background img

புதிய வரவு

எமெர்ஜென்சியில் கழகம் கலக்கத்தில் கருணாநிதி..?

தமிழகத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்கள் குறித்து வரும் புகார்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள காவல்துறையில் தனிப் பிரிவை ஏற்படுத்தியுள்ளார் முதல்வர் ஜெயலலிதா. இதையடுத்து அடுத்தடுத்து நில மோசடி வழக்கில் திமுக புள்ளிகள் கைதாவது திமுக தலைவருக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. "ஜெயலலிதா ஆட்சியில் காலையில் ஒரு வழக்கு மாலையில் ஒரு வழக்கு போடுவதால் தி.மு.க.வினர் மீது போடப்படும் வழக்குகளில் வழக்கறிஞர் அணி சார்பில் அவர்களுக்கு உதவ வேண்டும்” என்று கருணாநிதி கூறியுள்ளார்.

தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், "நகர்ப்புறங்களில், பட்டிதொட்டிகளில் ஆங்காங்கு பரவிக் கிடக்கின்ற கழக அமைப்புகளில் விரிசல் உண்டாக்க வேண்டுமென்பதற்காகவும், அந்த அமைப்புகளை நடத்துகின்ற கழகத் தோழர்களிடத்தில் பீதியை உண்டாக்க வேண்டுமென்பதற்காகவும், இப்போது நடைபெறுகின்ற அ.தி.மு.க. ஆட்சியில் நாள்தோறும் காலையிலே ஒன்று, பிற்பகலிலே ஒன்று, மாலையில் ஒன்று என்று வழக்குகள் போடப்பட்டு வருகின்றன.

தி.மு.க. ஆட்சியில் இதுபோன்ற தவிர்க்க முடியாத வழக்குகளைப் போடுவதாக இருந்தாலும் அன்றைக்கு இருந்த காவல் துறையினர், உடனடியாக அந்தப்பணிகளுக்கு பாய்ந்து செல்லாமல், கூடுமானவரையில் அவர்களுக்கு நேரம் கொடுத்து ஒரு முறைக்கு இரு முறை எச்சரித்து அதற்குப் பிறகே நடவடிக்கைகளில் ஈடுபட்டார்கள்...'' என்றும் கூறியுள்ளார்.

இதன் மூலம் கருணாநிதி தனது ஆட்சியில் தவறு செய்பவர்களை உடடியாக கைது செய்யாமல் அவர்களை எச்சரித்து திருந்துவதற்கு வாய்பளித்தாக காட்ட முனைகிறார். கருணாநிதி ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். ஒருவன் சிகரெட் பிடிக்கிறான் என்றால் அவனை சிலமுறை எச்சரித்து திருத்த முயற்சிக்கலாம். ஒருவன் தண்ணி அடிக்கிறான் என்றால் அவனுக்கும் எச்சரிக்கை செய்து திருந்த வாய்ப்பளிக்கலாம்.

ஆனால் ஒருவன் அடுத்தவனை மிரட்டியோ, அல்லது தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தோ ஒருவனுடைய இடத்தை ஆக்கிரமித்தால், அல்லது அடிமாட்டு விலைக்கு வாங்கினால் பாதிக்கப்படவன் கண்ணீரும் கம்பலையுமாக வந்து நின்றால், அவனுக்கு உரிய நியாயம் கிடைக்க சம்மந்தப்பட்ட அபகரிப்பாளரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமா? அல்லது அவனை அழைத்து, ''இந்த ஆளு நிலத்த அபகரிச்சதோட நிறுத்திக்க; இனிமே யாரு நிலத்திலயாச்சும் கை வச்ச... ''ன்னு எச்சரித்து விட வேண்டுமா? என்ன சொல்ல வர்றீங்க கலைஞரே! "நம்முடைய கழகத்தோழர்களுக்கு பாதுகாப்பாக கழகத்தின் சட்டத்துறையினுடைய துணை உண்டு என்பதை எடுத்துக்காட்டுவதற்காக நம்முடைய கழகத்தில் வழக்கறிஞர்கள் அணி என்று ஒன்று அமைக்கப்பட்டிருக்கின்றது. அந்த அணி இப்போது பணியாற்றுகிறதா இல்லையா என்பது நான் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டிய ஒன்றாக இருக்கின்றது.

அந்த அணி தலைமைக் கழகத்திலே செயல்படுவதாகக் கூறப்படுகிறது. நம்முடைய கழக வழக்கறிஞர்கள், கழகத்தினர் மீது போடப்படுகின்ற வழக்குகளையெல்லாம் சந்தித்து, கழக வழக்கறிஞர் அணியின் சார்பாக அவர்களுக்கு உதவி புரிய வேண்டும் என்று சொல்லியிருக்கிறேன். அவர்களும் அந்த முயற்சியிலே ஈடுபடுவார்கள் என்று நம்புகிறேன். ஆம்; நம்பியிருக்கிறேன்!” என்று கலைஞர் விரக்தியோடு கூறுவதை பார்க்கும் போது, ஒன்றை விளங்கிக் கொள்ள முடிகிறது.

அதாவது தேர்தல் தோல்விக்குப் பின் கழகம் கலைஞரின் கட்டுப்பாட்டில் இல்லை. அல்லது கழகத்தின் பணி மந்தமாக உள்ளது என்பதைத்தான் கலைஞரின் வழக்கறிஞர்கள் அணி குறித்த கண்ணோட்டம் சொல்லாமல் சொல்கிறது. எது எப்படியோ, மத்திய அரசால் குடும்ப உறுப்பினர்கள் உள்ளே போக, மாநில அரசின் நடவடிக்கையால் கழக உறுப்பினர்கள் உள்ளே போக, கலைஞர் வார்த்தையில் சொன்னால் திமுகவுக்கு இது மீண்டும் ஒரு 'எமெர்ஜென்சி' தான். இதிலிருந்து கழகம் மீளுமா? கரையுமா என்பதுதான் இப்போது மக்களின் கூரிய பார்வையின் தேடலாக உள்ளது.

Thanks கீற்று


குடிமக்கள் அரசா? குடிமகன்கள் அரசா?

மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசு மக்கள் நலப்பணிகளை மட்டுமே கவனத்தில் கொள்ளவேண்டும். அந்த மக்கள் நலப் பணிகளுக்கு தேவையான நிதிகளை உரிய நியாயமான வரி விதிப்பின் மூலம் பெற்று, அதை சரியான வகையில் செலவிடுவதில் கவனம் செலுத்த வேண்டும்.

ஆனால் அரசுகளோ மக்களின் வரிப்பணத்தில் மட்டுமன்றி உலக வங்கியிலிருந்து பெரும் கடன்களின் மூலம் கிடைக்கும் தொகைகளை தேவையற்ற இலவசங்களை வழங்குவதற்கும், தமிழில் திரைப்படத்திற்கு பெயர் வைத்தால் வரிவிலக்கு என்பது போன்றவைகளுக்கும், ஆடம்பர அரசியலுக்கும் பயன்படுத்தி வருகின்றன. இவைகளில் அரசின் கஜானா காலியாகி விடுவதால், நாட்டின் மூலாதாரப் பணிகளுக்கு மேலும் கடன்களை வாங்குவதோடு, டாஸ்மாக் எனும் சாராய வியாபாரத்தை செய்தும் கஜானாவை நிறைக்கிறது.

தமிழ்நாட்டில் மதுக்கடைகளை டாஸ்மாக் நிறுவனம் நடத்தி வருகிறது. தமிழகம் முழுவதும் 6696 மதுக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. ஆண்டுக்கு 15 ஆயிரம் கோடி வருமானம் இதன் மூலம் கிடைக்கிறது. மேலும், தற்போது சரக்குகளின் விலையையும் உயர்த்தி 'குடிமகன்'களை குடிக்காமலேயே தள்ளாட வைத்துள்ளது. குவாட்டர் பாட்டில் ரூ.5, ஆர்ப்பாட்டில் ரூ.10, முழுபாட்டில் ரூ.20, பீர் வகைகள் ரூ.5 என விலை உயர்த்தப்பட்டுள்ளது.

விஸ்கி, பிராந்தி, ரம், பீர் உள்ளிட்ட அனைத்து மது பானங்களின் விலை உயர்வு உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. இந்த விலை உயர்வினால் குடிப்பவர்களின் எண்ணிக்கை ஒரு போதும் குறையப்போவதில்லை. மாறாக குடும்பத்திற்கு குடிமகன்கள் வழங்கும் தொகைதான் குறைய வாய்ப்புண்டு.

அடுத்து இன்னும் ஒரு அதிர்ச்சியான செய்தி என்னவெனில், நாடெங்கும் பூரண மதுவிலக்கு வேண்டும் என்று சில அரசியல் கட்சிகளும், இந்திய தவ்ஹீத் ஜமாஅத் போன்ற சமுதாய நலன் நாடும் இயக்கங்களும், சமூக ஆர்வலர்களுக்கும் குரல் கொடுத்து வரும் நிலையில், 280 மதுக்கடைகளை கூடுதலாக திறக்க டாஸ்மாக் நிறுவனம் முடிவு செய்துள்ளதாகவும், இது தவிர எலைட் ஷாப், எலைட் பார் என்று சொல்லக்கூடிய புதிய நவீன கடைகளும் திறக்கவுள்ளதாகவும், இவைகளில் பார் வசதியுடன் உயர்தர மதுபானங்கள், வெளிநாட்டு மது வகைகள் விற்க உள்ளதாகவும் செய்திகள் கூறுகின்றன.

ஏற்கனவே பெட்டிக் கடைகள் போல் அரசின் மதுக்கடையான டாஸ்மாக் மலிந்து பரவிக்கிடக்கும் நிலையில், அதை இன்னும் அதிகப்படுத்துவது மக்கள் நல அரசுக்கு நல்லதல்ல. தாலிக்கு தங்கம் வழங்கும் அரசு, இந்த குடி மூலம் அதே தாலி கீழே இறங்குவதற்கு காரணமாகவுள்ள மதுக்கடையை அதிகரிப்பது அநீதியாகும்.

நாட்டின் குடிமக்களை காக்க வேண்டிய அரசு 'குடிமகன்கள்' அரசாக மாறுவது அரசுக்கு நிரந்தர அவப்பெயரையே பெற்றுத்தரும் என்பதை ஆளும் அரசு உணர்ந்து பூரண மதுவிலக்கை தமிழகத்தில் அமுல்படுத்தி மக்கள் மனதில் இடம்பெற முதல்வர் முன்வரலாமே!

Thanks கீற்று

முதல்வருக்கு முதல் அடி

கலைஞர் அரசின் ஒரு சில தவறுகளின் காரணமாக கோபமுற்ற மக்கள் தேர்த லின் மூலமாக ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினர். கடந்த கால அரசுகளின் தவறுகளை களைந்து புதிய வளர்ச்சித் திட்டங்களை உருவாக்க வேண்டி யது புதிய அரசின் கடமை.

தவறான திட்டங்களையும், நடைமுறைகளையும் மட்டுமே களைய வேண்டிய ஜெயலலிதா அரசு மக்கள் ஆதரவையும், வரவேற்பையும் பெற்ற நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சி திட்டங்களின் மீது கை வைத்திருப்பது மக்கள் மத்தியில் எதிர்ப்பலைகளை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் சி.பி.எஸ்.இ., ஸ்டேட் போர்டு, ஓரியன்டல் ஸ்கூல் ஆப் எஜுகேஷன், ஆங்கிலோ இந்தியன், மெட்ரி குலேஷன் என்று பலவகையான பாடத் திட்டங்கள் நடைமுறையில் உள்ளன.

சி.பி.எஸ்.இ பாடத் திட்டப் பள்ளிக ளில் அகில இந்தியா முழுவதும் ஒரே பாடத் திட்டமே (சமச்சீர்) அமுலில் உள் ளது. பல்வேறு கல்வி முறையில் ஏற் றத் தாழ்வுகள் நிலவி வந்தது. தங்கள் பள்ளிகளில் தகுதி, திறமை ஆகிய வற்றை அதிகப்படுத்தும் கல்வி முறை உள்ளதாக கூறி மெட்ரிகுலேஷன் பள் ளிகள் கட்டணக் கொள்ளை அடித்தன.

பணம் படைத்தவர்களுக்கு மட் டுமே தரமான கல்வி கிடைக்கும் என்ற நிலை உருவானது. சாதீய, பொருளா தார ஏற்றத்தாழ்வுகள் படிக்கும் மாண வர்களிடையே உருவாகக் கூடாது என்கி றஅடிப்படையில் சீருடைத் திட் டம் கொண்டு வரப்பட்டது.

பள்ளி மாணவர்கள் அணியும் ஆடையில் ஏற்றத்தாழ்வுகள் தெரியக் கூடாது என்றால் படிக்கும் பாடத் திட் டங்களில் மட்டும் ஏன் ஏற்றத்தாழ்வு? என்ற கேள்வியை பல ஆண்டுகளாக கல்வியாளர்கள் எழுப்பி வந்தனர்.

கல்வியாளர்கள் மற்றும் பெரும் பான்மை மக்களின நீண்ட கால கோரிக் கையின் அடிப்படையில் கல்வியாளர் கள் அமைந்த குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் நிறைவேற்றப்பட்ட திட் டம்தான் சமச்சீர் கல்வி திட்டம்.

சமச்சீர் கல்வி உருவான வரலா ற்றை கவனத்தில் கொள்ளாமல் கரு ணாநிதி ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டம் என்ற எண்ணத்தோடு அதனை தடுத்து நிறுத்தும் முயற்சியில் இறங்கி மூக்குடைபட்டுள்ளார் முதல்வர்.

சமச்சீர் கல்வி திட்டம் அமுல்படுத் தப்பட்டால் தமிழ்நாடு முழுவதும் அனைத்துப் பள்ளிகளும் ஒரே பாடத் திட்டம் அமையும். இதனால் ஏழைகள் பணக்காரர்கள் என்கிற பேதம் இல்லா மல் அனைவருக்கும் சமமான கல்வி கிடைக்கும்.

இது வரவேற்கத்தக்க திட்டம் என் பதை யாராலும் மறுக்க முடியாது என் றாலும் தனியார் பள்ளிகளின் அநியாய வசூலுக்கு வேட்டு வைக்கும் என்பதால் நொண்டிச் சாக்குகளை கூறி திட் டத்தை தடுத்து நிறுத்தும் நடவடிக்கை யில் இறங்கினர் ஆதிக்கவர்க்கத்தினர்.

சமச்சீர் கல்வி திட்டத்தை சமத் தாழ்வு திட்டம் என்று கேலி பேசி எள்ளி நகையாடினர். தகுதி, திறன் என்று கூறி தங்கள் ஆதிக்க மனோபாவத்திற்கு ஆதரவு சேர்த்தனர். எல்லா கேள்வி கணைகளும் முனை மழுங்கிய வேளையில் ஆதிக்க வர்க்கத்தினர் ஆட்சி மாற்றத்தை தமக்கு ஆதரவாக (ஆதாரமாக) மாற்றிக் கொண்டனர்.

நேரடியாக சமச்சீர் கல்வித் திட் டத்தை நிறைவேற்றக் கூறினால் முடி யாது என்பதை உணர்ந்த ஆதிக்க வர்க்கம் பாடத் திட்டங்கள் சரியில்லை பாடத் திட்டங்களில் தரமில்லை என்று மகுடி ஊதினார்.

ஆதிக்க வர்க்கத்தினரின் சாகசப் பேச்சில் மயங்கிய முதல்வர் சமச்சீர் கல்வி திட்டத்தை தள்ளிப் போடும் நடவடிக்கையில் இறங்கினார். இந்த ஆண்டில் சமச்சீர் கல்வியை நிறுத்தி வைப்பதற்கான சட்டத்திருத்த தீர்மா னத்தை சட்டசபையில் நிறைவேற்றி னார்.

சட்டத் திருத்தத்திற்கு கல்வியாளர் கள் எதிர்ப்பு தெரிவித்தவுடன் தற்காலி கம்தான் நிரந்தரமில்லை என்று கூறி சமாளிக்கப் பார்த்தார்.

இதனை ஏற்றுக் கொள்ளாத கல்வி யாளர்கள் உயர் நீதிமன்றத்தை நாடி னார். உயர் நீதிமன்றம் வழக்கு விசா ரித்து சமச்சீர் கல்வித் திட்டம் தொடரும் என்று தீர்ப்பளித்தது. தீர்ப்பைக் கண்ட வுடன் எச்சரிக்கை அடைந்து தமிழக முதல்வர் தன்னுடைய போக்கை மாற்றிக் கொள்ளாமல் ஈகோவுடன் மோதல் போக்கை தொடர்ந்தார்.

உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத் தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே சமச்சீர் கல்வித் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட 1, 6ம் வகுப்புக ளுக்கு திட்டம் தொடரலாம். மற்ற வகுப் புகளுக்கு ஆய்வுக் குழு அமைத்து பரிசீலிக்குமாறும், அதன் அடிப்படை யில் உயர் நீதிமன்றம் தீர்ப்பளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

உச்ச நீதிமன்றஉத்தரவின்படி தமிழக அரசின் தலைமைச் செயலாளர் தேவேந்திரநாத் சாரங்கி தலைமையில் குழு அமைக்கப்பட்டது. தனியார் பள்ளி நிர்வாகிகளையும் உறுப்பினர்களாகக் கொண்டு அமைக்கப்பட்ட அந்தக் குழு அளித்த ஆய்வறிக்கை கல்வியாளர் கள் மத்தியில் கண்டனத்தை எழுப்பி யது.

இது பற்றிக் கருத்து தெரிவித்த மூத்த கல்வியாளரும், முன்னாள் துணை வேந்தருமான வசந்தி தேவி, ""ஏழை மற்றும் கிராமப்புற மாணவர் களைக் கேவலப்படுத்தி விட்டது தமி ழக அரசின் சமச்சீர் கல்விக்கான ஆய் வுக்குழு - ஆதங்கமும் வேதனையும் ஒரு சேரப் பொங்குகிறது...'' என்று தெரிவித்தார்.

உயர் நீதிமன்றத்தில் இரு தரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலை யில் சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் ஆகியோர் கொண்ட முதலாவது பெஞ்ச் வழங்கிய தீர்ப்பு தமிழக அர சின் நடு மண்டையில் நச்சென்று இறங்கியது.

சமச்சீர் கல்வியை நடப்பு கல்வி யாண்டில் நிறுத்தி வைக்கும் சட்டத் திருத்தத்தின் 3வது பிரிவு செல்லாது. புதிய பாடத் திட்டத்தின்படி அச்சிடப் பட்டு தயாராக உள்ள பொதுப்பாட நூல் களை 22ம் தேதிக்குள் மாணவர்க ளுக்கு விநியோகிக்க வேண்டும். அந்தப் பாடப் புத்தகங்களில் குறைகள் இருக்குமானால் அவற்றைக் கண்ட றிந்து, களைவதற்கு ஒரு குழு அமைத்து 3 மாதங்களுக்குள் உரிய மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

பள்ளிகள் திறந்து எந்தப் பாடப் புத்தகங்களும் இல்லாமல் வெறுமனே மாணவர்கள் சென்று வருகின்றனர். ஆசிரியர்களும் எந்தப் பாடத்தை நடத் துவது என்று குழம்பிய மனநிலையில் உள்ளனர். தமிழக அரசு இனிமேலும் ஈகோ, மேல்முறையீடு என்று கால த்தை கடத்தாமல் சமச்சீர் கல்வித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் முனைப்பு காட்ட வேண்டும்.

நான் பிடித்த முயலுக்கு மூணு கால் என்ற மனப்பான்மையில் முதல்வர் செயல்படுவாரேயானால் முதல் கோணல் முற்றிலும் கோணலாக மாறி விடும். ஐந்தாண்டு காலம் காத்திருந்து பெற்றவெற்றி எல்லாம் உள்ளாட்சித் தேர்தலிலும், பாராளுமன்றத் தேர்தலிலும் காணாமல் போய் விடும்.

Thanks கீற்று

முக நூல்

Popular Posts