background img

புதிய வரவு

Showing posts with label World Cup Cricket. Show all posts

மும்பை: எல்லோரும் பேட் செய்கிறார்கள், டோணி என்ன செய்கிறார் என்று கேட்கப்பட்டு வந்த கேள்விகளுக்கு நேற்று அட்டகாசமான, ஆணித்தரமான முறையில் அருமையான பதிலளித்து விட்டார் கேப்டன் டோணி. நேற்று அவரது பேட்டிங் பிரளயத்தால்தான் இலங்கையை நசுக்கி, இந்தியா தனது 28 ஆண்டு கால கோப்பைக் கனவை நனவாக்க முடிந்தது.

இந்தத் தொடர் முழுவதுமே டோணியிடமிருந்து பெரியஅளவில் ரன்கள் வரவில்லை. மேலும், அவரது முடிவுகள் பலவும் கூட வி்மர்சிக்கப்பட்டன. குறிப்பாக நேற்றே கூட அஸ்வினுக்குப் பதில், ஸ்ரீசாந்த்தை சேர்த்தது கூட விமர்சிக்கப்பட்டது.

ஆனால் தன்னை நோக்கி வீசப்பட்ட ஒட்டுமொத்த கேள்விகளுக்கும் தனது அசாத்தியமான பேட்டிங் மற்றும் அரிய வெற்றியின் மூலம் ஆணித்தரமாக பதிலளித்து விட்டார் டோணி.

நேற்று அவர் போட்டியை முடித்து வைத்த விதம் அட்டகாசமானது. அழகான ஒரு சூப்பர்ப் சிக்ஸரை விளாசி இந்தியாவை உற்சாகத்தின் உச்சிக்குக் கூட்டிக் கொண்டு போய் விட்டார் டோணி.

இந்தத் தொடர் முழுவதுமே 6வது நிலை வீரராகத்தான் களம் இறங்கினார் டோணி. அவருக்கு முன்பு யுவராஜ் சிங் வருவார். அதன் பின்னர்தான் டோணி இறங்குவார். ஆனால் நேற்று ஆச்சரியமளிக்கும் வகையில் 5வதாக அவர் களம் இறங்கினார். அப்போது இந்தியா இக்கட்டான நிலையில் இருந்தது. 3 முக்கிய விக்கெட்களை இழந்து 114 ரன்களில் தடுமாறிக் கொண்டிருந்தது இந்தியா. இதனால் தானே களம் இறங்கி அணியை மீட்க முடிவு செய்து யுவராஜுக்குப் பதில் அவரை இறங்கி விட்டார் டோணி.

அதேபோல களத்தில் குதித்தது முதல் கடைசி வரை மிகுந்த மன உறுதியோடும், வெற்றி பெற்றேயாக வேண்டும் என்ற வெறியோடும் ஆடினார் டோணி. அவரும் கம்பீருமாக சேர்ந்து போட்ட 100 ரன் பார்ட்னர்ஷிப்பிலிருந்தே டோணியின் வெற்றி தாகத்தைப் புரிந்து கொள்ள முடிந்தது ரசிகர்களால். சும்மா, சொல்லக் கூடாது, இருவரும் சேர்ந்து ஆடியது மிகப் பிரமாதமாக இருந்தது.

வெற்றி கிட்டுமா என்ற சந்தேகத்தில் இருந்தவர்களை ரிலாக்ஸ் ஆக்கி, சந்தோஷத்தைக் கொண்டாட தயார்படுத்தி விட்டனர் கம்பீரும், டோணியும். கம்பீர் நிதானமாக ரன் குவிப்பில் ஈடுபட்டிருந்த நிலையில், டோணி அதிரடிக்குத் தாவி பின்னி எடுத்து விட்டார்.

குறிப்பாக இலங்கை வேகப்பந்து வீச்சாளர்கள் அவரது கையில் சிக்கி கடுமையாக தண்டிக்கப்பட்டனர். திஷரா பெரைரா, மலிங்கா ஆகியோரின் பந்துகளை பவுண்டரிகளுக்கு விரட்டி ஒன்றுமில்லாமல் செய்து விட்டார்.

டோணியை அடக்க இலங்கை கேப்டன் சங்கக்காரா செய்த அத்தனை உத்திகளும் தவிடுபொடியாக்கி விட்டன. 2 சிக்ஸ், 8 பவுண்டரிகளுடன் 79 பந்துகளில் 91 ரன்களைக் குவித்து நிமிர்ந்து நின்றார் டோணி, ஆட்ட முடிவில்.

யுவராஜ் சிங்குக்குப் பதில் டோணிநேற்று களம் இறங்கியதற்கு முக்கியக் காரணம், அப்போது இலங்கை இரண்டு ஆப் ஸ்பின்னர்களை வைத்து இந்தியாவைக் கலைக்க முயற்சித்ததே. மேலும், ஒரே நேரத்தில் இரண்டு இடது கை ஆட்டக்காரர்கள் இருக்க வேண்டாம் என்று நினைத்தார் டோணி. இதனால்தான் யுவராஜுக்குப் பதில் அவரே இறங்கி விட்டார். ஆனால் அதிர்ஷ்டம் டோணியின் பக்கம் இருந்ததால் தப்பித்தார். ஒருவேளை அவரது முடிவு தப்பாகப் போயிருந்தால் விமர்சகர்களின் வாயில் சிக்கி வறுத்தெடுக்கப்பட்டிருப்பார் டோணி. போட்டியின் முடிவில் அவரே இதை சிரித்தபடி கூறினார்.

ஆரம்பத்தில் மிகவும் கவனமாகத்தான் ஆடினார் டோணி. இந்தியாவின் நிலை வலுப்பட்ட அடுத்த விநாடியே அவர் அதிரடிக்குத் தாவினார். இலங்கை பந்து வீச்சு வெளுக்க ஆரம்பித்து விட்டார். அதுவும் அவர் போட்ட இரண்டு சிக்ஸர்களும் சூப்பர்ப்.

அதிலும் முத்தையா முரளிதரனின் பந்துகளை அவர் அடித்து நொறுக்கியபோது மைதாமே குலுங்கிப் போய் விட்டது. அதுவரை நன்றாகத்தான் பந்து வீசிக் கொண்டிருந்தார் முரளி. ஆனால் டோணியிடம் சிக்கிய அவரது சுழற்பந்து ஒன்றுமில்லாமல் போய் விட்டது.

மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் முரளிதரன் முன்பு விளையாடியபோது கிடைத்த அனுபவத்தை வைத்து முரளியின் பந்து வீச்சை சிதறடித்து விட்டார் டோணி.

நேற்றைய அதிரடி ஆட்டம் மூலம் தன் மீதான விமர்சனத்தைத் துடைத்து, தனது பேட்டிங் பிரளயத்தையும் மீட்டு, இந்தியாவின் 28 ஆண்டு கால கனவையும் நனவாக்கி, ஒரே 'ஸ்டிரோக்கில்' பல சிக்ஸர்களை அடித்து விட்டார் டோணி.

ரன் வறட்சியைப் போக்கி, கோப்பைக் கனவையும் நனவாக்கிய கேப்டன் டோணி

புதுடில்லி: உலக கோப்பை தொடரின் அரையிறுதியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோத வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
கிரிக்கெட் அரங்கில், இந்தியா-பாகிஸ்தான் மோதல் என்றால் அதிக எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருக்கும். அதுவும் உலக கோப்பை போன்ற மிகப்பெரிய தொடரில் இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மோதல் என்றால் சொல்லவா வேண்டும்.
இந்தியா ஆதிக்கம்:
உலக கோப்பை அரங்கில், இந்தியா-பாகிஸ்தான் அணிகள் நான்கு முறை (1992, 96, 99, 2003) மோதியுள்ளன. இதில் அனைத்திலும் இந்திய அணி வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்தி வருகிறது. கடந்த 2007ல் கரீபிய மண்ணில் நடந்த உலக கோப்பை தொடரில் இந்தியா (பி), பாகிஸ்தான் (டி) அணிகள் வெவ்வேறு பிரிவில் இடம் பெற்றதால் லீக் சுற்றில் மோத வாய்ப்பு இல்லாமல் போனது. தவிர, இவ்விரு அணிகள் முதல் சுற்றோடு வெளியேறியதால், அடுத்த சுற்றுகளிலும் எதிர்கொள்ள முடியாமல் போனது.
ஐந்தாவது முறை:
தற்போதைய பத்தாவது உலக கோப்பை தொடரில் இந்தியா (பி), பாகிஸ்தான் (ஏ) அணிகள் வெவ்வேறு பிரிவில் இடம் பிடித்ததால், மீண்டும் ஒருமுறை லீக் சுற்றில் மோத முடியாமல் போனது. காலிறுதியிலும் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோத வாய்ப்பு இல்லாமல் போனது. ஏனெனில் வரும் 23ம் தேதி மிர்புரில் நடக்கும் போட்டியில் பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகின்றன. வரும் 24ம் தேதி நடக்கும் காலிறுதியில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை மேற்கொள்கின்றன.
இவ்விரு அணிகள் தங்களது காலிறுதிப் போட்டிகளில் வெற்றி பெறும் பட்சத்தில், வரும் 30ம் தேதி மொகாலியில் நடக்கவுள்ள அரையிறுதியில் மோதலாம். இதன்மூலம் இவ்விரு அணிகள் ஐந்தாவது முறையாக உலக கோப்பை அரங்கில் எதிர்கொள் நல்ல வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதில் இந்திய அணி தனது ஆதிக்கத்தை தொடருமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

அரையிறுதியில் இந்தியா-பாக்., மோதல்?

இன்று பாகிஸ்தான், ஜிம்பாவே அணிகள் மோதும் கிரிக்கெட் போட்டி இலங்கையில் உள்ள கண்டியில் பகல் இரவு ஆட்டமாக தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஜிம்பாவே முதலில் பேட் செய்ய களமிறங்கியது 27.2 ஓவரில் 96/5 விக்கெட் இருந்த நிலையில் மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது.

உலக கோப்பை கிரிக்கெட்: மழையால் நிறுத்தம்

இன்று பாகிஸ்தான், ஜிம்பாவே அணிகள் மோதும் கிரிக்கெட் போட்டி இலங்கையில் உள்ள கண்டியில் பகல் இரவு ஆட்டமாக தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஜிம்பாவே முதலில் பேட் செய்ய களமிறங்கியது 27.2 ஓவரில் 96/5 விக்கெட் இருந்த நிலையில் மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது.

பெங்களூரு: உலக கோப்பை தொடரில் மிகப் பெரும் அதிர்ச்சி. பரபரப்பான லீக் போட்டியில் அயர்லாந்து அணி, இங்கிலாந்தை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. கெவின் ஓ'பிரையனின் அதிவேக சதம், அயர்லாந்தின் வெற்றிக்கு பக்கபலமாக இருந்தது.
இந்திய துணைக் கண்டத்தில் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. நேற்று பெங்களூருவில் நடந்த "பி' பிரிவு லீக் போட்டியில் (பகலிரவு) இங்கிலாந்து, அயர்லாந்து அணிகள் மோதின. "டாஸ்' வென்ற இங்கிலாந்து கேப்டன் ஸ்டிராஸ், "பேட்டிங்' தேர்வு செய்தார்.
பீட்டர்சன் அதிரடி:
இங்கிலாந்து அணிக்கு கேப்டன் ஸ்டிராஸ், கெவின் பீட்டர்சன் ஜோடி சூப்பர் துவக்கம் அளித்தது. அயர்லாந்து பந்துவீச்சை பதம்பார்த்த இந்த ஜோடி, முதல் விக்கெட்டுக்கு 91 ரன்கள் சேர்த்த போது, ஸ்டிராஸ் (34) அவுட்டானார். மறுமுனையில் அதிரடி காட்டிய பீட்டர்சன் (59) நம்பிக்கை அளித்தார்.
டிராட் சாதனை:
பின் ஜோனாதன் டிராட், இயான் பெல் இணைந்து அசத்தலாக ஆடினர். டிராட் 64 ரன்கள் எடுத்த போது, ஒரு நாள் போட்டிகளில் அதிவேகமாக ஆயிரம் ரன்களை(21 போட்டி) எடுத்த சக வீரர் பீட்டர்சன், விவியன் ரிச்சர்ட்ஸ்(வெஸ்ட் இண்டீஸ்) ஆகியோரது சாதனையை சமன் செய்தார். மூன்றாவது விக்கெட்டுக்கு 167 ரன்கள் சேர்த்த நிலையில், பெல் (81) வெளியேறினார். இவருக்கு ஒத்துழைப்பு தந்த டிராட் (92) சதம் அடிக்கும் வாய்ப்பை கோட்டைவிட்டார். கோலிங்வுட் (16), பிரையர் (6), பிரஸ்னன் (4), மைக்கேல் யார்டி (4) பெரிய அளவில் சோபிக்கவில்லை. இங்கிலாந்து அணி 50 ஒவரில் 8 விக்கெட்டுக்கு 327 ரன்கள் குவித்தது.
அயர்லாந்து சார்பில் ஜான் மூனே 4, டிரன்ட் ஜான்ஸ்டன் 2 விக்கெட் வீழ்த்தினர்.
கெவின் அதிரடி:
கடின இலக்கை விரட்டிய அயர்லாந்து அணி திணறல் துவக்கம் கண்டது. ஆண்டர்சன் வீசிய முதல் பந்திலேயே போர்ட்டர்பீல்டு(0) போல்டானார். ஸ்டர்லிங்(32), ஜாய்ஸ்(32), நியால் ஓ'பிரையன்(29) ஓரளவுக்கு ரன் சேர்த்தனர். இதற்கு பின் கெவின் ஓ' பிரையன், கியுசக் இணைந்து "சூப்பராக' ஆடினர். இங்கிலாந்து பந்துவீச்சை சிதறடித்த கெவின் அதிரடியாக ரன் குவித்தார். சுவான், பிரஸ்னன், ஆண்டர்சன் என அனைவரது பந்துகளிலும் சாதாரணமாக "சிக்சர்களை' பறக்க விட்டார். யார்டி பந்தில் 2 ரன்களை தட்டி விட்ட கெவின், 50 பந்துகளில் சதம் அடித்தார். இதன் மூலம் உலக கோப்பை அரங்கில் அதிவேக சதம் அடித்து சாதனை படைத்தார். 6வது விக்கெட்டுக்கு 162 ரன்கள் சேர்த்த நிலையில், கியுசக்(47) ரன் அவுட்டானார். கெவின் 113 ரன்களுக்கு(13 பவுண்டரி, 6 சிக்சர்) ரன் அவுட்டானார். அடுத்து வந்த மூனே(33) கைகொடுக்க, அயர்லாந்து அணி 49.1 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 329 ரன்கள் எடுத்து அசத்தல் வெற்றி பெற்றது.
--------------
அதிவேக சதம்
நேற்று 50 பந்துகளில் 100 ரன்களை எட்டிய அயர்லாந்து வீரர் கெவின் ஓ' பிரையன் உலக கோப்பை அரங்கில் அதிவேக சதம் அடித்து சாதனை படைத்தார். இவர், ஆஸ்திரேலியாவின் ஹைடன் சாதனையை(66 பந்துகள், எதிர், தென் ஆப்ரிக்கா, 2007) தகர்த்தார். தவிர, சர்வதேச அளவில் அதிவேக சதம் அடித்தவர்களின் வரிசையில் 6வது இடத்தை பிடித்தார். இப்பட்டியலில் பாகிஸ்தானின் அப்ரிதி முதலிடத்தில் ( 37 பந்து, எதிர் இலங்கை, 1996) உள்ளார்.
--------------
"சேஸ்' சாதனை
நேற்று அபாரமாக ஆடிய அயர்லாந்து அணி, உலக கோப்பை அரங்கில் அதிக ரன்களை(329/7) "சேஸ்' செய்து சாதனை படைத்தது. இதற்கு முன் 1992ல் இலங்கை அணி அதிகபட்சமாக 313 ரன்களை(எதிர், ஜிம்பாப்வே) "சேஸ்' செய்திருந்தது.
--------
இங்கிலாந்துக்கு அவமானம்
"கிரிக்கெட்டின் தாயகம்' என்று போற்றப்படும் இங்கிலாந்துக்கு நேற்று மிகப் பெரும் "அடி' விழுந்தது. கத்துக்குட்டி அணியாக வர்ணிக்கப்பட்ட அயர்லாந்திடம் பரிதாபமாக வீழ்ந்தது. தாங்கள் சாதாரண அணி அல்ல என்பதை அழுத்தமாக நிரூபித்துள்ள அயர்லாந்து அணி, அடுத்த போட்டியில் தான் எதிர்கொள்ள இந்திய அணிக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஸ்கோர்போர்டு
இங்கிலாந்து
ஸ்டிராஸ்(ப)டாக்ரெல் 34(37)
பீட்டர்சன்(கே)நியால்(ப)ஸ்டர்லிங் 59(50)
டிராட்(ப)மூனே 92(92)
பெல்(கே)ஸ்டர்லிங்(ப)மூனே 81(86)
கோலிங்வுட்(கே)நியால்(ப)மூனே 16(11)
பிரயார்(ப)ஜான்ஸ்டன் 6(5)
பிரஸ்னன்(கே)ஜான்ஸ்டன்(ப)மூனே 4(8)
யார்டி(ப)ஜான்ஸ்டன் 3(6)
சுவான்-அவுட்இல்லை 9(5)
உதிரிகள் 23
மொத்தம் (50 ஓவரில், 8 விக்.,) 327
விக்கெட் வீழ்ச்சி: 1-91(ஸ்டிராஸ்), 2-111(பீட்டர்சன்), 3-278(பெல்), 4-288(டிராட்), 5-299(பிரையர் ), 6-312(கோலிங்வுட் ), 7-317(யார்டி), 8-327(பிரஸ்னன்).
பந்துவீச்சு: ரான்கின் 7-0-51-0, ஜான்ஸ்டன் 10-0-58-2, கியுசக் 4-0-39-0, டாக்ரெல் 10-0-68-1, மூனே 9-0-63-4, ஸ்டர்லிங் 10-0-45-1.
அயர்லாந்து
போர்டர்பீல்டு(ப)ஆண்டர்சன் 0(1)
ஸ்டர்லிங்(கே)பீட்டர்சன்(ப)பிரஸ்னன் 32(28)
ஜாய்ஸ்(ஸ்டம்)பிரயார்(ப)சுவான் 32(61)
நியால்(ப)சுவான் 29(36)
வில்சன் எல்.பி.டபிள்யு.,(ப)சுவான் 3(14)
கெவின்-ரன் அவுட்-(பிரயார்/பிரஸ்னன்) 113(63)
கியுசக்-ரன் அவுட்-(பிராட்/கோலிங்வுட்) 47(58)
மூனே -அவுட் இல்லை- 33(30)
ஜான்ஸ்டன் -அவுட் இல்லை- 7(4)
உதிரிகள் 33
மொத்தம்(49.1 ஓவரில் 7 விக்.,) 329
விக்கெட் வீழ்ச்சி:1-0(போர்ட்டர்பீல்டு), 2-62(ஸ்டர்லிங்), 3-103(நியால்), 4-106(ஜாய்ஸ்), 5-111(வில்சன்), 6-273(கியுசக்), 7-317(கெவின்).
பந்துவீச்சு: ஆண்டர்சன் 8.1-49-1, பிராட் 9-0-73-0, பிரஸ்னன் 10-0-64-1, யார்டி 7-0-49-0, சுவான் 10-0-47-3, கோலிங்வுட் 5-0-26-0.

அயர்லாந்திடம் வீழ்ந்தது இங்கிலாந்து! * உலக கோப்பையில் "மெகா' அதிர்ச்சி

உலக கோப்பை முதல் போட்டியில் வங்காள தேசத்துக்கு எதிராக ஷேவாக் 175 ரன்கள் எடுத்தார். அதே போல இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் தெண்டுல்கர் 120 ரன்கள் குவித்தார்.இதனால் உலக தர வரிசையில் இருவரும் முன்னேற்றம் அடைந்துள்ளனர்.சர்வதேச கிரிக்கெட் சங்கம் கிரிக்கெட் வீரர்கள் தர வரிசை பட்டியலை வெளியிட்டது.

உலக கோப்பையில் அதிக ரன்கள் எடுத்ததன் மூலம் ஷேவாக் 6 இடங்கள் முன்னேறி தர வரிசையில் 6-வது இடத்தை பிடித்து உள்ளார். தெண்டுல்கர் 5 இடங்கள் முன்னேறி 10-வது இடத்தை பிடித்துள்ளார்.அதே போல சிறப்பான பந்து வீச்சு மூலம் ஜாகீர்கான் 9 இடங்கள் முன்னேறி 14-வது இடத்தையும், ஹர்பஜன்சிங் 4 இடங்கள் முன்னேறி 16-வது இடத்தையும், முனாப் பட்டேல் 11 இடங்கள் முன்னேறி 22-வது இடத்தையும் பிடித்து உள்ளனர்.

இந்தியாவுக்கு எதிரான போட்டியில் 158 ரன் எடுத்த இங்கிலாந்து வீரர் ஸ்டிராஸ் 8 இடங்கள் முன்னேறி 13-வது இடத்தை பிடித்து உள்ளார். பேட்டிங் தர வரிசையில் தென்ஆப்பிரிக்க வீரர் அம்லா முதலிடத்திலும், பந்து வீச்சு தர வரிசையில் நியூசிலாந்து வீரர் வெட்டோரி முதலிடத்திலும் உள்ளனர்.

உலக கோப்பையில் சிறப்பான ஆட்டம்: தெண்டுல்கர்,ஷேவாக் தரவரிசையில் முன்னேற்றம்

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நாக்பூரில் நடந்த ஆட்டத்தில் ஜிம்பாப்வே-கனடா அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 298 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக தைபு 9 பவுண்டரிகளுடன் 98 ரன்களும், எர்வின் 81 பந்துகளில் 6 பவுண்டரி 2 சிக்சருடன் 85 ரன்களும் எடுத்தனர்.

பந்து வீச்சில் பாலாஜி ராவ் 4 விக்கெட்களை வீழ்த்தினார். 299 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய கனடா அணி 42.1 ஓவர்களில் 123 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதையடுத்து 175 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணி வெற்றி பெற்றது.

கனடா அணியில் அதிகபட்சமாக சுர்காரி 26 ரன்களும், குனசேகரா 24 ரன்களும் எடுத்தனர். ஜிம்பாப்வே அணி தரப்பில் பிரைசர், கிரீமர் ஆகியோர் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர்.

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி: ஜிம்பாப்வே அணி 175 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நாக்பூரில் நடந்த ஆட்டத்தில் ஜிம்பாப்வே-கனடா அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 298 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக தைபு 9 பவுண்டரிகளுடன் 98 ரன்களும், எர்வின் 81 பந்துகளில் 6 பவுண்டரி 2 சிக்சருடன் 85 ரன்களும் எடுத்தனர்.

பந்து வீச்சில் பாலாஜி ராவ் 4 விக்கெட்களை வீழ்த்தினார். 299 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய கனடா அணி 42.1 ஓவர்களில் 123 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதையடுத்து 175 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணி வெற்றி பெற்றது.

கனடா அணியில் அதிகபட்சமாக சுர்காரி 26 ரன்களும், குனசேகரா 24 ரன்களும் எடுத்தனர். ஜிம்பாப்வே அணி தரப்பில் பிரைசர், கிரீமர் ஆகியோர் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர்.

Cricket Live score Worldcup 2011update

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் ஒவ்வொரு வீரருக்கும் ரூ 2.3 கோடிக்கு விபத்துக் காப்பீடு எடுத்துள்ளது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்.

இதுதவிர, நிதி சார்ந்த இழப்புகளுக்கு மட்டும் ரூ 130 கோடியை காப்பீடாக எடுத்துள்ளது பிசிசிஐ.

இதுகுறித்து ஓரியன்டல் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் துணை பொது மேலாளர் ரீனா பட்னாகர் கூறுகையில், "இந்திய கிரிக்கெட் அணிக்கு பிசிசிஐ சார்பில் குழு காப்பீடு எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி ஒவ்வொரு வீரரும் தலா ரூ 2.3 கோடியை காப்பீடாகப் பெறுவார்கள். பிப்ரவரி 10ம் தேதி முதல் ஏப்ரல் 19-ம் தேதி வரை இந்த பாலிசிக்கான காலகட்டம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த இரண்டு மாத காலத்தில் வீரர்கள் யாரும் கடுமையாக பாதிக்கப்பட்டாலோ அல்லது உயிரிழக்க நேரிட்டாலோ முழுத் தொகையும் அவர்களுக்கு வழங்கப்பட்டுவிடும்.

இதுதவிர, ஒவ்வொரு போட்டியையும் வெவ்வேறு தொகைக்கு காப்பீடு செய்துள்ளது பிசிசிஐ. இதன்படி போட்டி தடைப்பட்டாலோ அல்லது முழுக்க பாதிக்கப்பட்டாலோ குறைந்தது ரூ 2.5 கோடி முதல் ரூ 15 கோடி வரை இழப்பீடாகக் கிடைக்கும்", என்றார்.

1993-ம் ஆண்டு உலகக் கோப்பையிலிருந்து வீரர்களுக்கு குழு விபத்துக் காப்பீடு எடுத்து வருகிறது பிசிசிஐ என்பது குறிப்பிடத்தக்கது.

உலகக் கோப்பை 2011: ஒவ்வொரு வீரருக்கும் தலா ரூ 2.3 கோடி விபத்துக் காப்பீடு!

சென்னை: உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 19-ந் தேதி தொடங்குகிறது. இதில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 4 போட்டிகள் நடக்கிறது. மேலும் உலக கோப்பை போட்டிக்கு முன்பு சேப்பாக்கம் மைதானத்தில் 2 பயிற்சி ஆட்டங்கள் நடக்கின்றன. தென்ஆப்பிரிக்கா-ஜிம்பாப்வே அணிகள் மோதும் பயிற்சி ஆட்டம் வருகிற 12-ந் தேதியும், இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் பயிற்சி ஆட்டம் 16-ந் தேதியும் நடக்கிறது.

இரு போட்டிகளும் பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்குகிறது. இதில் தென்ஆப்பிரிக்கா-ஜிம்பாப்வே அணிகள் மோதும் பயிற்சி ஆட்டத்துக்கு டிக்கெட் விற்பனை இன்று தொடங்குகிறது. இந்தியா-நியூசிலாந்து பயிற்சி ஆட்டத்துக்கு டிக்கெட் விற்பனை 14-ந் தேதி நடக்கிறது. இதற்கான குறைந்தபட்ச டிக்கெட் விலை ரூ.50. அதிகபட்ச விலை ரூ.500 ஆகும்.

சென்னையில் உலக கோப்பை கிரிக்கெட் பயிற்சி ஆட்டங்கள்: டிக்கெட் விற்பனை!

சென்னை: உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 19-ந் தேதி தொடங்குகிறது. இதில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 4 போட்டிகள் நடக்கிறது. மேலும் உலக கோப்பை போட்டிக்கு முன்பு சேப்பாக்கம் மைதானத்தில் 2 பயிற்சி ஆட்டங்கள் நடக்கின்றன. தென்ஆப்பிரிக்கா-ஜிம்பாப்வே அணிகள் மோதும் பயிற்சி ஆட்டம் வருகிற 12-ந் தேதியும், இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் பயிற்சி ஆட்டம் 16-ந் தேதியும் நடக்கிறது.

இரு போட்டிகளும் பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்குகிறது. இதில் தென்ஆப்பிரிக்கா-ஜிம்பாப்வே அணிகள் மோதும் பயிற்சி ஆட்டத்துக்கு டிக்கெட் விற்பனை இன்று தொடங்குகிறது. இந்தியா-நியூசிலாந்து பயிற்சி ஆட்டத்துக்கு டிக்கெட் விற்பனை 14-ந் தேதி நடக்கிறது. இதற்கான குறைந்தபட்ச டிக்கெட் விலை ரூ.50. அதிகபட்ச விலை ரூ.500 ஆகும்.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அனைத்தும் பொதுத்தேர்வு சமயத்தில் நடக்க உள்ளதால், தங்கள் குழந்தைகளின் படிப்பு பாதிக்கப்படும் என, பெற்றோர் கலக்கமடைந்துள்ளனர். இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள கிரிக்கெட் போட்டி, எங்கு, எப்போது நடந்தாலும் முக்கிய பணிகளை கூட ஒதுக்கி வைத்து விட்டு, "டிவி'யில் அதன் ஒளிபரப்பை காணத் தவறுவதில்லை. அதிலும் மாணவர்கள் பள்ளிக்கு, "மட்டம்' போட்டு விட்டு கிரிக்கெட் பார்ப்பது அதிகரித்துள்ளது.

நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி, இம்மாதம் 19ம் தேதி துவங்கி ஏப்.,2ம் தேதி வரை நடக்கவுள்ளது. இவ்வாண்டு உலகக் கோப்பையை இந்தியா வெல்ல அதிக வாய்ப்புள்ளதாக கிரிக்கெட் வல்லுனர்கள் கருத்து கூறியுள்ளதால், கிரிக்கெட் மீதான ஆர்வம் அதிகரித்துள்ளது.பிளஸ் 2 பொதுத் தேர்வு மார்ச் 2ம் தேதி தொடங்கி 23ம் தேதி வரையும், எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு மார்ச் 28ல் துவங்கி ஏப்.,11ம் தேதி வரை நடக்கிறது. இதே காலகட்டத்தில் கிரிக்கெட் போட்டிகளும் நடக்க உள்ளதால், இந்தாண்டு மாணவர்களின் தேர்வு சதவீதம் குறைய வாய்ப்புள்ளது.

மாணவர்களின் படிப்பை கவனத்தில் கொண்ட ஒரு சில பெற்றோர், தங்கள் வீடுகளில் உள்ள கேபிள் "டிவி' இணைப்பை துண்டித்துள்ளனர். இருந்தாலும் மாணவர்கள் உளவியல் ரீதியாக பாதிக்கப்படுவரோ என்ற கவலை பெற்றோர்களிடம் ஏற்பட்டுள்ளது.இத்தகைய சூழ்நிலையில், தங்கள் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு படிப்பில் கவனம் செலுத்தினால் சிறந்த மதிப்பெண் பெற முடியும் என்று கல்வியாளர்கள் கூறுகின்றனர். எனவே, பொதுத்தேர்வின் அவசியம் குறித்த ஆலோசனைகளை ஆசிரியர்களும், பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து பெற்றோரும் ஆலோசனை வழங்கி, மாணவர்களை நல்வழிப்படுத்த வேண்டும்.

தேர்வு சமயத்தில் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி : பெற்றோர் கவலை

முக நூல்

Popular Posts