background img

புதிய வரவு

ஸ்ரீதுர்க்கை வழிபாடு

இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி ஆகிய மூன்று சக்திகளும் ஒன்று சேர்ந்தவளே ஸ்ரீதுர்க்கை. எனவே, ஸ்ரீதுர்க்கையை வணங்குவதால் காளி, லட்சுமி, சரஸ்வதி ஆகிய மூவரையும் துதிப்பதன் பலன் நமக்குக் கிடைக்கிறது.

மகிஷாசுரன் கடுந்தவம் பல புரிந்து மும்மூர்த்திகளிடம் சக்தி வாய்ந்த வரங்களைப் பெற்று - தனது சகாக்களுடன் சேர்ந்து தேவர்களைத் துன்புறுத்தி அழித்து வரத் தொடங்கினான். இவன் தரும் துன்பங்களைத் தாங்காத தேவர்கள் மும்மூர்த்திகளிடம் முறையிட்டார்கள்.

மும்மூர்த்திகள், மகிஷாசுரனை அழிக்க மூன்று சக்திகளையும் ஒன்று சேர்த்து துர்க்கா தேவியை உருவாக்கினார்கள். அந்த மகாதுர்க்கையே, ராகு காலத்தில் மகிஷாசுரனையும் அவனது சகாக்களையும் அழித்து தேவர்களைக் காப்பாற்றினாள்.

ராகு காலத்தில் துர்க்கையின் சக்தி அளப்பரியது. நாமும் ராகு காலத்தில் துர்க்கையை வழிபட்டால் நம் கஷ்டங்கள் அனைத்தையும் களைந்து துன்பங்களை நீக்குகிறாள். நினைத்த காரியத்தை நிறைவேற்றி வைக்கிறாள். பிரார்த்தனை செய்யும் பக்தர்களுக்கு அருள் செய்பவளாகத் துர்க்கா தேவி அவதரித்தாள். அவள் சிவப்பிரியை.

கணேசர் பிறப்பதற்கு அன்னையானவள். விஷ்ணு மாயையாகவும், பிரம்மா முதலான தேவர்கள் மகிரிஷிகள் முதலியவர்களால் துதிக்கப்படுகின்றவளாகவும் விளங்குபவள். இவள் எல்லாப் பொருட்களிலும் நிறைந்து இருப்பவள்.

புகழ், உயர்வு, மங்களம், சுகம், மோட்சம் முதலியவற்றை வழங்குபவள். துக்கம், பீடை முதலியவற்றை அறவே ஒழிப்பவள். தன்னை சரண் அடைந்தவர்களையும் பலவீனமானவர்களையும் காப்பாற்றுபவள். சகல சக்திகளின் தன் வடிவம். சக்திகளுக்கெல்லாம் சித்தியை தருபவள்.

அறிவுணர்வு, உறக்கம், பசி-தாகம், ஒளி சோம்பல், கருணை, கவனம், துஷ்டப் பிரமை மெய்யறிவு, தைரியம் மாயை ஆகியவற்றின் சக்தி உருவாகத் திகழ்பவள். துர்க்கா தேவியை செவ்வாய்க்கிழமை தோறும் அதிகாலையில் பிச்சிபூவால் அர்ச்சனை செய்து பூஜித்து வந்தால் எல்லாத் துன்பங்களும் நீங்கும்.

நெய் தீபம்- மண் விளக்கில் வைத்து பூஜிப்பது நல்லது. துர்க்கா அஷ்டோத்திரம், சத நாமாவளி சொல்லி துதிக்கலாம். நைவேத்தியமாக பால் பாயாசம் வைக்கலாம்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts