background img

புதிய வரவு

வலுக்கட்டாயமாக ‌படுக்கையறை காட்சி! இளம்நடிகை குற்றச்சாட்டு!!

எனது விருப்பம் இல்லாமல் வலுக்கட்டாயமாக படுக்கையறை காட்சியில் நடிக்க வைத்து விட்டார்கள், என்று புதுப்படக் குழுவினர் மீது இளம் நடிகை ஒருவர் பரபரப்பு குற்றம் சாட்டியிருக்கிறார். சாந்தி என்ற பெயரில் புதிய படம் ஒன்று உருவாகி இருக்கிறது. கவர்ச்சியையும், கிளுகிளுப்பையும் நம்பி வெளியாகி வரும் சமீபத்திய படங்களைப் போலவே இந்த படமும் ஒரு படுக்கையறைக் காட்சியையும், நாயகியின் கவர்ச்சியான நடிப்பையும் நம்பியே உருவாகியிருக்கிறதாம். சாந்தியின் நாயகியாக அர்ச்சனா நடித்திருக்கிறார். இவர் இதற்கு முன்பு புழல், ராமநாதபுரம் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். இருப்பினும் சாந்தி படம் பற்றி பேசுவதற்கே தயங்குகிறார். ஏனாம்? படத்தில் அவர் நடித்திருக்கும் காட்சிகள் அப்படியாம்!
இதுபற்றி அம்மணி அளித்துள்ள பேட்டியில், நல்ல கதையா இருக்கேன்னுதான் நடிக்க சம்மதிச்சேன். ஆனால் மோசமான படுக்கையறை காட்சி ஒன்றை எடுத்திட்டாங்க. நான் மறுத்தபோதும் வற்புறுத்தி வலுக்கட்டாயமாக நடிக்க வச்சிட்டாங்க. இந்த படத்தின் மூலமா நான் சரியான பாடம் கத்துக்கிட்டேன். சினிமாவில் சாதிக்கணும் என்ற எண்ணத்தோடு வர்ற என்னை மாதிரி பெண்களை இப்படிதான் ஏமாத்துறாங்க. அவங்களை நான் கேட்டுக்கறது ஒண்ணே ஒண்ணுதான். முடிஞ்சா நல்ல நல்ல கேரக்டர் கொடுங்க. இல்லைன்னா இப்படி வற்புறுத்தி நடிக்க வச்சு ஏமாற்றாதீங்க, என்று கூறியுள்ளார்.

அம்மணியின் படுக்கறை காட்சிதான் இப்போதைக்கு யூடியூப்பின் ஹாட் அண்ட் ஹிட் வீடியோவாம். வீடியோவை பார்த்த பலரும் அம்மணியை அழைத்து அன்பாக அர்ச்சித்ததால்தான‌ோ என்னவோ... இப்படி ஆக்ரோஷ பேட்டியை அள்ளித் தெளித்திருக்கிறாராம் அர்ச்சனா. முழுக்க நனைஞ்சதுக்கு அப்புறம் முக்காடு எதுக்காம்?!

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts