background img

புதிய வரவு

கருணாநிதி மீது நம்பிக்கை இருக்கிறதா?மக்களிடம் கேள்வி கேட்ட மு.க.ஸ்டாலின்

நாகர்கோவில:""தேர்தலில் கொடுக்கும் வாக்குறுதிகளை கருணாநிதி நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை உங்களிடம் இருக்கிறதா?'' என்று கேள்வி கேட்டு, பொது மக்களிடம் பதில் பெற்று ஸ்டாலின் பிரசாரம் செய்தார்.குமரி மாவட்டத்தில் ஆறு சட்டசபை தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து அவர் பிரசாரம் மேற்கொண்டார்.
பல்வேறு கூட்டங்களில் அவர் பேசியதாவது:தேர்தலில் உரிமையோடு ஓட்டு கேட்க வந்துள்ளோம். நாங்கள் தேர்தலுக்காக மட்டும் வருபவர்கள் அல்ல. 2006ல் கூறிய வாக்குறுதிகள், 100 சதவீதம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சொன்னதை விட அதிகம் இந்த ஆட்சியில் செய்யப்பட்டுள்ளது. இப்போது சிலர், வாக்குறுதிகளை அள்ளி வீசுகின்றனர். வானத்தையும், வைகுண்டத்தையும் இணைப்போம்; மணலை கயிறாகத் திரிப்போம் என்றெல்லாம் கூறி வருகின்றனர். ஆனால், தேர்தல் முடிந்தால் இவர்கள் கொடநாடு சென்று விடுவர்.இரண்டு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி என்று கூறி, ஒரு ரூபாய்க்கு அரிசி வழங்கினோம். உலகிலேயே உன்னதமான திட்டமான மருத்துவக் காப்பீடு திட்டம் இந்த ஆட்சியில் செயல்படுத்தப்பட்டது.
ஜெயலலிதா ஆட்சியில் நிறுத்தப்பட்ட திருமண உதவித்தொகை திட்டம் 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்பட்டது.ஆனால், இப்போது யார் எதுவெல்லாமோ சொல்லி வருகின்றனர். இவர்கள் எல்லாம் தேர்தலுக்கு பின் காணாமல் போய் விடுவர். தேர்தல் நேரத்தில் மட்டும் வருபவர்கள், தேர்தலுக்கு பின்னால் கொடநாட்டுக்கு சென்று விடுவர். தேர்தலுக்காக மட்டும் வருபவர்கள் நாங்கள் அல்ல. மக்களுடன் என்றும் இருக்கும் இயக்கம் தி.மு.க., தான்.தேர்தல் நேரத்தில் கொடுக்கும் வாக்குறுதிகளை முதல்வர் கருணாநிதி நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை உங்களிடம் இருக்கிறதா? என்று பொது மக்களை பார்த்து கேட்ட போது இருக்கிறது... இருக்கிறது என்று மக்கள் குரல் கொடுத்தனர். அப்படியானால், தி.மு.க., கூட்டணிக்கு ஆதரவு தர வேண்டும்.இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts