களை(21 போட்டி) எடுத்த சக வீரர் பீட்டர்சன், விவியன் ரிச்சர்ட்ஸ்(வெஸ்ட் இண்டீஸ்) ஆகியோரது சாதனையை சமன் செய்தார். மூன்றாவது விக்கெட்டுக்கு 167 ரன்கள் சேர்த்த நிலையில், பெல் (81) வெளியேறினார். இவருக்கு ஒத்துழைப்பு தந்த டிராட் (92) சதம் அடிக்கும் வாய்ப்பை கோட்டைவிட்டார். கோலிங்வுட் (16), பிரையர் (6), பிரஸ்னன் (4), மைக்கேல் யார்டி (4) பெரிய அளவில் சோபிக்கவில்லை. இங்கிலாந்து அணி 50 ஒவரில் 8 விக்கெட்டுக்கு 327 ரன்கள் குவித்தது.
அயர்லாந்து சார்பில் ஜான் மூனே 4, டிரன்ட் ஜான்ஸ்டன் 2 விக்கெட் வீழ்த்தினர்.
கெவின் அதிரடி:
கடின இலக்கை விரட்டிய அயர்லாந்து அணி திணறல் துவக்கம் கண்டது. ஆண்டர்சன் வீசிய முதல் பந்திலேயே போர்ட்டர்பீல்டு(0) போல்டானார். ஸ்டர்லிங்(32), ஜாய்ஸ்(32), நியால் ஓ'பிரையன்(29) ஓரளவுக்கு ரன் சேர்த்தனர். இதற்கு பின் கெவின் ஓ' பிரையன், கியுசக் இணைந்து "சூப்பராக' ஆடினர். இங்கிலாந்து பந்துவீச்சை சிதறடித்த கெவின் அதிரடியாக ரன் குவித்தார். சுவான், பிரஸ்னன், ஆண்டர்சன் என அனைவரது பந்துகளிலும் சாதாரணமாக "சிக்சர்களை' பறக்க விட்டார். யார்டி பந்தில் 2 ரன்களை தட்டி விட்ட கெவின், 50 பந்துகளில் சதம் அடித்தார். இதன் மூலம் உலக கோப்பை அரங்கில் அதிவேக சதம் அடித்து சாதனை படைத்தார். 6வது விக்கெட்டுக்கு 162 ரன்கள் சேர்த்த நிலையில், கியுசக்(47) ரன் அவுட்டானார். கெவின் 113 ரன்களுக்கு(13 பவுண்டரி, 6 சிக்சர்) ரன் அவுட்டானார். அடுத்து வந்த மூனே(33) கைகொடுக்க, அயர்லாந்து அணி 49.1 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 329 ரன்கள் எடுத்து அசத்தல் வெற்றி பெற்றது.
--------------
அதிவேக சதம்
நேற்று 50 பந்துகளில் 100 ரன்களை எட்டிய அயர்லாந்து வீரர் கெவின் ஓ' பிரையன் உலக கோப்பை அரங்கில் அதிவேக சதம் அடித்து சாதனை படைத்தார். இவர், ஆஸ்திரேலியாவின் ஹைடன் சாதனையை(66 பந்துகள், எதிர், தென் ஆப்ரிக்கா, 2007) தகர்த்தார். தவிர, சர்வதேச அளவில் அதிவேக சதம் அடித்தவர்களின் வரிசையில் 6வது இடத்தை பிடித்தார். இப்பட்டியலில் பாகிஸ்தானின் அப்ரிதி முதலிடத்தில் ( 37 பந்து, எதிர் இலங்கை, 1996) உள்ளார்.
--------------
"சேஸ்' சாதனை
நேற்று அபாரமாக ஆடிய அயர்லாந்து அணி, உலக கோப்பை அரங்கில் அதிக ரன்களை(329/7) "சேஸ்' செய்து சாதனை படைத்தது. இதற்கு முன் 1992ல் இலங்கை அணி அதிகபட்சமாக 313 ரன்களை(எதிர், ஜிம்பாப்வே) "சேஸ்' செய்திருந்தது.
--------
இங்கிலாந்துக்கு அவமானம்
"கிரிக்கெட்டின் தாயகம்' என்று போற்றப்படும் இங்கிலாந்துக்கு நேற்று மிகப் பெரும் "அடி' விழுந்தது. கத்துக்குட்டி அணியாக வர்ணிக்கப்பட்ட அயர்லாந்திடம் பரிதாபமாக வீழ்ந்தது. தாங்கள் சாதாரண அணி அல்ல என்பதை அழுத்தமாக நிரூபித்துள்ள அயர்லாந்து அணி, அடுத்த போட்டியில் தான் எதிர்கொள்ள இந்திய அணிக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஸ்கோர்போர்டு
இங்கிலாந்து
ஸ்டிராஸ்(ப)டாக்ரெல் 34(37)
பீட்டர்சன்(கே)நியால்(ப)ஸ்டர்லிங் 59(50)
டிராட்(ப)மூனே 92(92)
பெல்(கே)ஸ்டர்லிங்(ப)மூனே 81(86)
கோலிங்வுட்(கே)நியால்(ப)மூனே 16(11)
பிரயார்(ப)ஜான்ஸ்டன் 6(5)
பிரஸ்னன்(கே)ஜான்ஸ்டன்(ப)மூனே 4(8)
யார்டி(ப)ஜான்ஸ்டன் 3(6)
சுவான்-அவுட்இல்லை 9(5)
உதிரிகள் 23
மொத்தம் (50 ஓவரில், 8 விக்.,) 327
விக்கெட் வீழ்ச்சி: 1-91(ஸ்டிராஸ்), 2-111(பீட்டர்சன்), 3-278(பெல்), 4-288(டிராட்), 5-299(பிரையர் ), 6-312(கோலிங்வுட் ), 7-317(யார்டி), 8-327(பிரஸ்னன்).
பந்துவீச்சு: ரான்கின் 7-0-51-0, ஜான்ஸ்டன் 10-0-58-2, கியுசக் 4-0-39-0, டாக்ரெல் 10-0-68-1, மூனே 9-0-63-4, ஸ்டர்லிங் 10-0-45-1.
அயர்லாந்து
போர்டர்பீல்டு(ப)ஆண்டர்சன் 0(1)
ஸ்டர்லிங்(கே)பீட்டர்சன்(ப)பிரஸ்னன் 32(28)
ஜாய்ஸ்(ஸ்டம்)பிரயார்(ப)சுவான் 32(61)
நியால்(ப)சுவான் 29(36)
வில்சன் எல்.பி.டபிள்யு.,(ப)சுவான் 3(14)
கெவின்-ரன் அவுட்-(பிரயார்/பிரஸ்னன்) 113(63)
கியுசக்-ரன் அவுட்-(பிராட்/கோலிங்வுட்) 47(58)
மூனே -அவுட் இல்லை- 33(30)
ஜான்ஸ்டன் -அவுட் இல்லை- 7(4)
உதிரிகள் 33
மொத்தம்(49.1 ஓவரில் 7 விக்.,) 329
விக்கெட் வீழ்ச்சி:1-0(போர்ட்டர்பீல்டு), 2-62(ஸ்டர்லிங்), 3-103(நியால்), 4-106(ஜாய்ஸ்), 5-111(வில்சன்), 6-273(கியுசக்), 7-317(கெவின்).
பந்துவீச்சு: ஆண்டர்சன் 8.1-49-1, பிராட் 9-0-73-0, பிரஸ்னன் 10-0-64-1, யார்டி 7-0-49-0, சுவான் 10-0-47-3, கோலிங்வுட் 5-0-26-0.

அயர்லாந்திடம் வீழ்ந்தது இங்கிலாந்து! * உலக கோப்பையில் "மெகா' அதிர்ச்சி

இங்கிலாந்து மக்களின் வாழ்க்கை நடைமுறை குறித்து ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் அவர்களது உடல் அளவு பழக்கவழக்கங்கள் போன்ற ருசிகர சம்பவங்கள் இடம் பெற்றுள்ளன.

சராசரியாக அவர்கள் 5 ஆடி 10 அங்குல உயரமும், 175 பவுண்டு எடை உடையவராகவும் உள்ளனர். ஆண்டுக்கு ரூ.19 லட்சத்து 75 ஆயிரம் சம்பாதிக்கின்றனர்.

உடை அலங்காரத்துக்கு ரூ.40 ஆயிரமும், பீடி குடிக்க ரூ.80 ஆயிரமும் செலவு செய்கின்றனர். ஆன்லைன் மூலம் ஷாப்பிங் செய்வதில் இவர்களுக்கு அலாதி பிரியம் உண்டு. இதற்காக ரூ.1லட்சத்து 55 ஆயிரம் செலவழிக்கின்றனர். உணவு சாப்பிட ரூ.30 ஆயிரமும் செலவிடுகின்றனர்.

தற்போதை நவின காலத்து இளைஞர்கள் குற்ற உணவு மிக்கவர்களாக திகழ்கின்றனர். தங்களது வாழ்நாளில் சுமார் 19 லட்சம் தடவையாவது “சாரி” (வருத்தம்) தெரிவிக்கின்றனர். இங்கிலாந்து மக்கள் உறவினர்களுடன் சேர்ந்து தங்களுக்கு தேவையான பொருட்களை ஷாப்பிங் செய்வதை பெரிதும் விரும்புகின்றனர். இதில் பெண்களைவிட ஆண்களே அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர்.

இங்கிலாந்தை சேர்ந்த ஆண்கள் டி.வி. நிகழ்ச்சிகளில் மூழ்கி கிடக்கின்றனர். தங்களது ஆயுட்காலத்தில் 11 ஆண்டுகளை டி.வி. முன்பே கழிக்கின்றனர். மேலும் 10,500 மணி நேரம் மது குடித்தே பொழுது போக்குகின்றனர். “செக்ஸ்”சில் ஆர்வம் மிக்கவர்களாக ஆண்கள் திகழ்கின்றனர்.

தங்களது வாழ்நாளில் குறைந்தது 9 பெண்களுடன் இரவு பொழுதை கழிக்கின்றனர். இந்த தகவல் அந்நாட்டில் இருந்து வெளிவரும் “டெய்லி மெயில்” பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளது.

ஆயுட்காலத்தில் 11 ஆண்டுகளை டி.வி. முன்பு கழிக்கும் இங்கிலாந்து ஆண்கள்: 10,500 மணி நேரம் மது குடிக்கின்றனர்

சி‌ட்‌னி‌யி‌ல் நட‌ந்து வரு‌‌ம் ஆ‌ஸ்‌ட்ரே‌லியா அ‌ணி‌க்கு எ‌திரான 6வது ஒரு நா‌ள் போ‌ட்டி‌யி‌ல் ‌ட்ரா‌ட்டி‌ன் அபார சத‌த்தா‌ல் இ‌ங்‌கிலா‌ந்து 333 ர‌ன்க‌ள் கு‌வி‌த்து‌ள்ளது.

பூவா தலையா வெ‌ன்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 333 ரன்கள் எடுத்து‌ள்ளது.

அதிகபட்சமாக ஜோன‌த்தா‌ன் ‌ட்ரா‌ட் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். அவர் 126 பந்தில் 11 பவுண்டரிகளுடன் 137 ரன்கள் எடுத்தார்.

ஸ்டாரஸ் 63 ரன்களும், இயான் பெல் 45 ரன்களும் எடுத்தனர்.

334 ர‌ன்க‌ள் எடு‌த்தா‌‌ல் வெ‌‌ற்‌றி எ‌ன்ற இல‌க்குட‌ன் ஆஸ்‌ட்ரேலிய அணி ‌விளையாடி வரு‌கிறது.

தொட‌‌க்க ‌வீர‌ர்க‌ள் வா‌ட்ச‌ன் 36 ர‌ன்‌‌னி‌லு‌ம், ஹா‌ட்டி‌ன் 17 ர‌ன்‌னிலு‌ம் ‌விளையாடி கொ‌ண்டிரு‌க்‌‌கி‌ன்றன‌ர். த‌ற்போது ஆ‌‌ஸ்‌ட்ரே‌லியா அ‌ணி ‌வி‌க்கெ‌‌ட் இழ‌ப்‌பி‌ன்‌‌றி 7 ஓவ‌ரி‌ல் 59 ர‌ன்க‌ள் கு‌வி‌த்து‌ள்ளது.

ட்ரா‌ட் சத‌ம்: இ‌ங்‌கிலா‌ந்து 333 ரன் கு‌வி‌ப்பு

சிட்னி: சிட்னி டெஸ்டில் இங்கிலாந்து அணி பல சாதனைகளுடன் இன்றைய கடைசி நாள் ஆட்டத்தில், இன்னிங்ஸ் மற்றும் 83 ரன்களில் வீழ்த்தி ஆஸ்திரேலியாவை அதன் மண்ணில் 24 வருடங்களின் பின்பு ஆஷஸ் தொடரை 3-1 என்ற கணக்கில் வெற்றிகொண்டது. இங்கிலாந்து அணியுடனான 5வது டெஸ்டில், ஆஸ்திரேலியா 2வது இன்னிங்சில் 7 விக்கெட் இழப்புக்கு 213 ரன் எடுத்து தோற்கும் நிலையில் இருந்தது. சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடக்கும் இப்போட்டியில், ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 280 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.

அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து, 3ம் நாள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 488 ரன் எடுத்திருந்தது. பிரியர் 54, பிரெஸ்னன் (0) நேற்று ஆட்டத்தை தொடர்ந்தனர். அபாரமாக விளையாடிய பிரியர் சதம் அடித்தார். பிரியர் 118 ரன் (130 பந்து, 11 பவுண்டரி, 1 சிக்சர்), பிரெஸ்னன் 35, டிரெம்லெட் 12 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 644 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. ஸ்வான் 36 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

ஆஸி. பந்துவீச்சில் ஜான்சன் 4, ஹில்பென்ஹாஸ் 3, சிடில், வாட்சன், பியர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். முதல் இன்னிங்சில் 364 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா, 4ம் நாள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 213 ரன் எடுத்துள்ளது. வாட்சன் 38, கவாஜா 21, கேப்டன் கிளார்க் 41, ஹாடின் 30 ரன் எடுத்தனர். ஹியூஸ் 13, ஹஸி 12 ரன்னில் ஆட்டமிழந்தனர். ஜான்சன் டக் அவுட் ஆனார். ஸ்மித் 24, சிடில் 17 ரன்னுடன் களத்தில் இருந்தனர். இங்கிலாந்து வெற்றி உறுதியாகிவிட்ட நிலையில் இன்று கடைசி நாள் ஆட்டம் நடந்தது.

தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா 281 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனையடுத்து 24 ஆண்டுக்குப் பின் ஆஸ்திரேலியா மண்ணில், ஆஷஸ் டெஸ்ட் தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து. இதற்கு முன் கடந்த 1987ம் ஆண்டு மைக் கேட்டிங் தலைமையிலான இங்கிலாந்து அணி, ஆஸ்திரேலியாவில் ஆஷஸ் தொடரை கைப்பற்றி இருந்தது.

24 வருடங்களின் பின்பு ஆஷஸ் கோப்பையை கைப்பற்றிய இங்கிலாந்து

முக நூல்

Popular Posts