background img

புதிய வரவு

ஈரோட்டில் மஞ்சள் விலை மந்தம்


கர்நாடகா மாநிலத்தில் இருந்து தற்போது மஞ்சள் விற்பனைக்கு வருவதால் ஈரோட்டில் மஞ்சள் விலையில் இறங்கு முகம் ஏற்பட்டுள்ளது.

மஞ்சள் விற்பனையில் முதன்மையான சந்தையாக விளங்குவது ஈரோடு ஆகும். தமிழ்நாடு, கர்நாடகா, பாண்டிச்சேரி போன்ற மாநிலங்களில் இருந்து மஞ்சள் விற்பனைக்கு ஈரோடு வரு‌கிறது.

கடந்த ஆண்டு மஞ்சள் விலை வரலாற்றில் இல்லாத அளவு குவிண்டால் ரூ.17 ஆயிரம் வரை விற்பனையானது. குவிண்டால் அதிகபட்சமாக ரூ.5 ஆயிரம் வரை விற்பனையான மஞ்சள் தங்கத்தின் விலைபோல் உயர்ந்ததால் விவசாயிகள் மஞ்சள் பயிரிட தொடங்கினர்.

கடந்த ஆண்டை காட்டிலும் தமிழ்நாட்டில் 60 சதவீதம் மஞ்சள் பயரிட்டுள்ள விவசாயிகள் எண்ணிக்கை கூடுதலாக இருந்தாலும் நோய் தாக்குதலால் மஞ்சள் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் கர்நாடகா மாநிலத்தில் மஞ்சள் விளைச்சல் சிறப்பாக இருப்பதால் ஈரோடு மஞ்சள் சந்தைக்கு மஞ்சள் வரத்து அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக கடந்த மாதம் குவிண்டால் ஒன்று ரூ.16,500 வரை விற்பனையான மஞ்சள் தற்போது குவிண்டால் ஒன்று ரூ.14,400க்கு விற்பனையாகிறது.


0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts