சென்னை: பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதும் தனித்தேர்வர்களுக்கு நாளை முதல் வரும் 11-ம் தேதி வரை ஹால் டிக்கெட் வழங்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் மார்ச் 2-ம் தேதி தொடங்கி மார்ச் 25-ம் தேதி வரையிலும், மெட்ரிகுலேசன் தேர்வுகள் மார்ச் 22-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 11-ம் தேதி வரையிலும் நடைபெறுகிறது.
இந்த தேர்வுகளை பள்ளிமாணவர்களும், தனித்தேர்வர்களும் எழுதவிருக்கின்றனர்.
இது குறித்து அரசு தேர்வு இயக்குனர் வசுந்தரா தேவி தெரிவித்ததாவது,
தனித் தேர்வர்களுக்கான ஹால் டிக்கெட் நாளை முதல் வரும் 11-ம் தேதி வரை வழங்கப்படுகிறது. தனித்தேர்வர்கள் ஹால் டிக்கெட்டுக்காக விண்ணப்பித்த மனுவில் குறிப்பிட்டுள்ள தேர்வு மையத்தின் அடிப்படையில் வழங்கப்படும். ஹால் டிக்கெட்டை பெற்றுக் கொண்டதும், அதில் தங்களது பெயர், பிறந்த தேதி, பதிவு எண், தேர்வு மையம் ஆகியவற்றை சரிபார்த்துக் கொள்ளும்படி மாணவர்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
ஹால்டிக்கெட் கிடைக்காதவர்கள் தாங்கள் விண்ணப்பிதற்கான அத்தாட்சியுடன் சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் உள்ள தேர்வுத்துறை அலுவலகத்தில் கூடுதல் செயலாளரை அணுக வேண்டும்.
தேர்வு எழுதும் முதல் நாள் அன்று ரூ.30 மதிப்புள்ள அஞ்சல் தலை ஒட்டப்பட்ட உறையை தேர்வு மையத்தில் சமர்பிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

0 comments :
Post a Comment